எல்லோருக்கும் சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்!
(நடுவுல இருக்கறது தெரியலன்னா செலக்ட் பண்ணிப் பார்த்துக்கோங்க!)
எல்லா சுதந்திர தினத்திலும் இது எனக்கு நடக்கும். அதாவது யாரோ ஒருத்தர் கொடியைத் தலைகீழாக குத்திக்கொண்டு இருப்பார். இன்று காலை மீரா, மேகாவை ஸ்கூலில் விட்டுவிட்டு உமாவை அழைத்துவர திரும்பி வந்தபோது ஸ்கூல் கேட் அருகே ஒருத்தர் தலைகீழாய் கொடியைக் குத்திக் கொண்டிருந்தார். அவரது பையனுக்கும் தலைகீழாய்க் குத்திவிட்டிருந்தார்.
“சார். கொடி தப்பா இருக்கு. பச்சை நிறம் கீழ வரணும்” என்றேன்.
“அப்படீங்களா? வாட்ச்மேன் இத சொல்லாம அப்படியே குடுத்துட்டான்”
“ஏங்க.. இது நமக்கா தெரிய வேண்டாமா?” என்றபோது ‘ஞாபகமிருக்கறதில்லீங்க’ என்றவருக்கு ஒரு டிப்ஸ் குடுத்தேன்.
“செவ்வானம், பசுமையான பூமின்னு ஞாபகம் வெச்சுக்கோங்க” என்றேன்.
வானம் மேலே. பூமி கீழே!
-------------------
NECC (National Egg Co-Ordination Committee) வெளியிட்டிருந்த ஒரு பேப்பர் விளம்பரம் பார்த்தேன். சச்சின், ஜாகீர்கானெல்லாம் இருக்கும் அதில் வெளியிட்டிருந்த வாசகம் கிறுக்குத்தனமாக இருந்தது. `இன்று உங்களுடைய முட்டையை சாப்பிட்டீர்களா?’ – இதுதான் வாசகம். இப்படியா கேட்பார்கள்? `இன்று உங்களுக்கான முட்டையை சாப்பிட்டீர்களா?’ என்றிருந்திருக்கலாம்.
அதைப் படிக்கும்போது சினிமாத் துறையில் இருந்த என் நண்பர் சொன்னது ஞாபகம் வந்தது. வெங்கடாசலம் என்ற அவர் ஜனனி ஆர்ட்ஸ் என்று உடுமலையில் நடத்தி வருகிறார். சென்னையில் இருந்தபோது ஆர். பார்த்திபன் பொண்டாட்டி தேவை படம் ஆரம்பித்த சமயம் அந்தப் படத்திற்காக சில விளம்பர டிசைன்கள் எழுதிக் கொண்டுபோயிருக்கிறார். `ஆர். பார்த்திபனின் பொண்டாட்டி தேவை’ என்று! பிறகு பார்த்திபன் சுட்டிக் காட்ட, `ஐயோ..ஸாரிங்க’ என்று. பார்த்திபன் சொன்னாராம்.
”என் குருவே இந்தத் தப்பைப் பண்ணியிருக்காரு. அவரு டைரக்ட் பண்ணின சின்ன வீடு படத்துக்கு மொதல்ல `ஏ.வி.எம்-மின் சின்னவீடு’ ன்னுதான் எழுதினாங்க. அப்புறம்தான் `ஏ.வி.எம். அளிக்கும் சின்னவீடு’ ன்னு மாத்தினாங்க”
-----------------------
எனக்கு கோவையில் ஒரு கடையில் பேண்ட், ஷர்ட் எடுத்து ட்ரையல் பார்க்கும் போது எப்போதும் போல டரையல் ரூம் முன் நின்றிருந்த உமாவிடம் கருத்து கேட்டபோது `திரும்புங்க’ என்று பார்த்தார். ரொம்ப நாளாக கேட்க வேண்டுமென்று நினைத்திருந்த கேள்வியை உமாவிடம் கேட்டேன்.
“எப்போ புது ட்ரெஸ் போட்டுக் காட்டினாலும் பின்னாடி பார்த்து கருத்து சொல்றியே.. ஏன்? முன்னாடிதானே எல்லாரும் பார்ப்பாங்க?”
“முன் பக்கம் ஆம்பிளைங்கதான் பார்ப்பாங்க. அவங்க டேஸ்ட் உங்களுக்கு தெரியும். ஆனா பெண்கள் ஆண்களை நேருக்கு நேர் பார்க்கும்போது ஸ்ட்ரெய்ட்டா பேசீட்டு போய்டுவாங்க. சைட் அடிக்கணும்ன்னா ஆண் போனதுக்கப்புறம் பின்னாடி ஒரு பார்வை பார்த்துக்குவோம். அதனாலதான் பின்பக்கம் பார்த்து சொல்றேன்”
பேச்சிலர்ஸ் நோட் பண்ணிக்கங்கப்பா!
-------------------------------
நேற்று பரிசல்காரனுக்கான பெயர்க் காரணம் சொன்னதற்குப் பிறகு பல வலையுலக நண்பர்களிடமிருந்து அழைப்புகள்! ‘அந்த பரிசல் அமைப்புல என்னென்ன செய்றீங்க’ என்று கேட்டு ‘என்னையும் கூப்பிடுங்க. என்னால முடிஞ்ச என்ன உதவின்னாலும் செய்யறேன்’ என்றார்கள். என் பரிசல் நண்பர்கள் ‘ஏன் கிருஷ்ணா எழுதினீங்க?’ என்று லேசாக வருத்தப்பட்டார்கள். அவர்கள் வருத்தத்துக்கு காரணம் இப்படி ஆரம்பித்தபோதே இதை விளம்பரப்படுத்தவே கூடாது என்று பேசிவைத்திருந்தோம். உதவி செய்வது என்பது நிர்பந்தமாக ஆகிவிடாமல், போகிற போக்கில் செய்துவிட்டுப் போவது போல இருக்கவேண்டும் என்பதால். ஆனால் எனக்கழைத்த நண்பர்களின் கருத்தும் அப்படியேதான் இருந்தது. இதில் நான் சொல்லக்கூடாத, ஆனால் சொல்ல வேண்டிய விஷயம். அவர்களது பெயர்கள்!
ஆம்! அழைத்த எல்லாருமே சொல்லிவைத்த மாதிரி `என்ன காரணம் கொண்டும் என் பெயரை சொல்லக்கூடாது’ என்றார்கள்.
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்!
----------------------------
இந்தவாரம் எனக்கு வந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது அரசிடமிருந்து வந்த ஒரு மின்னஞ்சல்! தமிழக அரசுதான் நம்மளைப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கல! இது அமெரிக்கா அரசிடமிருந்து வந்தது! Jokes apart அமெரிக்காவில் இருந்து அரசு செல்லையா என்றவரிடமிருந்து `பரிசல்காரன் என்று எழுதுவது நீங்கள்தானே?’ என்று ஆரம்பித்து ஒரு அஞ்சல். ‘உன்னைத்தாண்டா தேடீட்டிருக்கேன்’ என்று அடுத்தவரி இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஏகத்துக்கும் பாராட்டி எழுதியிருந்தார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அதுவும் போதாதென்று இரு நாட்களுக்கு முன் அலைபேசியில் அழைத்துப் பேசினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
சொல்ல மறந்துவிட்டேன். அவர் அமெரிக்காவில் கடந்த 23 ஆண்டுகாலம் வாழ்ந்து வருகிறார். மருத்துவ உயிரியல் துறை (Biomedical sciences) பல ஆண்டுகள் ஆய்வு செய்து, தற்போது ஆசிரியப்பணி செய்கிறார்.
அவருக்கு இங்கே ஒரு ஸ்பெஷல் நன்றியைச் சொல்லவே இதை இங்கே எழுதுகிறேன்!
நன்றி ஐயா!
-----------------------
(மேல வலது மூலைல போய் ஓட்டுப் போட்டீங்களா இல்லையா?)
41 comments:
பரிசல்,
இப்பத்தாம் சந்தோஷமா இருக்கு. இந்த மாதிரி எழுதுறத விட்டுட்டு நாம் போரேன்னு ஃபிலிம் காட்டீட்டிங்க.
விட்டுடுவோமா நாங்க.
உங்களுக்கு உதவி செய்யத் தயாராய் இருப்பவர்கள் குறித்து மிக்க மகிழ்ச்சி. எனது வாழ்த்துக்களையும் சொல்லுங்கள்.
///வடகரை வேலன் said...
பரிசல்,
இப்பத்தாம் சந்தோஷமா இருக்கு. இந்த மாதிரி எழுதுறத விட்டுட்டு நாம் போரேன்னு ஃபிலிம் காட்டீட்டிங்க.
விட்டுடுவோமா நாங்க.///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே
ஓட்டும் போட்டாச்சுப்பா.... அந்த பட்டியலில் அங்கிள் பேரும், பரிசல் பேரும் இல்லாததைக் கண்டிக்கிறோம்.
@ வடகரை வேலன்
//இப்பத்தாம் சந்தோஷமா இருக்கு//
எனக்கும்!
@ தமிழ் பிரியன்
// ஓட்டும் போட்டாச்சுப்பா.... அந்த பட்டியலில் அங்கிள் பேரும், பரிசல் பேரும் இல்லாததைக் கண்டிக்கிறோம்.//
அவரு கவர்னர்! சரியா ஆட்சி செய்யலைன்னா 356ஐப் பயன்படுத்தற அதிகாரம் அவருக்கு உண்டு!
//மேல வலது மூலைல போய் ஓட்டுப் போட்டீங்களா இல்லையா?//
போட்டாச்சு போட்டாச்சு
//
(மேல வலது மூலைல போய் ஓட்டுப் போட்டீங்களா இல்லையா?)
//
குசும்பனுக்காக இதுகூட செய்யலைன்னா எப்படி.... :P
//பேச்சிலர்ஸ் நோட் பண்ணிக்கங்கப்பா//
நோட் பண்ணிக்கிட்டேன்!
இனி இதை மைண்ட்ல வைச்சுக்கிறேன்
தாங்க்ஸ்ண்ணா!
:))))
2013 ல யாரு பிரதமரா வரலாம்னு ஒரு கேள்வி கேளுங்க. ஏன்னா 2013ல எப்படியாவது பிரதமர் ஆயிடனும்னு நான் முயற்சி செஞ்சுகிட்டு இருக்கேன்.
ஆதரவு கொடுத்தா திருப்பூர் தொகுதியும், ஜவுளித்துறை அமைச்சர் பதிவியும் தர்றேன்.
//பேச்சிலர்ஸ் நோட் பண்ணிக்கங்கப்பா//
நோட் பண்ணிக்கிட்டேன்!
இனி இதை மைண்ட்ல வைச்சுக்கிறேன்
தாங்க்ஸ்ண்ணா!
:))))
//
(மேல வலது மூலைல போய் ஓட்டுப் போட்டீங்களா இல்லையா?)
//
குசும்பனுக்காக இதுகூட செய்யலைன்னா எப்படி.... :P
சுதந்திர தின வாழ்த்துக்கள்...
உங்க வயச மறந்துட்டு உருவத்த மட்டும் வச்சிகிட்டு உங்கள மகா கேவலமான கெட்ட வார்த்தைகள்ல திட்டனும் போல இருக்கு.
இவ்ளோ அழகான அவியல்களை விட்டு ஒரேடியா கெலம்பறேன்னு அலப்பரை பண்ணீட்டிங்களே.. அவியல் அனைத்தும் அம்புட்டு அருமையா இருக்கு சாமி.
அண்ணிகிட்ட இனி அடிக்கடி டிப்ஸ் கேக்கனும். அப்புறமாவது எனக்கும் கல்யாண்ம்னு ஒரு சம்பிரதாயம் நடக்குதா பாக்கலாம்.:)
//
(மேல வலது மூலைல போய் ஓட்டுப் போட்டீங்களா இல்லையா?)//
இதில் மல்டி செலெக்ஷன் ஆப்ஷன் வைக்காத பரிசலாரை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆகவே வாக்கெடுப்பை புறக்கணிக்கிறேன்.:)
நம்ம மங்களூர் சிவா இல்லாம ஒரு தேர்தலா இது செல்லாது...
மங்களூர் சிவா said...
\\\
(மேல வலது மூலைல போய் ஓட்டுப் போட்டீங்களா இல்லையா?)
//
குசும்பனுக்காக இதுகூட செய்யலைன்னா எப்படி.... :P
\\\
குசும்பண்ணே இதை கட்டாயமா நம்புங்க...:)
@ விக்கி
நன்றி பின்னூட்ட சுனாமியே!
@ ஜெகதீசன்
//குசும்பனுக்காக இதுகூட செய்யலைன்னா எப்படி....//
அப்ப நேத்து குசும்பன் குடுத்த ஆதாரம் சரிதான்!
@ ஆயில்யன்
//நோட் பண்ணிக்கிட்டேன்!
இனி இதை மைண்ட்ல வைச்சுக்கிறேன் //
அவ்வ்வ்வ்வ்வ்
@ ஜோசப் பால்ராஜ்
//ஆதரவு கொடுத்தா திருப்பூர் தொகுதியும், ஜவுளித்துறை அமைச்சர் பதிவியும் தர்றேன்.//
நிஜமா முயற்சி பண்ணி பிரதமராகுங்க. எங்க குறைகளையெல்லாம் பதிவுலயே பகிரங்கக் கடிதமா போடறோம்!
ஹலோ.. சோசப்பூ.. எங்க ஓடறீங்க??
@ மங்களூர் சிவா
அதெப்படி எங்க போனாலும் முன்னாடி இருக்கற ரெண்டு மூணு கமெண்ட்டை உங்க பேர்ல போட்டுக்கறமாதிரி எதுனா சாஃப்ட்வேர் வெச்சிருக்கீங்களா?
@ தமிழன்
நன்றி. ஜெய்ஹிந்த்!
// சைட் அடிக்கணும்ன்னா ஆண் போனதுக்கப்புறம் பின்னாடி ஒரு பார்வை பார்த்துக்குவோம். அதனாலதான் பின்பக்கம் பார்த்து சொல்றேன்” //
பயனுள்ள தகவல்
//SanJai said...
உங்க வயச மறந்துட்டு உருவத்த மட்டும் வச்சிகிட்டு உங்கள மகா கேவலமான கெட்ட வார்த்தைகள்ல திட்டனும் போல இருக்கு.//
இன்று முதல் வாடா போடாவென்றல்ல எப்படி வேண்டுமானாலும் திட்டும் உரிமை உங்களுக்கு வழங்கப்படுகிறது!
//இவ்ளோ அழகான அவியல்களை விட்டு ஒரேடியா கெலம்பறேன்னு அலப்பரை பண்ணீட்டிங்களே.. அவியல் அனைத்தும் அம்புட்டு அருமையா இருக்கு சாமி.//
நன்றி!
//அண்ணிகிட்ட இனி அடிக்கடி டிப்ஸ் கேக்கனும். அப்புறமாவது எனக்கும் கல்யாண்ம்னு ஒரு சம்பிரதாயம் நடக்குதா பாக்கலாம்.:)//
சம்பிரதாயம் மட்டும்தான் நடக்கணுமா?
(மேல வலது மூலைல போய் ஓட்டுப் போட்டீங்களா இல்லையா?)//
இதில் மல்டி செலெக்ஷன் ஆப்ஷன் வைக்காத பரிசலாரை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆகவே வாக்கெடுப்பை புறக்கணிக்கிறேன்.//
வேணும்னேதான் வைக்கல. அப்பறம் கூட்டாச்சிதான். இந்த நாலுபேரும் சேர்ந்தா எப்படி இருக்கும்ன்னு நெனைச்சேன். கிர்ர்ர்ர்ர்ர்ர்ராயிடுச்சு!
// கார்த்திக் said...
// சைட் அடிக்கணும்ன்னா ஆண் போனதுக்கப்புறம் பின்னாடி ஒரு பார்வை பார்த்துக்குவோம். அதனாலதான் பின்பக்கம் பார்த்து சொல்றேன்” //
பயனுள்ள தகவல்//
இவ்ளோநாள் வலைப்பூ எழுதினதுல இப்போதான் ஒரு பயனுள்ள தகவலை சொல்லீருக்கேன்!
தொடர்ந்து கலக்குங்க...
உங்க சேவையும் தொடர வாழ்த்துக்கள்...
// சைட் அடிக்கணும்ன்னா ஆண் போனதுக்கப்புறம் பின்னாடி ஒரு பார்வை பார்த்துக்குவோம். அதனாலதான் பின்பக்கம் பார்த்து சொல்றேன்” //
அண்ணே! இதைத்தான் பெண் புத்தி பின் புத்தின்னாங்களோ?
இன்றைக்கு உங்களுடைய பதிவை போட்டுவிட்டீர்களா
அல்லது
உங்களுக்கான பதிவை போட்டுவிடீர்களா
ஒன்னும் புரியலையே
சுவையான அவியல்..
என்ன நீங்க .. எனக்கு வந்த கடிதங்கள்ன்னு தலைப்பிட்டு போடவேண்டிய ஒரு பதிவை அவியல்ல போட்டுட்டீங்க.. பெரிய மனுசங்கள்ளாம் அப்படித்தான் கடித்தத்தை போடறாங்களாம்..
>>வானம் மேலே. பூமி கீழே!
அதெல்லாம் டாஸ்மாக்குக் போறதுக்கு முந்தியா பிந்தியா?
சொதந்தர தென வாள்த்துக !!! இது மாதிரிதான் இருக்கு முட்ட கமிட்டி வெளம்பரமும் .... மொத இங்கிலிபீச்சுல எளுதி பொறவு மொளி பேத்தா இப்பிடித்தான் ...
நான் விளம்பர உலகில் இருந்தபோது இது போல் பல அனுபவங்கள் உண்டு .... பதிவா போடறேன் ..
அவியல் வழக்கம் போல ரொம்ப நல்லா இருந்தது, முக்கியமா சுதந்திரதின கொடியைப்பற்றிய தகவல்.
பெரியவர்களுக்கு கூட சின்ன குழந்தைகள் மாதிரி "மெமரி ட்ரிக்ஸ்" சொல்லிகொடுக்க வேண்டி இருக்கு.
இன்னிக்கு ரொம்பவே வெட்டி.... ஜகார்த்தாவுல ஏர்போர்ட்ல இன்னும் வெட்டியா இருந்துது... செரி ஒரு பதிவு போடுவோமென்னு போட்டாச்சு.... நீங்கதான் பதிவுல ஹீரோ.... ஹி ஹி
@ ச்சின்னப்பையன்
நன்றி! (சேவைக்கு அவியல் நல்ல காம்பினேஷனா...)
@ அப்துல்லா
//அண்ணே! இதைத்தான் பெண் புத்தி பின் புத்தின்னாங்களோ?//
அடடே! என்ன ஒரு சிந்தனை! புல்லரிக்குது!
/வால்பையன் said...
இன்றைக்கு உங்களுடைய பதிவை போட்டுவிட்டீர்களா
அல்லது
உங்களுக்கான பதிவை போட்டுவிடீர்களா
ஒன்னும் புரியலையே//
எப்படிப் புரியும்? கைல மிலிட்டரி ஃபுல் இருக்கும்போது?
@ தங்க தங்கச்சி (முத்தக்கா)
//பெரிய மனுசங்கள்ளாம் அப்படித்தான் கடித்தத்தை போடறாங்களாம்.//
அது பெரிய மனுசங்கதானே?
@யு.எஸ்.தமிழன் said...
>>வானம் மேலே. பூமி கீழே!
அதெல்லாம் டாஸ்மாக்குக் போறதுக்கு முந்தியா பிந்தியா?//
போனா அப்புறம் எனக்கு 25 ரூபா செலவாகும்!
(சரக்குக்கு அல்ல.. விளக்குமாறு வாங்க. பழசு பிஞ்சுடுமே!)
@ மகேஷ்
எனக்கு என் மகளை விளம்பர உலகில் (டெக்னிகல் விஷயங்களில்- டைரக்ஷன் வரை!)நுழைக்க ஆசை. எழுதுங்கள் ப்ளீஸ்!
@ கயல்விழி
ஆம்! எனக்கே பல ச்சின்னச்சின்ன விஷயங்கள் மறக்கும்!
உங்கள் பதிவை பார்த்தவுடன் சந்தோசபட்டேன்.
நீங்கள் சொல்லும் விளம்பரம் போல் இன்னும் சில விளம்பரங்கள் இருக்கின்றன.
ஹிந்தி இலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யும்போது இப்படி செய்கிறார்கள்
நானும் சில விளம்பரங்களை அப்புறம் எழுதுகிறேன்.இப்போ ஞாபகம் இல்லை.
கொடி position பற்றி சொல்லியிருந்த குறிப்பு எல்லோருக்கும் உதவும்.
நானும் ஓட்டுப்போட்டாச்சுங்க. அவியல் பிரமாதம்
//“முன் பக்கம் ஆம்பிளைங்கதான் பார்ப்பாங்க. அவங்க டேஸ்ட் உங்களுக்கு தெரியும். ஆனா பெண்கள் ஆண்களை நேருக்கு நேர் பார்க்கும்போது ஸ்ட்ரெய்ட்டா பேசீட்டு போய்டுவாங்க. சைட் அடிக்கணும்ன்னா ஆண் போனதுக்கப்புறம் பின்னாடி ஒரு பார்வை பார்த்துக்குவோம். அதனாலதான் பின்பக்கம் பார்த்து சொல்றேன்”
பேச்சிலர்ஸ் நோட் பண்ணிக்கங்கப்பா!//
Noted :-)
@ babu
சீக்கிரம் பதிவுல எழுதுங்க. எனக்கு இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்!
நன்றி சின்ன அம்மணி!
@ லக்கிலுக்
உங்களுக்கு இதெல்லாம் தேவைப்படாதுன்னு நெனைக்கறேன். ஆல்ரெடி யூ நோ லாட் ஆஃப் ஐடியாஸ்!
parisal pls visit here
https://www.blogger.com/comment.g?blogID=2515805102904586704&postID=4874629599415983851
உங்கள் பதிவு மேலும் பல வாசகர்களை சென்றடைய Tamilish.com தளத்தில் பகிரவும்
Mrs. Krishna அருமையான டிப்ஸ் கொடுத்திருக்காங்க. இந்த மாதிரி நிறைய டிப்ஸ் கொடுத்தா அவங்களுக்கு புண்ணியமா போகும்.
உண்மையச்சொல்லட்டுமா?
இன்றுதான் உங்கள் பதிவை புக்மார்க் செய்து விவரமாக படித்தேன்
“செவ்வானம், பசுமையான பூமின்னு ஞாபகம் வெச்சுக்கோங்க” என்றேன்.
வானம் மேலே. பூமி கீழே!
///////////////////
nanthri
(ஏற்கனவே பேசி வச்ச மாதிரி), என் முதல் அவார்டு உங்களுக்குத்தான்
http://surveysan.blogspot.com/2008/08/phelps.html
இதைப்படித்துப் பாருங்க....
http://scssundar.blogspot.com/2008/08/blog-post_18.html
வழக்கம் போல சுவையான அவியல்.
//வானம் மேலே. பூமி கீழே!//
நடுவில நாம வெள்ளை மனசோட இருப்போம்.
What happen to you Sir..?!
Post a Comment