Saturday, May 24, 2008

ஒரு குடிகாரனின் பதிவுகள்..

ஆனந்தவிகடனில் இந்த வாரம் வந்திருந்த, நான் தரையில் அமர்ந்து கொண்டு படித்த (நின்றபடி படித்திருந்தால்‘விழுந்து விழுந்து’ சிரித்திருப்பேன்!) ஒரு ஜோக் பற்றி எழுதலாம் என்று நினைத்தால், நம்ம தல லுக்கிலுக் அதைப் பற்றி எழுதீட்டார்.. (‘என்னது கமல் மேல குற்றச்சாட்டு வந்திருக்கா, ஏன்?’ ‘ஆமாம், தசாவதாரம் ஆடியோ ரிலீசுக்கு ஜாக்கிஜான் வேஷத்துல வந்ததும் கமல்தானாம்!’ - இந்த ஜோக்கை எழுதின பா.ஜெயக்குமாருக்கு ஒரு ஷொட்டு!) அதனால அதே விகடன்ல வந்திருந்த வேற ரெண்டு ஜோக்ஸ்..

"தமிழ்நாட்டு மக்களுக்கு இப்பதான் நான் ரொம்ப அவசியம்.. ஆனா உடனடியா என்ன செய்யறதுன்னு குழப்பமா இருக்கு.. ஆனா, பெருசா ஏதாவது செய்யணும்னு முடிவு பண்ணீட்டேன்!"

"நான் சும்மா இருக்கறதா நிறையப் பேர் நினைச்சுட்டு இருக்காங்க. நான் ஒண்ணும் சும்மா இல்லீங்க பிரதர். என்னோட லேப்டாப் மூலமா எல்லாத்தையும் வாட்ச் பண்ணீட்டுத்தான் இருக்கேன். உலகத்துல எங்கே, எது நடந்தாலும் என் கவனத்துக்கு வந்துடும். எல்லாத்துக்கும் ஒருநாள் வெச்சுக்கறேன்!"

இதையெல்லாம் சொன்னது யாரு? சுப்பிரமணிய சாமி-ன்னு நினைக்கறீங்களா? இல்ல! நம்ம நடிகர் கார்த்திக்! (இதப் படிச்சதுக்கப்பறம் எனக்கு குளிக்கும் போது வெக்க வெக்கமா இருக்கு! அவரு லேப்டாப் மூலமா ‘எல்லாத்தையும்’ வாட்ச் பண்றாரே!)

வடிவேலு ஸ்டைலில் ஒன்று கேட்க வேண்டும்.. "ஏண்டா..நல்லாத்தாண்டா இருந்தீங்க?"

--------------------------------------------------------------
நண்பன் ஒருவனின் சார்பாக நடந்த பார்ட்டிக்காக அலைந்தோம்.. (பார் கிடைக்காமத்தான்..! கேட்டா கள்ளச் சாராய சாவுனால எல்லா ‘பார்’லயும் ரெய்டு-ங்கறாங்க.. முட்டாப் பசங்க! செத்த பிறகு என்னடா ரெய்டு? கள்ளச் சாராயம் குடிக்கறவன் பார்லயா வந்து குடிப்பான்?) ‘ரெய்டுன்னா என்ன பண்ணுவாங்க?’ என்று ஒரு பார் ஊழியரைக்கேட்டேன். ‘எங்களுக்கு ஒண்ணும் பெருசா பாதிப்பு இல்லீங்க.. வழக்கமான மாமூல்தான்.. உங்களுக்குதான் கஷ்டம்.. நீங்க அடிச்சுட்டிருக்கற சரக்க எடுத்துட்டுப்போய்டுவாங்க’ என்றான். ‘வாங்க சார்.. எங்க போனாலும் நிருபர் கணக்கா பேட்டி எடுத்துட்டு’ என்று உடன் வந்தவர்கள் திட்ட-கடைசியாக அந்த நண்பனது வீட்டிலேயே பார்ட்டி முடிந்த பிறகு வழியனுப்பும் போது அவன் சொன்னான்.. "எல்லாரும் வீட்டுக்குப் போன பின்னாடி ஃபோன் பண்ணுங்க.. எனக்கு ‘பக் பக்’னு இருக்கும்" என்று. எங்கள் மேல் என்ன ஒரு அக்கறை என்று புளகாங்கிதமடைந்த்து ஆனந்தக்கண்ணீருடன் கிளம்பினோம்...

இப்போது மணி இரவு 1.34. நான் வீட்டுக்கு வந்துட்டேன்னு ஃபோன் பண்றேன்.. Flat ஆயிட்டான் போல.. எடுக்கவே மாட்டீங்கறான்..!
______________________________________________
காலையில் ஒரு போஸ்டர் பார்த்தேன்..

‘இடி முழக்கமிடும் இரண்டாவது வாரம்-சூப்பர் ஹிட்: குருவி!!

பகக்த்திலேயே இன்னொரு போஸ்டர்..

‘பத்தாவது நாள்-மெஹா ஹிட்: அரசாங்கம்"

சூப்பர் ஹிட்-க்கும், மெஹா ஹிட்டுக்கும் என்னடா அர்த்தம் அன்று மண்டையை போட்டு உடைத்துக் கொண்டிருந்த வேளையில் இன்றைய கலக்கப் போவது யாரு சீஃப் கெஸ்ட்-டாக வந்தவரை அந்த நிகழ்ச்சியின் காம்பியரர் (நான் மிகவும் நேசிக்கும் ஃபிகர்-ரம்யா!) அழைத்தார்.. "வீரத் தளபதி" ரித்தீஷ் என்று.. வீரத் தளபதியா? இரண்டு பீர் தராத மயககத்தை அந்த வர்ணனை தந்தது!(இந்த லட்ஷணத்தில் என்னோடு இருந்த ஒரு நண்பர் கேட்டார்-‘யாருங்க அது?’ என்று.. நலல வேளை..‘வீரத்தளபதி’ காதில் விழவில்லை!)
----------------------------------------------------------------------
ஐ.பி.எல். போட்டிகள் முக்கியமான கட்டத்தை எட்டிவிட்டன.. அவரவர்கள் மாநிலத்தை விட (வேறுவழியில்லாமல்) வேறு மாநிலத்தை ரசிகர்கள் ஆராதிக்கும் நேரம் இது.. என்ன ஆனாலும் போட்டிகள் முடிந்த பிறகு பத்ரிநாத், ரோஹித் சர்மா, யூசுப் பதான், மன்பரீத் கோனி, வேணுகோபால் ராவ், டிண்டா, விரோத் கோஹ்லி என்று பலருக்கும் வாழ்வு வரும் என்ற நம்பிக்கையில்.. எல்லா இந்தியர்களும்!
------------------------------------------------------------------------
ஐ.பி.எல். போட்டிகளைவரை உடைகளில் எந்த அணி உங்களை கவர்ந்தது?

என்னைப் பொறுத்தவரை..

1 = Kolkatta Knight Riders
2 = Mumbai Indians
3 = Chennai Super Kings
4 = Rajasthan Royals
5 = Delhi Dare Devils
6 = Kings XI Punjab
7 = Royal Challengers Bangalore
8 = Deccan Charges

இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்திருப்பின்.. பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! (தெரிவிச்சா மட்டும் என்ன நடந்துடப்போகுது?? ஒண்ணியுமில்ல!)

3 comments:

ambi said...

கொஞ்சம் பின்னூட்டமிட நேரம் தாங்கப்பா. கடிதம் எழுதறீங்க, நைய புடைக்கறீங்க. என்னவோ போங்க. இந்த மோகம் எத்தனை நாளுக்கோ?

ஆமா, IPL கிரிக்கெட் போட்டி உடைனு சொன்னது டீமுக்கா?

நான் வேற... சரி விடுங்க. :))

பரிசல்காரன் said...

கரெக்ட் அம்பி! இந்த மோகம் எத்தனை நாளைக்கோ'ங்கற கேள்வி எனக்கும் இருக்கு! Abroad-ல இருக்கற எங்க எம்.டி. வந்துட்ட பின்னாடி நான் இவ்ளோ அதிக பதிவுகளை தர்றது கஷ்டம் தான்!

ஐ.பி.எல். போட்டி உடைகள் வீரர்களின் உடைகள்தான்!

வால்பையன் said...

ரைட்டு வேலை வந்துருச்சு!