Friday, August 1, 2008

அவியல் – ஆகஸ்ட் 1 ‘08

இன்னைக்கு குசேலன் ரிலீஸ். `காலைல நாலு மணி ரசிகர் ஷோவுக்கு டிக்கெட் இருக்கு வர்றியா’ன்னு ஃப்ரெண்டு கேட்டான். உமாவை அவங்க ஆஃபீஸ்ல விடணும், குழந்தைகள் ஸ்கூல்ன்னு இருக்கறதால `வேண்டாம்’ன்னுட்டேன். இரவு காட்சிக்கு டிக்கெட் வெச்சிருக்கேன். பாக்கணும்.

டிக்கெட் எடுத்து, என்னைக் கூப்பிட்ட நண்பன்கிட்ட “பாத்துப்போடா, எல்லா ஊர்லயும் குண்டு வெச்சுட்டிருக்காங்க. கூட்டம் கூடற இடத்துல வைக்கணும்ன்னா, குசேலன் தியேட்டர்தான் பெஸ்ட்’ன்னு எவனாவது வெச்சிருக்கப் போறான்” ன்னு சொன்னேன். “தலைவர் படம் பாக்கப் போய் செத்தா பெருமைதான்!” ங்கறான்! என்னத்த சொல்ல!

*****

நண்பர் கனலிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பெரியாரின் பற்றாளர். மிகுந்த தமிழார்வலர். இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்த அவர், தனது சொந்தங்களின் எதிர்ப்பை மீறி, முதல் பையனுக்கு `கபிலன்’ என்று பெயரிட்டார். இரண்டாவது பெண்தானென்று எதிர்பார்த்திருந்தார்கள். `இந்தக் குழந்தைக்கு நாங்கள் சொல்லும் பெயர்தான்’ என்று அவர் குடும்பத்தார்கள் வற்புறுத்தி வந்தார்கள். இவர் பெண் பிறந்தால் `சல்மா’ என்று பெயர் வைக்கலாம் என்று சொல்லி வைத்துவிட்டார். ஆண் பிறக்கவே, அவர்கள் ‘இதயத்துல்லா’வோ, என்னமோ சொல்ல, இவர் தடுத்து `அப்துல் கலாம்’ என்று பெயர் வைத்து விட்டார்! “அவர் ஒரு இஸ்லாமியராய் அடையாளம் காணப்படாமல், ஒரு தமிழனாய்த்தான் அடையாளம் காணப்படுகிறார்’ என்றார். நிஜமே!

*****

சுப்பிரமணியபுரம் டைரக்டர் சசிகுமாரின் பேட்டி காண நேர்ந்தது. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கொடைக்கானலில் மியூசிக் டீச்சராக இருந்த போது, அவரது ஸ்டூடண்டாம் சசிகுமார். ஜேம்ஸ் வசந்தனிடம், தான் டைரக்டராக வேண்டும் என்று விருப்பத்தை சொல்வாராம்! அதற்கு ஜேம்ஸ் “நான் பெரிய மியூசிக் டைரக்டராகீடுவேன். யார்கிட்டயாவது சொல்லி சான்ஸ் வாங்கித்தர்றேன்” என்பாராம்! இப்போது, சசிகுமார் டைரக்டராகி, ஜேம்ஸூக்கு சான்ஸ் கொடுத்திருக்கிறார்! (எனக்கு கோவி. கண்ணன் சாரின் வலைப்பூதான் ஞாபகத்துக்கு வந்தது! – காலம்!)

*****

சக்கரக்கட்டி, சரோஜா, சத்யம் – மூணு இசைத்தட்டும் வாங்கினேன். (அட.. மூணுமே `ச’!)

சக்கரக்கட்டி – ஏ.ஆர்.ரஹ்மான். சி.டி. யை ஏழெட்டு செல்லோ டேப் போட்டு ஒட்டிருந்தாங்க. பிரிக்கறதுக்குள்ள அவ்வளவு டென்ஷனாயிடுச்சு. இவ்ளோ செலவு பண்ணி படம் தயாரிக்கறவங்க நல்ல ப்ரசண்டேஷன் பண்ண முடியாதா? ச்சே! பாட்டு:– டாக்ஸி மட்டும் ஓக்கே ரகம்.

சத்யம் – சி.டி. நல்லா இருந்தது. பாட்டும். ஹாரிஸ் ஜெயராஜுக்கு 25வது படம். வழக்கம் போல பாம்பே ஜெயஸ்ரீ பாட்டு இருக்கு. அதுதான் கண்டிப்பா ஹிட் ஆகும்!

சரோஜா – சி.டி. வடிவமைப்பு சூப்பர். பாட்டு பொஸ்தகமெல்லாம் கொடுத்திருக்காங்க! பாடல்கள் –யுவன் சங்கர் ராஜா. ரெமோ ஸ்டைல்ல இருக்கு! மாடர்ன் ஜெனரேஷனுக்கு பிடிக்கலாம்! (விவாகரத்துக்கு அப்புறம் இவர் பாடல்கள் ஹிட்டடிக்கல. கஷ்டமா இருக்கு. யுவன், மறுபடி களத்துல இறங்குங்க!)

***

நேற்று பதிவு எழுதும்போது 14450+ ஹிட்ஸ்தான் இருந்தது. திடீன்னு நைட் பார்த்தா 15000த்தை தாண்டியிருந்தது. ஒரு நாளைக்கு 200, 300 தானே வரும். இதென்ன 500கிட்ட வந்துடுச்சுன்னு பார்த்தா, `உங்க பதிவை தமிலிஷ்.காம் ல ஒருத்தர் எடுத்துப் போட்டு, அது 20+ ஓட்டு வாங்கி இரண்டாவதா இருக்கு. அதான் 10 யூஸர்ஸ் ஆன்லைன்’ –ன்னு ஒருத்தர் சொல்லியிருந்தாரு. போய்ப் பார்த்தா 23 ஓட்டு வாங்கி முதலிடத்துக்கு வந்திருந்தது. மகிழ்ச்சியா இருந்தது. `தமிழ்ஸ்டார்’ன்னு ஒருத்தர் தான் அந்தப் பதிவை ரெகமெண்ட் பண்ணியிருந்தார். நன்றி சொல்லலாம்ன்னு போனா, முதுகுல அருவாளோட ஒரு ஸ்டில்! பயந்துபோய் திரும்பி வந்துட்டேன்! இங்க சொல்லிக்கறேன்... நன்றி!

*****

ஃப்ரெண்ட் ஒருத்தரை ரயிலேத்திவிட ரயில்வே ஸ்டேஷன் போயிருந்தேன். அங்க ஒரு அறிவிப்பை ரொம்ப நேரமா பாத்துட்டு இருந்தேன். நண்பன் கேட்டான்.

“என்னது, ரொம்ப நேரமா அந்த போர்டை பார்த்துட்டு இருக்க?”

”இல்ல. அந்த அறிவிப்பைப் பார்க்கும் போது ஒரு கவிதை வருது” -ன்னேன்.

என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு, கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துட்டு “சொல்லு”ன்னான்.

”எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை
ரயிலில் எடுத்துச் செல்லக் கூடாதாம்.
அடியே..
கண்களை மூடியபடி பயணி.
என் இதயம் பற்றி எரிகிறது”

`நல்லாயிருக்கு’ன்னவன், ரயிலேறிட்டான். ஊருக்குப் போய் கூப்பிடறேன்னான். கூப்பிடவேயில்ல! ரொம்ப பயமுறுத்தீட்டேனோ?

55 comments:

Thamira said...

முதல் தடவையா முதல் போணி பண்றேன். இன்னிக்கு யாவாரம் ஓகோன்னு போகுதானு பாக்கலாம். அவியல் சூப்பர்.

Natty said...

aha! super kavithai.. overa sight adipeenga polae :)

பாபு said...

எதெல்லாம் பதிவாக போடலாம் என்று யோசித்து கொண்டே இருப்பீர்களா?
normal ஆக இருக்க முடியுதா?

சங்கணேசன் said...

உங்களுடைய எல்லா அவியல்களையும் ருசி பார்த்துட்டுத்தான் இருக்கேன் ஆனா உங்களுக்குத்தான் எதுவும் திரும்ப கொடுக்க முடியவில்லை.. தொடர்ந்து படைக்கவும் ...
GG

ச.பிரேம்குமார் said...

"“தலைவர் படம் பாக்கப் போய் செத்தா பெருமைதான்!” ங்கறான்! என்னத்த சொல்ல!"

இவர் மாதிரி ஆட்கள் இருக்குறதால தான் ரஜினி படத்தில் மட்டுமில்லாமல், நெசத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தை பத்தி ஊரே சிரிப்பா சிரிக்குது

என்னத்த சொல்ல?

உங்கள் அவியல் பதிவுகள் எல்லாம் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்

விஜய் ஆனந்த் said...

// ”எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை
ரயிலில் எடுத்துச் செல்லக் கூடாதாம்.
அடியே..
கண்களை மூடியபடி பயணி.
என் இதயம் பற்றி எரிகிறது” //

கவிதை அருமை !!!

பரிசல்காரன் said...

@ தாமிரா

நல்ல மனசிருக்கறவங்க வந்தா யாவாரம் நல்லாதான் இருக்கும்! கவலைப்படாதீங்க! என் நண்பர்கள் எல்லாருமே நல்லவஙக்தான்!

@ natty

ஆமாமா! அது ஒண்ணுதான் பொழுதுபோக்கே! (கவிதை எழுதறதில்ல... சைட்டடிக்கறது)

@ babu

//எதெல்லாம் பதிவாக போடலாம் என்று யோசித்து கொண்டே இருப்பீர்களா?//

அப்படின்னு சொல்ல முடியாது. நீங்க யோசீசுப் பாருங்களேன். உங்க ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசறப்ப பகிர்ந்துக்கற விஷயங்கள் இப்படித்தான் இருக்கும். ஏதேதோ பேசுவோம்ல? கல்யாணம் ஆனதுக்கப்புறம் ஃப்ரெண்ட்ஸ் தொடர்போ, இப்படி மனம் விட்டுப் பேசறதோ கொஞ்சம் கம்மியாயிடும். (இல்லையா?)

நான் ஒரு வாரத்துல பாக்கற, நினைக்கற சில விஷயங்களை உங்களோட பகிர்ந்துக்கறேன். தட்ஸ் ஆல்!

//normal ஆக இருக்க முடியுதா?//

தெரியலயே...!!!

@ கணேஷ்

ஒரு ஃபோனைக்கூட பண்ண மாட்டீங்களா? பிஸி மேன்!

பரிசல்காரன் said...

@ பிரேம்குமார்

கரெக்டுங்க...

சரிங்க!

@ விஜய் ஆனந்த்

நன்றி!

துளசி கோபால் said...

உங்க தலைப்பைச் சுட்டுட்டேன்.

இன்னிக்கு என்ன சமைக்கலாம் என்ற யோசனையுடன் தமிழ்மணம் திறந்தேன்.

ஆஆஆஆஆஆஆ...கிடைச்சுருச்சு:-))))

பரிசல்காரன் said...

@ துளசி கோபால்

தாராளமா. ஆனா எனக்கும் ஒரு கரண்டி குடுத்துடணும்! சரிங்களா?

தமிழன்-கறுப்பி... said...

இன்னைக்கு உங்க பதிவுக்குத்தான் முதல்ல கமன்ட் போடுறேன்...:)

தமிழன்-கறுப்பி... said...

அவியல் நல்லாருக்கு...

தமிழன்-கறுப்பி... said...

குசேலன் படம் ஹிட்டாகாதுன்றது என்னோட அபிப்பிராயம்...

தமிழன்-கறுப்பி... said...

///போய்ப் பார்த்தா 23 ஓட்டு வாங்கி முதலிடத்துக்கு வந்திருந்தது. மகிழ்ச்சியா இருந்தது///

வாழ்த்துக்கள்...:)

தமிழன்-கறுப்பி... said...

///
நண்பர் கனலிக்கு ஆண் குழந்தை பிறந்தது...................................................................................“அவர் ஒரு இஸ்லாமியராய் அடையாளம் காணப்படாமல், ஒரு தமிழனாய்த்தான் அடையாளம் காணப்படுகிறார்’ என்றார். நிஜமே!
///

நல்ல விசயம்...!
நண்பர் கனலிக்கு வாழ்த்துக்கள்...:)

தமிழன்-கறுப்பி... said...

///
”எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை
ரயிலில் எடுத்துச் செல்லக் கூடாதாம்.
அடியே..
கண்களை மூடியபடி பயணி.
என் இதயம் பற்றி எரிகிறது”
///

காதல் எப்பவும் அழகான விசயம்தான்...:)

தமிழன்-கறுப்பி... said...

இன்னைக்கு நானும் ஏதாவது பதிவு போடணும் ஆனா என்ன எழுதறதுன்னுதான் தெரியலை...:(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\babu said...

எதெல்லாம் பதிவாக போடலாம் என்று யோசித்து கொண்டே இருப்பீர்களா?
normal ஆக இருக்க முடியுதா?//

அதெல்லாம் இனி சாதரணமா இருக்கவே முடியாது ப்ளாக்க்கராவே வாழ்ந்துட்டுப்போகவேண்டியது தான்... :)

தமிழன்-கறுப்பி... said...

அவியல் சாப்பிட்டு முடிச்சாச்சு...

தமிழன்-கறுப்பி... said...

கை கழுவ தண்ணி...

கோவி.கண்ணன் said...

அவியல் தொகுப்பு அட்டகாசம், இஸ்லாமிய நண்பர் குறித்துச் சொல்லி
இருப்பது போற்றத் தக்கது, பாராட்டத்தக்கது !

புதுகை.அப்துல்லா said...

மொத மேட்டர் :

//பெரியாரின் பற்றாளர். மிகுந்த தமிழார்வலர். இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்த அவர், தனது சொந்தங்களின் எதிர்ப்பை மீறி, முதல் பையனுக்கு `கபிலன்’ என்று பெயரிட்டார்.//

எங்க அப்பா பெரியார் வழி நாத்தீகர் அல்ல.மிகுந்த தமிழ் பற்றாளர். என்னுடைய மூத்த சகோதரிக்கு செல்வி என்று அழகு தமிழில் பெயர் வைத்தார்.
என்னுடைய இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் கூட தங்கம்,கண்மணி என்று செல்லப் பெயரை தமிழில் வைத்து அப்படித்தான் கூப்பிடுகிறார்.


ரெண்டாவது மேட்டர்:

“தலைவர் படம் பாக்கப் போய் செத்தா பெருமைதான்!” ங்கறான்! என்னத்த சொல்ல!
//

எதயாவது சொல்லப் போனா நம்பள கிருக்காக்கிருவாய்ங்க.பேசம விடுங்க!!

மூனாவது மேட்டர்:

முதுகுல அருவாளோட ஒரு ஸ்டில்! //

நல்ல இம்புரூமெண்டு பரிசல். இதுவரைக்கும் ஆளுக்குத்தான் பயந்தீங்க.இப்பல்லாம் ஸ்டில்லுக்கே பயப்பட ஆரமிச்சாச்சா?

கடைசி மேட்டர்:

இந்த கவிதை....வேணா நா ஒன்னும் சொல்லல :))

தமிழன்-கறுப்பி... said...

சரி அக்குவா பீனா...

தமிழன்-கறுப்பி... said...

அக்காவப் பத்தி பேசினா செருப்பால அடிப்பேன்...:)

தமிழன்-கறுப்பி... said...

ஒரு எழவும் புரிய மாட்டேங்குது இவனுக்கு...

தமிழன்-கறுப்பி... said...

ஏம்பா சாப்பிட்டா ஒரு தம்மடிக்கிறது என்னோட பழக்கம் ;)

தமிழன்-கறுப்பி... said...

கோல்ட் fபிளாக்...

சந்தனமுல்லை said...

நல்லாயிருந்தது..உங்க அவியல்..உங்க பதிவுகளையெல்லாம் படிச்சுடுவேன்னாலும், இப்போதான் பின்னூட்டம் போடறேன்!! இசைத்தட்டு வாங்கற பழக்கம் இன்னுமும் இருக்கா? ஏன்னா, எல்லாம் ஸ்ட்ரீமிங்லேயே கேட்டு பழக்கமாயிடுச்சு!! :-)

தமிழன்-கறுப்பி... said...

555

தமிழன்-கறுப்பி... said...

அதெல்லாம் கிடையாதா...

VIKNESHWARAN ADAKKALAM said...

பரிசல் அவியல் சூப்பராக இருக்கு... வாழ்த்துக்கள்... ஏனோ தெரியல குசேலன் படம் பார்க்கும் ஆர்வம் இல்லைங்க... நீங்க பார்த்துட்டு சொல்லுங்க...
உங்களை மாறிதாங்க எதையாவது பார்த்து படித்ததில் ஏதவது ஞாபகம் வரும்... என் பக்கத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்... நானே சிரித்துக் கொள்வேன் எனக்குள்...

தமிழன்-கறுப்பி... said...

அப்ப நான் கிளம்பறேன் நிஜமா நல்லவன் கடையில இருக்கான்னு பாத்துட்டு வந்துடறேன்...:)

வெண்பூ said...

// ரொம்ப பயமுறுத்தீட்டேனோ? //

இல்லையா பின்னே??? நானே ரொம்ப நேரம் யோசிச்சிட்டுதான் இந்த பின்னூட்டம் போடுறேன். :))))

Anonymous said...

நானும் காலைல நாலு மணிக்கு டிக்கெட் வேண்டானுட்டேன்.

கனலிக்கு வாழ்த்துக்கள் சொல்லச் சொன்னேனே? சொல்லிட்டீங்களா?

'காலம்' தான்.

சிடியெல்லாம் காசு குடுத்து வாங்குறீங்களா? ;)

21 ஓட்டு தானா? பதிவுக்கு வர்றவங்கெல்லாம் ஓட்டு போட மாட்டாங்களா?

எப்படி போன் பண்ணுவாரு நண்பர்? அங்கங்க குண்டு வெடிப்பு அது, இதுனு அவனவன் பீதியா இருக்கான். இதுல தீப்பற்றக்கூடிய கவிதை வேறயா?

Anonymous said...

முதல் அனுபவம் எழுதீருக்கேனுங்ணா! பாத்துட்டு எப்டினு சொல்லுங்க.

முரளிகண்ணன் said...

interesting aviyal

நாடோடி இலக்கியன் said...

கவிதை அருமை.
தொடர்ந்து கலக்குறீங்க,வாழ்த்துக்கள் ...!
அடிக்கடி திருப்பூர் வந்து செல்வேன்.நீங்க எந்த ஏரியாவில் இருக்கின்றீர்கள்?

Anonymous said...

இன்னிக்கு "அவியல்" ....நாளைக்கு குசேலன் "துவையல்"....அப்பிடித்தானே?

இராம்/Raam said...

//“தலைவர் படம் பாக்கப் போய் செத்தா பெருமைதான்!” ங்கறான்! என்னத்த சொல்ல!//


:))

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

அவியல் ருசியாக இருந்தது பரிசல் !

பரிசல்காரன் said...

கொஞ்சம் அந்தப் பக்கம் போய்ட்டு வர்றதுக்குள்ள 40 பின்னூட்டமா?

தாமிரா, உங்க கை ரொம்ப ராசிதான்!

கும்மிய தமிழனுக்கு ஸ்பெஷல் நன்றி!

பரிசல்காரன் said...

@ தமிழன்

//இன்னைக்கு நானும் ஏதாவது பதிவு போடணும் ஆனா என்ன எழுதறதுன்னுதான் தெரியலை//

நாங்கல்லாம் தெரிஞ்சா எழுதறோம்? அப்படியே அடிசு விட வேண்டியதுதான்!

//கை கழுவ தண்ணி.// //கோல்ட் fபிளாக்.///

நேர்ல வாங்க தலைவா... `எல்லாம்' தர்றேன்!

@ கயல்விழி-முத்துலெட்சுமி @ முத்துலெட்சுமி-கயல்விழி

அதுதான் உண்மைங்க்க்கா!

நன்றி கண்ணன் ஜி! உங்க பாராட்டை அவர்கிட்ட சொல்லிடறேன்!

@ புதுகை அண்ணாச்சி...

சரியாச் சொன்னேள் போங்கோ!

@ சந்தனமுல்லை said...

//நல்லாயிருந்தது..உங்க அவியல்..உங்க பதிவுகளையெல்லாம் படிச்சுடுவேன்னாலும், இப்போதான் பின்னூட்டம் போடறேன்!! இசைத்தட்டு வாங்கற பழக்கம் இன்னுமும் இருக்கா? ஏன்னா, எல்லாம் ஸ்ட்ரீமிங்லேயே கேட்டு பழக்கமாயிடுச்சு!//

முதல் மறுமொழிக்கு நன்றி! அப்பப்பூ வாங்குவேன். பாடலாசிரியர்களின் தரம், யாராரு எங்கெங்கே இருக்காங்க -ன்னு தெரிஞ்சுக்க!

@ விக்கி

//உங்களை மாறிதாங்க எதையாவது பார்த்து படித்ததில் ஏதவது ஞாபகம் வரும்... என் பக்கத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்... நானே சிரித்துக் கொள்வேன் எனக்குள்//

நானும் அப்படித்தான் சிரிச்சுட்டிருந்தேன். பைத்தியம்ன்னாங்க.
எழுதினேன்.. ப்ளாக்கர் ன்னாங்க! (பிரிச்சு, பிரிச்சு சொன்னா கவிதைங்க!)

@ வெண்பூ

அவ்ளோ மோசமாவா இருக்கு? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

@ வெயிலான்

சொல்லீட்டேன்.

இன்னைக்கே படிக்கறேன் (அதென்ன புதுசா `அண்ணா?'....என்னை அறிஞர் ங்கறீங்களா? )

@ முரளி கண்ணன்

மிக்க நன்றி!

வெண்பூ said...

//@ வெண்பூ

அவ்ளோ மோசமாவா இருக்கு? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..//

அவியல் ரொம்ப நல்லா இருக்கு.. அந்த கவுஜ ஆனாலும்.... :))

பரிசல்காரன் said...

@ நாடோடி இலக்கியன்

பல்லடம் ரோடு. என் ப்ரோபைலில் உள்ள ஐ.டி.க்கு ஒரு மெயிலிடுங்கள். அலைபேசலாம்!

@ மகேஷ்

ஆமாமா !

@ இராம்

:-)))))

@அருப்புக்கோட்டையார்

நன்றிங்க. (உங்க பேரை கூகுள் TRANSLITERATION-ல அடிச்சா வேற மாதிரி வருது!)

பரிசல்காரன் said...

//அவியல் ரொம்ப நல்லா இருக்கு.. அந்த கவுஜ ஆனாலும்.... //

பொறாமை பிடிச்ச உலகமடா!

எதோ இப்படியெல்லாம் கவுஜ சொல்லி எனக்கு ஒரு பிகர் செட்டாகறதுல உங்களுக்கென்ன வருத்தம்!?!

வெண்பூ said...

//பொறாமை பிடிச்ச உலகமடா! //

ஹி..ஹி.. தெரிஞ்சி போச்சா!!!

rapp said...

//பெரியாரின் பற்றாளர். மிகுந்த தமிழார்வலர். இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்த அவர், தனது சொந்தங்களின் எதிர்ப்பை மீறி, முதல் பையனுக்கு `கபிலன்’ என்று பெயரிட்டார்.//

இதே மாதிரி நீங்க நாகை, காரைக்கால் தஞ்சாவூர் சைட்ல பார்த்தீங்கன்னா, எல்லாரும் எல்லா மத வழிப்பாட்டுதலங்களுக்கும் போவாங்க, நேர்ந்துக்குவாங்க, இன்னும் என்னன்னவோ நல்லது செய்வாங்க. மற்ற இடங்களிலும் ஒத்துமயாத்தான் இருக்காங்க, ஆனா இங்க என்ன ஸ்பெஷாலிட்டின்னா, எல்லாரும் தன் மத அடையாளத்தை வெளிப்படுத்திப்பாங்க, ஆனா மற்ற மதத்தினரையும் அனுசரிச்சுப்போய் அவங்களோட நம்பிக்கைகளை நல்ல முறையில் மதிப்பாங்க. எல்லாரும் மத அடையாளங்கள வெளிப்படுத்திக்காம இருக்கறது நல்ல விஷயம்தான்,ஆனா அது நிஜத்தில்(எல்லாக் காலக்கட்டத்திலும்) முழுமையா வெற்றி அடையுமான்னு தெரியல. அதே சமயத்தில் மேலே குறிப்பிட்ட மாதிரி சகிப்புத்தன்மை பரவலாகிடுச்சின்னா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்

கிரி said...

//“நான் பெரிய மியூசிக் டைரக்டராகீடுவேன். யார்கிட்டயாவது சொல்லி சான்ஸ் வாங்கித்தர்றேன்” என்பாராம்! இப்போது, சசிகுமார் டைரக்டராகி, ஜேம்ஸூக்கு சான்ஸ் கொடுத்திருக்கிறார்//

எப்படியோ வாய்ப்பு கிடைத்தால் சரி. வாய்ப்பு கொடுத்த சசிக்கு பாராட்டுக்கள்.

//சக்கரக்கட்டி, சரோஜா, சத்யம் – மூணு இசைத்தட்டும் வாங்கினேன்//

இசை தட்டு இப்பெல்லாம் வாங்குறதே இல்லை.

சின்னப் பையன் said...

அவியல் கலக்கலோ கலக்கல்....:-))

கவிதை சூப்பர்... (ம். பாக்கறேன் கலைமாமணி அடுத்து எவ்ளோ வருஷம் வரைக்கும் ரிசர்வ் ஆயிடுச்சுன்னு....)

Anonymous said...

//சுப்பிரமணியபுரம் டைரக்டர் சசிகுமாரின் பேட்டி காண நேர்ந்தது. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கொடைக்கானலில் மியூசிக் டீச்சராக இருந்த போது, அவரது ஸ்டூடண்டாம் சசிகுமார். ஜேம்ஸ் வசந்தனிடம், தான் டைரக்டராக வேண்டும் என்று விருப்பத்தை சொல்வாராம்! அதற்கு ஜேம்ஸ் “நான் பெரிய மியூசிக் டைரக்டராகீடுவேன். யார்கிட்டயாவது சொல்லி சான்ஸ் வாங்கித்தர்றேன்” என்பாராம்! இப்போது, சசிகுமார் டைரக்டராகி, ஜேம்ஸூக்கு சான்ஸ் கொடுத்திருக்கிறார்!//

பரிசல் உங்களின் கிரகிக்கும் திறன் ஆச்சர்யமானது.


அதுக்காக இதோ உங்களுக்கு ஒரு அரை சதம்.

manikandan said...

*******இதே மாதிரி நீங்க நாகை, காரைக்கால் தஞ்சாவூர் சைட்ல பார்த்தீங்கன்னா, எல்லாரும் எல்லா மத வழிப்பாட்டுதலங்களுக்கும் போவாங்க, நேர்ந்துக்குவாங்க, இன்னும் என்னன்னவோ நல்லது செய்வாங்க. மற்ற இடங்களிலும் ஒத்துமயாத்தான் இருக்காங்க, ஆனா இங்க என்ன ஸ்பெஷாலிட்டின்னா, எல்லாரும் தன் மத அடையாளத்தை வெளிப்படுத்திப்பாங்க, ஆனா மற்ற மதத்தினரையும் அனுசரிச்சுப்போய் அவங்களோட நம்பிக்கைகளை நல்ல முறையில் மதிப்பாங்க. எல்லாரும் மத அடையாளங்கள வெளிப்படுத்திக்காம இருக்கறது நல்ல விஷயம்தான்,ஆனா அது நிஜத்தில்(எல்லாக் காலக்கட்டத்திலும்) முழுமையா வெற்றி அடையுமான்னு தெரியல. அதே சமயத்தில் மேலே குறிப்பிட்ட மாதிரி சகிப்புத்தன்மை பரவலாகிடுச்சின்னா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்*******

வழிமொழிகிறேன்

பரிசல்காரன் said...

@ கிரி

நன்றி! (குசேலன் இப்போதான் பாத்துட்டு வர்றேன். -(((

@ வேலன்

அண்ணா, நன்றி! (சொன்ன மாதிரி செஞ்சுட்டீங்க!)

@ அவனும் அவளும்

மிக்க நன்றி. இது உங்க முதல் வரவுல்ல?

கயல்விழி said...

குசேலன் படம் பார்த்து நொந்து நூடுல்ஸான உங்க நண்பரின் நிலை என்னாச்சு என்பதை தனிப்பதிவாக எழுதலாமே? நான் படித்தவரைக்கும் குசேலன், குருவியைபோல ஒரு சிறந்த படம் என்று கேள்விப்படுகிறேன்.

//”எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை
ரயிலில் எடுத்துச் செல்லக் கூடாதாம்.
அடியே..
கண்களை மூடியபடி பயணி.
என் இதயம் பற்றி எரிகிறது” //

நல்ல கவிதை, ராப்புக்கு போட்டி. :)

Anonymous said...

ராப்புக்குப் போட்டின்னு சொல்லாதீங்க.

இலக்கிய உலகத்தில அவங்களுக்கு ஒரு தனி இடமிருக்கு. அத யாராலும் தொட முடியாது.

பரிசல்காரன் said...

@ கயல்விழி

குசேலன் படம் நல்லால்லயா? யாரு சொன்னா? இன்னைக்கு விமர்சனம் போடறேன் பாருங்க