Thursday, August 14, 2008

நானும், வலைப்பூவும் என் நண்பர்களும்

நான் முதன்முதலில் எழுதிய படைப்பே எதிர்க்குத்துப் படைப்புதான். 1991ல் வாரமலரில் ஒரு பெண், `எங்களை குத்துவிளக்கென்று வர்ணிக்காதீர்கள்.. கொளுத்துகிறார்கள்’ என்று ஆரம்பித்து பெரிய கவிதையொன்று எழுதியிருந்தார். உடனே `என்னடா இது ஆண்குலத்திற்கு வந்த சோதனை’ என்று பொங்கி எழுந்து “உங்களை குத்துவிளக்கென்று வர்ணிப்பது கொளுத்துவதற்கல்ல. உங்களால் உலகிற்கு வெளிச்சம் கிட்டுவதை வெளிப்படுத்தத்தான்..” என்று ஆரம்பித்து பதில் கவிதை எழுதி அனுப்பினேன். எல்லோரது கெட்ட நேரத்துக்கு அந்தக் கவிதை 21.04.1991ல் பிரசுரமாகிவிட்டது! (அதை இங்கே எழுதினால் `நீ எழுதறத நிறுத்துடா’ என்று கொலை மிரட்டல்கள் விழுமென்பதால் விட்டு விடுகிறேன்!) பிரசுரமான உடனேயே நான் வாசகர் கடிதம், கேள்விகள் என்று ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு என்னென்ன எழுதமுடியுமோ எல்லாமே எழுதிப் போட ஆரம்பித்து விட்டேன்!

எல்லா பத்திரிகைகளும் வாங்கிப் படித்துக் கொண்டே இருப்பேன். அப்போது எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகரும், சுபாவும் இணைந்து `உங்கள் ஜூனியர்’ என்று பல்சுவை மாத இதழ் நடத்திவந்தார்கள். அப்படியே எனக்கிருக்கும் நகைச்சுவை உணர்வோடு ஒத்திருந்தது. ஒவ்வொரு மாதமும் அதற்கு பல படைப்புகள் அனுப்பிக் கொண்டிருந்தேன். ஒரு முறை நான் மிக மதிக்கும் பட்டுக்கோட்டை பிராபகரிடமிருந்து ஒரு கடிதம் `நீங்க கதைகள் எழுத முயற்சி செய்யுங்க. உங்க எழுத்து நடை அபாரம்’ என்று. அவ்வளவுதான்! இதே போல படுஸ்பீடில் கதைகளெழுத ஆரம்பித்து, சில பிரசுரமாகி பல திரும்பி வந்து....

அப்படியே கதை எழுதி, சினிமாவுக்கு வசனம் எழுதி, டைரக்டராகி தமிழக மக்களை சும்மா விடக்கூடாதுடா என்று முடிவெடுத்து களமிறங்கினேன்!

பிறகு ஒரு அங்கிள் (நிஜமாலுமேங்க.. அவரு பேரும் எங்கப்பா பேர்தான் - பாலசுப்பிரமணியன்!) சொன்ன அறிவுரையைக் கேட்டு கொஞ்சம் குறைத்துக் கொண்டு வேலை தேட ஆரம்பித்தேன். (அப்ப வேலைக்கே போகாமத்தான் இந்த கருமாந்திரத்தையெல்லாம் பண்ணீட்டிருந்தியா நீ?) பிறகு வேலை, காதல், கல்யாணம், குழந்தை என ஆஸ்யூஷுவல் சர்க்கிளுக்குள் நானும் மாட்டிக் கொண்டேன்!

1992லேயே என் சொந்த ஊரான உடுமலைப்பேட்டையிலிருந்து திருப்பூர் வந்து வேலை செய்து திரும்ப உடுமலைக்கே போய் விட்டேன். எல்லாப் பக்கமுமே எவன் சொன்னதுன்னே தெரியாத `கிழ’மொழி இருக்குமே அதுபோல திருப்பூர்லயும் ஒரு கிழமொழி சொல்லுவார்கள். `திருப்பூர்ல பொழைக்க முடியாதவன் எங்க போயும் பொழைக்க முடியாது’ என்று. அதற்கேற்ப பல வேலைகளுக்குப் பிறகு மீண்டும் திருப்பூர் வந்தேன். இப்போதிருக்கும் நிறுவனத்தில் மிகச் சிறிய பணியொன்றில் சேர்ந்தேன். கதையெழுதுவது, சினிமா பார்ப்பது என்று எல்லாவற்றையும் துறந்து, வேலை வேலை என்று பாடுபட்டு, இப்போது ஒரு நல்ல அதிகாரமுள்ள போஸ்ட்டில் இருக்கிறேன்.

இந்த நிலையில் அவ்வப்போது சந்திக்கும் நண்பர்களும், சொந்தங்களும் “உன் க்ரியேட்டிவிட்டியையும், ஹ்யூமர் சென்சையும் வேலை வேலைன்னு அழிச்சுக்கற. இப்போதான் நல்ல நிலைமைல இருக்கியில்ல. அப்பப்ப எழுதேன்” என்று இடைவிடாது சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இத்தனை வருட இடைவெளியில் என் கையெழுத்து படு கேவலமாக ஆகிவிட்டிருந்தது. சரி என்று ஒரு கணினி வாங்கிப் போட்டேன்.

போனவருஷம் ஒரு நாள். என் அலுவலக நண்பர் முருககணேஷ் என்னை அழைத்து இணையத்தில் ஒரு வலைப்பூவைக் காண்பித்து ”ப்ளாக்கர்ஸ்ன்னு இப்போ வலையில எழுதறதுதான் ஃபேமஸ் கிருஷ்ணா. நீங்களும் எழுதுங்களேன்” என்றார். அப்போது படுபயங்கர பிஸியாக இருந்தது. அதுவுமில்லாமல் தமிழில் டைப்படிப்பது எப்படி என்றும் தெரியவில்லை. இந்த வயசில் டைப்ரைட்டிங் க்ளாசுக்குப் போய், ஞாபக செல்களைத் தட்டி எழுப்பி, கற்பகவல்லி என்ற ஃபிகரை சைட்டடித்ததையெல்லாம் நினைத்துத் தொலைக்கவேண்டி வருமே என்றுவேறு பயம். விட்டுவிட்டேன்.

இந்த வருடம் மே மாதம் என் எம்.டி. ஒரு மாத பயணமாக US சென்றார்கள். அப்போது கிடைத்த சில ஓய்வு நேரங்களில் ப்ளாக் பற்றி ஆராய்ச்சி நடத்தினேன். நான் முதன்முதலில் படித்தது லக்கிலுக்கின் ஒரு பதிவு. அடுத்தது அவர் சுட்டி கொடுத்து வைத்திருந்த (யெஸ்.பா.வின் இணையம்) தல யெஸ்.பாலபாரதியின் விடுபட்டவை. உடனேயே ஒரு சுபயோக சுப தினத்தில் வேர்ட்ப்ரஸ்ஸில் kbkk007 என்று ஆரம்பித்து தமிங்கிலீஷில் KURUVI VIMARSANAM, DHASAAVADHARAM PAADALKAL என்று பதிவு போட்டேன். படிக்கச் சகிக்கவில்லை.

பிறகு லக்கிலுக்கின் வலையில் போய் ப்ளாக்கரில் SIGN IN ஆப்ஷனில் உள்ளே புகுந்து... பரிசல்காரன் என்று ஆரம்பித்து 15 மே 2008லிருந்து உங்களையெல்லாம் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்! நாளை சரியாக மூன்று மாதங்கள் நிறைவடைகிறது!

நாங்கள் ஏழு நண்பர்கள் (கனலி, செந்தில்வேல், கிரி, சௌந்தர், மகேஷ், வேடசந்தூர் ரவி, அடியேன்) அவ்வப்போது கூடி விடிய விடிய ஏதேனும் விவாதங்கள் நடத்துவோம். மாதம் ஒரு முறை கூடும் எங்கள் கூட்டம் ஒரு இலக்கில்லாமல் இருக்கிறது என்பதால் எங்களால் இயன்ற உதவியை இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களும் செய்யும் பொருட்டு ஏதேனும் பெயரில் குழு போல ஆரம்பிக்கலாம் என்று முடிவாகி பல பெயர்களுக்குப் பிறகு தேர்வான பெயர்தான் `பரிசல்’. அதாவது கஷ்டப்படறவங்களை கொஞ்சமாவது கரையேத்துவோம் என்ற அர்த்தத்தில்.

அதிலிருந்தது வந்ததுதான் இந்தப் `பரிசல்காரன்’ என்ற பெயர்!

ஆரம்பித்த புதிதில் லக்கிலுக், யெஸ்.பாலபாரதி ரெண்டு பேர்தான் ப்ளாக்கர்ஸ் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது.. இது ஒரு கடல்! பெரிய பெரிய கப்பலெல்லாம் இருக்கும் இதில் என் பரிசல் அடித்துச் செல்லப்படும் என்றுதான் நினைத்தேன். ஆனால் நான் ஒவ்வொருமுறை சுழலிலோ, புயலிலோ சிக்கும்போதும் என்னை தங்கள் கப்பலில் எடுத்துப் போட்டுக் கொண்டு பத்திரமாய் மறுபடி இறக்கிவிட்டிருக்கிறார்கள். கலங்கரை விளக்கமாய் `டேய்.. பாத்துப்போடா’ என்று பெரிய மீசையோடு மிரட்டி, வழிகாட்டியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒவ்வொருமுறை இணையத்தை திறக்கும்போதும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்!

புதிதாய்ப் படத்துக்கு முதல் நாளே போனாலும் குடும்பத்தை அழைத்துக் கொண்டே போகிறவன் நான். என் எழுத்துக்களிலும் என் மனைவி உமா, குழந்தைகள் மீரா, மேகாவையும் என்னோடே அழைத்துச் சென்று கொண்டேயிருக்கிறேன். அவ்வப்போது அவர்களுக்கும் என், உங்கள் என எல்லாரின் பக்கங்களையும் படித்துக் காட்டுகிறேன். அவர்களையும் ஒரு அங்கமாக ஆக்கிவிட்டதால் `இன்னைக்கு என்னப்பா ஸ்பெஷல் நியூஸ் ப்ளாக்ல?’ என்று அவர்களே கேட்குமளவு ஆகிவிட்டது. இதை உன்னிப்பாக அவதானித்து ஒரு பின்னூட்டத்தில் ஒருத்தர் குறிப்பிட்டிருந்தார். ஆச்சர்யப்பட்டுப் போனேன் நான்!

எந்த நேரத்தில் நான் எழுதுகிறேன், எப்போதெல்லாம் படிக்கிறேன் என்பது தனிப்பதிவாய் போடவேண்டிய விஷயம். என்னை அழைத்த என் நண்பர்களுக்கு இதுபற்றி நான் விளக்கினேன்!

என் எடை எப்போதுமே 50ஐத் தாண்டியதில்லை! திருப்பூரின் பணிச்சுமை, மன உளைச்சல் இதற்கொரு முக்கியக் காரணம். ஆனால் இப்போது என் எடை 56 கிலோ! எப்போதுமே உமாவை யாராவது ‘ஏன் உம் புருஷனுக்கு சரியா சாப்பாடு போடறதில்லையா?’ என்று கிண்டலடிக்கும் போது கோவப்படும் அவர், `இப்பதான் சரியா சாப்பிடறீங்க, டென்ஷனில்லாம இருக்கிங்க. அதான் வெய்ட் ஏறுது!’ என்று சந்தோஷப்படுகிறார். என் சுயத்தை மீட்டுக் கொடுத்தது இந்த வலையுலகம்தான்!

இறுதியாக...

சே.பிருந்தா என்றொரு கவிதாயினி எழுதிய கவிதை:-


நேரே கண்பார்க்க தயங்கி
தரை பார்ப்பினும் கண்கூசும்
உன் வீட்டு பளிங்கு தரை


சற்றே கோணம் திரும்ப
சுவரின் உயர்தர டிஸ்டம்பர்
கண்ணில் உறுத்தும்


பலபக்கம் வியூகம் வைத்து
எனை மூலையில் தள்ளிடும்
உன் வீடு.


என் கம்பீரம் குன்றி..
சிற்றெறும்பாய் சிறுத்து....


எனை நானாய்
என் வீட்டிலேயே இருக்கவிடு!



படிச்ச சந்தோஷத்தோட மேல வலது மூலையில போய் ஒட்டுப் போட்டு அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுங்க!

(நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்திய குசும்பனுக்கு வாழ்த்துக்கள்!!)


88 comments:

வெண்பூ said...

செஞ்சுரி போட்டதற்கு 100 வாழ்த்துக்கள்....

வெண்பூ said...

மூன்று மாதத்தில் 100 பதிவுகளா? சராசரியாக ஒரு நாளைக்கு ஒன்று என்றால் கூட 90தான் வருகிறது. :) கிரேட்..

எனக்கும் "உங்கள் ஜீனியர்" ரொம்ப பிடிக்கும்.. முக்கியமாக அதில் வரும் கேள்வி பதில்கள் (ஆத்மா பதில்கள் என்று நினைக்கிறேன்).

தொடர்ந்து எழுதுங்கள். அதேநேரம் புத்தகங்களுக்கும் அனுப்புங்கள். கண்டிப்பாக பிரசுரமாகும், "விகடன்ல இந்த வாரம் ஒரு கதை வந்ததே, அதை எழுதுனவரு என் ஃப்ரண்டுதான்" என்று சொல்லிக்கொள்ள எனக்கும் ஆசையாய் இருக்கிறது..

Udhayakumar said...

வாழ்த்துக்கள்!

ஜெகதீசன் said...

வாழ்த்துக்கள் பரிசல்காரன்!
:)

குசும்பன் said...

வாழ்த்துக்கள் பரிசல்!

MyFriend said...

வாழ்த்துக்கள் :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் பரிசல் அண்ணா...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த மாதிரியான கருத்துடன் தான் பதிவு வரும் என்று நேற்றே எதிர்பார்த்தேன்....முதலில் ஏன் வலைபதிகிறேன் என்பதைத்தான் வோட்டுக்கு கிளிக் செய்தேன்..பின்னர் சரி மித்ததையும் ஏன் விடுவானேன்னு அவியலாவே இருக்கட்டும்ன்னு சேஞ்ச் ஓட்டு போட்டேன்.. தொலை என்பது சங்கடமா இருந்ததால் முதலில் அது க்ளிக் செய்ய தயக்கம். :)

VIKNESHWARAN ADAKKALAM said...

பரிசல் கலக்கிட்டிங்க... 100 பதிவுக்கு 6 கிலோ ஏறி இருக்கிங்க... அப்ப 1000 பதிவுக்கு???

புதுகை.அப்துல்லா said...

தொடர்ந்து எழுதுங்கள். அதேநேரம் புத்தகங்களுக்கும் அனுப்புங்கள். கண்டிப்பாக பிரசுரமாகும், "விகடன்ல இந்த வாரம் ஒரு கதை வந்ததே, அதை எழுதுனவரு என் ஃப்ரண்டுதான்" என்று சொல்லிக்கொள்ள எனக்கும் ஆசையாய் இருக்கிறது..
//


எல்லாப் பத்திரிக்கையிலேயும் வாராவாரம் பரிசல்காரன்ன்னு ஓரு பெரிய எழுத்தாளரோட கதை வருதுல்ல?அவரு என் பங்காளிதான் சொல்லிக்கொள்ள எனக்கும் ஆசையாய் இருக்கிறது...

(எனக்கு வெண்பூ மாதிரி விகடன்ல மட்டும் வரனும்னு ச்சின்ன ச்சின்ன ஆசையெல்லாம் கிடையாது)

புதுகை.அப்துல்லா said...

குடிக்கிறான்னு
குடிக்கிறன்னு
வால்பையனை
கேவலப்படுத்த கூடாது!
100 அடுச்சும்
அவுட் ஆகாத
பரிசல்காரன்தான்
நம்மாளு!

:))

துளசி கோபால் said...

கால் வருசம் ஆனதுக்கும் ஒரு சதம்போட்டு முடிச்சதுக்கும் இனிய வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.

Athisha said...

வலையுல தோணி பரிசல் வாழ்க

கலக்குங்க

Anonymous said...

100க்கு வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

சதத்துக்கு வாழ்த்துக்கள்!

Mahesh said...

நானும் உடுமலைப்பேட்டைக்காரன் -கிறதுனாலயும், ஒரே தெருவில இருந்தோம்கிறதுனாலயும் ரொம்ப சந்தோஷம்...வாழ்த்துக்கள் !!!

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் பரிசலாரே!

பெயர்க் காரணம் இன்றுதான் அறிந்தேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.

அதுபோன்ற பணிகளையும் தொடர்ந்து செய்யுங்கள்!

பரிசல் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்!

இரவு கவி said...

வாழ்த்துக்கள்!

Anonymous said...

அட...! நம்மூருக்காரர்(உடுமலை) ஒருத்தரு வலைப்பூவில celebrityயா இருக்காருன்னு நெனச்சாலே ரொம்ப சந்தோஷமா இருக்குதுங்கோ. அப்பிடியே நம்ம திருமூர்த்தி மலை, அமராவதி ஆணை, மூணாறு, ஆழியாறு, வால்பாறை, இன்னும் நம்ம ஊரை சுத்தி இருக்கற இடங்கள பத்தி எழுதுனா ரொம்ப நல்லா இருக்கும்ங்க. அப்புறம் உங்கள் ஜூனியர்ன்னு சொன்னதும் எனக்கு உடனே ஞாபகம் வந்தது, நம்ம பஸ் ஸ்டாண்ட்ல இருக்கற சாரதா புக் ஸ்டால் தான்.அங்க மட்டும் தான் லயன் காமிக்ஸ், உங்கள் ஜூனியர் எல்லாம் கெடைக்கும். ஸ்கூல்ல படிக்கறப்ப, SUBA வோட செல்வாவும் நரேனின் Eagle’s eye கூட்டமும் உண்மையான ஆட்கள்னே ரொம்ப நாள் நெனச்சுட்டிருந்தேன்) இன்னும் நெறைய எழுதலாம்னு ஆசையா இருக்கு. ஆனா ரொம்ப கஷ்டப்பட்டு டைப் அடிக்க எனக்கு பொறுமை இல்ல. தாய் மொழில எழுதறது இவ்வளவு சிரமமா?

Thanks and keep your good work continuing..
அன்புடன்,
சு-நா.,

பாபு said...

பதிவை பார்த்தவுடன் சந்தோசபட்டேன்.நீங்கள் தேர்ந்தெடுத்த கவிதை மிக சரியாக பொருந்துகிறது
noorukku vaalthukkal

ஜோசப் பால்ராஜ் said...

நூறுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.
மூணு மாசத்துல 100 பதிவுகள் ஒரு நாளைக்கு ஒரு பதிவுக்கு மேல. மென்மேலும் புகழ்பெற வாழ்த்துக்கள்.

நூறு அடிச்சாச்சுல, அண்ணி, குழந்தைகள எல்லாம் கூட்டிட்டு போயி கொண்டாடுங்க. ஆனா 4 பேரும் ஒரு பைக்ல போகாதீங்க.

ஜோசப் பால்ராஜ் said...

பரிசல் குழு குறித்து அறிந்து மகிழ்கிறேன். வலையுலகில் இருக்கும் பெரும்பாலானவர்கள் பிறருக்கு உதவுவதில் மிக ஆர்வமாக செயல்படுவது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி.

M.Rishan Shareef said...

100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் :)

Ramya Ramani said...

வாழ்த்துக்கள் :)

கார்க்கிபவா said...

வாழ்த்துகள் பரிசல்காரரே!!உங்கள் அனைத்து பதிவையும் நேற்றுதான் படித்து முடித்தேன்.தந்தையின் கடிதம் என்ற‌ இடுகைதான் சிறந்தது என கருதுகிறேன்.நானும் இன்றோடு 50 அடித்து விட்டேன்..சரியாய் ஒன்றரை மாதத்தில்.

கிரி said...

அடிச்சு தாக்குங்க..100 வது பதிவிற்கு என் வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

வணக்கம் பரிசல்காரன்!முதலில் 100க்கு வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

அடுத்து உங்களின் அடுத்த பக்கத்தை இன்று தெரிந்துகொண்டேன்.மொக்கைகளுக்கும் அப்பால் இருக்கும் "பரிசல்காரன்" எனக்குப் பிடித்திருக்கிறது.

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள். அடுத்த முறை நாங்கள் திருப்பூர் வரும்பொழுது தங்களைச் சந்திக்க ஆவல்.

anujanya said...

கே.கே.

அடித்து ஆடினாலும்
தொண்ணூறுகளில்
சோதனை வரத்தான் செய்யும்.

சதத்துக்குப் பின்னும்
பரிசலின் பயணம்
தொடரட்டும் பகிரங்கமாய்

முப்பது நாளில்
ஒரு மொழி கற்கலாம்
தொண்ணூறு நாட்களில்
நூறு மொழிகள் பெற்றோம்

முப்பது வருடங்களில்
எத்தனை நண்பர்கள்?
மூன்றே மாதங்களில்
முன்னூறு நண்பர்கள்!

எழுதி எழுதி ஏறி விட்டாய்
உடல் எடையில் மட்டுமின்றி
எங்கள் இதயங்களில் கூட

மூத்த பதிவர் ஆனதால்
வயதுக்கேற்ற முதிர்வுடன்
பதிவுகளை அளந்து போடு
ஆனால் அடித்தும் ஆடு

விரைவில் பெயர் வரட்டும்
எல்லா பத்திரிகைகளிலும்
பெருமையுடன் சொல்வோம்
'இது நம்ம ஆளு'

வாழ்த்துக்கள் கே.கே.

அனுஜன்யா

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
உண்மைத்தமிழன் said...

பரிசல்

மூணே மாசத்துல 100 பதிவுன்னா, லதானந்த் அண்ணன் சொன்னது சரிதான்.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குங்க.. ஒண்ணும் தப்பில்ல..

இந்த 100-வது பதிவுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்..

முரளிகண்ணன் said...

congrats. expecting manymore

யட்சன்... said...

முந்தைய அனானி பின்னூட்டத்தினை தவிர்த்திருக்கலாம்...கோபதாபங்கள் சம்பந்தப்பட்ட அந்தந்த பதிவுகளோடு போய்விட வேண்டும்.

நூறு பதிவுகள்...ஒரு தொடக்கமாய் இருக்கட்டும். போகவேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது.

தொடருங்கள் பரிசல்காரன்...

வாழ்த்துகளுடன்...

-யட்சன்

Thamira said...

எனது வாழ்த்துக்களையும் பெற்றுக்கொள்ளுங்கள் பரிசல்.!
(ஒரு வாரமாக ஹைதராபாதில் மாட்டிக்கொண்டதால் அவ்வளவாக இணையம் பக்கம் வரமுடியவில்லை. ஒரு கலவரமே அடித்து ஓய்ந்தது போல தெரிகிறது..!)

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் பரிசல்காரன்!

பரிசல்காரன் said...

//பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள். அடுத்த முறை நாங்கள் திருப்பூர் வரும்பொழுது தங்களைச் சந்திக்க ஆவல்.//

கண்டிப்பாக. மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். நானும் ஆவலாய் இருக்கிறேன்!

@ யட்சன்

சீனியர்... அந்த கமெண்டை தூக்கி குப்பைல போட்டுட்டேன்.

நன்றி!

PPattian said...

//என் சுயத்தை மீட்டுக் கொடுத்தது இந்த வலையுலகம்தான்!
//

இந்த வரிகள் உண்மையாவே எனக்குள் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது..

அழகாக நேர மேலாண்மை செய்வதாக நீங்களே சொன்னபின்.. வலையுலகம் உங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக ஆன்பின்.. அடிச்சி ஆடுங்க பாஸூ.. வாழ்த்துகள்.

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள் பரிசல் அண்ணா... :)

manjoorraja said...

சதம் அடித்ததற்கு வாழ்த்துகள்.

கடைசி ஓட்டம் சுவையாக இருந்தது.

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் பரிசல்கார அண்ணா!

பரிசல் குரூப்பும் நல்ல நல்ல பணிகளினை செய்ய வாழ்த்துக்கள்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தங்கள் தமிழ்ப் பணி சிறக்க வாழ்த்துக்கள் பரிசல்காரன்!

அன்புடன்,
ஜோதிபாரதி.

இவன் said...

வாழ்த்துக்கள் பரிசல்காரன்!
:)

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள்!

லக்கிலுக் said...

அடுத்த வாரமே டபுள் செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள்!!!

//திருப்பூரின் பணிச்சுமை, மன உளைச்சல் இதற்கொரு முக்கியக் காரணம். ஆனால் இப்போது என் எடை 56 கிலோ! //

பரவாயில்லை. நான் 60 கிலோ :-)

குசும்பன் said...

படிச்ச சந்தோஷத்தோட மேல வலது மூலையில போய் ஒட்டுப் போட்டு அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுங்க!

(நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்திய குசும்பனுக்கு வாழ்த்துக்கள்!!)

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//
12:56 PM http://parisalkaaran.blogspot.com/2008/08/blog-post_14.html
Jegadeesan: பரிசல் பதிவுல பாருங்க
நீங்க லீடின்
லீடிங்
12:57 PM me: :))
அவ்வ்வ்வ்
Jegadeesan: :)
10ல 9 என் ஓட்டுன்னு சொல்ல மாட்டேன்
:P
me: அட பாவி
me: ஆமாம் எனக்கு 9 ஓட்டு போட்டது நீங்க
மீதி அந்த ரெண்டு நல்லவனுங்க யாருங்க
Jegadeesan: ஒன்னு நி,ந
மற்றது யாருன்னு தெரியலை
1:05 PM me: உங்கள் அன்புக்கு நன்றி:)//

நிஜமா நல்லவன் said...

//மீதி அந்த ரெண்டு நல்லவனுங்க யாருங்க
Jegadeesan: ஒன்னு நி,ந//

:))))

நிஜமா நல்லவன் said...

செஞ்சுரி பதிவில் ஹாப் செஞ்சுரி அடிச்சிடலாம்...

நிஜமா நல்லவன் said...

ஹாப் செஞ்சுரி அடிச்சாச்சு:)

மொக்கைச்சாமி said...

100'வது பதிவிற்கு வாழ்த்துக்கள்...

Anonymous said...

கிருஷ்ணா,

இதுதான் உங்கள் பதிலாக வந்திருக்க வேண்டியது. மூன்றாவதாக வந்திருக்கிறது.

100 அடித்ததற்கு வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

@ வெண்பூ

நன்றி! எழுதிப்போடுகிறேன்!

@ உதயகுமார்/ ஜெகதீசன், குசும்பன், மைஃப்ரண்ட், முத்து தங்காஆஆச்சி, விக்கி

நன்றி!

@ புதுகை அண்ணாச்சி

//100 அடுச்சும்
அவுட் ஆகாத
பரிசல்காரன்தான்
நம்மாளு!
//

நான் எப்பவுமே உங்காளுதான்!

பரிசல்காரன் said...

@ துளசி கோபால்

நன்றி அம்மா!

@ அதிஷா

நன்றி அக்கா!! (சிக்கின!)

நன்றி ச்சின்ன அம்மணி, ராமலட்சுமிக்கா!


ஸ்பெஷல் நன்றி மகேஷ்!

இன்னொரு ஸ்பெஷல் நன்றி கும்மித்தலைவர் சிபி அவர்களே! (என்ன பிரச்சாரம் இன்னும் சூடு பிடிக்கல போல.. ஓட்டு கம்மியா இருக்கே!)

@ இரவு கவி

நன்றி!

@ சு-நா (உடுமலை)

ஐயோ! ஞாபகத்தைக் கிளறி விட்டுட்டு யாரு எங்கிருக்கீங்கன்னு சொல்லாமப் போறீங்களே? ஒரு மெய்ல் போட முடியுமா?

நன்றி பாபு!

@ ஜோசப் பால்ராஜ்

//வலையுலகில் இருக்கும் பெரும்பாலானவர்கள் பிறருக்கு உதவுவதில் மிக ஆர்வமாக செயல்படுவது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி.//

காரணம் அவர்கள் மனதால் மென்மையானவர்கள்!

பரிசல்காரன் said...

@ ரிஷான் ஷெரீப் , ரம்யாரமணி, கார்க்கி

நன்றி! (கார்க்கி, இதை எல்லோருமே குறிப்பிடுகிறார்கள். பொறுமையாய் என் எல்லாப் பதிவுகளையும் படித்ததற்கு நன்றி!)

@ கிரி, ராஜநடராஜன்

நன்றி!

@ அனுஜன்யா

ஸ்பெஷல் கவிதைக்கு நன்றி!

@ உண்மைத்தமிழன்

இது உங்க முதல் பின்னூட்டம்! நன்றி! (ஏற்கனவே ஒரு பதிவுல உங்களை ஒரு கேள்வி கேட்டிருந்தேன். இப்ப வரைக்கும் பதில் சொல்லல!)

@ முரளி கண்ணன்

பண்ணீட்டாப் போச்சு தோழர்!

@ தாமிரா

நன்றி! (நல்லவேளை போனீங்க!)

நன்றி நிஜமா நல்லவன்

நன்றி புபட்டியன்

நன்றி தமிழ்பிரியன்

நன்றி மஞ்சூர் ராஜா

நன்றி ஆயில்யன்

நன்றி ஜோதி பாரதி

நன்றி இவன்

நன்றி மங்களூர் சிவா!

பரிசல்காரன் said...

@ லக்கிலுக்

எல்லாம் மெசேஜ் அனுப்பி மிரட்டினாத்தான் வர்றீங்க!

@ நிஜமா நல்லவன்

எப்படியோ நான் நூறடிச்ச அன்னைக்கு உங்களை ஹாஃப் அடிக்க வெச்சுட்டேன்!

@ குசும்பன்

தேர்தல் கமிஷன் முன் தக்க ஆதாரத்தை சமர்ப்பித்த உங்களை நம்புகிறோம்!

@ மொக்கைச் சாமி

நன்றி!

@ வடகரைவேலன்

ஆமாண்ணா! எதுவுமே பட்டாத்தானே தெரியுது!

பாண்டியிலிருந்து எப்ப வந்தீங்க? எங்களுக்கு என்ன வாங்கீட்டு வந்தீங்க?

சின்னப் பையன் said...

வாழ்த்துக்கள் பரிசல்!!!!

VIKNESHWARAN ADAKKALAM said...

பரிசல்

மீ த ஃபர்ஸ்ட்!

(அட.. இதுக்குமாடா? நீ திருந்தவே மாட்டியா? என்று திட்டுவது கேக்குது!!)

VIKNESHWARAN ADAKKALAM said...

பரிசல்..

ஒவ்வொரு உண்மையும் அறைகிறது!

ஆனால்... என்ன சொல்வதென்ற்ய் தெரியவில்லை...

விளக்கமாய் உங்களுக்கு பின்னூட்டத்திலே பின்னூட்டம் எழுதுகிறேன்!

(ஆஹா.. இத வெச்சும் பின்னூட்டம் போடப் போறானே.. இவன் திருந்தறதுக்கு வாய்ப்பே இல்லை!)

VIKNESHWARAN ADAKKALAM said...

பின்னூட்டமிடுவதை நிறுத்திவிடலாமா என்று தீவிரமாக (சீரியஸாக) யோசிக்கிறேன்!

VIKNESHWARAN ADAKKALAM said...

பின்னூட்டம் போட்டுவிட்டேன்!

இனி அதிகமாய் எழுதுவதில்லை என்று..

VIKNESHWARAN ADAKKALAM said...

பின்னூட்டம் போட்டுவிட்டேன் பரிசல்..

”விடைபெறுகிறேன்.. எல்லோருக்கும் நன்றி!”

நாதஸ் said...

வாழ்த்துக்கள் பரிசல் !!!

Anonymous said...

பரிசல்,

இந்த விக்னேஷ்வரன் தான் உமக்கு வில்லன். பாத்து வச்சுக்கோங்க. ஆள் மாட்டாமயா போயிரும்?

ஆமா! ஏன் உங்களுக்கு 100 அடிக்கிறதுக்கு முன்னாடி டெண்டுல்கருக்கு டென்சன் ஆகுற மாதிரி ஆச்சு?

சாதனையாளன் மன உறுதியுடன் எந்த பந்தையும்,பதிவையும் எதிர் கொள்ள வேண்டும்.

ஒரு நூறு பல நூறு ஆயிரமாக வாழ்த்துக்கள்.

வெட்டிப்பயல் said...

100வது பதிவிற்கு வாழ்த்துகள்...

கயல்விழி said...

100ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் பரிசல் :)

கயல்விழி said...

100ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் பரிசல் :)

கயல்விழி said...

100ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் பரிசல் :)

கயல்விழி said...
This comment has been removed by the author.
Mahesh said...
This comment has been removed by the author.
Mahesh said...

துக்ளக்-ல புது பதிவு போட்டாச்சு....ஹி ஹி ஒரு வெளம்பரம்......

Natty said...

மீ த 72ன்ட்டு.... ;) 100 மட்டுமில்ல தல எல்லா எண்களும் ஸ்பெஷல்தான்... தொடர்ந்து எழுதுங்க....

ஜெகதீசன் said...

///
குசும்பன் said...

படிச்ச சந்தோஷத்தோட மேல வலது மூலையில போய் ஒட்டுப் போட்டு அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுங்க!

(நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்திய குசும்பனுக்கு வாழ்த்துக்கள்!!)

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//
12:56 PM http://parisalkaaran.blogspot.com/2008/08/blog-post_14.html
Jegadeesan: பரிசல் பதிவுல பாருங்க
நீங்க லீடின்
லீடிங்
12:57 PM me: :))
அவ்வ்வ்வ்
Jegadeesan: :)
10ல 9 என் ஓட்டுன்னு சொல்ல மாட்டேன்
:P
me: அட பாவி
me: ஆமாம் எனக்கு 9 ஓட்டு போட்டது நீங்க
மீதி அந்த ரெண்டு நல்லவனுங்க யாருங்க
Jegadeesan: ஒன்னு நி,ந
மற்றது யாருன்னு தெரியலை
1:05 PM me: உங்கள் அன்புக்கு நன்றி:)//

///
நேற்று முழுவதும் நான் ஆன்லைன் வரவே இல்லை..
குசும்பன் பொய் சொல்கிறார். அல்லது அவர் போலி ஜெகதீசனுடன் பேசியிருக்க வேண்டும்...
:P

S.Muruganandam said...

வாழ்த்துக்கள் பரிசல்காரண்ணே!

நானும் உங்க ஊருதாண்ணே!

இப்ப சென்னையிலே வாசம்ண்ணே!

மூனு மாசத்துல்லே முத்தான நூறு பதிவாண்ணே அம்மிணி கோவிச்சிக்கீங்களயா?

மேலும் வளர வாழ்த்துக்கள்.

Prabhu Kettavaram Ramanathan said...

கிருஷ்ணா, தொடர்ந்து எழுதுங்கள்! இன்று ஒருவர் சொல்கிறார் என்று நிறுத்தி நாளை மற்றொருவர் சொல்கிறார் என்று ஆரம்பித்து உங்கள் Identity இழக்க வேண்டாம். நான் இப்போ தான் லேசா ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கேன்.

நான் திருப்பூர்ரில் வளர்ந்து இரோட்டில் வளர்ந்து கொண்டு இருக்கிறேன்.

நன்றி!

பிரபு.

விஜய் ஆனந்த் said...

வாழ்த்துக்கள் பரிசல்!!!!

Karthik said...

வாழ்த்துக்கள் பரிசல்,

இப்பொழுதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
:)

தமிழன்-கறுப்பி... said...

முதல்ல 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...:)

தமிழன்-கறுப்பி... said...

நேத்து நான் லீவு அண்ணன்...

தமிழன்-கறுப்பி... said...

அட இதான் காரணமா "பரிசல்" காரனுக்கு...

தமிழன்-கறுப்பி... said...

உங்க பெயர்க் காரணம் ரொம்ப நல்ல விசயம் அண்ணன் வாழ்த்துக்கள்...

தமிழன்-கறுப்பி... said...

மூணு மாதத்துல 100 பதிவா

அசாதாரண வேகம்தான்.....

தமிழன்-கறுப்பி... said...

நல்ல விசயங்கள் செய்யவும் நடக்கவும் வாழ்த்துக்கள்...

தமிழன்-கறுப்பி... said...

யாருக்கண்ணே ஓட்டு போட :)

தமிழன்-கறுப்பி... said...

ஆனா மறந்தாலும் குசும்பனுக்கு போட மாட்டேன்..;)

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள்! பேரே ச்சச்சும்மா அதுருதுல்ல..

selventhiran said...

`டேய்.. பாத்துப்போடா’ என்று பெரிய மீசையோடு மிரட்டி, வழிகாட்டியிருக்கிறார்கள் // ஜூப்பரு

பட்டாம்பூச்சி said...

வாழ்த்துக்கள் பரிசல் :)