நேற்று வெயிலான் ஈரோடு புத்தகக் கண்காட்சிக்குப் போகலாமா என்று கூப்பிட்டதோடு மட்டுமின்றி காரை எடுத்துக் கொண்டு வந்தும் விட்டார். காரோடு, ஈரோடு போனோம்!
(வெள்ளைச் சட்டை - வெயிலான், வெள்ளை மனசு - அடியேன்!)
ஈரோடு என்றதுமே, வெயிலானின் செல்லிலிருந்து வால்பையனை அழைத்தேன். அந்த சம்பாஷணையை நீங்களும் கேளுங்க..
“வால்பையன்-ங்களா?”
“ஆமாங்க. நான் சசிக்குமார் பேசறேங்க”
“எங்கிருந்து?”
“தமிழ்மணத்துலயிருந்து”
மனுஷன் அந்தப் பக்கம் எழுந்துட்டாரு! “சார்.. சொல்லுங்க சொல்லுங்க”
“இந்த வாரம் நட்சரத்திரப் பதிவரா உங்களை தேர்வு செஞ்சிருக்கோம். எழுத முடியுமா?”
அவ்வளவுதான். ஏங்க, ஒரு மனுஷன் `எப்படி தமிழ்மணத்துக்கு என் நம்பர் கிடைக்கும்’ன்னு கூடவா யோசிக்க மாட்டாரு? அநியாயத்துக்கு நல்லவரா இருந்தாரு! உடனே “சார்... ரொம்ப நன்றிங்க. நான் என்னோட தொழிலைப் பத்தின நிறைய விஷயங்களை பதிவா போடணும்ன்னு நெனைச்சிருக்கேன். போன வாரம்தான் எங்க பாஸ்கிட்ட நட்சத்திரப் பதிவரா செலக்ட் ஆன மாதிரி கனவு கண்டேன்ன்னு சொல்லீட்டிருந்தேன். இப்ப பலிச்சிடுச்சு” அப்படி ஆரம்பிச்சு நான் `ஹலோ ஹலோ’ ன்னு கத்தினதைக் கூட கேக்காம பூரிச்சுப் போய் புளகாங்கிதமாகி...
எனக்கு ஏண்டா சொன்னோம்ன்னு ஆயிடுச்சு!
நேர்ல பாத்தப்ப ஒரே பக்திமானா இருந்தாரு. கோவிலுக்குப் போலாம், கோவிலுக்குப் போலாம்ன்னு ஒரே நச்சரிப்பு! புத்தகக் கண்காட்சிக்கு முதல்ல போலாம்ன்னதக் கூட கேக்கல!
அவ்ளோ நல்லவரு ஃபோட்டோ எடுத்தப்ப, ”என் ஃபோட்டோவைப் போடதீங்க”ன்னு சொன்னாரு!
அவரு திட்டினாலும் பரவால்லன்னு அவரு ஃபோட்டோ போடறேன்.
ஈரோடு புத்தகக் கண்காட்சி பற்றியும், அதற்கு முன்னும், பின்னும் நாங்கள் போன புனிதத் தலங்கள் பற்றியும் நாளைக்கு எழுதறேன்.
ஓக்கேவா?
ஸாரிங்க வால்பையன் உங்க பேச்சைக் கேக்காம உங்க ஃபோட்டோ போடறதுக்கு!
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
37 comments:
நான் ஏற்கனேவே முழுப்படமும் போட்டுவிட்டேன் இங்கே http://scssundar.blogspot.com/2008/04/blog-post_12.html
இருந்தாலும் வால்பையனுக்கு கடைசியாக விளக்கிவிட்டிர்கள் அல்லவா? இல்லையேல்
ஸ்டார் பதிவு போட மல்லாக்க படுத்து யோசிக்க தொடங்கி விடுவார்...
தொடர்புக்கு
பரிசலாரே போட்டோ சூப்பர்!
கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!
அண்ணே கருத்து எல்லாம் எனக்கு சொல்ல தெரியாது....நான் அப்பப்ப வரலாமா? இல்ல கருத்து சொல்லுறவங்க மட்டும் தான் வரணுமா?
பரிசலாரே நீங்க செஞ்ச பாவத்துக்கு பரிகாரமா உங்க பதிவுல தமிழ்மணத்துக்கு ஒரு வேண்டுகோள் வச்சி வால்பையனை ஸ்டார் ஆக்க சொல்லுங்க.....அவரும் கம்மாடிட்டி மார்கெட் பத்தி நல்ல பயனுள்ள தகவலை எழுதட்டும்:)
//எனக்கு ஏண்டா சொன்னோம்ன்னு ஆயிடுச்சு//
இருக்கும் இருக்கும் :-)
வெயிலான் எப்படி இருக்கீங்க? கே கே கூட நல்லா ஊர் சுத்தரீங்களா? :-)))
//நிஜமா நல்லவன் said...
பரிசலாரே போட்டோ சூப்பர்!//
எந்த புகைப்படம்னு சொல்லுங்க :-))))))))))
//வெள்ளைச் சட்டை - வெயிலான், வெள்ளை மனசு - அடியேன்!)//
வெயிலானுக்கு சட்டை மட்டும்தான் வெள்ளைன்னு சொல்றீங்களா????
//மனுஷன் அந்தப் பக்கம் எழுந்துட்டாரு! //
இது எப்படி போன்ல பேசுறப்ப உங்களுக்கு தெரியும்???
//நேர்ல பாத்தப்ப ஒரே பக்திமானா இருந்தாரு. கோவிலுக்குப் போலாம், கோவிலுக்குப் போலாம்ன்னு ஒரே நச்சரிப்பு! //
ஹி...ஹி..எந்த கோவிலுக்கு???
//அதற்கு முன்னும், பின்னும் நாங்கள் போன புனிதத் தலங்கள் பற்றியும் நாளைக்கு எழுதறேன்.
//
இப்ப புரியுது எந்த கோவிலுக்குன்னு??? ஹா..ஹா..ஹா..
வெயிலான், பரிசல்காரன் ... உங்க ரெண்டு பேரையும் பார்த்ததுல மனசு குளுந்துபோயிருச்சுங்க...இவ்வளவு சின்னவங்களா இருக்கீங்க ? நானேதோ 60 வயசுக்கு மேல கற்பனை பண்ணிவச்சிருந்தேன்.
வால்பையன்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்ன கொடுமை இரு கிருஷ்ணா ?
:)
வெயிலான் படத்தை காம்ப்ளான் கம்பெனிக் காராங்க சுட்டுடப் போறாங்க, காப்புரிமை எடுத்து வையுங்கள் !
போட்டோ சூப்பர்!
எல்லோரும் வால்பையன்ன குரங்க்கத்தா நினைச்சிகிட்டு இருப்பாங்க நீங்க நாயா போட்டு அவங்க நினைப்புள்ள மண்ண போட்டுடிங்க
மடிக்கணினில டைப்பண்ண முடியல கும்மி நாளைக்கு அடிக்கலாம்
vaalpaiyan
//
(வெள்ளைச் சட்டை - வெயிலான், வெள்ளை மனசு - அடியேன்!)
//
இதுலருந்து என்ன சொல்ல வறீங்க??
வெயிலானுக்கு வெள்ளை மனசு இல்லைன்னா???
:P
(அப்பாடி... பத்தவச்சாச்சு..)
அப்ப போட்டோவில் இருப்பதுதான் வால்பையன்!!!
அப்ப அந்த வால்பையனோடுதான் போனில் பேசினீங்களா?:))))))))))))
(இப்படி நான் கேட்பதால் என்னையும் அதுவாக்கிடகூடாது)
பரிசல்காரருக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு என்றார்கள் இதில் அவரே குழந்தை போல் இருக்கிறார்.
உங்கள் கல்யாணம் எந்த வயதில் நடந்தது?
தகவல்அறியும் சட்டத்தின்படி இந்த கேள்வியை கேட்கிறேன்.
:)))
// கிரி said...
//நிஜமா நல்லவன் said...
பரிசலாரே போட்டோ சூப்பர்!//
எந்த புகைப்படம்னு சொல்லுங்க :-))))))))))
//
கிரி உங்க புரைப்பலில் இருக்கும் கும்மீதா போட்டோதான்:)))))))))
//கூடுதுறை said...
இருந்தாலும் வால்பையனுக்கு கடைசியாக விளக்கிவிட்டிர்கள் அல்லவா? //
வால்பையன் காலையில் எழுந்ததும் விளக்கிவிட்டதால் அதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது!!!!
உண்மையா சொன்னா! நேற்று நீங்க புத்தக கண்காட்சிக்கு கூப்பிட்டப்ப, அட்லீஸ்ட், உங்கள பார்த்தாவது இருக்கலாம் என்று நினைத்தேன்.. ஆனால் வேலை இருந்ததால் முடியவில்லை.. எப்படியும் இன்று புத்தகக் கண்காட்சியைப்பற்றி ஒரு பதிவை எதிர்பார்த்தேன்.. அதில் உங்களின் போட்டோவையும் பார்த்தில் ஒரு நிம்மதி.. அப்பாட ஆள் தெரிந்து விட்டது இனி ஜாக்கிறதையா இருந்து கொள்ளலாம் ( உள்ளூராச்சே) ..
இந்த சாக்குலே உங்க படத்தை பாக்க எங்களுக்கெல்லாம் ஓரு வாய்ப்பைக் கொடுத்துட்டீங்க.... நன்றி...
ஓகே பரிசல்காரனை பார்த்தாச்சு... மிக்க மகிழ்ச்சி...
பதிவர்கள்லாம் அழகாத்தான்யா இருக்காங்க...
குசும்பன் said...
\\
பரிசல்காரருக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு என்றார்கள் இதில் அவரே குழந்தை போல் இருக்கிறார்.
உங்கள் கல்யாணம் எந்த வயதில் நடந்தது?
தகவல்அறியும் சட்டத்தின்படி இந்த கேள்வியை கேட்கிறேன்.
:)))
\\
ரிப்பீட்டு...
என்ன கொடுமை இது...;)
குசும்பன் said...
\\
பரிசல்காரருக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு என்றார்கள் இதில் அவரே குழந்தை போல் இருக்கிறார்.
உங்கள் கல்யாணம் எந்த வயதில் நடந்தது?
தகவல்அறியும் சட்டத்தின்படி இந்த கேள்வியை கேட்கிறேன்.
:)))
\\
ரிப்பீட்டு..
நாங்களும் தமிழ் பதிவு போட்டுட்டம்ல....தமிழ காப்பாத்த நம்மள விட்டா வேற யாரு இருக்கா? தப்பிச்சுக்க வழியே இல்ல...சீஃப் கெஸ்ட் யாரை கூப்புடலாம்னு ஓசிச்சா பட்னு ஒங்க நெனப்பு வந்திச்சு..."பெரும் பதிவர்" வந்து ரிப்பன் வெட்டி தொரந்து வைங்க....அல்லாரும் வந்து வாழ்த்தீட்டு போங்க....
@ கூடுதுறை
அடடே!
//தொடர்புக்கு//
புதசெவி
@ நிஜமா நல்லவன்
//அண்ணே கருத்து எல்லாம் எனக்கு சொல்ல தெரியாது....நான் அப்பப்ப வரலாமா? இல்ல கருத்து சொல்லுறவங்க மட்டும் தான் வரணுமா?//
ஒரு ஸ்மைலி போட்டாக் கூட எனக்கு அது கருத்துதான் நண்பா!
@ கிரி
ஆமா கிரி. உங்களை மிஸ் பண்றோம்!!
@ வெண்பூ
//வெயிலானுக்கு சட்டை மட்டும்தான் வெள்ளைன்னு சொல்றீங்களா????//
அவருக்கு இருக்கற மனசு எவருக்கும் இருக்காது வெண்பூ. மெனக்கெட்டு காரை வீடுவரைக்கும் எடுத்துட்டு வந்து கூப்பிட்டுட்டு போனாரு! (என் மொக்கையை தாங்கறதுக்கே தனி மனசு வேணும்!)
@ ரிஷான்ஷெரீஃப்
நேத்து உங்களைப் பத்தியும் பேசீட்டிருந்தோம் தலைவா!
//இவ்வளவு சின்னவங்களா இருக்கீங்க ? நானேதோ 60 வயசுக்கு மேல கற்பனை பண்ணிவச்சிருந்தேன்.//
அந்த வயசுல புத்தி தெளிஞ்சு, ப்ளாக்கையெல்லாம் நிறுத்தீட மாட்டோமா?
//குசும்பன் said...
பரிசல்காரருக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு என்றார்கள் இதில் அவரே குழந்தை போல் இருக்கிறார்.
உங்கள் கல்யாணம் எந்த வயதில் நடந்தது?
தகவல்அறியும் சட்டத்தின்படி இந்த கேள்வியை கேட்கிறேன்.
:)))
//
டாப் கிளாஸ்:))
@ கோவி.கண்ணன்
//வெயிலான் படத்தை காம்ப்ளான் கம்பெனிக் காராங்க சுட்டுடப் போறாங்க, காப்புரிமை எடுத்து வையுங்கள் !//
ஹா..ஹா...
இன்னைக்கு ஒரு நண்பர் இந்தக் கமெண்டை ஃபோன் பண்ணிச் சொன்னார்!
@ வால்பையன்
நாளைக்கு கும்மியா? இருடி வெச்சுக்கறேன்... நாளைக்குப் போடற பதிவப் பாருங்க...
@ ஜெகதீசன்
அப்படி பத்த வெச்சு, எங்களைப் பிரிக்க முடியாது!
@
@ குசும்பன்
//பரிசல்காரருக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு என்றார்கள் இதில் அவரே குழந்தை போல் இருக்கிறார்.
உங்கள் கல்யாணம் எந்த வயதில் நடந்தது?
தகவல்அறியும் சட்டத்தின்படி இந்த கேள்வியை கேட்கிறேன்.//
நாளைக்கு பதிவுல பதில் சொல்லீடறேன்! ஒக்கேவா?
@ ராமன்
அப்படியெல்லாம் தப்பிக்க முடியாது. உங்களைக் கலாய்க்க வேற ஐடியா வெச்சிருக்கோம்ல!
@ விக்கி, ச்சின்னப்பையன், தமிழன், மங்களூர் சிவா
நன்றி குரூப்ஸ்!
@ மகேஷ்
பாத்து, பின்னூட்டமும் போட்டாச்சு!
@ சென்ஷி
வருகைக்கு நன்றி!
எது க்ளாஸ்? டாப்பா? உம்மை....
பாஸ்!
போட்டோவுலே நல்லா அழகா இருக்கீங்க... :-)
//அவ்வளவுதான். ஏங்க, ஒரு மனுஷன் `எப்படி தமிழ்மணத்துக்கு என் நம்பர் கிடைக்கும்’ன்னு கூடவா யோசிக்க மாட்டாரு? அநியாயத்துக்கு நல்லவரா இருந்தாரு! உடனே “சார்... ரொம்ப நன்றிங்க. நான் என்னோட தொழிலைப் பத்தின நிறைய விஷயங்களை பதிவா போடணும்ன்னு நெனைச்சிருக்கேன். போன வாரம்தான் எங்க பாஸ்கிட்ட நட்சத்திரப் பதிவரா செலக்ட் ஆன மாதிரி கனவு கண்டேன்ன்னு சொல்லீட்டிருந்தேன். இப்ப பலிச்சிடுச்சு” அப்படி ஆரம்பிச்சு நான் `ஹலோ ஹலோ’ ன்னு கத்தினதைக் கூட கேக்காம பூரிச்சுப் போய் புளகாங்கிதமாகி...
எனக்கு ஏண்டா சொன்னோம்ன்னு ஆயிடுச்சு!//
அட ச்ச.. எவ்ளோ நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிட்டிங்க.. நானா இருந்தா 4 பதிவு போடற அளவுக்கு கலாய்ச்சி இருப்பேன்... கரூர்ல ஆரம்பிச்சி மயிலாடுதுறை வரைக்கும் தெளிய தெளிய அடிவாங்கின அண்ணன் இளையகவிய கேளுங்க... இந்த மாதிரி வாய்ப்பை எப்படி பயன்படுத்தனும்னு சொல்வார். :)))
நம்பள ஏன்ணே ஃபோனல கூப்பிடல?
ஊர்ப்பக்கம் வந்தா வெயிலானை எப்படியும் அடையாளம் கண்டு பிடிச்சிடுவேன்.நீங்களும் இதே பதத்துல அப்பவும் இருந்தா பிரச்சினையில்லை.இல்லையின்னா வெயிலில் வெயிலானைத் தேடி பின் உங்களைத் தேடவேண்டியிருக்கும்!
// வெயிலான் எப்படி இருக்கீங்க? கே கே கூட நல்லா ஊர் சுத்தரீங்களா? :-))) //
நல்லா இருக்கேன் கிரி!
கே கே கூட தான் சுத்திட்டிருக்கேன்.
ஒரு நாள் பதிவப் பாக்கமப் போயிட்டேன். அதுக்குள்ள நம்மள போட்டு இப்புடி கும்மு, கும்முனு கும்மியிருக்காங்ங.
இதற்குத் தானா ஆசைப்பட்டாய் பரிசலு!
// வெயிலான் படத்தை காம்ப்ளான் கம்பெனிக் காராங்க சுட்டுடப் போறாங்க, காப்புரிமை எடுத்து வையுங்கள் ! //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............
// வெயிலானுக்கு சட்டை மட்டும்தான் வெள்ளைன்னு சொல்றீங்களா???? //
// வெயிலான் படத்தை காம்ப்ளான் கம்பெனிக் காராங்க சுட்டுடப் போறாங்க, காப்புரிமை எடுத்து வையுங்கள் ! //
// இதுலருந்து என்ன சொல்ல வறீங்க?? வெயிலானுக்கு வெள்ளை மனசு இல்லைன்னா??? //
நல்லாருங்கய்யா.... எல்லாரும் நல்லாருங்க......
பரிசலு! சந்தோசமா இப்போ...
super
Post a Comment