இதைப் படிச்சுட்டு தமிழை யாருடா இனி காப்பாத்துவா-ன்னு யாரும் வருத்தப்பட்டுக்க வேண்டாம்!
என்மீது அக்கறை கொண்டுள்ள ஓரிரண்டு பேரின் அறிவுரைக்கேற்ப வலைப்பதிவில் இவ்வளவு ஸ்பீட் தேவையில்லை என்று முடிவெடுத்துவிட்டேன்!
நான் என் தந்தை ஸ்தானத்தில் மதிக்கும், லதானந்த் அங்கிள் பரிசல்காரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் என்று ஒரு பதிவு போட்டு என் அகக்கண்ணைத் திறந்து விட்டார்!
என் மீது அக்கறை கொண்டு என் பதிவுகளைப் படித்து, பின்னூட்டமிட்ட எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும் என் மரியாதையான நன்றி! என்ன செய்தாலும் உங்களுக்கு கைமாறு செய்துவிட என்னால் முடியாது.
அவ்வப்போது மட்டும்தான் இனி எழுதுவேன். (இங்கே கூட அவ்வப்போது என்றால் 24 மணிநேரத்துக்கு ஒன்றா? என்று அரைமணிநேரம் முன்புவரை எனக்குள்ளிருந்த பரிசல்காரன் கேட்கிறான்!)
இதற்கு இடப்படும் பின்னூட்டங்களைக்கூட நான் பார்ப்பேனா என்று தெரியவில்லை!
என் மெய்ல் பாக்ஸை மட்டுமே இனி பார்ப்பேன் என நினைக்கிறேன்.
அளவில்லா அன்போடு-
பரிசல்காரனாக இருந்த
கிருஷ்ணகுமார் K.B.
(kbkk007@gmail.com)
(ஐயா.. சாமீ... இதுக்கு முன்னாடி போட்ட தலைப்பு, மேட்டரையெல்லாம் தப்பா எடுத்துக்காதீங்க..)
(இவனைத் திருத்தவே முடியாதுப்பா....!)
78 comments:
என்னாச்சு திடீருன்னு.சும்மா அடிச்சு ஆடுவீங்களா அவுக சொல்றாங்க இவுக சொல்றாங்கன்னுட்டு....
(என்னைய மாதிரி அப்புராணிகளை நோட்டம் பார்க்கிறதுக்கு எழுதுன பதிவில்லையே இது!)
படிச்சிட்டு ஸ்மைலி மட்டும் போட்டுட்டு போயிட்டேன். லதானந்த் பதிவு படிச்சதும் தான் நீங்க நிஜமா சீரியஸாக எழுதி இருப்பது தெரிகிறது.
சித்தர்கிட்ட போயிட்டு திரும்பவும் இங்கேயே வந்துவிட்டேன்.சித்தரும் பொக போட்டு என்னமோ சொல்ற மாதிரிதான் தெரியுது.பார்த்து....நானெல்லாம் வார இறுதியில் வலைக்கு கண்ண முழிக்கிறதோட சரி சாமி.
மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்...
முன்பு போல் இல்லாவிடினும், வாரம் ஒன்று அல்லது இரண்டு இடுகைகள் மட்டுமாவது இடலாம்..
வாழ்த்துக்கள்!! :)
அவசர முடிவென்று நினைக்கிறேன் பரிசல்.
அவர் வேறு எதோ அக்கரையில் எழுதியிருக்கலாம். எழுத எழுத தான் மேலும் சுவை கூட்டும் ரகசியம் கைப்படும். நீங்கள் என்ன தான் சமாதானம் சொன்னாலும் எழுதுவதை நிறுத்துவது தவறு. உங்களிடமிருந்து நாங்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம்
வால்பையன்
பரிசல் அண்ணன் உங்கள் வசதிக்கேற்ப எழுதுங்கள் எழுதக்கூடாது என்று உங்களை கட்டுப்படுத்தாதீர்கள் எதையாவது எழுதியே ஆக வேண்டும் என்றும் யோசிக்காதீர்கள் அட இதை எழுதலாம் போல இருக்கே அப்படி உங்களுக்கு தோன்றினால் மற்றொரு முறையும் யோசித்து எழுதலாம் என்கிற விடயங்களை உங்கள் திறமைகளோடு பதியுங்கள்..
ஏதோ எனக்கு மனசுல பட்டத சொல்லிருக்கேன்
வாழ்த்துக்கள்...
லதானந்த்தின் அறிவுரைகள் மிக நியாயமானதே.! அது போதையிலிருந்து உறவை மீட்க நினைக்கும் பாசம். நீங்கள் அதற்காக இப்படி சோக மயமாக பிரிவது சரியல்ல. அறவே விட்டொழிக்க வேண்டிய பழக்கம் போல, வலைப்பூவை சுட்டிக்காட்டி ஓடுவதைப்போலுள்ளது. எழுதத்தெரிந்தவர்களுக்கு எழுதுவதை மெருகேற்ற, எழுதத் தெரியாதவர்களானாலும் தன் பிரச்சினைகளையும், அனுபவங்களையும் கொட்டித்தீர்க்கும் வடிகாலாக, நண்பர்களுடன் சுவாரசியமாக அரட்டையடிக்க என வலைப்பூ ஒரு நல்ல தளம்.
சிரித்த முகமாக வாரம் ஒருமுறை வருவேன் கும்மியடிக்க என நீங்கள் விடைபெற்றிருக்க வேண்டும் (முடிந்தால் சொல்லாமலே). அதுதான் பரிசலுக்கு அழகு.
(முடிந்தால் பெருசுங்களோடு பழக்கத்தை குறைச்சுக்கறது நல்லது.. ஹி ஹி.)
நின்று நிதானமாக முடிவெடுங்கள் பரிசல்... ஆங்கிலத்தில் Work-Life balance என்பார்கள். வேலைக்கும் குடும்பத்துக்கும் நேரத்தை பங்கு போடுவது குறித்து அது.
அதே போல், Work-Life-Blog இம்மூன்றுக்கும் நேரத்தை பங்கு போடுவது குறித்து யோசியுங்கள் என்றுதான் திரு.லதானந் கூறியிருக்கிறார்.
:-((
me too
அவர் கூறுவது போல், வேலையே கணிணிமுன் எங்களுக்கு. பெரும்பாலும் வேலையே இருக்காது(!!!). அப்படி இருக்கும்போது, பதிவுக்குத் தேவையான எல்லா முயற்சிகளையும் நான் அலுவலகத்திலேயே செய்துவிட்டு, வீட்டில் மக்களோடு வெளியே செல்வது, மகளோடு விளையாடுவது இப்படித்தான் பொழுது கழிக்கிறேன்...
ஆனால், உங்களது நிலை அப்படியில்லை. வேலை நேரம் போக, நீங்கள் கணிணியில் அமர்கிறீர்கள் எனும்போது, குடும்பத்துக்காக நேரம் இல்லாமல் போகிறது என்ற கருத்துதான் அவர் சொல்ல வருகிறார்.
உசுப்பேத்தி உசுப்பேத்திதான் உடம்பை ரணகளமாக்கறாங்க... இதுதான் அந்த பதிவின் சாராம்சம்... சரிதானே மக்கள்ஸ்.....
கிருஷ்ணக்குமார்,
உங்களோட அவியல் நான் விரும்பி படிக்கிற ஒண்ணு. அதே மாதிரி உங்க கதைகளும்...
மொக்கை, கும்மி எல்லாம் பொழுது போகாதப்ப அடிங்க. அவ்வளவு தான் :-)
ஆமாம் நண்பரே! நாங்கள் வேற வேலை இல்லாமல் மாலையில் அறைக்கு வந்து தனிமையைப் போக்க வலையில் சுற்றுகிறோம்... நீங்கள் அப்படி இல்லையே?... குடும்பத்திற்கு ஒதுக்கியது நேரம் அதிகப்படியாக இருக்கும் போது மட்டும் வலையில் ஒதுங்குவது நல்லது.
:( கிரிஷ்ணா யோசித்து முடிவெடுங்கள். தினம் ஒரு பதிவு வேண்டாம் தான் இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக எழுதுங்கள். குடும்பத்தோடும் நேரத்தைச் செலவிடுங்கள். எழுதவே மாட்டேன் எனும் முடிவு வேண்டாத ஒன்று.
என் பின்னூட்டத்தை ஒரு பதிவாகவே போட்டு விட்டேன்.
http://thuklak.blogspot.com/2008/08/blog-post_11.html
பரிசல்,
உண்மையை சொல்லப்போனால் நீங்கள் இதுவரை செய்து வந்ததும் தவறு, இப்போது முடிவெடுத்திருப்பதும் தவறு.
லதானந்த் சார் சொல்வது வலைப்பதிவிற்கு அடிமையாகாதே என்ற அறிவுரைதான். அதை விட்டுச் செல் என்பதல்ல.
ஆழ்ந்து யோசியுங்கள். உங்களுக்கு நகைச்சுவையாக, அழகாக எழுத வருகிறது. அது உங்கள் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக ஆக்குவதாக இருக்க வேண்டும் (டி.வி பெட்டிக்கு பதில்). அவ்வளவே..
உங்களின் அடுத்த பதிவை எதிர்பார்க்கும் உங்கள் பார்ட்னர்,
வெண்பூ....
பரிசல்,
கும்மி, மொக்கை, போன்ற வகையான பதிவுகளே தப்பானவை இல்லைன்னு சொல்றேன். அதுல அவியல் போன்ற நல்ல பதிவுகளை எழுதுறீங்க. மத்தவங்க சொல்றாங்கன்றதுக்காக சீரியஸா (ரொம்பவே அவசரப்பட்டு) முடிவெடுத்துட்டீங்க. உங்கள் முடிவை சீக்கிரமே மாற்றி அடுத்த சுனாமியாய் வர வாழ்த்துக்கள்.
எப்போதுமே பதிவு, பின்னூட்டம், தமிழ்மணம், கும்மின்றதை தவிர்த்து நேரம் கிடைக்கும்போது கலந்துக்கலாமே. :-)
நம்ம கருத்தை தனி மடலில் அனுப்பி இருக்கேன்!
:)
குட் பை!
ஒழுங்கு மரியாதையா திரும்ப எழுத ஆரம்பிக்கலைனா திருப்பூரில் ஒரு கொலை விழும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... உங்க கிட்ட எனக்கு பிடிக்காத ஒரே விஷயமே சும்மா தேவை இல்லாம உணர்ச்சிவசப் படறது தான். நான் ஏற்கனவே இதை பத்தி நேர்ல என் கோவத்த சொல்லி இருக்கேன். திரும்பவும் அதையே தான் பண்றிங்க...
திரும்ப எழுதற வழிய பாருங்க..
(.. வயசுல பெரியவர்னு பாக்கிறேன். இல்லைனா வேற மாதிரி சொல்லி கூப்டிருப்பேன்...)
நல்ல பதிவுகள் இடுவதில் தவறில்லை.
நேரங்களை முறைப்படுத்தி எழுதலாம்.
http://snapjudge.wordpress.com/2008/04/11/%e0%ae%b0%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/
இந்தப் பதிவையும் படிச்சுப் பாருங்க
படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
எடுத்தேன்! கவிழ்த்தேன்! என்று இப்படி முடிவெடுப்பது சரியல்ல.
உங்களின் வார்த்தைகளில் சொல்வதானால் “இவ்வளவு ஸ்பீட் தேவையில்லை”.
கொஞ்சம் நிதானத்துடன் யோசித்திருந்தால் இந்த பதிவு போட்டிருக்க மாட்டீர்கள்.
நீங்கள் எழுதுங்கள் என்று சொல்லவில்லை. எழுதுவதை விட்டு விடாதீர்கள் என்று சொல்லுகிறேன். புரிந்திருக்குமென நினைக்கிறேன்.
அண்ணா,
நீங்கள் உங்கள் மேல் உள்ள அன்பில் சொல்லப்பட்ட அறிவுரையால் காயம்பட்ட மனதோடு இந்த முடிவை அறிவிப்பது போல் இருக்கின்றது. லதானந் மாமா சொன்னது மிகுதியான அக்கறையினால் சொல்லப்பட்ட அறிவுரை.
நீங்கள் எழுதவே கூடாது என்று சொல்லவில்லை. கட்டாயம் எழுத வேண்டும். ஆனால் எப்போதும் வலைப்பூ சிந்தனையிலேயே இருக்க கூடாது. அண்ணி மற்றும் குழந்தைகளுக்காகவும் மிகுதியான நேரம் ஒதுக்க வேண்டும். என் மனைவி தற்போது சிங்கப்பூரில் என்னுடன் இல்லை. நான் அமெரிக்காவின் பகல் நேரமாகிய நமது இரவு நேரங்களிலும் வேலை செய்து செய்து இரவு தூக்கம் என்பதே 12 மணிக்கு மேல்தான் என பழகிப்போனதால் இரவு நேரங்களில் அமர்ந்து எழுதிக்கொண்டுள்ளேன். குடும்பம்தான் முக்கியம். அதே நேரம் வாரவிடுமுறைநாட்களில் ஒரு மணிநேரம் ஒதுக்குங்கள். வாரம் ஒரு பதிவாவதுஇடுங்கள் .
விடைபெறுகிறேன் என்பதெல்லாம் பெரிய வார்த்தை. அது நம்மீது அக்கறைகொண்டு அறிவுரை சொன்ன லதானந் மாமாவுக்கு நாம் செய்யும் மரியாதையாக இராது என்பது உங்கள் தம்பியாகிய எனது கருத்து.
:(
//தமிழன்... said...
பரிசல் அண்ணன் உங்கள் வசதிக்கேற்ப எழுதுங்கள் எழுதக்கூடாது என்று உங்களை கட்டுப்படுத்தாதீர்கள் எதையாவது எழுதியே ஆக வேண்டும் என்றும் யோசிக்காதீர்கள் அட இதை எழுதலாம் போல இருக்கே அப்படி உங்களுக்கு தோன்றினால் மற்றொரு முறையும் யோசித்து எழுதலாம் என்கிற விடயங்களை உங்கள் திறமைகளோடு பதியுங்கள்..
ஏதோ எனக்கு மனசுல பட்டத சொல்லிருக்கேன் //
நானும்தான்.
உங்க போட்டோவையும் குழந்தைகளின் போட்டோவையும் போட்தாலதா இந்த நெலமயோ??
எதுக்கும் குழந்தைகளுக்கு திருஷ்டி சுற்றி போடவும் ( சீரியஸாக )
இன்னும் எதிர்பார்க்கும்
சுபாஷ்
கொஞ்சம் கவனமா போங்க, வேகம் கொஞ்சம் குறைச்சுக்கோங்க அப்டின்னு யாராவது உங்கள்கிட்ட சொன்னா வண்டி ஓட்றதை கூட நிறுத்தி விடுவீர்கள் போல இருக்கே.
உங்கள் எழுத்து பிடித்து படிப்பவன் என்கிற முறையில் சொல்கிறேன் - எவ்ளோ எழுதுறது, என்ன எழுதறது, எந்த நேரத்தில் வலைப்பக்கம் போவது, எல்லாம் உங்க இஷ்டம். பழக்கம் விட்டு போகாமல் கொஞ்சமாவது நீங்கள் எழுதவேண்டும் என்று நினைப்பது எனக்கு இஷ்டம்.
// தாமிரா said...
லதானந்த்தின் அறிவுரைகள் மிக நியாயமானதே.! அது போதையிலிருந்து உறவை மீட்க நினைக்கும் பாசம். நீங்கள் அதற்காக இப்படி சோக மயமாக பிரிவது சரியல்ல. அறவே விட்டொழிக்க வேண்டிய பழக்கம் போல, வலைப்பூவை சுட்டிக்காட்டி ஓடுவதைப்போலுள்ளது. எழுதத்தெரிந்தவர்களுக்கு எழுதுவதை மெருகேற்ற, எழுதத் தெரியாதவர்களானாலும் தன் பிரச்சினைகளையும், அனுபவங்களையும் கொட்டித்தீர்க்கும் வடிகாலாக, நண்பர்களுடன் சுவாரசியமாக அரட்டையடிக்க என வலைப்பூ ஒரு நல்ல தளம்.
சிரித்த முகமாக வாரம் ஒருமுறை வருவேன் கும்மியடிக்க என நீங்கள் விடைபெற்றிருக்க வேண்டும் (முடிந்தால் சொல்லாமலே). அதுதான் பரிசலுக்கு அழகு.
//
அழகாக சொல்லியிருக்கிறார். முழுக்க வழி மொழிகிறேன்!
//ஆமாம் நண்பரே! நாங்கள் வேற வேலை இல்லாமல் மாலையில் அறைக்கு வந்து தனிமையைப் போக்க வலையில் சுற்றுகிறோம்... நீங்கள் அப்படி இல்லையே?... குடும்பத்திற்கு ஒதுக்கியது நேரம் அதிகப்படியாக இருக்கும் போது மட்டும் வலையில் ஒதுங்குவது நல்லது.//
ரிப்பீட்டு
எங்களுக்கு வேற வேலை இல்லாமல் எழுதுகிறோம் என்பது நிஜம். லதானந்த் சித்தர் சொன்னது மாதிரி உங்களுக்கு தேவதை மாதிரி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்(இல்லை என்றால் என்னுடைய கருத்து வேற மாதிரி இருக்கும், உங்களுடைய வலைப்பூவை ஏறக்குறைய தினமும் படிப்பவள் நான்).
உங்களுக்கே எது சரி, எது தவறு என்று தெரிந்திருக்கும். பார்த்து முடிவெடுங்கள். :)
இது ஒரு முட்டாள் தனமான வாதம். அதற்காக நீங்கள் எழுத்தை விடுவது அதை விட முட்டாள்தனம்.
உங்களால் நன்றாக எழுத முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் / சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் எழுதுங்கள். பெரிய சாதனையாளர்களுக்கெல்லாம் இந்த குற்றச்சாட்டு உண்டு. குடும்பத்துடன் நேரம் செலவளியாமை. இளையராஜா, பாரதியார் இன்னும் பலர். சாதிக்கும் வெறி உடையவன் ஓடி ஒழிய கூடாது.
உதாரணமாக http://labnol.blogspot.com/ இந்த பதிவரை எடுத்து கொள்ளுங்கள். இவரின் மாத வருமானம் ரூபாய் ஐந்து லட்சம் . கூகிள் அட்சென்ஸ் இருந்து வருகிறது. நமது தமிழ் உலகிற்கு விளம்பர நிறுவனம் அனுமதி இல்லை. அதற்க்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. நீங்கள் நன்றாக எழுத கூடியவராக இருந்து, உங்களிடம் தனித்தன்மை இருந்தால் நீங்கள் பொருளாதார ரீதியாகவும் முன்னேறலாம்.
பரிசல்காரன்!
உங்களைப் பற்றிய பதிவை அப்லோடு செய்துவிட்டு உங்களிடமும் போனில் தெரிவித்துவிட்டுக் கனத்த மனசுடன் எங்கே போயிருப்பேன் என்று உங்களுக்குத்தெரியும்.
இப்போது இரவு மணி 2.30.
உங்கள் பின்னூட்டம் பார்த்த பிறகுதான் எஸ்்.எம்.எஸ் பார்த்தேன்.
வலைப் பூவில் எழுத வேண்டாம் என நான் சொல்லவில்லை. மீண்டும் சொல்கிறேன். வலைப் பூவுக்கு அடிமையாக வேண்டாம்.
அனானி சொன்ன இளைய ராஜவும் பாரதியாரும்
வலைப்பூ மாதிரியான விஷயத்திலா பொன்னான நேரத்தை செலவிட்டிருந்தார்கள்.
ஊடகங்களுக்கு எழுதுங்கள் என்றுதானே கரடியாய்க் கத்துகிறேன்.
முதலில் வலைப்பூவில் எழுதிக் கிழித்துப் பொருளாதார ரீதியில் முன்னேறியவர்கள் பட்டியலை அனானி வெளியிடட்டும். அப்புறம் பார்க்கலாம்.
முட்டாள்தனம் போன்ற தடித்த வார்த்தைப் பிரயோகங்களை அனானிதவிர வேறு யாரும் பிரயோகிக்கவில்லை என்பதிக் கவனிக்கவும்.
என் கருத்தைத் 90% சதவீதத்துக்கு மேல் ஆதரித்ததை நோக்கவும்.
எப்போதாவது எழுத வேண்டும் என்று நீங்கள் எடுத்திருப்பது நல்ல முடிவு. அப்படி நீங்கள் எழுதும்போது, உங்களுடைய எழுத்து இப்போதைவிட இன்னும் வீரியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறன்.
பதிவெழுதுவதுக்கு யோசனை எல்லாம் சொன்ன நீங்கள்.. பதிவுலகத்திற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளலாம்ன்னும் சரியாக நேரம் பிரித்து பயன்படுத்தக்கூடிய தெளிவு உள்ளவர் தான் என நினைக்கிறேன்..ஆரம்பகால வேகம் எல்லா பதிவருக்கும் இருப்பது தான்.. அது இல்லாத பதிவர்கள் அதிகப்படியான வேலைப்பளுவால் வேண்டுமானால் ஆரம்பத்திலேயே கொஞ்சம்போல எழுதி இருப்பார்கள்..
நான் போனதலைப்பை தமிழ்மணத்தில் பார்த்து வந்தேன்.. இங்கே வேற தலைப்பு..ஓகே சீரியஸா எடுத்துக்கலை ..அதே போல நீங்களும் எல்லாவற்றையும் சீரியஸா எடுத்துக்காதீங்க.. வலைப்பதிவையும் தான். ஆனா எழுதக்கூடாத அளவுக்கு இது ஒன்றும் குடிப்பழக்கம் போல இல்லைன்னு நினைக்கிறேன்..
கொஞ்ச நாள் முன்ன இப்படி ஒரு பதிவு குடிக்காதீங்கன்னு ..ஒரு பதிவருக்காக, மறைமுகமா எழுதப்பட்டது நினைவுக்கு வருது..
ஊடகங்களுக்கு எழுதுவது தான் சிறந்தது என்பதை மறுக்கிறேன்.. வலைப்பதிவும் ஒரு சிறந்த ஊடகமாக உருவெடுத்துக்கொண்டிருப்பது தான் .
இதன் பயனை முழுதுமாக அடைவதற்கு காலம் வேண்டுமானால் இன்னும் தாமதமாகலாம்...
வாழ்க்கையில் பணம் மட்டுமே குறிக்கோள் அல்ல.. பணமும் வேண்டும்.. அதற்கு நேரம் ஒதுக்குங்கள்..நீங்கள் எழுதுவதை உங்கள் குடும்பத்தினரும் ரசிப்பதாகவே நினைக்கிறேன்..
//(ஐயா.. சாமீ... இதுக்கு முன்னாடி போட்ட தலைப்பு, மேட்டரையெல்லாம் தப்பா எடுத்துக்காதீங்க..)
(இவனைத் திருத்தவே முடியாதுப்பா....!)//
அது...! கொலை மிரட்டல் நல்லாவே வேலை செய்யுது.. அசோகமித்திரன் புத்தகங்கள் படிக்கும் போது எழும் பக்கவாட்டு சிந்தனைகளையும் நகைச்சுவையா பதிவெழுதுங்க...:)
loosuthanama irukkuthu :(
ஒரு வேளை இங்கிலீஷுல இருக்குன்னு படிக்காம போயிட்டீங்கன்னா என்ன செய்யறது.. அதான் தமிழ்லயும் போட்டிருக்கேன்..
சுத்த லூசுத்தனமா இருக்குது :(
அன்பின் பரிசல்காரன்,
லதானந்தின் கருத்துடன் உடன்படுகிறேன். சிந்திக்க வேண்டிய பதிவுதான். அதற்காக வலைப்பூவினை விட்டு விலக வேண்டியது என்பது இல்லை ( அது தங்கள் முடிவல்ல எனத் தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறீர்கள் - வேகத்தினைக் குறைக்க வெண்டும் என்பதே உங்களின் முடிவு) . சரியான முடிவுதான். பின்னூட்டங்களைப் பார்க்க மாட்டேன் எனில் எப்படி - மட்டுறுத்தலுக்காக மின்னஞ்சல் வராதா ? - சிந்தியுங்கள்.
அவ்வப்பொழுது எழுதுங்கள் - வாருங்கள் - வலைப்பூவில் உலா வருவதைத் தவிர்க்க வேண்டாம். வலைப்பூவினிற்கு ஒதுக்கும் நேரத்தினைக் குறையுங்கள் - அது போதும்
லதானந்த் அவர்கள் சொல்வது சரி .உண்மைய சொல்லபோன நானே இது போல் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் நான் புதியவன் என்பதால் அது எடுபடாது என்று விட்டு விட்டேன்.உங்களுக்கு ஒரு பின்னூட்டத்தில் கூட இந்த கேள்வியை கேட்டிருப்பேன்.முழுதுமாக விலகிவிடாமல் முடிந்த போது எழுதுங்கள்.நீங்கள் பதிவு போடுவதற்காக ஒதுக்கும் நேரத்தை விட அது சம்பந்தமா மற்றவர்களிடம் பேசுவது,தொலை பேசியிலோ அல்லது chat இலோ ,இது போன்ற விஷயங்கள்தான் நேரத்தை அதிகமாக எடுத்து கொள்கிறது என்று நினைக்கிறேன்.
யோசித்து முடிவு எடுக்கவும்
பரிசல்
மழித்தலும் நீட்டலும் வேண்டா
லதானந்த்
கடிதோச்சி மெல்ல எறிக
காதலைப் போல இந்த வலைப்பதிவும் அலைக்கழிக்கிறது என்றால் சீரியஸாக எடுத்துக் கொள்ளவும்.
லதானந்த் அங்கிளின் வலைப்பதிவில் போட்ட பின்னூட்டத்தை மட்டும் இங்கே ஒட்டிவிட்டு எஸ்கேப் ஆகிறேன்.
////நல்ல நண்பர்கள் கிடைத்திருப்பதைத் தவிர உருப்படியான முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் வலைப் பூ உலகம்!////
பொதுவாக ஒட்டுமொத்தமாக உங்கள் கடிதத்தை ஏற்றுக் கொண்டாலும் இதுபோல சில கருத்துக்களை கடுமையாக எதிர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்.
வலைப்பதிவுலகம் மூலமாக முன்னேறிய பலரும் உண்டு. நானும் நிறைய ஆதாயங்கள் அடைந்திருக்கிறேன். ஆங்கிலத்தில் வலைப்பதியும் ஒரு நண்பருக்கு வாழ்க்கைத்துணையே வலைப்பதிவு மூலமாகவும் கிடைத்திருக்கிறது.
வலைப்பதிவு ஒரு அரிவாள் மாதிரி. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் நமது சாமர்த்தியம் இருக்கிறது. அரிவாளால் கதிரறுக்கவும் முடியும், கழுத்தை அறுக்கவும் முடியும்.
அன்புடன்
லக்கி
லக்கியின்
///வலைப்பதிவு ஒரு அரிவாள் மாதிரி. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் நமது சாமர்த்தியம் இருக்கிறது. அரிவாளால் கதிரறுக்கவும் முடியும், கழுத்தை அறுக்கவும் முடியும்.///
கருத்தோடு ஒத்துப்போகிறேன்.
இந்த பதிவுக்காக டாட்டா பை பையும்
அடுத்த பதிவுக்காக மீண்டும் எழுத வந்ததில் மகிழ்ச்சி என்று அட்வான்சாக சொல்லிக்கிடு
எஸ்கேப் ஆகிறேன்:)))
//வலைப்பதிவுலகம் மூலமாக முன்னேறிய பலரும் உண்டு. நானும் நிறைய ஆதாயங்கள் அடைந்திருக்கிறேன். ஆங்கிலத்தில் வலைப்பதியும் ஒரு நண்பருக்கு வாழ்க்கைத்துணையே வலைப்பதிவு மூலமாகவும் கிடைத்திருக்கிறது.
வலைப்பதிவு ஒரு அரிவாள் மாதிரி. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் நமது சாமர்த்தியம் இருக்கிறது. அரிவாளால் கதிரறுக்கவும் முடியும், கழுத்தை அறுக்கவும் முடியும்.
அன்புடன்
லக்கி //
கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்.. :)
இன்று காலையில் தான் நானும் குசும்பனும் வலைபதிவினால் கிடைத்த ஆதாயங்கள் பற்றி பேசினோம்.:)
பரிசல்,
நீங்கள் பதிவு தொடங்கிய போது நான் உங்களுக்கு இட்ட பின்னூட்டத்தை மறுமுறை வாசிக்கவும்.
வெச்சா குடுமி, சிரைச்சா மொட்டைனும் இருக்க வேணாம்.
உங்களுக்கு எப்போ எழுதனும் போல தோணுதோ அப்போ எழுதுங்க. அது வாரத்துக்கு ஒன்னோ, இல்ல மாசத்துக்கு மூனோ கூட இருக்கலாம்.
லக்கி சொன்னது போல, எப்படி அதை அணுகறீங்க? என்பதிலே தான் இருக்கு. ஒரு ஆங்கில பதிவர் மட்டுமல்ல, ஒரு தமிழ் பதிவரும் வலையுலகில் தான் பொண்ணு எடுத்து இருக்கார்.
அவர் பேரு அம்பி. :))
(உடனே சப்பு கொட்ட வேணாம், அதான் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சே!)
\\ 22 May, 2008 9:51 PM
Blogger ambi said...
மீதி பதிவு எல்லாத்தையும் படிச்சுட்டேன். சூப்பர்.
ஒன்னும் கவலைபடாதீங்க. 2 மாசம் இப்படி தான் ஈ அடிக்கும். போக போக பிக்கப் ஆகும். அப்புறம் உங்களுக்கும் போதை தெளிஞ்சுடும்//
இந்த பின்னூட்டத்தையா சொல்றீங்க.. தெளிவா சொல்லக்கூடாதா அம்பி இதுக்காக நான் அந்த பின்னூட்டத்தை தேடவச்சிட்டீங்களே..
இவருக்கு கல்யாணம் ஆனா என்ன ..இவருக்கு சம்பந்தி தேடிப்பாரு வலையுலகத்திலேயே.. :)
எங்களையெல்லாம் கரைசேர்க்க ஒரு பரிசல்காரன் தேவையாச்சே. ஒருதவறான முடிவுக்கு வந்துவிட்டாய் என்றுதானே ஓடோ டி வந்தேன். என் நம்பிக்கையில் மண்ணை போட்டுட்டியே நீ நல்லாயிருப்பியா? படுபாவி.
பரிசல் நேற்று நான் இந்தப் பக்கம் வராததால் எனக்கு இந்த விவாதம் தெரியாமல் போய்விட்டது.லதானந்த் மாமா சொல்வது அனைவருக்கும் பொருந்தும்.உதாரணத்திற்கு உங்க பேரைச் சொல்லீருக்கிறார்.அவ்வளவுதான். உங்களிடம் ஓருமுறை நாம் பேசும் போது லாதானந்த் மாமா பற்றி பேச்சு வந்த போது
கூட சொன்னேன்,நான் பெரும்பாலானவர்களின் பதிவுகளைப் படித்து விடுவேன்...ஆனால் அனைவருக்கும் பின்னூட்டம் இடமாட்டேன். காரணம் நேரத்தை விழுங்கிவிடும். ஓரு சிறு குழு ஓன்றை தேர்ந்தெடுத்து அவர்களின் பதிவுகளுக்கு மட்டுமே பின்னூட்டம் இடுகிறேன்.லதானந்த் மாமா வலைப்பூ மிகச் சிறப்பாக இருந்தாலும் அந்தக் குழுவில் அவரை நான் இணைக்காததால் அவருக்கு பின்னூட்டம் இடுவதில்லை படிப்பதோடு சரி என்றேன். நான் உணர்ந்தவரை நான் சொன்னதைத்தான் அவர் வேறு வடிவத்தில் சொல்லி இருக்கிறார். நம்முடைய பொழப்பைப் பார்க்கவும் குடும்பத்தைப் பார்க்கவும் நேரம் முக்கியம் இல்லையா பரிசல்?அதைத் தானே அவர் சொல்கிறார். அதற்காக ஓரேடியா எழுத மாட்டேன்னா இன்னாயா அர்த்தம்? அப்பப்ப எழுதுங்க. ஓரு குழுவாக தேர்ந்தெடுத்து இயங்குங்க.நேரம் தன்னால கிடைக்கும். வாங்கண்ணே மீண்டு(ம்)!
The best advice LA has given
Better you stop writting
The best advice LA has given
Better you stop writting
The best advice LA has given
Better you stop writting
The best advice LA has given
Better you stop writting
The best advice LA has given
Better you stop writting
The best advice LA has given
Better you stop writting
The best advice LA has given
Better you stop writting
The best advice LA has given
Better you stop writting
The best advice LA has given
Better you stop writting
The best advice LA has given
Better you stop writting
The best advice LA has given
Better you stop writting
The best advice LA has given
Better you stop writting
எழுதறத நிறுத்திட்டேன்னு சொன்னியே
நீதான் தமிழன்
எழுதறத நிறுத்திட்டேன்னு சொன்னியே
நீதான் தமிழன்
எழுதறத நிறுத்திட்டேன்னு சொன்னியே
நீதான் தமிழன்
எழுதறத நிறுத்திட்டேன்னு சொன்னியே
நீதான் தமிழன்
எழுதறத நிறுத்திட்டேன்னு சொன்னியே
நீதான் தமிழன்
எழுதறத நிறுத்திட்டேன்னு சொன்னியே
நீதான் தமிழன்
எழுதறத நிறுத்திட்டேன்னு சொன்னியே
நீதான் தமிழன்
எழுதறத நிறுத்திட்டேன்னு சொன்னியே
நீதான் தமிழன்
எழுதறத நிறுத்திட்டேன்னு சொன்னியே
நீதான் தமிழன்
எழுதறத நிறுத்திட்டேன்னு சொன்னியே
நீதான் தமிழன்
எழுதறத நிறுத்திட்டேன்னு சொன்னியே
நீதான் தமிழன்
எழுதறத நிறுத்திட்டேன்னு சொன்னியே
நீதான் தமிழன்
எழுதறத நிறுத்திட்டேன்னு சொன்னியே
நீதான் தமிழன்
பரிசல்!
என் பெயரில் யாரோ விஷமத்தனமாய்ப் பின்னூட்டம் போட்ருக்காங்க!
அந்தப் பேரில் க்ளிக் பண்ணினா எந்தப் பக்கமும் திறக்க மாட்டேன் என்கிறது.
டெலீட் பண்னிருங்க.
இனிமே கவனமா மாடரேட் பண்ணுங்க.
என் பதிவுலும் போட்ருக்கேன்.
வாராவாராம் மணக்க மணக்க தமிழ் மணத்துக்கு ஒரு சுவையான அவியல் கிடைத்துக் கொண்டிருந்தது. அதையாவது தொடருங்களேன்.
// லதானந்த் said...
பரிசல்!
என் பெயரில் யாரோ விஷமத்தனமாய்ப் பின்னூட்டம் போட்ருக்காங்க!
அந்தப் பேரில் க்ளிக் பண்ணினா எந்தப் பக்கமும் திறக்க மாட்டேன் என்கிறது.
//
லதானந்த் அங்கிள்,
இதில் க்ளிக் பண்ணிப் பாருங்க, போகும்.
யோவ் "போலி லதானந்த்", இப்படித்தான் "போலி டோண்டு" அப்படின்னு ஒருத்தன் சுத்திக்கிட்டு இருந்தான், கடைசியிலே சைபர் க்ரைம் போலீஸ் ஸ்டேஷன்'ல ஜட்டி யோட உக்கார வெச்சுட்டாங்க... தெரியுமா???
லதானந்த் சார், நீங்க முடிஞ்ச வரைக்கும் print out's, screen shot's எடுத்து வெச்சிக்கோங்க... பின்னாளில் useful'ah இருக்கும்.
வலைப்பதிவு ஒரு அரிவாள் மாதிரி. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் நமது சாமர்த்தியம் இருக்கிறது. அரிவாளால் கதிரறுக்கவும் முடியும், கழுத்தை அறுக்கவும் முடியும்.
REPEATEEEEYYYYYY
ஒரே சொதப்பலான கமென்ட்...
பெரியவர் லதானந்தா.. சீனியர் லதானந்த்தா..ஒன்றும் புரியவில்லை..
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.. யாறும் தனது சொந்த வேலையை விட்டுவிட்டு பதிவுகள் எழுதுவதாக நான் நினைக்கவில்லை. அவரவற்கு நேரம் கிடைக்கும் போது மட்டுமே பதிவுகள் இடப்படுகிறது, எழுதுகிறார்கள் என்பது எனது கருத்து.
-சர்வதேச வானொலிக்காக தங்க. ஜெய்சக்திவேல் பிபிசியில் இருந்து.
www.sarvadesavaanoli.blogspot.com
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
லதானந்த்க்கு அருமையனா பதில்.
Post a Comment