நேற்று விடுமுறை. குடும்பத்தோடு ஊத்துக்குளி பக்கத்தில் உள்ள கயித்தமலை முருகன் கோவிலுக்கு சென்றிருந்தேன். பைக்கிலேயே பயணம். நல்ல வெயில். ஆனாலும் ஜாலியாக பேசிக் கொண்டே போனோம்!
அந்தக் கோவில் இன்னும் முழுமையாக வியாபாரிகளின் கையில் சிக்காமல் இருந்ததால், அமைதியானதாக இருந்தது. ஆடி 18 ஆகையால் கூட்டமும் இருந்தது. அளவான கூட்டம்!
அங்கங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த குடும்பங்கள், விளையாடிக் கொண்டிருந்த குழைந்தைகள் என பார்க்கவே சந்தோஷமாக இருந்தது!
திரும்பி வரும்போது, ஒரு ஆட்டிடையன் என் கவனத்தைக் கவரவே, பைக்கை நிறுத்தி அவனைப் படம் பிடித்தேன்!
`ஒரு கால் ஊனமானாலும் உழைக்கிறான் பார்' என்று என் மகள்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டே, கேமராவை அணைத்துவிட்டு, பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது மீரா அழைத்தாள்..
”அப்பா, பைக்கை ஆஃப் பண்ணுங்க. அங்க பாருங்க” என்றாள்.
நான் பார்த்ததும் வெறுத்துப் போனேன். அங்கே..
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
'சரி.. சரி... வழியாதீங்க.. கிளம்புங்க” என்று உமா சொல்ல கிளம்பினோம்.
அதே போல, சைக்கிளுக்கு ஸ்டெப்னியோடு போன பெரியவரும் மனதைக் கவர்ந்தார்.
`டேய் இதெப்படிடா ஸ்டெப்னியாகும்? டயரே இல்லையேடா' ன்னெல்லாம் திட்டக்கூடாது.. ஆமா!
இந்தப் பதிவின் மூலம் நீங்கள் அறிந்து கொண்டது என்ன?
நானே சொல்லீடறேன்..
என் ஃபோட்டோ ஆர்வத்தைப் பார்த்து எங்க எம்.டி. எனக்கு ஒரு ஒலிம்பஸ் டிஜிட்டல் கேமரா பரிசா தந்தாங்க! ஒரு ஆச்சரியமான விஷயம் நான் என் முதல் புகைப்பட அனுபவம்' ன்னு ஒரு பதிவு எழுதினேன் பாருங்க, அன்னைக்குதான் இந்த புது கேமரா எனக்கு பரிசா வந்தது!
`கேமரா வாங்கி ஒரு வாரமாச்சு, எங்க இன்னும் ஃபோட்டோவே போடல'ன்னு கூப்பிட்டு உரிமையோட திட்டின நண்பர் நந்து f/o நிலாவுக்கு இந்த (என் சொந்தக் கேமராவுல எடுத்த) முதல் புகைப்படப் பதிவு சமர்ப்பணம்!
31 comments:
வாழ்த்துக்கள்.......உங்கள் மே.அ. உங்களின் மேல் வைத்துள்ள மரியாதையும் அபிமானமும் நம்பிக்கையும் அபாரம்...படங்கள் அருமை....நின்று நிதானமாக ஃபோகஸ் செய்து எடுக்க நேரமில்லை போல :)
குடும்பத்தோட போகும்போது கூட ஸ்டெப்னி பத்தி யோசிக்கிறியே இது ஞாயமா.
அடுத்த வாரம் வீட்டுக்கு வரலாம்னு இருக்கேன். கொஞ்சம் அடங்கு. உமாகிட்ட சொல்றதும் சொல்லாததும் உன் கையில்தான் இருக்கு.
குசேலன் பார்த்த பாவத்த கோவிலுக்கு போய் கழுவிட்டு வரிங்க போல...
வாழ்த்துக்கள் பரிசல். இனிமேல் உங்களிடமிருந்து நிறைய போட்டோக்கள் பார்க்கமுடியும் என்று நம்புகிறேன்.
//குடும்பத்தோட போகும்போது கூட ஸ்டெப்னி பத்தி யோசிக்கிறியே//
அதுவும் டயர் இல்லாத ஸ்டெப்னியாம்!!! எங்க போய் சொல்ல??
@ mahesh
நன்றி.
//.உங்கள் மே.அ. உங்களின் மேல் வைத்துள்ள மரியாதையும் அபிமானமும் நம்பிக்கையும் அபாரம்//
நான் அவங்க மேல வெச்சிருக்கறது மரியாதை. அவங்க என் மேல வெச்சிருக்கறது அபிமானம்.
ரெண்டு பேரும் பரஸ்பரம் வெச்சிருக்கறது நம்பிக்கை!
//நின்று நிதானமாக ஃபோகஸ் செய்து எடுக்க நேரமில்லை போல//
தலைவா... பிக்காஸால கொஞம் மசமச பண்ணிருக்கேன். அத வெச்சு சொல்றீங்களா?
@ விஜய் ஆனந்த்
பதிலுக்கு நானும் சிரிச்சுட்டேன்!
@ வேலன்
ண்ணா.. நாமெல்லாம் அப்படியா பழகீருக்கோம்? விட்டுடுங்ணா..
//அடுத்த வாரம் வீட்டுக்கு வரலாம்னு இருக்கேன். //
நிஜமாயிருந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன். ப்ளீஸ் வாங்க!
//VIKNESHWARAN said...
குசேலன் பார்த்த பாவத்த கோவிலுக்கு போய் கழுவிட்டு வரிங்க போல...
//
நீங்க எந்த கோவிலுக்கு போனீங்க விக்கி? மொத்தத்துல குசேலன் பக்தியை வளர்க்குதுன்னு சொல்றீங்களா??? :
@ விக்னேஸ்வரன்
அட! அப்படித்தான் ஆச்சு!
@ வெண்பூ
//அதுவும் டயர் இல்லாத ஸ்டெப்னியாம்//
அபாரமான சிலேடை வெண்பூ! சூப்பர்!
//நீங்க எந்த கோவிலுக்கு போனீங்க விக்கி? மொத்தத்துல குசேலன் பக்தியை வளர்க்குதுன்னு சொல்றீங்களா???//
நானே ரெண்டு நாள சரியான தூக்கம் இல்லாமல் இருக்கேங்க... இப்படி ஒரு பாவத்த செஞ்சிட்டு எப்படிங்க கோவிலுக்கு போறது...
கோயிலைப்பற்றி விரிவாக ஒரு நாள் எழுதுங்க..கோயிலில் வேற படம் எடுக்கலையா...
படத்துல மேற்படி வேலை கள் எல்லாம் யாரு செய்தது நீங்களே வா..?
ஊத்துக்குளி போனீங்களே வெண்ணெய் வாங்கினீங்களா
/
`கேமரா வாங்கி ஒரு வாரமாச்சு, எங்க இன்னும் ஃபோட்டோவே போடல'ன்னு கூப்பிட்டு உரிமையோட திட்டின நண்பர் நந்து f/o நிலாவுக்கு இந்த (என் சொந்தக் கேமராவுல எடுத்த) முதல் புகைப்படப் பதிவு சமர்ப்பணம்!
/
Mr. நந்து உங்களுக்கு ஏன் இந்த கொலவெறி!?!?!?
:)))))))))
/
மங்களூர் சிவா said...
/
`கேமரா வாங்கி ஒரு வாரமாச்சு, எங்க இன்னும் ஃபோட்டோவே போடல'ன்னு கூப்பிட்டு உரிமையோட திட்டின நண்பர் நந்து f/o நிலாவுக்கு இந்த (என் சொந்தக் கேமராவுல எடுத்த) முதல் புகைப்படப் பதிவு சமர்ப்பணம்!
/
இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே பதிவுக்கு வரவங்க உடம்ப ரணகளம் ஆக்குறீங்களே நந்து அண்ணா
:)))))
/
வடகரை வேலன் said...
குடும்பத்தோட போகும்போது கூட ஸ்டெப்னி பத்தி யோசிக்கிறியே இது ஞாயமா.
/
:))))))))))
ரிப்பீட்டு
நல்ல புகைப்படங்கள். ஆனா நாலு பேர் ஒரே பைக்லையா போனீங்க? ஒருவேளை அப்படித்தான் போனீங்கன்னா, அதை முடிந்தவரையில் தவிர்த்திடுங்க
படங்களையெல்லாம் பிரேம் செஞ்சு மாட்டியிருக்கலாமில்ல!
///கேமரா வாங்கி ஒரு வாரமாச்சு, எங்க இன்னும் ஃபோட்டோவே போடல'ன்னு கூப்பிட்டு உரிமையோட திட்டின நண்பர் நந்து f/o நிலாவுக்கு இந்த (என் சொந்தக் கேமராவுல எடுத்த) முதல் புகைப்படப் பதிவு சமர்ப்பணம்!//
நந்து நீங்களுமா? பரிசல் பாவம் விட்டுடுங்க பொழைச்சி போகட்டும்:)
//rapp said...
நல்ல புகைப்படங்கள். ஆனா நாலு பேர் ஒரே பைக்லையா போனீங்க? ஒருவேளை அப்படித்தான் போனீங்கன்னா, அதை முடிந்தவரையில் தவிர்த்திடுங்க//
சரியா சொன்னீங்க அக்கா. நானும் அப்படியே வழி மொழிகிறேன்:)
பரிசலாரே நந்து வச்சிருக்கிற நிக்கான் D80 வாங்குங்க. இன்னும் நிறைய படம் பிடிங்க. அப்படியே என்னோட வாழ்த்தையும் பிடிச்சிக்கோங்க:)
//VIKNESHWARAN said...
குசேலன் பார்த்த பாவத்த கோவிலுக்கு போய் கழுவிட்டு வரிங்க போல...//
எங்க போனாலும் நீங்க குசேலன் பாதிப்போட கமெண்ட் போடுறதை வச்சி உங்க நிலைமையை புரிஞ்சிக்க முடியுது:)
நன்றி ஜெகதீசன்!
இப்போதான் பதிவர் சந்திப்புல இருந்த உங்க எல்லார்கிட்டயும் பேசினேன்! வந்து பார்த்தா உங்க கமெண்ட்!
@ முத்தக்கா
//கோயிலைப்பற்றி விரிவாக ஒரு நாள் எழுதுங்க..கோயிலில் வேற படம் எடுக்கலையா...//
அங்கே ஒரு பழுதான தேர் மண்ணில் புதைந்து இருந்தது. அதை படமெடுத்திருக்கிறேன். ஒரு கதை (அ) கவிதையுடன் அதை வெளியிடுகிறேன்!
//படத்துல மேற்படி வேலை கள் எல்லாம் யாரு செய்தது நீங்களே வா..?//
ஆமாக்கா. நல்லாயில்லையா?
@ சின்ன அம்மணி
எங்க வீட்டு அம்மணியும் சொல்லிக்கிட்டே இருந்துச்சுங்க. ஆனா ஆடி 18ங்கறதால எங்கயுமே கிடைக்கல. பூட்டிருந்தது_((
@ மங்களூர் சிவா
ஹய்யோ.. ஹய்யோ! (நல்ல வேளை, இன்னைக்கு மூணே கும்மியோட தப்பிச்சேன்!)
@ ராப்
//நல்ல புகைப்படங்கள். ஆனா நாலு பேர் ஒரே பைக்லையா போனீங்க? ஒருவேளை அப்படித்தான் போனீங்கன்னா, அதை முடிந்தவரையில் தவிர்த்திடுங்க//
உங்க வாழ்த்துக்களோட, கூடிய விரைவில் அதைத் தவிர்த்திட கயித்தமலை முருகன் வேறு வழி செய்வானென நம்புகிறேன்! (அவரு மாதிரி தங்கத்துல தேர் இல்லைன்னாலும், தவணைல காராவது வேணுமில்ல!!!)
@ ராஜநடராஜன்
அவ்ளோ மோசமாவா இருக்கு? இது கிண்டல்தானே நடராஜன்? புரியல!
@ நிஜமா நல்லவன்
//சரியா சொன்னீங்க அக்கா/
தங்கச்சிக்காவை, அக்கா என்று அழைத்ததால் உங்களை சங்கத்திலிருந்து அரை மணி நேரத்துக்கு தள்ளி வைக்கறேன்!
//பரிசலாரே நந்து வச்சிருக்கிற நிக்கான் D80 வாங்குங்க. இன்னும் நிறைய படம் பிடிங்க. அப்படியே என்னோட வாழ்த்தையும் பிடிச்சிக்கோங்க//
வாங்கீடுவோம் நண்பரே! உங்க மனமார்ந்த வாழ்த்துக்கு மிக்க நன்றீ!
அண்ணே நா படமெடுத்தா நீங்கதான் கேமிராமேன் :))
@ புதுகை. அப்துல்லா
ஹய்யோ! சந்தோஷமா கீது!
கூடிய சீக்கிரம் படமெடுங்க! (நீங்க பாம்பில்லையே?)
படங்களும் உங்கள் பதிவும் அற்புதம்பா.
ஆடி 18க்கு கோவில் கோபுரம் பார்த்தேன். நன்றி.
கேமரா வாங்கி அக்காவைல்லாம் படம் எடுக்கலியா?
அப்புறம் எங்கப்பா பேச்ச கேக்காதீங்க. கேட்டீங்கன்னா பொழப்ப விட்டுட்டு கேமராவ தூக்கிட்டு காடுமேடுன்னு அலைய வேண்டி வரும் ஜாக்ரதை.
எதுக்கும் உமா அத்தைகிட்ட சொல்லி வைக்கனும்.
@ வல்லி சிம்ஹன்
ஆசிகளுக்கு நன்றி அம்மா!
@ நிலா
அக்காக்களை மட்டும்தான் எப்பப்பாத்தாலும் படம் புடிச்சுப் போடறேன்னு சொல்றாங்க நிலாக்குட்டி. அதான் வேற சில ஃபோட்டோக்களை போட்டேன்.
உனக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்லவா?
முதல் படத்துல (கோபுரம்) இடது ஓரத்துல ப்ளூ கலர் சுடிதார் போட்டுட்டு போறாங்கள்ல, அதான் அத்தை. கூப்பிட்டு சொல்லு!
அப்புறம்,
உங்கப்பாதான் எனக்கு கைடு! அவரு போகச் சொன்னா, காட்டுக்கு போவேனே!
//நிஜமா நல்லவன் said...
//rapp said...
நல்ல புகைப்படங்கள். ஆனா நாலு பேர் ஒரே பைக்லையா போனீங்க? ஒருவேளை அப்படித்தான் போனீங்கன்னா, அதை முடிந்தவரையில் தவிர்த்திடுங்க//
சரியா சொன்னீங்க அக்கா. நானும் அப்படியே வழி மொழிகிறேன்:)
பரிசல்காரர் அண்ணாவுக்கு ஒரு மகிழ்வு சீற்றூந்து தந்து அருள அந்த
கயித்தமலை முருகனை வேண்டுகிறேன்.
( இருசக்கரவானத்தில் இருவருக்குமேல் பயணிக்க வேண்டாம்-இது அன்பு வேண்டுகோள்)
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
கே.கே.
சுவாரஸ்யமான பதிவு. கடைசி புகைப்படத்தில் பெரும்பாலும் கருப்பு-வெள்ளை தெரிவது எதனால்? பைக்கில் 4 பேர் செல்வது உசிதமில்லை என்றும் கூடிய சீக்கிரம் ஒரு கார் வாங்கக்கடவது என்றும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஆயினும் காதலி/மனைவியுடன் நெடுஞ்சாலையில் பைக்கில் செல்லும் சுகம் தனிதான்; ஆகவே அதனை மட்டும் தொடரவும்.
அனுஜன்யா
படங்கள் நன்றாக இருக்கிறது அடிக்கடி இது போன்ற வி.டே படங்களை ஏற்றுங்கள் !
நீங்கள் நினைத்து சரிதான் என்று நினைக்கிறேன், அவர் காலில் ஏதோ பிரச்னை இருக்கிறது.கால் மிகவும் மெலிதாக இருக்கிறது.அதனால் தான் அப்படி ஒரு காலில் நிற்கிறாரோ என்னமோ.
இப்ப தான் கேமரா வாங்கினதா சொல்றிங்க ஆனா உங்களோட போடோஸ் ஐ பார்த்தா ரொம்ப அனுபவமானவோரட நேர்த்தி தெரிகிறது. தொடர்ந்து போடோஸ் போடுங்க. .... சுந்தர்.
Post a Comment