”ஏய்ய்ய்... இவங்க எங்க இங்க?” டைரக்டரும், இசையமைப்பாளாரும் ஒரே
சமயத்தில் அலறுகிறார்கள்..
“ஏற்கனவே தோனி வேணவே வேணம்னுட்டாரு, அப்படியும் கும்ப்ளே வேணும்ன்னு கூட்டீட்டு போய் இப்போ ஸ்ரீலங்காக் காரங்க காட்டுன காட்டுல, டீமிலிருந்து தூக்கீட்டாங்க. அங்கிருந்து கிளம்பி வந்து சென்னை ஏர்போர்ட்ல மும்பை, பெங்களூர், கல்கத்தா போக ஃப்ளைட் டிக்கெட்டுக்கு காசில்லாம நின்னுட்டிருந்தாங்க. நாமதான் `நான் பிச்சைக்காரன்’ எடுக்கறோமே... அதான் ஒரு நாள் வேலை செய்ங்க. பணம் தர்றேன்னு கூட்டி வந்துட்டேன்”
”சிச்சுவேஷன் ரெடியா” தயாரிப்பாளார் கேட்க..
டைரக்டர் மனதுக்குள்.. “சிச்சுவேஷன் மட்டும்தான் ரெடி. இனிமேதான் கத ரெடி பண்ணணும்”
இசையமைப்பாளார்: “சிச்சுவேஷனெல்லாம் வேணாம், நீங்களா எழுதுங்க. நான் யூஸ் பண்ணிக்கறேன்”
ட்ராவிட் உற்சாகமாகி...
“ஏ பந்தே... ஏ பந்தே
அவன் அடிச்சா சிக்ஸரு போகுற
நான் அடிச்சா ஃபீல்டரைத் தேடுற
பந்தே... ஏ பந்தே...”
“ஓ! அவங்க சிச்சுவேஷனுக்கு பாடுறாங்க... விடுங்க.. விடுங்க”
சச்சின்: “ஆக்சுவலி வாட் ஹேப்பண்ட்ன்னா... “
“யோவ்... என்ன மேன் ஆஃப் த மேட்ச்சா தர்றாங்க? பாடச் சொன்னா பேசற?”
“இல்லீங்க... அவருக்கு அப்பதான் மூட் வரும்”
கங்குலி ஒரு மூலையில் இறங்கி வந்து காற்றில் பேட்டை வீசி ப்ராக்டீஸ் செய்து கொண்டிருக்கிறார்.
“ஹலோ.. சவ்ரவ்... அங்க என்ன பண்றீங்க?”
“ஓ.. நானும் ஆட்டைல இருக்கேனா?”
“இவருக்கு பேட்டை எடுத்து பிட்சுல நிக்கும்போது கூட டீம்ல இருக்கேனா, இல்லையான்னு டவுட் வரும் போல”
கங்குலி: நான் பாடறேன் பாருங்க..
“வரவா.. வரவா.. வரவா...
சச்சினுக்கு வரவா?”
இங்க வரவா’ங்கறது இன்கம்.”
”சரி.. பாட்டு வரிய மட்டும் சொல்லுங்க. விளக்கமெல்லாம் எவனும் கேட்கமாட்டான்”
“வரவா.. வரவா.. வரவா..
சச்சினுக்கு வரவா...
வரவா வரவா.. நானும்
பெவிலியனுக்கு வரவா?”
”அது சரி.. இதெல்லாம் எப்படி பிச்சைக்காரன் படத்துல பாடுறா மாதிரி வரும்?”
”அதெல்லாம் கேக்கக்கூடாது. படத்துலயே லாஜிக் இல்ல... பாட்டுல எதுக்கு லாஜிக்கு?”
“என்னமோ பண்ணுங்க”
இந்த இடத்தில் பதிவர் வெண்பூ உள்ளே நுழைகிறார்.
“என்ன கூத்துய்யா நடக்குது இங்க? பாட்டெழுதறேன்... படுத்தறேன்னு பரிசல்காரனால முடியாதத செய்யச் சொல்றீங்க? நீங்களே படிச்சுப் பாருங்க. நேத்து எழுதினத மனுஷன் படிக்க முடியுமா? இதுல பார்ட் டூ வேற..”
அடுத்த நிமிடம் எல்லோரும் தலைதெறிக்க ஓடிவிட...வெண்பூ ஃபோனை எடுத்து எல்லா பதிவர்களுக்கும் கான்ஃப்ரன்ஸ் போடுகிறார்..
“எல்லாரும் மன்னிச்சிடுங்க. என்னையில்ல. பரிசல்காரனை. தெரியாம எழுதிட்டாரு. முடிஞ்சா நான் பார்ட் 3 ல கொஞ்சமாவது காமெடியா எழுதப்பாக்கறேன். ஆனா எப்ப எழுதுவேன்னு தெரியாது. எழுதுவேனா-ன்னே தெரியாது! பை.. பை...”
-----------------------------------
முக்கியக் குறிப்பு: இன்று பிறந்த நாள் கொண்டாடும் நண்பர், பதிவர் புதுகை எம்.எம். அப்துல்லா (சென்னைக்கு வந்தால் பார்ட்டி தர்றேன் என்று வாக்குறுதி கொடுத்திருப்பதால்) வளமோடு வாழ உளமார வாழ்த்துகிறேன்!
54 comments:
:(..
:)))))))))
@ VIJAY ANANDH
&
ஜெகதீசன்
தெரியுதுங்க. `ஏண்டா இப்படியெல்லாம் எழுதிக் கொல்ற'-ங்கற சிரிப்புதான்னு தெரியுது. என்ன பண்ண? ஆரம்பிச்சாச்சு. முடிக்கணுமே..
அட.. இப்போதான் கவனிச்சேன்.. விஜய் ஆனந்த் சிரிக்கல, வருத்தப் பட்டிருக்காரு!
அப்ப சரி!
இந்தக் கேவலமான பதிவுக்கு யாரும் பின்னூட்டம் போடறத விட வேற வேலை இருந்தா செய்யலாம்!
@ வெறுத்துப்போனவன்
அட! ஒருத்தர் தன் பேரையே மாத்திக்கற சக்தி என்னோட பதிவுக்கு இருக்குதா! ஆச்சரியமா இருக்கே!
இந்த கருமத்துக்குப் போய் ஆறு பின்னூட்டமான்னுதான் பாத்தேன்...
இது கும்மிப் பதிவுன்னு கான்ஃபார்ம ஆயிடுச்சுடோய்!
எல்லாருக்கும் சொல்லிட்டு வர்றேன்..
ஒரு முடிவோட... யாரோ கிளம்பீட்டாங்கன்னு நெனைக்கறேன்..
யாரோ ஒருத்தர் இல்லீங்க்... ஒரு கூட்டமே உங்களைத்தேடுதாம்.
//
தெரியுதுங்க. `ஏண்டா இப்படியெல்லாம் எழுதிக் கொல்ற'-ங்கற சிரிப்புதான்னு தெரியுது. என்ன பண்ண? ஆரம்பிச்சாச்சு. முடிக்கணுமே
//
ஏங்க?? நல்லாத்தான இருக்கு?
அதுவும் அந்தக் கும்ளே பாடுற பாட்டு ரெம்ப நல்லா இருக்கே....
:P
அடடே, வாழ்த்துக்கள் கிருஷ்ணா, வர்ற அனானி பின்னூட்டங்களை பார்த்தா நீங்க பெரிய பதிவர் ஆகிட்டீங்கன்னு நினைக்கறேன் :):):) கலக்குங்க கலக்குங்க
முத்தக்கா.. ரொம்ப கோவமா தேடுறாங்கன்னும் கேள்விப்பட்டேன்!(சரி.. வடகரைவேலன் `முதல்' போட்டுட்டாரு... அடுத்தது நீங்கதான். எதுனா எழுதி தள்ளி விட்டுடுங்க)
@ ஜெகதீசன்
//ஏங்க?? நல்லாத்தான இருக்கு?
அதுவும் அந்தக் கும்ளே பாடுற பாட்டு ரெம்ப நல்லா இருக்கே.//
பாருங்க மகாஜனங்களே.. இதிலிருந்தே தெரியுதுல்ல நம்ம பதிவு எவ்ளோ கேவலமா இருக்குன்னு. பாவம் இவரால ஒழுங்கா படிக்கக்கூட முடியல. கும்ப்ளேவ எங்கீங்க நான் பாட விட்டிருக்கேன்?
//rapp said...
அடடே, வாழ்த்துக்கள் கிருஷ்ணா, வர்ற அனானி பின்னூட்டங்களை பார்த்தா நீங்க பெரிய பதிவர் ஆகிட்டீங்கன்னு நினைக்கறேன் :):):) கலக்குங்க கலக்குங்க//
அனானி பின்னூட்டம் வந்தா பெரிய ஆளுன்னு அர்த்தமா? இது தெரியாம ப்[ஓச்செ நமக்கு!
நானென்ன நெனச்சேன்னா, நமக்கு ரெகுலரா பின்னூட்டம் போடற யாரோ, பதிவ படிச்சுட்டு டென்ஷனாகி, வேற பேர்ல போடறாங்கன்னு நெனச்சேன். அதுவாத்தான் இருக்கணும். அதான் இன்னைக்கு யாராரு பின்னூட்டம் போடலன்னு நோட் பண்ணீட்டே இருக்கேன்!
:) என்னங்க பதிவில் ஏதோ குறைஞ்ச மாதிரி இருக்கு... :((
வருத்தப்படல சார்...உங்க usual touch இல்லாத மாதிரி ஒரு feel....ஏதோ அவசரத்துல எழுதினாப்ல...அதான் அப்படி போட்டேன்...தப்பா நெனச்சுக்காதீங்க ப்ளீஸ்...
@ விக்னேஸ்வரன்
ஆமா!
@ விஜய் ஆனந்த்
என்னாங்க இது... இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு? உண்மையா இந்த பதிவு மூலமா, இனி இந்த மாதிரி அவசர கதில எழுதறது எவ்ளோ தப்புன்னு தெரிஞ்சுகிட்டேன்!
நன்றி!
இந்த கதை நல்லா தானே இருக்கிறது?
நீங்கள் தொடர்ந்து நல்ல கதைகளாக எழுதி வருவதில் இது ஒரு சிக்கல். ஒரு கதையில் கொஞ்சம் ஸ்டாண்டர்ட் தவறினாலும் ரொம்ப டென்ஷனாவார்கள். Anyways, I liked the story.
PS: தொடர் விளையாட்டு பதித்தாகிவிட்டது(நீங்கள் குறிப்பிட்ட வரிசை எண்ணுடன்)
உங்களுக்கும் ஒரு கும்மிகூட்டம் இருக்கும்போல இருக்குதே!இது தானா சேர்ந்த கூட்டமா அல்லது கும்மி அடிச்சே சேர்ந்த கூட்டமா:)
பரிசல் தொடுதல் குறைஞ்சிருக்கு...
நானும் இப்படி ஆ.கோ.-றிலே ஒரு பதிவு போட்டுட்டு அப்புறம் வருத்தப்பட்டேன்... அதனாலே, இப்பல்லாம் ஒரு நாளைக்கு பதிவு போட மேட்டர் கிடைக்கலேன்னா, லூஸ்லே விட்டுடறதுதான்... அவ்வ்வ்வ்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
கோவை விஜய்
pugaippezhai.blogspot.com
பரிசல்,
மேட்டர் இல்லன்னா லீவு எடுத்துக்கோங்க.
//நானென்ன நெனச்சேன்னா, நமக்கு ரெகுலரா பின்னூட்டம் போடற யாரோ, பதிவ படிச்சுட்டு டென்ஷனாகி, வேற பேர்ல போடறாங்கன்னு நெனச்சேன். அதுவாத்தான் இருக்கணும். அதான் இன்னைக்கு யாராரு பின்னூட்டம் போடலன்னு நோட் பண்ணீட்டே இருக்கேன்//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........................ ஏங்க பின்னூட்டம் போட்டவங்க திரும்ப வந்து அனானியா வேலையக் காமிச்சா என்ன செய்வீங்க?
போட்டாச்சி பார்ட் 3...
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........................ ஏங்க பின்னூட்டம் போட்டவங்க திரும்ப வந்து அனானியா வேலையக் காமிச்சா என்ன செய்வீங்க?//
இல்லே.. முதல்லே அனானியா பின் போட்டுட்டு, அப்புறம் ஒரிஜினல் பேர்லே வந்து பின் போட்டா - என்ன பண்ணுவீங்க... அவ்வ்வ்வ்.... அது நானில்லை......
//“எல்லாரும் மன்னிச்சிடுங்க. என்னையில்ல. பரிசல்காரனை. தெரியாம எழுதிட்டாரு. முடிஞ்சா நான் பார்ட் 3 ல கொஞ்சமாவது காமெடியா எழுதப்பாக்கறேன். ஆனா எப்ப எழுதுவேன்னு தெரியாது. எழுதுவேனா-ன்னே தெரியாது! பை.. பை...”//
"அந்த கொடுமையெல்லாம் படிக்கறத்துக்குள்ளே கொண்டு போய் சேர்த்துடு பகவானே" ன்னு யாரும் இதுவரை பின்னூட்டலையா ?
என்ன கொடுமை பரிசல் ஐயா !
:)))))))
//“ஏ பந்தே... ஏ பந்தே
அவன் அடிச்சா சிக்ஸரு போகுற
நான் அடிச்சா ஃபீல்டரைத் தேடுற
பந்தே... ஏ பந்தே...”//
எப்படி இப்படியெல்லாம்.
:))))))
எல்லாருக்கும் பொதுவா ஒரு பின்னூட்டம்...
எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க!
கிருஷ்ணா உங்கள் வருத்தம் புரிகிறது... சிரமப்பட்டு நேரம் ஒதுக்கி எழுதி இருப்பீர்கள்... நண்பர்கள் கேலி செய்வது கஷ்டமான ஒன்று தான். நான் பின்னூட்ட வேண்டாம் என்று தான் நினைத்தேன். நான் வந்து போனதற்காக எழுதி வைத்தேன்... மன்னிப்பெல்லாம் எதற்கு... வேண்டாமே...
//கிருஷ்ணா உங்கள் வருத்தம் புரிகிறது... சிரமப்பட்டு நேரம் ஒதுக்கி எழுதி இருப்பீர்கள்... நண்பர்கள் கேலி செய்வது கஷ்டமான ஒன்று தான். நான் பின்னூட்ட வேண்டாம் என்று தான் நினைத்தேன். நான் வந்து போனதற்காக எழுதி வைத்தேன்... மன்னிப்பெல்லாம் எதற்கு... வேண்டாமே...//
repeatteeeeeeee.....
பதிவுகள் பலவிதம் அதில் இதுவும் ஒரு விதம் ஆடுங்க அண்ணன் கோசிக்கவே கூடாது...!
cool...:)
பதிவுகள் பலவிதம் அதில் இதுவும் ஒரு விதம் ஆடுங்க அண்ணன் யோசிக்கவே கூடாது...!
cool...:)
//அடடே, வாழ்த்துக்கள் கிருஷ்ணா, வர்ற அனானி பின்னூட்டங்களை பார்த்தா நீங்க பெரிய பதிவர் ஆகிட்டீங்கன்னு நினைக்கறேன் :):):) கலக்குங்க கலக்குங்க
//
ரீப்பீட்டேய்...
//“ஏ பந்தே... ஏ பந்தே
அவன் அடிச்சா சிக்ஸரு போகுற
நான் அடிச்சா ஃபீல்டரைத் தேடுற
பந்தே... ஏ பந்தே...”
//
ஜீப்பரு...
இது கவுஜ மாரியே இருக்கே..
கிரிகெட் கிரிகெட்டுதான்
கிரங்கடிக்கும் கிரிக்கெட்டு
ட்ரவிட் பாட்டு
கங்குலி கவிதை
சச்சின் கானம்
கடைசியில்?
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
HAPPY BIRTH DAY புதுகை எம்.எம். அப்துல்லா :))
(SORRY FOR THE ENGLISH...)
//வெறுத்துப்போனவன் said...
இந்தக் கேவலமான பதிவுக்கு யாரும் பின்னூட்டம் போடறத விட வேற வேலை இருந்தா செய்யலாம்!
//
THANKS FOR YOUR VALUABLE ADVIVE...
பட், இப்ப எனக்கு வேற ஏதும் வேலையில்லையே.. நான் என்ன செய்யறது :(
advice... அது முன்னாடி போட்ட பின்னூட்டத்துல அட்வைஸ்ன்னு டைப் பண்ண ஆரம்பிச்சு தப்பாயிடுச்சு.. இதுக்கெல்லாம் யாரும் எக்கோ எழுப்பிட கூடாதுன்னு இந்த பின்னூட்ட கயமை :)
//கும்(மி)தாஜ் said...
இந்த கருமத்துக்குப் போய் ஆறு பின்னூட்டமான்னுதான் பாத்தேன்...
இது கும்மிப் பதிவுன்னு கான்ஃபார்ம ஆயிடுச்சுடோய்!
எல்லாருக்கும் சொல்லிட்டு வர்றேன்..
..
எனக்கு நியுஸ் வந்து சேரல.. இதுயாரோட சதி :(
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
யாரோ ஒருத்தர் இல்லீங்க்... ஒரு கூட்டமே உங்களைத்தேடுதாம்.
/
ஆஹா.. கவுஜ.. கவுஜ...
நான் கூட்டத்துல ரொம்ப கடைசியில வந்துட்டேன் போலருக்குது :)
//rapp said...
அடடே, வாழ்த்துக்கள் கிருஷ்ணா, வர்ற அனானி பின்னூட்டங்களை பார்த்தா நீங்க பெரிய பதிவர் ஆகிட்டீங்கன்னு நினைக்கறேன் :):):) கலக்குங்க கலக்குங்க
//
என்ன கொடும சார் இது.. இவரு அல்ரெடி நல்லவரு.. வல்லவரு.. பெரியவருன்னு நான் ஊரு முழுக்க மைக்செட் கட்டிட்டு இருக்கேன். இப்பத்தான் தங்கச்சிக்காவுக்கு அது தெரியுதா... :(
அனானியா வந்து ஆடுனாத்தான் பெரிய மனுசன்னா.. அப்ப நாங்கல்லாம் :)
//நானென்ன நெனச்சேன்னா, நமக்கு ரெகுலரா பின்னூட்டம் போடற யாரோ, பதிவ படிச்சுட்டு டென்ஷனாகி, வேற பேர்ல போடறாங்கன்னு நெனச்சேன். அதுவாத்தான் இருக்கணும். அதான் இன்னைக்கு யாராரு பின்னூட்டம் போடலன்னு நோட் பண்ணீட்டே இருக்கேன்!//
என் பேர லிஸ்ட்லேந்து அழிச்சுடுங்கண்ணா.. நான் எப்பவுமே கொஞ்சம் லேட்டா வருவேன். என் வேலை அப்படி :(
//VIKNESHWARAN said...
:) என்னங்க பதிவில் ஏதோ குறைஞ்ச மாதிரி இருக்கு... :((
//
அவ்வ்வ்வ்... ஒரு ஒன்றரை பக்க சைஸ்ல பதிவு போட்டா நீளம்தான்யா குறையும் :)
//கயல்விழி said...
இந்த கதை நல்லா தானே இருக்கிறது?
நீங்கள் தொடர்ந்து நல்ல கதைகளாக எழுதி வருவதில் இது ஒரு சிக்கல். ஒரு கதையில் கொஞ்சம் ஸ்டாண்டர்ட் தவறினாலும் ரொம்ப டென்ஷனாவார்கள். Anyways, I liked the story.
//
எனக்கென்னமோ இந்த பின்னூட்டத்துலதான் ஏகப்பட்ட உள்குத்து இருக்கறா மாதிரி ஒரு ஃபீலிங்க்... வுழுந்துடாதே பரிசலு :))
//ராஜ நடராஜன் said...
உங்களுக்கும் ஒரு கும்மிகூட்டம் இருக்கும்போல இருக்குதே!இது தானா சேர்ந்த கூட்டமா அல்லது கும்மி அடிச்சே சேர்ந்த கூட்டமா:)
//
ஆளாளுக்கு ஒரு பின்னூட்டம் போடுறதே உங்க கணக்குல கும்மியா.. அப்ப என்னை மாதிரி ஆளுங்கள நீங்க எந்த வகையில சேர்த்துப்பீங்க :)
//ச்சின்னப் பையன் said...
பரிசல் தொடுதல் குறைஞ்சிருக்கு...
//
நமீதா போட்டோ போடலைங்கறது கூட ஒரு குறைதான் :(
//கோவை விஜய் said...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
கோவை விஜய்
pugaippezhai.blogspot.com
//
ஒண்ணும் முடியல்ல... சும்மா கிர்ர்ர்ருன்னு இருக்குது :(
//கோவி.கண்ணன் said...
//“எல்லாரும் மன்னிச்சிடுங்க. என்னையில்ல. பரிசல்காரனை. தெரியாம எழுதிட்டாரு. முடிஞ்சா நான் பார்ட் 3 ல கொஞ்சமாவது காமெடியா எழுதப்பாக்கறேன். ஆனா எப்ப எழுதுவேன்னு தெரியாது. எழுதுவேனா-ன்னே தெரியாது! பை.. பை...”//
"அந்த கொடுமையெல்லாம் படிக்கறத்துக்குள்ளே கொண்டு போய் சேர்த்துடு பகவானே" ன்னு யாரும் இதுவரை பின்னூட்டலையா ?
/
அதான் நீ கரீக்டா போட்டுட்டியே தலீவா :)
//ஸயீத் said...
//“ஏ பந்தே... ஏ பந்தே
அவன் அடிச்சா சிக்ஸரு போகுற
நான் அடிச்சா ஃபீல்டரைத் தேடுற
பந்தே... ஏ பந்தே...”//
எப்படி இப்படியெல்லாம்.
:))))))
//
ரிப்பீட்டே :)
///தமிழன்... said...
பதிவுகள் பலவிதம் அதில் இதுவும் ஒரு விதம் ஆடுங்க அண்ணன் யோசிக்கவே கூடாது...!
cool...:)
//
நீ பேசப்படாது. இந்த பதிவுல ஒரே பின்னூட்டத்த ரெண்டு தபா பப்ளிஷ் பண்ணியிருக்கற நீ பேசப்படாது. வேணும்னா நான் அதுக்கு ரிப்பீட்டே போட்டுக்கலாம். நீ மட்டும் இத்த பேசியிருக்கப்படாது :)
இது 50. :)
என்ன கொடும சார் இது.. 50 பின்னூட்டம் போட்டு பதிவ பத்தி ஒரு வார்த்த கூட சொல்லாமலே இருக்கேன். :(
//முக்கியக் குறிப்பு: இன்று பிறந்த நாள் கொண்டாடும் நண்பர், பதிவர் புதுகை எம்.எம். அப்துல்லா (சென்னைக்கு வந்தால் பார்ட்டி தர்றேன் என்று வாக்குறுதி கொடுத்திருப்பதால்) வளமோடு வாழ உளமார வாழ்த்துகிறேன்!//
என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே...
(இனிமே என்னைப்பார்த்து பதிவுக்கு பதில் சொல்லலைன்னு சொல்லக்கூடாது.. சரியா... )
என்ன கொடுமை சென்ஷி இது!
பதிவைப் போட்டுட்டு, லதானந்த் அங்கிளுக்கு ஒரு கவுஜ எழுதி பின்னூட்டீட்டு (அவருக்கு இன்னைக்கு பர்த்டே) வந்தா, 52 கமெண்டா? இந்தப் பதிவுக்கா?
பரவால்ல, மானத்தை காப்பாத்திட்ட நண்பா!
(சொல்லி வெச்ச மாதிரி கமிஷன அக்கவுண்ட்ல போட்டுடறேங்க!)
என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே...
//
நன்றி சென்ஷி அண்ணா!
உஸ்!அப்பாடி எப்படியோ ஒரு பின்னூட்டம் போட்டாச்சு.
Post a Comment