Monday, May 19, 2008

நீயும் உன் நாசமாப் போற ஐடியா-வும்


ரொம்ப நாளைக்கு பிறகு அந்தப் பையனைப் பார்த்தேன்.. எனது பழைய நெருங்கிய நண்பரின் தம்பி.. எப்போது நண்பரை பார்க்க செல்லும்போதும் அவனாக வந்து சந்தேகங்கள் கேட்பான்.. அறிவு தாகம் மிக்கவன்! நான் ஊரை விட்டு சென்னைக்கு வந்து நான்கைந்து வருடங்களாகிவிட்டன.. இவனைப் பார்த்ததும்கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருந்தது.. படித்து முடித்து இங்கே வேலைக்கு சேர்ந்திருப்பான் போல..
"அண்ணா.. எப்படி இருக்கீங்க?" - சிரித்த முகத்துடன் வந்தான்..
"டேய்.. செந்தில் .. எப்படிடா இருக்க?.. சென்னைலயா இருக்க நீ?"
"இல்லைண்ணா.. மாமா வீட்டுக்கு வந்தேன்.. நீங்க எப்படி இருக்கிங்க அண்ணா?
"நல்லா இருக்கேண்டா.. சரவணன் எப்படி இருக்கான்.. எங்க இருக்கான்?"
"நல்லா இருக்காரு.. புனா-ல இருக்காரு.. நாந்தான் கஷ்டப்படறேன்.."
அடடா.. என்ன ஒரு கொடுமை இது! என்ன கஷ்டம் இவனுக்கு.. கண்டிப்பாக நாம் உதவ வேண்டும் என்று நினைத்தபடியே.. "என்னாச்சுடா?" என்று கேட்டேன்..
"காசு சேரவே மாட்டிங்குது. உங்களைத்தான் ஐடியா கேட்கணும்.."
ஆஹா.. சிக்கீண்டாண்டா ஒருத்தன் என்று இருந்தது எனக்கு.. நான் அப்போதுதான் சேமிப்பு குறித்த சில புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்தேன்..
"இந்தா. எழுதிக்கோ" என்று அந்த புத்தகங்களின் பெயரையெல்லாம் வரிசையாக சொன்னேன்.. என்னிடம் விடை பெற்று சென்றான் அவன்..
அதன் பிறகு இரண்டு வாரம் கழித்து போன் வந்தது..
"என்னடா.. காசு சேர ஆரம்பிச்சாச்சா?"
"இல்லண்ணா.. அந்த புக் எல்லாம் வாங்கினதுல ஐநூறு ரூபா கடன்தான் ஆச்சு.."
ஆஹா.. இப்படி ஆகிப் போச்சே.. நான் மனம் தளராமல்..
"குபேரன் சிலை வாங்கி வைடா .. பணம் சேரும்.."
மறுபடி அடுத்த வாரமே கூப்பிட்டுவிட்டான்.. ஒன்றும் மாற்றமில்லையாம்.. இது என்னடா
சோதனை என்று நினைத்தவாறே.. மணி பிளான்ட் செடி வளர்த்து பார்க்க சொன்னேன்..
இந்தமுறை இரண்டே நாளில் போன் வந்தது.. ஓஹோ.. கொஞ்சம் பலன் இருக்கும் போல அதுதான் உடனே போன் என்று நினைத்தபடி போனை எடுத்தேன்..

"அண்ணா.. இன்னும் வேற எதாவது ஐடியா இருந்தா சொல்லுங்கண்ணா.. ரெண்டு ஐடியா பண்ணினா ஒன்னு இல்லாட்டி இன்னொன்னு பலன் தரும் இல்லையா?"

ஆகா.. அச்சடா.. நாம எட்டு அடி பாஞ்சா இந்த காலத்து பசங்க பதினாறு அடி பாயறான்களே-என்று புளகாங்கிதம் அடைந்தவாறே..

"சரி.. மீன் தொட்டி வாங்கிவை.. சில மீன் சொல்றேன்.. அதெல்லாம் வாங்கி வளர்த்து பாரு.. மொதல்ல மீன் தொட்டியும் மத்த ஐட்டம் எல்லாம் வாங்கு.. என்ன என்ன மீன் வாங்கணும்-னு நாளைக்கு சொல்லறேன்.. அதுக்கு சில புக்ஸ் இருக்கு.. இன்னைக்கு நைட் பாத்துட்டு நாளைக்குள்ள சொல்றேன்" - நம்மகிட்டயும் ஐடியா கேட்க பூமில ஒரு ஜீவன் இருக்கு என்கிற சந்தோஷம் தாங்கவில்லை எனக்கு! அந்த சந்தோஷம் இரண்டு மணி நேரம் கூட நீடிக்கவில்லை..! சரியாக இரண்டு மணி நேரத்தில் போன் வந்தது.. அவன்தான் என்று சந்தோஷமாக எடுத்த எனக்கு அதிர்ச்சி..

அவன் அப்பா பேசினார்..

"அப்பா.. கிருஷ்ணா பேசறேன்.. நல்லா இருக்கீங்களா?" என்று பாசமாக ஆரம்பித்தேன்..

"எல்லாம் இருக்கட்டும்பா.. நீதான் இவனுக்கு இந்த ஐடியா எல்லாம் சொல்லறதா?"

"ஆமாம்பா.. இந்த மாதிரி பண்ணினா பலன் இருக்கும்-னு நிறைய பேர் சொல்லி இருக்காங்க. ஆனா உங்க பையன் ராசிக்கு எந்த முறை அவனுக்கு பலன் தரும்-னு நாம் வெயிட் பண்ணிதான் பாக்கணும்.." சுவாரசியமாக சொல்லிக்கொண்டே வந்தவனை இடைமறித்தார் அவர்..

"கொஞ்சம் நில்லுப்பா..நீயும் உன் நாசமாப் போற ஐடியா-வும் " குரல் கடுமையாக இருந்தது..

"இதுவரைக்கும் நீ சொன்ன ஐடியா-வால ரெண்டாயிரம், மூவாயிரம் கடன் பண்ணிட்டு வந்திருக்கான் அவன்.."

"இல்லங்க.. அது வந்து.."

"யோவ்.. எல்லா ஐடியாவும் சொன்ன நீ.. ஒரு ஐடியா சொல்லி இருக்கனுமில்ல?"

"என்ன ஐடியா-ங்க?"

"ஆங்? அவன வேலைக்கு போக சொல்லி இருக்கனுமா வேண்டாமா?"

எனக்கு தலையில் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.. அவன் வேலைக்கே போறதில்லையா.. அடடா.. அத கேட்காமல் விட்டுட்டோமே.. அதன் பிறகு பத்து, பதினைந்து நிமிடத்திற்கு அவர் திட்டியதை எழுத முடியாது..

அதற்குப் பிறகு அவன் ஊரிலிருந்து எந்த போன் வந்தாலும் எடுக்கவே பயமாய் இருக்கிறது!


10 comments:

களப்பிரர் - jp said...

// "காசு சேரவே மாட்டிங்குது. உங்களைத்தான் ஐடியா கேட்கணும்.." //

ரெம்ப ஈஸீ .. மாசா மாசம் ஐந்நூறு ரூவா என்ட்ட கொடு ... உனக்கு மொத்தமா அஞ்சாயிரம் ரூவா ஒரு வருடம் கழிச்சு தரேன்னு சொல்லுறதா விட்டுபுட்டு ... சில்லற தனமா நடந்துகிட்டிஎப்பா

பரிசல்காரன் said...

மறுமொழிக்கு நன்றி!

அடாடா.. இது நமக்கு தெரியாம போயிட்டுதே.. சரி விடுங்க நண்பரே.. இன்னொருத்தன் சிக்காமையா போயிடுவான்!

rapp said...

அண்ணே நீங்களும் word verification ஐ எடுத்திடுங்க, இதே மாதிரி பரீட்சையில மார்க் வாங்க ஐடியா கேக்குற நெறைய ஆளுங்களை பாத்திருக்கேன்,அடப்பாவிகளா அதுக்கு முதல்ல படிக்கணும்னு சொன்னா, ஏதோ ராஜ் தாக்கரே கிட்ட போய் தமிழ்ல பேச சொன்ன மாதிரி லுக்கு விடுவாங்க

பரிசல்காரன் said...

அடக்கடவுளே.. என் blog-லயும் word verificaation கேட்குதா? எப்படி-ன்னு தெரியலையே.. சரி.. பாக்கறேன். உணர்த்தியமைக்கு நன்றி!
அடக்கடவுளே.. என் blog-லயும் word verificaation கேட்குதா? எப்படி-ன்னு தெரியலையே.. சரி.. பாக்கறேன். உணர்த்தியமைக்கு நன்றி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல நகைச்சுவை எல்லா இடுகையிலும். நல்வரவு..

பரிசல்காரன் said...

வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி!
தொடர்ந்து படியுங்கள்.. பல பரிசுகளை வெல்லும் வாய்ப்பு உங்களுக்கு காத்திருக்கிறது! (உங்களைப் பாத்தா எனக்கு பாவமா இருக்கு!)

இம்சை said...

சூப்பர் ஐடியா மச்சி... கலக்கறிங்க... பதிவு எல்லாம் நல்லா இருக்கு

பரிசல்காரன் said...

இம்சையாரே, உங்க வூட்டுப் பக்கம் வந்தேன்! எடுத்த உடனே சீரியஸா ஒரு பதிவு-ன்னு இருந்துதா.. பயந்து போய், மினிமைஸ் பண்ணீட்டேன்! படிச்சுட்டு எழுதறேன்!

வால்பையன் said...

ஒண்ணுமில்லை!
சும்மா தான் இருக்கேன் அதான்!

ப்ரியமுடன் வசந்த் said...

கச்சிதமா

சில மூடப்பழக்கங்களை வாரியிருக்கிறீர் தல