எனக்கு மெயிலில் வந்த சில நகைச்சுவைகள்: (ஓஹோ.. இன்னைக்கு மேட்டர் இல்ல போல!)
#அவன் சமாளிப்பதில் சாமர்த்தியசாலி என்பதாலேயே அவனை தனது டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலையில் வைத்திருந்தார் முதலாளி. அன்று ஒரு வாடிக்கையாளர் வந்து அரைக் கிலோ வெண்ணெய் கேட்டார்.
"ஒரு கிலோ பாக்கெட்தாங்க இருக்குது"
"எனக்கு அரைக்கிலோ போதும்"
"அப்படி லூஸ்ல தர்றதில்ல"
"போ.. போய் உன் முதலாளிய கேட்டு அரைக்கிலோ மட்டும் குடு"
கடுப்பாகிப் போன அவன், மனதுக்குள் அந்த வாடிக்கையாளரைத் திட்டியவாறே முதலாளியின் அறைக்குள் நுழைந்தான். கதவைத்திறந்தபடியே "ஒரு அரை லூஸு வந்து வெண்ணெய் அரைக்கிலோ மட்டும் போதும்னு தொல்லை குடுக்குது சார்" என்றவன் முதலாளி ஒரு மாதிரி சீட்டை விட்டு எழுவதைக் கண்டு திரும்பிப் பார்ர்க்கிறான்.. அருகிலேயே நிற்கிறார் அந்த வாடிக்கையாளர்! உடனே சொன்னான்.. "நல்ல வேளை சார், பின்னாடியே இந்த ஜென்டில்மேனும் வந்து அரைக்கிலோ கேக்குறாரு.. பிரிச்சு பாதி பாதி குடுத்துடலாம்ல?"
இவன் வாயைக் குடுத்துவிட்டு சமாளித்துவிட்டதை தெரிந்துகொண்ட முதலாளி வாடிக்கையாளரை அனுப்பிவிட்டு தன்னை வந்து பார்க்கும்படி சொல்கிறார். அரை மணி நேரம் கழித்து வருகிறான் அவன்.
"அப்பப்ப இப்படி ஏதாவது உளறிக்கொட்டிட்டு சமாளிச்சுடற.. எந்த ஊரு உனக்கு?"
"மெக்ஸிகோ சார்"
"நல்ல ஊராச்சே.. ஏன் அந்த ஊரை விட்டு வந்த?"
"போங்க சார்.. அந்த ஊர்ல பாதி பேருக்கு ஃபுட் பாலும், மீதிப்பேருக்கு விபச்சாரமும்தான் தெரியும்"
"என்னப்பா இப்படிச் சொல்ற? என் மனைவி ஊரும் மெக்ஸிகோதான்"
"அப்படியா சார்? மெக்ஸிகோல அவங்க எந்த டீமுக்காக ஃபுட்பால் விளையாடிட்டு இருந்தாங்க?"
-------------------------------------------------------------------------------
#கணவனும் மனைவியும் திருவிழாவுக்குப் போயிருந்தார்கள். கூட்ட நெரிசலில் மனைவி காணாமல் போய்விட்டாள். கலங்கிப் போன கணவன் நேராக அங்கிருந்த ராமர் கோயிலுக்கு சென்று மனமுருக வேண்டினான்.
"காணாமல் போன மனைவி கிடைக்க அரும் புரியுங்கள் ராமா"
ராமர் சொன்னார்.."நேராகப் போய் இடது புறம் திரும்பினால் ஒரு அனுமார் கோயில் வரும். அவரிடம் வேண்டு. என் மனைவியையே அவர்தான் கண்டு பிடித்துக் கொடுத்தார்!"
----------------------------------------------------------------
#ஆறு குழந்தைகளைப் பெற்ற தன் மனைவியை, கணவன் "இவள்தான் என் மனைவி. ஆறு குழந்தைகளுக்குத் தாய்" என்றே எப்போதும் அறிமுகப்படுத்திவந்தான். அவள் எத்தனை முறை சொல்லியும் கேட்கவில்லை. அன்றும் அப்படித்தான்.. ஒரு விருந்துக்குப் போனபோது தனது நண்பர்களுக்கு மனைவியை அறிமுகப்படுத்தினான்..
"இதுதான் என் மனைவி.. Mother of Six"
வெறுத்துப் போன மனைவி இனி சொல்லிப் பயனில்லை என்று முடிவெடுத்தவளாய் கணவனை அழைத்து தனது நண்பிகளுக்கு அறிமுகப்படுத்தினாள்..
"இதுதான் என் கணவர். Father of Four!"
-----------------------------------------------
#முட்டாள்களை எப்படி சஸ்பென்ஸில் வைப்பது என்று தெரியுமா?
14 comments:
முதல் ஜோக் மிகவும் அருமை.
2 & 3 ஜோக்கை ஏற்கனவே படித்திருக்கிறேன்.
மூன்றும் சுவை.
http://groups.google.com/group/muththamiz/topics
:)))
மூன்று ஜோக் ம் நன்றாக இருந்தது .
நான்காவதில் எதோ உள்குத்து இருப்பது போல உள்ளதே !
அன்புடன்
அரு பாஸ்கி
மூணாவது ஜோக் "குபீர்"!
good jokes
அருமை.
அதிலும் முதல் நகைச்சுவை சூப்பரப்பு
//முட்டாள்களை எப்படி சஸ்பென்ஸில் வைப்பது என்று தெரியுமா?//
wait for 4 days
கலக்கல் சிரிப்பு துணுக்குகள். மெக்சிகோ ஜோக்ஸ் அறிவுபூர்வமானது.
முதல் ஜோக் சூப்பர் மற்றதெல்லாம் ரிபீட்டு
ஹா... ஹா... ஹா.... :))
நகைச்சுவைத்தேன்...
ரசித்து சுவைத்தேன் :))
ரசித்து சிரித்தேன்.
:-))))))
LOL at the response from jaisankar :-)))
கும்புடறேனுங்... மொத மொத படிக்கரனுங்.....நல்லா எழுதரீங்....ஒரே காமெடிதானுங்......
ஏனுங்...இம்புட்டு பேரு வந்து பின்னூட்டம் போட்டிருக்காங்க.....ஒரு 'டாங்ஸ்' கோட போடலீங்......வலைப்பூவுல டாங்ஸ் போடோணுமுங்கிறது எழுதாத சட்டமுங்...
Post a Comment