Tuesday, June 17, 2008

தந்தை எனக்கெழுதிய கடிதம்!

அன்புள்ள கிருஷ்ணகுமாருக்கு...


உன் தந்தை பாசத்துடன் பாசத்துடன் எழுதிக்கொண்ட கடிதம்.


உனக்கு நன்றாகத் தெரியும் எனக்கு குழந்தைகளென்றால் மிகவும் பிரியம். எனது எல்லா உறவினர் வீட்டிலும் அந்த வீட்டுக் குழந்தையை நான் எடுத்து வைத்துகொண்டு இருக்கும் புகைப்படம் இருப்பதை நீ அறிவாய். மற்ற குழந்தைகளை நேசித்த நான் உன்னை எப்படி நேசித்திருப்பேன் என்பதை சொல்ல வேண்டியதில்லை! நீ குழந்தையாய் இருக்கும்போது என்னிடம் மிகவும் ஒட்டிக்கொண்டிருப்பாய். அதனால்தானோ என்னவோ பெரியவனாக, ஆக விலகிவிட்டாய்!


நானொன்றும் பெரிய வசதிபடைத்தவனில்லை. கொஞ்சம் பணம் சேர்ந்துவிட்ட காலத்திலும், சேர்த்திவைக்கத் தெரியாமல், எல்லோருக்கும் கொடுத்து நமக்கு தேவைப்படும்போது வெறும்கையோடு இருந்துவிட்டேன்! எங்கே - நீயும் அப்படி ஆகி விடுவாயோ என்கிற பயம் எனக்கு இருக்கிறது.


உனக்கு ஞாபகமிருக்கிறதா? நான் உடுமலை சேட்டு பெட்ரோல் பங்கில் கணக்கெழுதிக் கொண்டிருப்பேன். ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த நீ ஸ்கூலிலிருந்து வருவாய். நம்மிடம் அப்போது சைக்கிள் கூட இல்லை. வந்து என்னிடம் நோட்டு வாங்க காசு கேட்பாய். உன்னை வெளியில் நிற்கச் சொல்லிவிட்டு, நான் கொஞ்ச நேரம் கழித்து முதலாளியிடம் தயங்கித் தயங்கி கேட்டு, சம்பளத்திலிருந்து ஐந்து ரூபாய் வாங்கித் தருவேன். சில நாட்களில் அதுவும் முடியாமல், சரஸ்வதி ஸ்டோரில் என் பெயர் சொல்லி வாங்கிக் கொள்ளச் சொல்வேன். அப்பொழுதெல்லாம் உன்னைப் பார்க்கவே எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்.


ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பன்னிரெண்டாயிரம் ரூபாயை ஒருமுறை உன்னிடம் கொடுத்துவிட்டு, டி.வி-யும், மிக்ஸியும் வாங்கிவரச் சொன்னபோது, அந்தப் பணத்தை உன் நண்பனொருவனுக்கு கொடுத்துவிட்டு, வெறுங்கையோடு நீ வீடு வந்ததும், இன்றுவரை அது திரும்பிவராமலே போனதும் உனக்கு எப்போதாவது ஞாபகம் வருமா?

நீ குழந்தையாய் இருக்கும்போதிலிருந்து, பத்தாவது படிக்கும் வரை நாம் முதலில் கூட்டுக்குடும்பமாக இருந்தோம். எல்லோரும் என்னை "பாலுமாமா" என்று கூப்பிடுவது போல், நீயும் என்னை "பாலுமாமா" என்றுதான் கூப்பிடுவாய். நீ "அப்பா" என்றழைக்கவேண்டும் என்று நான் விருப்பப்படுவேனோ என்று நீ என்றாவது எண்ணியதுண்டா?


ஆறாவது படிக்கும் போது என் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து, காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கி உன் புத்தகப் பெட்டியில் வைத்திருந்தாய். உன் மாமா அதைக் கண்டுபிடித்து என்னிடம் சொன்னபோதும், நான் உன்னை நேரடியாக கண்டிக்கவில்லை! உன்னை நான் அடித்ததாக எனக்கு நினைவிலேயே இல்லை. அதே போல உன்னை "டா" போட்டு நான் கூப்பிட்டதுமில்லை! நினைக்கும்போது எனக்கே ஆச்சரியமாகத்தானிருக்கிறது! ஒருவேளை உன்னை அடித்து, கண்டித்து வளர்த்திருந்தால் நீ இப்போதிருக்கும் நிலையை விட, நல்ல நிலைக்கு வந்திருப்பாயோ என்னவோ!


உனக்கு நான் அமைதியை கற்றுக்கொடுத்தேன். நீ எல்லோரிடமும் அளவுக்கதிகமாய் பேசிக்கொண்டிருக்கிறாய். நீ எத்தனையோ உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவன்தான். உன் சோம்பேறித்தனத்தால் எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கிறாய்.


ஓரிரு வருடங்களுக்கு முன் எனக்கு நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் கிடந்தபோது, வாரத்திற்கு ஒருமுறையேனும் நீ வருவாயென என் கண்கள் உன்னை எதிர்நோக்கும். உன் "பிஸியான" வேலைப்பளுவுக்கு நடுவிலே அது உன்னால் முடியாமல் போனது! ஒரு விருந்தாளியைப் போல் அவ்வப்போது வந்தாலும் - வந்தபோதெல்லாம் எனக்கு நீ செய்த பணிவிடைகளுக்காக என்னால் உனக்கு கொடுக்க முடிந்ததெல்லாம் என் புன்னகையை மட்டும்தான். அதைக்கூட நீ புரிந்துகொண்டிருப்பாயா என்று தெரியவில்லை.


என்ன செய்ய.. என்னதான் நீ உலகவிஷயங்கள் பேசினாலும் பெற்றவர்களைவிட வேலைதான் முக்கியம் என்றாகிவிட்ட இந்த இயந்திரச் சூழலில் - நீயும் ஒரு சராசரியாகிப் போனதில் எனக்கு வருத்தமிருக்குமா என்று நீ யோசித்ததுண்டா?


என்னைப்பற்றி இனி கவலைப் படாதே.. உன் அம்மாவையாவது அவ்வப்போது போய் பார்த்துக்கொள். திருப்பூரின் சபிக்கப்பட்ட வாழ்க்கை எனக்குத் தெரியுமென்றாலும்.. உன் முதலாளிகளுக்கு ஆயிரமாயிரம் பணியாளர்களுண்டு.. உனக்கு ஒரே அன்னைதான்! பிறகு வருந்திப் பயனில்லை. உன் தம்பி பாவம். அவனுக்கு கடைசிவரை நானிருப்பேன் என்ற உறுதிமொழியை எனக்குக் கொடு.. இதைச் சொல்வதற்காக வருந்தாதே.. ஒருவேளை உனக்கு அக்காவோ, தங்கையோ இருந்திருந்தால் அவர்களை கரையேற்றியிருப்பாயா என்பது எனக்கு சந்தேகமே. ஏனென்றால் நீ எப்போதுமே உனக்காக மட்டுமான ஒரு உலகத்தில்தான் இருக்கிறாய்!


வேலை வேலை என்றிருந்து பத்திரிகைகளுக்கு எழுதிப்போட நேரமில்லாதிருந்த நீ இந்த வலையுலகத்தில் எழுதத் துவங்கியது குறித்து மிக்க மகிழ்ச்சி! நிறைய எழுது. அதற்காக தூக்கத்தை கெடுத்துக்கொள்ளாதே. உன் உடம்பைக் குறித்து உனக்கு அக்கறை இருப்பதே இல்லை. தயவுசெய்து நேரத்திற்கு உண்டு, உறங்கி உடம்பை பார்த்துக்கொள். இதை உனக்காகச் சொல்லவில்லை. என் பேத்திகளுக்காக சொல்கிறேன்!


நேற்று தந்தையர் தினத்தில் எனக்காக ஏதாவது பதிவு போட்டிருப்பாய் என நினைத்தேன். ஏதோ குட்டிக்கவிதைகள் போட்டிருக்கிறாய். அதனாலென்ன நான் உன்னை தப்பாக நினைக்கவா முடியும்? (அந்த நாலாவது கவிதை உண்மையில்லையே?) அன்னையரைக் கொண்டாடும் அளவுக்கு, இங்கே தந்தையரை யாரும் கொண்டாடுவதில்லை!

உன் அம்மா, தம்பியைப் பார்த்துக்கொள். உமா, மீரா, மேகாவுக்கு என் ஆசிகள் எப்போதும் உண்டு!

மற்றபடி...

இங்கே சொர்க்கத்தில் யாவரும் சுகம்!


அன்புடன்...

உன் அப்பா.

70 comments:

கோவி.கண்ணன் said...

என்னங்க இது கடைசியில் சோகமாக முடித்துவிட்டீர்கள்.

:(

கடிதத்தில் அன்பின் மொத்த உருவத்தை காணமுடிந்தது. அன்புத் தந்தையை கொண்டவர்கள் எல்லோருமே அதிர்ஷ்டசாலிகள்

நந்து f/o நிலா said...

ரொம்ப டச்சிங் கிருஷ்னகுமார்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

படிச்சதும்.. மௌனராகத்தில் ரேவதி அப்பா முன்னாடி நின்னு .. கொஞ்சமும் பொறுப்பில்லாதவ அது இதுன்னு அவர் சொல்லவேண்டியதெல்லாம் தானே சொல்லிக்குற காட்சி தான் நினைவுக்கு வருது..

லக்கிலுக் said...

:-(

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அருமை!!!

VIKNESHWARAN ADAKKALAM said...

மனம் கனத்து போனது நண்பரே... இப்பதிவிற்கு விளையாட்டாய் பின்னூட்டம் போட எனக்கு மனம் வரவில்லை...

anujanya said...

கே.கே.,

நல்ல உணர்ச்சி பூர்வமான பதிவு. 'நாலாம் கவிதை' பற்றி எழுதுகையில் தந்தையின் பரிதவிப்பை உணர்த்துகிறீர்கள். நானும் கேட்கிறேன் 'உண்மை இல்லைதானே?'. மேலும் நிறைய எழுதுங்கள்.

அனுஜன்யா

☼ வெயிலான் said...

//திருப்பூரின் சபிக்கப்பட்ட வாழ்க்கை எனக்குத் தெரியுமென்றாலும்..//

சபிக்கப்பட்ட வாழ்க்கை என்பது உண்மையான வார்த்தைகள். அனுபவித்தால் தான் தெரியும்.

பரிசல்காரன் said...

நன்றி கோவி. கண்ணன் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.. இந்தப் பதிவை எழுதும் போது மூன்று, நான்கு விஷயங்கள் என் மனதில் வந்து போனது. என் தந்தையின் ஆசியோ என்னமோ அவற்றில் சில நடந்து கொண்டிருக்கிறது.

அ) முதன் பின்னூட்டம் உங்களிடமிருந்து வருமென்று எதிர்பார்த்தேன்/நம்பினேன்.

ஆ) நந்து f/o நிலா ரொம்ப நாளாக நம் பக்கம் வரவில்லை. நானும் அவர் வலைவீட்டிற்குப் போகவில்லை. இன்று போகவேண்டுமென நினைத்தேன். (சத்தியமாக)

இ) முக்கியமாக இந்தப் பதிவிற்கு லக்கிலுக்கும், யெஸ்.பாலபாரதியும் வருகை புரிய வேண்டுமென நினைத்தேன்.
ஒருத்தர் வந்துட்டார்.. இன்னொருத்தர யாராவது கூட்டிட்டு வந்தா பரவால்ல..

உங்கள் கருத்துக்கு நன்றி!

பரிசல்காரன் said...

நந்து.. நிலா எப்படி இருக்கா? இன்னைக்கு கண்டிப்பா உங்கபக்கம் வரேன்..

கயல்விழி.. மிக்க நன்றி. தினமும் வருகை புரியும் உங்களுக்கு எனது நூறாவது பதிவின்போது என்ன மரியாதை செய்ய என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

பரிசல்காரன் said...

தல லக்கிலுக்.. என் எழுத்துக்கள் உங்களால் படிக்கப்பட்டதற்கு நன்றி! (இதற்குத்தானே ஆசைப்பட்டான் இந்த கிருஷ்ணகுமாரன்!)

பரிசல்காரன் said...

விக்கி.. பின்னூட்ட டாப் லிஸ்டில் வந்து விடுவீர்கள் போல..
//மனம் கனத்து போனது நண்பரே... இப்பதிவிற்கு விளையாட்டாய் பின்னூட்டம் போட எனக்கு மனம் வரவில்லை..//
உங்கள் உணர்வுக்கு என் மரியாதைகள்!


அனுஜன்யா.. (நான் மிக ரசித்த பெயர்!)
//நல்ல உணர்ச்சி பூர்வமான பதிவு. 'நாலாம் கவிதை' பற்றி எழுதுகையில் தந்தையின் பரிதவிப்பை உணர்த்துகிறீர்கள். நானும் கேட்கிறேன் 'உண்மை இல்லைதானே?'.//

உண்மை இல்லை! எனக்கென்னமோ சிகரெட் பிடிப்பதேயில்லை.. ஆகையால் நானும் சிகரெட் பிடிப்பதில்லை! (அட.. இது நல்லாயிருக்கே!!)

//மேலும் நிறைய எழுதுங்கள்.//
எழுதிட்டுதானிருக்கேன். படிக்க கூட்டம் சேர்க்கறதுதான் பெரும்பாடா இருக்கு அனு!

வெயிலான்.. வருகைக்கு நன்றி!
ஒரே ஊரில் நான்கைந்து கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் நாம், இதுவரை சந்திக்க முடியாமல் பின்னூட்டங்களிலும், ச்சாட்டிலும் தொடர்பிலிருப்பது.. சாபமில்லாமல் வேறென்ன?

Athisha said...

குடுத்து வச்சவன்யா நீ....

;-(

பரிசல்காரன் said...

அன்பு அதிஷா...
என்ன அர்த்தத்தில் சொன்னீர்களென்று புரியாவிட்டாலும்.. நன்றி!

Athisha said...

நான் பிறந்ததிலிருந்து என் தந்தையோடு வாழ்ந்ததில்லை.......

அப்பா கிடைக்க கூட குடுத்துவச்சிருக்கணும்

பரிசல்காரன் said...

மன்னிக்கவும். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை!

கோவி.கண்ணன் said...

//பரிசல்காரன் said...
நன்றி கோவி. கண்ணன் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.. இந்தப் பதிவை எழுதும் போது மூன்று, நான்கு விஷயங்கள் என் மனதில் வந்து போனது. என் தந்தையின் ஆசியோ என்னமோ அவற்றில் சில நடந்து கொண்டிருக்கிறது.
//

கே கே,

அவரார் எண்ணங்கள் செயல்படுத்தும்...செயல்பட வைக்கும்... என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். எனது ஞாயமன ஆசைகள் எல்லாமும் நிறைவேறி இருக்கிறது. உங்களுக்கும் அது போல் நடப்பதை நம்புகிறேன்.

சின்னப் பையன் said...

உணர்ச்சி பூர்வமான பதிவு.... வேறொன்றும் சொல்லத் தோணவில்லை...

பரிசல்காரன் said...

நன்றி கோவி. கண்ணன் & ச்ச்சின்னப்பையன்!

PPattian said...

//ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பன்னிரெண்டாயிரம் ரூபாயை ஒருமுறை உன்னிடம் கொடுத்துவிட்டு, டி.வி-யும், மிக்ஸியும் வாங்கிவரச் சொன்னபோது, அந்தப் பணத்தை உன் நண்பனொருவனுக்கு கொடுத்துவிட்டு, வெறுங்கையோடு நீ வீடு வந்ததும், இன்றுவரை அது திரும்பிவராமலே போனதும் //

என்னங்க இவ்ளோ ஏமாளியா இருக்கீங்க.. உங்க அப்பா உங்களை பத்தி கவலைப்படறது ஞாயம்தான்.

//ஒருவேளை உன்னை அடித்து, கண்டித்து வளர்த்திருந்தால் நீ இப்போதிருக்கும் நிலையை விட, நல்ல நிலைக்கு வந்திருப்பாயோ என்னவோ!
//

நிறைய சிந்திக்க வைத்த வார்த்தைகள்.. இது பத்தி தனியா ஒரு பதிவே போடலாம்.

rapp said...

thamizhla ezhudhaadhukku mannichchukkanga. inga thideernu thamizh translator work panna maattenguthu. athu work panna arambicha udan thamizhilae proper comments podaraen

பரிசல்காரன் said...

மிக்க நன்றி புபட்டியன்..
//நிறைய சிந்திக்க வைத்த வார்த்தைகள்.. இது பத்தி தனியா ஒரு பதிவே போடலாம்.// போடுங்க.. !

பரவால்ல ராப்ப்.. அப்புறமா ரிலாக்ஸா வாங்க..

பரிசல்காரன் said...

வருகைக்கு நன்றி King!

Sathiya said...

ரொம்ப உருக்கமாக இருந்தது.

லக்கிலுக் said...

இந்தப் பதிவை கில்லியில் சேர்த்திருக்கிறேன் தோழர்!

ambi said...

ரொம்ப உருக்கமாக இருந்தது.

ambi said...

இதை தான் சாதம் சமைக்கறதுனு முன்னமே சொன்னேன். உடனே ஒரு அவியல் போடுவீங்களே. :p

Krishnan said...

அருமையான பதிவு. கில்லி மூலமாக இங்கே வந்தேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

அடுத்த பதிவு எப்போ நண்பரே??

Anonymous said...

Krishna,

Touching.

Lakshman said...

Wonderful!!

பரிசல்காரன் said...

மிக்க நன்றி சத்யா.. அடிக்கடி வாருங்கள்!

லக்கிலுக்ஜி.. என்ன சொல்லி என் அன்பை வெளிப்படுத்துவதென்று தெரியவில்லை! என் பொறுப்பை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள்!

பரிசல்காரன் said...

அம்பி.. இன்னைக்கே அவியலப் போட்டுர்றதுன்னுதான் நெனச்சேன்.. லக்கிலுக்ஜி கில்லிலயெல்லாம் பரிந்துரை செய்து, நம்ம பொறுப்பை அதிகப்படுத்தீருக்காரு. டச்சிங்கா இதை எதிர்பார்த்து வர்றவங்க நம்ம மொக்க எழுத்தப் படிச்சு அப்பறம் நம்ம பக்கமே வர்லீன்னா என்ன பண்றதுன்னு இன்னைக்கு கொஞ்சம் அமைதியா இருந்துட்டேன்!

நன்றி கிருஷ்ணன்.. அடிக்கடி வாங்க! கில்லிமாதிரி கலக்கலாம்!

பரிசல்காரன் said...

நன்றி லக்ஷ்மணன்.

வேலன்.. உங்களுக்கும் என் நன்றிகள்! உங்கள் மேய்ச்சல் நிலம் மூலமாக நிறையபேர் வருகிறார்கள்!

விக்கி, இதோ.. கிளம்பீட்டோம்ல.. {என்னய்யா.. உங்க பிளாக்-ல நம்மளைப் போட்டு தாக்கிருக்கீங்க.. உள்குத்து ஒண்ணும் இல்லையே? - ("நான் பரிசல்காரனோ...." என்று குறிப்பிட்டிருப்பதை சொல்கிறேன்!)}

சென்ஷி said...

மனம் கனத்துப்போகிறது நண்பா :((

rapp said...

மோகனோட ப்ளோக்ல என்னோட புதுப் பதிவு வந்திருக்கு, வந்து பாருங்க.http://mohankandasami.blogspot.com/

பரிசல்காரன் said...

நன்றி சென்ஷி.. (எங்கடா உங்களக் காணலியேன்னு தவிச்சுப் போய்ட்டேன்!)

நிச்சயம் படிக்கிறேன் ராப்..

கயல்விழி said...

நேற்று வெறும் கிசு கிசு படிச்சிட்டு ஓடிட்டேன். இன்று வந்து தான் இந்த கதையை படிச்சேன். ரொம்ப நல்லா இருக்கு :) வரவர குமுதம், ஆனந்த விகடனில் வரும் கதை எல்லாவற்றையும் விட உங்களை மாதிரி ப்ளாகர்ஸ் நல்லா கதை எழுதறீங்க.

பரிசல்காரன் said...

ஐயையோ கயல்.. இது கதையில்ல..
எங்கப்பா இருந்திருந்தா என்கிட்ட என்னவெல்லாம் சொல்ல நினைச்சிருப்பாரு-ன்னு நானா நினைச்சு எழுதின ஒரு கற்பனையான-உருக்கமான-கடிதம்! எழுதிருக்கற எல்லாமே நிஜம்..

சென்ஷி said...

//கயல்விழி said...
நேற்று வெறும் கிசு கிசு படிச்சிட்டு ஓடிட்டேன். இன்று வந்து தான் இந்த கதையை படிச்சேன். ரொம்ப நல்லா இருக்கு :) வரவர குமுதம், ஆனந்த விகடனில் வரும் கதை எல்லாவற்றையும் விட உங்களை மாதிரி ப்ளாகர்ஸ் நல்லா கதை எழுதறீங்க.
//

:))

இவங்க நல்லா கத வுடுறாங்கப்பா :))

ஜி said...

:((((

Ramya Ramani said...

என்ன சொல்ல மிக மிக உருக்கமாகவும் அருமையாகவும் இருக்கு :))

பரிசல்காரன் said...

மீண்டும் வந்ததற்கு நன்றி சென்ஷி!

ஜி, ரம்யாரமணி.. (பேர் நல்லா இருக்கே!!)

வருகைக்கு நன்றி. அடிக்கடி வாருங்கள்! (வாருங்கள்’ன்னா ‘வாங்க’ன்ன மீனிங்ல சொல்றேன்.. வாரிடாதீங்க!)

ஜெபா said...

மிக சிறந்த கடிதம்....

பாலராஜன்கீதா said...

நன்றாக இருக்கிறது

suratha yarlvanan said...

நன்று.

Illatharasi said...

கண்களில் நீர் வரவைத்துவிட்டீர்கள்......
மிக மிக அருமை!!!!

பரிசல்காரன் said...

ெஜபா

பாலராஜன் கீதா..

suratha yarlvanan

இல்லத்தரசி.. (எங்க ரொம்ப நாளா கணோம்?)

நாலு பேர் நாலு விதமா பாராட்டி இருக்கீங்க..

நன்றி!

கயல்விழி said...

//இவங்க நல்லா கத வுடுறாங்கப்பா :))//

உண்மையை தான் எழுதினேன் சென்ஷி. நீங்கள் சமீபமாக குமுதம், விகடன் கதைகளை படிப்பதுண்டா?

கயல்விழி said...

//ஐயையோ கயல்.. இது கதையில்ல..
எங்கப்பா இருந்திருந்தா என்கிட்ட என்னவெல்லாம் சொல்ல நினைச்சிருப்பாரு-ன்னு நானா நினைச்சு எழுதின ஒரு கற்பனையான-உருக்கமான-கடிதம்! எழுதிருக்கற எல்லாமே நிஜம்..//

நிஜமா????

Sorry if I offended you in any way.
I am sure this would be the best father's day gift to your dad.

பரிசல்காரன் said...

நன்றி கயல்!

கிரி said...

பரிசல்காரன் இந்த மாதிரியான அருமையான பதிவுக்கு என் தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

உங்கள் பதிவை படித்தேன், இதை விட சிறப்பாக ஒருவர் தன் அப்பாவிடம் உள்ள அன்பை வெளிப்படுத்தி பார்க்கவில்லை (கோவிக்கண்ணன் அவர்கள் தவிர்த்து). சரியான பெற்றோர் அமைவது என்பது அனைவருக்கும் அமைந்து விடாது, அந்த வகையில் நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவரே, உங்கள் அதிர்ஷ்டம் தொடர அனுமதிக்காமல் இறைவன் உங்கள் தந்தையை அழைத்துக்கொண்டது வேதனையான விஷயம். அப்பா என்றாலே நம் நினைவுக்கு வருவது நமக்கு அவர் கூறிய அறிவுரைகளும் அனுபவங்களுமே, நம்மிடம் அவர் கூறிய போது புரியாத பல விஷயங்கள் அவர் இல்லாத போது அதன் அர்த்தம் புரிந்து அவர் மீதான மதிப்பை உணர்த்தும். என்னடா! இது எப்போதும் திட்டி கொண்டே இருக்கிறாரே என்று சிறு வயதில் நினைத்து அந்த திட்டுகளும் அறிவுரைகளுமே நம்மை நல் வழி படுத்தி இருக்கின்றன என்ற அனுபவபூர்வமாக உணரும் போது மிக தாமதமாக போய் விடுகிறது உங்களை போல் நிலையில் உள்ளவர்களுக்கு. அன்பு என்றால் அது அம்மா மட்டுமே என்றாலும், அதை வெளிக்காட்டாமல் மனதில் பூட்டி வைத்து பின்னர் நம்மை உணர செய்வது தந்தையே என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அப்படிப்பட்ட உங்கள் அப்பாவின் அன்பை மறக்காமல் இருக்கும் உங்களுக்கு உங்கள் அப்பாவின் ஆசிகள் என்றும் உண்டு.

அன்புடன்
கிரி

வேளராசி said...

மனம் கனத்து போனது என்ன சொல்வதென்றே தெரியவில்லை நண்பரே.

பரிசல்காரன் said...

நன்றி கிரி..

என்ன உங்களைக் காணவில்லை என்று நினைத்தது நிஜம்!
////அதை வெளிக்காட்டாமல் மனதில் பூட்டி வைத்து பின்னர் நம்மை உணர செய்வது தந்தையே என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.//

உண்மை.. உண்மை.. உண்மை..

உங்களைப் போன்றவர்களின் அன்பு என்னை எப்போதும் வழிநடத்தும்..

வருகைக்கு நன்றி வேளராசி.. அடிக்கடி வாங்க..

Unknown said...

நீ குழந்தையாய் இருக்கும்போது என்னிடம் மிகவும் ஒட்டிக்கொண்டிருப்பாய். அதனால்தானோ என்னவோ பெரியவனாக, ஆக விலகிவிட்டாய்!
இந்த வரிகள் உன் உள்ளத்தை வெளிப்படுத்தியது. மேலும் என் கண்ணை நனைத்தது.

Unknown said...

நீ குழந்தையாய் இருக்கும்போது என்னிடம் மிகவும் ஒட்டிக்கொண்டிருப்பாய். அதனால்தானோ என்னவோ பெரியவனாக, ஆக விலகிவிட்டாய்!
இந்த வரிகள் உன் உள்ளத்தை வெளிப்படுத்தியது. மேலும் என் கண்ணை நனைத்தது.

இராம்/Raam said...

அருமை..... :)

Syam said...

படித்து முடிக்கும் போது கண்களில் நீர் ஏன்னா பாதி எனக்கும் பொருந்தும்....அருமை

67ygjg said...

இது 100% எனக்காகவே எங்க அப்பா எழுதின மாதிரி இருக்கு.

வெட்டிப்பயல் said...

அருமையான பதிவு... முடிவு இன்னும் டச்சிங்கா இருந்தது...

ENRAJENDRAN said...

Dear Frind,

Cheers ,
and I will Come soon with athiradi Tamil Blogodu,

regards / James Rajendran / Coimbatore

தமிழன்-கறுப்பி... said...

இந்தப்பதிவுக்கு நிறைய நாட்களாக பின்னூட்டம் எழுத வேண்டும் என்று இருந்தேன் எப்படியோ தவறிக்கொண்டே இருந்தது இன்று மறுபடியும் ஒரு முறை வாசித்து பின்னூட்டம் எழுதியிருக்கிறேன்

உணர்ந்தால் மட்டும் தெரிகிற விசயத்தை மனதைத்தொடும்படி சொல்லியிருக்கிறீர்கள்..

நன்றி...

Sanju said...

மிகவும் அருமை தோழா, ஹ்ம் எனது நினைவுகல் அப்பா சொன்ன அதே கடன் வாங்கிய காலத்து கனவுகலை தெளிவாய் எழுதியிருக்கிரீர்கள்

பரிசல்காரன் said...

வந்த,

வந்துகொண்டிருக்கும்,

வரப்போகும்

அனைத்து நல்லுள்ளங்களுக்கும்

மனமார்ந்த, மகிழ்ச்சியான

நன்றிகள்!!

அதிரை தங்க செல்வராஜன் said...

Dear friend.

Its touching post.

Well said.

keep it up.

with love

Adirai Thanga Selvarajan

பரிசல்காரன் said...

மிக்க நன்றி ஆதிரை தங்க செல்வராஜன்!

Ganesh PS said...

Hi Mate,

A genuine masterpiece!!!
Thanks for taking us back... to good old days...this is a real striker to something called.....feelings!!! Thans for making a busy day seem lighter and strike I've better job to do than running monotonously!!!

Long Live your good postings!!

(Apologies for not having Tamil Fonts)

Cheers....Ganesh PS

Ramesh said...

அருமையா அருமை!

Arasi Raj said...

தவமாய் தவமிருந்து படம் பார்த்த மாதிரி இருந்தது .......சோகமா இருக்கு

இது உண்மை இல்லியே....கதை தானே

சுரேகா.. said...

பரிசல்..

இன்று அப்பாவோடு இருந்தாலும்..

அப்பாவை விரைவில் சென்னைக்கு கூட்டிவந்து கூடவே வைத்துக்கொள்ளவேண்டும்..

நன்றி நண்பா!

அழுதுமுடித்துவிட்டேன்..!

ஞானசேகர் ராஜேந்திரன் said...

வாசிப்பின் கடைசியில் என்ன எழுதுவதென்று தெரியவில்லை. உங்களின் வழிகளுக்கு உருவம் கொடுத்து வார்த்தைகளாக இங்கே எழுதியிருக்குறீர் என்று தெரிகிறது.
உங்களின் தந்தை நிச்சயமாக இந்த கடிதத்தை படித்திருப்பார்.