நேற்று கோவையில் வலைப்பதிவர் சந்திப்பு மிட்டாய், வடை, குலாப் ஜாமூன், சாப்பாடு, மஞ்சூர் ராஜாவின் அன்பு, மஞ்சூர் ராஜா அவர்களது மனைவி, மற்றும் உறவினர்களின் வார்த்தையில் விவரிக்க முடியாத விருந்தோம்பல், சில லட்சியவாதிப் பதிவர்கள் மற்றும் என் போன்ற சில மொக்கைப் பதிவர்கள் ஆகியோரால் சிறப்புற நடைபெற்றது.
சந்திப்பில் ஞானவெட்டியான் என்ற பதிவரது லட்சியத்தைக் கேட்டபோது பிரமிப்பாய் இருந்தது. “இன்னும் வாழும் காலத்திற்குள்ளாக, வெளிவராத பல நூல்கள் குறித்து எழுதியே தீருவேன்” என்றார். அவரது அந்த லட்சியத்தைக் கேட்டு மெய்றந்து, பேச்சற்றுப் போயிருந்தோம் நாங்கள்.
நான் சந்தித்து அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டும், அவரைப் பற்றி இன்னும் கேட்டுக் கொள்ள வேண்டும், அவரது நட்பு வேண்டும் என்று ஒருவரை நினைத்திருந்தேன். அவர் பேசியபோது நடுவே ஒன்று சொன்னார். “நான் தமிழ்மணத்துல எழுதறத விட்டுட்டேன். நான் எழுதறத நிறுத்தினதுக்கப்புறம் தமிழ்மணம் வெறும் மொக்கைப் பதிவுகளின் திரட்டியாகிவிட்டது” என்றும் “நானும் (இன்னொரு நண்பரைச் சுட்டிக் காட்டி) அவரும் பொது மக்கள் பிரச்சினையை எழுதறோம். ஜ்யோவ்ராம் சுந்தர் மாதிரி எங்களுக்கும் திடீர்ன்னு மட்டுறுத்தல் வந்ததுன்னா என்ன பண்றது?” என்றும் ஆதங்கப்பட்டார்.
மிகவும் வருத்தமாக இருந்தது, அவர் எழுதியதை நிறுத்தியது. இன்ஃபாக்ட், அதைப் பற்றி கேட்கவே நினைத்திருந்தேன், ஆனால் “இப்பல்லாம் வெறும் மொக்கைப் பதிவுதான் போடறாங்க” என்ற அவரது வார்த்தைகள் புதிதாக வலையில் எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது.
அங்கேயே, அவருக்கு முன் பேசிய லதானந்த் அங்கிள் சொன்னார். “எனக்கு தமிழை தூக்கி நிறுத்த வேண்டி எழுத வர்ல. திருப்பூர்லயெல்லாம் பார்த்தா இரவு, பகல் இல்லாத இயந்திர வாழ்க்கை. வெளிநாடுகள்ல இருக்கற பல தமிழர்களுக்கு ஏதோ கொஞ்ச நேர ரிலாக்ஸேஷனுக்காக நெட்ல வர்றாங்க.. அவங்கள மாதிரியானவிங்களுக்கு கொஞ்ச நேரம் சந்தோஷத்தை தர்றதுக்காக மட்டும்தான் நான் எழுதறேன்” ன்னார். சபாஷ் அங்கிள்!
நான் அங்கிருந்து ஒரு மரண விசாரிப்புக்குப் போக வேண்டியிருந்ததால், இந்த மொக்கைப் பதிவுகள் விசாரிப்பை அப்புறம் வைத்துக் கொள்ளலாம் என்று ‘ஓசை’யில்லாமல் இருந்துவிட்டேன். அது மட்டுமின்றி, என் எழுத்துக்களை வைத்து என்னை எதிர்பார்ப்பவர்களுக்கு (யாரு உன்னை எதிர்பார்த்தாங்க?) என் உருவம் பார்த்தால் மதிக்கவே தோன்றாது. லதானந்த் அங்கிள் மாதிரி பார்த்தாலே சல்யூட் அடிக்கத் தோன்றும் உருவமோ, ஞானவெட்டியான், வாத்தியார் சுப்பையா மாதிரி ‘வணக்கம் சார்’ சொல்லத்தோன்றுகிற உருவமோ எனக்கில்லை. என்னைவிட வய்து குறைந்தவர்கள் என்னிடம் ‘அது வந்து தம்பி..’ என்று பேச ஆரம்பிக்கும்போதும் நான் அமைதியாக கேட்பதையே வழக்கமாக வைத்திருக்கிறேன். `யோவ்.. எனக்கு 35 வயசாச்சு. கல்யாணமாகி பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு. ரெண்டு பொண்ணு இருக்கு. நான் 1991-லயே இந்த எழுத்து உலகத்துல..” என்றெல்லாம் ஜல்லியடித்து என்ன ஆகப் போகிறது என்று பேசாமல் இருந்துவிடுவேன். அதுவுமில்லாமல் சந்திக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறேன். எதுவும் தெரியாதவனாகவே இன்னும் இருக்கிறேன்.
எது மொக்கைப் பதிவு என்று யாருக்குமே ஒரு தெளிவான கருத்து இல்லை. என்னைப் பொறுத்தவரை ‘தனிமனித ஒழுக்கமே ஒரு சமூகத்தை உயர்த்தும்’ என்பதில் தீராத நம்பிக்கை கொண்டிருக்கிறேன். ஆனால் என் கருத்துகளை நீயும் கடைபிடி” என்று யாருக்கும் போதிக்க எனக்கு தகுதி இருப்பதாக நான் கருதவே இல்லை. ஆகவே என் எழுத்துகளும் அதை ரொம்ப சீரியாஸாக உங்களுக்கு போதிக்காது. என் நோக்கமெல்லாம் எழுதும் நேரத்தில்
எனக்கிருக்கும் மகிழ்ச்சி, அதைப் படிக்கும் நேரத்தில் உங்களையும் தொற்றிக்கொள்ள வேண்டுமென்பது மட்டுமே. இந்த ஒரே காரணத்தினால்தான் என் பதிவுகளில் நான் உங்களுக்கு சொல்ல நினைக்கிற பல விஷயங்களை நகைச்சுவை கலந்து, தேன் தடவி சொல்கிறேன். ”நான் இப்படி பண்ணி எனக்கு இந்த அனுபவம் கிடைச்சது, நீ என்ன பண்ணனும்ன்னு நீயே முடிவு பண்ணிக்கோ” என்பதே என் பாணி.
அதற்காக எல்லாப் பதிவையும் போதிக்கும் பதிவாக, சமூக நன்மைக்காக எழுதும் திராணியற்ற முதுகெலும்பில்லாத பதிவன் தான் நான். நீங்கள் அப்படி எழுதும் பதிவர், மொக்கைப் பதிவுகளுக்கு எதிரி என்பதில் மிகவும் அகமகிழ்கிறேன். உங்களுக்கு என் நமஸ்காரங்கள். ஆனால், உங்களைப் போன்றவர் எழுதாமல் விடுவதுதான் என் போன்ற மூன்றாம்தர மொக்கைப் பதிவர்களுக்கு வசதியாகப் போய் விடுகிறது!! இல்லையென்றால் எவனெவன் என்னைப் போல மொக்கைப் பதிவுகளை எழுகிறானோ, அவனுக்கெல்லாம்
போய் பின்னூட்டம் போட்டு `இப்படி எழுதாதே,, இப்படி எழுது’ என்று அறிவுறுத்தி அவனை செழுமைப் படுத்தி, தமிழ்மணத்துக்கு உதவலாமே? என்ன இருந்தாலும் அதுவும் ஒரு பொதுப் பிரச்சினைதானே? எங்களுக்கெல்லாம் வழிகாட்டுவதும் உங்களின் கடமைதானே?
இப்பொழுதுகூட, ஞானவெட்டியான் சொன்ன அரிய தகவல்கள் குறித்தோ, ஜோசப் பால்ராஜும், இந்த மொக்கைப் பதிவு குறித்து ஆதங்கப்பட்ட நண்பரும் அருமையாக விளக்கிய கணினித் தொழில்நுட்பம் குறித்தோ பதிவைப் போடாமல் தேவையில்லாமல் அவர் சொன்ன ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொண்டு பதிவாய்ப் போடும் கீழாந்தர மூளைதான் எனக்கிருக்கிறது!!
”அவர் சொன்னது உன்னைப் பற்றி என்று நினைத்து ஏன் டென்ஷனாகற” என்று கேட்பவர்களுக்கு..
யாரைப் பற்றி என்றாலும் கேட்கணுமில்லையா? இதுவும் ஒரு பொதுப் பிரச்சினைதானே?
82 comments:
//சமூக நன்மைக்காக எழுதும் திராணியற்ற முதுகெலும்பில்லாத //
சென்ஷி கூட பழக்கம் வச்சிக்காதிங்க என்று சொன்னால் தானே ?
இத பாருங்க எழுத்தில் பின்னவினத்துவம் ஒட்டுவது போல இருக்கு.
//நான் சந்தித்து அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டும், அவரைப் பற்றி இன்னும் கேட்டுக் கொள்ள வேண்டும், அவரது நட்பு வேண்டும் என்று ஒருவரை நினைத்திருந்தேன். //
திரு ஞானவெட்டியான் அவர்களை தனிப்பட்ட பயணமாக அவரது இல்லதிற்கே சென்று சந்தித்து இருக்கிறேன்.
வாழ்ந்து முடித்தவர், திரும்பிப்பார்க்கும் போது கும்மிகள், மொக்கைகள் தேவையற்றது, பயனற்றது என்று தோன்றுவது இயல்புதான்.
அவர் ஆன்மிகம் பற்றி எழுதுவார். விரும்பி படிப்பவர்கள் இருந்தாலும் பின்னூட்டமிடுபவர்கள் குறைவே. அதனால் வரவேற்பு இல்லை என்று நினைத்திருக்கலாம். அவர் ஆன்மிகம் எழுதியதால் தான் அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு இருந்தது. அதுபோல் பலருக்கும் இருக்கலாம். அவர் அவரது முடிவை கைவிட்டுவிட்டு பலனை எதிர்பார்காது மீண்டும் எழுத வரவேண்டும்.
கண்ணன் சார்.. இந்த பின்நவீனத்துவம் பற்றி ஒரு சுவாரஸ்யமான விவாதம் நடந்தது... நாளைக்கு சொல்றேன்!
////நான் சந்தித்து அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டும், அவரைப் பற்றி இன்னும் கேட்டுக் கொள்ள வேண்டும், அவரது நட்பு வேண்டும் என்று ஒருவரை நினைத்திருந்தேன். //
திரு ஞானவெட்டியான் அவர்களை தனிப்பட்ட பயணமாக அவரது இல்லதிற்கே சென்று சந்தித்து இருக்கிறேன்//
ஐயையோ.. கண்ணன்.. இந்த மொக்கைப் பற்றிய விவாதத்தை சொன்னது அவரில்லை!
ஆமாம் நண்பரே அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். தசாவதாரம் ஒரு மாதம், காமக் கதைகள் ஒரு மாதம் என்று சமுதாய விவாதங்கள் ஏதுமின்றி மொக்கைகளும் சக்கைகளும் அரியணை ஏறும் காலமன்றி என்ன இது? சுகுணா, ஓசை செல்லா, அசுரன், தமிழ்மணி, தியாகு, குழலி, ரோசாவசந்த் ஆகியோர்கள் வாக்குவாதம் இல்லாத தமிழ்மணம் மட்டுமல்ல அனைத்து திரட்டிகளுமே மொக்கையாகத்தான் இருக்கின்றது.
இந்த பதிவு என்னை மிகவும் பாதித்துவிட்டது. இனி நான் பதிவு எழுத போவதில்லை...
இந்த பதிவு என்னை மிகவும் பாதித்துவிட்டது. இனி நான் பதிவு எழுத போவதில்லை...
அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துகிறேன்....
// சென்ஷி கூட பழக்கம் வச்சிக்காதிங்க என்று சொன்னால் தானே ?
இத பாருங்க எழுத்தில் பின்னவினத்துவம் ஒட்டுவது போல இருக்கு.//
:))
இனி ஒரு விதி சொய்வோம்... நாள் ஒரு பயன் பதிவு இல்லையெனில் பிளாக் உலகை அழித்திடுவோம்...
//"இப்பொழுதுகூட, ஞானவெட்டியான் சொன்ன அரிய தகவல்கள் குறித்தோ, ஜோசப் பால்ராஜும், இந்த மொக்கைப் பதிவு குறித்து ஆதங்கப்பட்ட நண்பரும் அருமையாக விளக்கிய கணினித் தொழில்நுட்பம் குறித்தோ பதிவைப் போடாமல் தேவையில்லாமல் அவர் சொன்ன ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொண்டு பதிவாய்ப் போடும் கீழாந்தர மூளைதான் எனக்கிருக்கிறது!!"//
அண்ணா, இதுல நான் எங்க வந்தேன்னுதான் புரியல...
எதுக்கு இங்க என் பெயர இழுத்துவிட்டீங்ணா?
கோவியார் சொல்றமாதிரி பின் நவீனத்துவம் எதுவும் இருக்க இதுல?
எனக்கு அதெல்லாம் புரியாதுங்ணா. கொஞ்சம் விளங்குறமாதிரி சொன்ன நல்லா இருக்கும்.
//சென்ஷி கூட பழக்கம் வச்சிக்காதிங்க என்று சொன்னால் தானே ?//
அதை தான் நானும் சொல்றேன்.. கூட்டு சரி இல்லை, பொரியல் மட்டும் நல்லா இருக்குமா என்ன
தமிழச்சிய விட்டுடீங்கலே சாமியோவ்
மூர்த்தியைக் கூட விட்டுட்டாங்க :-(
இப்படியெல்லாம் யோசிச்சா உங்க பரிசல்ல ஓட்டை விழுந்துரும்.
வால்பையன்
விக்னேஷ் இவர் பொரியல் இல்ல அவியல்தான் செய்வார்..
முதல் கமெண்ட் தான் சூப்பர்..
மொக்கை பற்றிய ஓசை யார் எழுப்பி இருந்தாலும், அவரை வழிமொழிகிறேன். ஒரே ஒரு அருமையான, இலக்கியம் கமழும், கவிதைகள் (!) மட்டுமே வரும் வலைப்பூவைத் தவிர்த்து, பெரும்பாலும் மற்ற பதிவுகள் மொக்கைதான் என்பதே சான்றோர்கள் கூற்று.
Jokes apart, எல்லாரும் தீவிர இலக்கியம் படைக்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. அது முடியாததும் கூட. சுவாரஸ்யமாக இருந்தால் தவறேதுமில்லை. சிற்றிதழ் எழுத்தாளர்கள் பலர் வலையிலும் எழுதுவது நமக்கெல்லாம் தீவிர இலக்கியம் பற்றி அறிய ஒரு அரிய வாய்ப்பு. அவர்களை மட்டம் தட்டாத மனப்பான்மை இருந்தாலே போதுமானது.
ஆதலினால், மொக்கை எழுதுவீர்.
அனுஜன்யா
ஜோசப் பால்ராஜ் said...
//"இப்பொழுதுகூட, ஞானவெட்டியான் சொன்ன அரிய தகவல்கள் குறித்தோ, ஜோசப் பால்ராஜும், இந்த மொக்கைப் பதிவு குறித்து ஆதங்கப்பட்ட நண்பரும் அருமையாக விளக்கிய கணினித் தொழில்நுட்பம் குறித்தோ பதிவைப் போடாமல் தேவையில்லாமல் அவர் சொன்ன ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொண்டு பதிவாய்ப் போடும் கீழாந்தர மூளைதான் எனக்கிருக்கிறது!!"//
அண்ணா, இதுல நான் எங்க வந்தேன்னுதான் புரியல...
எதுக்கு இங்க என் பெயர இழுத்துவிட்டீங்ணா?
கோவியார் சொல்றமாதிரி பின் நவீனத்துவம் எதுவும் இருக்க இதுல?
எனக்கு அதெல்லாம் புரியாதுங்ணா. கொஞ்சம் விளங்குறமாதிரி சொன்ன நல்லா இருக்கும்.
//
எனக்கும் கூட வியப்புதான். சனிக்கிழமை என்னுடன் சிங்கையில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜோசப் பால்ராஜ் கோவை சந்திப்புக்கு செல்கிறேன் என்று சொல்லவே இல்லையே.
:)
லதானந்த் கூட ஜோசப் பால்ராஜ் என்று தான் குறிப்பிட்டு இருக்கார்.
எனக்கு உண்மை தெரிஞ்சாகனுன் பதிவர்களில் எத்தனை ஜோசப் பால்ராஜ் ?
//பரிசல்காரன் said...
ஐயையோ.. கண்ணன்.. இந்த மொக்கைப் பற்றிய விவாதத்தை சொன்னது அவரில்லை!//
யாரு மனசில யாரு கதையா ?
சரியாக படிக்காமல் குழப்பிவிட்டுவிட்டேன்.......ஐ யம் வெர்ரி.....கன்ப்யூச்டு.
:)
பரிசல்,
அது சீனிவாசன் பால் ஜோசப்.
அவரது உரல் http://tamil.sripauljoseph.com/
பால் மாறிடிச்சு.
//Anonymous said...
ஆமாம் நண்பரே அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.//
தப்பா சொன்னாருன்னு நான் சொல்லவேயில்லையே? தப்பில்லாம சொல்லிருந்தா நல்லாயிருந்திருக்கும்னு தானே சொல்றேன்?
//சுகுணா, ஓசை செல்லா, அசுரன், தமிழ்மணி, தியாகு, குழலி, ரோசாவசந்த் //
சொன்னவர் பேரைச் சொல்லீட்டிங்களே அனானி!
@ விக்னேஸ்வரன்
முடிவு பண்ணி இறங்கீட்டீங்கபோல!
@ ஜோசப் பால்ராஜ்
ண்ணா. ஸாரிங்ணா... வடகரைவேலன் குட்டிக் காமிச்ச பின்னாடிதான் தெரியவருது.. அவரு
ஸ்ரீனிவாசன் பால் ஜோசப்.
http://tamil.sripauljoseph.com/
உங்க நெனப்புலயே இருந்ததால அப்படி வந்திருக்கலாம்!
@ வெயிலான்
இந்தச் சிரிப்புக்கு என்னா அர்த்தம்? நல்லா ஏத்திவிட்டுட்டு சிரிப்பப் பாரு!
//வால்பையன் said...
இப்படியெல்லாம் யோசிச்சா உங்க பரிசல்ல ஓட்டை விழுந்துரும்.//
அதுக்கெல்லாம் பயப்பட்டா ஆகுமா? (எதிர்)நீச்சல்வீரன் - ன்னு இன்னொருவலைப்பூ ஆரம்பிச்சு கலக்க வேண்டியதுதான்!
@ கயல்விழி முத்துலெட்சுமி
நன்றிக்கா! பாருங்க உங்க தம்பிக்கு வந்த சோதனையை!
@ அனுஜன்யா
//ஆதலினால், மொக்கை எழுதுவீர்.//
வேறெதுவும் அறியேன் பராபரமே!
நன்றி வேலண்ணா..
கோவி.கண்ணன் உங்கள் குழப்பம் தீர்ந்ததா? தப்பா பேரைச் சொல்லிட்டேன்!
தமிழை தூக்கி நிறுத்தணும், அடுத்த கட்டத்துக்கு நகர்த்திட்டுப் போகணும்னு நினைக்கறவங்கதான் பதிவு போடணும்னா - அப்போ நான் மட்டும்தான் பதிவு போடமுடியும்னு நினைக்கிறேன்.
http://boochandi.blogspot.com/2008/02/blog-post_4275.html
பல சந்திப்புகள்ள பாத்தாச்சு, நல்ல வேலை நானும் கோவை வரலாம்னு இருந்தேன். பரிசல் காரார் புட்டு புட்டு வச்சுட்டார்...?!, (நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு!!!!)
@ ச்சின்னப்பையன்
//தமிழை தூக்கி நிறுத்தணும், அடுத்த கட்டத்துக்கு நகர்த்திட்டுப் போகணும்னு நினைக்கறவங்கதான் பதிவு போடணும்னா - அப்போ நான் மட்டும்தான் பதிவு போடமுடியும்னு நினைக்கிறேன்.//
உண்மைதான்! மனதார ஒத்துக் கொள்கிறேன்!
(இப்படி துப்பாக்கி காட்டி மிரட்டினா வேற என்ன சொல்றதாம்?)
//dxersguide said...
பல சந்திப்புகள்ள பாத்தாச்சு, நல்ல வேலை நானும் கோவை வரலாம்னு இருந்தேன். பரிசல் காரார் புட்டு புட்டு வச்சுட்டார்...?!, (நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு!!!!)//
நல்லாத்தான் போய்ட்டு இருக்கு! அதுக்கென்ன இப்போ? நமக்குதான் நமைச்சலெடுத்துடுச்சு!
பரிசில் கார அண்ணாத்தே!
இன்னாத்துக்கு ஃபீலிங் ஆவுறே?
இப்ப இன்னாச்சுனு கூவிகினு கீற!
"ஆமாம்பா! நீ ஒத்தன் தான் வின்னானி. பொதுப் பிரச்சினைய எயுதி மெடலு வாங்கிக் குத்திகினே! நாங்கள்ளாம் மொக்கையாணிங்கணு" சொலினு நீட்டாப் போய்கினே இர்பியா? அத வுடு ஃபீலிங் அவுறியே?
உன்னியவே மொக்கைன்னா லதானந்தல்லாம் மொக மொக்கையில்லியா?
சரி! பெர்சனாலிடி பத்தி ஃப்பில் பானிக்காதே?
ஒன்னியப் பாத்தா சுகுராத்தான் கீது. தொந்தியும் தொப்பரையுமா தஸ்சு புஸ்ஸுனு கீறதவிட நீ சிக்குனு கீறப்பா.
நீ கண்டி கவுசீ துண்ணுகினு டெய்லி ரெண்டு பீரு சாதிகினா கும்முனு ஒடம்பு வந்திரும். மாரெல்லாம் முடியோட கீற ஒன்னிய காலேஜு ஃபிகருங்க ரவுண்டு கட்டும் கிஸ்னா! இன்னா புர்யிதா?
//"உங்க நெனப்புலயே இருந்ததால அப்படி வந்திருக்கலாம்!"//
ண்ணா, இதுவும் மொக்கை தானே?
ஏனுங்ண சின்ன பையன போட்டு இப்டி தாக்குறீங்க?
@ ரி...
// மாரெல்லாம் முடியோட கீற ஒன்னிய காலேஜு ஃபிகருங்க ரவுண்டு கட்டும் கிஸ்னா!//
ஹலோ... நீங்க என்னை அப்ப அப்படியெல்லாம் பாத்தீங்க? ச்சும்மா குன்சா அடிச்சுவுடறீங்களா??
@ ஜோசப் பால்ராஜ்
//ஏனுங்ண சின்ன பையன போட்டு இப்டி தாக்குறீங்க?//
ச்சின்னப்பையனை நான் ஒண்ணுமே சொல்லலியே சோசப்பூ?
ண்ணா, நான் தானுங்ணா அந்த சின்ன பையன், இதுக்கு மேல அடிச்சா அழுதுருவேன்.
அப்றம் லதானந் மாம கிட்ட சொல்லி டுப்பாகியால சுடச்சொல்லுவேன்
@ ஜோசப் பால்ராஜ்
//அப்றம் லதானந் மாம கிட்ட சொல்லி டுப்பாகியால சுடச்சொல்லுவேன்//
ச்சின்னப்பையனும் துப்பாக்கி வெச்சிருக்காரே..? வேணும்னா பாருங்க...
பரிசல் காரரே..
மொக்கையோ வேறு எதுவோ? அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க சாமி. என் ட்ராக் தனிதான் என் பதிவு பிடிக்கலைன்னா பாட்டு மட்டும் அமைதியா கேட்டுட்டு எகிறுடுவாங்க எனக்கு பிரச்சனையே இல்லை. ஹி.. ஹி..ஹி..
அதுசரி பின்னோட்டத்துல இருக்கிற ஸ்வாரசியம் பதிவுல இருக்கனும்னு ச்ட்டம் எதுவும் இல்லையே?
@ covai ravee
//பின்னோட்டத்துல இருக்கிற ஸ்வாரசியம் பதிவுல இருக்கனும்னு ச்ட்டம் எதுவும் இல்லைய//
இல்லவே இல்லை!
அதுசரி.. நீங்க சொல்றது பின்னூட்டம்தானே?
பின்னோட்டம்ன்னா, இப்படி எழுதற ஆளுகளப் பாத்து பின்னங்கால் பிடரியிலடிபட ஓடறதோன்னு நினைச்சேன்!
கூட்டத்துக்கு வந்தவிங்களைப் பதிவுல குறிப்பிடோணும்னு நெனைச்சுகிட்டு "அந்தக் கருப்புச் சொக்கா போட்ருக்கிறவரரோட பேரு என்ன?”னு கேட்டேன்.
பக்கத்திலே ஒகாந்திருந்த வெயிலானோ இல்லாட்டி பரிசல்காரனோ 'அவரு பேரு ஜோசப் பால்ராஜ'் அப்படின்னு சொன்னதை நம்பி நானும் எழுதிப் போட்டேன். என்னோட பதிவுல அந்தக் கருப்புச்சட்டைக்காரர் போட்டோ இருக்கு.
அதுனால ஜோசப் பால்ராஜ் வந்திருந்தார்ங்கிறதுக்குப் பதிலா ஸ்ரீனிவாசன் பால் ஜோசப் வந்தாருன்னு எழுதிட்டேன் போல. அய்யோ மறுபடியும் குழம்புதே!
வந்தது ஜோசப் பாலா அல்லது ஸ்ரீனிவாசன் பால்ராஜா அல்லது ஜோசப் ஸ்ரீனிவாசனா அல்லது ஜோசப் ராஜா அல்லது … …
அய்யா கொயம்புத்தூர் பதிவர் சந்திப்புக்கு வந்தது பால் ஜோசப், நான் ஜோசப் பால்ராஜ். நான் இருக்கது சிங்கப்பூர்லங்க. இப்பவாது உங்க குழப்பம் தீர்ந்துச்சா?
நல்ல வேளை நான் கோவியார்கிட்ட சனிக்கிழமை பேசுனேன். இல்லனா நான் தான்னு அவருகூட நம்பியிருப்பாரு.
லதானந்த் அங்கிள்..
அவரு பேர் ஸ்ரீனிவாசன் பால் ஜோசப்.
ஜோசப் பால்ராஜ்..
ஒரு பதிவர் கூட்டத்துக்கே வராம இவ்ளோ பேமஸ் ஆயிட்டீங்க! வந்தவங்கள விட்டுட்டு, உங்களைத்தான் எல்லாரும் கேக்கறாங்க!
எப்படியோ என்னை பிரபலமாக்க உதவிய திரு. பால் ஜோசப் அவர்களுக்கு மிக்க நன்றிகள்.
அப்டியே எல்லாரும் என்னோட வலைப்பூவுக்கு http://maraneri.blogspot.com
வந்து, படிச்சுட்டு கருத்துக்களை பின்னூட்டமிட்டு செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றேன்.
/
Jokes apart, எல்லாரும் தீவிர இலக்கியம் படைக்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. அது முடியாததும் கூட. சுவாரஸ்யமாக இருந்தால் தவறேதுமில்லை. சிற்றிதழ் எழுத்தாளர்கள் பலர் வலையிலும் எழுதுவது நமக்கெல்லாம் தீவிர இலக்கியம் பற்றி அறிய ஒரு அரிய வாய்ப்பு. அவர்களை மட்டம் தட்டாத மனப்பான்மை இருந்தாலே போதுமானது.
ஆதலினால், மொக்கை எழுதுவீர்.
அனுஜன்யா
/
ரிப்பீட்டு
வலைப்பதிவர் சந்திப்பில் இனிப்பு காரம் எனத்தருவதை விட்டுவிட்டுக் கசப்பைத்தந்து விட்டார்களே? இடுகையும் கசப்பாகவே இருக்கிறதே!
@ ஜோசப் பால்ராஜ்
இங்க ஒரு ரத்த ஆறே ஒடிட்டிருக்கு.. இதுல இவரு வேற!
(ச(சா)ரிங்க.. வர்றோம்!
@ மங்களூர் சிவா
ஐ! நட்சத்திரம் நம்ம வூட்டுக்கு வந்துருக்கு!
ரிப்பீட்டில்லைன்னாலும் நமக்கு வேற என்ன தெரியும் சிவா?
@ அகரம்.அமுதா
அதெல்லாம் சரியாய்டும்!
//அவர் பேசியபோது நடுவே ஒன்று சொன்னார். “நான் தமிழ்மணத்துல எழுதறத விட்டுட்டேன். நான் எழுதறத நிறுத்தினதுக்கப்புறம் தமிழ்மணம் வெறும் மொக்கைப் பதிவுகளின் திரட்டியாகிவிட்டது” என்றும் “நானும் (இன்னொரு நண்பரைச் சுட்டிக் காட்டி) அவரும் பொது மக்கள் பிரச்சினையை எழுதறோம். ஜ்யோவ்ராம் சுந்தர் மாதிரி எங்களுக்கும் திடீர்ன்னு மட்டுறுத்தல் வந்ததுன்னா என்ன பண்றது?” என்றும் ஆதங்கப்பட்டார்.
//
:))
நல்ல ஜோக்...
நல்லவேளை... தமிழ்மணத்த காப்பாத்த நான் மறுபடி எழுதித்தான் ஆகணும் போலன்னு இறங்கிடப் பேசிடப் போறாரு..
எனக்கு தெரிஞ்சு சிலபேரு(!) அவங்களா போனதாத்தான் செய்தி... :)))
தமிழ்மணம் துரத்துச்சா.. அட இது புது பின்நவீன தத்துவமா இருக்குது...
ஐயா கள்ள பரிசல்காரரே... உங்களுக்கு லேசா தாழ்வுமனப்பான்மை இருப்பதாக தெரிகிறது. உங்களை பார்த்தால் யாருக்கும் மதிக்கத் தோன்றாது என்று எதை வைத்து உளறுகிறீர்கள்... பொலம்பறத வுட்டுட்டு மொதல்ல உங்க மேல நீங்க நம்பிக்கை வைங்க... உங்களை பார்க்கும் போது எனக்கு எந்த எதிர்மறை சிந்தனையோ தாழ்வான எண்ணமோ வரவில்லையே.. மற்றவர்களுக்கும் அந்த எண்ணம் வந்த மாதிரி தெரியலையே.. பிரச்சனை உங்களிடத்தில் தான் என்று நினைக்கிறேன்.. :)
... தலைப்பு தப்பு.. தமிழ்மணம் தானே போய் யார் பதிவையும் திரட்டுவதில்லை. அதில் இணைத்துள்ள பதிவுகளை மட்டுமே திரட்டுகிறது... ஆகவே தமிழ் மணத்தில் இணைக்கப் பட்டுள்ள பதிவுகள் வெறும் மொக்கை பதிவுகளா என்று கேட்க வேண்டும்... அபப்டி கேட்டிருந்தால் என் பதில் "80 சதவீதம் மொக்கை பதிவுகள் தான்.. என் பதிவு உட்பட"
லதானந்த் சார் கட்சி தான் நானும்... எனக்கு தோன்றுவதை என் திருப்திக்கு எழுதுகிறேன்.. இதை யாரும் குறை சொல்லவும் முடியாது.. சொன்னால் அதை பொருட்படுத்தவும் மாட்டேன்.. ஏன்னா அடுத்தவங்க அரிப்புக்கு சொரியறது நம்ம வேலை இல்ல அண்ணாச்சி... :)
... சும்மா ஃப்ரீயா விடுங்க...
...லதானந்த் சார்.. எங்க அண்ணாச்சியை சரியா கவனிக்கலையா? அந்த ஃபீலிங்கல இங்க வந்து பொலம்பி தள்றாரு.. :P
... அர்ஜெண்டா வேலை இருக்குனு சொல்லிட்டு "அங்க" போய் கூத்தடிச்சிருக்கிங்க.. நேர்ல மாட்டாமலா போய்டுவீங்க... :P
... மதிய உணவுக்கு அப்புறம் தான் நமக்கு புடிச்ச மாதிரி மொக்கை விவாதங்களும் நடந்தது... சில உருப்படியான விவாதங்களும் நடந்தது..:)))
//`யோவ்.. எனக்கு 35 வயசாச்சு. கல்யாணமாகி பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு. ரெண்டு பொண்ணு இருக்கு. நான் 1991-லயே இந்த எழுத்து உலகத்துல..” //
அய்யய்யோ... அண்ணா.. நீங்களும் மூத்தப்பதிவராண்ணா :))
// கோவி.கண்ணன் said...
//சமூக நன்மைக்காக எழுதும் திராணியற்ற முதுகெலும்பில்லாத //
சென்ஷி கூட பழக்கம் வச்சிக்காதிங்க என்று சொன்னால் தானே ?
இத பாருங்க எழுத்தில் பின்னவினத்துவம் ஒட்டுவது போல இருக்கு.
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... :((
நான் தான் 50 :))
@ sanjay
//ஐயா கள்ள பரிசல்காரரே... உங்களுக்கு லேசா தாழ்வுமனப்பான்மை இருப்பதாக தெரிகிறது. உங்களை பார்த்தால் யாருக்கும் மதிக்கத் தோன்றாது என்று எதை வைத்து உளறுகிறீர்கள்... பொலம்பறத வுட்டுட்டு மொதல்ல உங்க மேல நீங்க நம்பிக்கை வைங்க... உங்களை பார்க்கும் போது எனக்கு எந்த எதிர்மறை சிந்தனையோ தாழ்வான எண்ணமோ வரவில்லையே.. மற்றவர்களுக்கும் அந்த எண்ணம் வந்த மாதிரி தெரியலையே.. பிரச்சனை உங்களிடத்தில் தான் என்று நினைக்கிறேன்.. :)//
கள்ள பரிசல்காரன் என்ற உங்கள் விளிப்பு மிகவும் பிடித்திருந்தது! சபாஷ்! நல்ல பண்பு!
என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு சஞ்சய். ஆனால் நான் அவர் பேசும்போது குறுக்கிட்டு இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்க வேண்டுமென்றுதான் நினைத்திருந்தேன். எங்க விட்டீங்க?
//... தலைப்பு தப்பு//..
இது அவர் சொன்னதுதான். வேண்டுமானால் ரெக்கார்ட் பண்ணினதிலிருந்து போட்டுப் பாருங்கள்!
//பிரச்சனை உங்களிடத்தில் தான் என்று நினைக்கிறேன்..//
அதைத்தான் நானே சொல்லிட்டேனே! நீங்க வேற லைட்டடிச்சு காட்டணுமா?
//அபப்டி கேட்டிருந்தால் என் பதில் "80 சதவீதம் மொக்கை பதிவுகள் தான்.. என் பதிவு உட்பட"//
நானும் இதை வழிமொழிகிறேன்!
//அடுத்தவங்க அரிப்புக்கு சொரியறது நம்ம வேலை இல்ல அண்ணாச்சி... //
கரெக்ட். அதே மாதிரி நம்ம அரிப்புக்கு சொறிஞ்சுட்டிருக்கும்போது அடுத்தவங்க கையை எடுடா”ன்னா என்ன பண்ண சஞ்சய்?
// நேர்ல மாட்டாமலா போய்டுவீங்க... //
சத்தியமா உங்க நட்புக்காக ஏங்கித்தான் வந்தேன். அவரு அப்படிச் சொன்னது என்ன்மோ சங்கடமா இருந்தது! உங்ககிட்டகூட சரியா பேச முடியல! நாளைக்கு கோவை வந்தாலும் வருவேன் நேர்ல பாக்க முடியுமா?
//மதிய உணவுக்கு அப்புறம் தான் நமக்கு புடிச்ச மாதிரி மொக்கை விவாதங்களும் நடந்தது... சில உருப்படியான விவாதங்களும் நடந்தது//
கலந்துக்க முடியாமைக்கு வருந்துகிறேன்! (உங்களுக்கு சந்தோஷமாத்தான் இருந்திருக்கும்!!)
@ சென்ஷி
//நல்லவேளை... தமிழ்மணத்த காப்பாத்த நான் மறுபடி எழுதித்தான் ஆகணும் போலன்னு இறங்கிடப் பேசிடப் போறாரு..
எனக்கு தெரிஞ்சு சிலபேரு(!) அவங்களா போனதாத்தான் செய்தி... :)))
தமிழ்மணம் துரத்துச்சா.. அட இது புது பின்நவீன தத்துவமா இருக்குது...//
ஹா..ஹா..ஹா!
நீங்கதான் ஃபிஃப்டி போடணும்னு நெனைச்சிருந்தேன்! கலக்கீட்டீங்க!
பயங்கர இலக்கியம் படைக்கிறவங்க பல பேர் படிக்கிறவங்க எல்லாருக்கும் அதே அளவுல இலக்கியம் தெரிஞ்சிருக்கணும்னு எதிர்பாக்குற காரணத்தால பின்னூட்டம் போட பயப்படுறாங்க. இன்னும் கொஞ்சம் பேர் வாசகர்களில் நெறயப் பேருக்கு புரிஞ்சிக்க முடியாத பின்நவீனத்துவ பாஷைல எழுதிட்டு, அதுக்கு பின்னூட்டம் வரலைனா டென்ஷனாகறாங்க. புரியலைனா என்னங்க பண்ண முடியும்? இல்ல அப்படி பின்னூட்டத்தை அவங்க முக்கியமா நினைச்சாங்கன்னா, என்னை மாதிரி, அய்யா சாமி ஒரு ஸ்மைலியப் போட்டுட்டு போங்கன்னு ஜாலியா சொல்லலாம். ஒரு விஷயத்தை மறந்துடக் கூடாதில்லைங்களா, இதென்ன பத்தாங்கிளாசு பரீட்சையா, கண்டிப்பா புவியியலும், இயற்பியலும் படிக்கணும்னு சொல்லி கட்டாயப்படுத்தறதுக்கு. சரி அவரு ஜாலியா தன் கருத்தை வெளிப்படுத்தி இருக்காரு, என்ன, நம்மளோட சுதந்திரத்தை விமர்சிக்கறாருன்னு கவினிச்சிருக்க மாட்டாருன்னு நினைக்கறேன். அதான் நானும் அவரோட சுதந்திரத்தில் மூக்கை விட்டு பழிக்குப் பழி தீர்த்துகிட்டேன்:):):)
//நான் எழுதறத நிறுத்தினதுக்கப்புறம் தமிழ்மணம் வெறும் மொக்கைப் பதிவுகளின் திரட்டியாகிவிட்டது//
ஆமாம் நான் கண்ணை மூடியவுடன் உலகம் இருண்டுவிட்டது :):):) ரொம்ப நாளா எதாவது பெருசா கண்டுபிடிக்கணும்னு நெனைச்சிருந்தேன், இன்னைக்குத்தான் ஆசை நிறைவேறுச்சி.
ச்சின்னப்பையன் பாணியில சொல்லனும்னா, 'தமிழை தூக்கி நிறுத்தணும், அடுத்த கட்டத்துக்கு நகர்த்திட்டுப் போகணும்னு நினைக்கறவங்கதான் பதிவு போடணும்னா - அப்போ நான் மட்டும்தான் பதிவு போடமுடியும்னு நினைக்கிறேன்'. எல்லாரும் இங்க வந்து கவிதை எழுத கத்துக்கங்க,
http://vettiaapiser.blogspot.com/2008/07/blog-post.html
//மாரெல்லாம் முடியோட கீற ஒன்னிய காலேஜு ஃபிகருங்க ரவுண்டு கட்டும் கிஸ்னா!//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......... இதெல்லாம் அவருகிட்ட பதிவர் சந்திப்பின்போதா காமிச்சீங்க????????
அப்ப நீங்க கோவிக்கண்ணன் ஐயா சொல்ற மாதிரி பின்நவீனத்துவ வாதியா, சும்மாத்தான் எங்களோட சேர்ந்து மொக்கப் போடுறா மாதிரி நடிக்கறீங்களா?
//அது மட்டுமின்றி, என் எழுத்துக்களை வைத்து என்னை எதிர்பார்ப்பவர்களுக்கு (யாரு உன்னை எதிர்பார்த்தாங்க?) என் உருவம் பார்த்தால் மதிக்கவே தோன்றாது. லதானந்த் அங்கிள் மாதிரி பார்த்தாலே சல்யூட் அடிக்கத் தோன்றும் உருவமோ, ஞானவெட்டியான், வாத்தியார் சுப்பையா மாதிரி ‘வணக்கம் சார்’ சொல்லத்தோன்றுகிற உருவமோ எனக்கில்லை. என்னைவிட வய்து குறைந்தவர்கள் என்னிடம் ‘அது வந்து தம்பி..’ என்று பேச ஆரம்பிக்கும்போதும் நான் அமைதியாக கேட்பதையே வழக்கமாக வைத்திருக்கிறேன்//
ஆஹா சந்துல சிந்து பாடிட்டீங்களே கிருஷ்ணா, நீங்க இளமையானவர்னு பீத்திக்க அவங்களை ஊறுகாயாக்கிட்டீங்களே:):):) இந்த மாதிரி எத்தனப் பேர பாத்திருக்கோம், ஆனாலும் சூப்பர், இப்படித்தான் பின்னவீனத்துவத்தோட எழுதணும், சென்ஷி அண்ணனுக்கு ஒரு கேள்வி கேட்டதிலயே இவ்வளவு பயங்கரமான பின்நவீனத்துவ வாதியா ஆகிட்டீங்களே
நாலு பேரோட சுதந்திரத்தில மூக்கை நுழைச்சா எவ்வளவு நல்லா இருக்கு :):):)
@ ராப் அக்கா....
//சென்ஷி அண்ணனுக்கு ஒரு கேள்வி கேட்டதிலயே இவ்வளவு பயங்கரமான பின்நவீனத்துவ வாதியா ஆகிட்டீங்களே
//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நீங்களுமா :((
பரிசல்காரரே,,
1. முதலில் உங்களை நீங்களே 'மொக்கைப்பதிவர்' என்று அடிக்கடி ஏன் குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை. நான் படித்தவரை நீங்கள் ஒரு வெகுஜன எழுத்தாளர். உங்களை யார் அப்படி சொன்னது? சிறுகதைகளும், கவிதைகளும் மொக்கை போலவா இருக்கிறது?
2. தங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டம் வராத கடுப்பில் யாராவது ஏதாவது சொல்லி இருந்தாலும் அதை இக்னோர் பண்ணுங்கள். இத்தனை பேருடைய பாராட்டுதலை ஒப்பிட்டால் ஒரு சில நெகடிவ் விமர்சனங்கள் ரொம்ப insignificant. Please consider that as experimental error.
3. Please keep up with your good job.
@ ராப் அக்கா..
//இன்னும் கொஞ்சம் பேர் வாசகர்களில் நெறயப் பேருக்கு புரிஞ்சிக்க முடியாத பின்நவீனத்துவ பாஷைல எழுதிட்டு, அதுக்கு பின்னூட்டம் வரலைனா டென்ஷனாகறாங்க. புரியலைனா என்னங்க பண்ண முடியும்? //
ஒண்ணும் பண்ண முடியாது.... :(
//நான் படித்தவரை நீங்கள் ஒரு வெகுஜன எழுத்தாளர். உங்களை யார் அப்படி சொன்னது? சிறுகதைகளும், கவிதைகளும் மொக்கை போலவா இருக்கிறது?
//
நானும் இதை வழிமொழிகிறேன்
//ஒண்ணும் பண்ண முடியாது.... :(
//
நீங்களாவது எங்க கஷ்டத்தை புரிஞ்சிகிட்டீங்களே சென்ஷி அண்ணே, நான் உங்களுக்கு என்னக் கைம்மாறு செய்யப் போறேன்? (முடிந்தால் இதை கொஞ்சம் கஷ்டப்பட்டு கே.ஆர்.விஜயாம்மா பாணியில் வாசித்துப் பார்க்கவும்)
(என்னையா அக்காங்கறீங்க, பாத்தீங்களா, கே.ஆர்.விஜாயாம்மாவுக்கே அண்ணன் ஆக்கிட்டேன்)
ஹி ஹி நான் இன்னும் முழுசா குணமாகலயான்னு யோசிக்கறீங்களா சென்ஷி அண்ணே, வேறொன்னுமில்லை, ஒரு சின்ன மொக்கை பின்னூட்டம் போடறது கூட எவ்வளவு கஷ்டம்னு நாலு பேருக்கு தெரியணும்ல அதான் :):):)
பரிசல் சார்,
நாம எழுதறது நமக்கு திருப்தி தருதா அவ்ளோதான் பாக்கனும்..ஆங்கிலத்துல சொல்வாங்க"Perspective Varies".ஒவ்வொருத்தருக்கு எண்ணங்கள் வேறுபடும்.இப்போ எனக்கு தமிழ்ல எழுத்து பிழை வருது,அதை மத்தவங்க சொல்லும் போது திருத்திக்கறேன்..ஆனா நிரைய பிழை வருதேன்னு நான் எழுதுவதை நிருத்தமாட்டேன்..ஒருத்தரின் உருவத்தை பார்த்து எண்ணம் வருவது இயல்பு தான் ஆனா அந்த எண்ணத்தையும் நமக்கு வசதியா மாத்த்னும்னு நினைக்கிறவ நான்..
//rapp said...
//ஒண்ணும் பண்ண முடியாது.... :(
//
நீங்களாவது எங்க கஷ்டத்தை புரிஞ்சிகிட்டீங்களே சென்ஷி அண்ணே, நான் உங்களுக்கு என்னக் கைம்மாறு செய்யப் போறேன்? (முடிந்தால் இதை கொஞ்சம் கஷ்டப்பட்டு கே.ஆர்.விஜயாம்மா பாணியில் வாசித்துப் பார்க்கவும்)
(என்னையா அக்காங்கறீங்க, பாத்தீங்களா, கே.ஆர்.விஜாயாம்மாவுக்கே அண்ணன் ஆக்கிட்டேன்)
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((
கை வீசம்மா கைவீசு... கடைக்குப்போலாம் கைவீசு...
முட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய் திங்கலாம் கைவீசு...
(இதை ரொம்ப கஷ்டப்படுத்தாம சிவாஜி வாய்ஸ்ல நீங்க படிச்சுக்குங்க) :)
@ ராப் அக்காச்சி...
//ஹி ஹி நான் இன்னும் முழுசா குணமாகலயான்னு யோசிக்கறீங்களா சென்ஷி அண்ணே, வேறொன்னுமில்லை, ஒரு சின்ன மொக்கை பின்னூட்டம் போடறது கூட எவ்வளவு கஷ்டம்னு நாலு பேருக்கு தெரியணும்ல அதான் :):):)//
:))) அது சரி.. இப்படி நாம ரெண்டு பேருமே இங்க மொக்கய போட்டுட்டு இருந்தா பரிசலு நிலைமை என்னாகறது.
@ ரம்யா ரமணி...
//இப்போ எனக்கு தமிழ்ல எழுத்து பிழை வருது,அதை மத்தவங்க சொல்லும் போது திருத்திக்கறேன்..ஆனா நிரைய பிழை வருதேன்னு நான் எழுதுவதை நிருத்தமாட்டேன்..ஒருத்தரின் உருவத்தை பார்த்து எண்ணம் வருவது இயல்பு தான் ஆனா அந்த எண்ணத்தையும் நமக்கு வசதியா மாத்த்னும்னு நினைக்கிறவ நான்..
//
எப்படிங்க இப்படில்லாம்.. :))
முடியல்ல.. தயவு செஞ்சு திருத்துங்க.. ப்ளீஸ்
//rapp said...
ச்சின்னப்பையன் பாணியில சொல்லனும்னா, 'தமிழை தூக்கி நிறுத்தணும், அடுத்த கட்டத்துக்கு நகர்த்திட்டுப் போகணும்னு நினைக்கறவங்கதான் பதிவு போடணும்னா - அப்போ நான் மட்டும்தான் பதிவு போடமுடியும்னு நினைக்கிறேன்'. எல்லாரும் இங்க வந்து கவிதை எழுத கத்துக்கங்க,
http://vettiaapiser.blogspot.com/2008/07/blog-post.html
//
ஆஹா.. அதானே பார்த்தேன். எங்க அக்காச்சியோட பதிவு தான் வரப்போற அத்தன கவுஜர்களுக்கும் பாலபாடம் தெர்ஞ்சுக்குங்க :))
//rapp said...
//நான் படித்தவரை நீங்கள் ஒரு வெகுஜன எழுத்தாளர். உங்களை யார் அப்படி சொன்னது? சிறுகதைகளும், கவிதைகளும் மொக்கை போலவா இருக்கிறது?
//
நானும் இதை வழிமொழிகிறேன்
//
நான் இதை ஒத்துக்கமாட்டேன். நீங்கள் வலுக்கட்டாயமாக பரிசலை எளக்கியவாதி இணைப்பிலிருந்து துண்டிக்கப்பார்க்கிறீர்கள் :)
//கை வீசம்மா கைவீசு... கடைக்குப்போலாம் கைவீசு...
முட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய் திங்கலாம் கைவீசு...
(இதை ரொம்ப கஷ்டப்படுத்தாம சிவாஜி வாய்ஸ்ல நீங்க படிச்சுக்குங்க) :)//
என்னை (பாசமலர்)தங்கையாக ஏற்றுக் கொண்டதுக்கு நன்றி (சிவாஜி குரலோன்)சென்ஷி அண்ணே:):):)
//அது சரி.. இப்படி நாம ரெண்டு பேருமே இங்க மொக்கய போட்டுட்டு இருந்தா பரிசலு நிலைமை என்னாகறது.//
ஹி ஹி நானு பரிசல்காரரெல்லாம் ஒரே மாதிரி, பின்னூட்டம் தான் எங்களுக்கு முக்கியம். அதுல வந்து யாரு என்ன மொக்கப் போட்டாலும் எங்களுக்கு சந்தோஷமாகிடும்
அண்ணன் தங்கை பாசத்தை பார்த்து முடியல, ரொம்ப ஃபீலிங்க்ஸா இருக்கு :(
மிக்க நன்றி
வெட்டியாபீசர்..
ரம்யாரமணி,
கயல்விழி
&
Last But Not the Least
சென்ஷி!
என்னை(யும்) இப்படி யோசிக்க வச்சுட்டீங்களே?
நான் எங்கே இருக்கேன்.... எந்த ஸைடு? மொக்கையா அல்லது பயனா.....
//துளசி கோபால் said...
என்னை(யும்) இப்படி யோசிக்க வச்சுட்டீங்களே?
நான் எங்கே இருக்கேன்.... எந்த ஸைடு? மொக்கையா அல்லது பயனா.....
//
டீச்சர்..அதுதெரியாமத்தானே இப்படிப் புலம்பித் தள்ளீருக்கேன்!
//என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு சஞ்சய். ஆனால் நான் அவர் பேசும்போது குறுக்கிட்டு இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்க வேண்டுமென்றுதான் நினைத்திருந்தேன். எங்க விட்டீங்க?//
ஓவரா பேசப்ப்டாது.. லதானந்த் சார் கால் பண்ணி வர சொன்னதிலிருந்து நீங்க எங்க அங்க இருக்கிற நினைவுல இருந்திங்க? :P .. எப்போடா போய் ஜோதில ஐக்கியம் ஆகலாம்னு நெளிஞ்சிட்டு இருந்தத தான் பார்த்தேனே... சும்மா கதை விடாதீரும் ஓய்..
சரி.. நாளைக்கு வந்து கால் பண்ணுங்க... நான் வெளில எங்கயும் போகாம இருந்தா சந்திக்கலாம்.. உங்க மேல சில வருத்தங்கள் இருக்கு.. அதனால் உங்கள கொஞ்சம் "கவனிக்க" வேண்டி இருக்கு... மறக்காம கால் பண்ணுங்க.. :)
//கரெக்ட். அதே மாதிரி நம்ம அரிப்புக்கு சொறிஞ்சுட்டிருக்கும்போது அடுத்தவங்க கையை எடுடா”ன்னா என்ன பண்ண சஞ்சய்?//
உங்க பசிக்கு நீங்க சாப்பிடும் போது சாப்பிடாதேனு சொன்னா என்ன செய்வீங்க? சப்பிடறத நிறுத்திட்டு.. அவர் சாப்பிட வேணாம்னு சொல்றார்னு பொலம்புவீங்களா?... ஓவொருத்தர் பார்வையும் ஒரு மாதிரி அண்ணாச்சி... மத்தவங்க சொல்றத எல்லாத்தயும் குறையாவே எடுத்துக்காதிங்க.. அது அவங்களோட பார்வை.. உடன்பாடு இல்லைனா கண்டுகாதிங்க..
//நல்ல பண்பு//
அய்யா சாமி.. நான் விளையாட்டா தான் அப்படி சொன்னேன்.. அதில் எந்த உள்குத்தும் இல்லை.. நீங்க வருத்த பட்டிருந்தா இப்போவே மன்னிச்சிடுங்க.. :(
.. ஆளவிடுங்கய்யா..:)
//தமிழ்மணம் வெறும் மொக்கைப் பதிவுகளின் திரட்டியா?//
பின்ன, நாம (ன்) ஒதுங்குன பிறகு அது நாசமாத்தானே போகும்? இந்த பதிவே எடுத்துக்குங்களேன். இதோட சேர்த்தா 76 கமெண்ட். எத்தனை இந்த பதிவுக்கு சம்பந்தமானது? அட தொலையுது போங்க, தலைப்புக்கு சம்பந்தமானது/ இதையெல்லாம் எடுத்து முதல் பக்கத்துலையும், "சூடான" இடுகைகளிலும் காட்டுதே, அப்போ அதுக்குப் பேரு என்ன?
நான் ஸ்மைலி போடலைன்னு நீங்க அதுக்கு ஒரு பதிவு, 100 கமெண்ட்ன்னு ஆகப் போவுது. நான் ஜோசியக்காரன், நான் ஜோசியக்காரன், நான் ஜோசியக்காரன்!!! வாத்தி இதைப் பார்த்தாரு, என்னையும் வருகைப் பதிவு கொடுக்க சொல்லுவாரு. மீ தி எஸ்கேப்.
//
ஆதலினால், மொக்கை எழுதுவீர்.
//
ரிப்பீட்டேய்...
// என் நோக்கமெல்லாம் எழுதும் நேரத்தில்
எனக்கிருக்கும் மகிழ்ச்சி, அதைப் படிக்கும் நேரத்தில் உங்களையும் தொற்றிக்கொள்ள வேண்டுமென்பது மட்டுமே.//
டபுள் ரிப்பீட்டேய்...
ஒரு முக்கியமான விசயம்.. நீங்க கம்ப ராமாயணம் படிச்சிட்டு போங்க. அதுக்காக கவுண்டமணி காமெடிய ரசிக்கிறவன்லாம் மட்டம்னு சொல்லாதீங்க. என்ன பரிசல் நான் சொல்றது?
இந்த வாரம் மொக்கை பார்ட்டிகளின் பின்நவீனத்துவ வாரமா? நான் ஒரு மொக்கைய போட்டா, நீங்களும் பின்நவீனத்துவம் பத்தி ஒரு சீரியஸான பதிவு போட்டிருக்கீங்க.
ஆனாலும் என்னோட பதிவுல நீங்க போட்ட பின்னூட்டம் காரணமா நீங்களும் ஒரு 'பின்நவீனத்துவ புதையல்' அப்படின்றது எனக்குத் தெரிஞ்சி போச்சி..
@ sanjai
ஐயையோ.. வருத்தமா? என் மேலயா? ஏங்க இப்படி? பாதில போய்ட்டேன்னா?
நேர்ல வர்றேன்.. ஆளெதுவும் ரெடி பண்ணலியே? பயமா இருக்கு சஞ்சய்!!
/நீங்க வருத்த பட்டிருந்தா இப்போவே மன்னிச்சிடுங்க./
ஐயோ.. அதெல்லாம் இல்ல நண்பரே! எனக்கு இந்தப் பதிவு எழுதி உங்களையெல்லாம் வருத்தப்பட வெச்சிட்டேனோன்னுதான் வருத்தமா இருக்கு! நம்மளுது காமெடி எக்ஸ்ப்ரஸ்.. இதுனால சீரியஸாயிடுச்சு!
//
பின்ன, நாம (ன்) ஒதுங்குன பிறகு அது நாசமாத்தானே போகும்? இந்த பதிவே எடுத்துக்குங்களேன். இதோட சேர்த்தா 76 கமெண்ட். எத்தனை இந்த பதிவுக்கு சம்பந்தமானது? அட தொலையுது போங்க, தலைப்புக்கு சம்பந்தமானது/ இதையெல்லாம் எடுத்து முதல் பக்கத்துலையும், "சூடான" இடுகைகளிலும் காட்டுதே, அப்போ அதுக்குப் பேரு என்ன?//
ஏங்க நைட்டெல்லாம் யோசிச்சு, பாயைப் பிறாண்டி ஒரு பதிவு போட்டிருக்கோம்.. கும்மி சேரறதுல உங்களுக்கு என்னங்க வருத்தம்? பாவங்க நானு!
@ வெண்பூ
நானா? பின்நவீனத்துவபுதையலா?
இந்த ஊர் இன்னுமா நம்மளை நம்புது?
ஹையோ..ஹையோ!!
பரிசல்காரரே,
உங்களின் பதிவு நன்றாக இருந்தது. நன்றி...
இருப்பினும் மொக்கை பதிவுகளைப் பற்றிய செல்லாவின் பேச்சு எனக்கென்னவோ சரியாகப் படுகின்றது. அதே சமயம் லதானந்த் கூறியதும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இரண்டையும் வைத்துப் பார்க்கும்போது சமுதாயத்தை ஏற்றுவிக்க விரும்பும் ஞானவெட்டியான் போன்றோர் எழுதிக்கொண்டேயிருக்க நம்மை மகிழ்விக்க விரும்பும் லதானந்த், நீங்கள் போன்றோரும் எழுதவே வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.
என்னுடைய பெயர் ஜோசப் பால்ராஜ் இல்லை. என்னுடைய முழுப்பெயர், ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்தான்...
நன்றி...
Post a Comment