”பாரு அப்பாவை.. ஒரு வாரமா வீட்ல இல்லாம வீடு பூரா கச கசன்னு இருக்கு.. கூடமாட ஏதாவது ஹெல்ப் பண்லாம்-னு இல்லாம வந்ததும் வராததுமா கம்ப்யூட்டர் முன்னாடி உக்கார்ந்துட்டாரு” என்ற உமாவின் வாழ்த்துக்களோடு... வந்துட்டோம்ல!
*********************
மாப்ள சுப்பு @ கிரேசி கிரி
என் சொந்தக்காரர்களில் இவன் ஒரு சூப்பர்ஸ்டார். பொள்ளாச்சி கல்லூரி ஒன்றில் லைப்ரரியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் என் மாப்பிள்ளை (அம்மாவின் அண்ணன் மகன்) சுப்பிரமணி. இழவு வீட்டில் கூட எங்காவது எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அங்கே இவன் இருப்பான் என்று அர்த்தம். எங்கள் குரூப்பின் கிரேசி மோகன் இவன். கிரி என்பது இவனை கூப்பிடும் பெயர் என்பதால் கிரேசி கிரி என்று செல்லமாகச் சொல்லுவோம். அவ்வப்போது இவன் சொன்னவற்றை பகிர்ந்து கொள்ளும் ஐடியா இருக்கிறது.. இப்போதைக்கு...
அப்பாவுக்கான காரியங்கள் எல்லாம் முடிந்து கடைசி நாளில் நவக்கிரக ஹோமம். தீபாராதனை காட்டும் போது கலந்துகொள்ள என் மகள்களையும் அழைக்கச் சொன்னார் பண்டிதர்.
”மீரா....” நான் அழைத்தபோது பண்டிதர் கேட்டார்..
“என்னடா.. பாட்டி... இல்லைன்னா அம்மா பேரெல்லாம் வைக்கலியா?”
“இல்ல மாமா”
”என்னமோ போடா.. சரி கூப்பிடு.. சின்னவ பேரென்ன? த்ரிஷாவா... ரம்பாவா?”
உடனே கேட்டான் நம்ம கிரேசி கிரி..
“மாமா.. உங்களுக்கு அம்பாளைப் பத்தி மட்டும்தான் தெரியும்னு நெனச்சோம்.. ரம்பாவப் பத்தியும் தெரிஞ்சிருக்கே...”
இப்படி நக்கல் நையாண்டி மட்டுமல்ல.. அறிவார்ந்த விஷயங்கள் பேசுவதிலும் கிரி தேர்ந்தவன்.
ஒரு நாள் யாரோ வந்து அவனிடம் “சோறு தின்னாச்சா?” என்று கேட்டுவிட்டார்கள்.
“தின்னாச்சா-ன்னு கேக்கக்கூடாது. சாப்பிட்டாச்சா-ன்னு கேளுங்க”
“ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் கிரி?” என்று கேட்டேன் நான்.
“சோறை நாம தேடிப்போய் சாப்பிடக் கூடாது. அதுக்குப் பேர்தான் `திங்கறது'. மிருகங்கள்தான் தனக்கான உணவைத் தேடிப் போகும். அதுனாலதான் `இரை தின்றது' -ங்றாங்க. உணவு நம்மளைத் தேடி வர நாம உட்கொண்டா அது சாப்பிடறது. பாரதியார் கூட இத சொல்லிருப்பார் `தேடிச் சோறு நிதம் தின்று' ன்னு”
உணவுக்காக மட்டும் அலையக்கூடாது-ங்கறதுதான் இதுக்கு அர்த்தம். அதுக்காக, சாப்பிடக் கூப்பிடும்போது ஹால்ல உட்கார்ந்து `சாப்பாடை இங்க கொண்டு வா' -ன்னு அதிகாரம் பண்ணி வாங்கிக் கட்டிக்கிட்டா நான் பொறுப்பில்ல!
*********************************
இயக்குனர் சீமானின் ஆவேசமான பேச்சை கிரி எனக்குக் குடுத்த ஒரு சி.டி ஒன்றில் கேட்டேன். அதில் கருப்பாக இருப்பதால் தன்னை ஒதுக்கும் தன் காதலியைப் பார்த்து, காதலன் சொல்வதாக கிராமங்களில் சொல்லப்படும் ஒரு சொல்லாடலை அழகாகச் சொல்லியிருந்தார் அவர்.
“என்னோட கருப்பு உன் உச்சந்தலையில இருக்குடி. ஆனா உன்னோட செவப்பு என் உள்ளங்கால்ல இருக்கு. என் கருப்பு உன் உடம்புல எங்கியாவது இருந்தா அத மச்சம்-ன்னு கொண்டாடுவாங்க. அதே உன்னோட செவப்பு என் உடம்புல இருந்தா அது தேமல்!”
***********************************
எங்கே இந்தக் கவிஞர்கள் வரிசையில் இன்று - ட்டி.பாலசுப்பிரமணியம்.
குழந்தையின் அழுகையை
நிறுத்தப்பார்.
அப்புறம்
அலையின் கூச்சலை
ரசிக்கலாம்.
ஜூலை 1991 - கணையாழி.
28 comments:
க்ட்டுரை நன்கு அமைதுள்ளது. வாழ்த்துக்கள்!
அட! இன்னும் தமிழ் மணத்துக்கு கூட அனுப்பல்லே! அதுக்குள்ள ரெண்டு கமெண்டா? சொக்கா!!
(முதல் கமெண்டை நான் பாக்கவே இல்லியே.. அப்புறம் என்ன removed by author- ன்னு வருது?? யாராவது விளக்குவீர்களா? )
மிம மிக நன்றி அங்கிள்! (ஹி..ஹி.. என்னாதிது உங்ககிட்டேர்ந்து எழுத்துப் பிழை??)
மீண்டும் வந்தாச்சா ?
வாழ்த்துகள் !
எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா... மீண்டும் வந்ததுக்கு வாழ்த்துக்கள்...
உள்ளேன் அய்யா :))
கிரேசி கிரியை பற்றி அடிக்கடி எழுதுங்கள்.
மீண்டும் வருக! இனி கொஞ்ச நாளைக்கு லீவு எல்லாம் கிடையாது. அப்புறம் லாஸ் ஆப் பே ஆகிடும்.. ஆமா.. :)
அவியலின் முதல் பாராவுக்கும் கடைசிக்கவிதைக்கும் அர்த்தம் மேட்சாகுதோ..கவனிங்க..:))
நன்றி ச்சின்னப்பையன்!
நல்லபடியா முடிஞ்சுது!
@சென்ஷி..
உள்ளேன் ஐயாவெல்லாம் சொல்லவே தேவையில்லை! நீங்க, கோவி.கண்ணன், rapp, கயல்விழி முட்துலட்சுமி மேடம், ச்சின்னப்பையன், விக்னேஸ்வரன், ராமலட்சுமிம்மா, லதானந்த் அங்கிள், வேலண்ணன், (வடகரை), வெயிலான், நந்து, வெண்பூ, அதிஷா, யெஸ்.பாலபாரதி, லக்கிலுக், கயல்விழி எல்லாருமே இந்த ஆறு நாளும் என்கூடவே இருந்தமாதிரி ஒரு பீலிங்! (என்னா பீலிங்கு?)
கண்டிப்பாக எழுதுகிறேன் வேளராசி!
பாலா, நீங்களே குடுத்தாலும் நான் போகமாட்டேன்ல! (அப்பிடிப் படுத்துது இந்த வலை!)
அட! பிரமிப்பாய் இருக்கு முத்துலட்சுமி மேடம்! முதல் பேராவுல இருந்தத அடிச்சுட்டு, தொடர்ந்து அவியல் சமைச்சுட்டு இருந்தப்போ, பின்னாடி உமாவின் குரல் துரத்திவர.. இந்தக் கவிதை கண்ணில் பட்டது! சரின்னு இதையே போட்டேன்! கரெக்டா கவனிச்சுட்டீங்களே! சூப்பர்!
//அவியலின் முதல் பாராவுக்கும் கடைசிக்கவிதைக்கும் அர்த்தம் மேட்சாகுதோ..கவனிங்க..:))//
கயலக்கா, கலக்கிட்டிங்க..நானும் அதே விஷயத்தைதான் குறிப்பிட பின்னூட்டத்தை திறந்தேன். அதுக்குள்ள நீங்க.....சேம் பிட்ச்....
அதனால just said கயலக்காஆஆ....ரிப்பிட்ட்ட்ட்டூ.........
வாங்க கிருஷ்ணா. நெம்ப சந்தோஷம்.
நன்றி விஜய்..
அதெப்படி ராப்.. கரெக்டா தூங்கப் போலாமா-ன்னு யோசிக்கறப்போ வந்துடறீங்க??
இதத்தான் நாங்க கௌரதயா டைமிங்னு சொல்லிக்குவோம். மத்தவங்க பேய், பிசாசுன்னு சொல்லி காழ்ப்புணர்ச்சியில திட்டுவாங்க. உணர்ச்சியே இல்லாத எங்களுக்கு இதெல்லாம் உறைக்குமா? நாங்கெல்லாம் யாரு? (தெரியாதுன்னா கானல்நீர் பட dvd பார்சல் செய்யப்படும்)
\\“என்னோட கருப்பு உன் உச்சந்தலையில இருக்குடி. ஆனா உன்னோட செவப்பு என் உள்ளங்கால்ல இருக்கு. என் கருப்பு உன் உடம்புல எங்கியாவது இருந்தா அத மச்சம்-ன்னு கொண்டாடுவாங்க. அதே உன்னோட செவப்பு என் உடம்புல இருந்தா அது தேமல்!”\\
நச் :)
"காலா கோரா" அப்படின்னு ஒரு கதை படிப்போம் ஹிந்தில இதே கருத்துதான் முழு கதையின் கரு :)
ச்சின்னப் பையன் said...
//எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா... மீண்டும் வந்ததுக்கு வாழ்த்துக்கள்...//
வழி மொழிகிறேன்.
//“சோறை நாம தேடிப்போய் சாப்பிடக் கூடாது. அதுக்குப் பேர்தான் `திங்கறது'. மிருகங்கள்தான் தனக்கான உணவைத் தேடிப் போகும்.//
சரியாகச் சொல்லியிருக்கிறார் கிரி. சிறு வயதிலே இதன் வித்தியாசம் அம்மா சொல்லித் தெரியும். கன்னடத்தில் 'சாப்பிடுறியா?' என்றால் 'தின்தியா'.அதிலிருந்து 'சாப்பிடு' என்பதற்கு 'தின்னு' என்பார்கள் சர்வ சாதாரணமாக. வேடிக்கையாய் இருக்கும்.
நன்றி ரம்யாரமணி..
அந்த காரா கோலா கதையைப் பகிர்ந்துக்கலாமே?
@ ராமலட்சுமி..
அம்மா, வருகைக்கு நன்றி.. ஊருக்கு போறதுக்கு முன்னாடி உங்ககிட்ட சொன்னமாதிரி, நேத்து உங்க வீட்டுக்கு வந்து சி.வா.ஜி, ஜானி ஜானி - ரெண்டுக்கும் பின்னூட்டிட்டோம்ல?
அண்ணா,
தேங்க்ஸ்ல் ஆப் யுவர் கமண்டு,
கிரேசி கிரி, என்ற பட்டம் நல்ல ஜோக்கு சொன்ன மகிழ்ச்சி ஆகவும் , இன்னும் நல்ல ஜோக்கு, சொல்ல வேண்டும் என்ற ப்யம் ஆகவும், உள்ளது.
பழனி, ஆழியாறு, நிகழ்வுகளையும் ப்திபீர் என எதிர் பார்க்கிறோம்!?,..
தமிழ்ப்பொறுக்கி
கடைசியா சுப்ரமனியையும் விட்டு வெக்கல, இப்ப தினமும் உங்க ப்லாக்க பாக்காம இருக்கிறதில்ல. ரொம்ம்ப moக்கையா இருக்குதுன்னு சொல்லமாட்டேன். ஜெய்சக்திவேல் சென்னை
மிக்க நன்றி சக்திவேல் & தமிழ்ப்பொறுக்கி! (பண்ணீட்டா போச்சு!!)
//பழனி, ஆழியாறு, நிகழ்வுகளையும்//
என்ன இது? சொல்லவேயில்ல.......
அன்பு வெயிலான்..
அது ஒண்ணுமில்ல.. சனிக்கிழமை ஏதாவதொரு கோயிலுக்குப் போகணும்னு சொல்லப்பட்டதால் பழனி போனோம்.. பிறகு அங்கிருந்து ஆழியாறு போனோம். அந்தப் பின்னூட்டத்தை எழுதிய தமிழ் பொறுக்கி வேறு யாருமல்ல. நான் குறிப்பிட்ட கிரியும், அவனது நண்பன் குணாவும் சேர்ந்து துவங்கிய வலைப்பூதான் அது! அதில் நிறைய எழுத்துப் பிழைகள் இருப்பதால் கொஞ்சம் நல்ல படைப்புகளைப் பிழையில்லாமல் போடறேன் என்று குணா சொன்னதால், அப்புறமா அந்த பிளாக்கை உங்களுக்கு அறிமுகப்படுத்தலாமென்றுதான் அதுபற்றி குறிப்பிடவில்லை!
கிருஷ்ணா,
தொடர்கதை ஒன்று தொடங்கி உங்களை அழைத்துள்ளேன்.
நீங்கள் தொடர்ந்து, வெயிலானுக்கு பாச் செய்யுங்கள். அவர் பின் லதானந்த் சாருக்கு பாஸ் செய்யட்டும்.
//“மாமா.. உங்களுக்கு அம்பாளைப் பத்தி மட்டும்தான் தெரியும்னு நெனச்சோம்.. ரம்பாவப் பத்தியும் தெரிஞ்சிருக்கே...”
//
நிறைய பேர் தினம் இது போன்ற நகைச்சுவை லைன்ஸ் கேட்கிறோம். ஆனால் அதை காது கொடுத்து கேட்டும், ரசித்து, நினைவு வைத்திருந்து பிறகு ப்ளாகில் போடும் பொறுமையும், புத்திசாலிதனமும் வெகுச்சிலருக்கே இருக்கிறது. :)
//கிருஷ்ணா,
தொடர்கதை ஒன்று தொடங்கி உங்களை அழைத்துள்ளேன்//
நன்றிகள் அண்ணா! தொடர்கிறேன்..
@கயல்விழி..
அப்படியா?
அம்சமா இருக்கு.
அவியலின் முதல் பாராவுக்கும் கடைசிக்கவிதைக்கும் அர்த்தம் மேட்சாகுதோ..கவனிங்க..:)) //
ரொம்ப சரி. :)
இப்போ எங்க போய்ட்டாரு அந்த கிரி?
Post a Comment