Saturday, August 2, 2008

குசேலன் - லக்கிலுக் அப்படி எழுதியது சரியா?

லக்கிலுக் நேற்று எழுதிய குசேலன் விமர்சனம் படித்தேன். ஒரு ரஜினி ரசிகனாக எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவரது எல்லா பதிவுகளுக்கும் குருதட்சிணையாய் ஒரு பின்னூட்டம் போடும் நான், அதற்கு ஒரு பின்னூட்டமும் போடாமல் திரும்பி விட்டேன்.


என்னதான் ஒரு படம் நன்றாக இல்லையென்றாலும் இப்படியா போட்டு வறுத்தெடுப்பது? `இந்தப் படத்தில் லாஜிக் பார்த்தால் நரகத்தில் கூட இடம் கிடைக்காது, வடிவேலுவின் காமெடி கேவலம்’ என்று துவங்கி படத்தைக் கிழி, கிழியென்று கிழித்துவிட்டார்! அப்படி அந்தப் படத்தில் ஒரு நல்லவிஷயம் கூடவா மனதாரப் பாராட்டும்படி இல்லை? என்ன இருந்தாலும் லக்கிலுக் கமலுக்கென்று வலைப்பூ நடத்தும், கமல் ரசிகரல்லவா?

இப்படியெல்லாம்தான் நினைத்தேன், நேற்றிரவு படம் பார்க்கும் வரை. பார்த்தபிறகு லக்கிலுக் நாகரிகம் கருதி அடக்கி வாசித்திருக்கிறார் என்று புரிந்தது! படம் மரணக்குப்பை!

ரஜினி கால்ஷீட்டை இப்படி ஒரு டைரக்டர் வேஸ்ட் செய்ய வேண்டுமா? கடவுளே... இந்த லட்சணத்தில் நான் மனைவி குழந்தைகளோடு படத்துக்கு போனேன்!

திருப்பூரில் என்ன படம் போட்டாலும் முதல் நாள் கூட்டம் அள்ளும். அதுவும் ரஜினி படமென்றால் கேட்கவேண்டுமா? ஆனால், நேற்றிரவுக் காட்சிக்கு உள்ளே போனபோது, தியேட்டர் பாதிதான் கூட்டம் இருந்தது. படம் ஆரம்பிக்க, ஆரம்பிக்கத்தான் மக்கள் வர ஆரம்பித்தார்கள். யாரிடமும் ஒரு சந்தோஷமோ, துள்ளலோ இல்லை. அவ்வளவு அமைதியாக தியேட்டர் இருந்தது. அப்பவே நான் சுதாரிச்சிருக்கணும்.


டைட்டில் மீயூசிக் கொடுமை! ஆரம்பித்துலேயே எழவு வீட்டுக்குள்ள போனமாதிரி ஒரு ஸ்லோ மியூசிக்! படம் பார்க்க வந்திருந்தவங்ககிட்ட இருந்த கொஞ்ச நஞ்ச சந்தோஷத்தையும் அந்த டைட்டில் மியூசிக் கொன்னுடுச்சு.

மீனா நல்ல குடும்ப ஃபிகராத் தெரியறாங்க. அவங்களைப் பாக்கறப்ப வறுமை கண்ணுல தெரியவே இல்ல! அவங்க கூட பேசற (கிணற்றடி சீன்) மத்தவங்ககிட்ட இருக்கற வறுமை, மீனாகிட்ட தென்படல.

ஒரு பாட்டுல எல்லாரும் ரஜினி மாஸ்க் போட்டிருக்காங்க. இத விட கேவலமான ரஜினி மாஸ்க்கை நான் பார்த்ததே இல்லை.

சொந்தப் பொண்டாட்டி எக்சர்சைஸ் பண்றத வடிவேலு ஒளிஞ்சிருந்து பாக்கறாரு. பின்னாடி ஊரே பாக்குது. அப்ப வடிவேலுவை திட்டற மனோபாலாகிட்ட `நீயும் என் பொண்டாட்டியை சைட்டடி, அதான் நானே அனுமதி தர்றேன்’ல அப்படீங்கறாரு. நயன்தாரா மேக்கப் போடறதையும், கண்ணாடி முன்னாடி மார்பகங்களை சரி செஞ்சுக்கறதையும் வடிவேலு ஒளிஞ்சு பாக்கறாரு. (அப்ப வர்ற இசை, அசல் ஷகீலா சீன் பட இசையை வேற ஞாபகப்படுத்துது!) ‘ஒம்பதாவது அதிசயத்தைப் பாக்கறியா’ன்னு லிவிங்ஸ்டன் வேட்டியத் தூக்கிக் காட்டறாரு. அடுத்ததா பி.வாசு ஷகீலா கால்ஷீட்டை ரெடி பண்ணி வெச்சுக்கலாம்.

சந்திரமுகியை வேற கொன்னிருக்காரு. ஒரு சீன்ல, விட்டலாச்சார்யா வேலை எல்லாம் காட்டி... ச்சே! கொடுமை! என் பொண்ணு `ஏம்ப்பா சந்திரமுகியை இப்படி கிண்டல் பண்றாங்க’ன்னு கேட்டப்போ எனக்கு பதிலே சொல்ல முடியல.

இந்தப் படம் பார்க்கப் போயி, உனக்கு நல்லதாவே ஒண்ணும் படலியா-ன்னு கேக்கறவங்களுக்கு...

நான் விளம்பரங்களை ரொம்ப ரசிக்கறவன். ஆரம்பத்துல போடற ப்ரமீட்-சாய்மீரா விளம்பரம் நல்லாயிருந்தது.

கவிதாலயா பேனர் காட்டறப்ப `அகர முதல எழுத்தெல்லாம்’ன்னு வர்ற தலைவர் இளையராஜா குரல் பழைய ஞாபகங்களை மீட்டுது!

இடைவேளைல `சரோஜா’ பட ட்ரெய்லர் போட்டாங்க. நல்லா இருந்தது. பிரகாஷ்ராஜ், ஜெயராமெல்லாம் இருக்காங்க. பசங்க வித்தியாசமா ஏதோ பண்றாங்கடோய்ன்னு தோணுது. கண்டிப்பா பாக்கணும்.

குசேலன் படத்தைப் பத்தி:-

படத்துக்கு நடுவுல முன்னாடி உக்கார்ந்திருந்த ஒரு ச்சின்னப் பொண்ணு `டாய்லெட்’ போகணும்ன்னா. அம்மா, ‘வீட்ல கிளம்பும்போதே போ’ன்னு சொன்னேன்ல’ அப்படீன்னு திட்டீட்டு பயந்துட்டே அவங்க புருஷன்கிட்ட ‘ஏங்க, பொண்ணுக்கு டாய்லெட் வருதாம்’ ன்னாங்க. அவரு உடனே ரொம்ப கனிவா “வாம்மா”ன்னு பொண்ணைக் கூட்டீட்டு வெளில போனாரு. திரும்பி வந்தப்ப அந்தம்மா `வழக்கமா கோவப்படுவீங்களே’ன்னு கேட்டதுக்கு அவரு சொன்னாரு... `இந்தப் படத்தை பாக்கறதுக்கு கக்கூஸ்ல போய் உக்கார்ந்துக்கலாம்’

என் நண்பனொருத்தன் `படத்துல கடைசீல நான் அழுதுட்டேண்டா’ ன்னான். நான் ஆரம்பத்திலேர்ந்தே அழுதுட்டிருந்தேன். ஏண்டா வந்தோம்ன்னு.

ரஜினி தமிழர்களுக்காகத்தான் கன்னடர்கள்கிட்ட மன்னிப்பு கேட்டிருக்காரு. தமிழர்களுக்கெதிரா போராடற அவங்களுக்கு இந்தப் படத்தை பார்க்க வைக்கறதவிட பெரிய தண்டனை குடுத்துட முடியாது! சாவட்டும்!

*****

பி.கு: 1:- `ஏண்டா தலைப்பு இப்படீ'ன்னு கேக்கறவங்களுக்கு.. இன்னைய தேதில பதிவு ஹிட்டடிக்க நாலு மேட்டர்ல எதாவது தலைப்புல இருக்கணும்.
1.தமிழ்மணம்
2.ஜே.கே. ரித்தீஷ்
3.யெஸ்.பாலபாரதி
4.லக்கிலுக்

அதான் இப்படி...

பி.கு: 2:- தசாவதார விமர்சனதுல நான் போட்ட அதே டிஸ்கிதான்.. `நான் அக்மார்க் சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகன்!’ இப்ப வரைக்கும் அதுல மாற்றமில்லை!

47 comments:

முரளிகண்ணன் said...

\\ `இந்தப் படத்தை பாக்கறதுக்கு கக்கூஸ்ல போய் உக்கார்ந்துக்கலாம்’

\\

பரிசல் டச்

Anonymous said...

ஷாருக்கானும் இதே போல நட்பின் சிறப்பை வைத்து ஒரு படம் எடுத்துள்ளார். இந்த சமயத்துல குசேலன் ரிலீசானா, தன்னோட படம் அடிவாங்கும்னு, ரீலீசத் தள்ளிப் போடச் சொல்லி ரஜினிகிட்ட கேட்டிருக்கார் ஷாருக் கான்.

இந்த ரிசல்டுக்காக அவர்தான் முதல்ல சந்தோஷப் படுவார்னு தோனுது.

புதுகை.அப்துல்லா said...

இந்த லட்சணத்தில் நான் மனைவி குழந்தைகளோடு படத்துக்கு போனேன்!

//
அண்ணே! உங்கள கட்டிக்கிட்ட தண்டனை போதாதுன்னு அண்ணிக்கு இது வேறயா?

லக்கிலுக் said...

//என்ன இருந்தாலும் லக்கிலுக் கமலுக்கென்று வலைப்பூ நடத்தும், கமல் ரசிகரல்லவா?//

கமலையும் பிடிக்கும், ரஜினியையும் பிடிக்கும் பரிசல்!

ரஜினியின் மாஸை ரசிக்க முடியாதவனுக்கு கண்ணும், காதும் இருந்து பிரயோசனமில்லை என்பது என் கருத்து. சிவாஜி படத்தை பலர் மட்டரகமாக விமர்சித்தபோதும் ஆகோ, ஓகோவென புகழ்ந்து தான் எழுதினேன். அதுபோல குசேலனை புகழமுடியவில்லையே என்பது வருத்தம் தான் :-(

Thamira said...

//லக்கிலுக் நாகரிகம் கருதி அடக்கி வாசித்திருக்கிறார் //
//`இந்தப் படத்தை பாக்கறதுக்கு கக்கூஸ்ல போய் உக்கார்ந்துக்கலாம்’//
வாசுன்னாவே எதிர்பாத்த‌துதான்.. ஆனாலும் இந்த‌ த‌ட‌வை கொஞ்ச‌ம் ஓவ‌ர்ங்க‌ற‌து தெளிவா புரிய‌து. அனுதாப‌ங்க‌ள் ப‌ரிச‌ல்!
//தமிழர்களுக்கெதிரா போராடற அவங்களுக்கு இந்தப் படத்தை பார்க்க வைக்கறதவிட பெரிய தண்டனை குடுத்துட முடியாது! சாவட்டும்//
ர‌ஜினியின் ந‌ல்லெண்ண‌த்தை இப்போவாவ‌து நீங்க‌ள் புரிந்துகொள்ள‌வேண்டும்.
எப்ப‌டி திட்ட‌மிட்டு ப‌ழிவாங்கியுள்ளார் என்ப‌தை நினைத்து ஒவ்வொரு த‌மிழ‌னும் ம‌கிழ‌வேண்டும்.

வெண்பூ said...

சூப்பர் பரிசல்.. இதுக்காகத்தான் நான் எந்த படத்தையும் அதுபத்தி விமர்சனங்கள் வந்த பிறகு படம் நன்றாக இருக்கிறது என்று உறுதி படுத்தியபிறகே செல்வேன். இந்த படத்தைப் பார்ப்பதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்துள்ளதால் பாதிப்பில்லை.

//இந்தப் படத்தை பாக்கறதுக்கு கக்கூஸ்ல போய் உக்கார்ந்துக்கலாம்’
//

//
என் நண்பனொருத்தன் `படத்துல கடைசீல நான் அழுதுட்டேண்டா’ ன்னான். நான் ஆரம்பத்திலேர்ந்தே அழுதுட்டிருந்தேன். ஏண்டா வந்தோம்ன்னு.
//

படிச்சி முடிச்சவுடனே கண்ணுல தண்ணி, அழுகையில்ல, சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துடுச்சி.. கலக்குங்க.

Thamira said...

நேத்து ஆடித்தள்ளுபடியில சேலை எடுத்துட்டு தங்கமணியோடு பைக்கில் திருவான்மியூர் வழியா வரும் போதே தியாகராஜா தியேட்டர் வழியா வரலாமானு யோசிச்சுகினே வந்தேன்.(சும்மாவே புதுப்படம்னா 6 மணிக்கு அந்த இடத்த கிராஸ் பண்ண முடியாது. ரஜினி படம்னா கேட்கவே வேண்டாம்). இருப்பினும் தைரியமாக வந்துவிட்டேன். பாத்தால் ஒரு நாதிய காங்கலை. அப்பவே மைல்டா ஒரு டவுட் வந்துது.

பரிசல்காரன் said...

@ முரளிகண்ணன்

நன்றி. இப்போதான் உங்க பதிவுல வந்து எழுதீட்டேன், படிச்செட்டு சொல்லுங்க'ன்னு சொல்லலாம்ன்னு பார்த்தேன். நீங்களா வந்திருக்கீஞ்க. அதுவும் முதல்ல! மகிழ்ச்சியா இருந்தது!

//\\ `இந்தப் படத்தை பாக்கறதுக்கு கக்கூஸ்ல போய் உக்கார்ந்துக்கலாம்’

\\

பரிசல் டச்//

அதெப்படி கரெக்டா அது நான் சொன்னதுன்னு கண்டுகிட்டீங்க! ஆமா, அந்தப் பொண்ணு எம் பொண்ணுதான். அந்தக் கமெண்டைச் சொன்னது நாந்தான்! ஹி..ஹி..


@ வேலண்ணா

ஆமாங்க!

@ அப்துல்லா

இத உமா வெளில சொல்லல. ஆனா நெனச்சிருப்பாங்க!

@ லக்கிலுக்

போட்ட கொக்கில சிக்கீட்டீங்கள்ல?

//கமலையும் பிடிக்கும், ரஜினியையும் பிடிக்கும் பரிசல்!//

நானும் டிட்டோ!

பேர் முதல் கொண்டு பல ரசனைகளில் என்னைப் போலவே இருப்பதால்தான் உங்களை என் `குரு'வாக அப்பாய்ன்மெண்ட் செய்திருக்கிறேன்!

//குசேலனை புகழமுடியவில்லையே என்பது வருத்தம் தான்/

எனக்கும்!

@ தாமிரா

//அனுதாப‌ங்க‌ள் ப‌ரிச‌ல்!//

படம் பாத்தவங்க எல்லாம் கூப்ப்ட்டு எழவு விசாரிக்கறாங்க!

பரிசல்காரன் said...

@ வெண்பூ

//நான் எந்த படத்தையும் அதுபத்தி விமர்சனங்கள் வந்த பிறகு படம் நன்றாக இருக்கிறது என்று உறுதி படுத்தியபிறகே செல்வேன்//

நான் நேரதிர். ஏதாவது கேள்விப்படுமுன் பார்த்துவிட நினைப்பேன். அப்பதான் நம்ம வ்யூ எப்படின்னு நாமளே சீர் தூக்கிப் பார்த்துக்க முடியும்ங்கறதால.

//படிச்சி முடிச்சவுடனே கண்ணுல தண்ணி, அழுகையில்ல, சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துடுச்சி.. கலக்குங்க.//

எனக்கு படம் பார்த்துட்டமேன்னுதான் அழுகை வந்துடுச்சு!

@ தாமிரா

நானும் பல தியேட்டர்ல இந்த நிலையைப் பார்த்தேன். இங்க திருப்பூர்ல ஆடி 18க்கு 2 நாள் லீவுங்கறதால பலபேர் சொந்த ஊர்ருக்குப் போறதால கூட்டம் இல்லைன்னு நெனைச்சேன்! அங்கயும் அப்படியா!

லக்கிலுக் said...

//பேர் முதல் கொண்டு பல ரசனைகளில் என்னைப் போலவே இருப்பதால்தான் உங்களை என் `குரு'வாக அப்பாய்ன்மெண்ட் செய்திருக்கிறேன்!//

அண்ணே! இதெல்லாம் நெம்ப ஓவரு! :-)

இப்போவெல்லாம் ரொம்பவை நெம்ப என்றுதான் சொல்கிறேன். அங்கிள் லதானந்த் பாதிப்பு :-)

வந்தியத்தேவன் said...

ஒரு பத்திரிகை ஆபிசில்
சினிமா நிருபர் ஆசிரியரிடம்

நிருபர் : சார் இந்த வாரம் குசேலன் விமர்சனம் எழுதவேண்டும்?
ஆசிரியர் : ஓக்கே ஏதாவது தியேட்டரில் படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் எழுது.
நிருபர் (தலையைச் சொறிந்தபடி) : படம் பயங்கர மொக்கையாம்? பார்த்தவங்கள் கீழ்ப்பாக்கத்தில் அலைகிறார்களாம்.
ஆசிரியர் : (மனதிற்க்குள்) பி,வாசு படம்லே அப்படித்தான் இருக்கும், (நிருப‌ருக்கு) க‌தை ப‌றையும் விம‌ர்ச‌னம் இருக்கெல்லோ அதில் ம‌ம்முட்டி இட‌த்தில் ர‌ஜ‌னியைப்போட்டு விட்டு விம‌ர்ச‌ன‌த்தை எழுது. ர‌ஜ‌னிக்கு எதிராக‌ விம‌ர்ச‌ன‌ம் எழுதினால் பத்திரிகை விற்க‌முடியாது.
த‌ப்பினேன் பிழைத்தேன் என‌ நிருப‌ர் ஓட்ட‌ம் எடுக்கின்றார்

தமிழன் said...

ரஜினி தமிழர்களுக்காகத்தான் கன்னடர்கள்கிட்ட மன்னிப்பு கேட்டிருக்காரு. தமிழர்களுக்கெதிரா போராடற அவங்களுக்கு இந்தப் படத்தை பார்க்க வைக்கறதவிட பெரிய தண்டனை குடுத்துட முடியாது! சாவட்டும்!//////////////

உண்மையில் இதை நானும் என் மனைவியும் உட்கார்ந்து படித்தோம், ஏற்கனவே என் மனைவி ரஜினி ரசிகை, ரஜினி கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டதற்கு கொதித்து உள்ளார். இதை படித்து உண்மையில் பயங்கர சிரிப்பு. கமல் ரசிகன் ஆனா நான் சொல்லவும் வேண்டுமா................

பரிசல்காரன் said...

// லக்கிலுக் said...

//பேர் முதல் கொண்டு பல ரசனைகளில் என்னைப் போலவே இருப்பதால்தான் உங்களை என் `குரு'வாக அப்பாய்ன்மெண்ட் செய்திருக்கிறேன்!//

அண்ணே! இதெல்லாம் நெம்ப ஓவரு! :-)//

ஓவர்தான் லக்கி. `உங்களை என் `குரு'வாக அப்பாய்ன்மெண்ட் செய்திருக்கிறேன்'ன்னு சொல்லீருக்கக் கூடாது. நான் உங்க சிஷ்யனாக இருக்கிறேன்னு சொல்லீருக்கணும்! சாரி. :-)))

@ வந்தியத்தேவன்

ஹஹ்ஹஹ்ஹாஆஆ!

@ திலீபன்

ஏங்க இப்படி என்னை வீட்டுல மாட்டி விடறீங்க?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எப்படி இப்படி எல்லாம் ? உடனே ஒத்துக்கிட்டீங்க.. அவரும் போட்டு வாங்கி இருப்பாரு போல..
\\அதெப்படி கரெக்டா அது நான் சொன்னதுன்னு கண்டுகிட்டீங்க! ஆமா, அந்தப் பொண்ணு எம் பொண்ணுதான். அந்தக் கமெண்டைச் சொன்னது நாந்தான்! ஹி..ஹி..//

VIKNESHWARAN ADAKKALAM said...

அது சரி...

பரிசல்காரன் said...

@ முத்தக்கா

நிஜம்தாங்கக்கா!

@ விக்னேஸ்வரன்

என்ன விக்கி, ச்சாட்ல சொன்னத வெச்சு ரொம்ப டென்ஷனாய்ட்டீங்களா?

சரவணகுமரன் said...

ஸோ, படத்துல்ல உங்களுக்கு பிடிச்சது பர்ஸ்ட் வர்ற விளம்பரமும் இண்டேர்வேல்'ல வர்ற விளம்பரமும் தான், இல்லையா? சூப்பர்...

SP.VR. SUBBIAH said...

////ரஜினி தமிழர்களுக்காகத்தான் கன்னடர்கள்கிட்ட மன்னிப்பு கேட்டிருக்காரு. தமிழர்களுக்கெதிரா போராடற அவங்களுக்கு இந்தப் படத்தை பார்க்க வைக்கறதவிட பெரிய தண்டனை குடுத்துட முடியாது! சாவட்டும்!/////

முழுமையாகச் சாக மாட்டார்கள்!:-))))

அங்கேயும் படத்தைப் பற்றிய விமர்சனம்
ஊடகங்களில் அடித்து ஆடப்படுமே சாமீ!

Anonymous said...

lucky vimarsanam paartha appuramum neenga andha padathukku poi irukeenganna...neenga thaan suthamaana veeran :-)

rapp said...

//அசல் ஷகீலா சீன் பட இசையை வேற ஞாபகப்படுத்துது!) //

அப்ப நீங்க ஷகீலா படங்களை(பின்னணி இசை நியாபகம் வெச்சுக்கற அளவுக்கு) பார்த்திருக்கீங்களா?

ஜெகதீசன் said...

கிரி சார்பில் இந்தப் பதிவைக் கண்டபடி கண்டிக்கிறேன்!!!
:)

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

ரஜினி ரசிகனே இப்படி விமர்சனம் எழுதற அளவுக்கா இருக்கு ?
ஹய்யோ !!! ஹய்யோ !!!

விஜய் ஆனந்த் said...

நானும் நேத்து லக்கிலுக் விமர்சனத்த படிச்சிட்டு மைல்டா டவுட்டோடதான் படம் பாக்க போனேன்...P.வாசு...நீங்க நல்லா இருங்கய்யா...நல்லா இருங்க...

// நான் ஆரம்பத்திலேர்ந்தே அழுதுட்டிருந்தேன். ஏண்டா வந்தோம்ன்னு. //

என் கதியும் அதேதான்...படம் முடியற வரைக்கும்...அண்ணன் லக்கிலுக் ஸ்டைல்ல சொன்னா....டவுசர் நார் நாரா கிழிஞ்சி, தாவூ தீந்து, நாக்கு தள்ளி, மண்ட காஞ்சி, நைட் தூக்கம் வராம பொரண்டு...ரெண்டு மூணு பீர் வுட்டும், மனசு சாந்தியடையாம திரியறேன்...ஹம்ம்ம்ம்...படம் பாத்து 24 மணி நேரம் ஆவப்போவுது..ஒரு ஆஃப் அடிச்சா கூட சரியாப்போய்டும்....வாந்தியெடுத்தவுடனே...

Anonymous said...

///...அண்ணன் லக்கிலுக் ஸ்டைல்ல சொன்னா....டவுசர் நார் நாரா கிழிஞ்சி, ///

டவுசரா ? ஜட்டியா?

விஜய் ஆனந்த் said...

// Anonymous said...
///...அண்ணன் லக்கிலுக் ஸ்டைல்ல சொன்னா....டவுசர் நார் நாரா கிழிஞ்சி, ///

டவுசரா ? ஜட்டியா? //

டவுசர் மட்டுந்தாங்கண்ணா!!! ஏன் உங்களுக்கு ஜட்டியும் சேத்தா???

தமிழன்-கறுப்பி... said...

எங்க கூட இருக்கிற ஒரு ரஜனி ரசிகர் எங்கூட தசாவதாரம்டலாம் படமா குசேலன் வருது பாரு தலைவர் கலக்குவாரு பெயர் ஒரு மாதிரி இருக்கிறதால படம் ஹிட்டாகும் அப்படின்லாம் சொன்னாரு...

அதுக்கு நான் சொன்னேன் தசாவதாரம் எல்லோருக்கும் புரியறதும் கஷ்டம் ஆனா கமல் படம்கிறத கமல் நிரூபிச்சிருக்காரு..எனக்கென்னமோ குசேலன் ரஜனிக்கு செட்டாகாதுன்னுதான் தோணுது அப்படின்னு கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு முன்னரே சொல்லியிருந்தேன் அது நடந்துடிச்சு...

அந்த கதை மலையாளத்துக்கும் மம்முட்டிக்கும் விரும்பினா பொருந்தியிருக்கலாம் ஆனா ரஜனிக்கு பொருந்தாதுன்னு ஒரு உள்ளுணர்வு சொல்லிக்கிட்டே இருந்திச்சு...

தமிழன்-கறுப்பி... said...

பதிவு உங்க நடைலை கலக்கலாருக்கு...:)

Raman Kutty said...

அப்பாடி.. நான் blog = ல் சேர்ந்து 4 நாள்தான் ஆகிறது.. நல்லவேளை உங்க பதிவால எனக்கு ரூ. 160 மிச்சம்.. ஹும்ம்! நானும் திருப்பூர் தானுங்கோ...
என்னோட பதிவையும் பார்துட்டு மேம்படுத்த உங்கள் கருத்துக்களையும் சொன்னா ரொம்ப உதவியா இருக்குங்ணா..

http://peyarenna.blogspot.com/

Anonymous said...

ஹ்ம்ம்ம்....நேத்திக்கே கேட்டேன்....குசேலன் துவையலான்னு....ரொம்பவே காரசாரமான துவையலாப் போச்சு.....படம் பப்படம்தாம்ல......போங்க போங்க போய் வெவசாயத்த பாருங்க....

ஸயீத் said...

//rapp said...

அப்ப நீங்க ஷகீலா படங்களை(பின்னணி இசை நியாபகம் வெச்சுக்கற அளவுக்கு) பார்த்திருக்கீங்களா?//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

வீட்ல இது தெரியுமா?

பரிசல்காரன் said...

@ சரவணக்குமரன்

உண்மையாவே ஆமாங்க!

@ சுப்பையா

வருகைக்கு நன்றி ஐயா! நீங்கள் சொல்வது உண்மைதான்!

@ ஸ்யாம்

காலைல வடகரைவேலனனும் இதைத்தான் கேட்டார்.. லக்கியோட விமர்சனத்தைப் படிச்ச பிறாகும் போனீங்கன்னா இப்படித்தான்னு!

@ rapp

//அப்ப நீங்க ஷகீலா படங்களை(பின்னணி இசை நியாபகம் வெச்சுக்கற அளவுக்கு) பார்த்திருக்கீங்களா?//

ஆமாம்! ஷகிலா மட்டுமல்ல, ஷர்மிலி, ரேஷ்மா, சஜினி, மரியா வகையறாக்களையும் பார்த்திருக்கிறேன்! அவற்றில் ரேஷ்மா, மரியா என் ஃபேவரைட்!

@ ஜெகதீசன்

பத்த வெச்சுட்டீங்க போல. அதான் கிரி இன்னைக்கு நம்ம பக்கமே வர்ல!

@ பாஸ்கர்

என்னத்த சொல்ல!

@ விஜய் ஆனந்த்

ஸேம் பிளட்!

லக்கிலுக்ன்னாலே ஜட்டிதானா?

@ தமிழன்

தீர்க்கதரிசிங்க நீங்க. அப்படியே ரோபோ என்னாகும்ன்னும் கொஞ்சம் சொல்ல முடியுமா? :-))

//பதிவு உங்க நடைலை கலக்கலாருக்கு//

நன்றி நண்பா!

@ raman-name

உங்க பதிவுக்கு வந்தேன். பயங்கர சீரியஸா இருக்கே. நமக்கு ஆகாது தலைவா! `உங்கள் நண்பன்' பதிவு மட்டும் படிச்சேன். என் ப்ரொஃபைல்ல இருக்கற மெய்ல் ஐ.டிக்கு உங்க அலைபேசி எண்ணை அனுப்புங்கள். பேசறேன்!

@ mahesh

அப்படித்தான் ஆச்சு போங்க!

@ ஸயீத்

மேல ராப்புக்கு சொன்னதுல பதில் சொல்லீட்டேன்.

வீட்ல தெரியும்.

ஜெகதீசன் said...

//

@ ஜெகதீசன்

பத்த வெச்சுட்டீங்க போல. அதான் கிரி இன்னைக்கு நம்ம பக்கமே வர்ல!
//
இல்லையேங்க... நான் அவர்கிட்ட எதும் சொல்லலியே.....

நானும் குசேலன் விமர்சனம் போட்டுருக்கேன்.... பாருங்க... :P
http://jegadeesangurusamy.blogspot.com/2008/08/blog-post_5893.html

குரங்கு said...

இதை பசுபதி படமா பாக்காம, ரஜினி படமா பாத்துட்டு எதுக்கு ரஜினிய குத்தம் சொல்லனும்???

தப்பு உங்க மேல, ரஜினி மேல இல்ல

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//இதை பசுபதி படமா பாக்காம, ரஜினி படமா பாத்துட்டு எதுக்கு ரஜினிய குத்தம் சொல்லனும்???//
பசுபதி படத்துக்கு யாராவது எழுபது ரூபாய் டிக்கட் எடுத்து பார்ப்பார்களா ?

பரிசல்காரன் said...

@ குரங்கு

நான் ரஜினி படம்ன்னு நெனச்சு போகவே இல்ல. ரஜினிக்காக போகணும்டான்னு நெனைக்கற அளவு ரஜினி ரசினகெல்லாம் கிடையாது!

நல்ல கதைன்னு நம்பித்தான் போனேன். இந்த மாதிரி கதைல ரஜினி வேற இருந்தா, மாஸா-வும் ஹிட்டாகும்ன்னு நெனச்சேன்.

பசுபதி படமா பாத்தாலும், எவ்வளவு ஓட்டைகள்! சத்தியமா பசுபதி ஒரு மாசத்துக்கு தூங்கமாட்டாரு!

மங்களூர் சிவா said...

/
அப்படி அந்தப் படத்தில் ஒரு நல்லவிஷயம் கூடவா மனதாரப் பாராட்டும்படி இல்லை? என்ன இருந்தாலும் லக்கிலுக் கமலுக்கென்று வலைப்பூ நடத்தும், கமல் ரசிகரல்லவா?

இப்படியெல்லாம்தான் நினைத்தேன், நேற்றிரவு படம் பார்க்கும் வரை. பார்த்தபிறகு லக்கிலுக் நாகரிகம் கருதி அடக்கி வாசித்திருக்கிறார் என்று புரிந்தது!
/

இதுக்கு மேலயும் இந்த படத்த பத்தி நினைப்பேன்!?!?

திருட்டு டிவிடில கூட பாத்திட மாட்டோம்ல நாங்கல்லாம் அவ்ளோ உசாரு!!

:)))

மங்களூர் சிவா said...

/
புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

இந்த லட்சணத்தில் நான் மனைவி குழந்தைகளோடு படத்துக்கு போனேன்!

//
அண்ணே! உங்கள கட்டிக்கிட்ட தண்டனை போதாதுன்னு அண்ணிக்கு இது வேறயா?
/

:)))))))))))
:))))))))))))

மங்களூர் சிவா said...

தாமிரா said...

//தமிழர்களுக்கெதிரா போராடற அவங்களுக்கு இந்தப் படத்தை பார்க்க வைக்கறதவிட பெரிய தண்டனை குடுத்துட முடியாது! சாவட்டும்//
ர‌ஜினியின் ந‌ல்லெண்ண‌த்தை இப்போவாவ‌து நீங்க‌ள் புரிந்துகொள்ள‌வேண்டும்.
/


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

/
rapp said...

//அசல் ஷகீலா சீன் பட இசையை வேற ஞாபகப்படுத்துது!) //

அப்ப நீங்க ஷகீலா படங்களை(பின்னணி இசை நியாபகம் வெச்சுக்கற அளவுக்கு) பார்த்திருக்கீங்களா?
/

கரிக்குட்டா கவுஜாயினி எந்த பாயிண்ட்டை பிடிச்சி கேள்வி கேக்குறாய்ங்க பாருங்க!?

பதில் சொல்லுங்கப்பு!!!

:)))))))

பரிசல்காரன் said...

@ மங்களூர் சிவா

நண்பா.. நீங்க தப்பிச்சுட்டிங்க!

//கரிக்குட்டா கவுஜாயினி எந்த பாயிண்ட்டை பிடிச்சி கேள்வி கேக்குறாய்ங்க பாருங்க!?

பதில் சொல்லுங்கப்பு!!!/

பதில் சொல்லீட்டமே, விளக்கமா..!

பாக்கலியா?

Veera said...

நான் வழக்கமாக மொக்கைப் படங்களுக்கு மட்டும்தான் என்னுடைய பதிவில் விமர்சனம் எழுதுவது வழக்கம். இப்ப குசேலனுக்கும் எழுத வச்சிட்டாங்க! :-)

பரிசல்காரன் said...

@ வீரசுந்தர்

இவ்ளோ எச்சரிக்கைக்களுக்குப் பிறகும் படம்ப் பார்த்தீங்களா?

நீங்க உண்மையாவே `வீர'சுந்தர்தான்!

Veera said...

//இவ்ளோ எச்சரிக்கைக்களுக்குப் பிறகும் படம்ப் பார்த்தீங்களா?//

விதி வலியது!

Valaipayan said...

Director oda Initial madiri movie irukunu en friend sonan .. naanum intha week inga Philly la release aga pora intha movie ku reserve panen .. unga review padichutu reservation a cancel paniten...15 $ michaam..Echarikaiku nanri :)

கயல்விழி said...

//அப்ப நீங்க ஷகீலா படங்களை(பின்னணி இசை நியாபகம் வெச்சுக்கற அளவுக்கு) பார்த்திருக்கீங்களா?//

இந்த கேள்விக்கு ரிப்பீட் போட ரொம்ப ஆவலா இருந்தேன். இப்படி விளக்கமா பதில் சொல்லி You burst my bubble.

கயல்விழி said...

குடும்பத்துடன் இப்போது தமிழ் சினிமாவுக்கு எல்லாம் போகமுடியாது.:(

Thina said...

என் நண்பனொருத்தன் `படத்துல கடைசீல நான் அழுதுட்டேண்டா’ ன்னான். நான் ஆரம்பத்திலேர்ந்தே அழுதுட்டிருந்தேன். ஏண்டா வந்தோம்ன்னு.


siripai control panna mudiyala....