Friday, August 29, 2008

அவியல் – 29.08.08

பின்னூட்டங்களில் குபீரென்று சிரிப்பை வரவைக்கும் விதமாக எழுதுவதில் குசும்பனுக்கும், மங்களூர் சிவாவுக்கும் கடும் போட்டியே நடக்கிறது. இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் பின்னூட்டப் போட்டி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்களிருவரின் பின்னூட்டங்களைத் தொகுத்தாலே, ஓரிரு மாதத்துக்கான பதிவுகளை தயார் செய்துவிட முடியும்! இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள் என்பதில் எனக்கு பெருமையோ பெருமை!


பின்னூட்டங்களைப் பற்றி குறிப்பிடும்போது நாம் கண்டிப்பாக நினைக்க வேண்டிய இன்னொருவர் rapp என்ற வெட்டியாபீசர்! எங்கே இவர்? பதிவின் நீளத்துக்கு இருக்கும் இவரது பின்னூட்டங்களுக்கு பதிவூட்டம் என்றே ஒருமுறை ஒரு பிரபலம் குறிப்பிட்டார் (நான்தான்.. ஹி...ஹி...) வெட்டியாய் இல்லாமல் பின்னூட்டங்களிலேயே ஆரோக்கியமாக விவாதமும் செய்து வந்தார். கும்மிகளிலும் சளைக்காமல் கலந்து கொள்வார். ஆணித்தரமாக தமது கருத்துக்களையும் சொல்வார். 31 ஜூலை 2008க்குப் பிறகு சொல்லாமல் கொள்ளாமல் ஆள் எங்கோ போய் விட்டார்! காணவில்லை என்று கிண்டலாக ஒரு பதிவு போடலாமா என்று கூட நினைத்தேன். மனசு கேட்கவில்லை. என்னமோ.. ஏதோ.


நானும் அவரும் ஒரே மாதத்தில்தான் (மே 08) பதிவுலகுக்கு வந்தோம். 28 பதிவுகள் போட்டார். அவற்றில் பல அருமையான பொருள் பொதிந்த பதிவுகள்தான். கடைசி சில பதிவுகளுக்கு தொடர்ந்து செஞ்சுரி பின்னூட்டங்கள் பெற்றார். ராப்.. எங்க இருக்கீங்க....? ப்ளீஸ் வந்து கல(ந்து)க்குங்க. பின்னூட்ட கும்மி இல்லீன்னாலும், அட்லீஸ்ட் வாரத்துக்கு ஒரு பதிவு போடுங்க!



நீங்க கவனிச்சிருக்கீங்களா? மதியம் நண்பர்களை, சக ஊழியர்களைப் பார்த்து சாப்பிட்டாச்சா? என்று கேட்போமில்லையா? ஆண்கள் அதோடு நிறுத்திக் கொள்வார்கள். ‘சாப்பிட்டாச்சு என்றால் பெண்கள் மட்டும் ‘என்ன சாம்பார், என்ன பொரியல் என்று விலாவாரியாக (விலாவாரி என்று ஏன் சொல்கிறார்கள்?) கேட்பார்கள். நான் என் தோழிகளிடம் “அதென்ன நீங்க மட்டும் சாப்பிட்டாச்சுன்னா விடாம, டீட்டெய்ல் எல்லாம் கேட்கறீங்க?என்று கேட்பதுண்டு. சென்றவாரம் இதற்கு ஒரு தோழி விடை கொடுத்தார்.


“அதொண்ணுமில்லண்ணா, நாங்க சமைச்சுட்டு வந்து அடுத்த நாள் என்ன கொழம்பு வைக்க, என்ன பொரியல் வைக்க-ன்னு மனசுல நினைச்சுட்டே இருப்போம். இந்தமாதிரி அடுத்தவங்ககிட்ட கேட்கறப்ப ஒரு ஐடியா வருமில்ல அதுக்குத்தான்என்றார். அப்படியா?


ஆகஸ்ட் மாதம் நிறைய விசேஷங்களோடு கடந்தது. ஆகஸ்ட் 17 வடகரை வேலன் மகள் பிறந்த தினம், ஆகஸ்ட் 20 தல யெஸ்.பாலபாரதி திருமணம், ஆக 22 என் திருமண நாள், அதே 22 மலேசியா விக்கியின் அன்னையின் பிறந்தநாள், 24 லக்கிலுக் பிறந்தநாள், 27 ச்சின்னப்பையன் செல்லப்பொண்ணு சஹானா பிறந்தநாள், அதே நாள் வெண்பூவின் செல்லக்குட்டி ஆதர்ஷ் பிறந்தநாள். (யாரோடதாவது விட்டுப் போயிருந்தா சொல்லுங்கப்பா, நோட் பண்ணிக்கறேன்...)


அதுமட்டுமன்று குசும்பனின் படைப்பும், எனது படைப்பும் ஜூ.வி-யில் வந்ததும் இந்த ஆகஸ்டின் விசேஷமே!



குமுதத்தில் சுஜாதா பொறுப்பாசிரியராயிருந்தபோது வெளிவந்த சில ஜோக்குகள் மறுபடி சுஜாதா நினைவை மனதில் தந்து வதைத்தது. கார்ட்டூனோடு ஒரு வரி மட்டுமே இருக்கும். படத்தைப் பார்த்தால்தான் நகைச்சுவை புரியும்.


காணாமல் போனவர்கள் என்ற கவுண்டரில் இருக்கும் ஆசாமியிடம் ஒருத்தன் சொல்லிக் கொண்டிருப்பான், “அடுத்த புதன் கிழமையிலிருந்து என் மனைவி காணாமப் போயிடுவான்னு நினைக்கறேன்என்று. படத்தில் அந்த ஆள் வலது கை முதுகுக்குப் பின்னால் கோடாரியிடன் இருக்கும்!


ஒருத்தன் தன் நண்பனிடம் “எங்கப்பா என்னைத் திட்டறாரா? ஏன்?என்று கேட்டுக் கொண்டிருப்பான். படத்தில் அவன் கையில் மதுக்கோப்பையும், கக்கத்தில் விஸ்கி பாட்டிலும், உதட்டில் புகையும் சிகரெட்டும், ஒரு கையால் ஒரு குஜிலியை அணைத்துக் கொண்டும் இருப்பான்!


ஒருத்தன் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருப்பான். ஸ்டூலை அப்போதுதான் தள்ளி விட்டிருப்பான். மனதிற்குள் நினைக்கிறான்.. “என் சாவுக்கு என் மனைவிதான் காரணம்னு எழுதி வைக்க மறந்துட்டேனே?


“உங்கள் கம்பெனியில் வாங்கிய பாராசூட் சரியாகத் திறக்கவில்லைஎன்று ஒருத்தன் பறந்தபடி புகார் கடிதம் எழுதிக் கொண்டிருப்பான். அவன் முதுகில் திறக்காத பாராசூட்!


மனைவி: (கோபமாக) என்னை ஒருத்தன் ஃபாலோ பண்ணிகிட்டே வந்தான்ங்க

கணவன்: (கூலாக) “ஏதாவது பைத்தியமாயிருக்கும். விடு


மிகவும் ஃபேமஸான இந்த ஜோக்கும் சுஜாதா பொறுப்பாசிரியராக இருந்தபோது வந்ததுதான்!


எப்பேர்ப்பட்ட மனுஷனை இழந்துவிட்டோம் நாம்! :-(



நானும் கிசுகிசு ட்ரை பண்ணட்டுமா?

மீன்தான் பேட்டரியாவா என்று அதிர்ஷ்டப்பார்வைக்காரர் திரி கொளுத்திய மர்மம் என்னவென்று வலையுலகமே அதிர்ந்து போயிருந்தது. திடீரென்று அதை வாபஸ் வாங்கிக் கொண்டதும் ஏனென்று யாருக்கும் புரியவில்லை! சந்தேகம் தீர்ந்ததா அதிர்ஷ்டப்பார்வைக்காரரே?



அவன்-அது=அவள் புத்தகம் ஆர். நாகப்பன் அவர்களுக்கு அனுப்பியாச்சு. (வந்துடுச்சா சார்?) புதுகைத் தென்றலுக்கு இன்றுஅனுப்பப்படும். அதிஷா இன்னும் முகவரி தராமலிருக்கிறார். அதை விக்னேஸ்வரனுக்கு அனுப்பச் சொன்னார். விக்கி... எங்கே உங்க முகவரி?


----------------------------


இந்த வாரம் முழுவதும் கரண்ட் கட் இப்படித்தான் என்றில்லாமல் வதைக்கிறது. இதோ, இந்த வரியை ஆரம்பிக்கும்போது இருக்கும் மின்சாரம் முடிக்கும் போது இருக்குமா என்பது நிச்சயமில்லை. இந்தத் தொல்லையாலேயே நேற்று முன் தினம் இரவு ஒன்றும் எழுத முடியவில்லை. நேற்று காலையும் திடீரென்று (இதோ இதை எழுத எழுத கரண்ட் போய்விட்டது! சத்தியமாக! ச்சே!) போய்விட்டது!


பதினைந்து நிமிடத்துக்குப் பிறகு இதோ கரண்ட் மீண்டும் வந்துவிட்டது. என்ன எழவு இது என்று புரியவேயில்லை! அதுவும் இரவு நேரங்களில் மகா கொடுமை!


************************************


வெகுநாட்களாயிற்று எங்கே இந்தக் கவிஞர்கள் எழுதி. இதோ இன்று நிமோஷினி

தரிசனம்


எனக்கு

எப்போதுமே

தட்டுப்படுவது

ஆராதனைத் தட்டு

சார்த்தின மாலைகள்

கம்பிகள் வயிற்றில் பதிய

எக்கினதில்

அர்ச்சகத் தொந்திகள்

பூணூல் பதிந்த

வியர்வை முதுகுகள்தான்.

ஒருமுறையேனும்

அம்மன் இல்லை

உன் முகம் தவிர்த்து..



55 comments:

SurveySan said...

//மனைவி: (கோபமாக) ”என்னை ஒருத்தன் ஃபாலோ பண்ணிகிட்டே வந்தான்ங்க”

கணவன்: (கூலாக) “ஏதாவது பைத்தியமாயிருக்கும். விடு”
//

:))))

Anonymous said...

நல்லா இருக்கு பரிசல்.

இந்த வரியைத் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்'

//என்ன எழவு இது என்று புரியவேயில்லை!//

இனிமேல் தயவு செய்து தவிர்க்கவும்.

கோவி.கண்ணன் said...

// வடகரை வேலன் said...
நல்லா இருக்கு பரிசல்.

இந்த வரியைத் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்'

//என்ன எழவு இது என்று புரியவேயில்லை!//

இனிமேல் தயவு செய்து தவிர்க்கவும்.
//

அண்ணாச்சி சொல்வதை வழிமொழிகிறேன்.

Athisha said...

@வேலன் & கோவி அண்ணன்

அண்ணா எழவு என்னும் சொல்லாடல் கோவை மாவட்டத்தில் சகஜமாக புழங்கும் ஒரு சொல் , கோவையில் பலரும் பேசும் போது ( தமாஷாக பேசும் போது ) அந்த வார்த்தையை தவிர்க்க முடியாமல் போவதை நான் கவனித்திருக்கிறேன் .

அது போல எழவு கருமாந்திரம் என்னும் வார்த்தைகளும் அதிகம் புழங்குவதை கோவையில் காணலாம்

Thamiz Priyan said...

அவியல் நல்லா வந்திருக்கு... கிசுகிசு புரியும் அளவுக்கு நாலெஜ் இல்லீங்ண்னா... ;)

விஜய் ஆனந்த் said...

// தமிழ் பிரியன் said...
அவியல் நல்லா வெந்திருக்கு... கிசுகிசு புரியும் அளவுக்கு நாலெஜ் இல்லீங்ண்னா... :-)).. //

ரிப்பீட்டேய்...

குட்டிபிசாசு said...

இது அவியல் இல்லை! ஆராய்ச்சிக் கட்டுரைங்கோ!

சரவணகுமரன் said...

ஆமாங்க... rapp'அ ரொம்ப நாளா காணும்... :-(

குமுதம் ஜோக்ஸ் சூப்பர். புத்தகத்தை படித்த உணர்வை கொடுத்தது... :-)

முரளிகண்ணன் said...

வழக்கம் போல சுவராசியம்.

லக்கிலுக் said...

அநியாயத்துக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்கள் பதிவுகளில் எனக்கு நிரடுவது தலைப்பு! தலைப்பு மட்டும் இன்னும் கொஞ்சம் கேச்சிங்கா வைங்க குருவே!

உதாரணத்துக்கு அவியல் என்று சொல்லுவதை விட பொறியல் என்று சொல்லும்போது கொஞ்சம் கெத்தா இருக்கில்லே :-)

பொங்கல் என்று சொல்லுவதற்கும் சிக்கன்65 என்று சொல்லுவதற்கும் இருக்கும் வித்தியாசம் தான் அவியலுக்கும் பொறியலுக்கும் இருக்கு.

உங்களோட அவியல் பதிவுகள் தனித்தனி தலைப்பில் வந்தா இன்னும் நல்லா இருக்கும் :-))))

ஆயில்யன் said...

//லக்கிலுக் said...
அநியாயத்துக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்கள் பதிவுகளில் எனக்கு நிரடுவது தலைப்பு! தலைப்பு மட்டும் இன்னும் கொஞ்சம் கேச்சிங்கா வைங்க குருவே!

உங்களோட அவியல் பதிவுகள் தனித்தனி தலைப்பில் வந்தா இன்னும் நல்லா இருக்கும் :-))))
//

ரிப்பிட்டேய்ய்ய்!


ஒரு அற்புதமான படைப்பாளி ஒரு தலைப்பிலேயே தன் படைப்புக்களை அடக்கி ஆள்வது சரியில்ல!

நீங்க இன்னும் நிறைய நிறைய தலைப்புகளில் கொஞ்சம் விளையாடி பாருங்க பரிசல் அண்ணா!

ஆயில்யன் said...

பின்னூட்டங்களில் உண்மையிலேயே குசுமபன் சிவா இவர்களின் பின்னூட்டங்கள் மிகவும் ரசிக்கவும் டக்கென்று சிரிக்கவும் வைக்கும் ரகங்கள்!

பதிவினை விட சில சமயங்களில் இவர்களின் பின்னூட்டங்கள் மிக சுவாரசியமாக விரும்பி படிக்கும் வகையிலும் இருக்கிறது :))))))))))

narsim said...

வந்தனம்.. "பரிசலான "பதிவு..(அப்படினாலே அருமையான பதிவுனு ஆகிப்போச்சு..)

சுஜாதா ஜோக்கில் மறக்க முடியாத இன்னொன்று..

"அப்பா இவன் மூக்கு கிளி மாதிரி இருக்குப்பா.."


"டேய்.. அங்கிள் மூக்குனு சொல்ல‌னும்"


ந‌ர்சிம்

பரிசல்காரன் said...

//லக்கிலுக் said...

அநியாயத்துக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது.//

நன்றி!


//உங்கள் பதிவுகளில் எனக்கு நிரடுவது தலைப்பு! தலைப்பு மட்டும் இன்னும் கொஞ்சம் கேச்சிங்கா வைங்க குருவே!//

குருவா? கிழிஞ்சது போங்க!

// உதாரணத்துக்கு அவியல் என்று சொல்லுவதை விட பொறியல் என்று சொல்லும்போது கொஞ்சம் கெத்தா இருக்கில்லே :-)//

அப்படியா? நான் யோசிக்கல தலைவா..

// பொங்கல் என்று சொல்லுவதற்கும் சிக்கன்65 என்று சொல்லுவதற்கும் இருக்கும் வித்தியாசம் தான் அவியலுக்கும் பொறியலுக்கும் இருக்கு.//

நாம பொங்கல் பார்ட்டிதானே.. அதுனாலயா இருக்கும்..


//உங்களோட அவியல் பதிவுகள் தனித்தனி தலைப்பில் வந்தா இன்னும் நல்லா இருக்கும் :-))))//

பண்ணீட்டா போச்சு!

பரிசல்காரன் said...

நன்றி சர்வேசன், வேலன் & கோவி. கண்ணன்

@ அதிஷா

அப்பதான் கரெண்ட் வந்துட்டு வந்துட்டு போய்ட்டிருந்தது. அந்த எரிச்சல்ல எழுதினது. விட்டுடுங்க.

//தமிழ் பிரியன் said...

அவியல் நல்லா வந்திருக்கு... கிசுகிசு புரியும் அளவுக்கு நாலெஜ் இல்லீங்ண்னா... ;)//

:-)

பரிசல்காரன் said...

நன்றி விஜய் ஆனந்த்!

//குட்டிபிசாசு said...

இது அவியல் இல்லை! ஆராய்ச்சிக் கட்டுரைங்கோ!//

முதல் வருகைக்கு நன்றி பிசாசே!

இப்போதான் உங்க பதிவுகளைப் படிச்சேன். சுவாரஸ்யமா இருக்குங்க!

பரிசல்காரன் said...

நன்றி சரவணகுமரன் & முரளி கண்ணன்

நன்றி ஆயில்யன்!

// narsim said...

வந்தனம்.. "பரிசலான "பதிவு..(அப்படினாலே அருமையான பதிவுனு ஆகிப்போச்சு..)//

நக்கலுக்கு நன்றி!

நன்றி சென்ஷி!!

narsim said...

// narsim said...

வந்தனம்.. "பரிசலான "பதிவு..(அப்படினாலே அருமையான பதிவுனு ஆகிப்போச்சு..)//

//நக்கலுக்கு நன்றி!//

மிகுந்த ரசிப்போடு எழுதப்பட்ட வார்த்தைகள் அது(பரிசலான பதிவு)..
ந‌க்க‌ல்னு சொல்லிட்டீங்க‌ளே..

ந‌ர்சிம்

மங்களூர் சிவா said...

/
பின்னூட்டங்களில் குபீரென்று சிரிப்பை வரவைக்கும் விதமாக எழுதுவதில் குசும்பனுக்கும், மங்களூர் சிவாவுக்கும் கடும் போட்டியே நடக்கிறது.
/

குசும்பனுக்கு நான் போட்டியா என்னய்யா இது மலை எங்க மடு எங்க!?!?

மங்களூர் சிவா said...

வெட்டி ஆப்பீசர் அப்ஸ்காண்ட் ஆகீட்டாங்க வருத்தம்தான் !

மங்களூர் சிவா said...

அவியல் நல்ல காம்பினேஷன்! தூள்!

anujanya said...

'அவியல்' செய்யும்போது மட்டும் கூடுதல் சுவை வருகிறது. லக்கி சொல்வதுபோல் தலைப்பை மாற்றினாலும் அடைப்புக்குறியுள் 'அவியல் அல்லது சிக்கன் 65' என்று போட்டுவிடவும்.

இரண்டு கே.கே. வையும் கொஞ்சம் கலாய்த்திருக்கிறேன். அந்தப் பக்கம் வரவேண்டாம்.

அனுஜன்யா

தமிழன்-கறுப்பி... said...

அவியல் நல்லாருக்கு...

தமிழன்-கறுப்பி... said...

\
பின்னூட்டங்களில் குபீரென்று சிரிப்பை வரவைக்கும் விதமாக எழுதுவதில் குசும்பனுக்கும், மங்களூர் சிவாவுக்கும் கடும் போட்டியே நடக்கிறது.
\
உண்மைதான் முன்பெல்லாம் சென்ஷியும் இன்னும் சிலரும்...

தமிழன்-கறுப்பி... said...

எனக்கும் பதிவுகளை விட பின்னூட்டங்கள் படிப்பதில்தான் விருப்பம் அதிகம் இருக்கிறது...

தமிழன்-கறுப்பி... said...

\
ராப்.. எங்க இருக்கீங்க....? ப்ளீஸ் வந்து கல(ந்து)க்குங்க. பின்னூட்ட கும்மி இல்லீன்னாலும், அட்லீஸ்ட் வாரத்துக்கு ஒரு பதிவு போடுங்க!
\
ஆமா கொஞ்ச நாள் பரபரப்பா இருந்தாரு அப்புறம்...

தமிழன்-கறுப்பி... said...

மங்களூர் சிவா said...
/
பின்னூட்டங்களில் குபீரென்று சிரிப்பை வரவைக்கும் விதமாக எழுதுவதில் குசும்பனுக்கும், மங்களூர் சிவாவுக்கும் கடும் போட்டியே நடக்கிறது.
/

குசும்பனுக்கு நான் போட்டியா என்னய்யா இது மலை எங்க மடு எங்க!?!?
\\\

இது குசும்பனுக்கு எடுத்து கொடுக்கும் அடி...:))

தமிழன்-கறுப்பி... said...

\
வெகுநாட்களாயிற்று ‘எங்கே இந்தக் கவிஞர்கள்’ எழுதி.
\

ஆமா ஆமா... :)
ஒவ்வொரு அவியலிலும் எழுதப்பாருங்க...

போக்கிலி ராஜா said...

லக்கி, அது பொறியலா, பொரியலா? பிச்சுப்புடுவேன் பிச்சு.

தமிழன்-கறுப்பி... said...

\
சுஜாதா பொறுப்பாசிரியராக இருந்தபோது வந்ததுதான்!
எப்பேர்ப்பட்ட மனுஷனை இழந்துவிட்டோம் நாம்! :-(
\
நிச்சயமாய்...;

எழுதிக்கொண்டே இருந்த ஒருவர் அவர்...அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்...

போக்கிலி ராஜா said...

எழவு வார்த்தையைத் தவிர்க்க வேண்டுமா? நல்லது, தமிழ் வளரும். அதற்கு பதிலா டெத்து என்று என்றெழுதலாமா? ஏன்யா வார்த்தைக்கு பயப்படுறீங்க? இப்பிடியே தான ஏகப்பட்ட வார்த்தைகளைக் காவு குடுத்தீங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

rapp leave ல போயிருக்காங்கன்னு தெரியும் ஆனா எப்பவருவாங்கன்னு தெரியல....

போக்கிலி ராஜா said...

//உதாரணத்துக்கு அவியல் என்று சொல்லுவதை விட பொறியல் என்று சொல்லும்போது கொஞ்சம் கெத்தா இருக்கில்லே//

தம்பிக்கு எந்த ஊரு..? கேவலம் லட்சாதிபதியே ஒரு கொத்தவரங்காய்ப் பொரியல் வைத்துவிட முடியும். அவியல் செய்ய கோடீஸ்வரனாக இருக்கணுமப்போவ்...

பரிசல்காரன் said...

@ மங்களூர் சிவா

//குசும்பனுக்கு நான் போட்டியா என்னய்யா இது மலை எங்க மடு எங்க!?!//

எதுக்காக இப்ப குசும்பனை திட்டறீங்க?

@ அனுஜன்யா

//லக்கி சொல்வதுபோல் தலைப்பை மாற்றினாலும் அடைப்புக்குறியுள் 'அவியல் அல்லது சிக்கன் 65' என்று போட்டுவிடவும். //

சரி!

உங்க வீட்டுக்கு வந்து கைநனைச்சுட்டு வந்துட்டேன்!

@ தமிழன்

கருத்துக்கு நன்றி!

கார்க்கிபவா said...

அருமை பரிசல்...எனக்கென்னவோ கலந்து கட்டி கொடுப்பதால் அவியல் தான் சரி என்று தோண்றுகிறது..இருந்தாலும் லக்கி சொன்னால் வேறு ஏதாவது காரணம் இருக்குமோ?

பரிசல்காரன் said...

@ விடமாட்டம்ல

விட்டுடுங்க ப்ளீஸ்!

@ முத்துலெட்சுமி

தகவலுக்கு நன்றி!

பரிசல்காரன் said...

//கார்க்கி said...

அருமை பரிசல்...எனக்கென்னவோ கலந்து கட்டி கொடுப்பதால் அவியல் தான் சரி என்று தோண்றுகிறது..இருந்தாலும் லக்கி சொன்னால் வேறு ஏதாவது காரணம் இருக்குமோ?//

நல்லாயிருக்கு. கூட்டம் கூடணும்ல. அதுக்காக தலை அப்படிச் சொன்னாரு!

pudugaithendral said...

பெண்கள் மட்டும் ‘என்ன சாம்பார், என்ன பொரியல்’ என்று விலாவாரியாக கேட்பார்கள்//

நான் அப்படி கேட்க காரணம் ஒன்றுதான். இந்த வலைத்தளத்தில் நான் சாட்டும் நண்பர்கள்/தம்பிகள்
முக்கால் வாசி பேர் forced bachelors/ bachelors.

தன்னை சாப்பிட்டாயா என்று கேட்கக்கூட ஆள் இல்லாமல் இருக்கோமே என்கின்ற நினைப்பு வரக்கூடாது என்பதற்காக விலாவாரியாக (எனக்கு இதற்கு அர்த்தம் தெரியாது) கேட்பேன்.

அவர்கள் வயிராற உண்டார்கள் என்று அறிதலில் ஒரு நிம்மதி.

என் தம்பியும் தனியே வெளிநாட்டில் இருக்கிறானே.

பரிசல்காரன் said...

//அவர்கள் வயிராற உண்டார்கள் என்று அறிதலில் ஒரு நிம்மதி//

கிரேட்!

VIKNESHWARAN ADAKKALAM said...

வந்துட்டேன்....

VIKNESHWARAN ADAKKALAM said...

அண்ணா மன்னிச்சிக்கோங்கோ...

VIKNESHWARAN ADAKKALAM said...

அனுப்பிட்டேன்...

VIKNESHWARAN ADAKKALAM said...

தாமதத் திற்கு மன்னிக்கனும்...

VIKNESHWARAN ADAKKALAM said...

//கேட்கறப்ப ஒரு ஐடியா வருமில்ல அதுக்குத்தான்//

அவுங்களுக்கு சமைக்க ஐடியா கிடைச்ச மாதிரி உங்களுக்கு பதிவெழுத கிடைச்சிருக்கு...

VIKNESHWARAN ADAKKALAM said...

அம்மாவின் பிறந்த நாளை ஞாபகம் வைத்துச் சொன்னதிற்கு நன்றி.

ரா.நாகப்பன் said...

அன்பு நண்பருக்கு,
தாங்கள் அனுப்பிய புத்தகம் கிடைத்தது. பெற்றுக்கொண்டேன்.
மடல் இட கொஞ்சம் தாமதமாகிவிட்டது மன்னிக்கவும். பின்னூட்டத்திலேயே தெரிவித்து விடுகிறேன்.
தங்கள் பதிவு சூப்பர்.
வேறென்ன இருக்கிறது சிறப்பாய் சொல்ல... இருந்தாலும் சொல்லிவிடுகிறேன்.....

"உங்கள் பரிசலுக்கு ஏதுங்க விரிசல்"....

ஈரமண்ணின் நேசத்துடன்,
ஆர்.நாகப்பன்.

பரிசல்காரன் said...

வறுத்தெடுத்ததற்கு நன்றி விக்கி!

@ ஆர். நாகப்பன்

பகிரங்க மடலுக்கு நன்றி!

//"உங்கள் பரிசலுக்கு ஏதுங்க விரிசல்"..//

ஆஹா! கொன்னுட்டீங்க!

Kumky said...

ரசிக உள்ளங்கள் கோபித்துக்கொள்ளாமல் இருப்பார்களாக..
பரிசல் தயவு செய்து வாரம் ஒரு சீரியசான பதிவு ஒன்ரேனும் போடக்கூடாதா?
(இத வச்சு நம்மள தாளிச்சுப்பிடாதீங்க சாமி.. நானே புச்சு)

Thamira said...

மீ த லேட்டு.!

ஹல்லோ, நானும் மே"லதான் பதிவுலகத்துக்கு வந்தேன்ங்க.. மேலும் 'ராப்' பையும் தேடிட்டிருக்கேன். (அப்துலை கேக்கலாமானு நினைச்சுகிட்டிருந்தேன்)
ஜூவியில் உங்க படைப்பைப்பார்த்தேன், குசும்பனோடது? யாரும் சொல்லவேயில்லையேப்பா.. கிசுகிசு (ரகசியம் யார்கிட்ட? அப்பிடினு கவுண்டமணி, கிரேஸி ஜோக் இருக்கில்ல, ஞாபகப்படுத்திக்கொள்ளவும்) யார்கிட்ட என்னிடமா? விளங்கிரும். (சூப்பரான ஸ்டார் நடிகர் ஒருவர் ஜென்டில்மேன் இயக்குனரின் இயக்கத்தில் நடித்த 'ந‌டிகர்திலகம்' படம் வெற்றி : இந்த கிசுகிசுவை என்னிடம் சொன்னாலும் யாரது அவ்வளவு ஜென்டிலான டைரக்டர்னு யோசிச்சிட்டிருப்பேன்).

பதிலுக்கு பதில் போட்டேன் பாத்தீங்களா?

புதுகை.அப்துல்லா said...

மீ த டூ லேட்டு

புதுகை.அப்துல்லா said...

என் மகள் பிறந்த நாள் 31 ஆகத்து :)

சென்ஷி said...

ஆகஸ்ட் மாசத்துல தான் இந்தியாவுக்கும் சுதந்திரம் கிடைச்சதாமே அது உண்மையா :)

சின்னப் பையன் said...

ராப் லீவ் லெட்டர் குடுத்தாங்க... ஆனா அப்புறம் காணவேயில்லை.....

சின்னப் பையன் said...

ஜோக்ஸ், கவிதை சூப்பர்.....

ராமலக்ஷ்மி said...

ஜோக்குகள் அனைத்தும் அருமை. பொதுவாகவே சுஜாதாவின் எழுத்துக்களில் எப்போதும் நகைச் சுவை இழையோடியிருக்கும். அவர் பொறுப்பாசியராக இருந்த சமயத்தில் வந்தவை இப்படி மிளிரா விட்டால்தான் வியப்பு. மீ த டூ டூ லேட்தான். ஆனாலும் படித்து விட்டேன் அன்றே. உடன் எழூத நேரம் கிடைக்கவில்லையெனில் திரும்ப வந்து எழுதுவது வழக்கமே.
'ஆமாங்க எங்க rapp?' என நான் வந்து கேட்பதற்குள் அவரே வந்து விட்டதில் மகிழ்ச்சி:)!