Thursday, August 7, 2008

பதிவர்கள், பதிவுகள் – வினா விடை

பதிவர்கள் என்பவர்கள் யாவர்..?

BLOGGERS என ஆங்கிலத்திலும், பதிவர்கள் என தமிழிலும் அழைக்கப்படும் இவர்கள் வலைப்பதிவு ஒன்றை தங்களுக்கென ஆரம்பித்து, தங்கள் படைப்புகளை, கருத்துக்களை பரிமாறிக்கொள்பவர்கள். அந்த வலைப்பதிவுகள், வலைப்பூ எனவும் அழைக்கப்படுகிறது.


மொக்கை என்பது என்ன? அதன் இலக்கணங்கள் யாவை?

படிக்கும் வாசகரை `இவனையெல்லாம் மதிச்சு படிக்க வந்தோம் பாரு’ என்று சிந்திக்க வைத்து, வெறுப்புற்று வெளியேறச் செய்யும் வண்ணம் எழுதுவதே `மொக்கை’ எனப்படும்.

ஒரு பதிவு எழுதும்போதே, என்ன எழுதப்போகிறோம் என்று தெரியாமல் ஆரம்பிப்பதே இதன் இலக்கணமாகும். மற்றும் அந்தப் பதிவு போட்ட பிறகு வரும் பின்னூட்டங்களின் வழி, அது நிஜமாகவே மொக்கையா, இல்லையா என அறியலாம்.


பின்னூட்டம் என்றால் என்ன? அது ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?

நீங்கள் பதிவை வெளியிட்ட`பின்’, உங்களுக்கு `ஊட்டம’ளிக்கும் வகையில், அல்லது மேம்படுத்தும் வகையில் உங்களுக்கு அளிக்கப்படும் கருத்துகள், பின்னூட்டம் எனப்படும். இதை தமிழ்மண மொழியில், மறுமொழி என்றும் அழைக்கலாம். தங்கள் நேரத்தை ஒதுக்கி, வெறும் ஸ்மைலி போட்டு ஓடாமல் `raap’ போன்றவர்கள் எழுதும், நீண்ட, நெடிய, விளக்கமான பின்னூட்ட்ங்களை `பதிவூட்டம்’ எனவும் அழைக்கலாம். (ஒரு பதிவுக்குரிய அளவில், பின்னூட்டம் எழுதுவதால்!)


பின்னூட்டமாறு என்பது என்ன?

உங்களுக்கு வந்த பின்னூட்டத்திற்கு, மதிப்பளித்து, ஒரு பதில் போடுவதே பின்னூட்டமாறு எனப்படும். `கைமாறு’ என்ற சொல்லிலிருந்து இது உருவானது.


‘பின்னூட்ட கயமைத்தனம்’ என்றால் என்ன?

இரண்டு பின்னூட்டங்களுக்கு மேல் இருந்தால்தான் தமிழ்மண மறுமொழிதிரட்டியில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால், ஒரு கமெண்டை தானே போடுவது, அல்லது, வெறுமனே வந்து ஒரு ஸ்மைலி போட்டுவிட்டு செல்வது ஆகியவை பின்னூட கயமைத்தனம் என்றழைக்கப் படுகிறது. `அதிஷா’ என்ற பதிவரால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.


`பின்னூட்ட டுபுரித்தனம்’ என்றால் என்ன?

முந்தைய கேள்விக்கான பதிலையே வாசிக்கவும்.


`சூடான இடுகைகள்’ என்றால் என்ன? அதற்குரிய இலக்கணங்களை வரையறு.

ஒரு நாளில் அதிகபட்ச வாசகர்கள் படிக்கும் வண்ணம் எழுதப்படும் இடுகைகள் சூடான இடுகைகள் எனப்படும். இதற்கான இலக்கணங்கள் இரு பிரிவுகளாக பிரிக்கலாம். நிரந்தர மற்றும் தற்காலிக. யெஸ்.பாலபாரதி, லக்கிலுக், தமிழ்மணம் ஆகியவை தலைப்புகளில் வருமாறு எழுதுவது நிரந்தமாக (எந்தக் காலகட்டத்திலும்) சூடான இடுகைகளாக வரும். `தற்காலிக’ என்பது அப்போதைய ஏதாவது செய்திகளைப் பொறுத்து அமையும். உதாரணம் தற்போதைய சூடான தலைப்பு, ரஜினி (அ) குசேலன்.


‘பா.க.ச.’ என்பதன் விரிவாக்கம் என்ன?

பதிவர்களின் முன்னேற்றத்திற்கென உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்து, நேரம் ஒதுக்கி பாடுபடுபவர் யெஸ்.பாலபாரதி என்பது அனைவரும் அறிந்ததே. அவரை கலாய்ப்பதற்கென்றே ஒரு சங்கம் நாமக்கல் சிபியால் உருவாக்கப்பட்டது. அதுவே `பாலபாரதி கலாய்ப்போர் சங்கம்’ என்றழைக்கப்படும் `பா.க.ச.’

இதற்கு எதிரான அமைப்புதான் `பா.பா.ச.’ (பாலபாரதி பாராட்டுவோர் சங்கம்) ஆனால், இவ்வமைப்பு குறித்த திட்டவட்டமான குறிப்புகள் எங்கும் காணப்படவில்லை.


பதிவுலகின் அரசியல், நுண்ணரசியல் என்றால் என்ன?

இந்தக் கேள்விக்கு பதில் சொன்னால் அது `அரசியல்’. சொல்லாமல் விட்டால் அது நுண்ணரசியல்.


‘கும்மி’ என்றால் என்ன?

ஒரு பதிவிற்குச் சென்று அதிகபட்சமாக, சம்பந்தமாகவோ, சம்பந்தமில்லாமலோ பின்னூட்டங்களிடுவது `கும்மி’ என்றழைக்கப்படுகிறது. `குசும்பன்’ `மங்களூர் சிவா’ ஆகியோர் இந்தக் கும்மியில் கைதேர்ந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது.


`கவுஜ’ என்றால் என்ன?

மொக்கையாக எழுதப்படும் கவிதைகள் `கவுஜ’ என்றழைக்கப்படும். அதிலும் சிறந்த, கொடுமையான, கேவலமான, சூப்பரான கவுஜ கொலை வெறிக் கவுஜ’ எனப்படும் சுருக்கமாக கொ.வெ.க. இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணமாக நாமக்கல் சிபியின் `கவுஜ’யைச் சொல்லலாம்!


இப்படிப்பட்ட வலைப்பூக்களின் பயன்கள் யாவை?

இவ்வாறு படைப்புகளை எழுதுவது, படிப்பதன் மூலம் நடப்பு செய்திகளை அவ்வப்போது அறிந்துகொள்வது மற்றும் பல பதிவர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். அந்த நட்புக்கு இணையாக எதுவுமே கிடையாது. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் புகைப்படமெடுக்கும் ஆர்வமிகுந்த என்னை அழைத்து, நந்து ஈரோட்டிலிருந்து அழைத்து, `என்ன உங்ககிட்ட கேமரா இல்லையா? யாரயாவது ஈரோடு அனுப்புங்க. என்கிட்ட ஒரு டிஜிட்டல் கேமரா இருக்கு. குடுத்துவிடறேன்’ என்றது. அவரை இப்போதுவரை நான் நேரில் சந்தித்ததே இல்லை!

இன்னொரு உதாரணம் சமீபத்தில் டெல்லிக்கு செல்கிறேன் என்று என் நண்பன் சொன்னபோது, `ஏதாவது ஹெல்ப் வேணும்ன்னா சொல்லுடா. அங்க தெரிஞ்சவங்க இருக்காங்க' என்று நான் சொன்னேன். எந்த நம்பிக்கையில் அப்படிச் சொன்னேனென்றால் கயல்விழி முத்துலெட்சுமி அக்காவை நம்பித்தான். (க்கா, அவன் திரும்பி வந்துட்டான்.. பயப்படாதீங்க! :-)) அந்த நம்பிக்கையை, நட்பை எந்த சொந்தங்களும் எனக்கு தரவில்லை என்பதை இந்தச் சபையில் உரத்துச் சொல்கிறேன்!

இது போலவே உங்களுக்கு கிடக்கும் வெளிநாட்டு நண்பர்கள் உங்கள் மீது அன்புகாட்டுவதை உணர்கையில் இந்த உலகம் முழுதும் உங்களுக்கு தெரிந்தவர்களால், உங்கள் நண்பர்களால் நிரம்பியிருப்பதை உணரமுடியும்!


டிஸ்கி:- (DISCLAIMER) இதன் `விடுபட்டவை’களை யாரேனும் பதிவாக எழுதலாம்!

30 comments:

லதானந்த் said...

நாந்தான் மொதோ!

ட்ரவுசர்னு ஒண்ணு இருக்கே? அது என்ன?

அனானி ங்களுக்கு என்ன வரயறை?

Mahesh said...

இந்த BLOG-ங்கறதே WEB LOG-ங்கறதோட சுருக்கம்.

அனானி : ANONYMOUS-ங்கற பெயர் சொல்ல விரும்பாத பின்னூட்டுபவர்

விஜய் ஆனந்த் said...

:-)))

விஜய் ஆனந்த் said...

பின்னவீனத்துவ பதிவுகள்...தொடர் இடுகைகள்...சங்கங்களெல்லாம் விட்டுட்டீங்களே!!!!

புதுகை.அப்துல்லா said...

pls kindly visit my newposting
:)

Anonymous said...

//பதிவர்களின் முன்னேற்றத்திற்கென உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்து, நேரம் ஒதுக்கி பாடுபடுபவர் யெஸ்.பாலபாரதி என்பது அனைவரும் அறிந்ததே. அவரை கலாய்ப்பதற்கென்றே ஒரு சங்கம் நாமக்கல் சிபியால் உருவாக்கப்பட்டது. அதுவே `பாலபாரதி கலாய்ப்போர் சங்கம்’ என்றழைக்கப்படும் `பா.க.ச.’
//
இல்லை. இதனை தொடங்கியவர் சென்னைபட்டிணவாசி எஸ். அருள் குமார் என்பவர். அதன் பின்னர் தான் சிபி வந்தார்.

துளசி கோபால் said...

இது மொக்கைப் பதிவிலா வருது?
:-))))

பாபு said...

என்ன பதிவு எழுதலாம் என்று நாள் முழுதும் யோசித்து கொண்டே இருப்பிர்களோ?

ஜோசப் பால்ராஜ் said...

பா.க.ச என்பது பாதிக்கப்பட்ட காளையர் சங்கம்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.

இது பாலபாரதி கலாய்பவர்கள் சங்கம்னு இப்பத்தான் தெரியுது. நல்லவேளை நான் அதுல சேரல.

இருந்தாலும் விபத்தில் காயமடைந்த எங்கள் அண்ணண் அப்துல்லாவை நீங்கள் விசாரிக்கம விட்டது தப்புண்ணே, அவரு எவ்ளோ ஃபீல் பண்றாரு தெரியுமா, அவரு பதிவ போய் படிங்க.

Anonymous said...

தமிழில் வரும் பெரும்பாலான பதிவுகள் வெறும் குப்பையே. ஏதாவது பத்திரிகையில் உள்ள செய்திகளை அப்படியே காப்பி அடித்து எழுவது, அரைகுறை அறிவுடன் ஏதாவது உளறிக்கொட்டுவது அல்லது ஏதாவது கட்சி சார்பாகவோ நடிகர் சார்பாகவோ அல்லது எதிராகவோ நியாயமே இல்லாமல் அவதூறாக எழுதுவது இப்படித்தான் பெரும்பாலான பதிவுகள் இருக்கின்றன. சொந்தமாக சிந்தித்து எழுதப்படும் தரமான பதிவுகள் மிகக் குறைவு.

Vijay said...

பிளாகைக் கண்டுபிடித்தவர்கள் கூட இப்படியொரு பிளாகிலக்கணம் சொன்னதில்லை. அருமை அருமை. இதையெல்லாம் பள்ளிக்கூட சிலபஸ்ஸில் சேர்த்தால் நன்றாக இருக்கும்.


விஜய்

Athisha said...

பின்னூட்ட கபடத்தனம்

Mahesh said...

அட....இதுவும் மொக்கைதானா....இது தெரியாம நாந்தான் சீரீசா ஒரு பின்னூட்டம் போட்டுட்டேனா....கொலசாமி கருப்பராயந்தான் காப்பாத்தணும்....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பின்னூட்டகயமைத்தனத்துக்கு
காப்பிரைட் வேறயாருதோவாச்சே.. அதிஷா புதுப்பதிவர் இல்லையா.. அதுக்கு முன்னாலயே இந்த சொல் பயன்பாட்டில் இருக்கு.. யாராச்சும் சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்.. வரலாற்றில் (சிலபஸில்) நாளை தவறு சொல்லக்கூடாது இல்லையா..

அப்பறம் இனிமே அழகா தெளிவா யாருகிட்டன்னாலும் " எப்ப போய்ட்டுவந்தீங்கடெல்லி ... டெல்லி போறதுக்கு முன்னமே சொல்லி இருக்கலாமே நீங்க .. அங்க தெரிஞ்சவங்க இருக்காங்களே " ன்னு சொல்லுங்க சரியா... :)

Anonymous said...

//ஒரு கமெண்டை தானே போடுவது, அல்லது, வெறுமனே வந்து ஒரு ஸ்மைலி போட்டுவிட்டு செல்வது ஆகியவை பின்னூட கயமைத்தனம் என்றழைக்கப் படுகிறது. `அதிஷா’ என்ற பதிவரால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது //

பின்னூட்ட கயமைத்தனமுன்னு பெயரு சூட்டி அந்த வேலையை மொதோமொதல்ல செஞ்சது லக்கிலுக்கு.

கும்மி, மொக்கையெல்லாம் கூட லக்கிலுக்கு ஆரம்பிச்ச ட்ரெண்டு தான். நீங்க இப்போ பார்க்குற லக்கியே வேற. அந்த காலத்து லக்கிய பாத்திருந்திங்க ஆடிபோயிட்டிருப்பீங்க.

பரிசல்காரன் said...

@ லதானந்த்

நன்றி அங்கிள்!

அந்த வரையறைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள்தான் அனானிகள்!

@ மகேஷ்

தகவலுக்கு நன்றி. மொக்கைன்னும் சொல்ல முடியாது, சீரியஸ்ன்னும் சொல்ல முடியாது. கண்ணாடி மாதிரி. எப்படி எடுத்துக்கறீங்களோ அப்படி!

@ விஜய் ஆனந்த்

நன்றி.
//பின்னவீனத்துவ பதிவுகள்...தொடர் இடுகைகள்...சங்கங்களெல்லாம் விட்டுட்டீங்களே!!!//
ஆமால்ல? சரி, யாராவது எழுதுவாங்கன்னு நெனைக்கறேன்!

@ அப்துல்லா

படிச்சேன். சாரிங்க. இங்கயும் சொல்லிக்க்றேன்!

@
//. இதனை தொடங்கியவர் சென்னைபட்டிணவாசி எஸ். அருள் குமார் என்பவர். அதன் பின்னர் தான் சிபி வந்தார்.//

ஆமாமா.. எப்ப்வோ பார்த்த ஞாபகம். சாரிங்க அருள், உங்களை மறந்ததுக்கு!

தகவலுக்கு நன்றி தொண்டரே!

@ துளசி கோபால்

அப்படீன்னு சொல்லிடுவாங்களே..

@ பாபு

//என்ன பதிவு எழுதலாம் என்று நாள் முழுதும் யோசித்து கொண்டே இருப்பிர்களோ?//

ஆமாம்.

எப்ப என்னைப்பாத்தாலும், இதையே கேக்கறீங்களெ தலைவரே..

களத்துல இறங்கியாச்சு, வேற என்ன பண்ணச் சொல்றீங்க? உங்களுக்காக ஒரு நாள் பூரா யோசிக்காம இருக்கப் பார்க்கறேன்!

@ ஜோசப் பால்ராஜ்

//பா.க.ச என்பது பாதிக்கப்பட்ட காளையர் சங்கம்னு நினைச்சுகிட்டு இருந்தேன். //

அது பா.கா.சா ன்னுல்ல வரும்?

அப்துல்லா என்னோட ஒரு பின்னூட்டத்தை போடல, என்னான்னு கேளுங்க அவர!


@ அனானி ராபின்
//தமிழில் வரும் பெரும்பாலான பதிவுகள் வெறும் குப்பையே. ஏதாவது பத்திரிகையில் உள்ள செய்திகளை அப்படியே காப்பி அடித்து எழுவது, அரைகுறை அறிவுடன் ஏதாவது உளறிக்கொட்டுவது அல்லது ஏதாவது கட்சி சார்பாகவோ நடிகர் சார்பாகவோ அல்லது எதிராகவோ நியாயமே இல்லாமல் அவதூறாக எழுதுவது இப்படித்தான் பெரும்பாலான பதிவுகள் இருக்கின்றன. சொந்தமாக சிந்தித்து எழுதப்படும் தரமான பதிவுகள் மிகக் குறைவு.//

இதற்கு பதில் சொன்னால் அரசியலாகிவிடும் என்பதால் தவிர்க்கிறேன்! உங்கள் கருத்துக்கு நன்றி ராபின்!

@ விஜய்

ஏனிந்த கொலவெறி?

@ அதிஷா

பின்னூட்ட கிஸ்கித்தனம்!

@ முத்தக்கா
//பின்னூட்டகயமைத்தனத்துக்கு
காப்பிரைட் வேறயாருதோவாச்சே.. அதிஷா புதுப்பதிவர் இல்லையா.. அதுக்கு முன்னாலயே இந்த சொல் பயன்பாட்டில் இருக்கு..//

எனக்கு ஒருத்தர் சொன்னாரு. சரின்னு எழுதறதுக்கு முன்னாடி அதிஷாவை கன்ஃபர்மேஷனுக்காக கூப்டேன். ஃபோனை எடுக்கல. பிஸியா இருந்தார்ய். (கொர்ர்ர்ர்...) எழுதினபிறகு அவரா கூப்ட்டாரு,
கயமைத்தனம்ன்னா என்னான்னு லக்கிலுக் மேல சத்தியமா எனக்கு தெரியாதுன்னுட்டாரு! என்ன பண்ண?!?

//Anonymous Anonymous said...

//ஒரு கமெண்டை தானே போடுவது, அல்லது, வெறுமனே வந்து ஒரு ஸ்மைலி போட்டுவிட்டு செல்வது ஆகியவை பின்னூட கயமைத்தனம் என்றழைக்கப் படுகிறது. `அதிஷா’ என்ற பதிவரால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது //

பின்னூட்ட கயமைத்தனமுன்னு பெயரு சூட்டி அந்த வேலையை மொதோமொதல்ல செஞ்சது லக்கிலுக்கு.

கும்மி, மொக்கையெல்லாம் கூட லக்கிலுக்கு ஆரம்பிச்ச ட்ரெண்டு தான். நீங்க இப்போ பார்க்குற லக்கியே வேற. அந்த காலத்து லக்கிய பாத்திருந்திங்க ஆடிபோயிட்டிருப்பீங்க.//

நன்றி லக்கிலுக்!

வெண்பூ said...

//கவுஜ’ //

கவுஜ என்ற வார்த்தைக்கான விளக்கத்தில் வலையுலக கவுஜாயினியை சுட்டிக்காட்டாத பரிசலை கண்டித்து இன்றைய கும்மிக்கு இந்த பதிவையே தேர்ந்தெடுப்போம் என்று எச்சரிக்கிறேன்...

சரவணகுமரன் said...

நல்லா விளக்கு விளக்குன்னு விளக்கி இருக்கீங்க... :-)

பரிசல்காரன் said...

//வெண்பூ said...

//கவுஜ’ //

கவுஜ என்ற வார்த்தைக்கான விளக்கத்தில் வலையுலக கவுஜாயினியை சுட்டிக்காட்டாத பரிசலை கண்டித்து இன்றைய கும்மிக்கு இந்த பதிவையே தேர்ந்தெடுப்போம் என்று எச்சரிக்கிறேன்...//

மனசுல இதப் பத்தி ஓட்டீட்டிருக்கும்போது நெனைச்சேன். எழுதும்போது, விட்டுட்டுச்சு!

ராப் - ஸாரி!

சின்னப் பையன் said...

வலைப்பதிவுகளின் அருஞ்சொற்பொருள் தந்த 'மூத்த பதிவர்' திரு. பரிசல் அவர்கள் வாழ்க வாழ்க!!!

பரிசல்காரன் said...

@ ச்சின்னப்பையன்

//வலைப்பதிவுகளின் அருஞ்சொற்பொருள் தந்த 'மூத்த பதிவர்' திரு. பரிசல் அவர்கள் வாழ்க வாழ்க!!!//

கவுத்துட்டாங்களே!

இந்த மூத்த பதிவர், புதிய பதிவர் பற்றி சொல்ல மறந்துவிட்டேன்!

VIKNESHWARAN ADAKKALAM said...

இந்த ஆராய்ச்சி பதிவுக்காக உங்களுக்கு ஒரு பி.எச்.டி பட்டம் குடுக்கலாங்க...

கயல்விழி said...

//மொக்கையாக எழுதப்படும் கவிதைகள் `கவுஜ’ என்றழைக்கப்படும். அதிலும் சிறந்த, கொடுமையான, கேவலமான, சூப்பரான கவுஜ கொலை வெறிக் கவுஜ’ எனப்படும் சுருக்கமாக கொ.வெ.க. இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணமாக நாமக்கல் சிபியின் `கவுஜ’யைச் சொல்லலாம்!//

ராப் எழுதிய கும்ளே கவிதையை மறக்கலாமா? :)

அதெப்படி தினமும் ஒரு பதிவு எழுத முடியுது உங்களால?

கோவை விஜய் said...

பதிவுலகில் பரவும் நட்புக் கலாச்சாரம்
பண்புகளை போற்றி மகிழட்டும்
பரஸ்பர நல்லுணர்வை வளர்க்கட்டும்
பதிவர்களின் எண்ணிக்கை பெருகட்டும்

பரிசல்காரன் said...

@ விக்கி

ஏனிந்த கொலவெறி?

@ கயல்விழி

//ராப் எழுதிய கும்ளே கவிதையை மறக்கலாமா? ://

மறக்கமுடியுமா? (அவங்கதான் என்னை மறந்துட்டாங்க கயல்!)

//அதெப்படி தினமும் ஒரு பதிவு எழுத முடியுது உங்களால?//

தினமும் ஒரு பதிவெழுதுவது எப்படி”ன்னே ஒரு பதிவு போட்டேனே, படிக்கலியா கயல்? (எல்லாம் ஒரு பயம்தான், ஒருநாள் நாம எழுதாம விட்டுட்டா தமிழை யாரு காப்பாத்தறதுன்னு!!)

@ விஜய்

நன்றி நண்பா!

Venkatramanan said...

//`ஏதாவது ஹெல்ப் வேணும்ன்னா சொல்லுடா. அங்க தெரிஞ்சவங்க இருக்காங்க' என்று நான் சொன்னேன். எந்த நம்பிக்கையில் அப்படிச் சொன்னேனென்றால் கயல்விழி முத்துலெட்சுமி அக்காவை நம்பித்தான்.//
Whether you said this as a fun or not, its big, you know!
Check with http://www.couchsurfing.com
You can couch surf a foreign lady & get 'good' treatment from Uma!

Venkatramanan

moorthi said...

நீங்க இத படிச்சீங்கலா இல்லையான்னு தெரியல.. மெயில் ல பார்வர்ட் ஆ வந்தது ,
படிச்சு ரொம்ப சிரிச்சு ரசிச்சேன்..

http://balavin.wordpress.com/2008/07/11/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/

நீங்க விசாரிச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ். அப்பா அம்மா எல்லாம் திருப்பூர் ல இருக்காங்க... நான் அந்த ப்லோக் ல வர மாதிரி ஒரு லைப் வாழ்ந்துட்டு இருக்கேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராப் வெளியூர் போயிருக்காப்ல..அதனால் தான் சரியா பின்னூட்டமுடியாம போயிருக்கும்/

Anonymous said...

சூப்பரு. இப்பத்தா பதிவுலகிற்குள் காலடி எடுத்துவைத்திருக்கிறேன்
எனக்கும் பதிவுகள் வாசிக்கக்குள்ள நிறய டவுட்டுகள் வரும். உங்ககிட்டயே கேக்கலாமா?

ஆணி புடுங்கறது ?????
பெட்டி தட்டறது ???????
டிஸ்கி ??????????
பின்னவீனத்துவம் ???????

நன்றி.
சுபாஷ்

துளசி கோபால் said...

டிஸ்கி = எங்கப்பன் குதிருக்குள் இல்லை