Saturday, October 18, 2008

பழமொழியின் உண்மையான அர்த்தங்கள் & விருந்தும் மருந்தும்

நக்கல், நையாண்டியத்தவிர வேற உருப்படியா எதுவும் உன் வலைப்பூவுல எழுதற ஐடியா இல்லையா? என்று கேட்ட தம்பி ராமகிருஷ்ணா.. இந்தா புடிச்சுக்கோ!


-----------------------------------------------------------------
கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே

நம் கையால் கன்னத்தை தாங்க்க்கூடாது என்பதாய் இதற்கு அர்த்தம் கற்பிக்கிறார்கள். அதுவல்ல அர்த்தம்!

அந்தக் காலத்திலெல்லாம் பர்மா, ரங்கூன் என்று கடல் கடந்து பொருளீட்ட வீட்டுத்தலைவர்கள் செல்வார்கள். ஒரு ஊரிலிருந்து நான்கைந்து பேர் கூட்டாக சென்று ஐந்து வருடம், பத்து வருடம் என்று உழைத்து சம்பாதித்துவிட்டு சம்பாதித்த பணத்தை பொன்னும், வைரமுமாக மாற்றிக்கொண்டு கப்பலில் வருவார்ர்கள். அப்படி வரும்போது சில சமயம் கடல் சீற்றம் காரணமாக கப்பல் கவிழ்ந்து ஈட்டிய பொருளெல்லாம் இழந்து விடுவார்கள். தப்பித்து கரை சேரும் சிலர், ‘இவ்வளவு காலம் உழைத்துச் சம்பாதித்ததெல்லாம் இப்படி வீணாகிவிட்டதே.. இனி நம் ஊருக்கு என்ன கொண்டு செல்ல?’ என்ற விரக்தியில் கூட்டு சேர்ந்து ‘கன்னம் வைத்து’ திருட திட்டம் போடுவார்கள். (ஒரு ஆள் புகும் அளவுக்கு சுவரில் துளை போட்டு திருடுவதற்கு ‘கன்னம் வைத்தல்’ என்று பொருள்)

அதனால், ‘கப்பலே கவிழ்ந்தாலும் கன்னம் வைக்கும் தொழிலில் ஈடுபடக்கூடாது’ என்ற அர்த்தத்தில் ‘கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே’ என்று சொல்லப்பட்டது, இப்போது வேறு அர்த்தம் கொண்டு உலவி வருகிறது!
---------------------------------------------------------------------------------------------

ஆயிரம்
பேரைக் கொன்னவன் அரை வைத்தியன்

சித்த மருத்துவம்தான் நமது பண்டைய மருத்துவம். மூலிகைகளால் குணமடையச் செய்யும் சித்த மருத்துவம் கற்றுக்கொள்ள வேண்டுமானால், மூலிகைச் செடிகளின் வகைகளை கண்டறியும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சித்த மருத்துவம் கற்றுக்கொள்ள செல்லும் சீடர்களுக்கு, குருக்கள் ஒரு கட்டத்தில் practical test போல காடுகளுக்கு சென்று மூலிகைச் செடிகளைப் பறித்து, அந்தச் செடிகளின் பெயர், அதன் பலன்களை சொல்லச் சொல்வார்கள். அந்தக் காலத்தில், ‘ஆயிரம் வேரை கொணர்ந்தவன் அரை வைத்தியன்’ என்று சொல்லி வந்தார்கள். அதாவது ஆயிரம் செடிகளை வேரோடு பறித்து, கொண்டு வந்து, அவை எந்தெந்த வகை என்று குருவிடம் சொன்னால், அவன் அரை வைத்தியனுக்கு சமம் என்று கூறுவார்கள். அது திரிந்து இப்படி ஆகிவிட்டது!
---------------------------------------------------------------------------------------------

அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டாங்க


பயப்படாதீங்க.. இதுக்கு கதையெல்லாம் இல்ல! இறைவனின் ‘திருவடி’ என்பதுதான், வெறும் ‘அடி’ யாக மாறிவிட்டது!
--------------------------------------------------------------------------
[இதுதான் நீ உருப்படியா மேட்டர் எழுதற லட்சணமா-ன்னு கேக்காதீங்க! ஆக்சுவலா விலைவாசியை குறைப்பது எப்படின்னுதான் எழுதினேன். அத என்னதுக்கு எல்லாருக்கும் சொல்லீட்டு-ன்னு நேரா நம்ம பி.சி. சாருக்கு (பி.சி.ஸ்ரீராமில்லைங்க.. பி.சிதம்பரம் சார்!) அனுப்பீட்டேன்!]

****************************************

விருந்தும் மருந்தும்

விருந்தும் மருந்தும் மூணு நாளைக்குன்னு சொல்லுவாங்க..


அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் விருந்துல எவ்ளோ மாற்றங்கள்..? ஒரு கற்பனை..


1960 - விருந்தாளிக்கு கடிதத்தில் .. "எப்போது வருவீர்கள்? உங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.. "


1970 - வந்த விருந்தாளி போகும்போது.. "இவ்ளோ சீக்கிரமா போறீங்களே? இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போங்க.."


1980 - "கிளம்பியாச்சா?.. சரி., போய்ட்டு லெட்டர் போடுங்க.."


1990 - "போய் சேர்ந்ததும் போன் பண்ணுங்க.."


2000 - "எப்போ ஊருக்கு போறிங்க? டிக்கெட் ரிசர்வ் பண்ணனும்.. அதான் கேட்டேன்.."


2010 - "நாளைக்கு காலைல இன்டர்சிட்டி -ல டிக்கெட் புக் பண்ணியாச்சு. இந்தாங்க டிக்கெட்"


2020 - "ஹலோ போலீஸ் ஸ்டேஷன் -ஆ? எங்க வீட்ல விருந்தாளிக ரெண்டு வாரமா தங்கி இருக்காங்க.. போற மாதிரி தெரியல.. வந்து நடவடிக்கை எடுங்க.."


2030 - "ஹலோ.. ஆமா., நாந்தான் பேசறேன்.. மொத்தம் மூணு பேர்.. கிட்டத்தட்ட மூணு வாரமாச்சு.. இன்னைக்கு நைட் ஒன்பது மணிக்கு வெளில போய்ட்டு வரப்போ முடிச்சிடுங்க.. அட்வான்ஸ் மாயாண்டிகிட்ட குடுத்தாச்சு.. மீதி காரியம் முடிஞ்சதும் தரேன்.."

25 comments:

Thambi GIRISH said...

காலத்தினால் செய்த உதவீ சிரிதநிஎனும் ஞானத்தின் மான பெரிது

ethu than VALLUVAR.

pudugaithendral said...

சூப்பர்,

இப்பத்தான் நான் பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னா மாதிரின்னு பதிவுகள் போட்டு முடிச்சேன்.

ஒரு பதிவோடு நிப்பாட்டாம மேலும் பல பழமொழிகளை ஆராஞ்சு எழுதுங்க.

Ramesh said...

So you have visitors at home?

ராமலக்ஷ்மி said...

நல்ல சொல்லியிருக்கீங்க. சின்ன வயசில வசதியா கன்னத்தைத் தாங்கிப் பிடிச்சுக்கிட்டு புத்தகமோ பேப்பரோ சுவாரஸ்யமா படிச்சுக்கிட்டு இருக்கையிலே கடந்து போகும் பெரியவங்க 'எத்தனவாட்டி சொல்றது'ன்னு பட்னு தட்டி விட்டுப் போவாங்க:(!

Cable சங்கர் said...

ரொம்ப கும்பலா வந்து இம்சை பண்றாங்களோ..?

Athisha said...

;-)...

Nilofer Anbarasu said...

My favourites r here

http://kick-off.blogspot.com/2007/10/blog-post_26.html

முத்துலெட்சுமி/muthuletchumi said...

So you have visitors at home?

18 October, 2008 9:11 AM
\\ ராமலக்ஷ்மி said...

நல்ல சொல்லியிருக்கீங்க. சின்ன வயசில வசதியா கன்னத்தைத் தாங்கிப் பிடிச்சுக்கிட்டு புத்தகமோ பேப்பரோ சுவாரஸ்யமா படிச்சுக்கிட்டு இருக்கையிலே கடந்து போகும் பெரியவங்க 'எத்தனவாட்டி சொல்றது'ன்னு பட்னு தட்டி விட்டுப் போவாங்க:(!//

ரிப்பீட்டூ....:)

narsim said...

அந்த கப்பல் மேட்டர் கலக்கல் பரிசலாரே..

நர்சிம்

வெண்பூ said...

அருமையான பழமொழி விளக்கங்கள் பரிசல்.. இதை அவ்வப்போது தொடரலாமே!!

விருந்தினர் உபசரிப்பு இப்படித்தான் ஆயிடுச்சி.. ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்..

வெண்பூ said...

அருமையான பழமொழி விளக்கங்கள் பரிசல்.. இதை அவ்வப்போது தொடரலாமே!!

விருந்தினர் உபசரிப்பு இப்படித்தான் ஆயிடுச்சி.. ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்..

கார்க்கிபவா said...

விருந்தும் ம்ருந்தும் மேட்டர் எங்கேயோ படிச்ச மாதிரி ஞாபகம்.. எதுக்காவது எழுதி போட்டிங்களா சகா?

பரிசல்காரன் said...

கார்க்கி said...

விருந்தும் ம்ருந்தும் மேட்டர் எங்கேயோ படிச்ச மாதிரி ஞாபகம்.. எதுக்காவது எழுதி போட்டிங்களா சகா?//

MEEL PATHIVU!!!

ஆட்காட்டி said...

அடி என்பது மனைவி. (ஆ)கண்டவனின் திருவடியும் இல்லை. இது நான் ஏற்கனவே படித்தேன். தப்பாய் புரிய வைக்கிறாங்கள்.
பந்திக்கு முந்து படைக்கு பிந்து, மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே விளக்கவும்

பரிசல்காரன் said...

//ஆட்காட்டி said...

பந்திக்கு முந்து படைக்கு பிந்து, மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே விளக்கவும்//

உங்க வலதுகை பந்தில உட்காரறப்போ சாப்பாடை எடுக்க முன்னாடி வரும். அதே, படையில போரிடறப்போ அம்பு விடணும்ன்னா, அம்பைப் பிடிச்சுட்டு கை பின்னோக்கி போகணும். (அ) அம்பை எடுக்க பின்னாடி போகும். அதுதான் பந்திக்கு முந்து, படைக்கு பிந்து.

ரெண்டாவது தெரியல.

அருண் said...

பதிவர் பரிசல், கலக்குங்க. உங்க எழுத்த்ுகள் அருமை.
வலை உலக சூப்பர் ஸ்டார் பரிசல் வாழ்க!

பழமைபேசி said...

வணக்கங்க! வாழ்த்துக்கள்!! நல்லா இருக்குங்க.... உங்க மூலமா நானும், நம்ம சரக்க யாவாரம் பண்ணிக்கிடுறேன்... :-o)

பிறழ்ந்த பழமொழிகள்

பிறழ்ந்த பழமொழிகள்-2

கார்க்கிபவா said...

//Arun said...
பதிவர் பரிசல், கலக்குங்க. உங்க எழுத்த்ுகள் அருமை.
வலை உலக சூப்பர் ஸ்டார் கார்க்கி வாழ்க!
//

மறுக்கா கூவு...

ஆட்காட்டி said...

நண்பர் சொன்னார் ஆற்றின் நடுவில் சிலவேளைகளில் மண் பிட்டிகள் உருவாகும். அதாவது மண் குதிர்கள். அவை உறுதியற்றவை. அதை நம்மி ஆற்றை கடக்க இறங்கக் கூடாது என்று.

selventhiran said...

"உண்ணீர் உண்ணீர் என்று உட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்" நன்றி: ஓளவையார்

வீணாபோனவன் said...

பரிசல்ஸ்,
உமது என்னத்தை வண்மயாக கண்டிக்கிறேன்...யோவ்... அறிவு இருக்கா.. நீங்க பாட்டுல புதுகை அப்துலாவை வயசானவர்னு 'புகை" புடிச்சிங்க :-) இப்போ பார்த்து 1960 விஷயம் எல்லாத்தையும் வெளியிடுறிங்க..அப்போ நீங்க Pஆ-ய விட மூத்தவரா? மக்ஸ்... கொஞ்சம் கவனமாகவே இருங்கப்பா... நாட்டுல என்ன நடக்குதுண்ணே தெரிலப்பா... யாரு சின்னபுள்ள யாரு பெரியபுள்ளனே தெரிய மாடேங்குது... யாராச்சும் வெலக்குங்கப்பா...

புதுகை.அப்துல்லா said...

டீட்டெயிலுக்கு ரொம்ப நன்றி பெருசு :)

rapp said...

எங்க சொந்தக்காரர் கப்பல்(ரங்கூந்தான் எங்க தாத்தா, கொள்ளுத்தாத்தா இவங்கெல்லாம் இருந்தது) உணவுப் பொருட்களோட முழுகிடுச்சி. அப்போ அவருக்கு ஒரு பையன் பிறந்தான். நானா இருந்தா, எப்டி சபிச்சிருப்பேன்னு தெரியல, ஆனா அவரு அந்தப் பையனுக்கு தயாளன்னு பேர் வெச்சாரு, ஏன்னா பிறக்கும்போதே இத்தனை கடல் உயிர்களுக்கு உணவளிச்சிருக்கானேன்னு:):):)

rapp said...

//Your comment has been saved and will be visible after blog owner approval. //

இது எப்போலேருந்து செய்றீங்க?

rapp said...

அப்போ மீ த 25TH போட முடியாதா??????????:(:(:(