Monday, August 11, 2008

இனிமையான ஈரோட்டுப் பயணம்

சனிக்கிழமையன்று ஈரோடு சென்றதைப் பற்றி நேற்று பதிவு போட்டு, பதிவர் வால்பையனின் புகைப்படத்தையும் கொடுத்திருந்தேன்.

அந்தப் பதிவிலேயே, என் புகைப்படத்தை (முதன்முதலாக) பார்த்த பல லட்சக்கணக்கான... சரி..சரி... சில நண்பர்கள் “யோவ்.. அது நீதானா? கல்யாணம் ஆயிடுச்சுன்னு புருடா விட்டயா?” என்றெல்லாம் கேட்டு காய்ச்சி எடுத்து விட்டார்கள்!

எனக்கு உங்ககிட்ட வயசைச் சொல்றதுல எந்த வருத்தமும் இல்ல!

13.05.1974 – நான் பிறந்ததேதி.
22.08.1997 – திருமணமான நாள்! (23 வயசுலேயே!)

****************

ஓக்கே, மேட்டருக்கு வருவோம்!

வெயிலானுடன் அவர் நண்பர் நந்தகோபால், கார்த்திக் மற்றும் எங்கள் தேரின் சாரதியாக நண்பர் ராஜ் ஆகியோரும் வந்திருந்தார்கள்.



(வெயிலான், நந்தகோபால், ராஜ், கார்த்திக் (தொழிலதிபர்)

நந்தகோபால் ஒரு விஷயஞானி! எந்த சப்ஜெக்டைப் பற்றி என்றாலும் பேசித் தள்ளுகிறார். ஜிட்டு.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றியும், ஓஷோவைப் பற்றியும் அவர் பேசியதைப் பற்றி தனிப்பதிவே போடலாம்!

கார்த்திக் ஒரு தொழிலதிபர். (நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடியலப்பா) ஒண்ணுமே பேசாமலே வந்தார். மூன்று மணிக்கு கிளம்பி இரவு ஒரு மணிவரை சேர்ந்திருந்த இவர், பதினோரு மணிக்கு ஒரு கேள்வி கேட்டார் பாருங்க..

“ஆமா.. இவரு யாரு? எங்கிருந்து வந்திருக்காரு?”ன்னு, அதுவும் என்னைப் பாத்து கேட்டுட்டாரு!

ராஜ் எந்தக் கும்மியிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருந்தார். எங்கள் மொக்கைகளைக் கேட்டுக்கொண்டே பொறுமையாக காரோடியதற்கு இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! (இதில் நடுநடுவே நந்தகோபால் வேறு அவருக்கு காரோட்ட ஐடியா குடுத்துக் கொண்டிருந்தார்!)



ஊத்துக்குளிக்கு முன் விஜயமங்கலத்தில் ஒரு மிகப் பெரிய பாலம் கட்டியிருந்தார்கள். அங்கே நிறுத்தி சில புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம். அந்தப் பாலம் எப்போது கட்டினார்கள், எப்போது திறந்தார்கள் என்று விரல் நுனியில் விஷயம் வைத்திருந்து எடுத்துவிட்டார் நம்ம நந்தகோபால்!




(நந்தகோபால், ராஜ், அடியேன்)

ஈரோடு நெருங்குமுன், வால்பையனுக்கு தமிழ்மணத்திலிருந்து பேசுவதாகவும், நட்சத்திரப் பதிவராய் நீங்கள் தேர்வாகியிருக்கிறீர்களென்றும் சொல்லி கலாய்த்து, அவர் அதை நம்பி மிகப் பெரிய லெக்சர் ஒன்று கொடுக்க நான் மண்டை காய்ந்து போய், உண்மையைச் சொல்ல வேண்டியதாயிற்று!

ஈரோட்டில் காரை நிறுத்திக் காத்திருந்து, வால்பையன் வர முதன்முதலாக அவரைச் சந்தித்தோம். காலையிலிருந்து வேலை தந்த அலைச்சலால் சோர்ந்துபோய்க் காணப்பட்டார் வால்பையன். கொஞ்சநேரத்துக்கு வெயிலானைப் பரிசல்காரன் எனவும், நான் வெயிலான் எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினோம். ரொம்ப டீடெய்லா அவர் சில விஷயங்கள் கேட்கவே குட்டை உடைத்துவிட்டோம்!



(வால்பையன், வெயிலான்)

வால்பையன் ஈரோட்டில் செல்வாக்கு மிக்கவர் என்பது பார்த்தால் தெரிவதில்லை. அரசுக்கு சொந்தமான பல இடங்களுக்கு அனாயாசமாக அவர் செல்வதிலிருந்தும், அங்கிருக்கும் அரசு ஊழியர்களை அவர் வேலை வாங்குவதிலிருந்தும்தான் தெரிகிறது! அவரோடு வேறொரு இடத்துக்குப் போய் பல உலக விஷயங்களைப் பற்றி விவாதித்தோம். விஜய் டி.வி. நீயா நானா பற்றி பேச்சு வந்தபோது ”கோபிநாத் அடுத்தவங்க சொல்றத வெச்சு ப்ரோக்ராம் நடத்தறாரு” என்று நந்தகோபால் சொல்லிவிட, விவாதம் காரசாரமானது!

நடுவில் கார்த்திக் வந்தார். இவரும் ஒரு பதிவர். ரகசிய கனவுகள் என்ற வலைப்பூ எழுதி வருகிறார். உலக சினிமா பற்றியெல்லாம் எழுதுகிறார்.

“என் வலைப்பூவுல நிறைய பேரோட ப்ளாக்குக்கு சுட்டி குடுத்திருக்கேன். உங்களுக்குக் குடுக்கல. ஏன்னா எப்பப் பார்த்தாலும் ச்சும்மா மொக்கையாவே எழுதறீங்க” என்றார். சென்ஷிதான் பிடித்த பதிவராம். அய்யனாரையும் விடாமல் படிப்பாராம். ”உங்க பதிவுகளைப் படிக்கறப்ப நீங்க சென்ஷிக்கு கொஞ்சமாவது நண்பர்ன்னு நெனைக்கறேன். அந்த மரியாதைக்குதான் உங்ககிட்ட பேசறேன்” என்றவர்..

”உங்களுக்கு நகைச்சுவை ரொம்ப சரளமா வருது. நீங்க சினிமாவுக்குப் போகலாமே” என்றார். ”வாரா வாரம் போய்ட்டுதான் இருக்கேன்” என்றேன் நான்.

அவர் என் வலைப்பூவிற்கு சுட்டி கொடுக்காத கோபத்தில் அவரை நேரடியாகப் படமெடுக்காமல், முதுகை மட்டும் படமெடுத்தேன்!




(பதிவர் கார்த்திக்கின் முதுகு)

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், கார்த்திக் வால்பையனின் முதலாளியாம்! ஆனால் வால்பையனுக்கு எல்லா பணிவிடையும் இவர்தான் செய்துகொண்டிருந்தார். போதாதென்று வால்பையனை, `பாஸ்’ என்றுதான் அழைக்கிறார். அவர்கள் இருவரையும் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது!

இடையே நந்து f/o நிலா வந்தார். “புத்தகக் கண்காட்சிக்கு போய்ட்டு வந்துடுங்க. டின்னருக்கு உங்ககூட நான் கலந்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு சென்றார். உடனே நாங்கள் புறப்பட்டு புத்தக் கண்காட்சிக்குப் போனோம். (புத்தகக் கண்காட்சியும், புத்தகங்களும் பற்றி நாளை எழுதுகிறேன்!)

புத்தகக் கண்காட்சியில் இருக்கும்போதே, நந்து f/o நிலா அழைத்து டின்னருக்கு என்ன வேண்டும் என்று விசாரித்து, எல்லாருக்குமே டிஃபன் வாங்கி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இவரது அன்பிற்கு அடிபணிந்து நாங்கள் சீக்கிரமாகவே கிளம்பி சாப்பிடப் போனோம்! அங்கேயும் நந்து புகைப்படங்கள் பற்றியும், புகைப்படக்கலை பற்றியும் எனக்கு பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார். இடையிடையே ஒரு சில விஷயங்களுக்காக அவர் என்னை உரிமையோடு திட்டவும் செய்தார். அங்கிருந்தே ஆழியூரான், ரமேஷ் வைத்யா, லக்கிலுக், யெஸ்.பாலபாரதி, லதானந்த், (வடகரைவேலன் ஃபோனை எடுக்கல!) ஆகியோரோடு தொலைபேசியிலும் பேசி சுவையாகப் பலவிஷயங்களை விவாதித்தோம்!




(நந்து f/o நிலா, வெயிலான்)
ஒவ்வொரு பயணங்களின் போதும் ஒவ்வொன்றைக் கற்றுக்கொள்கிறேன் நான். இந்தப் பயணத்தில் வெயிலான் & தொழிலதிபர் கார்த்திக்கின் அமைதி, நந்தகோபாலின் விஷயஞானம் தந்த பிரமிப்பு, வால்பையனின் குழந்தைத் தனமான அன்பு, அவரது பாஸ் கார்த்திக்கின் ரசிப்புத்திறன் & பொறுமை, நந்து f/o நிலாவின் சகலகலா திறமை ஆகியவைகள் என்னை இன்னும் விட்டு விலகாமல் இருக்கின்றது!

வால்பையனுக்கு ஒரு வேண்டுகோள்: உடம்பைப் பார்த்துக்குங்க தலைவா!

கடைசியாக நந்து f/o நிலா சொன்ன ஒரு விஷயம் என்னை எக்கச்சக்கமாய் சிந்திக்க வைத்தது. நீங்களும் இதைப் பின்பற்றலாம் என்று நினைக்கிறேன்.

“ஒரு நாளைக்கு உங்களுக்கு வர்ற அலைபேசி அழைப்புல 30%க்கு மேல பதிவுலகம் சம்பந்தப் பட்டதா இருக்கக்கூடாது. இருந்தா உங்க தொழிலை விட்டு லைட்டா மாறிட்டுவர்றீங்கன்னு அர்த்தம். சுதாரிச்சுக்கங்க” என்றார்.

இந்த வாய்ப்பை எனக்கு தந்த வெயிலானுக்கும், எங்கள் பயணத்தை இனிமையாக்கிய சாரதி ராஜுக்கும் ஸ்பெஷல் நன்றிகள்!

74 comments:

Mahesh said...

ஆமா...இந்த பதிவர் சந்திப்பு....தற்செயலா நடந்ததா...இல்ல முன்னாடியே திட்டம் போட்டதா? உள்ளூர்காரங்க அடிக்கடி சந்திச்சுக்கறீங்க.. வாழ்த்துக்கள் !!

பரிசல்காரன் said...

தற்செயல்தான் மகேஷ்!

ஆனா, மிக இனிமையான ஒரு சந்திப்பு!!

குசும்பன் said...

நேற்று நான் கேட்ட தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு சும்மா தேதியை மட்டும் கொடுத்தால் பத்தாது, ஆதாரம் தேவை:)))

குசும்பன் said...

//புத்தகக் கண்காட்சியில் இருக்கும்போதே, நந்து f/o நிலா அழைத்து டின்னருக்கு என்ன வேண்டும் என்று விசாரித்து, எல்லாருக்குமே டிஃபன் வாங்கி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். //

கார்டன் ரெஸ்டாரண்ட் ஒன்றில் இருந்து ஆர்டர் செஞ்சு இருப்பாரே:)))
அதுக்கு அவர் ஆர்டர் கொடுத்தா மறுநாள் அவருக்கு முட்டை பிரியாணி இலவசம்:)))

Thamiz Priyan said...

நல்ல சந்திப்பு போல இருக்கு... வாழ்த்துக்கள்

குசும்பன் said...

ஆமா கடைசி போட்டோவில் கைய ஆட்டி பேசும் நடிகர் ஆரு? பார்க்க அப்படியே அச்சு அசலா... ரித்தீஸ் மாதிரி இருக்காரு.

Thamiz Priyan said...

நந்து f/o நிலா
“ஒரு நாளைக்கு உங்களுக்கு வர்ற அலைபேசி அழைப்புல 30%க்கு மேல பதிவுலகம் சம்பந்தப் பட்டதா இருக்கக்கூடாது. இருந்தா உங்க தொழிலை விட்டு லைட்டா மாறிட்டுவர்றீங்கன்னு அர்த்தம். சுதாரிச்சுக்கங்க”///

மிக்க சரியானது... :)

குசும்பன் said...

//அங்கேயும் நந்து புகைப்படங்கள் பற்றியும், புகைப்படக்கலை பற்றியும் எனக்கு பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார்.//

இந்த போட்டோ கிராபர்ஸ் தொல்லை தாங்கலப்பா:)))

பொண்ணு காதுக்குத்து எல்லாம் முடிஞ்சுட்டு அடுத்த பங்சனுக்கு போட்டோ புடிக்க கூப்பிடுறேன் என்று சொன்னீங்களா இல்லையா?

Thamiz Priyan said...

///குசும்பன் said...
ஆமா கடைசி போட்டோவில் கைய ஆட்டி பேசும் நடிகர் ஆரு? பார்க்க அப்படியே அச்சு அசலா... ரித்தீஸ் மாதிரி இருக்காரு.///
அண்ணே! வெயிலானுக்கு ஆசி வழங்கும் நந்தானாந்தா ஸ்வாமிகள் அது.... ;))

குசும்பன் said...

//“ஒரு நாளைக்கு உங்களுக்கு வர்ற அலைபேசி அழைப்புல 30%க்கு மேல பதிவுலகம் சம்பந்தப் பட்டதா இருக்கக்கூடாது. இருந்தா உங்க தொழிலை விட்டு லைட்டா மாறிட்டுவர்றீங்கன்னு அர்த்தம். //

ஆங்ங் ஆனா சாட்டுல ஒரு நாளைக்கு 26 மணி நேரம் இருந்தா தொழிலில் நங்கூரம் போட்டு விலகாமல் ஸ்டார்ங்கா இருக்கிறார்கள் என்று அர்த்தமாம்?

என்னமா டிப்ஸ் கொடுக்கிறாங்கப்பா!!!:)))

எங்கே அந்த நந்து தாத்தா of நயன்தாரா.

குசும்பன் said...

//”உங்க பதிவுகளைப் படிக்கறப்ப நீங்க சென்ஷிக்கு கொஞ்சமாவது நண்பர்ன்னு நெனைக்கறேன். அந்த மரியாதைக்குதான் உங்ககிட்ட பேசறேன்” என்றவர்..//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
முடியல இப்படிக்கு
சென்ஷி மனசாட்சி

பரிசல்காரன் said...

@ குசும்பன்

//ஆதாரம் தேவை://

அதான் ரைட் சைடுல ரெண்டு குட்டீஸ் போட்டோ போட்டிருக்கேனே தல..

//கார்டன் ரெஸ்டாரண்ட் ஒன்றில் இருந்து ஆர்டர் செஞ்சு இருப்பாரே:)//

எப்படி கரெக்டா சொல்றீங்க?

//ஆமா கடைசி போட்டோவில் கைய ஆட்டி பேசும் நடிகர் ஆரு? பார்க்க அப்படியே அச்சு அசலா... ரித்தீஸ் மாதிரி இருக்காரு.//

நிஜமாவே நடிக்கப் போகலாம். ஸ்மார்ட்டாதான் இருக்காரு.

@ தமிழ்பிரியன்

நன்றி நண்பா.

பரிசல்காரன் said...

@ குசும்பன்

//முடியல இப்படிக்கு
சென்ஷி மனசாட்சி//


நேத்து ச்சாட்ல வந்த சென்ஷியும் இதே டயலாக்கைத்தான் சொன்னாரு!

குசும்பன் said...

பரிசல்காரன் said...
//கார்டன் ரெஸ்டாரண்ட் ஒன்றில் இருந்து ஆர்டர் செஞ்சு இருப்பாரே:)//

கொசு ரோட்டில் இருக்கும் மற்ற ஹோட்டல்களில் பார் வசதி இருக்கு ஆனால் இங்கு அது கிடையாது, இங்கு பார் கிடையாது என்பதால் குடும்பமாக பலர் வருவார்கள், வீக் எண்ட், இரவு 9 மணிக்கு மேல் கூட்டம் நெருக்கி தள்ளும், அப்படின்னு சொல்லிட்டு ஆள் இல்லாத டீ கடையில் பொருப்பா டீ ஆத்துவது போல் நீங்க மட்டும் தனியா இருந்துட்டு வந்து இருப்பீங்களே!!!:)))

கிரி said...

ஒரு பதிவர் சந்திப்பையே நடத்திட்டீங்க போல சென்னை பதிவர் சந்திப்பு மாதிரி :-))

கலக்குங்க

குசும்பன் said...

பரிசல்காரன் said...
நிஜமாவே நடிக்கப் போகலாம். ஸ்மார்ட்டாதான் இருக்காரு.//

அடங்கொக்கமக்கா டிபன் வாங்கி கொடுத்ததுக்காக இப்படியா!!!

யார் அங்கே பரிசலிடம் என் போட்டோவையும் ஒரு 1/2 பிளேட் பிரியாணியையும் வாங்கி தரவும்.

KARTHIK said...

// ”உங்க பதிவுகளைப் படிக்கறப்ப நீங்க சென்ஷிக்கு கொஞ்சமாவது நண்பர்ன்னு நெனைக்கறேன். அந்த மரியாதைக்குதான் உங்ககிட்ட பேசறேன்” என்றவர்..//

அடப்பாவி இங்க வந்து நாரடிச்சது பத்தாதுன்னு
இதுல வேறையா
அவரு நந்தகுமாரு நல்ல படிய ஊடு போயிசேந்தார ?

ஆயில்யன் said...

//13.05.1974 – நான் பிறந்ததேதி.
22.08.1997 – திருமணமான நாள்! (23 வயசுலேயே!)//

ஹய் என்னிய விட ரொம்ப பெரியவரு :)))

ஆயில்யன் said...

திங்கள் கிழமை காலையிலேயே கும்மி என்பது

உங்களுக்குத்தான் முதல் நாள்!


எங்களுக்கு 3வது நாளு ஸோ நோ தப்பு:)))

ஆயில்யன் said...

//ஓக்கே, மேட்டருக்கு வருவோம்!//

வந்தாச்சு:)

ஆயில்யன் said...

//கிருஷ்ணமூர்த்தியைப் பற்றியும், ஓஷோவைப் பற்றியும் அவர் பேசியதைப் பற்றி தனிப்பதிவே போடலாம்!
//

வெயீட்டீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Sanjai Gandhi said...

//அங்கேயும் நந்து புகைப்படங்கள் பற்றியும், புகைப்படக்கலை பற்றியும் எனக்கு பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார்.//
அங்கயுமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ :((
நாட்ல இந்த புகைபட வல்லுநர்கள் தொந்தரவு தாங்கலைடா சொக்கா.. :P

Sanjai Gandhi said...

//குசும்பன் said...

ஆமா கடைசி போட்டோவில் கைய ஆட்டி பேசும் நடிகர் ஆரு? பார்க்க அப்படியே அச்சு அசலா... ரித்தீஸ் மாதிரி இருக்காரு.//

அட.. அது ஒலக நாயகன் கமல் இல்லயா? :(

Sanjai Gandhi said...

//தமிழ் பிரியன் said...

நல்ல சந்திப்பு போல இருக்கு... வாழ்த்துக்கள்//

திருத்தம் : நல்ல சாப்பாடு போல இருக்கு. வாழ்த்துக்கள். :))

ஆயில்யன் said...

//உங்க பதிவுகளைப் படிக்கறப்ப நீங்க சென்ஷிக்கு கொஞ்சமாவது நண்பர்ன்னு நெனைக்கறேன். அந்த மரியாதைக்குதான் உங்ககிட்ட பேசறேன்” என்றவர்..///

தெய்வம் எல்லாரையும் கவர் பண்ணியிருக்கா :))))

தெய்வமே எங்கப்பா இருக்க????

ஆயில்யன் said...

//ஒரு நாளைக்கு உங்களுக்கு வர்ற அலைபேசி அழைப்புல 30%க்கு மேல பதிவுலகம் சம்பந்தப் பட்டதா இருக்கக்கூடாது. இருந்தா உங்க தொழிலை விட்டு லைட்டா மாறிட்டுவர்றீங்கன்னு அர்த்தம். சுதாரிச்சுக்கங்க” என்றார்.//


ஹாஹாஹா :)))))

நம்பர் கொடுக்காம எஸ்ஸாகியிருக்கலாமோன்னு ஃபீல் பண்ணியிருப்பீங்க :)

ஆயில்யன் said...

//குசும்பன் said...
ஆமா கடைசி போட்டோவில் கைய ஆட்டி பேசும் நடிகர் ஆரு? பார்க்க அப்படியே அச்சு அசலா... ரித்தீஸ் மாதிரி இருக்காரு.
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ஆயில்யன் said...

//குசும்பன் said...
//அங்கேயும் நந்து புகைப்படங்கள் பற்றியும், புகைப்படக்கலை பற்றியும் எனக்கு பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார்.//

இந்த போட்டோ கிராபர்ஸ் தொல்லை தாங்கலப்பா:)))

பொண்ணு காதுக்குத்து எல்லாம் முடிஞ்சுட்டு அடுத்த பங்சனுக்கு போட்டோ புடிக்க கூப்பிடுறேன் என்று சொன்னீங்களா இல்லையா?
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)))

ஆயில்யன் said...

இந்த வாய்ப்பை எனக்கு தந்த பரிசலுக்கு ஸ்பெஷல் நன்றிகள்!

இப்ப போறேன்!

திரும்பவும் வருவேன் :)

ஆயில்யன் said...

அட 30ம் நாமதானா?????

Sanjai Gandhi said...

//“யோவ்.. அது நீதானா? கல்யாணம் ஆயிடுச்சுன்னு புருடா விட்டயா?” என்றெல்லாம் கேட்டு காய்ச்சி எடுத்து விட்டார்கள்!

எனக்கு உங்ககிட்ட வயசைச் சொல்றதுல எந்த வருத்தமும் இல்ல!

13.05.1974 – நான் பிறந்ததேதி.
22.08.1997 – திருமணமான நாள்! (23 வயசுலேயே!)//

அவங்க தான் எதோ காமெடி பண்றாய்ங்கன்னா.. அத சீரியசா எடுத்துகிட்டு பொறுப்பா பதில் சொல்லி இவரு வேற காமெடி பன்றாருய்யா...

தனுஷ் தெரியுமா உங்களுக்கு? அவருக்கு ஒரு கொய்ந்த கூட இருக்கு சாமி.. அவரையே நாங்க நம்பறோம்.. உங்களுக்கு ஒரு பேரன் இருக்கான்னு சொன்னா கூட நம்புவோம்.

நானும் பாத்துட்டு தான் இருக்கேன். ஒவ்வொரு பதிவர் சந்திபுலையும் இவருக்கு இதே வேலையா போச்சி. இவருக்கு கல்யாணம் ஆய்டிச்சாம். ஆனா யாரும் அதை நம்ப மாட்டேங்கறாங்களாம். இன்னொருக்கா இந்த டயலாக சொன்னிங்க... உங்களுக்கு அதிகாரபூர்வமில்லாம எவ்ளோ இருக்குனு டீட்டெய்லா சொல்லிபுடுவேன் ஆமா.. :D :D

ஆயில்யன் said...

//உங்களுக்கு அதிகாரபூர்வமில்லாம எவ்ளோ இருக்குனு டீட்டெய்லா சொல்லிபுடுவேன் ஆமா.. :D :D//

:))))))))


அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா!!!!

Sanjai Gandhi said...

//“ஒரு நாளைக்கு உங்களுக்கு வர்ற அலைபேசி அழைப்புல 30%க்கு மேல பதிவுலகம் சம்பந்தப் பட்டதா இருக்கக்கூடாது. இருந்தா உங்க தொழிலை விட்டு லைட்டா மாறிட்டுவர்றீங்கன்னு அர்த்தம். சுதாரிச்சுக்கங்க” என்றார்.//

//அங்கிருந்தே ஆழியூரான், ரமேஷ் வைத்யா, லக்கிலுக், யெஸ்.பாலபாரதி, லதானந்த், (வடகரைவேலன் ஃபோனை எடுக்கல!) ஆகியோரோடு தொலைபேசியிலும் பேசி சுவையாகப் பலவிஷயங்களை விவாதித்தோம்!//

உங்ககிட்ட இருந்து போற அழைப்புல 30%க்கு மேல பதிவுலகம் சம்பந்த பட்டதா இருந்தா என்ன அர்த்தம்னு கெக்கலையா? :P

நாதஸ் said...

//அவர் என் வலைப்பூவிற்கு சுட்டி கொடுக்காத கோபத்தில் அவரை நேரடியாகப் படமெடுக்காமல், முதுகை மட்டும் படமெடுத்தேன்!//

ha ha ha :)

M.Rishan Shareef said...

//எனக்கு உங்ககிட்ட வயசைச் சொல்றதுல எந்த வருத்தமும் இல்ல! //

என்னங்க வீட்டுக்காரம்மா சொல்லிவுட்டாங்களா?
"அழகா போட்டோ எல்லாம் போட்டிருக்கீக..ஏதாச்சும் அப்ளிகேஷன்ஸ் வந்திச்சு. தொடப்பக் கட்ட பிஞ்சிடும்" னு எச்சரிச்சி விட்டாகளா? அடுத்த பதிவிலேயே உங்களுக்குக் கல்யாணமாயிடுச்சி..இதுதான் பிறந்ததினம்னு அள்ளிவிடறீங்க ? :P

M.Rishan Shareef said...

//கார்த்திக் ஒரு தொழிலதிபர். (நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடியலப்பா)//

கார்த்திக், சீக்கிரமாக ஒரு நடிகையைத் திருமணம் முடிக்கக் கடவதாக !!!

M.Rishan Shareef said...

//அவர் என் வலைப்பூவிற்கு சுட்டி கொடுக்காத கோபத்தில் அவரை நேரடியாகப் படமெடுக்காமல், முதுகை மட்டும் படமெடுத்தேன்! //

நீங்க சொன்னாலும் சொல்லாட்டிலும் எங்க தல, ஈரோடு சிங்கத்தோட முதுகு கூட அழகுதான்.. அதை போட்டோ எடுக்க நீங்க கொடுத்துவச்சிருக்கணும் :P

நந்து f/o நிலா said...

கொய்யால... குசும்பா... துபாய்லயேவா இருந்திருவ?திரும்ப ஊருக்கு வருவீல்ல. வாடி அப்ப வெச்சுக்கறேன் கச்சேரிய.

தல ரித்திசோடு என்னை கம்பேர் பண்ணதுக்கு ரொம்ப நன்றி :D

நந்து f/o நிலா said...

//நந்து புகைப்படங்கள் பற்றியும், புகைப்படக்கலை பற்றியும் எனக்கு பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார்.//

சிக்க வெச்சுட்டீங்களே க்ருஷ்ணா.இப்ப பாருங்க ஊடுகட்டி அடிக்கறாய்ங்க. இதுக்கு சரக்கு டம்ளரோட என்னை எடுத்த போட்டோவையே போட்டு இருக்கலாம்.டேமேஜ் கம்மியாத்தான் இருந்திருக்கும்.

நந்து f/o நிலா said...

குசும்பா பேச்சைக்குறை. ஒரு லிங்க் கேட்டா கொடுக்க துப்பில்ல. ஒரு அப்பாவிய டேமேஜ் பண்றதுன்னா பறந்துகிட்டு வந்துட வேண்டியது.

KARTHIK said...

// கார்த்திக், சீக்கிரமாக ஒரு நடிகையைத் திருமணம் முடிக்கக் கடவதாக !!! //

ரிஷான் அந்த கார்த்திக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்க.

KARTHIK said...

// நந்து f/o நிலா said...
இதுக்கு சரக்கு டம்ளரோட என்னை எடுத்த போட்டோவையே போட்டு இருக்கலாம்.டேமேஜ் கம்மியாத்தான் இருந்திருக்கும்.//

நீங்க சரக்கெல்லாம் அடிப்பிங்களா ?

M.Rishan Shareef said...

//ரிஷான் அந்த கார்த்திக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்க. //

அதுக்கென்னங்க? அதான் இன்னொரு கார்த்திக்கும் மீனா முதல் நயந்தாரா வரை இருக்காங்கள்ல ? :P

குசும்பன் said...

SanJai said...

உங்ககிட்ட இருந்து போற அழைப்புல 30%க்கு மேல பதிவுலகம் சம்பந்த பட்டதா இருந்தா என்ன அர்த்தம்னு கெக்கலையா? :P//

உலக கடலைன்னு அர்த்தம்.

குசும்பன் said...

கார்த்திக் said...

நீங்க சரக்கெல்லாம் அடிப்பிங்களா ?//

ரொம்ப தப்பான கேள்வி? அப்ப அப்ப குடிதண்ணி எல்லாம் குடிப்பீங்களான்னு இருந்து இருக்கனும்?

இரவு 10 மணிக்கு பிறகு சாட்டில் ஒரு ஹாய் சொல்லி பாரும்!!!

அதன் பிறகு சாட்டு பக்கமே போக மாட்டீர்:(((

குசும்பன் said...

நந்து f/o நிலா said...

குசும்பா பேச்சைக்குறை. ஒரு லிங்க் கேட்டா கொடுக்க துப்பில்ல. ஒரு அப்பாவிய டேமேஜ் பண்றதுன்னா பறந்துகிட்டு வந்துட வேண்டியது.//

அப்பாவியா யாரு யாரு யாரு இருங்க தேடிட்டு வருகிறேன்.

என்னா லிங் என்று பொதுவில் கேட்கவேண்டியதுதானே:)))))

குசும்பன் said...

எம்.ரிஷான் ஷெரீப் said...
அப்ளிகேஷன்ஸ் வந்திச்சு. தொடப்பக் கட்ட பிஞ்சிடும்" னு எச்சரிச்சி விட்டாகளா? அடுத்த பதிவிலேயே உங்களுக்குக் கல்யாணமாயிடுச்சி..இதுதான் பிறந்ததினம்னு அள்ளிவிடறீங்க ? :P//

ஒரே ஒருமுறைதான் பிஞ்சுபோகும் அடிக்கடி பிஞ்சுபோகாது!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அண்ணா பரிசல் அண்ணா

போனில் 30 % ஓகே.. சந்திப்பு இப்படி அடிக்கொருதரம் நடத்துவதுக்கு கருத்து என்ன?

VIKNESHWARAN ADAKKALAM said...

மகிழ்ச்சியான பதிவு...

உங்கள் திருமண நாள் என் அம்மாவின் பிறந்த நாள். என் அம்மாவின் பிறந்த நாள் வரும்போதெல்லாம் உங்கள் திருமண நாள் ஞாபகத்தில் வரும் இனி.

VIKNESHWARAN ADAKKALAM said...

50வது பின்னூடம் நானு...

VIKNESHWARAN ADAKKALAM said...
This comment has been removed by the author.
புதுகை.அப்துல்லா said...

அண்ணே எப்ப எல்லலாரும் சென்னைப் பக்கம் வர்றீங்க?

வால்பையன் said...

//கார்த்திக் வால்பையனின் முதலாளியாம்! ஆனால் வால்பையனுக்கு எல்லா பணிவிடையும் இவர்தான் செய்துகொண்டிருந்தார். போதாதென்று வால்பையனை, `பாஸ்’ என்றுதான் அழைக்கிறார். அவர்கள் இருவரையும் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது!//

உங்க கண்ணுல கொள்ளிகட்டைய வைக்க!

வால்பையன்

குசும்பன் said...

வால்பையன் said...
உங்க கண்ணுல கொள்ளிகட்டைய வைக்க!

வால்பையன்//

வால்பையன் எனி ஹெல்பு வேண்டுமா? எப்பவும் ரெடி:)))

பரிசல்காரன் said...

THANKS 2 EVERYBODY..

SPECAILLY..

MUTHTHAKKAA..

ENNAATHITHU??

VIKNESHWARAN ADAKKALAM said...

பரிசல் முதல் அனுபவம் தொடர் பதிவு எங்க நிக்குதுனு கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க...

ச.பிரேம்குமார் said...

//13.05.1974 – நான் பிறந்ததேதி.//

பாத்தா அப்படி தெரியலையே:)

//22.08.1997 – திருமணமான நாள்! (23 வயசுலேயே//

கொடுத்து வச்ச மவராசன் ;) ஒரு பதினோரு நாள் முன்னாலேயே வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன் உங்க திருமண நாள்'க்கு

ச.பிரேம்குமார் said...
This comment has been removed by the author.
கூடுதுறை said...

//வால்பையனுக்கு ஒரு வேண்டுகோள்: உடம்பைப் பார்த்துக்குங்க தலைவா!//

சற்றே உரக்கச்சொல்லுங்கள் பரிசல்காரரே...
நானும் பலமுறை சொல்லிவிட்டேன் மப்பை குறைக்கச்சொல்லி....

ஆனாலும் எனக்கு இப்படி ஒரு பதிவர் சந்திப்பை எனக்கு கூறாமல் விட்டதற்கு வால்பையனுக்கு வேண்டும்...

இனி நிஜமாகவே தமிழ் சசி கூப்பிட்டால் கூட ஏங்க நிஜமாவே சசிதானா இல்லை எங்கேவாது வரும் வழியில் மண்டபத்தில் இருந்து கூப்பிட்டு கலாய்க்கும் பதிவரா என்றுதான் கேட்பார்....

ஜோசப் பால்ராஜ் said...

படிக்க படிக்க பொறாமைய இருக்குங்க.
அடுத்த தடவ நானு இந்தியா வாரப்ப, எல்லா ஊர்ல இருக்க பதிவர்களும் கட்டாயம் ஒரு பொதுவான இடத்துல சந்த்திகணும். எல்லாரும் வந்து போறதுக்கு முதல் வகுப்பு குளிர்சாதானம் பொருத்தப்பட்ட பெட்டியில் ரயில் பயணம் மேற்கொள்ள ஆகும் செலவை குசும்பனும், மற்ற செலவுகளை ஈரோட்டில் எல்லாருக்கும் உணவு படைத்த நிலாவின் அப்பா நந்து அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள். தேதி , இடம், நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

சின்னப் பையன் said...

நிறைய பதிவர்களை - குறிப்பாக வாலை - படம் போட்டு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி....

சின்னப் பையன் said...

//”உங்களுக்கு நகைச்சுவை ரொம்ப சரளமா வருது. நீங்க சினிமாவுக்குப் போகலாமே” என்றார்//

அப்போ பயங்கரமா மொக்கை போட்டு அறுத்தா, ஆபரேஷன் பண்ணலாமா!!!

Thamira said...

சஞ்ஜய் ://ஒவ்வொரு பதிவர் சந்திபுலையும் இவருக்கு இதே வேலையா போச்சி. இவருக்கு கல்யாணம் ஆய்டிச்சாம். ஆனா யாரும் அதை நம்ப மாட்டேங்கறாங்களாம்//
இன்னா ரொம்ப எளமையா இருக்கோம்னு நெனைப்பா.. அப்போ நாங்கல்லாம்? (புரொபைல்ல நீங்க பாக்குறது என்னியத்தான்.. என்னியத்தான்னு எத்தினி தபா சொல்றது?)

ரிஷான் ://எச்சரிச்சி விட்டாகளா? அடுத்த பதிவிலேயே உங்களுக்குக் கல்யாணமாயிடுச்சி..இதுதான் பிறந்ததினம்னு அள்ளிவிடறீங்//
ரிப்பீட்டேய்ய்.

Anonymous said...

//(வடகரைவேலன் ஃபோனை எடுக்கல!)//

ஏம்பா நீ கூப்ட்டது ராத்திரி 12.54க்குனு சொல்லுப்பா.

Anonymous said...

ரெண்டு நாளா இது பரிசல்காரன் பக்கம் மாதிரியே இல்லை. வெயிலான் பக்கம் மாதிரி எனக்கே சந்தேகம் வருது.

தொழிலதிபர் பேர் கண்ணன், கார்த்தி இல்லை. மாத்துங்க.

ரொம்பவும் நல்ல நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறீர்கள்.

நீங்கள் சினிமாவுக்கு போகலாமே? ;)

வால்பையன் said...

என் பங்குக்கு

வால்பையன்

Anonymous said...

/// ஏம்பா நீ கூப்ட்டது ராத்திரி 12.54க்குனு சொல்லுப்பா... ////

ஆமா! அத சொல்லுப்பா.. மொதல்ல.

// அங்கிருந்தே ஆழியூரான், ரமேஷ் வைத்யா, லக்கிலுக், யெஸ்.பாலபாரதி, லதானந்த், (வடகரைவேலன் ஃபோனை எடுக்கல!) ஆகியோரோடு தொலைபேசியிலும் பேசி சுவையாகப் பலவிஷயங்களை விவாதித்தோம்! //

நாட்குறிப்பு கார்த்தி விருப்பத்திற்காக ஆடுமாடு அண்ணாச்சியிடமும் தொலைபேசியது மறந்து விட்டதா? இருந்தாலும் இருக்கும். இந்தியில் அவரிடம் பேசியதாவது நினைவிருக்கிறதா பரிசல்.

நந்துவின் விருப்பத்திற்கிணங்க ஆழியூரான்!

அப்புறம் பெருந்'தல'ய்கள் - பாலபாரதி,லக்கி,ரமேஷ் வைத்யா,வெண்பூ,லதானந்த் அங்கிள்.

வார இறுதியின் இரவில் தட்டிக் கழிக்காது, இன்முகத்துடன் தொலைபேசிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

மிஸ்டு கால் பார்த்து நண்பர் மொபைலில் கூப்பிட்டு அரை மணி நேரம் பேசிய 'தல' பாலபாரதிக்கு சிறப்பு நன்றி!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்னங்கண்ணா செய்யறது அதான் மாசம் தேதி எல்லாம் போட்டுட்டீங்களே? :)

தமிழன்-கறுப்பி... said...

உங்களை பாத்தா இத்தனை வயசு மாதிரி தெரியலை....

தமிழன்-கறுப்பி... said...

பல பேர படத்தோட அறிமுகப்படுத்தி இருக்கிறிங்க...
நன்றி

தமிழன்-கறுப்பி... said...

நல்ல பயணம் போல..
உண்மைதான் பிரயாணங்கள் கற்றுத்தருகின்றன...

Natty said...

குசும்பன் கமெண்ட் எல்லாத்தையும் ஒன்னாப்போட்டு ....

ரிப்பீட்டேய்.... ;)

மீ த 72ன்ட்டு

துளசி கோபால் said...

மணநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

அதென்ன 23 வயசுலேயே.......

நாங்களும் 22 இல் கட்டிக்கிட்டோம்.
ரெண்டுபேருக்கும் ஒரே வயசுதான். சிலமாசங்கள்தான் வித்தியாசம்:-)

Nithi said...

இதயம் நிறைந்த இனிமையான மணநாள் வாழ்த்துக்கள்...