அன்புள்ள வால்பையன்!
நலம். நாடலும் அஃதே!
கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டுப் பீர் போத்தலையும், சைட் டிஷ்களையும் தவிர்த்து இதை எழுதுகிறேன்.
தங்களின் வலைப்பூ அரும்பாக இருந்தபோதிலிருந்து வாசித்துத் தொலைக்கவில்லை! மெள்ள நகர்ந்து, வேகமெடுத்துப் பதிவுகள் மழையாகப் பொழியும் இன்னேரம், உங்களது பதிவுகளை வேறு வழியில்லாமல் வாசித்து வருகிறேன்.
அவ்வப்போது எனது கருத்துக்களைப் பின்னூட்டங்களின் மூலமும் தொலைபேசியிலும் ச்சேட்டீலும் தெரிவித்தும் வருகிறேன். இருப்பினும் தற்போது ஒரு கடிதம் - அதுவும் பகிரங்கக் கடிதம் எழுதும் நிர்பந்தம் ஏன் வந்தது? சொல்கிறேன். மேலே படியுங்கள்.
கொஞ்ச நாளாகவே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இன்று சொல்ல வைத்தது சமீபத்திய சந்திப்பு ஒன்று. அதில் ஓரன்பர் குறிப்பிட்டார். 6.6%க்கும் அதிகமாக ஆல்கஹால் கலந்திருக்கும் சரக்கையடித்தால் உடல்நலக் குறைவு ஏற்படுமென்று!
ஆம். நண்பரே! அது மட்டுமல்ல! இந்த சரக்கடிப்பது என்பது ஒண்ணாம் நெம்பர் கெடுதலான பழக்கம். எந்தப் பழக்கமும் கெட்ட பழக்கம் அல்ல என்பது எனது சித்தாந்தம். ஆனால் எப்பழக்கத்திற்கும் நாம் அடிமையாகிவிடக் கூடாது என்பதிலும் உறுதியாய் இருப்பேன்.
ஆனால் நீங்கள் போதை என்னும் பழக்கத்துக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பது எனது வேண்டுகோள்.
உங்களுடைய இந்த வயது சம்பாதிக்க வேண்டிய வயது. குடும்பத்தில் அக்கறை மிகக் காட்ட வேண்டிய வயது. தொழிலில் வெறியாய் முன்னுக்கு வருவதையே நினைத்து அதற்கான முயற்சியில் முழு மூச்சாக இயங்க வேண்டிய வயது.
உங்களுடைய உண்மையான ஓய்வு வேளையில், எப்போதாவது பீர், பிராண்டி மற்ற எல்லா சரக்குகளையும் அடியுங்கள். நல்ல வெளிநாட்டு மதுவகையை நாடுங்கள். உங்கள் திறமை அசாத்தியமானது. நிச்சயம் ஜெயிப்பீர்கள். இன்னொரு சரக்கு மாஸ்டராகக்கூட வரமுடியும். (கோட்டர் கோயிந்தசாமி கோவை வரும்போது உங்களுக்குத் தகவல் சொல்கிறேன். அறிமுகப் படுத்தியும் வைக்கிறேன்.)
போதையுலகு ஒரு மிரேஜ். சில சரக்கு ரசிகர்கள் இருப்பார்கள். ஒருத்தன் சரக்கடித்து உளறும்போது அவனை ஓஹோ என்று புகழுவார்கள். அவன் மட்டையானால், தங்கள் போதைக்கு அடுத்த ஊறுகாய் தேடிப் போய் விடுவார்கள். அதைப் போல எல்லா பார்களிலும் கொம்புசீவிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நான் முதன் முதலில் பீரடித்த போதே வடகரை வேலன் இதுபற்றி என்னை எச்சரித்தார்.
சில கேள்விகளை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
1) காலையில் எழுந்தது முதல் இன்று என்ன சரக்கடிப்பது. எதை சைட் டிஷ்ஷாக தொட்டுக் கொள்வது என்ற சிந்தனையுடனே இருக்கிறீர்களா?
2) எத்தனை பேர் நமது பக்கத்து பெஞ்சில் என்ன சரக்கடிக்கிறார்கள் என அறியும் ஆர்வத்தோடேயே இருக்கிறீர்களா?
3) கோவிலில் கழிக்கும் நேரம் நீங்கலாக மற்ற அனைத்து நேரமும் மப்பிலேயே வேண்டுமென்று நினைக்கிறீர்களா?
4) குடும்பத்தோடு ஆற அமர்ந்து பொழுதைக் கழிக்க முன்பு போல முடியவில்லையா?
5) எப்போதடா டாஸ்மாக்கில் போய் உட்காரலாம் எனக் காலை முதல் இரவு வரை துடிப்பாயிருக்கிறதா?
6) உங்கள் குவாட்டரை சிந்தாமல் அடிக்க முடிகிறதா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மனச் சான்றின் படி பதில் சொல்லிப் பாருங்கள். உங்களுக்கே தெரியும் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பது.
இரவில் நெடு நேரம் உங்களை டாஸ்மாக்கில் காண முடிகிறது.
(“அப்ப நீ மட்டும் அர்த்த ராத்திரியில் டாஸ்மாக்கில் என்ன செய்கிறாய்?” என்கிறீர்களா? உரிய பதில் இல்லை. இருந்தாலும் சொல்ல முடியாது.)
இரவு என்பது இறைவன் கொடுத்த வரம். இளைஞரான உங்கள் குடும்பத்துக்குத்தான் அந்த நேரம் சொந்த நேரமே தவிர unproductive, un remunerative, time consuming, tiresome, lengthy and tedious டாஸ்மாக்குக்கல்ல.
பகல் பூராவும் முதலாளி கார்த்திக்கின் செல்வம் பெருக உழைத்துவிட்டு நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிட்டுவிட்டு இரவிலும் இந்த டாஸ்மாக்கில் நடமாடுவது நியாயமா?
எனக்குத் தெரிந்து டாஸ்மாக்கில் கணக்குப் பிள்ளையாயிருந்த எவனோ ஒருத்தன் தொழிலின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்துகொண்டு தானே கல்லாவை காலி பண்ணி இன்று கோடீஸ்வரராய் இருக்கிறான்.
ஒரு பெண் தேவதையைக் குழந்தையாயும் பெற்றிருக்கிறீர்கள். அவளுக்கு உன்னதமான கல்வி அளிக்க வேண்டுமல்லவா? தலை சிறந்த முதல் நிலை அதிகாரியாக அவள் ஆனால் எவ்வளவு நன்றாயிருக்கும்?
வெளிநாட்டில் படித்துப் பணிபுரிந்தால் எப்படியிருக்கும்? அதற்காக உழையுங்கள்.
அவ்வப்போது சரக்கடியுங்கள். அதிகமா சரக்கடிப்பவர்களைச் சில வகைகளில் எளிதாகப் பிரிக்கலாம்.
வேறு எந்தப் பொழுதுபோக்கும் இல்லாதவர்கள்.. .. .. ஒரு ஸ்பான்சர் கிடைத்து பாரும் கிடைத்ததால் சர்வ சதா காலமும் எதையாவது குடித்துக் கொண்டிருப்பவர்கள்.
குடிப்பதைத் தவிர வேறு வேலை இல்லாதவர்கள். எதையாவது குடிக்காவிட்டால் … (சரி வேண்டாம்.)
இன்னும் சிலர் டாஸ்மாக்கிலேயே பணிபுரிபவர்கள்.. … இவர்களுக்கு குவாட்டர் பாட்டில் ஒரு வரமாக இருந்து கொஞ்ச காலத்துக்குப் பின் சாபமாக மாறியிருக்கும். அவர்கள் தங்களின் சுயத்தை முழுதும் இழந்துவிடாதிருக்க என்னேரமும் எதையாவது குடிப்பார்கள்
இன்னும் சிலர் பலவித மன நெகிழ்வுகளுக்கு ஆளானவர்கள். தங்களை மற்றவர்கள் குடிகார நாயே என்று திட்ட வேண்டும் என விரும்புவார்கள். ஏன் தங்களுக்கு குவாட்டருக்கு மேல் வேண்டும் எனவும் விரும்புபவர்கள்.
இன்னும் சிலர் மேல்தட்டு குடிகாரர்கள்.
இன்னும் சிலர் என்னை மாதிரி. பரபரப்பில்லாமல் ஓய்வு நேரம் கிடைக்கும்போது ஒரு பீர். When time warrants we wear an entirely different mask. இது ஒரு விளையாட்டு மாதிரி. வேடிக்கை பார்க்கிற feeling! குடிப்பதைவிட குடிகாரர்களை அவதானிப்பவர்கள்.
பீர்முகம்மது போன்றோர் மாதிரி அளவாக, ராவாக மாதம் ஒரு முறை அல்லது வருடம் இருமுறை முறை குடியுங்கள்.
Kindly be a balanced man. Don’t get excited!
எல்லாருக்குமே தான் மப்பில் இருக்க வேண்டுமென்ற உந்துதல் இருக்கும்.
குழந்தைகள் தேவையில்லாமல் அழுவதும் குமரிகள் அங்கங்கள் பிதுங்க ஆடை அணிவதும் தொப்புள் தெரியச் சேலை கட்டுவதும் எதற்காக என்று நினக்கிறீர்கள்? Exhibitionism என்கிற ஒருவிதமான phobiaவின் லேசான வெளிப்படுதான் இவை.
தாமஸ் ஹார்டி சொன்னது போல “far from the madding crowd” ஆக இருக்க வேண்டாமா நீங்கள்?
ஒரு முறை கோட்டர் கோயிந்தசாமியிடம் கேட்டேன்.
“ஐயா! விஸ்கியும், பிராண்டியும் இவ்வளவு ராவாய் அடிக்கிறீர்கள். ஊற்றியும் கொடுக்கிறீர்கள்.. நீங்கள் ஏன் ஒரு பார் ஆரம்பித்து அதில் குடித்துக் கொண்டேயிருக்கக்கூடாது?”
“அதிகம் கோட்டர் கிடைக்காத டாஸ்மாக் ஊழியன் தனது இல்லக் கிழத்தியை வைத்து சாராயம் காய்ச்சும் பணி செய்தமையை ஞான் செய்ய விரும்பவில்லை” என்றார்.
கடும் சினம் வந்தது எனக்கு. முதல் முறையாகக் கடுமையான வார்த்தைகளால் அவரைக் கடிந்துவிட்டுக் குவளையைப் பாதியிலேயே வைத்துவிட்டு எழுந்து வந்துவிட்டேன். அன்றிலிருந்து 4 நாட்களாய் அவருடன் பேசுவதைத் தவிர்த்தும் விட்டேன்.
வால்பையன்! மீண்டும் சொல்கிறேன். போதையிலிருந்து உடனடியாக மீளுங்கள். உடல்நலம் கெடுவதைத் தவிர வேறெந்த முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் டாஸ்மாக் உலகம்!
பின்குறிப்புகள்:
1. நேற்று முழுதும் இருந்த இறுக்க மனநிலை தவிர்க்கவே இந்த மொக்கை!
2. இப்படி ஒரு மொக்கை வரும் என்று எழுதும் முன்னும், எழுதியபின்னும் வால்பையனுக்கு தெரிவிக்கப்பட்டது.
3. லதானந்த் அங்கிளுக்கும், ஐயா உங்க லெட்டரைப் போல நானும் ஒண்ணு எழுதீருக்கேன். கிண்டல் பண்ணினதா நெனச்சுக்காதீங்க என்று அலைபேசியிலழைத்துச் சொல்லப்பட்டது! “போட்டுக்கடா மாப்ளே” என்று அனுமதி கொடுத்த அவருக்கும் நன்றி!
4. நான் ஒரு நாளில் இணையத்தில் அமர்வது 45 நிமிடம் முதல் இரண்டு மணி நேரங்கள். என் உமாவின் அனுமதியுடன், ஞாயிறு ஒன்பது மணிக்குள் பதிவிட்டபின், அந்த தினம் மனைவி, குழந்தைகளுடன் மட்டுமே!
5. இந்தக் கடிதம் கிண்டலடிக்கும் தொனியில் எழுதப்பட்டாலும் வால்பையன் வாரம் இருநாள் தவிர்க்க இயலாமல் சென்றுவரும் டாஸ்மாக் பயணத்தை நிறுத்தும் நோக்கத்துடனேயே எழுதப்பட்டது. (அவரிடம் அனுமதி பெற்று)
6. வால்பையனை திருத்தும் இந்தப் புனிதப் பணியில் நந்து, குசும்பன், நாமக்கல் சிபி, கூடுதுறை, வெண்பூ, வடகரை வேலன் வெயிலான் ஆகியோரும் இணையுமாறு (சீரியஸாகவே) கேட்டுக்கொள்ளப் படுகிறது.
7. நான் கெட்ட கேட்டுக்கு அடுத்த பதிவு 100ஐத் தொடுது! அதுல என்ன தலைப்புல எழுதறதுன்னு உங்களையே கேட்டிருக்கேன். சைடுல இருக்கற POLL ல க்ளிக்கி ஓட்டுப் போடுங்க.
8. ”ஒண்ணும் எழுதாதே”ங்கற ஆப்ஷன் குடுக்கல. குடுத்தா அதுதான் அதிக ஓட்டு வாங்கும்ன்னு தெரியும்!
(டேய்... ப்ளாக்குல போறவனே, வாரத்துக்கு ஒண்ணு எழுதுடான்னா, அந்த ஒண்ணையே ஏழு பதிவோட நீளத்துக்கு எழுதுவியா நீ? இரு..இரு.. உனக்கு அடுத்த கடிதம் தயாராய்கிட்டே இருக்கு!!)
இந்தப் பதிவிற்கான லேபிள்: (200 கேரக்டருக்குமேல் BLOG ஏற்றுக்கொள்ளவில்லை. என் கேரக்டருக்கு அது ஒத்துவராத்தால் இங்கே கொடுக்கிறேன்!)
மொக்கை, சீரியஸ், உயிர்த்தெழுதல், வால்பையன், சரக்கு, அங்கிள் கோவப்படமாட்டார், இவன் திருந்தமாட்டான், எக்கேடோ கெட்டு ஒழிங்கடா, என்ன கொடுமை பரிசல் இது, என்ன கொடுமை அங்கிள் இது? முத்துதங்கச்சிக்கு நன்றி, வேலண்ணனுக்கு நன்றி, மை ஃப்ரண்டுக்கு நன்றி, அதிஷாவுக்கு நன்றி, ஜிம்ஷாவுக்கு நன்றி, நாமக்கல் சிபிக்கு நன்றி, குசும்பனுக்கு நன்றி, சஞ்சய்க்கு நன்றி, ஈரோடு கார்த்திக்கு நன்றி, வால்பையனுக்கு நன்றி, லக்கிலுக்குக்கு நன்றி, சென்ஷிக்கு நன்றி, கோவியாருக்கு நன்றி, எல்லாருக்கும் நன்றி
67 comments:
தூள் தலை..... Superb comeback...
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்..
ஆ..மீ த பஷ்டூ????
//6. வால்பையனை திருத்தும் இந்தப் புனிதப் பணியில் நந்து, குசும்பன், நாமக்கல் சிபி, கூடுதுறை, வெண்பூ, வடகரை வேலன் வெயிலான் ஆகியோரும் இணையுமாறு (சீரியஸாகவே) கேட்டுக்கொள்ளப் படுகிறது.//
ஒரு ஐடியா!!! நாமளும் இனிமே வார கடைசியில ஈரோட்டுக்கு போயி வால்பையன் காசுல டாஸ்மாக் அடிப்போம். ஒண்ணு காசு எல்லாம் காலியாகி அவரு டாஸ்மாக் போறதையே விட்டுடுவாரு.. இல்லைன்னா நம்மள கழட்டி விடுறதுக்காக வலைப்பக்கத்தில போடுற மொக்கைய நிறுத்திடுவாரு.. எப்படியோ யாருக்கோ ஒண்ணு நல்லது நடக்கும். என்னா சொல்றீங்க???
என்ன குசும்பு , குசும்பு புடிச்ச கிழவா
படவா ராஸ்கோலு.....நெஞ்சு மேல ஏறி மிதிச்சு போடுவேன்
நடத்துங்க :-)
என்ன சொல்றதுன்னே தெரியல!
உங்க அன்புக்கு நான் கட்டுபடுகிறேன்!
ஆனா நான் உங்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதனுமே
இருங்க ஒரு குவாட்டர் போட்டுட்டு வர்றேன்
வால்பையன்
இது என்னை பற்றி வரும் திட்டுகளையும், பாராட்டுகளையும் தெரிந்து கொள்ள
வால்பையன்
:))
இந்த விளையாட்டு நல்லா இருக்கே. :-))
ஆனா வெறுமன find & replace போட்டா மாதிரி இருக்கறதுனால அவ்வளவு சுவாரசியம் வரலை :-)
நண்பர் வால்பையன் ஏன் எப்போதும் பின்னூட்டத்துல கீழ 'வால்பையன்'ன்னு தனியா எழுதறார்? அதுதான் அவரோட வாலா? இல்ல அவ்வளவுதான் வால்தனமா? :-))
பட்டைய கிளப்புது உங்க கடிதம்... :-)
நண்பர் பரிசிலாருக்கு என் வன்மையான கண்டனங்கள். வால்பைய்யனுக்கு நீங்கள் தனியா மடல் அனுப்பி சொல்ல வேண்டிய ஒரு விஷயத்தை பொதுவில் அவர் பெயரை போட்டு சொல்வதால் அவர் எவ்வளவு காயப் படுவார் என்பதை அறிவீர்களா? அடுத்தவரை சுய பரிசோதனை செய்ய சொல்லி ஏகப்பட்ட வரிகளை நிரப்பிக் கொள்ளும் உங்கள் புத்திசாலித் தனத்தை பீற்றிகொள்ள இது போன்ற பதிவுகள் தேவையற்றது. ஏன் நீங்கள் வால் பையனை இதுவரையில் சந்தித்ததே இல்லையா? தொலைபேசியில் பேசியதே இல்லையா? அப்போது இதெல்லாம் சொல்ல வேண்டியது தானே.
நீங்கள் விஷய ஞானம் உள்ளவர் என்பதை வழக்கம் போல ஒரு சுய தம்பட்ட பதிவாக போட வேண்டியது தானே... உங்களுக்கு திருமணம் ஆகிவிட்ட போதும் இளமையாகவே இருப்பதாக பலர் சொல்லுவதாக பொய்யாக பீற்றிகொண்டிருந்த நீங்கள் இப்போது இது போன்ற வேலையிலும் இறங்கி இருப்பது வேதனையான விஷயம்...
எனக்கு தெரிந்த வரையில் நீங்கள் " திருமன வீட்டில் மாப்பிளையாகவும், சாவு வீட்டில் பிணமாகவும் " இருக்க ஆசை படுபவர். அதனால் தான் பிறரின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பி உங்க அறிவாற்றலையும் போதிக்கும் திறனையும் உலகறிய செய்திருக்கிறீர்கள்.
உங்களிடம் நன்கு பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன். உங்களின் பெரும்பாலான குணங்களை மாற்றிக் கொள்ளுங்கள். இதை சொல்ல வந்தால் தேவை இல்லாமல் வியாக்கியானம் பேசுவீர்கள். பட்டால் தான் உமக்கு புத்தி வரும் ஓய்.
உங்க விருப்பப் படியே இந்த பதிவு சூடான் இடுகையில் வந்துடும்ய்யா. இதானே நீங்க எதிர்பார்த்தது.
( அண்ணே. போதும்ணே. இனி இது போன்ற வேலையில் எல்லாம் ஈடுபட்டு உங்கள நீங்களே தாழ்த்திக்காதிங்க.)
நண்பர் வால்பையனுக்கு . இதை விட்டுவிடுங்கள் நண்பா. இவருக்கு பதிலடி பதிவு எதுவும் போடாதிங்க.
சூப்பரு.
வாவ். சோசியல் சர்வீசுன்னா இதுதாங்க.
// அவ்வப்போது சரக்கடியுங்கள். அதிகமா சரக்கடிப்பவர்களைச் சில வகைகளில் எளிதாகப் பிரிக்கலாம்.///
செம றிசேச்சுண்கண்ணா
// இந்தப் புனிதப் பணியில் .... ஆகியோரும் இணையுமாறு (சீரியஸாகவே) கேட்டுக்கொள்ளப் படுகிறது. //
அப்போ பகிரங்க கடித செயின் ஒண்ணு கலக்கலாக ஆரம்பிச்சுவச்ச பெருமை உங்களைத்தான் சேரும்.
/// ...ஒண்ணையே ஏழு பதிவோட நீளத்துக்கு எழுதுவியா நீ? இரு..இரு.. உனக்கு அடுத்த கடிதம் தயாராய்கிட்டே இருக்கு!!)////
அடுத்து எழுதுபவர்க்கு டொப்பிக் கூட ரெடி!!!!
அந்த கடிதம் வாசிச்சு ஒரு மாதிரியா பாரமா ஆயிட்டுது. ஆனா இந்த கடிதம் வாசிக்க வாசிக்க சிரிப்ப அடக்க முடியல. இருவரின் அணுகுமுறையும் வேறாயிருந்தாலும் அது பாரமில்லாம நாசூக்கா, வாழைப்பழத்துல ஊசியேத்துற மாதிரி இருக்கு. நிஜமாவே சூப்பர்.
தொடர்ந்தும் எதிர்பார்ப்புகளுடன் சுபாஷ்
//ஒண்ணும் எழுதாதே”ங்கற ஆப்ஷன் குடுக்கல. குடுத்தா அதுதான் அதிக ஓட்டு வாங்கும்ன்னு தெரியும்!//
:)))))))))
\\முத்துதங்கச்சிக்கு நன்றி, //
இதைத்தான் நேற்றே சொன்னேன் சொன்னாக்கேட்டுக்குவார் போலத்தெரியுதேன்னு .. :) நடத்துங்க..
///சஞ்சய் said...
நண்பர் பரிசிலாருக்கு/////
இத நா இன்னோரு பதிவில "." கூட மாறாம பாது்திருக்கேனே.....
ஆஹா..
உங்கனால ஒரு நாள்தான் அமைதியா இருக்க முடிஞ்சுதா???
==. நான் ஒரு நாளில் இணையத்தில் அமர்வது 45 நிமிடம் முதல் இரண்டு மணி நேரங்கள். என் உமாவின் அனுமதியுடன், ஞாயிறு ஒன்பது மணிக்குள் பதிவிட்டபின், அந்த தினம் மனைவி, குழந்தைகளுடன் மட்டுமே!
==
சூப்பர் முடிவு..
அங்க்கிள் இதத்தானே சொன்னாரு..
//// அது பாரமில்லாம நாசூக்கா,/////
sorry
இது ன்னு டைப்படிக்கறத்துக்கு பதிலா அதுனு அடிச்சிட்டேன்.
பரிசல்,
மிக அதிகமான மப்புக்கு பின் காரமான கருத்துக்களுடனான கலக்கல்.
பையனின் வாலை ஒட்ட வெட்டியிருக்கீங்க.
உங்களைப் போன்று மூன்றாம் மனிதன் இடத்தில் நின்று பார்த்து சொல்லி திருத்துபவர்கள் மிகக்குறைவு.
தங்களின் கனிவுக்கும், கலக்கலுக்கும் ஒரு ராயல் சேலஞ்ச்! ச்சே! சல்யூட்!
வாலு,
எடுத்தேன்! கவிழ்த்தேன்! என்று இப்படி குடிப்பது சரியல்ல.
பரிசலின் வார்த்தைகளில் சொல்வதானால் “இவ்வளவு ஸ்பீட் தேவையில்லை”.
கொஞ்சம் நிதானத்துடன் குடித்திருந்தால், பரிசல் இந்த பதிவு போட்டிருக்க மாட்டார்.
உங்களை குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. தெளிய, தெளிய குடிக்க சொல்கிறார்.
புரிந்திருக்குமென நினைக்கிறேன்.
புரியாவிட்டால் ஒரு குவார்ட்டர் அடித்து விட்டு படிக்கவும். :)
இந்த வாரம், கடித வாரம்..
அடுத்து யாரு யாருக்கு கடிதம் எழுதப் போறது?????
அப்துல்லா அண்ணே, நீங்கதான் அடுத்தகடிதம் போறீங்கனு எனக்குள்ள பட்சி சொல்லுது.
கீழே உள்ள பின்னூட்டம் போலியிடன் வந்துள்ளது.
உண்மையான லதானந்த் மாமா எழுதுன கடிதத்த கிண்டல் அடிச்சதுக்கு போலியிடமிருந்து வந்துள்ள பின்னூட்டம். பரவாயில்லை போலியும் மாமா மாதிரியே கொங்கு தமிழ் வழக்குல பேச முயற்சி பண்றாரு.
//லதானந்த் said...
படவா ராஸ்கோலு.....நெஞ்சு மேல ஏறி மிதிச்சு போடுவேன்//
செம கலக்கல்!!!
எம்புட்டு நாள்தான் பகிரங்க கடிதம் எழுதிக்கிட்டே இருப்பீங்க எல்லோரும்:)))
வாரமலரில் வருவது போல் சில அந்தரங்க கடிதங்களும் எழுதவும் படிக்க கிளு கிளுப்பாக இருக்கும்:)))
//4) குடும்பத்தோடு ஆற அமர்ந்து பொழுதைக் கழிக்க முன்பு போல முடியவில்லையா?//
ஆமாங்க உட்காரவே முடியலைங்க “----ஸ்” பிராபிளம்:)
//unproductive, un remunerative, time consuming, tiresome, lengthy and tedious //
பின்னூட்டம் மட்டுமே போட்டு வந்த lotto lottery டிக்கெட் ஆளுங்க இப்ப பதிவுக்கு நடுவிலும் எழுத ஆரம்பிச்சுட்டாங்கடோய்!!!
//6) உங்கள் குவாட்டரை சிந்தாமல் அடிக்க முடிகிறதா?//
சிந்தாமல் உச்சா கூட அடிக்க முடிவது இல்லை.
இப்படிக்கு
வால் பையன்
//6. வால்பையனை திருத்தும் இந்தப் புனிதப் பணியில் நந்து, குசும்பன், நாமக்கல் சிபி, கூடுதுறை, வெண்பூ, வடகரை வேலன் வெயிலான் ஆகியோரும் இணையுமாறு (சீரியஸாகவே) கேட்டுக்கொள்ளப் படுகிறது.//
நந்துவும், சிபியும் மட்டை ஆகி வீட்டில் இருப்பதால் இந்த பணியை நாளை தெடருவார்கள்.
வாங்க குசும்பா? உங்களுக்கு ஒரு கடிதம் போட்டுருவமா?
//குசும்பன் said...
ஓட்டி போட்டதை வெளியில் சொல்ல கூடாது இருந்தாலும் நான் சொல்கிறேன்.
மூன்றையும் கலந்து கட்டி எழுதித்தொலை இதுக்குதான் ஓட்டு போட்டேன், கடைசி வார்த்தைக்காகவே:)))
//
"எதையாவது எழுதித் தொலை"ன்னு ஒரு ஆப்ஷன் கொடுக்காத பரிசலுக்கு கண்டனங்கள்
//5. இந்தக் கடிதம் கிண்டலடிக்கும் தொனியில் எழுதப்பட்டாலும் வால்பையன் வாரம் இருநாள் தவிர்க்க இயலாமல் சென்றுவரும் டாஸ்மாக் பயணத்தை நிறுத்தும் நோக்கத்துடனேயே எழுதப்பட்டது. (அவரிடம் அனுமதி பெற்று)//
டாஸ்மாக்கில் கிடைப்பவை தமிழ் பானங்கள் அல்ல என்பதால் வால்பையனை கள்ளுக்கடைக்கு மாற்றும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
ஓட்டு போட்டதை வெளியில் சொல்ல கூடாது இருந்தாலும் நான் சொல்கிறேன்.
மூன்றையும் கலந்து கட்டி எழுதித்தொலை இதுக்குதான் ஓட்டு போட்டேன்.
கடைசி வார்த்தைக்காகவே:)))
வெண்பூ said...
வாங்க குசும்பா? உங்களுக்கு ஒரு கடிதம் போட்டுருவமா?//
போடுங்க ஆனா ஸ்டாப் ஒட்டி போடுங்க!!!:)
சூப்பரப்பு!
அடுத்த ரவுண்டுக்காக வால்பையனும் “சரக்கிடமிருந்து விடைபெறுகிறேன்!”ன்னு ஒரு பதிவு எழுதியிருக்காரான்னு செக் பண்ணிட்டு வர்றேன்.
:-))))))))
பரிசல் நீங்கள் விட்டு விட்ட முக்கியமான பாயிண்ட்!!!
உங்களை குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை குடிச்ச பாட்டில்களை கம்பெணிகளுக்கு அனுப்புங்க என்றுதான் சொல்கிறேன்.
இத இத இதைத்தான் எதிப்பார்த்தேன். ;-)
////6. வால்பையனை திருத்தும் இந்தப் புனிதப் பணியில் நந்து, குசும்பன், நாமக்கல் சிபி, கூடுதுறை, வெண்பூ, வடகரை வேலன் வெயிலான் ஆகியோரும் இணையுமாறு (சீரியஸாகவே) கேட்டுக்கொள்ளப் படுகிறது.////
யாரு திருந்துறாங்களோ இல்லையோ.. எங்க சிபி அண்ணாத்தே கண்டிப்பா திருந்தனும். அதுக்கு ஏதாச்சு வழி இருக்கா?
(தோ உன் பக்கத்துல ஒரு கதவு இருக்கு. அதுல புகுந்து போன்னு தமாஷெல்லாம் பண்ணப்படாது. ;-))
// ஆனால் வால் பையனுக்கு நீங்கள் எழுதியது அவருக்கோ அவரைபோன்ற ஒரு சிலருக்கோ மட்டுமே பொருந்தும் அதை எப்படி பொதுவில் வைக்கலாம், இதை எல்லாம் மொக்கை தமாஷ் என்று எடுத்துக்கொள்ள முடியாது.
லியோ சுரேஷ்//
இதைத் தெளிவாய்ப் படியுங்கள்...
இது எல்லாக் குடிகாரர்களுக்கும் பொருந்தும்!
என்னது!! எல்லாரும் திருந்தீட்டாங்களா!! எல்லாரும் திருந்தினா எப்படீங்க மத்தவங்களுக்கு பொழுதுபோகும் :):)
ரொம்ப அருமை! மகிழ்ச்சி!
//இருங்க ஒரு குவாட்டர் போட்டுட்டு வர்றேன்
வால்பையன்//
thats the sprit :)
//
நான் ஒரு நாளில் இணையத்தில் அமர்வது 45 நிமிடம் முதல் இரண்டு மணி நேரங்கள். என் உமாவின் அனுமதியுடன், ஞாயிறு ஒன்பது மணிக்குள் பதிவிட்டபின், அந்த தினம் மனைவி, குழந்தைகளுடன் மட்டுமே!
//
நல்ல முடிவு!! வாழ்த்துக்கள்... :))
வால்பையன்,
KK சொல்றதைக் கேட்டு நடந்துக்கோங்க... :P
இப்பொ நெஜமான "வால்பையன்" யாருன்னே தெரியலையே !!
மீள்வருகை....சூப்பர்!
கலக்குங்க தல!
பதிவில் இருக்கிற லேபிள் செம சூப்பர்!
ஹாஹா... கலக்கிட்டீங்க.. போட்டுத் தாக்குங்க...
யாராவது 'பரிசல் சொன்னது சரியா?' அப்படின்னு பதிவு போடுங்கப்பா....
Is it a relay post?
அடிச்சு ஆடுங்க தல
எப்பங்க திருந்த போறீங்க ?
இப்பத்தான் விரதமிருக்கிற லட்சணத்தைப் பாருங்கன்னு ச்சின்னப்பையன் கிட்ட சொல்லிட்டு வந்தேன்:)
ஏங்க, என்னங்க நடக்குது இங்கே..?
ஒருத்தர் குவார்ட்டர்ங்கறார், இன்னொருத்தர் பெக்குங்கறார்...
சரக்கு + ப்ளாக் = ????
உங்க லேபிள்ஸ் சூப்பருங்க... :))
அட கருமமே! நையாண்டிக்கு ஒரு அளவு இல்லையா?
பெண்களும் படிக்றாங்க என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்!
உள்குத்து கேள்விப்பட்டு இருக்கேன்...
எதிர்குத்து? இந்த பதிவை படித்த பின்புதான் புரிகிறது.
எதிர்குத்து குத்த லதானந்து அவர்களிகட்மே அனுமதி வாங்கி குத்தி இருப்பது உங்கள் சாமர்த்தியம் ... :) வாழுத்துக்கள்
சத்தியமா தரயில விழுந்து சிரிச்சேன்..
:)
:)
அடப்பாவிகளா..
அப்பிடியே LATHANATH எழுதின மாதிரி.
:)
:):)
:):)
:):)
:):)
:):)
:):)
:):)
:):)
:):)
:):)
:)
லேபில்-ல எனக்கு நன்றி சொல்லலையே..
BACK TO FORM............????????
சரக்கடிப்பதை நிறுத்திவிட்டேன், நன்றி பரிசல்காரன்
/
வால்பையனை திருத்தும் இந்தப் புனிதப் பணியில் நந்து, குசும்பன், நாமக்கல் சிபி, கூடுதுறை, வெண்பூ, வடகரை வேலன் வெயிலான் ஆகியோரும் இணையுமாறு (சீரியஸாகவே) கேட்டுக்கொள்ளப் படுகிறது.
/
அருமையான ஆட்கள் தெரிவு செஞ்சிருக்கீங்க இந்த புனித பணிக்கு!!
:)))))))))))))
அடடா இது இன்னொரு தொடர் விளையாட்டா நான் லதானந்த் பதிவை கொஞ்சம் சீரியஸா படிச்சிட்டேன் போல
:)))))))
/
M.Saravana Kumar said...
லேபில்-ல எனக்கு நன்றி சொல்லலையே..
/
ரிப்பீட்டு
நெக்ஸ்ட்டு யாருக்கு யாரு பகிரங்க கடிதம் எழுதப்போறாங்கன்னு தெரியலையே
:((
//நான் கெட்ட கேட்டுக்கு அடுத்த பதிவு 100ஐத் தொடுது!//
ஹிஹி.. சேம் பின்ச்.. :P
நானும் உங்களுக்கு ஒரு பகீங்கிர கடிதம் எழுதியிருக்கிறேன்....நேரமிருந்தால் படித்துவிடுங்கள்.
சந்தோஷப்படுவேன்....
கலக்கிட்டீங்க நண்பரே.. :)
Post a Comment