Monday, August 25, 2008

கோயில் சொல்லும் கதைகள்




திருமுருகன்பூண்டி முருகன் கோவில்


*************************************************

சமீப நாட்களாக நான் சில கோவில்களுக்கு சென்று வருகிறேன். அதனால் நானொன்றும் மிகப்பெரிய பக்திப்புலி கிடையாது. சுத்தமாக நம்பிக்கையில்லை என்றும் சொல்வதற்கில்லை.


இதுபோல கோவில்களுக்குச் செல்லும்போது முடிந்தவரை அந்தக் கோவில்களின் தலபுராணத்தைக் கேட்பது வழக்கம். அப்படிச் சொல்லப்படும் ஐதீகப் புனைவுகளை மிக மிக ரசிப்பேன் நான். அது உண்மையா, இல்லையா போன்ற அரசியல்களுக்கு நான் போவதில்லை!


*****************************

வெகுவருடங்களுக்கு முன் சுசீந்திரம் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அங்கேதான் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒன்றாக ‘தாணுமாலயன்’ என்று காட்சியளிக்கிறார்கள். (தாணு=சிவன், மால் = திருமால், அயன் = பிரம்மா)


அந்தக் கோவிலில் ஒரு வழக்கத்தைச் சொன்னார்கள். அந்தக் கோவிலுக்கு இரவு தேவர் தலைவன் இந்திரன் வந்து தாணுமாலயனுக்கு பூஜைகள் செய்வாராம். ஆகவே அந்தக் கோவிலின் அர்ச்சகர் இரவு நடை சாத்துமுன் பூஜை செய்ய வரும் இந்திரனுக்குத் தேவையான பூஜைப் பொருட்களை எடுத்துவைத்துவிட்டுத்தான் செல்வாராம்.


அப்படி முதல்நாள் பூஜைப் பொருட்களை வைத்த அர்ச்சகர் மறுநாள் நடைதிறக்க வரமாட்டார். வரவும் கூடாதாம். வேறு அர்ச்சகர் வந்து நடைதிறந்து ஒழுங்குபடுத்தியபின்தான், முந்தைய நாள் இரவு நடைசாத்திய அர்ச்சகர் உள்ளே வருவாராம்.


ஏனென்றால் இரவு நடை சாத்திய அர்ச்சகரே காலையிலும் திறந்தால், இரவு அவர் வைத்த பூஜைப் பொருட்களெல்லாம் வைத்தது வைத்தபடியே இருக்குமானால் அவருக்கு நம்பிக்கைக் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் இந்த நடைமுறையாம்!

********************

திருப்பூர்,, அவினாசி அருகே திருமுருகன்பூண்டி முருகன் கோவில் பிரசித்தமானது. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவில் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற ஸ்தலம். சிவனும், முருகனுன் இங்கேயுள்ள சந்நிதானத்தில் காட்சியளிக்கிறார்கள். சிவன் மேற்கு நோக்கியும், முருகன் தெற்கு நோக்கியும் அமர்ந்துள்ள இந்தக் கோவிலில் முருகன் ஆறுமுகத்துடன் இருக்கிறார். (அர்ச்சகர் தீபாராதனையை சிலைக்குப் பின்னால் ஏன் காட்டுகிறார் என்று கேட்டபோது இது தெரிந்தது) சுந்தரமூர்த்தி நாயனார் இந்த வழியே வந்து, இந்தக் கோவிலைத் தாண்டிப் போய் ஒரு விநாயகர் கோவிலில் அமர்ந்திருந்தாராம்.. “அதெப்படி என்னைக் கண்டுக்காம போவ நீ” என்று கோவம் கொண்ட சிவன் மாறுவேடத்தில் போய் அவரது பொருட்களைத் திருடி, ஒவ்வொரு பொருளாய் இறைத்துக் கொண்டே போனாராம். அந்தப் பொருட்களைத் தொடர்ந்துகொண்டே சுந்தரர் சென்றபோது இந்தக் கோவிலைக் கண்டாராம்.


முருகனுக்கே புத்திசுவாதீனம் வந்து, இந்தக் கோவில் பிரம்மதீர்த்தத்தால்தான் நிவர்த்தியாயிற்று என்று ஒரு அர்ச்சகர் சொன்னார். அதனால் புத்திப் பிசகு உள்ளவர்களை இந்தக் கோவில் கிணற்று நீரில் குளிக்கவைக்கிறார்கள். அதேபோல படிப்பு வரமல், தீயொழுக்கத்துடன் திரியும் பயல்களை இந்தக்கோவிலில் 12 நாட்களுக்கு தங்க வைக்கின்றார்கள். அவர்கள் நல்லொழுக்கத்துடனும், புத்தியுடனும் திரும்பிச் செல்கிறார்களாம்!


இந்தக் கோவிலுக்கு நாங்கள் சென்றபோது நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பாஷணை:-

நான்: (மகள்களிடம்):- “இதுதான் தட்சிணாமூர்த்தி சந்நிதி. கடவுள்கள்ல இவருதான் எஜூகேஷனல் மினிஸ்டர். நல்லா படிப்பு வரணும்ன்னு வேண்டிக்கோங்க”


குழந்தைகள் வேண்டிக்கொண்டு வந்தபின் உமா கேட்டார்... “அப்படியே குறும்பு பண்ணக் கூடாதுன்னும் வேண்டினீங்களா?”

மேகா: “ஆனா அவரு படிப்புக்குத்தானே கடவுள். குறும்புக்கு இல்லையே”


***********************

உடுமலைப்பேட்டை அருகே செஞ்சேரிமலை முருகன் கோவிலும் பிரசித்தம். ஆனால் நான் இதுவரை சென்றதில்லை. என்னோடு பூண்டி கோவிலுக்கு வந்த நண்பன் செந்தில் இதைச் சொன்னான்.


பூண்டி கோவிலைப் போலவே இங்கும் முருகன் ஆறுதலைகளுடன் காட்சி தருகிறார். முருகன் இங்கே மயில் மேலமர்ந்துள்ளார்.


பழங்காலத்தில் இந்தக் கோவிலமைந்துள்ள பகுதியில் இரவு வேளையில் மயில் அகவும் ஒலி கேட்டுள்ளது. இது தொடரவே, அந்த ஊரைச் சார்ந்தவர்கள் கோவிலுக்கு வெளியே அமர்ந்து கண்காணித்தபோது தினமும் இரவு முருகன் மயிலோடு நைட் ரவுண்ட்ஸ் போனதைப் பார்த்தார்களாம். எங்கே இப்படியே பறந்து நம்மை விட்டுப் போய்விடுவாரோ என்றஞ்சிய ஊர்மக்கள் அடுத்தநாள் அந்த மயிலின் ஒரு காலை, பறக்க இயலாதவாறு காயப்படுத்திவிட்டார்களாம்!


இப்போதும் அங்கிருக்கும் சிலையில் கால்பகுதி சிதைந்து, காயப்பட்டிருப்பது இதனால்தானாம்!



34 comments:

விஜய் ஆனந்த் said...

கோவில் சொல்லும் கதைகள்!!!!

anujanya said...

பரிசல்காரன் என்று எண்ணி வந்தால், பரணிதரன் பதிவு. வாழ்த்துக்கள்.

மயிலின் காலை ஒடித்து முருகனைத் தக்க வைக்கும் உபாயம்
அந்தக் காலத்தில் கடவுள் நண்பனாக இருந்திருக்கிரானோ என்று எண்ண வைத்தது, சிறுவயதில் நண்பனின் சைக்கிள் டயரில் காற்றை நீக்கியது போல. PETA ஆசாமிகள் நல்ல வேளையாக அப்போது இல்லை. நம்ம காலை ஒடித்து இருப்பார்கள்.

அனுஜன்யா

புதுகை.அப்துல்லா said...

me the firsttu

Syam said...

ஒரு நிமிஷம் KRS ப்ளாக்கு வந்துடமொன்னு சந்தேகமா போச்சு... :-)

மேகா கமென்ட் சூப்பர்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாடல் பெற்ற ஸ்தலங்கள் தேடிப்போவது வழக்கம்.. நீங்க கோயில் கதைகள் பதிவு போடும்போது அந்த கோயில் இருக்கும் இடத்தை பற்றி சரியான விவரங்களையும் பதியுங்கள்.எங்களுக்கு இது போன்ற கூட்டமில்லா கோயில்கள் போவது மனம் நிறைவைத்தரும்.

கோவி.கண்ணன் said...

உள்ளேன் ஐயா !

அண்ட் மீ த பர்ஸ்டு !

Athisha said...

முருகா!!!!!!!

\\
கால்பாகுதி சிதைந்து, காயப்பட்டிருப்பது இதனால்தானாம்! \\

பாகுதியில்லை பகுதி

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே,
ரொம்ப நல்லா இருக்குண்ணே. நீங்க எதை எழுதுனாலும் நல்லா எழுதுறீங்க. வாழ்த்துக்கள்.

குறும்புக்கு யாரு கடவுள்னு பார்த்து அதையும் மேகா கிட்ட சொல்லியிருக்கலாம்ல? உங்களுக்கு பதில் சொல்ல மேகாதான் சரியான ஆளு.

Kumky said...

அன்னா என்னங்னா பக்தி முத்தி போச்சுங்னா....photo மற்றும் விளக்கம் அருமை..

Kumky said...

அப்படியே மெடிடேசன் கற்றுக்கொண்டு இம்மாதிரி கோவில்களில் அமர்ந்து செய்தால் மிகவும் நன்ராக இருக்கும்.....முயற்சித்து பாருங்கலேன்.

Anonymous said...

பக்கத்துல கல் சிலை செய்யற இடம் இருக்குங்களே, அங்க போய் உளியின் ஓசை கேட்டீங்களா

Mahesh said...

first :)

Mahesh said...

அப்பிடியே காங்கேயம் சிவன் மலை முருகன் கோவிலப் பத்தியும் எழுதுங்க.... அங்க கனவுல வந்து பொருள வெக்கறது, பௌர்ணமிக்கு பாம்பு மலயேறறது எல்லாம்....

ரமேஷ் வைத்யா said...

மன்னிக்கவும், தாணு சிவன்; அயன் பிரம்மா

பரிசல்காரன் said...

@ விஜய் ஆனந்த்

:-)

@ அனுஜன்யா
//சிறுவயதில் நண்பனின் சைக்கிள் டயரில் காற்றை நீக்கியது போல//

!!!

@ அப்துல்லா

நெனப்புதான்!

@ syam

நன்றி! (ரொம்ப நாளா காணொமே?)

@ முத்துலெட்சுமி

//எங்களுக்கு இது போன்ற கூட்டமில்லா கோயில்கள் போவது மனம் நிறைவைத்தரும்.//

எங்களுக்கும்!!

@ கோவி.கண்ணன்

ஏமாந்தீங்களா...!!!

இன்னைக்கு கமெண்ட் மாடரேஷன் போட்டதால நிறைய பேர் மீ த ஃபர்ஸ்ட் போடறாங்கப்பூ!

பரிசல்காரன் said...

@ அதிஷா

//பாகுதியில்லை பகுதி//

அந்தச் சிலையிலதான் கால் சிதைஞ்சிருக்கு... இங்கயாவது காலை விடுங்கப்பா...

@ ஜோசப் பால்ராஜ்

//குறும்புக்கு யாரு கடவுள்னு பார்த்து அதையும் மேகா கிட்ட சொல்லியிருக்கலாம்ல?//

நம்ம குசும்பன்!!

@ கும்கி

நன்றி! (என்னா பேருய்யா அது!!!)

@ மகேஷ்

சாரி... நீங்க ஃபர்ஸ்ட் இல்ல! 12த்!

ஆமாமா.. எழுதணும்!!

பரிசல்காரன் said...

@ விடமாட்டேன்

விடமாட்டீங்க போல! :-)

இது மிகப்பெரிய தவறு தான்!

மன்னிக்கவும்.

மாற்றிவிட்டேன்!

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

லக்கிலுக் said...

தொடர்ந்து எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

தலைப்பு மட்டும் வேறு ஏதாவது வையுங்கள். கோயில் (கோவில் அல்ல) சொல்லும் கதைகள் என்றதுமே ப்ரியா கல்யாணராமன் தான் நினைவுக்கு வருகிறார். உங்கள் பதிவுகளை வாசிக்கும்போது கே.பி.கிருஷ்ணகுமார் தான் எங்களுக்கு நினைவுக்கு வரவேண்டும் :-)

அன்புடன்
லக்கி

கார்க்கிபவா said...

உண்மைத் தமிழன் இன்னும் வரலையா??????????

Kumky said...

ஹி ஹி என் பேருங்களா தல..   முரட்டு யானய்ங்கல வழிக்கு கொண்டு வார நல்ல யான தல..சரி அத்த வுடுங்க.. gmilல நம்பர் கேட்டனே மறந்துட்டிங்களா?

பரிசல்காரன் said...

@ லக்கிலுக்

//தொடர்ந்து எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.//

கண்டிப்பா எழுதுவேன்! ஆனா இதே மாதிரியான்னு தெரியல...

//தலைப்பு மட்டும் வேறு ஏதாவது வையுங்கள். கோயில் (கோவில் அல்ல) சொல்லும் கதைகள் என்றதுமே ப்ரியா கல்யாணராமன் தான் நினைவுக்கு வருகிறார். உங்கள் பதிவுகளை வாசிக்கும்போது கே.பி.கிருஷ்ணகுமார் தான் எங்களுக்கு நினைவுக்கு வரவேண்டும் :-)//

தவறைத் திருத்திவிட்டேன்.. தலைப்பை அடுத்த இதே டைப் பதிவின்போது திருத்திக்கொள்கிறேன்!

நன்றி லக்கி!

பரிசல்காரன் said...

நன்றி கார்க்கி!

@ கும்கி

ஐயையோ... தமிழும் இங்கிலீஷும் படாத பாடுபடுதே...

இருங்க மொதல்ல உங்களுக்கு ஒரு மெய்ல அனுப்பீட்டுதான் மறுவேலை...!

KARTHIK said...

// உங்கள் பதிவுகளை வாசிக்கும்போது கே.பி.கிருஷ்ணகுமார் தான் எங்களுக்கு நினைவுக்கு வரவேண்டும் :-)//


:-))))))

சின்னப் பையன் said...

நல்ல பதிவு....
தல புராணங்களை கேட்டுத் தெரிந்து கொள்வது நல்ல பழக்கம்!!!

தமிழன்-கறுப்பி... said...

இன்னும் எழுதுங்க...

தமிழன்-கறுப்பி... said...

கோயிலை கட்டினது யாரு...

தமிழன்-கறுப்பி... said...

எப்ப கட்டினாங்க...

தமிழன்-கறுப்பி... said...

லக்கி அண்ணன் கமன்ட்டுக்கு ரிப்பீட்டு...

Anonymous said...

பக்திமான் கேள்விப்பட்டிருகேன், அதென்ன பக்திப்புலி?

கயல்விழி said...

//நான்: (மகள்களிடம்):- “இதுதான் தட்சிணாமூர்த்தி சந்நிதி. கடவுள்கள்ல இவருதான் எஜூகேஷனல் மினிஸ்டர். நல்லா படிப்பு வரணும்ன்னு வேண்டிக்கோங்க”


குழந்தைகள் வேண்டிக்கொண்டு வந்தபின் உமா கேட்டார்... “அப்படியே குறும்பு பண்ணக் கூடாதுன்னும் வேண்டினீங்களா?”

மேகா: “ஆனா அவரு படிப்புக்குத்தானே கடவுள். குறும்புக்கு இல்லையே”
//

So cute :)

குழந்தைகளால் தான் இப்படி பதில் சொல்ல முடியும். பெரியவர்களாகும் போது கேள்விகேட்கும் மனதை எல்லாம் தொலைத்து, சொல்லும் வேலையை மட்டும் செய்யும் மெஷின்களாகிவிடுகிறோம்.

கூடுதுறை said...

//அதனால் புத்திப் பிசகு உள்ளவர்களை இந்தக் கோவில் கிணற்று நீரில் குளிக்கவைக்கிறார்கள். //

பரிசலும் இந்தக்குளத்தில் குளித்ததாக கேள்விப்பட்டேனே? நீங்கள் இன்னும் குளிக்கிவில்லையா?

வால்பையன் said...

தெரியாத விஷயம் என்பதால் ஜகா வாங்கி கொள்கிறேன்


//மேகா: “ஆனா அவரு படிப்புக்குத்தானே கடவுள். குறும்புக்கு இல்லையே”//

பொண்ணு அம்மா மாதிரி புத்திசாலி போல

VIKNESHWARAN ADAKKALAM said...

பரிசல் குழந்தைகளுக்கு உங்கள் குறும்பு இருக்கிறதா. இல்லை நீங்கள் உங்கள் குழந்தைகள் போல் குறும்பு செய்கிறீர்களா?

முரளிகண்ணன் said...

தொடர்ந்து கலக்குங்க பரிசல். சுவராசியமாக இருக்கின்றன உங்கள் பதிவுகள்