Sunday, September 7, 2008

குசும்பனுக்காக ஒரு ‘கும்மி’ப் பதிவு!

”யோவ்... உன்னை யாரு சீரியஸ் மேட்டர் எல்லாம் எழுதச் சொன்னாங்க? ஒழுங்கா இருக்க முடியாதா” என்று நான் இருக்கும் 8-வது வார்டு மெம்பர் முதல் ஒபாமா வரை பல பக்கங்களிலிருந்தும் ஓயாத தொலை பேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஏற்கனவே மின்சாரப் பற்றாக்குறைக்கு செல்ஃபோனின் அளவற்ற பயன்பாடும் ஒரு காரணம் என்று சொல்லித் தொலைத்து விட்டதால், எங்கே நான் அடிக்கடி ஃபோன் பேசுவதை ஃபோட்டோ எடுத்து பதிவாகப் போட்டுவிடுவார்களோ என்று பயந்து ஃபோனையே எடுப்பதில்லை!

அதனால், மின்னஞ்சல் மூலமும் சூப்பர் பதிவு, இது உனக்குத் தேவையாடா, அருமையாகக் கேட்டுள்ளீர்கள், எதுக்கு இந்த வேலை என்று பாராட்டுக்கள் குவிந்து இன்பாக்ஸ் முதன் முதலில் காதலிக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருப்பவனின் அருகிலுள்ள குப்பைத் தொட்டி மாதிரி நிறைந்துவிட்டது!

ஆகவே.. இந்த கும்மிப் பதிவை எழுதி, அதை கும்மியடிப்போர் சங்கத் தலைவர், பின்னூட்ட சுனாமி, கேள்வியின் நாயகன் குசும்பனுக்கு சமர்ப்பிக்கிறேன்.

இந்தப் பதிவு கும்மிப் பதிவல்ல என்று யாரும் சொல்ல முடியாது.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கும்மி:-


கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம். இது தொன்று தொட்டு வரும் ஒரு நாட்டார் கலை. 'கும்மி' ஆட்டம் என்பது பலர் வட்டமாக ஆடிக்கொண்டோ, அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று ஆடிக்கொண்டோ வரும்போது இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி கால்களையும் இடுப்பையும், தலையையும் அழகுற அசைத்து, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒரு கூத்து. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் கும்மி வழக்கில் உள்ளது.


(நன்றி: கணேஷ்பீடியா... ச்சே ஸாரி, விக்கிபீடியா)
.
.
.
.
.
.
.
.
.
.
இனி வலைப்பதிவுக் கும்மி:-



கும்மி பலர் கூடி ஒரு பதிவுக்கு பின்னூட்டம் போடும் ஒருவகைக் கூத்து அல்லது லொள்ளு. இது வலையுலகக் காலம் தொட்டு வரும் ஒரு குசும்பன் கலை. 'கும்மி' ஆட்டம் என்பது பலர் மாற்றி மாற்றி சம்பந்தமில்லாமல் பின்னூட்டிக்கொண்டோ, அல்லது இருவர் மட்டும் சரிசமமாக பின்னூட்டிக்கொண்டோ வரும்போது பதிவுக்குத் தகாதவாறு தன் பின்னூட்டத்தைத் தட்டி பதிவு எழுதினவரின் மூளையையும்(இருந்தால்), கையையும், மனசையும் அசைத்து, இனிமேல் அவனை எழுதவே விடச் செய்யாமலிருக்கக் கூட்டாக ஆடும் ஒரு கூத்து. தமிழ்நாட்டில் மட்டுமின்றி வலையுலகம் முழுவதும் கும்மி வழக்கில் உள்ளது.

************************************************8

ஒரு வேண்டுகோள் & அறிவிப்பு:-



”பின்னோட்டங்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்பது ஒரு பின்னோட்டம் இட்டவர்களுக்கு செய்கிற ஒரு basic respect ஆக உங்களுக்கு தோன்ற வில்லையா ?”

இப்படி ஒரு அன்பர் மின்னஞ்சல் மூலமாகக் கேட்டிருக்கிறார். (அவர் பின்னோட்டம் என்றுதான் சொல்லியிருந்தார்.)

ஒரு வாரமாக நான் அலுவலக வேலையாக அருகிலுள்ள பஞ்சாயத்து அலுவலகங்களுக்கும், கிராமங்களுக்கும் சுற்றிக் கொண்டிருக்கிறேன். அந்தப் பணியை ஆரம்பித்து வைத்தால் எனக்கு மகிழ்வைத் தருமென்பதால் சுய ஆர்வத்தில் அதைச் செய்கிறேன். நாளையோ, மறுநாளோ பதிவில் சொல்கிறேன். என்னை அழைத்துப் பேசிய சில நண்பர்களுக்கும் அது தெரியும். அதனாலதான் இணையம் பக்கம் வந்து பதில் கொடுக்க முடியவில்லை. என்னைப் புரிந்துகொண்ட எனது லட்சக்கணக்கான வாசகர்களுக்கு... (ஐயோ, குசும்பா அடிக்காதப்பா... சரி.. சரி..) என்னைப் புரிந்து கொண்டிருக்கும் அந்த 39 பேருக்கு அது தெரியும். இருந்தாலும் மேலே உள்ளது போல கேள்வி கேட்பவர்களுக்காக இந்த விளக்கம்.

அதேபோல ஞாயிறு பதிவு போட்டபின், அந்த தினம் குடும்பத்துக்க்காக மட்டுமே. முடிந்தால் மட்டுமே வந்து பதில் சொல்ல முடியும்.

ஆகவே, தயங்காமல், தப்பா நெனைக்காமல் கும்மிகளைத் தொடரலாம்!

38 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டூ :))

ஆயில்யன் said...

மீ த ஸெகண்டு :))

ஆயில்யன் said...

மீ த தேர்டூ :)

ஆயில்யன் said...

ஹய்யா நானே நானா? முதலில் தானா?

ஆயில்யன் said...

நண்பனுக்காய் ஒரு கும்மி பதிவு அதுக்கு கும்மி அடிக்கலைன்னா எப்பிடி?????

ஆயில்யன் said...

//ஓயாத தொலை பேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.//

ம்ம் நானும் செல்போன் வைச்சிருக்கேன்! மாசா மாசம் பில் மெசேஜ் மட்டும் வருது :((

ஆயில்யன் said...

//முதன் முதலில் காதலிக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருப்பவனின் அருகிலுள்ள குப்பைத் தொட்டி மாதிரி நிறைந்துவிட்டது!/

முதன் முதல் காதலிக்கு முதன் முதலாக கடிதம் இதுதான் சூப்பர் :))

குட்ட பீடி said...

இங்கே சில இளம் குமரிகளின் கும்மிகளை பார்த்து மகிழவும் Link

ஆயில்யன் said...

//ஆகவே.. இந்த கும்மிப் பதிவை எழுதி, அதை கும்மியடிப்போர் சங்கத் தலைவர், பின்னூட்ட சுனாமி, கேள்வியின் நாயகன் குசும்பனுக்கு சமர்ப்பிக்கிறேன்./

நண்பா!

ஏத்துக்கணும் நீங்க !

ஆயில்யன் said...

//இந்தப் பதிவு கும்மிப் பதிவல்ல என்று யாரும் சொல்ல முடியாது.//

சொல்லக்கூடாது !

குட்ட பீடி said...

பாரதியாரின் கும்மி பாடல் இங்கே

பரிசல்காரன் said...

நன்றி ஆயில்யன்..

&

செந்தழல் ரவி வாழ்க! வாழ்க!!

பரிசல்காரன் said...

பாரதியாரின் கும்மிப் பாடலை எழுதலாமென்றுதான்... ஸாரி, இப்படிச் சொல்லக்கூடாது..

பாரதியின் கும்மிப் பாடலை எடுத்து பதிவில் போடலாம் என்றுதான் நினைத்தேன். அப்புறம் யாராவது வந்து ‘நீ மட்டும் தேசியக் கவியை இந்த மாதிரி கும்மிப் பதிவுல எழுதறது சரியா?' என்று கும்முவாங்களோன்னு விட்டுட்டேன்!

narsim said...

//அதேபோல ஞாயிறு பதிவு போட்டபின், அந்த தினம் குடும்பத்துக்க்காக மட்டுமே. முடிந்தால் மட்டுமே வந்து பதில் சொல்ல முடியும்.//

ரிப்பீட்டேய்...

நர்சிம்

குட்ட பீடி said...

கும்மியடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி) 1

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். (கும்மி) 2

மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டி விட்டோமென்று கும்மியடி! (கும்மி) 3

நல்ல விலை கொண்டு நாயை விற்பார்,அந்த
நாயிடம் யோசனை கேட்ப துண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார். (கும்மி) 4

கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வற்புறுத் திப்பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம். (கும்மி) 5

பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி! (கும்மி) 6

வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடு வோம். (கும்மி) 7

காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி! (கும்மி) 8

பாடலை எழுதியது : பாரதியார்
[நான் இல்லையுங்கோ ... ]

குசும்பன் said...

//நாயகன் குசும்பனுக்கு சமர்ப்பிக்கிறேன்.//

தெரிஞ்சு போச்சு நண்பா உங்க உள் குத்து, ”நாயகன்” குசும்பன் என்று சொல்ல உமக்கு எப்படிய்யா மனசு வந்தது:(((((

குசும்பன் said...

//மின்னஞ்சல் மூலமும் சூப்பர் பதிவு//

அவ்வ்வ்வ்வ் வீரபாண்டி ஆறுமுகம் பெயரில் வரும் அறிக்கையை அவரே பேப்பர் பார்த்துதான் தெரிஞ்சுப்பாராம்! அது போல் இங்கு மெயிலா:(( நல்லா இருங்க.

குசும்பன் said...

மத்தவங்க கேள்வி கேட்டா பதில் சொல்ல தெரியாதுங்க, அதான் அதுக்கு முன்னாடி நாம கேள்வி கேட்டுவிடலாமே என்று!:)))

//கேள்வியின் நாயகன் குசும்பனுக்கு சமர்ப்பிக்கிறேன்.//

குசும்பன் said...

//பின்னூட்ட said...
இங்கே சில இளம் குமரிகளின் கும்மிகளை பார்த்து மகிழவும் Link//

அதில் ஒரு குமரியை இன்று பிறந்தநாள் கொண்டாடும் சஞ்சய்க்கு கட்டிவைக்கவும்.

குட்ட பீடி said...

/****
குசும்பன் said...

//பின்னூட்ட said...
இங்கே சில இளம் குமரிகளின் கும்மிகளை பார்த்து மகிழவும் Link//

அதில் ஒரு குமரியை இன்று பிறந்தநாள் கொண்டாடும் சஞ்சய்க்கு கட்டிவைக்கவும்.

****/

அதெப்படி முடியும்... :)
அந்த பாடல் வரிகளை கவனிக்க வில்லையா? அவர்கள் தேடுவது கிருஷ்ணனை (?) அல்லவா?

"பலகிருஷ்ணண்டி ....
யாரடி! யாரடி! இந்த கிருஷ்ணன் யாரடி! "

Anonymous said...

அவளுக்கென்ன அம்பாசமுத்திரம் அய்யர் ஓட்டலு அல்வா மாதிரி தாழம்பூவென தளதளவென வந்தா வந்தா பாரு
கும்மியடி கும்மியடி கும்மியடி டோய்
(இது ஜில்லுனு ஒரு காதல் படத்துல வர்ற கும்மி)

Anonymous said...

பரிசலார் என் பின்னூட்டத்துக்கு மறுபின்னூட்டம் எங்கே????

Anonymous said...

\\8

ஒரு வேண்டுகோள் & அறிவிப்பு:-//


அட அது என்ன 8 போட்டிருக்கீங்க. இப்பத்தான் ட்ரைவிங் லைசன்ஸ் வாங்கியிருக்கீங்களா

பரிசல்காரன் said...

//பரிசலார் என் பின்னூட்டத்துக்கு மறுபின்னூட்டம் எங்கே????//

சின்ன அம்மணி வாழ்க! வாழ்க!!

பரிசல்காரன் said...

நர்சிம்!

என்ன இது?

ஃபோட்டோ மாறிடுச்சு?

அதுல இருந்த கள்ளங்கபடமற்ற சிரிப்பு இதுல காணோமே?

இது தெலுங்குப்பட வில்லன் கணக்கா இருக்கு..

Also, இது விவேக் டீம்ல இருக்கற செல் முருகன் மாதிரி இருக்கு?

அவரா நீங்க?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

)/முதன் முதலில் காதலிக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருப்பவனின் அருகிலுள்ள குப்பைத் தொட்டி மாதிரி/

முதல் காதலிக்கா அல்லது முதல் கடிதமா? ஏன் கேட்கிறேன் என்றால் உங்களை மாதிரி அழகாக இருப்பவர்களுக்குப் பல காதலிகள் இருப்பார்களே, அதான் :)

(இதுக்குத்தான் குசும்பன்கூடல்லாம் பழக்கம் வச்சுக்கக்கூடாதுங்கறது

வெண்பூ said...

தமிழ் வலையுலக கும்மி தலைவர் குசும்பன் வால்க... வால்க... கொ.ப.செ. பரிசல் வால்க. வால்க...

பரிசல்காரன் said...

ஜ்யோவ்ராம் சுந்தர்

தல... நீங்களுமா?

@ வெண்பூ'

நன்றி!!

குசும்பன் said...

வெண்பூ said...
தமிழ் வலையுலக கும்மி தலைவர் குசும்பன் வால்க... வால்க... கொ.ப.செ. பரிசல் வால்க. வால்க...//

தலைவர் லக்கிலுக், துனை தலைவர் ரவி,

நான் ஒரு உறுப்பினர் மட்டுமே!

கார்க்கிபவா said...

//தலைவர் லக்கிலுக், துனை தலைவர் ரவி,

நான் ஒரு உறுப்பினர் மட்டுமே!
//

கும்மிக்காகவே வலையுலகில் உலா வரும் எங்க தங்கம், சிங்கம், அன்புத்தலைவர் ஆசை (?) நாயகன் எங்களூர் அல்ல, மங்களூர் சிவாவிற்கு எந்த பதவி?

குசும்பன் said...

//பரிசல்காரன் said...
நர்சிம்!
என்ன இது?
ஃபோட்டோ மாறிடுச்சு?
அதுல இருந்த கள்ளங்கபடமற்ற சிரிப்பு இதுல காணோமே?//

பரிசல் உங்களுக்கு செமயாக காமெடி வரும் என்று சொன்னப்ப நான் நம்பல இப்ப நம்புறேன்!:))))

குசும்பன் said...

கார்க்கி said...
கும்மிக்காகவே வலையுலகில் உலா//

கும்மிக்காகதான் வலையுலகில் உலா வருகிறார் என்று யார் சொன்னது? அய்யோ அய்யோ என்னது இது சின்னபுள்ளதனமா? அவருக்கு இதயத்தில் ஒருத்தவங்க பதவி, சேர் எல்லாம் கொடுத்துட்டாங்க.

Thamira said...

வெண்பூ : //தமிழ் வலையுலக கும்மி தலைவர் குசும்பன் வால்க... வால்க... கொ.ப.செ. பரிசல் வால்க. வால்க...// ரிப்பீட்டுக்கும்மி..!

வால்பையன் said...

மீ த முப்பத்தி நாலாவது

வால்பையன் said...

குசும்பனுக்கே குசும்பா

வால்பையன் said...

அதான் போனையே எடுக்குரதில்லையா

சும்மா அதிருதுல said...

இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி
ஸ்விஸ் வங்கியில்

நாம் அனைவரும் நிணைத்துக்கொண்டிருக்கிற மாதிரி இந்தியா ஏழை நாடு அல்ல. ஆமாம். 100 சதவிகித 'அக்மார்க' உண்மை
நம்ப முடியவில்லையா?..தொடர்ந்து படியுங்கள்.

இந்திய மக்களிடமிருந்து ஊழல், கமிஷன் மற்றும் லஞ்சம் மூலம்- கொள்ளையடித்து, கணக்கு காட்டாமல் சுவீஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் கறுப்பு பணம் எவ்வளவு தெரியுமா? ரூ.64 லட்சம் கோடி (1456 பில்லியன் அமெரிக்க டாலர்) என்ற அதிர்ச்சி தகவலை சுவிட்சர்லாந்து வங்கிகளின் கூட்டமைப்பு (Swiss Banking Association) தனது ஆண்டு அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இந்த தொகை உலக வங்கி (World Bank), உலக நிதி நிறுவனம் (Internationala Monetary Fund), மற்றும் வளர்ந்த நாடுகளிடமிருந்து இந்தியா தனது வளர்ச்சி திட்டங்களுக்கக வாங்கியிருக்கும் வெளிநாட்டு கடனின் மொத்த மதிப்பைவிட 13 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பணத்தையெல்லாம் பதுக்கி வைத்திருக்கும் ‘யோக்கிய சிகாமனிகள்' யார் தெரியுமா?

நமது இந்தியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அய்.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மற்றும் அர்சியல் வாதிகள்தான்.

உலக நாடுகள் வியக்கும் அளவுக்கு அசுர வேகத்தில் இந்திய வளர்ந்து கொண்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 2020 ஆண்டு, இந்தியா வல்லரசாகவேண்டும் என்று கனவு காணச்சொல்லியிருக்கிறார். ஆனால், தற்பொழுது வெளியாகியுள்ள இந்த விஷயம், ஒழுக்க நெறிமுறைகள், அறநெறிகள், மதிப்பீடுகள் இல்லாத இந்தியாவின் வளர்ச்சி என்றாவது ஒருநாள் நிலைகுலைந்து போகும் என்ற அச்சத்தை உருவாக்கியிருக்கிறது,

சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஒரே ஒரு தங்கம் பெற்ற இந்தியா, ஸ்விஸ் வங்கியில் 'கள்ள' கணக்கு வைத்திருக்கும் முதல் ஐந்து நாடுகளில் - முதலிடத்தை தட்டி செல்கிறது.
1. இந்தியா---- $1,456 billion
2. ரஷ்யா---$ 470 billion
3. UK -------$390 billion
4. உக்ரைன் - $100 billion
5. சீனா -----$ 96 billion

அது மட்டுமல்ல, இந்தியாவின் வைப்புத்தொகை ($1456 பில்லியன்) - மற்ற நான்கு நாடுகளின் மொத்த வைப்புத்தொகையை ($1056 பில்லியன்) விட அதிகம்.

இந்த பணத்தை இந்திய மக்களுக்கு பிரித்துக்கொடுத்தால், 45 கோடி பேருக்கு - ஒவ்வொருவருக்கும் 1,00,000 ரூபாய் கிடைக்குமாம்..

இந்திய மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட இந்த பணத்தை, இந்தியா சட்ட \ரீதியாக நடவடிகையெடுத்து மீண்டும் $1456 பில்லியன் பணமும் திரும்பவும் இந்தியாவுக்கே வந்துவிட்டால் ஒரே நாளில் நமது வெளிநாட்டு கடனை அடைத்துவிட்டு, மீதியிருக்கும் பணத்தை Fixed Deposite -ல் போட்டால், அதிலிருந்து வரும் வட்டி - இந்திய அரசின வருடாந்திர 'பட்ஜெட்' க்கு ஒதுக்கப்படும் தொகையைவிட அதிகமாக கிடைக்குமாம். அதனால், துண்டு விழாத பட்ஜெட் போடலாம், புதிய வரிகள் போடுவதை தவிர்க்கலாம்,

வறுமைகோட்டுக்கு கீழே உள்ள இந்தியர்களை அப்படியே 'அலாக்'காக துக்கி (வறுமை) கோட்டுக்கு மேலே வைத்து 'கோட்டும்- சூட்டும்' போட்டு பார்க்கலாம்.

எதாவது செய்யனும் பாஸு !!

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//ஒரு அதிர்ப்பதிவு போட்டுக்கறேனே.. ப்ளீஸ்..//