Thursday, July 17, 2008

க்யூவுல நின்னு சாவுங்க!

சமீபத்தில், (1999-ல்) பழனிக்குச் சென்றிருந்த போது விஞ்ச்சில் செல்ல ஒரு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட க்யூவில் நிற்க வேண்டிவந்தது. அப்போது க்யூவில் ஒருத்தர் “க்யூவுல நிக்கவெச்சு சாகடிக்கறாங்க” என்று புலம்பினார். உடனே வீறுகொண்டு எழுந்த எனது கற்பனைக் குதிரை சிந்தித்தது.


ஒரு வேளை சாவதற்கு க்யூவில் நிற்க வேண்டுமென்றால் எப்படியிருக்கும் என்று. உடனே (அங்க க்யூவுல நின்னு அல்ல.. வீட்டுக்கு வந்து..) அதை எழுதி எல்லா பிரபல பத்திரிகைகளுக்கும் மாறி மாறி அனுப்பினேன். ”போடா... நீயுமாச்சு.. உன் கற்பனையுமாச்சு” என்று எல்லோராலும் நிகாரிகரிக்கப்பட்டு வெற்றிகரமாக என்னிடமே அது பாசத்தோடு வந்து சேர்ந்தது.


இந்த வலையெழுத ஆரம்பித்த பிறகு (நான்: இதையே இன்னும் எத்தினி நாள்தான் சொல்லுவ? இப்போ நீயும் ஓரளவு சீனியர்டா. மனசாட்சி: ஏய்ய்ய்ய்..அடங்கு!) அந்தப் பிரதியை வீடு முழுவதும் தேடிவிட்டேன். கிடைக்கவே இல்லை! (நல்லவேளை!) விட்டுவிடுவோமா? ஏதோ கொஞ்சம் மனதிலிருப்பதை மறுபடி எழுத்தில் வடிக்கிறேன். (ஏண்டா.. ஒரு பதிவுக்கே இவ்ளோ பெரிய முன்னுரை! உன் எழுத்தையெல்லாம் புத்தகமா வெளியிட்டா, அதோட முன்னுரைக்கே இன்னொரு புத்தகம் இணைப்பா குடுக்கணும் போலிருக்கே!)


-------------------------------


ஊட்டி.


தற்கொலை முனைக்கு கொஞ்சம் முன்னால் இருக்கும் கல்லா (COUNTER) ஒன்றின் முன் மிக நீண்ட க்யூ. எல்லாரும் தற்கொலை செய்து கொள்ள, டிக்கெட்டுக்காக க்யூவில் காத்திருக்கிறார்கள். இன்னும் டிக்கெட் கல்லா திறக்கப்படவில்லை. க்யூவில் நிற்பவர்களிடமிருந்து பல சலசலப்புகள்...


“இவனுங்ககூட இதே எழவாப் போச்சு. சரியான நேரத்துக்கு வந்து தொறந்து தொலைய மாட்டீங்கறானுங்க”


”அவனுங்க தொறந்தா போதும், நாமதான் தொலையணும்!”


“யாரு.. சண்முகனா.. யோவ் நீ எங்கய்யா இங்க? நேத்துவரைக்கும் நல்லாத்தானே இருந்த? ஏன், உங்க கல்யாணத்துக்கு நீ காதலிக்கற அந்தப் பொண்ணு வீட்ல சம்மதிக்கலியா?”


“அவங்க வீட்ல சம்மதிச்சுட்டாங்க.. அவதான் கல்யாணத்துக்கு சம்மதிக்கல. ஆமா உனக்கென்னாச்சு?”


“அத ஏன் கேக்கற! என் லவ்வருக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சு!”


“உன் லவ்வர்.. அந்த கிழக்கு வீதி புவனாதானே?”


இந்தப் பெயரைக் கேட்டதும் பின்னாலிருந்து ஒரு குரல்..


“அவளை நிச்சயம் பண்ணினத நெனச்சிதான் நானும் இந்தக் க்யூவில நின்னுட்டிருக்கேன்!”


“அடப்பாவி.. அப்போ அவ ஃப்ரீதானா.. நான் உடனே கிளம்பறேன்” என்றபடி முதலாமவன் கிளம்புகிறான்.


இப்போது கல்லாவில் டிக்கெட் கொடுக்கும் பையன் வருகிறான்.


”ஏம்ப்பா, இவ்ளோ லேட்டு?”


”எமகண்டம் ஆரம்பிக்காம குடுக்கக்கூடாதுன்னு எங்க ஓனர் சொல்லிருக்காரு” என்று சொன்னபடி அங்கிருக்கும் புகைப்படமொன்றுக்கு மாலையணிவித்து மரியாதை செய்கிறான்.


“யாருப்பா அந்த ஃபோட்டோல இருக்கறது?”


“அதுதான் எங்க ஓனர்!”


“ஓனர் உயிரோட இல்லையா?”


“மொத டிக்கெட்டே அவருக்குத்தானே கொடுத்தேன்”


”அடப்பாவி” என்று வருத்தப்பட, கல்லா ஆசாமி டிக்கெட் கொடுக்க ஆரம்பிக்கிறான்.


”டிக்கெட் எவ்வளவுப்பா?”


“ஒண்ணு ஏழரை ரூவா”


“ஏழரையா? சரிதான்.. கம்மி பண்ண மாட்டீங்களா?”


“குடும்பத்தோட வாங்கினா 50% தள்ளுபடி உண்டு”


“50% தள்ளுபடியா?”


“ஆமா.. 50% மட்டும் வாங்கீட்டு, நாங்களே தள்ளிவிட்டுடுவோம்”


“ஓ! அதுதான் `தள்ளு’படியா?.. சரி ஒரு டிக்கெட் குடு” என்றபடி 50 ரூபாய் நோட்டை நீட்டுகிறான்.


”யோவ்.. சாவுகிராக்கி. மொதல்லயே ஏன்யா இப்படி எழவெடுக்கற? சில்லறை குடுக்கறதுக்கென்ன?”


”இந்தமாதிரி நாட்டுல நடக்கற சில்லறைப் பிரச்சினைக்காகத்தான் நான் தற்கொலை முடிவே எடுத்தேன். மரியாதையா பாக்கி குடு”


“சரி.. இந்தா”


“என்ன 50 காசு குறையுது?”


“வரும்போது வாங்கிக்கயேன்”


“எங்க வரும்போது? நீ மேல வரும்போதா?”


“அட.. இவன் வேற.. இந்தா 50 காசுக்கு பதிலா சாக்லேட்”


“எந்த நேரத்துல சாக்லேட் குடுக்கறான் பாரு” சலித்துக் கொண்டபடி அவன் டிக்கெட் வாங்கிக் கொண்டு போக, தற்கொலை முனைக்கருகே சில பிச்சைக்காரர்கள்..


“ஐயா.. சாமீ.. இருக்கறதெல்லாம் போட்டுட்டு போயிடுங்கய்யா”


அவன் யோசித்துவிட்டு, இருக்கும் காசையெல்லாம் போடுகிறான்.


”ஐயா.. சட்டை பேண்டையும் கழட்டிக் குடுத்துட்டுப் போங்கய்யா”


போங்கடா.. திடீன்னு புன்னைகை மன்னன் கமலஹாசன் மாதிரி பொழச்சுட்டேன்னா? ***யோடயேவா வர முடியும்?”


"என்ன சொல்றீகன்னு தெரியலயே சாமி?”


“திடீர்ன்னு உயிர் பிழைச்சுட்டேன்னா ஜட்டியோடயேவா வரமுடியும்ன்னு கேட்டேன்” (எல்லாம் தமிழ்மண பயம்தான்!)



கொஞ்சம் தள்ளி கையில் பேக்குடன் நிற்கும் ஒருவர்....


“நம்ம கிட்ட ஒரு இன்ஷ்யூரன்ஸ் போடுங்க. ஒருவேளை நீங்க பொழச்சுட்டாலும், உங்க உயிரை எடுக்க ஆகற செலவை எங்க கம்பெனி ஏத்துக்கும்”


“உயிர வாங்காமப் போறியா?”


அப்போது தூரத்தில் ஒரு பெண்....


“சண்முகம்.. ஐ லவ் யூ! உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கறேன்” என்று கத்தியபடி ஓடிவருகிறாள்.


உடனே சந்தோஷமடைந்த சண்முகம் அவளை நோக்கிப் போக, க்யூவில் நின்றிருந்த சிலர்..


“டிக்கெட்டை என்கிட்ட குடுத்துட்டுப் போங்க சார்” என்றபடி அவனைச் சூழ்கின்றனர்.


“யோவ்.. தள்ளுங்கய்யா.. இந்த டிக்கெட்டை தூக்கி எறியறேன்.. யாருக்குக் கிடைக்குதோ அவங்க எடுத்துக்கங்க” என்றபடி வீசுகிறான். அந்த டிக்கெட் தற்கொலைப் பள்ளத்தாக்கை நோக்கிப் பறக்க அங்கிருந்த செக்யூரிட்டிகள் கூட்டத்தை ”டிக்கெட் இருந்தா மட்டும் இந்தப் பக்கம் வாங்க” என்று விரட்டுகின்றனர். கூட்டம் மறுபடி வந்து க்யூவில் நிற்கிறது. அதிலிருந்த ஒருத்தர் கேட்கிறார்..


“அதெப்படி அவன் மட்டும் டிக்கெட் வாங்கீட்டு சாகாமப் போறான்? உங்க ரூல்ஸ்படி டிக்கெட்
வாங்கினா திரும்பப் போகக்கூடதில்ல?”


கல்லா ஆசாமி சொல்கிறான்...


“கல்யாணம் பண்ணிக்கறேன்னு போறவங்களை நாங்க விட்டுட்டுவோம். ஏன்னா ரெண்டும் ஒண்ணுதானே!”


----------------------------------------


டிஸ்கி: உமாகிட்ட இதைக் காட்டும்போது முடிவு வேற மாதிரி, பதிவுல போடும்போது வேற மாதிரி! எப்படி? நாங்கல்லாம் யாரு!

34 comments:

Anonymous said...

நல்ல கற்பனை. மிகவும் ரசித்தேன்.

கோவி.கண்ணன் said...

//க்யூவுல நின்னு சாவுங்க! //

நகைச்சுவையாக எழுதி இருக்கிங்க.


ஒரு நிகழ்வும் நினைவுக்கு வருகிறது,
தஞ்சை கோவினுள் தீப்பிடித்து பலர் இறந்தனர். எல்லோருமே க்யூவில் நின்று நின்று உள்ளே சென்றவர்கள் தான்.

பரிசல்காரன் said...

முதன் கமெண்ட் அனானியா?
அடக்கடவுளே.. நாந்தான்னு நெனச்சுக்கப்போறாங்க.. நீங்க யாருன்னு சொல்லுங்க நண்பரே!

Syam said...

சூப்பர் கற்பனை, எதற்கும் இன்னொருமுறை தங்கமணிகிட்ட காட்டவும், டிக்கெட் வாங்கவே வேண்டாம் டைரக்ட் சொர்கம் பார்க்கலாம் :-)

பரிசல்காரன் said...

முதல் கமெண்ட் அனானியா?
அடக்கடவுளே.. நாந்தான்னு நெனச்சுக்கப்போறாங்க.. நீங்க யாருன்னு சொல்லுங்க நண்பரே!

anujanya said...

கலக்கல்.

'விஷம் வாங்கியபோது
மீதிச் சில்லறைக்குப் பதில்
இரண்டு சாக்லேட் கொடுத்தான்'

இப்படி ஒரு ஹைக்கூ போட நினைத்திருந்தேன். அதுல இப்ப மண்ணு. நல்லா இருப்பா.

அனுஜன்யா

Anonymous said...

வித்தியாசமான கற்பனை. பாராட்டுக்கள்.

பரிசல்காரன் said...

@ கோவி கண்ணன்

ஆமாம்! நினைவுக்கு வருகிறது!

@ syam

ஏனிந்தக் கொலவெறீ?

பரிசல்காரன் said...

//கலக்கல்.

'விஷம் வாங்கியபோது
மீதிச் சில்லறைக்குப் பதில்
இரண்டு சாக்லேட் கொடுத்தான்'

இப்படி ஒரு ஹைக்கூ போட நினைத்திருந்தேன். அதுல இப்ப மண்ணு. நல்லா இருப்பா.

அனுஜன்யா//

உண்மையாவே சந்தோஷமா இருக்கு (அடுத்தவன் நெனப்புல மண்ணைப் போடறதா-ன்னு கேக்காதீங்க) உங்க கற்பனையளவுக்கு ஏதோ, நானும் நெனச்சிருக்கேனே!!

@ robin

நன்றிகள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முதல் கமெண்ட் பரிசலே போட்டாரோன்னு தான் நானும் நினைச்சேன் ,என்ன பண்றது அப்படித்தான் யோசிக்கவருது..
இன்னோன்னு இதெல்லாம் இங்க சகஜம் தானே.. போட்டாலும் இப்படி போடக்கூடாது. டெஸ்ட் , சோதனை..ன்னு போடனும்

Anonymous said...

நீங்களே நேர்ல கதை சொல்ற மாதிரி கற்பனை பண்ணி படிச்சு, ரசிச்சு, சிரிச்சேன்.

அப்புறம் அந்த பழைய கிளைமேக்ஸ் என்னனு எனக்கு மட்டும் சொல்லுங்க க்ருஷ்ணா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாம் மறந்துட்டேன் வெயிலான் கேட்டதும் நினைவுக்குவருது.. அந்த முடிவு என்னாவா இருக்கும்ன்னு சொல்லிடுங்க..

Bleachingpowder said...

கொண்னுடீங்க போங்க :-)

நான் எதோ schendler list மாதிரி எழுதி முட் அவுட் பண்ணிருவிங்களோனு நினைச்சா, நீங்க காமெடி கலந்து தூள் கிளப்பிடீங்க.

Anonymous said...

நல்லாத்தாம் வாங்குதிய அடுத்தவம் உயிர.

வீட்டம்மாகிட்ட சொன்ன முடிவ எங்களுக்கும் சொல்லலம்லா?

எங்களால ஏண்ட உதவி பண்ணுவம்லா?

பரிசல்காரன் said...

@ கயல்விழி முத்துலெட்சுமி

அக்கா, சத்தியமா அது நானில்லீங்கோ!

@ வெயிலான்

நன்றி!

அந்த க்ளைமாக்ஸ், இன்று இரவு பத்துமணிக்கு என் பின்னூட்டத்திலோ, அல்லது நாளை அவியலிலோ வெளியிடப்படும்!
(எப்படியெல்லாம் ஆள் சேர்க்க வேண்டியிருக்கு!!)

Anonymous said...

நல்ல கற்பனை. மிகவும் ரசித்தேன்.

வெண்பூ said...

அழிச்சாட்டியம் பண்றீங்க பரிசல்....சினிமாவுக்கு காமெடி ட்ராக் எழுத போலாம் நீங்க.

//சமீபத்தில், (1999ல்)//
ச‌மீப‌த்தில்னா ஒரு 1970, 1950 அப்படின்னுல்ல‌ நென‌ச்சிட்டு இருந்தேன்

//விஞ்ச்சில் செல்ல ஒரு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட க்யூவில் நிற்க வேண்டிவந்தது//
2008ல‌ போன‌ப்ப‌வும் இது ம‌ட்டும் மாற‌வே இல்ல‌.

//உன் எழுத்தையெல்லாம் புத்தகமா வெளியிட்டா//
ஓ.. இப்பிடி வேற ஒரு ஐடியா இருக்கா.. தமிழ் இலக்கிய உலகத்தை கழுவுல ஏத்தாம விடமாட்டீங்க போல‌

//“50% தள்ளுபடியா?”
“ஆமா.. 50% மட்டும் வாங்கீட்டு, நாங்களே தள்ளிவிட்டுடுவோம்”
.
.
“வரும்போது வாங்கிக்கயேன்”
“எங்க வரும்போது? நீ மேல வரும்போதா?”//

எங்கிருந்து யோசிக்கிறீங்க இப்படியெல்லாம்??

//***யோடயேவா வர முடியும்?”//
இதுல பாலிடிக்ஸ் வேறயா...

//“கல்யாணம் பண்ணிக்கறேன்னு போறவங்களை நாங்க விட்டுட்டுவோம். ஏன்னா ரெண்டும் ஒண்ணுதானே!”//
ஹி..ஹி..

//டிஸ்கி: உமாகிட்ட இதைக் காட்டும்போது முடிவு வேற மாதிரி, பதிவுல போடும்போது வேற மாதிரி! எப்படி? நாங்கல்லாம் யாரு!//
அவங்களுக்குத் தெரியாது நீங்களா நெனச்சிகாதீங்க.. அவங்கள்ளாம் நம்மள விட உஷாரு..(எத்தன அடி வாங்கியிருக்கோம் சும்மாவா)

Saminathan said...

அட இதுக்கு ஏங்க இவ்வளவு மெனக்கெடனும்...பேசாம ஒரு சுயம்வரம் ஏற்பாடு பண்ணிருந்தா ( இந்த 1008ஜோடி எல்லாம் பண்றாங்களே அந்த மாதிரி ) டோட்டல் மேட்டர் ஓவராயிருக்குமே..!

என்ன நான் சொல்றது..?

பாபு said...

சிரிக்க வைத்ததற்கு நன்றி

Athisha said...

ரொம்ப நல்லாருக்கு பரிசல்

கலக்கல் கதை

Anonymous said...

முதல் கமெண்ட் என்னுடையதுதான். வலைபக்கங்களில் நான் பதிவு செய்யும் முதல் கமெண்ட் இதுதான் என்பதால் அனானியாக வந்துள்ளேன். மன்னிக்கவும். விரைவில் உண்மையான பெயரில் சந்திப்போம்.

Anonymous said...

Nalla varuvenga thambi....

சின்னப் பையன் said...

கலக்கல் காமெடி.... சூப்பரா இருந்துச்சு கற்பனை...

பரிசல்காரன் said...

பின்னூட்டிய அனைவருக்கும் நன்றியோ நன்றி!

இடையறாத பணியினாலும்,
இடையே வந்தபோதெல்லாம்
இடையூறு செய்த
இணையத்தொடர்பாலும்
இடைவிடாது
இங்குவந்து நன்றிசொல்ல
இயலாமைக்கு வருந்துகிறேன்!

லதானந்த் said...

நல்ல நகைச்சுவைக் கதை. தொடர்ந்து எழுதுங்கள். பாராட்டுக்கள்.

அகரம் அமுதா said...

/////“கல்யாணம் பண்ணிக்கறேன்னு போறவங்களை நாங்க விட்டுட்டுவோம். ஏன்னா ரெண்டும் ஒண்ணுதானே!”//////

ஆமாம் இல்ல!

சென்ஷி said...

சூப்பர் கற்பனை.... :))சிரிப்பு தாங்கலை.. :))

//'விஷம் வாங்கியபோது
மீதிச் சில்லறைக்குப் பதில்
இரண்டு சாக்லேட் கொடுத்தான்'

இப்படி ஒரு ஹைக்கூ போட நினைத்திருந்தேன். அதுல இப்ப மண்ணு. நல்லா இருப்பா.

அனுஜன்யா//

அனுஜன்யாவோட ஹைக்கூவும் அழகு..
கலக்கலா எழுதியிருக்கார்.

கண்டிப்பா வலையேத்துங்க.. பதிவுகளிலும் ஹைக்கூக்கள் ரசிக்கப்படும் :))

பரிசல்காரன் said...

நன்றி லதானந்த் அங்கிள்..

நன்றி அமுதா!

அட! சென்ஷி! வாங்க..வாங்க..!

Sivaram said...

//
“நம்ம கிட்ட ஒரு இன்ஷ்யூரன்ஸ் போடுங்க. ஒருவேளை நீங்க பொழச்சுட்டாலும், உங்க உயிரை எடுக்க ஆகற செலவை எங்க கம்பெனி ஏத்துக்கும்”//

இதுக்கு நான் ரொம்ப நேரம் சிரிச்சேன்..

SP.VR. SUBBIAH said...

////“கல்யாணம் பண்ணிக்கறேன்னு போறவங்களை நாங்க விட்டுட்டுவோம். ஏன்னா ரெண்டும் ஒண்ணுதானே!”////

:-)))))

சென்ஷி said...

//அகரம்.அமுதா said...
/////“கல்யாணம் பண்ணிக்கறேன்னு போறவங்களை நாங்க விட்டுட்டுவோம். ஏன்னா ரெண்டும் ஒண்ணுதானே!”//////

ஆமாம் இல்ல!
//

ஆமாவா.. இல்லையா.. ஏதாவது சரியா ஒண்ணு சொல்லுங்க.. பதிலுக்காக காத்திட்டிருக்கேன் :))

பரிசல்காரன் said...

நன்றி ஜீவன்

நன்றி சுப்பையா சார்!

@ சென்ஷி
இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்!

rapp said...

நல்ல கதை வாழ்த்துக்கள்

கிரி said...

//மனசாட்சி: ஏய்ய்ய்ய்..அடங்கு//

நான் இப்படி சொல்லவே இல்லையே :-)))

கே கே கலக்குறீங்க போங்க..நீங்க எதுவும் டிக்கெட் கேட்கலைனு நம்புறேன்.ஹி ஹி ஹி

அதுக்குள்ள பல பதிவு போட்டுடீங்க போல.. :-)