சமீபகாலமாக நடிகர் ஜே.கே.ரித்தீஷை ஏகத்துக்கும் கலாய்ப்பதில் வலையுலகம் (நான் உட்பட) முனைப்பாக இருக்கிறது. பதிவர்கள் தங்களுக்குள்ளேயே அவருக்காக ரசிகர் சங்கம் உருவாக்கிக் கொள்வதும், நான் தலைவர், நான் பொருளாளர், நான் கொ.ப.செ என்று சொல்லிக்கொள்வதும் பரவலாக நடந்துவருகிறது!
ஜே.கே.ரித்தீஷ் அடிப்படையில் தனக்கு என்ன தகுதியிருக்கிறது என்று தெரிந்து வைத்திருக்கிறார். ஆகவே அவரைப் பற்றி கேட்கப்படும் எந்தவொரு கிண்டலான கேள்விக்கும் அவர் கோவப்படுவதில்லை! அவர் அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரன். தி.மு.க.வின் உறுப்பினர். செல்வாக்கான பின்புலம் இருப்பினும் ”உலகத்துக்குத்தான் நான் ரித்தீஷ். ஊருக்கும் எப்பவுமே அதே முகவை.குமார்தான்” என்று சொல்கிறார்.
இவரிடம் தனது கானல் நீர் படத்தைப் பற்றி கேட்டபோது அவர் சொன்னது என்ன?
''கானல் நீர் ஒரு டுபாக்கூர் படம்தான். அது என் நண்பர் சின்னிஜெயந்த்தின் அன்புக்காகப் பண்ணியது. நான் சின்ன வயசுல எத்தனையோ படங்களைப் பார்த்து செம கிண்டல் பண்ணி இருக்கேன். கடைசியில நாலு பேரு என்னைப் பார்த்துச் சிரிக்கிற மாதிரி என் முதல் படம் அமைஞ்சுபோச்சு. இத்தனைக்கும் 'கானல் நீர்' பட போஸ்டர்ல 'A True Punishment'னு கேப்ஷன்லாம் கொடுத்தேன். அந்த கேப்ஷனைப் பார்த்தாவது ஜனங்க உஷாராகட்டுமேன்னு!''
இவ்வளவு வெளிப்படையாக ஒரு நடிகர் பேசி நாம் கண்டதில்லை. இவரது இதுபோன்ற பேட்டிகளே இவரை நாம் கவனிக்க வைத்தது எனலாம்!
இவர் கானல் நீர் படத்தை ஏன் கலைஞருக்கு போட்டுக் காட்டவில்லை என்று கேட்டதற்கு ”அவருக்கு உடம்புக்குச் சரியில்லாத நேரத்துல போட்டுக்காட்டி, அவரை ஏன் சிரமப்படுத்தணும்னுதான் படம் காட்டலை. எனக்குத் தெரியாதா... என் படம் எப்படி இருக்கும்னு!'' என்கிறார்!
இவரை கிண்டல் செய்வதற்கு இவர் செய்யும் பந்தா காரணமாக இருக்கிறது என்றொரு கூற்று இருக்கிறது. யார்தான் சார் பந்தா பண்ணல? நம்ம அங்கிள் சொல்வது மாதிரி Exhibitionism என்கிற ஒருவிதமான phobiaவின் லேசான வெளிப்பாடுதான் இவை. எல்லாருக்குமே தங்களை பிறர் கவனிக்க வேண்டுமென்று இருக்காதா என்ன? அதுவும் ஜே.கே.ரித்தீஷ் ராமநாதபுரத்தில் வசதியான குடும்பத்தில்தான் பிறந்திருகிறார். 300 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. மூன்று ஒயின் ஷாப்புகளுக்கு ஓனராக வேறு இருந்திருக்கிறார்! இவர் பந்தா பண்ணுவதில் என்ன தவறு? தனக்குத்தானே போஸ்டர் அடித்துக்கொண்ட பல பேரை நாம் மறந்துவிடக்கூடாது!
‘உங்க ஊர்ல படம் ஓடணும்ன்னு பிரியாணியும் 100 ரூபாய் பணமும் கொடுத்தது நிஜம்தானே’ என்றால் ‘ஆமாங்க. சொந்த ஊர்ல மண்ணைக்கவ்வக் கூடாதுல்ல?’ என்கிறார்! எத்தனை பேருக்கு இப்படி உண்மையை ஒத்துக்கொள்ளும் மனோபாவம் இருக்கிறது?
இவை எல்லாவற்றையும் விட ரித்தீஷைக் குறை கூறுபவர்கள் சொல்வது ‘ஃபேமஸ் பட டைட்டிலை பயன்படுத்தறார்’ என்பது. நாம் மட்டும் என்ன? லக்கிலுக் ஒரு பதிவு எழுதினால் அதே தலைப்பில் எழுதுவது, லக்கிலுக்கையோ, யெஸ்.பாலபாரதியையோ தலைப்பில் எழுதி கவர்வது. தமிழ்மணத்தை வம்புக்கு இழுப்பதுபோல தலைப்பு எழுதுவது, பரிசல்காரனை.. (ஓ.. அது நாந்தான் இல்ல?) இதெல்லாம் எதற்கு செய்கிறோம்? பிறர் கவனத்தை நம் பக்கம் திருப்பத்தான். அதை ரித்தீஷ் செய்யும்போதுமட்டும் கிண்டலடிப்பது எந்த வகையில் நியாயம்?
இன்று கூட லக்கிலுக் எழுதிய நாயகன் திரை விமர்சனத்தை ரித்தீஷின் பட விமர்சனம் என்று நம்பித்தான் 100% பேரும் படிக்கப் போகிறார்கள்... இதுவே லக்கிலுக்கின்... ச்சே.. ஜே.கே.ரித்தீஷின் வெற்றி!
தேவையில்லாத பின்குறிப்பு: சமீபத்தில் நான் ஜே.கே.ரித்தீஷின் (தற்காலிக) கொ.ப.செ.வாக புதுகை எம்.எம்.அப்துல்லா-வால் அறிவிக்கப்பட்டதற்காக எழுதப்பட்ட பதிவு இது.
ஆனாலும் இந்தப் பதிவை சீரியஸாக எடுத்துக்கொள்ளவும்!
68 comments:
விஜய் ஆனந்த்..
நீங்க சவால்ல தோத்துட்டீங்க!
இதென்ன பின்னூட்ட கயமைத்தனம்... :)
தானைத் தலைவரின் புகழை அவரது இயல்பான வெளிப்படையான குணங்களை மேற்கோள் காட்டி உயர வைத்த சங்கத்தின் தற்காலிக கொ.ப.செ. க்கு நன்றிகளும், வாழ்த்துக்களூம்.
ஆகா....பரவாயில்ல....மீ த ஃபோர்த்து....
பரிசல் அண்ணா ,சர்வேசன் பதிவுலதான் சிறந்த பின்னூட்டக்காரர்ன்னு பட்டம் வாங்கிட்டீங்கள்ள..அப்பறமும் ஏன் உங்கபதிவில் முதல் பின்னூட்டத்துக்குகூட விஜய் கூட போட்டி போடறீங்க.. :)
கொ.ப.செ...வாழ்க...வாழ்க!!!
தங்கத்தலைவரின் மறுபக்கத்தை படம் போட்டு...இல்லல்ல..பதிவு போட்டு வெளிச்சம் காட்டி உலகுக்கு உணர்த்திய அண்ணன் பரிசலுக்கு நன்றிகள் பல!!!
ஆஹா....கிளம்பிட்டாங்கய்ய்ய்ய்ய்யாஅ கிளம்பிட்டாங்க....
என்ன பரிசல் என் பதிவைப்படித்தீர்களா?
href= இதோ என்பதிவு"http://scssundar.blogspot.com/2008/08/blog-post_18.html"
மீ த 8த் !
:)
நாங்கூட தலைவர என்னமோ ஏதோன்னுன்னு நெனச்சுட்டனே..இங்க படிச்சதுக்கப்புறந்தான் தெரியுது தலயோட வெள்ள மனசு...நம்ப தன்மானச்சிங்கம் அநியாயத்துக்கு ரொம்ம்ம்ப்ப்ப்பப நல்லவரா இருக்காரே!!!!
மி த 8 த் !
@ தமிழ்பிரியன்
இல்ல நண்பா. விஜய் ஆனந்த் மீ த ஃபர்ஸ்ட் போடறதா சவால் விட்டார். ஆனா பதிவு போட்டு அரை மணி நேரமா ஒண்ணையும் காணோம்! அதான்... ஹி..ஹி..
@ முத்து தங்காச்சி
என்ன பண்ண? தோத்தா 1000 ரூபா பழுத்துருமே!
@ விஜய் ஆனந்த்
//நம்ப தன்மானச்சிங்கம் அநியாயத்துக்கு ரொம்ம்ம்ப்ப்ப்பப நல்லவரா இருக்காரே!!!!//
நெஜமாவேங்க!
@ கோவி.கண்ணன்
//மி த 8 த் !//
தப்பு.. இது 10த்!
@ கூடுதுறை
வர்றேன்!
கவிதை அருமை:)))
அவர் அளித்த டொனேசன் பற்றி எழுதியிருந்தால் பதிவு இன்னும் முழுமையடைந்திருக்கும்.
ஜே.கே. ரித்தீஷ் பேரைக் கேட்டாலே சூடான இடுகைகள் எல்லாம் அதுருதில்லே :-)
// குசும்பன் said...
கவிதை அருமை:))) //
எந்தக்கவிதைங்க????
:))
கலக்குறீங்க...
இந்த பதிவு ஒலகநாயகனுக்கு படித்து காட்டப்பட்டது.
புல்லரித்து போய்விட்டது மனிதருக்கு!
அடுத்த படத்துக்கு உங்கள் கதை வசனம்தானாம்.
அதற்கு நீங்கள் தி.மு.க.வில் உறுப்பினராக வேண்டும் என்பது மட்டுமே அவரது வேண்டுகோள்,
படத்தின் பெயர்
பரிசல்காரனின் உணர்ச்சிகள்,
ஒ, நீங்க நடிக்கலையோ
ஒலகநாயகனின்
உணர்ச்சிகள்.
தலைப்பே போதும் என்று நினைக்கிறேன்,
உங்களுக்கு கதை உருவாக்க
ரெடி ஸ்டார்ட் மியூசிக்
இது சிரிப்போ, சீரியஸோ. நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் சரிதான் பரிசல். என்னமோ மத்தவன் எல்லாமே சரி அப்படின்ற மாதிரியும் அவரு மட்டும்தான் பந்தா பண்ற மாதிரியும்தான் அவர எல்லாரும் டீல் பண்றாங்க.
ஆனாலும் உங்களுக்கு இன்னும் சூடான இடுகையில வர்ற கலை தெரியல :( தலைப்பை "ஜே.கே.ரித்தீஷும் லக்கிலுக்கும்" அப்படின்னு வெச்சிருந்தா சும்மா பிச்சிகிட்டு இருக்காது????
//விஜய் ஆனந்த் said...
// குசும்பன் said...
கவிதை அருமை:))) //
எந்தக்கவிதைங்க????
//
J.K ரித்தீஷ் என்ற கவிதையான பெயரை தாங்கி வரும் பதிவுகள் அனைத்துமே கவிதைதாங்க!!!
அடடா இப்படி ஒராள் இருக்கிறாரோ..தெரியாமல் போச்சே..
வருங்கால நிரந்தர உலக நாயகன் அண்ணன் பரிசல்... ஐ மீன்.. ஜே.கே.ரித்தீஸ் வாழ்க!!!
தற்காலிக கொ.ப.சே... அண்ணன்.. அண்ணணுக்கு அண்ணன்... பரிசல் வாழ்க வாழ்க!!!
அரசியல்வியாதிகள் பண்ணும் பந்தாக்களை ஒப்பிடும்போது இவரது ஒன்றுமே இல்லை. மேலும் நமக்கும் ஒரு entertainment வேண்டாமா ?
இது ஜே கே ஆர் பற்றிய ஒரு உண்மை தகவல்.
அவர் என்னதான் அலப்பரை விட்டுக்கிட்டு அலஞ்சாலும், ஒரு சில நல்ல காரியங்களையும் செய்துகொண்டு இருக்கின்றார். சென்ற ஆண்டு ஒரு ஏழை மாணவணின் பொறியியல் படிப்பிற்காக விகடன் குழுவினர் இவரைத் தொடர்பு கொண்ட போது, உடனே அவருக்கு உதவினார்.
எனக்கு ஜே கே ஆர் மன்றத்தில் பொறுப்பு கொடுக்க அண்ணண் அப்துல்லாவும், பிறரும் மறுப்பு தெரிவித்த போதும் உண்மையை சொல்ல வேண்டும் என்பதால் இதை சொல்கிறேன்.
@ குசும்பன்
குசும்பு அருமை!
@ வேலன்
அதைப் பற்றி ஏற்கனவே என் ஒரு அவியலில் சொல்லியிருந்தேன்! ஆனாலும், இதிலும் நான் சொல்லிஇருக்க வேண்டும்!
@ லக்கிலுக்
ஆமால்ல... (நீங்க பாட்டுக்கு எனக்கு பின்னூட்டம் போட்டுட்டீங்க.. வாலு கோவிச்சுக்கப் போகுது!)
@ இராம்
நன்றி!
@ வால்பையன்
உணர்ச்சியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@ வெண்பூ
//ஆனாலும் உங்களுக்கு இன்னும் சூடான இடுகையில வர்ற கலை தெரியல//
வந்துடுச்சுல்ல.. நாம யாரு?
@ டொன் லீ
உங்க பேர் நல்லா இருக்கு..
@ ச்சின்னப்பையன்
ஹி..ஹி...!
@ அனானிமஸ்
நன்றி அனானி!
@ ஜோசப் பால்ராஜ்
//எனக்கு ஜே கே ஆர் மன்றத்தில் பொறுப்பு கொடுக்க அண்ணண் அப்துல்லாவும், பிறரும் மறுப்பு தெரிவித்த போதும் உண்மையை சொல்ல வேண்டும் என்பதால் இதை சொல்கிறேன்//
அண்ணே... நம்பீட்டோம்! .நீங்க நல்லவரு!
வெண்பூ ://இது சிரிப்போ, சீரியஸோ. நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் சரிதான் பரிசல்.//
ரிப்பீட்டேய்.. நானும் அந்தப்பேட்டியைப்பார்த்தேன் பரிசல்.
@ தாமிரா
//நானும் அந்தப்பேட்டியைப்பார்த்தேன் பரிசல்./
பார்த்தீங்களா?
நாங்க படிச்சோம்!
போச்சு....இந்த வாரம் ரித்தீஷுக்கு நல்ல பப்ளிசிட்டி கெடைக்கும் போல இருக்கு.... இன்னும் நாலு நாளைக்கு தமிழ் மணத்துல ரித்தீஷ் சத்தம் ஜாஸ்தியா இருக்கும்.
ஆமா...தலைவரே "துக்ளக்" பக்கம் 2 நாளா வரவே இல்ல போல இருக்கே.... என்ன போங்க... குருவே வரலன்னா எப்பிடி?
\
லக்கிலுக்கையோ, யெஸ்.பாலபாரதியையோ தலைப்பில் எழுதி கவர்வது. தமிழ்மணத்தை வம்புக்கு இழுப்பதுபோல தலைப்பு எழுதுவது, பரிசல்காரனை.. (ஓ.. அது நாந்தான் இல்ல?) இதெல்லாம் எதற்கு செய்கிறோம்?
\
:))))))))))))))))))))))
Exhibitionism - Phobiaவா Maniaவா?
பரிசல் அண்ணே! வெறும் ரசிகனா இருந்த நான் அவரோட நற்பணிகளைப் பார்த்த பின்புதான் அவருக்கு நான் வெறித்தனமான ரசிகன் ஆனேன்.:))
கொடுத்த பொறுப்பை(தற்காலிகமாக இருந்தாலும் கூட) உடனே துவங்கிய கர்ம வீரன் அண்ணன் பரிசல் வாழ்க!
Advertisement :
Visit my shop.
Noodles Ready.!
yaaruppa athu ritheesu.mothalla photo onnu podungappa!
//இன்று கூட லக்கிலுக் எழுதிய நாயகன் திரை விமர்சனத்தை ரித்தீஷின் பட விமர்சனம் என்று நம்பித்தான் 100% பேரும் படிக்கப் போகிறார்கள்... இதுவே லக்கிலுக்கின்... ச்சே.. ஜே.கே.ரித்தீஷின் வெற்றி!//
உண்மைதான்... நான்கூட ரித்தீஷின் நாயகனோ என்று பயந்துகொண்டேதான் பதிவை திறந்தேன். நல்லவேளை அது போல எந்த அசம்பாவிதமும் நடந்து விடவில்லை :))
இவ்வளவு அடிச்சும் இந்தாளு ரித்தீஷ்ஷூ எல்லாத்தையும் தாங்குறாருன்னா கண்டிப்பா அவரு தமிழ்மணத்துல பதிவு எழுதுன ஆளாத்தான் இருக்கும்ன்னு நினைக்குறேன். கேட்டுப்பாருங்கப்பா. அவரு ஏதும் பதிவு எழுதியிருக்காரான்னு :)
//இத்தனைக்கும் 'கானல் நீர்' பட போஸ்டர்ல 'A True Punishment'னு கேப்ஷன்லாம் கொடுத்தேன். அந்த கேப்ஷனைப் பார்த்தாவது ஜனங்க உஷாராகட்டுமேன்னு!''//
அவர் இவ்ளோ நல்லவரா....
//இவ்வளவு வெளிப்படையாக ஒரு நடிகர் பேசி நாம் கண்டதில்லை. இவரது இதுபோன்ற பேட்டிகளே இவரை நாம் கவனிக்க வைத்தது எனலாம்!//
ஒரு வேளை அவரு ஜாலிவ்லோசன் யூஸ் செய்யறவரோ :)
//இவர் கானல் நீர் படத்தை ஏன் கலைஞருக்கு போட்டுக் காட்டவில்லை என்று கேட்டதற்கு ”அவருக்கு உடம்புக்குச் சரியில்லாத நேரத்துல போட்டுக்காட்டி, அவரை ஏன் சிரமப்படுத்தணும்னுதான் படம் காட்டலை. எனக்குத் தெரியாதா... என் படம் எப்படி இருக்கும்னு!'' என்கிறார்!
//
இதுக்காகவாவது லக்கி மறுபடி கண்டிப்பா நாயகன் வெமர்சனம் எழுதுவாருன்னு நினைக்குறேன்
மீ த 40த்
//‘உங்க ஊர்ல படம் ஓடணும்ன்னு பிரியாணியும் 100 ரூபாய் பணமும் கொடுத்தது நிஜம்தானே’ என்றால் ‘ஆமாங்க. சொந்த ஊர்ல மண்ணைக்கவ்வக் கூடாதுல்ல?’//
ஏன் அவுக ஊருல மண்ணுலதான் படம் போட்டு காட்டுறாகளா...
//‘ஃபேமஸ் பட டைட்டிலை பயன்படுத்தறார்’ //
ஓ அவரோட டைட்டிலையும் இவரு சுட்டுட்டாரா :(
//நாம் மட்டும் என்ன? லக்கிலுக் ஒரு பதிவு எழுதினால் அதே தலைப்பில் எழுதுவது, லக்கிலுக்கையோ, யெஸ்.பாலபாரதியையோ தலைப்பில் எழுதி கவர்வது. தமிழ்மணத்தை வம்புக்கு இழுப்பதுபோல தலைப்பு எழுதுவது, பரிசல்காரனை.. (ஓ.. அது நாந்தான் இல்ல?) இதெல்லாம் எதற்கு செய்கிறோம்? பிறர் கவனத்தை நம் பக்கம் திருப்பத்தான். அதை ரித்தீஷ் செய்யும்போதுமட்டும் கிண்டலடிப்பது எந்த வகையில் நியாயம்?//
ஆனா இந்த மாதிரி பதிவுல டைட்டில வைக்குறவங்க யாரும் சினிமாவுல நடிச்சு டோட்டல் தமிழ்நாட்டையும் டேமேஜ் செய்யறதில்லையே :(
//தேவையில்லாத பின்குறிப்பு: சமீபத்தில் நான் ஜே.கே.ரித்தீஷின் (தற்காலிக) கொ.ப.செ.வாக புதுகை எம்.எம்.அப்துல்லா-வால் அறிவிக்கப்பட்டதற்காக எழுதப்பட்ட பதிவு இது.//
அதுக்காக இப்படி ஒரு கொலவெறியா...
//ஆனாலும் இந்தப் பதிவை சீரியஸாக எடுத்துக்கொள்ளவும்!//
ஆமா. இந்த வார்த்தைக்கு பின்னாடி எந்த ஸ்மைலியும் இல்லாததால நான் அப்படித்தான் நினைச்சுக்கிட்டேன்
//குசும்பன் said...
கவிதை அருமை:)))
//
குசும்பனுக்கும் சேர்த்து இந்த கேள்வி..
ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்....?!
//Anonymous said...
yaaruppa athu ritheesu.mothalla photo onnu podungappa!
//
என்ன கொடும சார் இது.. ரித்தீசை தெரியாம ஒரு அனானியா...
இது 48.
இது 49.
50
இது 50.
அப்பால ஏதோ ரித்தீசு பேரு போட்டிருக்குன்னு இங்கன வந்து கும்மிட்டிருக்கேன்னு சந்தோசப்பட்டு என்னைய ஏதாவது பொறுப்புல தள்ளிவிட்டீங்க (தற்)கொலை விழும் சாக்கிரதை
வெயிட் பண்ணி பிப்டி போட்டது நானு
அதனால கோப்பை எனக்கு தான்
வால்பையன்
//வால்பையன் said...
50
//
இதெல்லாம் டூ மச்சு.. அவ்வளவுதான் சொல்வேன். எனக்கு சாதாரணமா கோவம் வராது. :))
சென்ஷி said...
// எனக்கு சாதாரணமா கோவம் வராது. :))//
அப்போ அசாதாரனமா கோவம் வருமா? :))
ஜே.கே.ரித்தீஷ் எல்லாம் பழைய ஆளுங்க......இப்போ தமிழ் சினிமாவை கலக்கிக்கிட்டு இருக்குறது Superstar Sam Anderson. Sample-kku ஒரு பாட்டு பாருங்க......
http://www.youtube.com/watch?v=YJQD0zGZ_VI
விருப்பப்பட்ட orkut coomunity-la சேருங்க......
http://www.orkut.com/Main#Community.aspx?cmm=43224008
The fastest growing community in Orkut.
இது சிரிப்போ, சீரியஸோ. நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் சரிதான் பரிசல்
இவ்வளவு வெளிப்படையாக ஒரு நடிகர் பேசி நாம் கண்டதில்லை. இவரது இதுபோன்ற பேட்டிகளே இவரை நாம் கவனிக்க வைத்தது எனலாம்!//
Me the 57th...
ரொம்ப லேட் கமெண்ட் இருந்தாலும் எதையாவது எழுதுவது எழுதாமல் இருப்பதை விட பெட்டர் இல்லையா?
ஜேகே ரித்தீஷ் நிஜமாவே நல்லவரா?
ஜேகே ரித்தீஷ் நிஜமாவே நல்லவரா?
//கயல்விழி said...
ஜேகே ரித்தீஷ் நிஜமாவே நல்லவரா?//
அவர் நிஜமா நல்லவரான்னு தெரியல...ஆனா நான் நிஜமா நல்லவன்:)
//தமிழ் பிரியன் said...
தானைத் தலைவரின் புகழை அவரது இயல்பான வெளிப்படையான குணங்களை மேற்கோள் காட்டி உயர வைத்த சங்கத்தின் தற்காலிக கொ.ப.செ. க்கு நன்றிகளும், வாழ்த்துக்களூம்.//
ரிப்பீட்டேய்...
நன்றி சென்ஷி!
வெகுநாள் கழித்து வந்து அடிச்சு ஆடீட்டீங்க!
@ மகேஷ்
போய் படிச்சுட்டு வந்துட்டேன்! சூப்பரா எழுதறீங்க நண்பா!
@ அப்துல்லா
கேள்வியை மாத்தி கேளுங்க..
@ வால்பையன்
யோவ் பாவம்யா சென்ஷி... கவுத்துப்புட்டியே..
@ ராஜா
சாம் ஆண்டர்சன் பற்றி சென்னை சென்றிருந்தபோது அதிஷா சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது!
@ கயல்விழி
தெரியலையே???
@ நிஜமா நல்லவன்
ஒத்துக்கர்றேன்! நெக்ஸ்ட் மீட் பண்றேன்!
ஸாரிங்க வேளராசி...
விட்டுப்போச்சு..
நன்றி உங்க கருத்துக்கு!
வளர்ப்பு மகன் சுதாகரன் ஞாபகம் இருக்கிறதா?அவருடன் சேர்ந்து சுற்றிகொண்டிருந்தவர்.சுதாகரன் மீது வழக்கு போடும்போது மற்ற
இருவர் மாட்டிக்கொள்ள இவர் மட்டும் தப்பித்துகொண்டார்.அப்போது தன்னுடன் எடுத்து சென்ற பணம்தான் இன்னும் இவரிடம் விளையாடுகிறது.
இதை நான் சொல்லவில்லை இவர் பெயர் முதலில் அடிப்படும்போதே
ஜூனியர் விகடன் அல்லது ரிப்போர்ட்டர் இல் வெளிவந்த கட்டுரை படித்திருக்கிறேன்
//தேவையில்லாத பின்குறிப்பு: சமீபத்தில் நான் ஜே.கே.ரித்தீஷின் (தற்காலிக) கொ.ப.செ.வாக புதுகை எம்.எம்.அப்துல்லா-வால் அறிவிக்கப்பட்டதற்காக எழுதப்பட்ட பதிவு இது.//
ஆரம்பத்தில் ஜேகேரித்திஷ் பக்க ஞாயம் பேசுவதாகப் பட்டது, அட இப்படியும் ஒருத்தரா என்று நினைத்தேன். கடைசியில காமடி பண்ணிட்டிங்களே.
சிங்கை கிளை கொ.ப.செ பதவி போட்டி வாக்கு அடிப்படையில் நடக்கிறது. இப்போதைய முன்னனி நிலவம் 2 கோடி வாக்கு ஜெகதீசனைவிட முன்னனியில் இருக்கிறார் ஜோசப்.பால்ராஜ்
நானும்தான் வீடியோ க்ளப் நடத்தறேன். ஒன்னுக்கும் உதவாத குப்பைகள் எல்லாம் வந்துருது.
ஆனாலும் இந்த ரித்தீஷ் நடிச்ச(???) படம் ஒன்னுமே இதுவரை பார்க்கலையே.....
துளசி அக்கா,
குசேலன் அதற்குள்ளே உங்க கிளப்புக்கு வந்திருச்சா?
மேலும் நமக்கும் ஒரு entertainment வேண்டாமா ?////
அதுதானே!!!
இன்னும் இவரது படங்களை பார்க்கவில்லை.
பார்த்துவிட்டு சொல்கிறேன்
சுபாஷ்
Post a Comment