சிலரது வலைப் பூ ப்ரொஃபைல்லிலிருந்து சுவையான சில தகவல்கள்: (அனுமதியில்லாம எடுத்துட்டேன். மன்னிச்சுக்கங்க. கேஸ் போட்டுடாதீங்க!!)
Syam: (இவரு ப்ரொஃபைல் ரொம்பவே இண்ட்ரஸ்டிங்! தமிங்கிலீஷ்ல அடிச்சு வெச்சிருக்காரு. நான் உங்களுக்காக தமிழ்ல தர்றேன்!, ப்ராக்கெட்ல இருக்கறது என் கமெண்ட்!!)
வயசு: 676 (மாசத்துல சொல்லிருப்பாரோ?)
தொழில்: மாடு/கழுதை மேய்க்கறது (உண்மையோ என்னமோ, யாரு கண்டா?)
அவரைப் பற்றி: நல்லவன், வல்லவன், னாலும் தெரிஞ்சவன் – அப்படீன்னு சொன்னா நம்பவா போறீங்க? (ம்க்கும்.. நம்பீட்டாலும்!)
INTERESTS: குஷ்பூல ஆரம்பிச்சு நயந்தாரா வரைக்கும் இண்ட்ரஸ்டோ இண்ட்ரஸ்ட்தான்! (அதானே பார்த்தேன்!!)
ஃபேவரைட் மியூசிக்: ஹிந்துஸ்தானி, கஜல் – அப்படின்னு சொல்ல ஆசை. ஆனா அதெல்லாம் எனக்குப் புரியாதே..
ஃபேவரைட் புக்ஸ்: ராங் கொஸ்டீன்!
(இவ்ளோ நக்கல் திலகம் எழுதறதுக்கு லீவு விட்டது நாம செஞ்ச பாவம்!!)
சரவணகுமரன்:-
அவரைப் பற்றி: ஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன்.
விஜய் ஆனந்த்:-
Occupation: பொட்டி தட்டி
தமிழன்:-
அவரைப் பற்றி:: வேற்று கிரகத்தின் இளவரசன்... ஒரு பெண்மையிடம் தோற்றவன்... வாழ்வதற்காய் பூமிக்கு வந்தவன்...
Interests: வாழ்தல்!
தமிழ் பிரியன்:-
அவரைப் பற்றி: கரிசல் காட்டுக்குச் சொந்தக்காரன். பாண்டிய மண்ணின் மைந்தன்.
அதிஷா:
அவரைப் பற்றி: சிறகு விரிக்க எத்தனிக்கும் சிறிய பறவை
Babu: (ரெங்கராஜ் பாபு) தன்னைப் பற்றி சொல்லும்போது 100% மிடில் க்ளாஸ் என்றிருக்கிறார்!
இவரோட ப்ளாக் பேரு: ஒண்ணுமே புரியல. (நல்லா எழுதறாரு. தமிழ்மணத்துல இன்னும் இணைக்கலைன்னு நினைக்கறேன்!)
கிரி:- (நம்ம ரஜினிகிரி தான்)
லொகேஷன்: இப்போது சிங்கப்பூர், எப்போதும் தமிழ்நாடு
ப்ளாக் பேரு: மனசாட்சி!
VIKNESWARAN:
அவரைப் பற்றி: சொல்ல மாட்டேன் (இப்படித்தாங்க எழுதியிருக்காரு!)
லதானந்த்: (நம்ம அங்கிள்!)
அவரைப் பற்றி:
காட்டிலாக்கா அதிகாரி. வாழ்க்கையை ரசனையோடு கழிக்க விரும்புகிறேன்.
வாழ்வின் அனைத்து இன்பங்களையும் துய்த்து விட்டேனா? (இன்னும் இல்லையா? அடப் போங்க அங்கிள்...)
பிடித்த படங்கள்: சினிமா பிடிக்காது, சினிமாக்காரங்களைப் பிடிக்கும்! (அதானே!!)
(ஃபேவரைட் புக்ஸ்ல சரோஜாதேவி-யும் இருக்கு!!)
புதுகை எம்.எம்.அப்துல்லா:
அவரைப் பற்றி: நம்ப blog படிக்க நீங்க வந்ததே பெருசு!!! இதுல நம்பள பத்தி வேற நீங்க படிக்கனுமா? இன்னா கொடுமை சார் இது? (நல்லாச் சொன்னேள் போங்கோ!)
முத்துலெட்சுமி கயல்விழி:
இவங்க வசிக்கறது: டில்லி, புதுடில்லி (அதெப்படீங்க ரெண்டு எடத்துல?)
வெண்பூ: (பார்ட்னர்)
லொகேஷன்: தருமமிகு (நாற்றமிகுன்னு வெச்சிருக்கலாம்) சென்னை
ஃபேவரைட் மியூசிக்: நம்ம ராசா எசன்னா சோறுதண்ணிகூட வேண்டாம். (இதுதான் இவரை எனக்கு நெருக்கமாக்கின மேட்டர்!)
சென்ஷி: யாயும் யாயும் யாராகியரோ..! ஸ்நேகமுடன் நட்பை நாடும் வலை பயணம்
சின்ன அம்மணி:
ஃபேவரைட் மியூசிக்: எத்தனி இருக்கு. எதச் சொல்றது, எத விடறது!
விஜய்:
தனது ஊரான பெங்களூரை `பெண்களூர்’ என்றிருக்கிறார்!
இண்ட்ரஸ்ட்: ஃபிகருங்களுக்கு நூல் வுடறது
நனானி:
அவரைப் பற்றி: 'pretty to walk with- witty to talk with - என் தலைமையாசிரியர் சொன்னது.
நந்து f/o நிலா:-
அவரைப் பற்றி: நிலாவோட அப்பா. இத தவிர உருப்படியா சொல்லிக்க எதுவும் இல்ல. (இத நான் சொல்லலீங்க. அவரே சொல்லீருக்காரு!)
கைப்புள்ள:
அவரைப்பற்றி: மோகன் ராஜ். சில நேரங்களில் 'உதார்' விடும் கைப்புள்ள, சில நேரங்களில் எடுப்பார் கைப்புள்ள.எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க வேண்டும் என்ற நடக்கவே இயலாதக் குறிக்கோளைக் கொண்டுள்ள கனவுலகக் குழப்பவாதி.
நாமக்கல் சிபி:
அவரைப்பற்றி: கலாய்க்கிறது எனக்குப் பிடிக்கும். ஆனா கலாய்க்கிறது நானா இருக்கணும்!
கடைசியா ஒரு சூப்பர் மேட்டர்:-
வெயிலான்:
தனக்குப் பிடித்தவைகளைப் பற்றிக் கூறுகையில்..
அன்பும் சிறு ஆசையும்
பண்பும் சிறு பழகலும்
பூக்களும் சிறு புகழும்
படித்தலும் சிறு நடத்தலும்
ரசித்தலும் சிறு புசித்தலும்
குணமும் சிறு பணமும்
பயணமும் சிறு சயனமும்
கறுப்பும் சிறு மறுப்பும்
நட்பும் நல் நண்பர்களும்
நல் மனமும் நம் இனமும் பிடிக்கும்.
இன்னும் நிறைய இருக்கு. இப்போதைக்கு இவ்வளவே.
டிஸ்கி: தலைப்பே ஒரு மாற்றான் தோட்டத்து மல்லிகைதான். தோட்டத்துக்கு சொந்தக்காரர் அறிஞர் அண்ணா!
(ஸாரி.. எல்லோருக்கும் சுட்டி குடுக்காததுக்கு!)
.
27 comments:
நல்ல வேளை புரோபைலை ஆராய்ச்சி செய்யாம விட்டார். இல்லைன்னா டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நன்றி . நிஜமாவே ஆச்சர்யம், என்னடா நம்மை பற்றி எல்லாம் எழுதி இருக்கிறாரே என்று. உண்மையில் உங்கள் பாராட்டு கொஞ்சம் அதிகம்தான்.
தங்களுக்கு மெயில் அனுப்பிஉள்ளேன்.மீண்டும் நன்றி
புதுகை அப்துல்லாவோடது சூப்பர். நானும் அதையே போட்டுக்கலாம்னு பாக்கறேன். காப்பிரைட் பிரச்சனை வராதே!!!
அண்ணாச்சி ஏன் இப்படிலாம்
விருந்துக்கு கூப்பிட்டு வேட்டியை அவிழ்பதுன்னு சொல்லுவாங்களே !
(யாரும் சொல்லலையா ? அப்ப நான் சொல்றதாக வைத்துக் கொள்ளுங்கள் !)
:)
சும்மா ட்டமாஷ் !
இரண்டும் ஒன்று தானே பரிசல்...
சிட்டி டவுன் ... ஸ்டேட் ரீஜன் எல்லாத்துக்கும் எங்களுக்கு டில்லி தானே .. நியூ டெல்லின்னு அட்ரஸ் போடறது தான்.
:) ப்ரைபைலையும் படிச்சுட்டு விட்டறனும் அதெல்லாம் பெரிசா எடுத்துக்ககூடாது.. ப்ளாக் ஆரம்பிச்சப்ப சும்மா கேட்டாங்களேன்னுஅதெல்லாம் போடறது ..
@ தமிழ் பிரியன்
ஹி..ஹி..
@ பாபு
//நன்றி . நிஜமாவே ஆச்சர்யம், என்னடா நம்மை பற்றி எல்லாம் எழுதி இருக்கிறாரே என்று. உண்மையில் உங்கள் பாராட்டு கொஞ்சம் அதிகம்தான்.//
எந்த எதிர்பார்ப்புமில்லாமல் தினமும் வருகை புரியும் உங்களுக்கு ஏதோ என்னாலால கைமாறு!
@ சின்ன அம்மணி
//புதுகை அப்துல்லாவோடது சூப்பர். நானும் அதையே போட்டுக்கலாம்னு பாக்கறேன். காப்பிரைட் பிரச்சனை வராதே!!!//
அதெல்லாம் வராது.. அப்துல்லாகிட்ட நான் பேசிக்கறேன்!
@ அதிஷா
//அண்ணாச்சி ஏன் இப்படிலாம்//
நேத்து பூரா விட்டத்தைப் பாத்து யோசிச்சதுல இதுதான் தேறிச்சு. என்ன பண்ண பாஸூ?
@ கோவி. கண்ணன்
நல்ல பழமொழி! கொஞ்ச நாளா லக்கியப் பத்தி பதிவு போடு போட்டு அவர மாதிரியே பழமொழியெல்லாம் வருது உங்களுக்கு!!:-))
@ முத்தக்கா
தெரிஞ்சுதுக்கா. எப்படியாவது உங்களை வம்புக்கு இழுக்கணுமே.. அதான்..
வித்தியாசமான பதிவு.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ..! :)
புதுகை அப்துல்லாவோடது சூப்பர். நானும் அதையே போட்டுக்கலாம்னு பாக்கறேன். காப்பிரைட் பிரச்சனை வராதே!!!
//
என்ன அம்மினி இப்படி கேட்டு போட்டீங்க? உங்களுக்கு இல்லாததா!நல்லா எடுத்துக்கங்க கண்ணு!
@ bee morgan
thank u thalaivaa!
@ Abdhullah
ungalaukku munnnaadi naane anumathi kutuththuttene!
ஷ்யாம், அப்துல்லா, சிபி ஆகியோரடது பிரமாதம்ங்க.. //நான் இன்னாதான் விரிவா (expandable) எளுதி அறுத்தாக்கூட, நீங்க மனசு வெச்சு வளஞ்சு (flexible) குடுத்து, இதையெல்லாம் படிக்கறீங்கள்ள, அதான்யா எனிக்கு நொம்ப முக்கியமாப்படுது// இப்பிடின்னு ஒருத்தர் எழுதிருந்தாரே, அத உட்டுட்டீங்களே.!
அடப் போங்க அங்கிள்னா என்ன அர்த்தம். எல்லாம் துய்த்து முடிசிட்டேன்னு அர்த்தமா? இல்லாட்டி இன்னும் துய்க்காம இருக்கீங்களேன்னு சலிப்பா?
:) Thanks KKrishna!
பின்னூட்ட மாட்டேன்...
ஓகே. ஓகே... அடுத்தது பதிவர்களோட பதிவுத்தலைப்பு, பஞ்ச் லைன் அப்படின்னு ஒண்ணொண்ணா சொல்வீங்களா!!!!
ஆஹா... மத்த பதிவர்கள் மேட்டரை ஆட்டை போட்டே ஒரு பதிவு போட முடியுமா?? நல்ல கலெக்ஷன் பரிசல்.. சாதரணமா ஒருதடவை ஒவ்வொருத்தரோட ப்ரொஃபைல பாத்துட்டு மறந்துடுவோம். அதை கலெக்ட் பண்ணி நல்ல பதிவா போட்டிருக்கீங்க.. சூப்பர்.
புது ப்ரொஃபைல் போட்டோ சூப்பர்.. குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்துவிட்டார்கள்..
//சென்ஷி: யாயும் யாயும் யாராகியரோ..! ஸ்நேகமுடன் நட்பை நாடும் வலை பயணம்
//
நான் ரசிப்பது சென்ஷியின் கமெண்ட் செக்ஷன்..
//
பின்னூட்டத்த கேட்டு வாங்குறது சின்னப்புள்ளத்தனம்...
தானா போடுறது பெரிய மனுசத்தனம்..
நான் சின்னப்புள்ள இல்ல.. அவ்ளோதான் சொல்லுவேன் :)
//
மாற்றான் தோட்டத்து மல்லிகைகள், உங்களோட புரொஃபைல் எழுத்திலும் இருக்கிறது போல.. [அதை நான் லக்கிலுக் வலைப் பதிவில் பார்த்ததுண்டு] :)
நன்றி பரிசல் அண்ணே:)
ஆனா எந்த கமன்ட்டும் போடாம விட்டுட்டிங்களே...:)
ஆஹா!!!! இதுலருந்து ஏதாவத உருவ வேண்டியதுதா. நல்ல ஐடியா.
கே கே நான் தலைப்பை பார்த்ததும் பயந்துட்டேன்..ஆஹா நம்ம கே கே நல்லா தானே இருந்தாரு இப்படி ஆகிட்டாறேன்னு. நல்ல வேளை!! :-)))
@ தாமிரா
//நான் இன்னாதான் விரிவா (expandable) எளுதி அறுத்தாக்கூட, நீங்க மனசு வெச்சு வளஞ்சு (flexible) குடுத்து, இதையெல்லாம் படிக்கறீங்கள்ள, அதான்யா எனிக்கு நொம்ப முக்கியமாப்படுது// இப்பிடின்னு ஒருத்தர் எழுதிருந்தாரே, அத உட்டுட்டீங்களே.//
அது என் சொந்தத் தோட்டமல்லவா? மாற்றன் தோட்டமென்று எப்படிச் சொல்ல?
//லதானந்த் said...
அடப் போங்க அங்கிள்னா என்ன அர்த்தம். எல்லாம் துய்த்து முடிசிட்டேன்னு அர்த்தமா? இல்லாட்டி இன்னும் துய்க்காம இருக்கீங்களேன்னு சலிப்பா?//
இவ்வளவு துய்த்தபிறகும் துய்க்கலைன்னா என்னா அர்த்தம்ன்னு அர்த்தம்!!
@ வெயிலான்
தப்பு..தப்பு, தப்பு, அதெல்லாம் நீ ஏன் சொல்ற? சொல்லக்கூடாது..
அல்லாருக்கும் நன்றிங்கோவ்வ்வ்வ்வ்
வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வ்வ்வ்வ்வ்
பாஸ்,
என் வலைத்தளம் பற்றி இரண்டு வார்த்தை போட்டதற்கு ரொம்ப நன்றி.
பெண்களூர் என்றும் ஃபிகருங்களுக்கு நூல் வுடறது எல்லாம் போட்டு ஒரு 4 வருஷம் ஆயிடுத்து. இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டு, அதெல்லாம் எங்க பண்ண? இந்த மாதிரியெல்லாம் என் ப்ரொஃபைல் போட்டுருக்கேன்னு தெரிஞ்சா மேலிடம் கோபித்துக்கொள்ளும் :)
அன்புடன்,
விஜய்
அவனும் அவளும் என்ற பதிவருடைய ப்ளாக் பெயர் "சாவு"
Post a Comment