ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய கடுமையான தண்டனை அவனால் புரிந்துகொள்ள இயலாத காரியத்தை, கட்டாயப்படுத்திச் செய்யச் சொல்வதுதான்.
- காந்திஜி
Both optimists and pessimists contribute to society. The optimist invents the aeroplane, the pessimist, the parachute.
-George Bernardshaw
அசுத்தம் செய்யாதீர்கள். நாளை நீங்கள் குடிவர உள்ள இடம்.
-ஒரு இடுகாட்டு வாக்கியம்
நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட அனைத்தையும் நாம் மறந்துபோன பின், எஞ்சி நிற்பதற்குப் பெயர்தான் கல்வி.
-ஜார்ஜ் ஸவைல்
ஒரு பெண்ணின் வயதை மறந்துவிட்டு, அவள் பிறந்தநாளை மட்டும் நினைவில் வைத்திருப்பவனே புத்திசாலி.
-??
எந்தப் பழக்கமும், பழகப் பழக சுலபமாகிவிடும்... விடிகாலையில் எழுவதைத் தவிர...
-ஈஸ்ட்மென்
விழிப்புடனிருங்கள். உங்கள் விரலிடுக்கில் கூட வாய்ப்புகள் நழுவிப் போகும்.
-??
உண்மையை எல்லாம் சொல்ல வேண்டியதில்லை. சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கட்டும்.
-??
It is so simple to be happy. But it is so difficult to be simple.
-??
எவனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம் ஏழையாக இருக்க முடியாது.
-ஹிட்ச்சாக்
He who knows and knows not that he knows is asleep. Wake him.
He who knows and knows that he knows is wise. Follow him.
-??
உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்.
-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
மறக்க வேண்டியவைகளை நினைத்து வருந்துவதும், நினைக்க வேண்டியவைகளை மறந்து விடுவதும்தான் இந்த உலகத்தில் தற்போது இருந்துவரும் துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்.
-John. A. Skinler
இன்னைக்கு ஒரு மேட்டரும் கிடைக்கல!!
-கிருஷ்ணகுமார்.
24 comments:
இதெல்லம் பொன்மொழிகள்னு நினைக்கிறேன்.
it is nice to be important, but very important to be nice.
பழமொழி வேற மாதிரி இருக்கும். குறிப்பா எதுகை மோனையுடன் ரைமிங்கா இருக்கும்.
பொன்மொழிகள்தான். வெளில கிளம்பற அவசரத்துல `ப'னாவுக்கு ப'னா வர்ற மாதிரி என்ன-ன்னு யோசிச்சு.. போஸ்ட் பண்ணீட்டு பைக்ல போறப்பத்தான் அடாடா.. "ஆத்துல போட்டாலும், அளந்து போடணும்", "ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை-ன்னெல்லாம் வருமே அதுதானே பழமொழி.. இது பொன்மொழியாச்சே-ன்னு நெனச்சேன்!
மாத்தீட்டேன்!!
அனைத்துப் பொன்மொழிகளையும் படித்து மகிழ்ந்தேன்.
/////ஒரு பெண்ணின் வயதை மறந்துவிட்டு, அவள் பிறந்தநாளை மட்டும் நினைவில் வைத்திருப்பவனே புத்திசாலி////
இப்பொன்மொழி என்னை மிகவும் கவர்ந்தது.
//இன்னைக்கு ஒரு மேட்டரும் கிடைக்கல!!
//
உங்களுக்குமா???!!!!!!!
//ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய கடுமையான தண்டனை அவனால் புரிந்துகொள்ள இயலாத காரியத்தை, கட்டாயப்படுத்திச் செய்யச் சொல்வதுதான்.//
இது ரோம்ம்ம்ம்ம்பபப...ஓவவவரூஊஊஉ..நாந்தான் பிளாக்கே எழுத ஆரம்பிக்கலையே. அப்புறம்தானே ஒரு மனிதனை படிக்க சொல்லி......ம்ம்..நீங்க சொல்ற கட்டாயபடுத்தி எல்லாம் வரும்...ம்ம்... ஏன்...ஏன்.....?????????
நன்றி அமுதாக்கா..
@ ச்சின்னப்பையன்
//உங்களுக்குமா???!!!!!//
ஏன் கேக்கறீங்க.. ஒரு பதிவும் போடலீன்னா கை நம நமங்குது..
@ vijay
நீங்கதான் உங்க பிளாக்குக்கு “வரும்.. ஆனா வராது”ன்னு பேர் வெச்சுட்டீங்களே.. தினம் வந்துடுச்சா,
வந்துடுச்சா-ன்னு பாத்து மண்டை காயுது!
//உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்.//
பரிசில்....இப்போ ஒரு வலைபதிவு போடணும்ன்னு வைங்க.....பர்ஸ்ட்......(அய்யோ....அய்யோ......ஏன்பா......அடிக்கிறீங்க....நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட் சொன்னராம்பா...)
நக்கற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன ???
இந்த மாதிரி நச்சுன்னு இருக்கனும் பழமொழின்னா....!!!
யாராவது சொல்லுங்களேன்...
:-)
நான் வந்துட்டு போனதற்கு அடையாளம்...
என்ன இப்படி பன்னிட்டிங்க...
இப்பலாம் காமக் கதைகள்னு போட்டாதான் ஹிட் ஆகும்...
காமப் பொன்மொழிகள்னு வச்சு பாருங்க... பதிவு எப்படி தக தகனு எரியுதுன்னு...
//அவசரத்துல `ப'னாவுக்கு ப'னா வர்ற மாதிரி என்ன-ன்னு யோசிச்சு.. //
யோசிச்சு..'பழமொழிகள்'னு வச்ச நீங்க வடகரை வேலன் சொன்னதும் 'பொன்மொழிகள்'னு மாத்துனதுதான் மாத்துனீர்கள் 'பொ'னாவுக்கு 'பொ'னா வர்ற மாதிரி 'போற்றுதலுக்குரிய பொன்மொழிகள்'னு வச்சிருக்கலாமோ:)? வைக்காட்டலும் அத்தனையும் போற்றுதலுக்குரியதே!
வாழ்ந்த மனிதனின் வாழ்க்கை பயணத்தில் கண்ட அனுபவத்தின் மொழிகள் !
நல்லா இருக்கு :)
//இன்னைக்கு ஒரு மேட்டரும் கிடைக்கல!!
-கிருஷ்ணகுமார்.///
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க???
இந்த டைட்டிலை வைச்சுக்கிட்டே பார்ட்டு பார்ட்டா போட்டு பட்டைய கிளப்புலாமே :))))))))
//இன்னைக்கு ஒரு மேட்டரும் கிடைக்கல!!
-கிருஷ்ணகுமார்.//
பாருங்க இந்த ஒரு வார்த்தைக்கே எத்தனை எத்தனை டைட்டில்கள் இதுவரைக்கும் வந்துருச்சின்னு!
:))
@vijay
போன பதிவோட பின்னூட்டத்துல உங்களுக்கு ஐடியா குடுத்திருக்கேன் விஜய்.
@ ஈரவெங்காயம்
பழமொழிதானே.. கொஞ்சம் கைவசம் இருக்கு. மெதுவா போடறேன். டெய்லி கண்டிப்பா வந்து பாருங்க..
@ராமலட்சுமி
//'போற்றுதலுக்குரிய பொன்மொழிகள்//
அம்மா, அருமைம்மா! சீனியாரிட்டியை நிரூபிச்சுட்டீங்க!
@ ஆயில்யன்
என்னாங்க.. பிரிச்சு மேயறிங்க!
@ விக்கி..
நண்பா.. நானும் யோசிச்சுட்டுதான் இருக்கேன். ஒண்ணும் தோண மாட்டீங்குது!
எல்லாம் நன்றாக இருக்கிறது.
//ஒரு பெண்ணின் வயதை மறந்துவிட்டு, அவள் பிறந்தநாளை மட்டும் நினைவில் வைத்திருப்பவனே புத்திசாலி.//
இதுமட்டும் தினத்தந்தி 'சாணக்கியன் சொல்' வாசகம் போல் இருக்கிறது !
:)
//அம்மா, அருமைம்மா! சீனியாரிட்டியை நிரூபிச்சுட்டீங்க!//
நன்றி. "அம்மா" அருமையான வார்த்தை, அத்தனை மகளிரையும் அப்படி அழைக்கலாம் பெற்ற மகளையும் சேர்த்து. ஆனாலும் நான் ரொம்ப சீனியரெல்லாம் இல்லீங்க. என் தம்பிக்கு சரியாக உங்கள் வயதே. எனவே அக்கா என்றே குறிப்பிடலாமோ:)))?
உங்கள் kbkk007@gmail.com மிற்கு ஒரு மின் மடல் அனுப்பினேன் கிடைத்ததா இல்லையா....
கே.கே.
காந்திஜியின் பொன்மொழி என் கவிதையைப் படித்தவுடன் போடத் தோன்றியதா? ம்ம், இருக்கட்டும்.
அனுஜன்யா
கண்ணன் சார்.. அது சாணக்கியன் சொல்தான்\ன்னு நெனைக்கறேன்!
@ ராமலட்சுமி..
சரிக்கா...
(எங்க அம்மா பேர் அனந்தலட்சுமி, அதுனால உங்களையும், கயல்விழி முத்துலட்சுமியையும் பின்னூட்டத்துல பாக்கறப்பவெல்லாம் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்.. என்னமோ அவங்களை கயலக்கா-ன்னும், உங்களை அம்மா-ன்னும் கூப்பிட்டேன்... எந்தப் பெயரிட்டு அழைத்தாலென்ன.. ஏங்க்கா?)
@ vikneswaran
சாரி விக்கி.. பாக்கறேன்!
தனது அம்மா பெயர் என அன்பு பாராட்டும் நாலாவது வலைஞர் தாங்கள். 'அம்மா'வே தொடரட்டும்:)!
Post a Comment