இப்போது மணி இரவு எட்டரை... 23.06.08
இரண்டு நாட்களாய் அவியல் எழுத முடியவில்லை. (வந்துட்டாண்டா ஆயதத்தோட!) நேற்று எதிர்பாராத திருப்பம் என்றொரு கதை எழுதப்போய் நிஜமாகவே எதிர்பாராத திருப்பமாய் நானே முடிவை மாற்ற வேண்டியதாய்ப் போயிற்று. ஆனால் அது ஒரு சுவையான சவாலாக இருந்தது!
அதில் ஜெயித்தேனா, தோற்றேனா தெரியவில்லை. ஆனால் மனதுக்கு நிறைவாக உணர்ந்தேன்.
-------------------------
இதற்கு முந்தைய அவியலில் கிசுகிசுவில் சொல்லியிருந்த அந்தப் பதிவர் லதானந்த். சனிக்கிழமையன்று நான் குசேலன் பட விமர்சனம் பதிவை எழுதிவிட்டு தமிழ்மணத்தில் பார்த்துக் கொண்டிருந்தபோது... கீழே ‘மௌனம் கலைகிறது’ என்று அவரது பதிவு வந்திருந்தது. உடனே குஷாலாகி, அதற்கு பின்னூட்டம் போட்டுவிட்டு.. கம்ப்யூட்டரை அணைத்து விட்டு அலுவலகம் கிளம்பிக் கொண்டே அவரை அழைத்தேன்.
“அங்கிள்.. நான் கிருஷ்ணகுமார்”
“ஆங்.. சொல்லுங்க பரிசல்”
“மறுபடியும் எழுதினதுக்கு நன்றிகள்”
“ஓ.. பாத்துட்டீங்களா?”
“ஆமாங்க. நான் குசேலன் விமர்சனம் எழுதி பதிவேத்தம் பண்ணீட்டு பாத்தா..”
“என்னது? குசேலன் விமர்சனமா?”
“ஆமா அங்கிள்.. ஏன் இவ்ளோ அதிர்ச்சியா கேக்கறீங்க?”
“பரிசல்.. நான் இப்பொதான் `நான் கடவுள்’ விமர்சனம் எழுதி அப்லோடு பண்ணினேன்”
அடக்கடவுளே! உலகமே இந்தக் கோயம்பத்தூர்காரனுங்களப் பாருடான்னு எங்களை சொல்லப் போகுதுன்னு நெனச்சுகிட்டேன்!
-------------------------------
போற போக்குல சில பேர் சொல்ற டயலாக் அவ்வளவு ரசிக்கற மாதிரி இருக்கும்.. சனிக்கிழமை காபி வித் அனு-ல கிரேசி மோகன் சொன்னார்.
“இப்பொவெல்லாம் கணவனும் மனைவியும் சேர்ந்து இருக்கறதே கூட்டுக் குடும்பம்ன்னு ஆகிப் போச்சு!”
அத மாதிரி நம்ம ஈரோட்டு பதிவர் – நண்பர் நந்துகிட்ட (f/o நிலா) புகைப்படங்களைப் பத்தி நேத்து பேசிகிட்டிருந்தபோது அவர் சொன்னார்.
“போட்டோங்கறது காமிரா எடுத்த போட்டோவா இருக்க கூடாது கிருஷ்ணா. நம்ம எடுத்த போட்டோவா இருக்கணும்”
--------------------------------
லீவு லெட்டர்
இன்று இரவு சொந்த ஊருக்கு (உடுமலைப்பேட்டை) செல்கிறேன். எனது தந்தையின் முதலாமாண்டு நினைவு தின சடங்குகள், சம்பிரதாயங்களுக்காக. நேரம் கிடைத்தால் ஏதேனும் பிரவுசிங் சென்டர் போய் மொக்கையைத் தொடர முடியும். ஆனாலும் எல்லோரது பதிவிலும் போய் பின்னூட்டமிட நேரமிருக்காது என்று நினைக்கிறேன். நண்பன் செந்தில் வீட்டுக்கோ, குணா வீட்டிற்கோ சென்று இணையத்தில் உலவினால் பின்னூட்டமிட முடியும். இல்லையென்றால்..
திரும்ப ஞாயிறன்று மதியம்தான் இங்கு வருவேன். என்னமோ உற்ற நண்பர்களை விட்டு விட்டு செல்வது போல ஒரு உணர்வு. இப்போதும் ஊருக்கு கிளம்பும் நேரத்திலும் உங்களுக்கு இப் பதிவை அளித்துவிட்டுப் போகவே அவசர அவசரமாய் வந்தேன்.
ஆகவே.. என் பின்னூட்டங்கள் இல்லையெனினும் தவறாது என் வலைப்பூவிற்கு வருகை தந்து உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என்று நம்புகிறேன்! (நாலு நாளைக்கு தொல்லை விட்டதுடா-ங்கறீங்களா??!!)
------------------------------------------
ஒரு மாதிரி மனது கனமாக உணர்வதால் ஒரு ஜோக்குடன் முடிக்கிறேன்..
பஸ்ஸில் அமர்ந்திருந்த பள்ளி மாணவன் ஒருத்தன் டிக்கெட் எடுக்காமல் சட்டைப் பை, ஜாமெட்ரி பாக்ஸ் என்று எல்லாவற்றிலும் எதையோ தேடுவதைப் பார்த்த கண்டக்டர் கேட்டார்.
”ஏன்ப்பா என்னாச்சு?”
“டிக்கெட் எடுக்க அப்பா அஞ்சு ரூபா குடுத்திருந்தாரு. அதக் காணோம்”
கொஞ்சம் விட்டால் அழுதுவிடுவான் போலப் பேசினான்..
இரக்கப்பட்ட கண்டக்டர் கேட்டார்..
”சரி விடு தம்பி.. நீ எங்க போகணும்னு சொல்லு. டிக்கெட் தர்றேன்”
அவன் ஸ்டாப் பேரைச் சொன்னான்.
கண்டக்டர் நான்கு ரூபாய்க்கான டிக்கெட்டை கிழித்து அவனிடம் கொடுத்தார்.
வாங்கிக் கொண்ட அந்தச் சிறுவன் கேட்டான்..
“பாக்கி ஒரு ரூபா?”
(உடனே post commentக்கு போய் ரிப்பீட்டேய்’ன்னு வாரக் கூடாது. இதுவரைக்கும் கேக்காதவங்க ரசிக்கட்டுமே!)
23 comments:
நல்லபடியாக ஊர் சென்று வாருங்கள்.
முதலாம் ஆண்டு நினைவு நாள், நெஞ்சுக்கு மிகுந்த பாரமாக இருக்கும். ஒருவருடைய நினைவுகள் இருக்கும் வரை அம் மனிதர்கள் இறப்பது இல்லை. இது தங்கள் தந்தைக்கும் பொருந்தும்.
லீவ் சாங்க்ஷண்ட். போயிட்டு வாங்க. கண்டிப்பா செய்ய வேண்டிய கடமைங்க அது..
சென்று வாருங்கள்.
//அத மாதிரி நம்ம ஈரோட்டு பதிவர் – நண்பர் நந்துகிட்ட (f/o நிலா) புகைப்படங்களைப் பத்தி நேத்து பேசிகிட்டிருந்தபோது அவர் சொன்னார்.
“போட்டோங்கறது காமிரா எடுத்த போட்டோவா இருக்க கூடாது கிருஷ்ணா. நம்ம எடுத்த போட்டோவா இருக்கணும்”//
நல்ல கருத்து.
//வாங்கிக் கொண்ட அந்தச் சிறுவன் கேட்டான்..
“பாக்கி ஒரு ரூபா?”//
நல்ல ஜோக்.
முதல்ல ஊருக்கு போங்க , அத விட்டுட்டு இங்க வந்து பேசிகிட்டு ,
போயி அப்பாக்கு செய்ய வேண்டிய காரியங்கள கவனிங்க
//“பாக்கி ஒரு ரூபா?”//
அந்த ஒரு ரூபாதான் அது...
உங்கள் பயணம் இனிதாய் அமைய என் வாழ்த்துக்கள்...
ஊருக்கு போய் மறக்காமல் லேட்டர் போடுங்க...
//ச்சின்னப் பையன் said...
லீவ் சாங்க்ஷண்ட். போயிட்டு வாங்க.//
பாஸ் ஓகே பன்னிட்டாரு..
மொதல்ல போன வேலையை முடிங்க. அப்புறம் இணையத்தில் உலாவி பின்னூட்டங்களை பார்க்கலாம்.
நந்து சொன்னதை நேரிலே பார்த்தேன். விரைவில் படங்கள் பதிவில்.
////VIKNESHWARAN said...
//“பாக்கி ஒரு ரூபா?”//
அந்த ஒரு ரூபாதான் அது...////
ரசித்தேன்.
போய் வா தலிவா.. நல்லபடியாக காரியங்களை முடித்து அமைதியாக வாங்க! காத்திருக்கோம்.
ஸ்ரீராம், கிருஷ்ணாபுரம்.
நாலு நாள் எங்களுடன் இருப்பதால் எங்களுக்கு சந்தோஷம்.
கோயம்பத்தூர்காரர்கள் ஒரு சினிமா விடாமல் பார்பீங்களா? :)
அங்கே வேற ரொம்ப எண்டர்டெயிண்ட்மெண்ட் கிடையாது என்று லதானந்த சார் ஒரு முறை சொல்லி இருக்கார்.
//ஆகவே.. என் பின்னூட்டங்கள் இல்லையெனினும் தவறாது என் வலைப்பூவிற்கு வருகை தந்து உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என்று நம்புகிறேன்! (நாலு நாளைக்கு தொல்லை விட்டதுடா-ங்கறீங்களா??!!)
//
சரி, கவலைப்படாதீங்க.
உங்க பழைய பதிவுகளை படித்து பின்னூட்டம் எழுதுகிறேன்.
//
“போட்டோங்கறது காமிரா எடுத்த போட்டோவா இருக்க கூடாது கிருஷ்ணா. நம்ம எடுத்த போட்டோவா இருக்கணும்”//
Exactly...
பையன் ஒங்க ஊர்க்காரனாயிருப்பாம் போல?
:-)
லீவ் லெட்டர் அக்சப்டட்
4 நாள் லீவு போட முடியலயா.. கொஞ்சநாளுக்குள்ள இத்தனை தீவிரமா..
போட்டோபற்றிய கருத்து ரொம்ப நல்லா இருக்கு. நந்து
ஜோக் நல்லாத்தான் இருக்கு.
இப்ப நாட்டு நிலைமையும் அப்படித்தாங்க இருக்கு. ஓசியில ஸ்டவ் குடுத்தா காஸ் கனெக்ஷனையும் சேர்த்து குடுங்கற காலம் இது.
ஜாலியா லீவுக்கு போய்ட்டு வாங்க.
சீக்கிரம் வாங்க.......
ஜோக் சூப்பர்
// “இப்பொவெல்லாம் கணவனும் மனைவியும் சேர்ந்து இருக்கறதே கூட்டுக் குடும்பம்ன்னு ஆகிப் போச்சு!” //
ரசனையான சொல்லாடல் ஆன சிந்திக்க வேண்டிய வாக்கியம்
விரிவாக, தனித்தனியாக் சொல்ல நேரம் இடம் கொடுக்கவில்லை..
எல்லோருக்கும் நன்றி..
(லக்கிலுக்ஜி, பாலண்ணா.. என்ன அதிசயம் இது?)
சென்று வாருங்கள் வென்று வாருங்கள்
கிருஷணா,
ஆத்மார்த்தமாக நீங்கள் எழுதிய கடிதம்தான் உங்கள் தந்தைக்குச் செய்த மிகப் பொருத்தமான அஞ்சலி.
மற்றவை எல்லாம் சடங்குகளே, குடும்பத்தினருக்காக அதையும் செய்து வாருங்கள்.
Post a Comment