Friday, September 5, 2008

அவியலும், பொரியலும் பின்னே சிக்கன் சிக்ஸ்டி ஃபைவும்

தலைப்பு லக்கிலுக்குக்கு சமர்ப்பணம்!

*************************

நீங்களும் கூட இதே மாதிரி அனுபவம் பெற்றிருக்கக் கூடும். அதாவது நான் எந்தக் கடைக்கு/ஷோரூமுக்கு போனாலும் அந்த கடைக்காரராய் என்னை நினைத்து யாராவது ஒரு வாடிக்கையாளர் என்னை கேள்வி கேட்பார்! 95% இடங்களில் எனக்கு இந்தமாதிரி நடக்கிறது! நேற்று ஒரு செகண்ட்ஸ் டிரஸ் மார்க்கெட் போனபோது ஒரு வாடிக்கையாளர் என்னிடம் சட்டையை எடுத்துத் தரச் சொன்னார். ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டத்தட்ட ஒவ்வொரு முறை அவர் சட்டையை தேர்வு செய்யும் போதும், அதை ஹேங்கரிலிருந்து எடுத்துக்காட்ட என்னை அழைத்தார். வெறுத்துப் போய் திட்டலாமா என்று நினைத்தேன். நாலைந்து முறைக்குப் பின் சொன்னார்...

“என் தம்பி யு.கே-ல படிக்கறான் சார். கொஞ்சம் உங்களை மாதிரியே இருப்பான். அதான் அடிக்கடி கூப்பிடணும்ன்னு தோணுது. தப்பா நெனைச்சுக்காதீங்க”

எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

************************


இந்த மாதிரி அனுபவங்களில் பெஸ்ட், ஒருமுறை பல்டாக்டரைப் பார்க்கப் போனபோதுதான். பைக்கை நிறுத்திவிட்டு மாடியில் இருக்கும் அவரது க்ளினிக்குக்கு நடந்து போய்க் கொண்டிருந்தபோது அவசர அவசரமாய் பின்னால் வந்த ஒருவர் “டாக்டர்.. நேத்து என் பையனோட வயதுச் சான்றிதழுக்கு வந்தேன். இன்னைக்கு வரச் சொன்னீங்க. இப்ப கூட்டீட்டு வரட்டுங்களா?” என்று கேட்டார். கொஞ்சநேரம் அதை சந்தோஷமாய் கேட்டுவிட்டு அப்புறம்தான் நான் டாக்டரில்லை என்றேன்!

**********************

யெஸ். பாலபாரதிக்கு மணவாழ்த்துச் செய்தி சொல்லச் சொல்லி ஓட்டுப்பெட்டி வெச்சிருந்தேன். நல்லாயிரு தலைவான்னு 48 பேரும் (57%), மாட்டிக்கினியான்னு 29 (34%) பேரும், இனி நிறைய எழுதுவீங்களான்னு 15 (17%) பேரும், எப்ப பார்ட்டின்னு 33 (39%) பேரும் ஓட்டுப் போட்டிருக்காங்க. இதுல மூணாவது அண்ணி கைலதான் இருக்கு. நாலாவதுக்கு அவரே கூப்பிடுவாரு. தலைவா.. நல்லாயிருங்க!

*********************

இன்னொரு ஓட்டுப் பெட்டி வெச்சு, மேல படத்துல இருக்கறது யாருன்னு கேட்டேன். சுபாஷ் சந்திர போஸ்ன்னு 3 (4%) பேரும், சுக்தேவ்ன்னு 34 (48%) பேரும், பகத்சிங்ன்னு 19 (27%) பேரும், மதன்லால் திங்காரான்னு 14 (20%) பேரும் சொல்லியிருக்காங்க. இன்னும் ஒரு நாள் முழுசா இருந்தாலும் வாக்கு நிறுத்தப்படுகிறது. காரணம் வேற ஒண்ணுமில்லை. நானே மூணு நாலு ஓட்டுப் போட்டும் பகத்சிங்கை ஜெயிக்க வைக்க முடியல.  டர்பனெல்லாம் இருக்கேன்னாவது சிங்-ன்னு ஓட்டுப் போட்டிருக்கலாம்!


ஆமாம்.. அது பகத்சிங்! அந்த 19 பேருக்கு நன்றி!

***********************

நண்பர் ஒருவர் வெகுவருடங்களுக்கு முன் கோவை சென்றிருந்தபோது சந்தித்த ஒரு ஆட்டோ டிரைவரைப் பற்றி சொன்னார். ஆட்டோவில் ஏறும்போது பேசும் பணத்தை, இறங்கும்போது கொடுத்தால் ஐந்து ரூபாய் கம்மியாகத்தான் வாங்குவாராம். அதற்குப் பதிலாக “என் செல் நம்பர் தர்றேன் சார். எப்ப வந்தாலும் கூப்பிடுங்க” என்பாராம். நண்பர் யார் கோவைக்கு போனாலும் அந்த ஆட்டோக்காரரின் எண்ணைக் கொடுத்து ‘இவரு வண்டியிலயே போங்க’ என்பார். இப்போது அவர் இந்த அணுகுமுறையால் முன்னேறி மூன்று, நான்கு ஆட்டோக்களுக்கு சொந்தக்காரராய் இருக்கிறாராம்!


**********************

சில மளிகைக்கடை அண்ணாச்சிகளின் சின்னச் சின்ன தொழில் நுணுக்கங்கள் ஆச்சர்யப்படுத்தக் கூடியவை! வாடிக்கையாளர்கள் அரை கிலோ சர்க்கரை கேட்டால் கொஞ்சமாக தராசில் எடுத்துப் போட்டுவிட்டு, பிறகு டப்பாவிலிருந்து தராசிலிருக்கும் பொட்டலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நிறுத்துவார்கள். அப்படியின்றி, அதிகமாகப் போட்டுவிட்டு, தராசிலிருந்து எடுத்து தங்கள் மூட்டையில் சேர்ப்பது போல போடமாட்டார்கள். நின்று பார்த்துக்கொண்டிருக்கும் வாடிக்கையாளருக்கு மனதளவில் இது திருப்தி தரும். அதேபோல 25 பைசா, ஐம்பது பைசா பாக்கி இருந்தால் ஒரு ரூபாயாகக் கொடுத்துவிட்டு ‘அப்புறமா வரும்போது குடுங்க’ என்பார்கள்! கண்டிப்பாக அடுத்தமுறை அவர்கள் கடைக்கு போக வைக்கும் அந்த உத்தி!


*********************

இரண்டு நாட்கள் கொஞ்சம் பிஸி! பின்னூட்டத்துக்கு பதில் சொல்லக்கூட முடியறதில்லை. பிஸியா இருக்கற நாட்கள்ல பதிவெழுத நல்ல நல்ல மேட்டர் கிடைக்குதுங்கறது சந்தோஷம்!

*********************

ரொம்ப நாளாச்சு.. எனக்குப் பிடித்த கவிதை எழுதி...

இந்த வாரம் கல்யாண்ஜி

இந்தக் கவிதை எழுதுகிறவன்
பீங்கான் கழிப்பறைகளில்
பிளாஸ்டிக் குவளைகளில்
கொட்டிய தண்ணீரில்
கோடியில் ஒரு பங்காவது
ஊற்றியிருப்பானா
ஒரே ஒரு செடி
வேரடி மண்ணில்.

78 comments:

பாபு said...

ஆச்சர்யமா இருக்கு,நாந்தான் first ஆ

வெண்பூ said...

சூப்பர் அவியல் பரிசல்.

//இரண்டு நாட்கள் கொஞ்சம் பிஸி! பின்னூட்டத்துக்கு பதில் சொல்லக்கூட முடியறதில்லை. பிஸியா இருக்கற நாட்கள்ல பதிவெழுத நல்ல நல்ல மேட்டர் கிடைக்குதுங்கறது சந்தோஷம்!
//

ஆஹா... மாட்டுனமா???

Kumky said...

s boss..

Anonymous said...

பரிசல்,

நல்ல இருக்குங்க.

கல்யாண்ஜி தான் வண்ணதாசன் தெரியுமா?

Kumky said...

ஏனுங்னா பார்டிக்கு ஓட்டு போட்டவய்ங்கல கண்டிப்பா கூப்டுவாய்ங்கதான?(அதுல நானும் உண்டுங்னா)

Mahesh said...

நான் நெனக்கறேன்... சிங்கு படத்தை போட்டுட்டு இது பகத் சிங்கான்னு கேட்டா, அப்பிடி இருக்காதோனு பலருக்கு சந்தேகம் வந்திருக்கலாம். சுக்தேவத்தான் போட்டு நம்மளை குழப்பறார்னு நெனச்சுருக்கலாம்.

அவியல் அருமை... எங்க நம்ம கடைப் பக்கம் வரக்காணோம்??

narsim said...

அவியல் அருமை.. பீடா போடனும் போல இருக்கு.. (கும்னு சாப்ட்ட திருப்த்தி)

நர்சிம்

Mahesh said...

போன பதிவுலயே rapp சொன்ன மாதிரி அப்துல்லா லின்க் கொஞ்சம் சரி பண்ணிருங்க...

Kumky said...

கல்யாண்ஜி கவிதை சரி.. வண்ணதாசன் கடிதங்கள் தொகுப்பு படித்திருக்கிறீர்களா?

Kumky said...

தல பார்ட்டி வைக்காட்டி அவர் சார்பா நீங்களே வச்சுடுங்களேன்...

கோவி.கண்ணன் said...

கடைசி கவிஜை அருமை, தாவலுக்கு அல்ல தகவலுக்காக அண்ணாச்சி விசயம் பாண்டிய ராஜன் ஒரு நிகழ்ச்சியில் சொல்லும் போது கேட்டு இருக்கேன்.

மத்த துணுக்குகள் ஓகே ரகம்
(ஹிஹி விமர்சனம் தான்)

கிரி said...

//கொஞ்சநேரம் அதை சந்தோஷமாய் கேட்டுவிட்டு அப்புறம்தான் நான் டாக்டரில்லை என்றேன்!//

நீங்க தானா அது :-)

//கண்டிப்பாக அடுத்தமுறை அவர்கள் கடைக்கு போக வைக்கும் அந்த உத்தி//

உண்மை தான்

//அவியலும், பொரியலும் பின்னே சிக்கன் சிக்ஸ்டி ஃபைவும் //

இனிமேல இது தான் தலைப்பா?

ஜோசப் பால்ராஜ் said...

கோவை ஆட்டோக்காரர் செய்வது மிக புத்திசாலித்தனமான அணுகுமுறை. பல ஆட்டோக்காரர்கள் 5 ரூபாய் குறைவா சொல்லி சவாரி செய்வதை விட சும்மா நிற்பதே மேல் என்று செயல்படுவார்கள். இவர் பரவாயில்லை.

அவியல், பொரியல், கோழி 65 எல்லாம் மிக சுவையா இருந்துச்சுண்ணே.

கார்க்கிபவா said...

அவியலும் பொரியலும் சரி, சிக்கன் 65 எங்கே? "அந்த" விஷயம்தானே அசைவம்?

வால்பையன் said...

முதல் மேட்டர் ஒருவகையான சமாளிப்பு தந்திரமாகவும் கூட இருக்கலாம்

வால்பையன் said...

இரண்டாவது வகை!
ஒருவகையான சாடிஸ்ட் தனம்,
நீங்கள் என்னை வந்து பார்ப்பது நல்லது
(நான் பாக்குறதுக்கு பைத்தியக்கார டாக்டர் மாதிரி இருப்பேன்)

வால்பையன் said...

//நாலாவதுக்கு அவரே கூப்பிடுவாரு. தலைவா.. நல்லாயிருங்க!//

கூப்பிடும் போது மறக்காம என் பேரையும் லிஸ்ட்ல சேத்துருங்க

வால்பையன் said...

//டர்பனெல்லாம் இருக்கேன்னாவது சிங்-ன்னு ஓட்டுப் போட்டிருக்கலாம்!//

தெரியல, அதனால நான் ஓட்டு போடல

வால்பையன் said...

//அவர் இந்த அணுகுமுறையால் முன்னேறி மூன்று, நான்கு ஆட்டோக்களுக்கு சொந்தக்காரராய் இருக்கிறாராம்!//

மிகவும் அருமையான யோசனை,
எனது வியாபார திட்டங்களுக்கு இதை உபயோகப்படுத்தி கொள்கிறேன்

வால்பையன் said...

//கண்டிப்பாக அடுத்தமுறை அவர்கள் கடைக்கு போக வைக்கும் அந்த உத்தி!//

சில்லறை இல்லை அப்புறம் வாங்க்கிகொங்க என்றால் தான் திரும்ப வருவார்கள், அதிகமாக கொடுத்தால், வேற கடைக்கு போவார்கள்

வால்பையன் said...

//இரண்டு நாட்கள் கொஞ்சம் பிஸி!//

ஒருவழியா எல்லா கொளக்கட்டையையும் சாப்பிட்டு முடிச்சாச்சா

வால்பையன் said...

ஆமா தலைப்புல சிக்கன் சிக்ஸ்டிபைவ் வந்துருக்கு
பதிவுல ஒன்னையும் காணோமே, எல்லாத்தையும் நீங்களே சாப்பிடுடிங்க்களா

துளசி கோபால் said...

பதிவுக்கு மேட்டர் தேத்தணுமுன்னா பிசியாத்தான் இருந்தாகணும்.

சிக்கன் 65 சாப்பிட்டால் கேன்சர் வருதாம். குமுதம் சொல்லுது.

இப்ப இருக்கும் வார இதழ்களில் இதுமட்டும்தான் நெட்டில் ஓசியா வருது(-:

rapp said...

கிருஷ்ணா, அப்துல்லா அண்ணாவோட ப்ளாகுக்கு லிங்க் சரியா இல்லைங்க, நேத்தைக்கும் சொன்னேன், இன்னைக்கு மறுபடியும் நியாபகப்படுத்தறேன்

rapp said...

ஏன் இந்தப் பதிவு லக்கிலுக் அவர்களுக்கு சமர்ப்பனம்னு போட்டிருக்கீங்க? இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?

rapp said...

//“என் தம்பி யு.கே-ல படிக்கறான் சார். கொஞ்சம் உங்களை மாதிரியே இருப்பான். அதான் அடிக்கடி கூப்பிடணும்ன்னு தோணுது. தப்பா நெனைச்சுக்காதீங்க”//

ஹே கிருஷ்ணா ட்யூட், யு பீட்டர் பாய் ரிசம்ப்ளிங்?:):):)

புதுகை.அப்துல்லா said...

சுவையான அவியல்
:))

இல்லாத கரண்டிலும் விடாத பதிவு.

:)

SK said...

பரிசல்

இன்னைக்கு ஒரு பதிவு போட்டு இருக்கேன் பாத்துட்டு உங்க கருத்து சொல்லுங்க தலை.

rapp said...

//நண்பர் யார் கோவைக்கு போனாலும் அந்த ஆட்டோக்காரரின் எண்ணைக் கொடுத்து ‘இவரு வண்டியிலயே போங்க’ என்பார். இப்போது அவர் இந்த அணுகுமுறையால் முன்னேறி மூன்று, நான்கு ஆட்டோக்களுக்கு சொந்தக்காரராய் இருக்கிறாராம்!
//

உங்க நண்பர் மூணு நாலு ஆட்டோ வாங்கினத்துக்கும், அந்த ஆட்டோக்காரர் காசை குறைச்சு வாங்கினத்துக்கும் என்ன சம்பந்தம்? உங்க நண்பர் இந்த வாய்மொழி விளம்பரத்துக்காக, ஆட்டோக்காரர்கிட்ட கமிஷன் வாங்கினாரா?
:
:
:
:
:
:
:
:
:
:
ஓகே ஓகே, கிருஷ்ணா மேன், நோ ஆங்கிரியிங், ஐ நோ அண்டர்சிட்டிங் திஸ் புவர் லேங்குவேஜ், யு ரைட்டிங் இன் தொரை லேங்குவேஜ், ஐ புரிஞ்சிங்கோ புரிஞ்சிங், ஓகே, கேட்ச் மை பாயின்ட் :):):)

புதுகை.அப்துல்லா said...

அண்ணே என்னண்ணே மொதப்படமே நம்ப படமா போட்டீங்க? ஓஹோ..திருஷ்டிக்கா? பரவால்ல..பரவால்ல..

SK said...

படத்துலே இருக்கறது நீங்களா அப்துல்லா அண்ணே.

ஆனா லிங்க் சரியா வேலை செய்யலையே. ராப் முன்னாடியே சொல்லிடாங்க.

SK said...

ராப், இன்னும் கும்மில இருந்து வெளில வரவே இல்லையா ?

rapp said...

ஓஹோ, லக்கிலுக் அவியல பொரியலா மாத்தச் சொன்னதுக்காக இப்படி செஞ்சிருக்கீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........................இத்தனை நாள் கழிச்சு இப்படி செஞ்சிருக்கீங்களே! 'வில்லன்' பட கருணாஸ் சொல்ற மாதிரி, 'இதுதானா சார் உங்க டக்கு'ன்னு கேக்கணும் போல இருக்கு. ஓகே ஓகே, கோச்சுக்காதீங்க, கும்மியடிக்க யாராவது வருவாங்கன்னு பார்த்தேன், ஒருத்தரையும் காணோம், அதான் தனியாளா களத்தில நின்னு அறுத்துக்கிட்டிருக்கேன்

SK said...

எங்களை எல்லாம் உங்களுக்கு கண்ணு தெரியாதே.

வால்பையன் said...

கூப்பிட்டா ஓடியாறோம்

rapp said...

நீங்க ரெண்டு நாளா பிசி, அதனால் எங்களுக்கு பதில் வேற போட முடியலையாக்கும். அதை நாங்க நம்பனும்? யார் கிட்ட கத விடறீங்க? நேத்து ரவி பதிவில மட்டும் சும்மா சுத்தி சுத்தி கும்மி அடிச்சிக்கிட்டுருந்தீங்க:):):) எங்கயோ, யார்கிட்டயோ, 'நான் பதில் போடலைன்னாலும் எக்கச்சக்கப் பேர் வந்து கும்மியடிச்சு கமெண்ட ஏத்துவாங்கப் பாருன்னு', பெட் கட்டியிருக்கீங்க சரியா?:):):)

rapp said...

ஹே எஸ்கே அண்டு வால்பையன், திஸ் ஆல்சோ அனதர் தொறந்தவீடு, ஐ இன்கமிங், யு போத் ஆல்சோ இன்கம்மிங்

SK said...

வால்பையன், அவுங்க இன்னைக்கு தனிய பேசனும்னு முடிவுல இருகாங்க. அதுனால நம்ம என்ன போட்டாலும் அவுங்களுக்கு கண்ணு தெரியாது.

வால்பையன் said...

தனியா பேசவா!
சரி தான்

rapp said...

ஹே எஸ்கே, ஐ டைப்பிங் ஸ்லோலி யா, ஒய் யு டென்ஷனிங் யுவர் கப்போர்ட் யா?

rapp said...

யு டூ வால்பையன்:):):)

வால்பையன் said...

ஐ கான்ட் அன்டர்ஸ்டேன்ட் கிளியர்லி

SK said...

ஹே ராப். திஸ் அல்ல ஓபன் ஹௌஸ் யா. நோ ப்ராப்ளம். பரிசல் கம்மிங் அண்ட் கும்மிங் யு அண்ட் மீ யா.

வால்பையன் said...

ஐ யாம் நாட் டூ
ஐ யாம் சிங்கிள்

SK said...

இது போல டைப் பண்ண என் நேரம் ஆகாது தெய்வமே. .

rapp said...

ஹே வாட் வால்பையன் யு நாட் இண்டேளிஜெண்டிலி, ஐ சேட் வெரி

ஹே எஸ்கே, நோ நோ திஸ் ஆல்சோ தொறந்த வீடு, நோ வொரியிங்

rapp said...

50

rapp said...

49

rapp said...

சே வர வர சரியா பிராடுக்கூட பண்ண முடியல

SK said...

வால்பையன்

:) :) :)


ராப்

பரிசல் இங்கே வந்து கும்மி அடிக்கறதை பாத்து தப்ப எடுத்துக்க போறாரு.

rapp said...

50

SK said...

Slight missing rapp. :) :) :)

rapp said...

எஸ்கே, ஏன் இந்தக் கொலைவெறி? மனிஷமக்களுக்கு விட்டுக்கொடுக்கிற குணம் வேணும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................இப்படி சந்துல சிந்து பாடி, அம்பது அடிச்சிட்டீங்களே

rapp said...

இந்த ஆணவப்போக்கையும், ஆணியவாதிகளையும் கன்னாபின்னாவென கண்டித்து, நான் வெளிநடப்பு செய்கிறேன் :):):)

SK said...

நீங்க 50 அடிக்க காத்துகிட்டு இருக்கீங்கன்னு யோசிக்கவே இல்லை ராப். மன்னிச்சிடுங்க. பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் யா.

rapp said...

ஒரு மாதர்குல திலகம் அம்பதாவது கமன்டை தட்ட முடியலைன்னா, என்ன நாடு இது, என்ன ப்ளாக் இது? அவ்வ்வ்வ்வ்வ்வ்.....................................

SK said...

உங்க ப்ளாக்ல வந்து தாமிரா காத்து இருந்திட்டு இப்போ தான் போறாரு.

SK said...

சரி வாங்க 100 நீங்க அடிங்க. இன்னும் 45 பதிவு தானே.

rapp said...

//நீங்க 50 அடிக்க காத்துகிட்டு இருக்கீங்கன்னு யோசிக்கவே இல்லை ராப். மன்னிச்சிடுங்க. பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் யா.//

செய்யறத செஞ்சிட்டு, என்னமா நடிக்கறீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............நான் உங்கள மன்னிக்கனும்னா, இன்னைக்கு முழுசா எல்லா கும்மிப்பதிவுளையும் போய் கும்மி அடிங்க :):):)

rapp said...

60

rapp said...

:):):)

SK said...

எது எது எல்லாம் கும்மி பதிவுன்னு சொல்லுங்க.. கும்மிடலாம்.

இதுக்கு தானே ரொம்ப நாலா காத்துகிட்டு இருக்கேன். நம்ம கடை பக்கமும் அப்போ அப்போ வாங்க.

rapp said...

அடடா, அப்படியா, தாமிரா மன்னிச்சுக்கங்க.

SK said...

எதுக்கு இப்போ :) :) :)

rapp said...

கண்டிப்பா வந்துட்டா போச்சு. கும்மிசங்கத்தை சேர்ந்தவங்க யாருன்னு உங்களுக்குத் தெரியாதா? இருங்க, அதையே ஒரு பதிவா போடச் சொல்லி பரிசல்காரன் கிட்ட சொல்லிடுவோம். உங்களுக்கும் ரொம்ப உபயோகமா இருக்கும்.

rapp said...

இப்போதைக்கு நான் பிரேக் எடுத்துக்கறேன், மறுக்கா கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்

SK said...

அட இதுக்கும் பரிசல் தானா.

நீங்க தான் அழகா கும்முறீங்களே. இதையும் கும்மிடுங்க.

Kumky said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா.ஒயுங்கா கரண்ட் இல்லாமயெ இந்த கூத்து கட்றாய்ங்களே...

முரளிகண்ணன் said...

பதார்த்தங்கள் நல்ல சுவை

VIKNESHWARAN ADAKKALAM said...

//அது பகத்சிங்! அந்த 19 பேருக்கு நன்றி!//

நானும் இதற்குதான் வாக்களித்தேன்.

Thamira said...

கல்யாண்ஜியின் கவிதை நெஞ்சைத்தொட்டது.! (உங்க சிக்கன்65 ம்தான்). எங்க ஊர்ல 65ல் 6 பீஸ்தான் இருக்கும். நீங்க எட்டு வெச்சு அசத்தீட்டீங்க.. பரிசல்.!

Thamira said...

வால் :////இரண்டு நாட்கள் கொஞ்சம் பிஸி!//
ஒருவழியா எல்லா கொளக்கட்டையையும் சாப்பிட்டு முடிச்சாச்சா//
ரிப்பீட்டேய்..

Thamira said...

அப்துல் ://அண்ணே என்னண்ணே மொதப்படமே நம்ப படமா போட்டீங்க? ஓஹோ..திருஷ்டிக்கா? பரவால்ல..பரவால்ல..//
நான் வேறெப்படியோ கற்பனை பண்ணி வெச்சிருந்தேன். அப்துல் கலக்குறாரு! (அவனுக்கு பெரும்பாலும் மீசை இருக்காதுன்னு நான் ஒரு பதிவுல எழுதியது நினைவுக்கு வருது.) சூப்பரான ஐடியா, பரிசலுக்கு பாராட்டுகள்.!

Thamira said...

எஸ்கே ://உங்க ப்ளாக்ல வந்து தாமிரா காத்து இருந்திட்டு இப்போ தான் போறாரு.// பதிலுக்கு ராப் ://அடடா, அப்படியா, தாமிரா மன்னிச்சுக்கங்க.//

நம்பளப்பத்தி நாம இல்லாத நேரத்திலயும் நாலு பேரு பேசுறாங்கன்னு நினைக்கும்போது அவ்வ்வ்வ்வ்வ்......... (என் பெயரைச்சொல்லி நல்லா கும்மிக்கிட்டிருந்த ராப்பை திசைதிருப்பிவிட்ட எஸ்கேவை கண்டிக்கிறேன்.)

மங்களூர் சிவா said...

வால் :////இரண்டு நாட்கள் கொஞ்சம் பிஸி!//
ஒருவழியா எல்லா கொளக்கட்டையையும் சாப்பிட்டு முடிச்சாச்சா//
ரிப்பீட்டேய்..

பரிசல்காரன் said...

//கல்யாண்ஜி தான் வண்ணதாசன் தெரியுமா?//

//கல்யாண்ஜி கவிதை சரி.. வண்ணதாசன் கடிதங்கள் தொகுப்பு படித்திருக்கிறீர்களா?//

வேலன் & கும்கி,

என் ப்ரொஃபைல் பக்கத்தை படிச்சதே இல்லையா நீங்க?

Kumky said...

நீங்க எழுதி தள்ளுற வேகத்துக்கு.,பின்னூட்டமே ஒயுங்கா போட முடியறதில்ல....இதுல எங்க பாஸ் profile எல்லாம் படிக்கறது?

taaru said...

கல்யாண்ஜி கவிதை மூர்ச்சையாக்கி விட்டது தலிவரே...
அவரை 24x7 யோசிக்க சொல்லுங்கள்... என்னைய மேரி நிறைய பயல்களுக்கு தேவை படும்..
அன்புடன்--
அய்யனார்.