Wednesday, May 21, 2008

Fivestar Hotel போனேனே!

நம்ம வெட்டிஆபீசர் ஹோட்டல் சாப்பாட்டு பத்தி எழுதினத படிச்சேன்..
(http://vettiaapiser.blogspot.com/2008/05/blog-post_20.html)

அவங்களோட வேண்டுகோளுக்கிணங்க நம்ம ஹோட்டல் அனுபவத்தை இந்த நல்லுலகத்தோட பகிர்ந்துக்க எழுதறேன்..

நமக்கு இந்த fivestar hotel அனுபவம் ரெண்டே தடவைதான்.. அந்த மாதிரி ஹோட்டல் எல்லாம் படத்துல பாத்ததோட சரி.. மத்தபடி மனைவி(உமா), குழந்தைகள் கூட சரவணபவன், ஆரியாஸ், அன்னபூர்ணா இதெல்லாம்தான் நம்ம சாய்ஸ்! இந்த மாதிரி ஹோட்டலுக்கு போறப்போ நமக்கு எப்பவுமே ரவா ரோஸ்ட், நெய் ரோஸ்ட் இந்த மாதிரி ஐடம்தான்.. மனைவிக்கு காளான் பிரியாணி, காளான் ரோஸ்ட்-இப்படி காளான் வகைகள் பிடிக்கும்.. (ஒரு ஹோட்டல்-ல போய் என் பொண்ணு காளான் வாட்டர் இருக்கா-ன்னு கேக்கற அளவுக்கு ஆயிடுச்சு!)

அதே மாதிரி காலைல சாப்படற பழக்கம் அதிகமா இல்ல.. திடீர்ன்னு வண்டில போறப்போ ரோட்டோர கடைகள்-ல பூரி சுட்டு அடுக்கி வெச்சிருப்பாங்களே.. அதைப் பாத்து ஆசையாயிடும்.. போய் ஒரு செட் சாப்பிட்டுட்டு போவேன்! அதை சொல்லி உமாகிட்ட திட்டு வேற வாங்கிக்குவேன்! வீட்ல செஞ்சா சாப்பிடாதீங்க-ன்னு!

அன்னபூர்ணா மாதிரி ஹோட்டல் போன நான் பின்பற்றும் ஒரு (நல்ல) பழக்கம் சர்வருக்கு டிப்ஸ் குடுக்காம.. வாட்டர் பாய், க்ளீனிங் பாய் - இவங்களுக்கு குடுக்கறது.. சர்வருக்கு எல்லாரும் குடுப்பாங்க.. இந்த பசங்களுக்கு என்னை மாதிரி யாராவதுதானே குடுப்பாங்க-ன்னு நெனைச்சுக்குவேன்.

சரவணபவன் ரேட் பத்தி வெட்டியாபீசர் சொன்னது சரிதான்.. நான் ஒருதடவை ஆபீஸ் விஷயமா காஞ்சிபுரம் ஒரு மாசம் தங்கி இருந்து அங்க இருக்கற சரவணபவன்-ல டெய்லி வயிறார சாப்பிட்டுட்டு ஆபீஸ் வந்து வவுச்சர (voucher) பாஸ் பண்ண நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்!

Fivestar ஹோட்டல்-ன்னா எங்க எம்.டி.கூட பெங்களூர் போயிருந்தப்ப ஒபெராய் -க்கு போனோம்.. அவங்க காமிச்ச மெனு கார்டுல எனக்கு ஊத்தாப்பம் மட்டும்தான் தெரிஞ்ச ஐட்டமா இருந்தது.. எவ்ளோ-ன்னு எம்.டி-கிட்ட கேட்டப்போ அதான் அதுலேயே போட்டிருக்கில்ல `நானூறு ரூபா'-ன்னார். எனக்கு மயக்கம் வர்ற மாதிரி ஆயிடுச்சு! "இதெல்லாம் ரேட்-ஆ?" ன்னு கேட்டேன். ஏன்னா Rs.-ன்னெல்லாம் போடாம 400, 450, 575 - ன்னு இருந்தது. நான் ஏதோ ஐட்டம்
கோடு நம்பர் போல-ன்னு நெனச்சுட்டேன். 400 ரூபாய்க்கு ஊத்தாப்பம் சாப்பிட்டா எனக்கு ஜீரணமாக ஒரு வாரம் ஆகும்னு வேண்டாம்னுட்டேன். அப்பறம் எம்.டி. கம்பெல் பண்ணி தந்தூரி வாங்கினார் (225/-). அதுக்கப்புறம் காபி சாப்பிட லீலா பேலஸ் போனோம். (நம்ப முடியலையா? நாங்க அந்த ஹோட்டல்கள்-ல இருக்கற வாட்டர் பால்ஸ் பாக்கத்தான் போனோம்..) லீலா பேலசும் ரேட்-ல நான் சளைச்சவ இல்ல- ன்னா! ஆனா நல்ல ஸ்பேஸ்! அங்க வந்திருந்த பிகருகளைகூட சரியா சைட் அடிக்க முடியல! (கூட எம்.டி!) ஆனா பசங்களும், பொண்ணுகளும் வர்றத பாத்தா... ஹூம்! அது வேற உலகம்!
நமக்கு முனியாண்டி விலாஸ் தாங்க!

17 comments:

rapp said...

கிருஷ்ணா, நீங்க காஞ்சிபுரம்னு சொன்ன உடனே அங்க இருக்கிற கோவில்கள் பத்தியும் சொல்லணும். காமாக்ஷி கோவில்ல மட்டும் ஏன் அப்டி நடந்திக்குராங்கன்னு தெரியில, ரொம்ப மனச கஷ்டப்படுத்திர மாதிரி. அத பத்தி தனி பதிவே போடலாம். மத்த எல்லா கோவிலும் ரொம்ப பெட்டர்.

rapp said...

என்ன கிருஷ்ணா அப்டி சொல்லிட்டீங்க,நான் தினமும் வந்து பாக்கிறேனே. comments போடாததுக்கு மன்னிச்சுக்கங்க. என்ன எழுதறதுன்னு யோசிக்கரதுலயே எதையும் ஒழுங்கா செய்ய மாட்டேங்கரேன்.கொஞ்ச நாளுல சரியாகிடும். தப்பா எடுத்துக்காதீங்க.

rapp said...

கிருஷ்ணா,நெம்ப தேங்சுங்கோ. எனக்குன்னு ஒரு பதிவு போட்டதுக்கு.

பரிசல்காரன் said...

யக்கோவ்! வாங்கக்கா.. வாங்க! சந்தோஷமாகீது!
தப்பா எல்லாம் எடுத்துக்கலீங்க.. ஒரு சின்ன வருத்தம் தான்! இன்னும் கொஞ்ச நாள்-ல கமெண்ட்ஸ்-ஐ படிக்க முடியாத அளவுக்கு வந்து குவியப் போகுது..(ஆசை..ஆசை) ஆன இப்போ எல்லாரும் எட்டிப் பார்த்துட்டு சும்மா போயிடறாங்களே-ன்னு வருத்தம்தான். மத்தபடி நீங்க ரொம்ப தங்கமானவங்க-ன்னு தெரியும்.. டெய்லி வாங்க! உங்க சீரியல் குறித்த பதிவு படிச்சேன். கமெண்ட்ஸ் எழுதறதுக்குள்ள நெட் பகவான் கொஞ்ச நேரம் காணமப் போய்ட்டார்.. உங்க எழுத்து ரொம்ப தெளிவாகிட்டு வருது! கிரேட்!

பரிசல்காரன் said...

தேங்க்ஸ் எல்லாம் எதுக்குங்க.. ஒரு மியூச்சுவல் அக்ரிமெண்ட் தானே! நீங்க `நெம்ப' -ன்னு சொன்னத பார்த்தே எங்க கோயமுத்தூர் பாஷை உங்களுக்கு நல்லா தெரியும் போல இருக்கே!

ambi said...

லேட்டா வந்ததுக்கு ஒரு மாப்பு, மன்னிப்பு.

ஓபராய் லஞ்ச் கேவலமா இருக்கும். லீலா பேலஸ் கருப்பு பணம் இருந்தா நல்லா செலவலிக்கலாம். பஞ்சாபி ஓட்டல் எல்லாம் இருக்கு,

சென்னைல லீ மெரிடியன் தான் டாப்பு.

ambi said...

மீதி பதிவு எல்லாத்தையும் படிச்சுட்டேன். சூப்பர்.

ஒன்னும் கவலைபடாதீங்க. 2 மாசம் இப்படி தான் ஈ அடிக்கும். போக போக பிக்கப் ஆகும். அப்புறம் உங்களுக்கும் போதை தெளிஞ்சுடும்.

ambi said...

கவிதை எல்லாம் ரொம்ப ஸ்விட்டா இருக்கு. நிறைய ட்ரை பண்ணுங்க. :)

ambi said...

உங்க எழுத்து நடை ரொம்ப இயல்பா இருக்கு. அது தான் முக்யம். வெரைட்டியா எழுதுங்க. :))

ambi said...

யப்பா பத்து அடிக்கறதுக்கு என்ன பாடு பாட வேண்டி இருக்கு. (சும்மா சொன்னேன், நிஜமாவே உங்க பதிவுகள் நல்லா இருக்கு) :)))

பரிசல்காரன் said...

வாங்க அம்பி சார்! கவிதைய பாரட்டினதுக்கு நன்றி! எல்லாம் எப்பவோ எழுதி வெச்ச சரக்கு! திருப்பி அனுப்பின பத்திரிகைகள பழிவாங்கத்தானே நான் blog-ஏ ஆரம்பிச்சேன்! அது போக நாம எப்பவோ எழுதின மாதிரி இப்போ ஒருத்தர் எழுதி அத நாம படிக்கறப்போ.. வலிக்குது சார்!
ஓகே.. ஓகே.. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டேன்! உங்க பாராட்டுகளுக்கு நன்றிகள்!

பரிசல்காரன் said...

டெல்பின்-ஜி பாதி அடிக்க அடிக்க காணாம போய்ட்டீங்க! anyway.. thanks for ur comments!

Illatharasi said...

முதல் தடவை உங்கள் வலைக்கு, ரொம்ப அனுபவிச்சி எழுதி இருக்கிறீங்க!!!

நன்றாக இருக்கிறது....

பரிசல்காரன் said...

வருகைக்கு நன்றி இல்லத்தரசி!
அப்பப்போ வந்துடுங்க! நானும் உங்க வூட்டுக்கு வாரேன்

Sathiya said...

வாட்டர் பாய், க்ளீனிங் பாய் இவங்களுக்கு டிப்ஸ் கொடுப்பேன்னு சொன்னீங்களே, சூப்பர்! இவங்களை எல்லாம் பார்க்கும் போது எனக்குள் எதோ ஒரு குற்ற உணர்ச்சி ஏற்படும். எதுக்குன்னு தெரியாது. இவங்களுக்கு எல்லாம் எதாச்சும் செய்யனும்னு தோணும். ஆனா எப்படி? அப்புறம், என்ன தான் நாம நானூறு ரூபாய் கொடுத்து ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிட்டாலும், கையேந்தி பாவன்ல கிடைக்குற ருசி வராதுங்க.

பரிசல்காரன் said...

கையேந்தி பவன அடிச்சுக்க முடியாது சத்யா!
ஒத்துக்கிறேன்.. நெக்ஸ்ட் மீட் பண்றேன்!

☼ வெயிலான் said...

நானூறு ரூபா ஊத்தப்பம் சாப்பிடறதுக்கு, படையப்பா போய் நாலு பேர் நல்லா சாப்பிடலாம் போல!