Saturday, August 30, 2008

ஏதாவது செய்வோம் பாஸ்!


இதைச் சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது. பதிவர் நர்சிம்மை எனக்கு நெருக்கமாகத் தெரிந்தது ஜூ.வி என் பதிவை வெளியிட்டபோது அவர் ஒரு பதிவு போட்டபோதுதான்! “ஏண்டா... ஒருத்தர் உன்னைப் பற்றி எழுதினால்தான் கவனிப்பாயா” என்று கேட்டால் தலைகுனிவதைத் தவிர வேறு பதிலில்லை!

இன்றைக்கு அவர் ஒரு பதிவைப் போட்டு “போட்டிக்கு வாடா ராசா” என்று அழைத்திருக்கிறார். பெரும் பதிவர்களோடு என்னையும் அவர் அழைத்திருப்பது மகிழ்ச்சி.

அதற்கு ‘ஏதாவது செய்யணும் பாஸ்’ என்று பதில் பதிவு போட்டுவிட்டார் தோழர் லக்கிலுக். என் கருத்துக்களைச் சொல்வதில் இப்போது கொஞ்சம் தயக்கமாகவும் இருக்கிறது. ஏனென்று சொல்லிவிடுகிறேன்.

நான் வலைப்பூவை ஆரம்பித்தபோது எழுத வேண்டும் என்று நினைத்த பல விஷயங்களை நான் எழுதவே இல்லை. தனிமனிதத் தாக்குதலுக்குப் பயந்துதான்! சொல்லக் கூச்சமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அதுதான் உண்மை!

அலுவலகத்தில் எனக்கு டென்ஷன் ஏராளம். அங்கே என் முகமே வேறு. ஒரு ரிலாக்சேஷனுக்காக எனக்குப் பிடித்த ஹாபியான இந்த எழுத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறேன். இங்கேயும் யாரிடமாவது வாங்கிக் கட்டிக் கொள்ளத் தயக்கம்!

அதையும் மீறி எழுதுடா என்றழைத்த நர்சிம் அவர்களுக்காக (பெரிய பதவில இருக்காருன்னு பயமுறுத்தீருக்காரு லக்கிலுக்!) என் சில சிந்தனைகள்...

தனிமனித ஒழுக்கமே ஒரு சமுதாயத்தை முன்னேற்ற உதவும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால் தனிமனித ஒழுக்கம் என்பது நம் நாட்டில் எந்த அளவுக்கு உள்ளது?

ஹெல்மெட் கட்டாயம் என்று சட்டம் போட்டால், அதை எதிர்த்து அரசையே குழப்பி, எப்படியோ சாவுங்கடா என்று அரசே கண்டுகொள்ளாத அளவிற்கு அதைப் பின்பற்றுவதில் சுணக்கம் காட்டினார்கள் மக்கள்.

பொது இடங்களில் புகைக்காதே என்றால் அந்த சட்டம் எழுதப்பட்ட ஜி.ஓ-வையே எரித்து புகைபிடித்து, அதைக் கொண்டுவந்தவர் முகத்திலேயே ஊதவும் தயங்காத மக்கள்.

போதை வஸ்துக்களுக்குத் தடை என்றால் எந்த பயமுமின்றி பான்பராக், கணேஷ், ஹான்ஸ் என்று எல்லாக் கடைகளிலும் விற்பதும் மக்கள். வாங்குவதும் மக்கள்.

ரோட்டில் குப்பை போடுவதோ, எச்சில் துப்புவதோ நம்மவர்களை ஜெயிக்க வேறு யாருமில்லை! அதுவும் இந்த எச்சில் உமிழும் பழக்கம் எனக்கு அறவே பிடிக்காத ஒன்று! இது எந்த அளவு தேசியப் பழக்கமாகிவிட்டது என்பதற்கு ஒரு உதாரணம் வேண்டுமென்றால், விகடனில் தமிழர்களின் விடமுடியாத கெட்டபழக்கம் என்று 50 பழக்கங்களைப் போட்டிருந்தார்களல்லவா.. அதில் இந்த எச்சில் உமிழும் பழக்கம் இல்லவே இல்லை! இது தவறில்லை என்று விகடன் போன்ற பெரிய மீடியாவே நினைக்குமளவு மக்களிடம் இது ஊறிவிட்டதா? (ஆனால் நான் குறிப்பிடுவது தமிழர்களை மட்டுமல்ல. பொதுவாகத்தான்!)

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, திருட்டு டி.வி.டி. பார்ப்பது, பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, பொது இடங்களைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவது, டிராஃபிக் ரூல்ஸை மீறுவது, பிளாஸ்டிக் உபயோகம் என்று இது ஒரு எல்லையில்லாப் பட்டியல்.

நான் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்சினை இது. டிராஃபிக் சிக்னலின் போது பச்சை விளக்கு எரிந்தால்தான் நான் பைக்கை எடுப்பது வழக்கம். ஆனால் எப்போதுமே பின்னாலிருப்பவர்களிடம் நான் திட்டுவாங்கிக் கொள்வது வாடிக்கை. அவர்களுக்கு சிக்னல் மீட்டர் 4ஐக் காட்டும்போதே பறந்துவிட வேண்டும்! நான் 4,3,2,1 என்று வந்து பச்சை காட்டியபின்தான் எடுப்பேன். அதற்குத்தான் திட்டு! மூணுநாலு செகண்ட்ல விதியை மீறி கெட்டபேர் வாங்கிக் கொள்வதில் அவ்வளவு சந்தோஷம் அவர்களுக்கு. பின்னால் இருப்பவர்களிடம் திட்டு என்றேனல்லவா, அதில் என் பில்லியனில் அமர்ந்திருக்கும் மனைவியும் அடக்கம்! ‘ஓரத்துலயாவது நில்லுங்களேன்’ என்பார். ‘எதுக்கு? நம்மனால மறைமுகமா ரெண்டுபேராவது ரூல்ஸ் ஃபாலோ பண்றாங்கள்ல?’ என்று லொள்ளுபேசுவேன் நான்!

நான் இதையெல்லாம் செய்யாத ஒழுக்கசீலன் என்று சொல்லவரவில்லை. பிளாஸ்டிக் உபயோகம், திருட்டு டி.வி.டி.யைத் தவிர மற்றவை என் லிஸ்டில் இல்லை. ஒருவேளை அதுவும் நாளை வரக்கூடுமோ என்கிற பயமும் இருக்கிறது. காரணம் திருட்டு டி.வி.டியையும் ஒரு காலத்தில் கடுமையாக விமர்சித்தேன். இப்போது மாறிவிட்டேன்:-(

என் முதலாளி நாங்களிருக்கும் பகுதியில் உள்ள கிராமத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற நோக்கோடு, அவ்விஷயங்களில் ஆர்வமான ஒரு பொதுவான NGO வை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். நாங்கள் இருவரும் கிராம பஞ்சாயத்து ப்ரசிடெண்ட்டைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம். கழிப்பிடம் கட்டிக் கொடுப்பதாய் சொன்னாலும்கூட அதை உபயோகிக்க அந்த கிராம மக்கள் ‘பழகவில்லை’ என்றொரு குண்டைத் தூக்கிப் போட்டார். அதிர்ச்சியாய் இருந்தது. அப்போதுதான் என்னோடு வந்த நண்பர் சொன்னார்... தமிழகத்தில் கழிப்பறை உபயோகிப்பவர்கள் சதவீதம் வெறும் 35-40%தானாம்! சோற்றுக்கே வழியில்லாத சோமாலியா, சூடானில் கூட இந்தச் சதவிகிதம் அதிகமாம்! கேவலமாக இருந்தது அவர் சொன்னதைக் கேட்டு!

அதேபோல அந்தப் பஞ்சாயத்தில் 32 கிராமங்கள். 32 கிராமங்களுக்கு ஐந்து குப்பை வண்டியாம். எல்லா குப்பைகளையும் எடுத்துவந்து அதற்கான குப்பைக் கிடங்கில் கொட்ட அரசாங்கம் நியமித்துள்ள நபர் - (நம்புங்கள்) ஒரே ஒருவர்தான்!

‘மக்கள் ஒழுங்காக குறிப்பிட்டிருக்கும் இடங்களில் குப்பை கொட்டினால் அவருக்கு கொஞ்சம் ஈஸியா இருக்கும். ஆனா அப்படிப் பண்றதில்லையே சார்’ என்று ஆதங்கப்பட்டார் அவர்!

பலப் பொழுதும் இந்த தனிமனித ஒழுக்கத்தால் நானும், நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் மாறியிருக்கிறோமா? பஸ்ஸில் நாம் இறங்கும்போது முண்டியடித்து ஏறும் கூட்டத்தைப் பார்த்து திட்டிவிட்டு, அடுத்த பஸ்சுக்குள் நாமும் அதே பாணியில் இறங்குபவர்களை முட்டித்தள்ளி, முண்டியடித்து ஏறாமலா இருக்கிறோம்?

எனக்கு எந்தத் துறை கொடுத்தாலும் இப்படி தனிமனிதர்களை சிந்திக்க வைக்க, மாற்ற, ஒழுக்கத்தை விதைக்க நானே முதல்வரிடம் பேசி ஒரு பிரிவை வாங்கிக் கொண்டு அதில் முழுமூச்சோடு இறங்கி என்னாலான மாற்றத்தை விதைப்பேன்.
இது நிச்சயம்!


கண்டிப்பா... ஏதாவது செய்வோம் பாஸ்!

49 comments:

ராமலக்ஷ்மி said...

//எனக்கு எந்தத் துறை கொடுத்தாலும் இப்படி தனிமனிதர்களை சிந்திக்க வைக்க, மாற்ற, ஒழுக்கத்தை விதைக்க நானே முதல்வரிடம் பேசி ஒரு பிரிவை வாங்கிக் கொண்டு அதில் முழுமூச்சோடு இறங்கி என்னாலான மாற்றத்தை விதைப்பேன்.
இது நிச்சயம்!//

கண்டிப்பா செய்யுங்க பாஸ்..!

வாழ்த்துக்கள்!

இதைப் படிப்பவர்களும் சிந்திப்பார்களாக!

சின்னப் பையன் said...

வாழ்த்துக்கள் பரிசல்.... தனி மனித ஒழுக்கம் இருந்தாலே சமூகம் சூப்பரா முன்னேறிவிடும்ன்றதிலே சந்தேகமேயில்லை.....

சின்னப் பையன் said...

நானும் இந்த தலைப்புலே ஒரு பதிவு எழுதிக்கொண்டேடேடேயிருக்கிறேன்... நாளைக்குப் போடலாம்னு நினைக்கிறேன்....

பரிசல்காரன் said...

நன்றி ராமலட்சுமிக்கா!

@ ச்சின்னப்பையன்

எழுதுங்க.. எழுதுங்க.. எழுதிகிட்டே இருங்க!

பெத்தராயுடு said...

தப்பா நெனச்சுக்கலைன்னா ஒன்னு சொல்லலாமா? லக்கிலுக்கும், நீங்களும் பிரச்சினைகளை எழுதியுள்ளீர்கள். ஆனால், நர்ஸிம் சொல்வது பிரச்சினைகளுக்கான செயல்படுத்தக்கூடிய தீர்வுகள். அவருடைய பதிவிலேயே நன்றாக விளையாட்டுபவர்களை கண்டறிய 1.ரூபாய் தொலைபேசி என்று சொல்லியிருக்கிறாரே, அது போல. அவரின் நோக்கம் இப்படி பதிவுகளில் வெளிப்படும் ஐடியாக்கள் அதிகாரிகள், அரசியல்வாதிகள், பத்திரிகைகள் கண்ணில் பட்டாலாவது ஏதாவது நடக்கும் என்ற எதிர்பார்ப்புதான்.

Ramesh said...

படித்த போது மனசு மிகவும் கஷ்டமாக இருந்தது.

அரசியல் மாற்றம் வேண்டும்.
ஜாதி ஒழியனும்.
ப்லாகர் சமுதாயம் குடிப்பதை நிறுத்தி, குறைந்த பட்சம் ஒருவருக்கு தினமும் உதவி செய்யணும்.

நிச்சயம் எதாவது செய்யணும். இபோதெல்லாம் நான் ப்லோகர்ஸ் எழுதுவதை பார்த்தால் ஒரு சமுதாய சிந்தனை உள்ள போல தெரிகிறது!

நன்றிகள்.

ஆமா நீங்க எங்கே வேலை பாக்குறீங்க?

கூடுதுறை said...

மக்கள் டிராபிக் ரூல்ஸ் ஒழுங்காக பின்பற்றினாலே ஏகப்பட்ட விபத்துக்கள் தவிர்க்கப்படும்...

இப்போதைய புதிய தவறை விட்டுவிட்டீர்களே...

செல்போன் பேசிக்கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டுவது... இதனால் தனக்குத்தானே சங்கு ஊதிக்கொள்கிறார்களே...

இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

பரிசல்காரன் said...

//ஆமா நீங்க எங்கே வேலை பாக்குறீங்க?//

நான் எங்கே வேலை பாக்குறேன்?

பரிசல்காரன் said...

@ பெத்தராயுடு

//லக்கிலுக்கும், நீங்களும் பிரச்சினைகளை எழுதியுள்ளீர்கள். ஆனால், நர்ஸிம் சொல்வது பிரச்சினைகளுக்கான செயல்படுத்தக்கூடிய தீர்வுகள். //

தனிமனித ஒழுக்கம்தான் தீர்வு!

அதற்கு எந்த அரசியல்வாதியையும் நாடவேண்டியதில்லையே பாஸ்?



@ கூடுதுறை

//இப்போதைய புதிய தவறை விட்டுவிட்டீர்களே...

செல்போன் பேசிக்கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டுவது...//

-டிராஃபிக் ரூல்ஸை மீறுவது,-

இது அதானே பாஸ்?

Mahesh said...

அட... இந்த மேட்டர் நல்லா இருக்கே..... நாமளும் ஏதாவது செய்வோம்.... ஆனா, பரிசல், இந்த தனிமனித ஒழுக்கம்கறது ஒரு மாதிரி relative term. ரொம்பவும் subjective கூட. ஏன்னா இது மாதிரியான விஷயங்கள்ல ஒரு ஒத்த கருத்துக்கு வர்ரதே பெரிய விஷயம். ஆனா அதுக்காக யாராவது செய்யட்டும்னோ, இதெல்லாம் தேறாதுன்னோ விதிய நொந்துக்கிட்டு இருந்தோம்னா அப்பறம் எதுவுமே தேறாது. செய்வோம் பாஸு எல்லாருமே எதாவது செய்வோம்.

1. Charity begins at home. So does being disciplined.
2. திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நரசிம் ஆரம்பித்த இந்த விசயம் நான் அன்றைக்கு பார்த்த பே இட் பார்வேர்ட் படத்தின் ப்ராஜக்ட் போலவே இருக்கிறது..( அதைப்பற்றி பதிவு போட்டிருந்தேனே)

நீங்க சொல்ற தனிமனித ஒழுக்கத்துக்கு துறை எல்லாம் வைக்க வாய்ப்பு இருக்கிறதா என்ன?

இது ரொம்ப ஸ்லோவான ப்ராஜக்ட்.. தனிமனித ஒழுக்கத்தை இப்பவரைக்கு அம்மா அப்பா அடுத்த தலைமுறைக்கு அனுப்பிட்டு இருக்காங்க... அதுலயும்.. அவங்க அடுத்தவங்களால திசைதிருப்பப்படாத வரைக்கும் தான் வெற்றியின் சாத்தியம்... குடி சிகரெட் பான் இதெல்லாம் அளவோடு செய்தால் தப்பே இல்லை என்று சொல்லும் அப்பாக்களே பிள்ளைகள் செய்தால் தவறு என்று சொல்லி வரும் காலகட்டத்தில் ஒழுக்கம் அடுத்த தலைமுறைக்கே சரியா ஃபார்வேர்ட் ஆகாது போல... (இதெல்லாம் உங்க லிஸ்டில் இருப்பதால் சொல்கிறேன்..)

எச்சில் உமிழ்வது இங்கே தில்லியில் ஒரு தேசிய பழக்கமாகவே இருக்கிறது.. :)

narsim said...

நன்றி பாரிசலாரே....

இந்த ஆரம்பம் தான்... நான் கேட்டது..

இன்னும் நிறைய வரும் நம் பதிவர்களிடம் இருந்து..

எங்காவது எவராவது இவைகளைபார்த்து ,ஒருவருக்கு நல்லது நடந்தாலும் நம் வெற்றியே..

நர்சிம்

Thamira said...

தகுந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு, சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். கொஞ்சம் சீரியஸாகவே எடுத்துக்கொண்டு விட்டேன். நீங்களும் சில விஷயங்களை செய்து கொண்டிருப்பதாக ஒத்துக்கொண்டுள்ளீர்கள், நானும் பல விஷயங்களை ஒத்துக்கொள்கிறேன். ஆகவே என்னிலிருந்தே ஆரம்பிக்கிறேன். .:பார்மாலிடிக்காகவேனும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம். ஆகவே இந்த மாதிரி தவிர்க்க வேண்டிய விஷயங்களின் டாப் 25 லிஸ்ட் தரமுடியுமா? நீங்கள் மட்டுமே தயார் செய்யாமல் மேலும் பலரோடு (பெருசுங்களோடு?) கலந்தாலோசித்து தயார் செய்யுங்கள். நான் நிச்சயம் பின்பற்றுகிறேன்.

எப்போ லிஸ்ட் கிடைக்கும்?

(1.எப்படியும் 25ம் எனக்கு பொருந்தாது, அதிகபட்சம் 10 ஐடங்கள் தேறும். அதை கண்டிப்பாக விட முயல்.. வேண்டாம், விட்டு விடுகிறேன்.

2.எதற்காக கலந்தாலோசனை? தண்ணி அடிப்பதையே கெட்ட பழக்கமாக ஒருவர் சேர்க்கக்கூடும். அது தனி மனித சுதந்திரம். தண்ணி அடித்துவிட்டு வண்டி ஓட்டுவதுதான் கெட்ட பழக்கமாக லிஸ்டில் சேர்க்கப்படவேண்டும், அதற்காகத்தான்)

Vijay said...

பரிசல்,
தனி மனித ஒழுக்கம் என்பது ரத்தத்திலேயே ஊறியிருக்க வேண்டும். அப்படியில்லையென்றால், கடுமையான தண்டனைகள் கொண்டு வந்தாவது இதை மக்கள் மீது திணிக்க வேண்டும்.
இங்கிலாந்தில் ஒரு முறை அதிகாலையிலேயே விமான நிலையத்திற்குப் போய்க்கொண்டிருக்கும் போது, சிகப்பு சிக்னலில் காரை நிறுத்தினார் ஓட்டுனர். எந்தத் திசையிலும் கார் ஏதும் வரவில்லை. அந்த அளவிற்கு அவர்கள் ஒழுக்கத்தைப் பின் பற்றுகிறார்கள்.
அதே ஒழுக்கம் சிங்கப்புரிலும் காண நேர்ந்தது. ஆனால், அங்கு இந்த ஒழுக்கம் மக்கள் மீது 50 ஆண்டுகளுக்கு முன் திணிக்கப்பட்டது. குப்பை போட்டால் இவ்வளவு டாலர் அபராதம். எச்சில் உமிழ்ந்தால் அவ்வளவு டாலர் அபராதம். சிக்னலை மீறினால் கடும் தண்டனை. தண்டனை என்பது பேச்சளவில் இல்லாமல் அதை நிறைவேற்றவும் செய்கிறார்கள்.
இப்படியாக மக்கள் மீது ஒழுக்கம் என்பது திணிக்கப்பட்டது. இப்போது ஐம்பது வருடங்கள் கழித்து, இன்னமும் தண்டனைகள் அமலில் இருக்க அடுத்த தலைமுறையினர் பிறப்பிலிருந்தே ஒழுக்கமாக நடந்து கொள்கிறார்கள். (அப்படியும் Little India போன்ற இடங்கள் இன்னும் குப்பைக் காடாக இருப்பது வேறு விஷயம்) :-(
நமது நாடும் அப்படி ஆக வேன்டும் என்றால், தண்டனைகள் கடுமையானதாக இருக்க வேண்டும். சட்டங்கள் ஒழுங்காக அமலாக்கப்பட வேண்டும். Law enforcement should be proper. நம் குழந்தைகளையாவது தெருவில் குப்பை போடாதே, எச்சில் உமிழாதே, சிறுநீர் கழிக்காதே என்று சொல்லி வளற்க வேன்டும். இதெல்லாம் நடக்கவில்லையென்றால், நம் நாடும் மக்களும் திருந்தவே திருந்த மாட்டார்கள்.

டிஸ்கி: என் அம்மாவும் மனைவியும் எனக்கு வைத்திருக்கும் பட்டப்பெயர் "அந்நியன்"

பழமைபேசி said...

//தனி மனித ஒழுக்கம்//

இது பிடிச்சிருக்கு..... விளம்பரத்தை திரும்ப திரும்பப் போடுறதால, ஒருத்தரோட மனதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்ங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்ச ஒண்ணு. அது மாதிரி, இந்த மாதிரியான பதிவுகள் அடிக்கடி வெளிப்படனும்.

Anonymous said...

//ஒவ்வொருவரும் ஒரு துறை அமைச்சராக இருக்கும் பட்சத்தில் என்ன மாதிரியான திட்டம் அல்லது மேம்பாடு அல்லது வழிகாட்டல் செய்வீர்கள்..//

கிருஷ்ணா அவரு கேக்குறது ஆக்சன் ப்ளான்.

Athisha said...

மிக நல்ல பதிவு...

நான் நீங்க சொன்ன எதையும் இது வரைக்கு பாலோ பண்ணதில்ல

அதுக்கு காரணம் சொல்ல போறதில்ல

நிச்சயம் அந்த மாதிரி பழக்கங்களை விட முயற்ச்சிப்பறேன்

david santos said...

Really beautiful!!!!
Congratulations.

King... said...

நல்ல கருத்து பரிசல்...

அவனவன் திருந்தினா நாடு தன்னால திருந்தும்...!

King... said...

நானும் திருந்த முயற்சிக்கிறேன்...

pudugaithendral said...

http://pudugaithendral.blogspot.com/2008/08/blog-post_30.html

தொடர் பதிவில் உங்களை கோத்துவிட்டாச்சு.

:))))))

கூடுதுறை said...

//என் அம்மாவும் மனைவியும் எனக்கு வைத்திருக்கும் பட்டப்பெயர் "அந்நியன்"//

உங்களையும் இந்த லிஸ்டில் சேர்த்துவிட்டார்களா..

எனது மனைவி மட்டுமல்ல குழந்தைகளும் சேர்ந்துகொண்டார்கள்..

Sundar சுந்தர் said...

//தனிமனித ஒழுக்கமே ஒரு சமுதாயத்தை முன்னேற்ற உதவும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.//
நல்ல கருத்து!. சுற்றி உள்ள எல்லா தனிமனிதர்களுடைய வட்டங்கள் சேர்ந்தது தானே சமூக வட்டம். காந்தி சொன்ன 'be the change you want to see in the world' என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் என்ன, ரொம்ப நாள் வாழ வேண்டுமானால், கொஞ்சம் 'ஊரோடு ஒட்டி வாழ்' என்ற கருத்தையும் கொஞ்சம் balance பண்ணனும். அடுத்த முறை, போக்குவரத்து விளக்கிற்கு நிற்கும் போது கொஞ்சம் ஓரமாகவே நில்லுங்க. btw, என் பதிவு வந்ததிற்கு நன்றி!

rapp said...

இது எல்லாவற்றையும் அப்படியே வழிமொழிகிறேன். ஆனால் எனக்கு என்னப் புரியமாட்டேன் என்கிறதென்றால், பலப்பேர் தனிமனித ஒழுக்கத்தை மீறுவதை ஆண்மையின் குறியீடாக(ஆண்களாக இருப்பின்), டாம்பாயிஷ் இல்லைனா கூல், டாரிங்(பெண்களாக இருப்பின்) என்றோ கருதும் விபரீதப் போக்குதான். இவர்கள் இதயே சிங்கப்பூரில் போய் செய்தால் சரி, இவர்களை நல்ல சுதந்திரத்தோடு வாழவிடும் இந்தியாவில் இப்படி செய்வதில் என்னப் பெருமை இருக்கிறது?வலைப்பூக்களில் பலரும் தங்கள் மனைவியை பற்றியோ இல்லை பெண்களை பற்றியோ சில சமயம் மனம் வேதனை படும்படி எழுதுகின்றனர், ஆனால் நிஜ வாழ்விலோ மனைவிக்கு மட்டுமன்றி அனைத்து பாலினருக்கும் நல்ல மரியாதை கொடுப்பவர்களாக இருக்கின்றனர். இது நல்ல விஷயம்தான், ஆனால் எத்தனையோ தெளிவில்லாத இளைஞர்கள் இத்தனை படித்துவிட்டு இப்படி இருப்பதுதான் ஆண்மை என நினைக்கும் நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்புள்ளது, இளைஞிகள் ஆண்கள் அனைவரும் மோசம் எனும் நிலைக்கு செல்லவும் வாய்ப்புள்ளது. இதை அப்படியே பெண் பாலினருக்கும் போடலாம், ஆனால் அவ்வளவுப் பேர் அப்படி பொத்தாம்பொதுவாக எழுதுகிறார்களா எனத் தெரியவில்லை. இப்படி வலைப்பூக்களில் நான் உட்பட நிறையப் பேர் எப்படி கருத்து சுதந்திரத்தை எக்ஸ்ப்ளாயிட் செய்கிறது கூட ஒருவகை தவறுதான் என்பது என் கருத்து.நான் கருத்து சுதந்திரத்திற்கு பங்கம் வரும் வகையில் ஏதாவது கூறியிருப்பின் மன்னிக்கவும். மற்றும் நான் வேறு ஏதாவது தவறாக கூறியிருப்பின் மன்னிக்கவும்

rapp said...

எப்படி கடவுள் நம்பிக்கை தனிமனித ஒழுக்கத்தில் இருந்து, தனிமனித சுதந்திரமாக மாறியதோ, அப்படி பல்வேறு காலக்கட்டங்களில் பல விஷயங்கள் மாறலாம், அதனால் நாம் தனிமனித ஒழுக்கம் என்பதை, மற்றொருவரின் நியாயமான தனிமனித சுதந்திரத்தை பாதிக்காத வகையில் செயல்படுவது என வகுத்துக்கொள்ளலாம் என்பது என் கருத்து

தமிழன்-கறுப்பி... said...

பேசாம அந்நியனா மாறிடுங்க அம்பி...:)

தமிழன்-கறுப்பி... said...

கருட புராணத்துப்படி தண்டனை குடுத்துடலாம்...:)

தமிழன்-கறுப்பி... said...

சும்மா ஜாலிக்கு எழுதின கமன்ட்ஸ்...

தமிழன்-கறுப்பி... said...

கோச்சுக்காதிங்க பரிசல்..:)

தமிழன்-கறுப்பி... said...

உண்மைதான் தனிமனித ஒழுக்கத்திலிருந்துதான் ஒரு நல்ல சமுதாயம் உருவாகிறது...

(நான் இருக்கிற ஏரியா நம்மளை பாத்தாலே அலறும்...)

தமிழன்-கறுப்பி... said...

என்னையெல்லாம் தி-மு-க வுல சேத்துட்டாங்க நம்ம ஊருல...

தமிழன்-கறுப்பி... said...

தி - மு- க-
திருத்த முடியாதோர் கட்சி...

Tech Shankar said...



குறைந்தபட்சம் பேருந்து நிற்கும் பஸ்டாப் போன்ற இடங்களிலாவது, வீட்டுமனிதக்குப்பைகளைக் கொட்டாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

பேருந்து நிற்குமிடங்களில் தம்மடிப்பவர்களுக்கு தக்க சன்மானம் (!) வழங்கவேண்டும்.

எந்த ஒரு தவறுமே, தப்பைச் செய்பவரின் தவறை அடுத்தவருக்குத் தெரியாமல் செய்து முடிக்கும் வரை "சரியே" எனா நினைக்கப்படுகிறது.

ஆனால் பலமுறை அதே தவறைத் திரும்பத் திரும்பச் செய்துமுடித்த பிறகு அது வாடிக்கையாகிவிட்ட காரணத்தால் அது தவறாகப்படுவதே இல்லை - செய்தவருக்கு.

எப்பொழுது முதல் முறையாக அவர் பிறரிடம் மாட்டிக்கொண்டாரோ அப்போதே அதன் பிரம்மாண்டத்தை உணர்ந்து தனக்குத் தானே தண்டனை வழங்கிக்கொள்கிறார் - தவறைச் செய்தவன் தண்டனை அனுபவிக்கத் தனக்குத் தானே தர்மநீதி பார்க்கிறான்.

எடுத்துக்காட்டு : பாவனாவின் அப்பா கதாபாத்திரம் - சித்திரம் பேசுதடி படத்திலிருந்து.


Tech Shankar said...

எனக்கு நானே நீதிபதி

http://tamizh2000.blogspot.com/2007/12/blog-post_1955.html

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா எழுதியிருக்கீங்க பரிசல்.

தனிமனித ஒழுக்கம் என்பது சிகரெட் பிடிக்காமலிருப்பது / குடிக்காமலிருப்பது என்பதாகச் சுருக்காமல், அடுத்தவருக்குத் தொல்லை தராமல் இருப்பது என்பதாய்ப் புரிந்துகொள்கிறேன். தனிமனித அறம் என்பதும் மிக முக்கியமிங்கு.

பரிசல்காரன் said...

ராப்.. உங்க பதிவூட்டத்துக்கு நன்றி!

@ தமிழன்

நாமெல்லாம் எப்பங்க தப்பா எடுத்துட்டிருக்கோம்?

@ ஜ்யோவ்ராம் சுந்தர்

முதல் பின்னூட்டம் குருவே! சந்தோஷமாயிருக்கு தலைவா!

பரிசல்காரன் said...

// ஜ்யோவ்ராம் சுந்தர் said...


தனிமனித ஒழுக்கம் என்பது சிகரெட் பிடிக்காமலிருப்பது / குடிக்காமலிருப்பது என்பதாகச் சுருக்காமல், அடுத்தவருக்குத் தொல்லை தராமல் இருப்பது என்பதாய்ப் புரிந்துகொள்கிறேன். //

அதே! அதே!!

அதனால்தான் குடிப்பதைக் குறிப்பிடாமல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை மட்டும் குறிப்பிட்டேன்!

குசும்பன் said...

2011 நான் தான் முதல்வர் என்று பரிசல் சர்வே சொல்லுது:)) அப்ப அப்பொழுது என்னிடம் மனு கொடுங்க பாஸ் ஏதாச்சும் செய்வோம்.:))

குசும்பன் said...

//அலுவலகத்தில் எனக்கு டென்ஷன் ஏராளம். அங்கே என் முகமே வேறு. ஒரு ரிலாக்சேஷனுக்காக எனக்குப் பிடித்த ஹாபியான இந்த எழுத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறேன். //

சேம் பிளட் சொல்லிக்கிட்டு, நானும் ரவுடி நானும் ரவுடி நானும் ரவுடி என்பது போல் உங்கள் வண்டியில் ஏறிக்கிறேன்!

வால்பையன் said...

ஆங்காங்கே கழிப்பறை இருக்கும்
உபயம் கொடுத்தவரின் பெயரோடு,
கழுவ தண்ணீர் தான் இருக்காது.


சரி நம்மவர்கள் கழிப்பறையை உபயோகிப்பது குறைவே என்றாலும் அதனால் என்ன குறைந்து விட போகிறது?

கழிவுகள் இயற்கை உரமாக இன்னும் கிராமபுரங்களில் பயன்படுகிறதே!

கிராமபுரங்களில் கழிப்பறைகளுக்கு வெகு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்லை.
நகர்புறங்களில் பேருந்து நிலையங்களில் சிறுநீர் கழிக்க இடம் இருக்கும்.

நம் மக்களுக்கு வெளியே அடித்தால் தான் சுகம்!

லத்தி கம்ப்பால் "அங்கேயே" ரெண்டு அடி போட்டால் ஒருவேளை சரியாகலாம்

கோவி.கண்ணன் said...

நல்ல சிந்தனைகள் பரிசல். பாராட்டுக்கள்.

கிராமபுரங்களில் கழிவரை வசதி செய்துகொடுத்தாலும், தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தருவதில்லை. அதனால் தான் அதனை பயன்படுத்த மக்கள் தயங்குகின்றனர். தண்ணீர் வசதி இல்லாததால் சொம்பை எடுத்துக் கொண்டுதான் செல்லவேண்டும், அப்படி சென்றாலே எங்கே போகிறோம் என்பது ஊருக்கே தெரிந்துவிடும். கழிவரை செல்வதெல்லாம் பொதுவில் தெரிவதை யார் தான் விரும்பிவார்கள் ? கழிப்பறைக் கட்டிக் கொடுத்தாலும் கிராம மக்கள் மறைவிடங்களையே நாடுவது இதனால் தான்.

SK said...

நல்ல பதிவு பரிசல்.

உங்களுக்கு தெரிந்த அரசு ஊழியர்கள் யாரவது இருந்தாலோ அல்லது அரசு துறையில் உள்ள சலுகைகள் பற்றி தெரிந்தவர்கள் யாரவது இருந்தாலோ அல்லது அரசு துறையில் உள்ள திட்டங்கள் பற்றி எதாவது இணையத்தளத்தில் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தாலோ அதை பற்றி எதாவது விலாவாரியான பதிவு யாரவது எழுதினால் நன்றாக இருக்கும்.

Mahesh said...

வாழ்த்துக்கள் தலைவரே.... உங்க புகழ் போர்ச்சுகீஸ் வரைக்கும் பரவியிருக்கு போல... டேவிட் தமிழ் புரிஞ்சு பின்னூட்டமும் போட்டிருக்காரே....

பரிசல்காரன் said...

//Mahesh said...

வாழ்த்துக்கள் தலைவரே.... உங்க புகழ் போர்ச்சுகீஸ் வரைக்கும் பரவியிருக்கு போல... டேவிட் தமிழ் புரிஞ்சு பின்னூட்டமும் போட்டிருக்காரே.//

அந்த அதிர்ச்சியிலிருந்து இப்போ வரைக்கும் மீளவே இல்லை பாஸ்!

அவரு ப்ளாக்கை ஓப்பன் பண்ணினா கொடுமையா இருக்கு! அவருக்கு என்ன புரிஞ்சதுன்னு Really beautiful!!!! Congratulations.-ன்னு சொல்லியிருகாருன்னு தெரியல!

இதப் படிச்சு மறுபடி இதுக்கு தமிழ்ல அவரு பதில் சொன்னா, நான் பதிவு எழுதறதையே நிறுத்தீடறேன்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஒரே ஒரு நாளைக்கு மட்டும்!
(பயமா இருக்கு. இதுக்குன்னே அவரோட ஐ.பியை திருடி போட்டுட்டாங்கன்னா என்ன பண்றது!)

Itsdifferent said...

Did someone remove my comments? (idea?)

Mahesh said...

இந்த "பதிவெழுதறதை விடப் போறேன்"கறதை விட மாட்டீங்க போல... ஆ ஊன்னா கீ போர்ட கவுத்து வெச்சுருவேங்கறீங்க... இதெல்லாம் நல்லால்ல... ஆமா... சொல்லிபுட்டேன்... :))))))))))))))

பாபு said...

தனிமனித ஒழுக்கம்தான் தீர்வு!
வழிமொழிகிறேன்

சென்னையில், இதுபோல் பச்சைக்காக காத்து நின்றால் உங்களை இடித்து விட்டே போய்விடுவார்கள்

Kumky said...

இந்தக் கருத்துக்களில் எனக்கு அ அ ஆட்சேபனை உ உ உள்ளது. வெ வெச்சுக்கறேன் பின்னாடி.

Kumky said...

இந்தக் கருத்துக்களில் எனக்கு அ அ ஆட்சேபனை உ உ உள்ளது. வெ வெச்சுக்கறேன் பின்னாடி.