Wednesday, June 4, 2008

தானே கேள்வி! தானே பதில்!!

கேள்வி: என்னது.. நீங்களும் ‘தானே கேள்வி தானே பதில்’ ஆரம்பிச்சுட்டீங்க?

பதில்: நம்மளையெல்லாம் யாரு கேள்விகேட்கப்போறாங்க’ன்னு தைரியம்தான்!
------------------------------------------
கேள்வி: ரோட்டில் குப்பை கொட்டினால் அபராதம்’ என்று சட்டம் வந்துவிட்டதைப் பற்றி?

பதில்: அந்த சட்டத்தை குப்பையில் கொட்டி, அந்தக் குப்பையை ரோட்டில் கொட்டிவிடுவார்கள் நம்மவர்கள்.
--------------------------------------------------
கேள்வி: பொது இடத்தில் புகை பிடிக்கக் கூடாதாமே?

பதில்: அவரவர் உதட்டில் தானே பிடிக்கிறார்கள்? அது பொது இடமா? Jokes apart.. இந்த சட்டத்தால் பலருக்கு உள்ளுக்குள் புகைகிறதாய் கேள்வி!
---------------------------------------------------------
கேள்வி: ஐ.பி.எல்-லை ராஜஸ்தான் வென்றது குறித்து..

பதில்: வாழ்த்துக்கள். ஆயினும் சென்னையைத் தவிர வேறு எந்த அணி இறுதிப் போட்டிக்கு வந்திருந்தாலும், ஷேன் வார்னேவை இப்படி கடைசி பந்து வரை மிரட்டியிருப்பார்களா என்பது சந்தேகமே!
-------------------------------------------------------------
கேள்வி: தசாவதாரம் ரிலீஸ் ஏன் தாமதமாகிறது?

பதில்: எடிட்டிங் செய்யும் போது, நீளம் அதிகம் என்று வேண்டாத சிலர் நடித்த பல பகுதிகளை வெட்டி விட்டார்களாம். கடைசியில் கமல் ப்ரிவ்யூ பார்த்து ‘நான் நடித்த சில பாத்திரங்கள் காணவில்லையே’ என்று கேட்ட பிறகுதான் வெட்டிய பல பகுதிகளில் இருந்தது கமல் என்று தெரிந்ததாம். இப்போது மறுபடி ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
-----------------------------------------------------------
கேள்வி: நீயெல்லாம் வலைப்பதிவு எழுதலன்னு யாரு அழுதா?

பதில்: நானேதான் அழுதேன். ‘அய்யோ ரெண்டு நாளா ஒண்ணும் எழுதலியே’ன்னு! படிச்சுட்டு ஒருவேளை நீங்க அழலாம். ‘படிக்கலியே இன்னும்’ ன்னு நீங்க அழணும். அந்தளவுக்கு எழுதணும்!
---------------------------------------------------------
கேள்வி: போதைமருந்து வைத்திருந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் கைது செய்யப்பட்டது பற்றி?

பதில்: ஆ..! ச்சீப்!
------------------------------

2 comments:

கிரி said...

//முதலில் இருக்கும் கேள்வி பதில்கள் நான் எழுதினதுதான்.. ஒரு பின்னூட்டம் கூட வர்லீன்னா.. இப்படித்தான் கழுத்தறுப்பேன்//

பரிசல்காரன் உங்க பதிவை நான் படிக்கவில்லை. படித்திருந்தால் கண்டிப்பாக பின்னூட்டம் இட்டு இருப்பேன் :-) உண்மையாகவே நன்றாக இருந்தது. பேச்சிற்காக கூறவில்லை.

ஒரு கேள்வி பதிலுக்குண்டான நக்கல் நகைச்சுவை அதில் இருந்தது. வாழ்த்துக்கள்.

நிறைய கேள்வி பதில்கள் தற்போது வருவதால் அதை படிக்கும் ஆர்வம் போய் விட்டது. அதனாலேயே உங்கள் பதிவையும் தவறவிட்டு விட்டேன்.

Unknown said...

nice to meet you...

have we ever met before?

i'm also from tirupur...

anyhow you have an interesting blog...

i have just started reading some of your posting...

will come back with more words..