Wednesday, May 28, 2008

இவன் இப்படித்தான்

எப்போதாவது
தெருவில் கிடக்கும்
கல்லெடுத்து
ஓரத்தில் எறிந்ததுண்டா?
விலாசம் கேட்டவருக்கு
வீடு வரை சென்று
வழிகாட்டியதுண்டா?
பர்சை தவறவிட்டதாய்
சொன்ன இளைஞருக்கு
பொய்யெனத் தெரிந்தும்
காசு கொடுத்ததுண்டா?
ஏக்கமாய் உன்னைப் பார்க்கும்
புத்தக மூட்டை சுமந்த
பள்ளிச் சிறுவனை
ஏற்றிச் சென்றதுண்டா?
எல்லாம் செய்துவிட்டு
`எதிர்பார்ப்பின்றி' என்று
சொல்லிக்கொண்டதுண்டா?

நானும்தான்..

ஆனால் நிச்சயம்
எதிர்பார்ப்பின்றி அல்ல
என் டைரியில் குறித்துக்கொள்ள..
யாரேனும் பாராட்ட..
கடைசியில்
இப்படியொரு கவிதை படைக்க

6 comments:

ambi said...

நல்லா இருக்கு.

ஏனோ அறை எண் 305ல் வருகிற ஒரு காட்சி இப்போ நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

தமிழ் said...

/ஆனால் நிச்சயம்
எதிர்பார்ப்பின்றி அல்ல
என் டைரியில் குறித்துக்கொள்ள..
யாரேனும் பாராட்ட..
கடைசியில்
இப்படியொரு கவிதை படைக்க/

நல்ல இருக்கிறது

Thambi GIRISH said...

காலத்தினால் செய்த உதவி குட்டி ஆனாலும் ஞானத்தின் மான பெரிது

பரிசல்காரன் said...

என்ன காட்சி அம்பி? யோசிக்க வைக்கறீங்களே! (நம்மெல்லாம் யோசிச்சா நாடு தாங்குமா?)

நன்றி திகழ்மிளிர்! (பாத்து பாத்து அடிச்சேன் உங்க பேரை!)

கிரீஷா.. உனக்கெல்லாம் நன்றி கிடையாது! உன் தலைஎழுத்து.. டெய்லி படிக்கணும். ஓகேவா?

அகரம் அமுதா said...

நன்றி யொருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எணவேண்டா! -நின்று
தளறா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்!

சிந்திக்கத் தக்கக் கவிதை தோழரே! தங்களுடையது.

அகரம்.அமுதா

ராமலக்ஷ்மி said...

//ஆனால் நிச்சயம்
எதிர்பார்ப்பின்றி அல்ல
என் டைரியில் குறித்துக்கொள்ள..
யாரேனும் பாராட்ட..//
"புண்ணியம் கிடைக்கும் என"
என்ற வரிகளையும் சேர்த்துக் கொள்ளலாம் பரிசல்காரரே:-)

எப்படியோ நல்லது நடந்தால் நல்லதுதானே!