Sunday, June 15, 2008

தசாவதாரம்-ஒரு விரிவான விமர்சனம்

பிளாக் எழுதும் எல்லோருமே தசாவதராம் விமர்சனத்தை எழுதாவிட்டால் ஏதோ நாடு கடத்திவிடுவார்கள்போல. இதோ நானும்.. (கதையை கேட்காதீர்கள்.. எனக்கு கோர்வையா சொல்ல வராது!)

முதலில் ஒரு ராயல் சல்யூட்-வசனகர்த்தா கமலுக்கு! ஏனென்ற விளக்கம் பின்னால்..

சோழர்காலத்தில் துவங்கி, சுனாமியில் முடியும் படத்தில் எல்லா இடங்களிலும் ஹாலிவுட் வேகமும், கமலின் விவேகமும் தெரிகிறது.
சோழர் காலத்தில் ஆரம்பிக்கும் படத்தில் வைணவ இளைஞன் நம்பி கதாபாத்திரத்தில் டேக் ஆஃப் ஆகும் கமல் எங்கும் நிற்காமல் புகுந்து விளையாடியிருக்கிறார்!

விஷ்ணு சிலையை கடலில் தூக்கிப் போடும் முன், அந்த சிலைக்கு முன் நின்று "அரங்கநாதா.. உனக்கே இந்த கதியா?" என்று பார்வையிலேயே கேட்கும் கமலில் நடிப்பு கண்ணை விட்டு அகல மறுக்கிறது. (சோழமன்னனாக வரும் நெப்பொலியனின் தமிழ் உச்சரிப்பு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை!) கல்லை மட்டும் கண்டால் பாடலில் வாலி தன் சீனியாரிட்டியை நிரூபித்திருக்கிறார். சிவனைவிட, விஷ்ணுவே உயர்ந்த கடவுள் என்று ஹரிஹரன் குரலில் கமல் பாடும் அந்தப் பாடலில் "ராஜலக்ஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன்தான்.. அந்த ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்" என்றொரு வரி. கமலஹாசனின் பெற்றோர் பெயர் ராஜலக்ஷ்மி-ஸ்ரீனிவாசன்! அட.. இப்படியெல்லாம் எழுத வாலியை விட்டால் யார் என்று நாம் பாராட்ட நினைக்கையில் - அடுத்த வரி.. "நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜர்தான், ராஜனுக்கு ராஜனிந்த ரங்கராஜன்தான்!" வாலியின் இயற்பெயர் - ரங்கராஜன்! நீங்கள் சத்தியமாக பாட்டெழுதும் ராஜர்களுக்கெல்லாம் ராஜன்தான் வாலியண்ணா! படத்தில் ஏறக்குறைய எல்லா காட்சிகளிலும் எத்தனை கமல் இருக்கிறார்கள் என்று பார்க்கும் சுவாரஸ்யம் தமிழ்-சாரி-இந்திய.. ஏன் உலக சினிமாவிற்கே புதியதாகத்தான் இருக்கும்! அதிலும் இண்டர்வெல்லுக்கு மேல் வரும் ஆஸ்பிட்டல் காட்சியில் கலிபுல்லாகான், வில்லன் ப்ளெட்ச்சர், அவ்தார் சிங், விஞ்ஞானி கோவிந்த், உளவுத்துறை அதிகாரி நாயுடு என்று எல்லாருமாய் அதகளம் பண்ணியிருக்கிறார் கமல்!

வின்சென்ட் பூவராகன் - நம்மை நிமிர வைத்து இறுதியில் நெகிழ வைக்கும் பாத்திரம். இந்த கதாபாத்திரத்தை இன்னும் அதிகம் பயன்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

வில்லன் கமல் - இந்தியன் தாத்தா பாடிலேங்வேஜோடு இருக்கிறார். வயது முதிர்ந்த பாட்டி அவ்வை சண்முகியை நினைவுபடுத்துகிறார் என்றெல்லாம் கூறுவது குறை அல்ல. எல்லா பரீட்சார்த்த முயற்சிகளையும் ஏற்கனவே செய்துவிட்ட ஒரு கலைஞனுக்கு இந்த மாதிரி விமர்சனங்கள் சகஜம்!
ஒவ்வொரு கமலுக்கும் நடையிலும் கூட வித்தியாசத்தைக் காட்டியிருக்கும் கமலுக்கு இந்தப் படத்திற்காக தேசிய விருது கிடைக்காவிட்டால், கமிட்டியில் அரசியல் விளையாடுவது நிரூபணமாகிவிடும். விருதுகளுக்கு அப்பாற்பட்ட இந்தக் கலைஞனுக்கு, அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது!

வசனகர்த்தா கமல்! என்ன கூர்மையான வசனங்கள்.. எவ்வளவு ஹ்யூமரான வசனங்கள்! சாம்பிளுக்கு..
## விஷ்ணு சிலையை கடலில் போட உத்தரவிட்டு, வைஷ்ணவ நம்பி கமலைப் பார்த்து சோழ மன்னனாக வரும் நெப்போலியன்.."உன்னை சிவமந்திரம் சொல்ல வைக்கும் சூழ்ச்சியும் யாமறிவோம்.. " என்று ஆரம்பித்து யாமறிவோம், யாமறிவோம் என்று சில வசனங்கள் பேச.. நம்பி "பார்.. சிவனடியான உன்னையே எத்தனை முறை "அரி-ஓம்" சொல்ல வைத்துவிட்டான் என் ஹரி"
## உளவுத்துறை அதிகாரி நாயுடு, தனது அஸிஸ்டெண்ட் அப்பாராவுடன், கூரியர் இளைஞன் நரசிம்ம ராவையும் போகச்சொல்லும் போது.. "ராவோடு ராவா போய்..."
## போராட்ட தலித் இளைஞன் பூவராகனை மணல் மாஃபியா சந்தானபாரதி சாந்தப்படுத்தும் விதமாக தொடும்போது, சட்டென விலகி "உங்களுக்கு வேணும்னா தொடுவீங்க.. வேணாம்னா தொடமாட்டீங்க"
## "உங்களுக்கு அழகிய சிங்கர் தெரியுமா?"

"அழகிய சிங்கர்னா.. மடோனாவா?"

## தனது அம்மாவுக்கு ரத்தம் தரவிருக்கும் விஞ்ஞானி கமலிடம், எட்டடி கமல்.. "நீங்கதான் ரத்தத்தின் ரத்தமாகப் போறிங்களே.." "நானா.. எப்போ.. யாரு சொன்னா?"

## எட்டடி கமலிடம் உளவுத்துறை அதிகாரி நாயுடு "இவ்ளோ உயரமா ஏணி மாதிரி இருக்க? உன் பேர் பின்"லேடனா"?
"இல்லீங்க.. கலிபுல்லாகான்"
"ஓ.. அதுதான் ஃபுல்லா இருக்கியா?"

## அமெரிக்க வில்லன் ஜப்பானிய கமலிடம்" "ரிமெம்பர் ஹிரோஷிமா" ஜப்பானிய கமல் உடனே "யு ரிமெம்பர் பேர்ல் ஹார்பர்"

தொழில்நுட்பத்தில் இனி தசாவதாரத்தை மிஞ்சும் படம் பண்ண, எல்லாருக்கும் சவால் விடப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக ஒவ்வொரு கமலுக்கும் ஒவ்வொரு முறை பார்க்கவேண்டும்!
மொத்தத்தில் "உலகமெங்கிலும் உன்னை விஞ்சிட யாரு..உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு!"
முக்கியமான பின் குறிப்பு: நான் அக்மார்க் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகன்!

17 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

சூப்பர் தல...சுனாமி காட்சியில் உங்க படகு இருந்ததா??

வந்தியத்தேவன் said...

//முக்கியமான பின் குறிப்பு: நான் அக்மார்க் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகன்//

வாழ்க‌ உங்க‌ள் பெரும்த‌ன்மை. க‌ல‌க்க‌ல் விம‌ர்ச‌ன‌ங்க‌ளில் இதுவும் ஒன்று.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//He can speak seven languages in teluku //
பல்ராம் நாயுடுவை அவர் அச்சிச்டன்ட் பெருமையாக சொல்வாரே ! அதனை விட்டு விட்டீர்கள் .
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//சூப்பர் தல...சுனாமி காட்சியில் உங்க படகு இருந்ததா??//
ஹா ஹா ஹா !
என்னமா யோசிக்கிறாங்க பசங்க !!!!!!
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

சென்ஷி said...

:))

நல்ல விமர்சனம். டிஸ்கி சூப்பர் ..

//"இவ்ளோ உயரமா ஏணி மாதிரி இருக்க? உன் பேர் பின்"லேடனா"?//

அது பின்"லேடரா" :))

சென்ஷி said...

//ARUVAI BASKAR said...
//சூப்பர் தல...சுனாமி காட்சியில் உங்க படகு இருந்ததா??//
ஹா ஹா ஹா !
என்னமா யோசிக்கிறாங்க பசங்க !!!!!!
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
//

ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிப்பீட்டேஏஏஏஎ :))

Unknown said...

விருப்பு வெருப்புகளின்றி ஒரு நல்ல விமர்சனம்.

பரிசல்காரன் said...

நன்றி விக்கி.. பாஸ்கர். சென்ஷி.. ராஜகோபால் ..
விக்கி, அந்த சுனாமியில் என் படகு இருந்திருந்தால் நிச்சயம் பூவராகனுக்கு அந்த நிலை வந்திருக்காது!

பாஸ்கர்.. நிறைய வசனங்கள் சூப்பர்.. சிலவற்றை மட்டுமே கொடுத்தேன்.. ரயிலில் அசினும் கமலும் பேசிக்கொள்ளும் வசனங்கள்.. (ராமசாமி நாய்க்கர்- அவர் பெரியாரச்சே(த்யேட்டரில் சைலன்ஸ் ஆகியிருக்கும்)-பெரியாருமில்ல, சிரியாருமில்ல கலைஞர்- கலைஞரா-ஐயோ.. இசைக்கலைஞர்ன்னு சொல்ல வந்தேன்..) கமல் பேசும் கடவுள் பற்றிய வசனம் (இல்லைன்னு எங்க சொன்னேன்.. இருந்தா நல்லா இருக்கும்னுதானே சொல்றேன்) இப்படி நிறைய.. ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் கொடுத்தேன்.. பாருங்க இதுல கூட அந்தப் படத்தோட வசனம் வந்துதுடுது.. (ஆனா என் பானை சிறுசுதான்!)

நன்றி சென்ஷி! (எங்க கொஞ்ச நாளா காணோம்?)
மிக மிக நன்றி ராஜகோபால்!

பரிசல்காரன் said...

வந்தியத்தேவன்.. வருகைக்கு நன்றி!

rapp said...

ஜட்ஜ்: "ஆடர்,ஆடர்! ம் கிருஷ்ணா சத்தியப்பிரமாணம் எடுத்துக்கங்க".
கிருஷ்ணா: "நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறொன்றுமில்லை".
ஜட்ஜ்: "உண்மையாகவே தசாவதாரம் படத்தை பார்த்தீங்களா?"
கிருஷ்ணா: "நிஜமாவேப் பார்த்தேன் யுவர் ஹானர். இதோ அந்தப் படத்திலுள்ள வசனங்கள்"
## விஷ்ணு சிலையை கடலில் போட உத்தரவிட்டு, வைஷ்ணவ நம்பி கமலைப் பார்த்து சோழ மன்னனாக வரும் நெப்போலியன்.."உன்னை சிவமந்திரம் சொல்ல வைக்கும் சூழ்ச்சியும் யாமறிவோம்.. " என்று ஆரம்பித்து யாமறிவோம், யாமறிவோம் என்று சில வசனங்கள் பேச.. நம்பி "பார்.. சிவனடியான உன்னையே எத்தனை முறை "அரி-ஓம்" சொல்ல வைத்துவிட்டான் என் ஹரி"
## உளவுத்துறை அதிகாரி நாயுடு, தனது அஸிஸ்டெண்ட் அப்பாராவுடன், கூரியர் இளைஞன் நரசிம்ம ராவையும் போகச்சொல்லும் போது.. "ராவோடு ராவா போய்..."
## போராட்ட தலித் இளைஞன் பூவராகனை மணல் மாஃபியா சந்தானபாரதி சாந்தப்படுத்தும் விதமாக தொடும்போது, சட்டென விலகி "உங்களுக்கு வேணும்னா தொடுவீங்க.. வேணாம்னா தொடமாட்டீங்க"
## "உங்களுக்கு அழகிய சிங்கர் தெரியுமா?" "அழகிய சிங்கர்னா.. மடோனாவா?"## தனது அம்மாவுக்கு ரத்தம் தரவிருக்கும் விஞ்ஞானி கமலிடம், எட்டடி கமல்.. "நீங்கதான் ரத்தத்தின் ரத்தமாகப் போறிங்களே.." "நானா.. எப்போ.. யாரு சொன்னா?"## எட்டடி கமலிடம் உளவுத்துறை அதிகாரி நாயுடு "இவ்ளோ உயரமா ஏணி மாதிரி இருக்க? உன் பேர் பின்"லேடனா"?
"இல்லீங்க.. கலிபுல்லாகான்"
"ஓ.. அதுதான் ஃபுல்லா இருக்கியா?"## அமெரிக்க வில்லன் ஜப்பானிய கமலிடம்" "ரிமெம்பர் ஹிரோஷிமா" ஜப்பானிய கமல் உடனே "யு ரிமெம்பர் பேர்ல் ஹார்பர்"தொழில்நுட்பத்தில் இனி தசாவதாரத்தை மிஞ்சும் படம் பண்ண, எல்லாருக்கும் சவால் விடப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக ஒவ்வொரு கமலுக்கும் ஒவ்வொரு முறை பார்க்கவேண்டும்!
மொத்தத்தில் "உலகமெங்கிலும் உன்னை விஞ்சிட யாரு..உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு!"
ஜட்ஜ்: " ஓகே, நீங்கள் உங்கள் தரப்பை சந்தேகமின்றி நிரூபித்திருப்பதால், எதிர்தரப்பினர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது".

rapp said...

டென்ஷன் ஆகிடாதீங்க. ச்சும்மா ஜாலியா, ஒரு பெரிய பின்னுட்டமாத் தெரியராப்போல போடலாமேன்னுதான்.

பரிசல்காரன் said...

நன்றி ராப்! இன்னும் நிறைய வசனங்களை எழுத நினைத்தேன். கமல் கேஸ் போடுவாரோ என்று பயந்து விட்டுவிட்டேன்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாலி பாட்டுக்குக்கு அர்த்தம் இப்பத்தான் தெரிந்தது நன்றி..தியேட்டரில் ஒரே சத்தம்..

Sathiya said...

நீங்க என்ன டிஸ்கி போட்டிருக்கீங்களோ, அதே தான் நானும். நல்லா எழுதி இருக்கீங்க. கமல் கமல் தான்.

கோவி.கண்ணன் said...

கே கே (கிருஷ்ண குமார்),

பின்னூட்டம் போடனும்...கணக்கு தானே... ?
:)

நல்லா எழுதுறிங்க...கொஞ்சம் பத்திபிரிச்சு எழுதினால் படிப்பதற்கு மலைப்பாக இருக்காது.
:)

பரிசல்காரன் said...

நன்றி சத்யா.. என்னதான் இருந்தாலும் சூப்பர், சூப்பர்தான்!

நன்றி கயல்விழி, இன்னும் எத்தனை பேர் இந்த அர்த்தங்களைப் புரிந்துகொண்டனர் என்ற கவலை எனக்குண்டு!

கண்ணன்ஜி..

பத்திபிரிக்க முயற்சித்தபோது, இரண்டு, இரண்டு ஸ்பேஸ் தாவியது. வெறுத்துப்போய் நேரமின்மையால் அப்படியே போட்டுவிட்டேன்! ஸாரி! திருத்திக்கொள்கிறேன்!

மனுஷம் said...

நண்பா

தவற்றிற்க்கு வருந்துகிறேன். அது தசாவதாரம் தான்…செய்த தவறை மறைக்க நான் கமல் ஹாசனும் இல்லை…என் தவறை ஆதரித்து பேச எனக்கு ஒரு (ரஜினி ரசிகனான) பரிசல் காரனும் தேவை இல்லை…

சினிமாவை உள் வாங்குதல் என்பது என்ன..?வசனம், வசனமாக ஒப்பிப்பதா..?இல்லை இப்படி அலசுவதா..?

கதைக்கு வருவோம் ...புராண படத்தை எடுக்க நினைத்து... BABEL பார்த்து, பாதிப்படைந்து அந்த வகையில் ஒரு படம் பண்ண நினைத்து, கே எஸ் ரவிக் குமாரை இயக்குனராக்கி பஞ்ச தந்திரம் வடிவில் , Eliminator -2, எல்லாம் சேர்ந்து ஒரு படம் ……………

அல்லது உள் வாங்கிய உங்கலால் இதை மறுக்கத்தான் முடியுமா..? கமல் ஹாசன் தான் மறுக்க முடியுமா..?

கமல் மடையன் என்பதல்ல என் வாதம்..கமல் ஒன்றும் அதி மேதாவி அல்ல (தசாவதாரத்தை பொறுத்த மட்டில்).தானும் ஒரு சராசரி தமிழ் கதாநாயகன் மட்டுமே…

ஒரு ரஜினி, விஜய், அஜித், வரிசையில் கமல்…இதை கமல் முதலில் ஒப்புக்கொள்ளட்டும்…

முதலில் அந்த அதிமேதாவி முக மூடியைய் கிழித்தெரியட்டும்..

கமலின் பயம் பத்து முகமூடிகளாய், கெ ஸ் ரவிக்குமாராய், ஜாக்கி சானாய், மல்லிக்கா செராவத்தாய்….காட்சிக்கு காட்சி பிரதிபலிப்பதை மறுக்கத்தான் முடியுமா..?

ஒரு கமல் ரசிகனுக்கு மட்டுமே புரியும் கமலின் கழிவிரக்கம்..

தங்கள் புரிதலுக்கும், பதிலுக்கும் நன்றி..

மேலும் தங்கள் கருத்துக்களை (எதிர்) நோக்கும்
கமல் ரசிகன்