Wednesday, September 10, 2008

தூக்கம் உங்களுக்கு பிடிக்குமா?


தூக்கம் உங்களுக்கு பிடிக்குமா?

எனக்கு ரொம்பப் பிடிக்கும். கொஞ்ச நாட்களாக மின்வெட்டால் சரியாக தூங்க முடிவதில்லை. கொசுக்கள் எங்கிருந்துதான் வருகிறதோ தெரியவில்லை. மொய்த்துத் தள்ளிவிடுகின்றன.

தூக்கம் ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது. பிறந்த குழந்தைக்கு 16 மணியிலிருந்து 20 மணி வரையும், வயது வந்தவர்களுக்கு 7 மணி முதல் 9 மணி வரையும், வயதானவர்களுக்கு 5 மணி முதல் 6 மணி வரையும் தூக்கம் தேவைப்படுவதாய் மருத்துவம் சொல்கிறது.

ஆனால் விஞ்ஞானம் வேறு மாதிரி சொல்கிறது. ஒருவன் அடுத்தநாள் காலை எழுந்து சுறுசுறுப்பாக இருக்க முடிந்தாலே முந்தைய நாள் அவன் நல்ல தூக்கத்தைப் பெற்றிருக்கிறான். எனக்கும் இதுதான் சரியென்று தோன்றுகிறது. (என்னை யாரு கேட்கறாங்க?) உதாரணத்துக்கு நாளைக்கு தீபாவளியென்றால் இரவு எவ்வளவு லேட்டாகத் தூங்கினாலும் அதிகாலையிலேயே சுறுசுறுப்பாய் எழுந்திருப்போமில்லையா, அதுமாதிரி..


தேநீர், காபி அதிகமா குடிக்கறவங்க, மதுபானங்கள், போதைப் பொருட்கள், புகை பிடிக்கறவங்க, புகையிலையை வாயில் மென்னுகிட்டு இருக்கறவங்க – இவங்களுக்கெல்லாம் தூக்கம் குறைபாடாவே இருக்கும்ன்னு சொல்றாங்க. (இதுக்கு யாருக்குமே தூக்கம் சரியா இருக்காதுன்னு சொல்லீடலாம். இந்த பழக்கத்துல ஏதாவது ஒண்ணாதவங்க யாரு இப்போ?) இந்தப் பழக்கங்கள்னால நரம்புத் தளர்ச்சி வரைக்கும் வருமாம். பார்த்து இருங்கப்பா.

எங்கள் அலுவலகத்தில் திடீர் திடீரென்று மீட்டிங் போடுவார்கள். ப்ரொடக்‌ஷன் ரொம்ப ஸ்லோ ஆகுது. இன்னைக்கு ஒரு மீட்டிங் போட்டு மோட்டீவ் பண்ணி விடலாம்’ என்று. அதுவும் சரியாக மதியம் 2.30 மணிக்கு எல்லாரும் மதிய உணவு முடிந்து வரும்போதுதான் மீட்டிங்! எல்லாருமே ‘சார் என்ன சார் இது, இந்த நேரத்துல மீட்டிங் போட்டீங்கன்னா தூக்கம் தூக்கமா வரும் சார்’ என்பார்கள். எனக்குப் பரவாயில்லை. (பரவாயில்லை என்றால் தூக்கம் வராது என்று சொல்லவரவில்லை... எம்.டி.பக்கத்தில் நான் உட்கார்ந்து கொண்டிருப்பதால் கொஞ்சம் கண் மூடினாலும் அவர் எதிரில் பார்த்துதானே பேசிக்கொண்டிருப்பார்!)

இன்னொரு சீனியர் இருக்கிறார்.. மீட்டிங் நடுநடுவே ‘LAST ORDER ALSO YOU’VE DONE THE SAME MISTAKE’ என்பார். மறுபடி கண் அசந்துவிட்டு, மீண்டும் கொஞ்ச நேரம் கழித்து ‘LAST ORDER ALSO….’

ஒரு முறை அவரைப் பார்த்துக் கேட்டேன்.. ‘இந்த ஒரே டயலாக்லயே ஓட்டீடறீங்களே எப்படி?’ என்று. ‘எல்லா ஆர்டர்லயும் ஏறக்குறைய ஒரே மாதிரி தப்புதான் ப்ரொடக்ஷன்ல நடக்கும். அரைத்தூக்கத்துல என்ன பாய்ண்ட் டிஸ்கஷன்ல போயிட்டிருக்குனு தெரியறதில்ல. அதுனால பொதுவா இப்படிச் சொல்லி நாமளும் இருக்கோம்லன்னு காட்டிக்கறேன்’ என்றார். சரிதான்!

படுக்கையில் படுத்தபிறகு வீண் சிந்தனைகளை (அந்த ஃபிகர் மடியுமா, மங்களூர் சிவா இன்னைக்கு பார்ட்டி வைப்பாரா, நாளைக்கா..., யெஸ். பாலபாரதி இன்னும் என்னைக்கு ரிசப்ஷன்னு சொல்லவே இல்லையே, நாளைக்கு என்ன பதிவு போட, பரிசல்காரன் இப்படி தினமும் ஒண்ணு எழுதறானே, அடங்கவே மாட்டானா...) தவிர்ப்பது நலம். குறைந்தபட்சம் அன்றைய தின நல்ல நிகழ்ச்சிகளை (நமீதா போஸ்டரைப் பார்த்தது, உங்க பதிவுக்கு வந்த மூணு பின்னூட்டம், உங்க பின்னூட்டத்துக்கு சீஈஈஈஈனியர் பதிவர் யாராவது சீரியஸா பதில் சொன்னது..) அசைபோட்டபடி கண்மூடலாம். தொலைக்காட்சி பார்த்தபடி உறங்குவது தவறு.

ஒன்றுமே சாப்பிடாமல் தூங்குவதும், சாப்பிட்ட உடனே தூங்குவதும் தவறு. சாப்பிட்டபின் கொஞ்சம் காலார நடந்துவிட்டு வது படுத்தால் நல்ல உறக்கம் வரும்.

தூக்கம் வராத நோய்க்கு இன்சோம்னியா என்று பெயர். அதிக மன அழுத்தத்தினால்தான் இன்சோம்னியா வருகிறது.

இப்போதெல்லாம் இரவு அதிகமாக விழித்திருந்து, பகலில் லேட்டாக எழுந்திருக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, கிருஷ்ணகுமார் போன்ற பிரபலங்களெல்லாம் இரவு விழித்திருந்துதான் அதிகமாகப் பணிபுரிவார்களாம்.

நானும் கொஞ்சநாள் அப்படித்தான் இருந்தேன். அப்புறமாக எனக்கு லெட்டர் வந்தபிறகு மாற்றிக்கொண்டேன்! பிறகு மறுபடி இரவில் அதிகமாக எழுதத் தொடங்கினேன். இப்போது பவர் கட்டால் (10லிருந்து 11 வரை போய்விடுகிறது) கணிணியில் உட்கார.. ஸாரி.. கணிணிமுன் உட்காரமுடிவதில்லை. அந்த இடைவெளியில் தூங்கிவிடுவதால், மின்சாரம் வந்தபிறகு அரைத்தூக்கத்தில் அலுப்பாகி எழ முடிவதில்லை. அப்படியே தூங்கிவிடுகிறேன்.

இரவில் எழுதுவதால் பல நன்மைகள் உண்டு. இரவு மிகவும் அமைதியானது. எந்தவிதமான தொந்தரவுகளும் இருக்காது. பக்கத்துவீட்டு தொலைக்காட்சி, கூச்சல்கள், செல்ஃபோன் அலறல்கள், பாட்டுகள் என்று எதுவுமற்ற நிசப்தமானதாக இரவு இருக்கும். உங்களுக்கும் செல்ஃபோனில் யாருடைய அழைப்பும் இருக்காது. காலைநேரத்தில் ஒரு மணிநேரத்தில் எழுத முடிவதை, இரவில் அரை மணிநேரத்தில் எழுதிவிடலாம்!

தூக்கத்தில் கண் அசைவுடைய தூக்கம், அசைவற்ற தூக்கம் என்று இரண்டு வகையுண்டாம். அதில் கண் அசைவற்ற தூக்கம்தான் சிறந்தது. அதில் இலகுவான தூக்கம் (விழிப்பு நிலையிலிருந்து தூக்க நிலைக்குப் போகும் நேரம்), உண்மையான தூக்கம் (இது 20 முதல் 30 நிமிடங்கள் வரும்), அடுத்து ஆழமான தூக்கம், நான்காவதாக மிக ஆழமான தூக்கம் என்று நான்கு வகைகள் உண்டு!

கண் அசைவுடைய தூக்கம் என்பது கனவு கண்டுகொண்டே தூங்குவது!

தூக்கத்தைப் பற்றி தாமஸ் ஆல்வா எடிசன் ‘தூக்கம் பொழுதை வீணடிக்கும் விஷயம்’ என்கிறார். நெப்போலியனோ தினமும் நான்கு மணிநேரம்தான் தூங்கினாராம்!

அதேசமயம் ‘நல்ல தூக்கம் இருந்தால் மகிழ்ச்சி கிடைக்கும், மனிதன் இளமையாக இருப்பான்’ என்கிறார் தத்துவஞானி (அந்த ஞானி இல்லப்பா) ப்ளாட்டோ. யாரு சொல்றத கேட்க? எல்லாரும் பேசி ஒரு முடிவ சொல்லுங்கப்பா...

இன்னொண்ணும் சொல்லீடறேன், ஒட்டகச் சிவிங்கி இரண்டு மணிநேரம்தான் தூங்குமாம். புலி பதினாறு மணிநேரம் தூங்கி ஓய்வெடுக்குமாம்! சிங்கம் 14 மணிநேரம் தூங்குமாம்.

குமுதம் லைட்ஸ் ஆன்ல சொல்லி நடிகைக தூங்கற நேரம் எவ்வளவுன்னு ஃப்யூச்சர் போடச் சொல்லலாம். வலைப்பதிவர்கள் தூங்கற நேரம் எவ்வளவுன்னு நம்மள்ல யாராவது பதிவு போடலாம். (கூடவே அவங்களுக்கு என்னென்னெ மாதிரி கனவு வரும்ன்னும் எழுதலாம்.. அடடே.. ஐடியாவை ரிலீஸ் பண்ணீட்டேனோ?)


இதைப் படித்தாலே தூக்கம் வருகிற அளவுக்கு ரொம்ப போரடித்துவிட்டேன். போதும். வரட்டுமா?

54 comments:

ரமேஷ் வைத்யா said...

that is INSOMNIA!

ரமேஷ் வைத்யா said...

Me tha bushtu

வெண்பூ said...

என்ன பரிசல்??? இவ்வளவு விசயமா தூக்கத்த பத்தி.. கலக்கல்.

எனக்கு 8 மணி நேரம் முழுதாக தூங்கினால்தான் அடுத்தநாள் தூக்க கலக்கம் இல்லாமல் இருக்கும். :)

ரமேஷ் வைத்யா said...

உறக்கமின்மை கொடும் வியாதி.
இப்படிக்கு
வியாதியஸ்தன்

ரமேஷ் வைத்யா said...

//என்ன பரிசல்??? இவ்வளவு விசயமா//
தகவல் களஞ்சியமே பாராட்டிடுச்சா?

விஜய் ஆனந்த் said...

கொர்ர்ர்ர்ர்ர்ர்....

ரமேஷ் வைத்யா said...

என்ன எல்லாருக்கும் ஓவர் ஆணியா?

narsim said...

//இரவில் எழுதுவதால் பல நன்மைகள் உண்டு. இரவு மிகவும் அமைதியானது. எந்தவிதமான தொந்தரவுகளும் இருக்காது. பக்கத்துவீட்டு தொலைக்காட்சி, கூச்சல்கள், செல்ஃபோன் அலறல்கள், பாட்டுகள் என்று எதுவுமற்ற நிசப்தமானதாக இரவு இருக்கும்.//

பூரிக்கட்டை அடி மட்டும் விழும்!! ழுந்துருச்சு !

நல்ல பதி..(கொட்டாவி)வு!

நர்சிம்

ஜெகதீசன் said...

எதிர்பதிவுக்கான தலைப்புகள்:
சாப்பாடு உங்களுக்கு பிடிக்குமா?
பீர் உங்களுக்கு பிடிக்குமா?
..... உங்களுக்கு பிடிக்குமா?
----- உங்களுக்குப் பிடிக்குமா?
>>>>>> உங்களுக்குப் பிடிக்குமா?

:)

பரிசல்காரன் said...

@ விடமாட்டேன்

திருத்திட்டேன்.. இல்லீன்னா விடமாட்டீங்களே...

பரிசல்காரன் said...

//ஜெகதீசன் said...

எதிர்பதிவுக்கான தலைப்புகள்:
சாப்பாடு உங்களுக்கு பிடிக்குமா?
பீர் உங்களுக்கு பிடிக்குமா?
..... உங்களுக்கு பிடிக்குமா?
----- உங்களுக்குப் பிடிக்குமா?
>>>>>> உங்களுக்குப் பிடிக்குமா?//

ஏற்கனவே இங்க டவுசர் கிழிஞ்சிட்டிருக்கு. இதுல எடுத்து வேற குடுக்கறீங்களோ?

கோவி.கண்ணன் said...

//இதைப் படித்தாலே தூக்கம் வருகிற அளவுக்கு ரொம்ப போரடித்துவிட்டேன். போதும். வரட்டுமா?//

பதிவை ஸ்க்ரோல் செய்து இந்த வரியை மட்டும் படிச்சா தூக்கம் வரவே வராது !

பதிவின் கடைசி வரி படிப்போர் சங்கம்
சிங்கை கிளை.

-- கோவிஜி

Mahesh said...

தூக்கம் பிடிக்குமாவா? தெனமும் காலைல எழுந்திரிக்கும்போது இன்னும் கொஞ்சம் தூங்கலாமேன்னு தோணும்...லேட்டா போனா என்ன காரணம் சொல்லலாம்? எந்த வேலைய தள்ளிப் போடலாம்? இல்ல ஒரே அடியா லீவு போட்டுறலாமா? இதுல எதாவது ஒரு கேள்விக்கு வெடை கெடச்சா போறும்....மறுபடி கொர்ர்ர்ர்ர்ர்

பரிசல்காரன் said...

//பதிவின் கடைசி வரி படிப்போர் சங்கம்
சிங்கை கிளை.//

கோவிஜி.. இப்படியெல்லாம் கெளம்பீருக்கீங்களா?

@ மகேஷ்

சேம் டு யூ!

கார்க்கிபவா said...

//ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, கிருஷ்ணகுமார்//

ல‌க்கிதானே அந்த கிருஷ்ணகுமார்?

நானெல்லாம் தூங்கிட்டனா கொசுவாது பசுவாது... அதோட காலைல தான் எழுந்திருப்போம்..

VIKNESHWARAN ADAKKALAM said...

ரொம்ப நேரம் தூங்குனா ஆயிசு குறைஞ்சிடுமாமே? ரெண்டு பியர் அடிச்சிட்டு படுத்தா நல்லா துக்கம் வருங்க... நீங்க என்னடானா தூக்கத்தை பாதிக்கும்னு குண்ட போடுறிங்களே?

முரளிகண்ணன் said...

எத்தனை எதிர் பதிவு வரப்போகுதோ?

வால்பையன் said...

//(கூடவே அவங்களுக்கு என்னென்னெ மாதிரி கனவு வரும்ன்னும் எழுதலாம்.. அடடே.. ஐடியாவை ரிலீஸ் பண்ணீட்டேனோ?)//

தூக்கம் வராததால் நான் எழுதிய நான்கு பதிவுகள்

ஒன்று

இரண்டு

மூன்று

நான்கு

வால்பையன் said...

நிறைய ஆளுங்க வந்தா டி.ஆர்.பி ரேட் கூடுமாம்
பெரிய தல சொன்னாரு, அதனாலதான் இந்த விளம்பரம்

ஹீ ஹீ

pudugaithendral said...

இருங்க உங்களுக்கா தூக்கத்தைப் பத்தி பதிவு போட்டுட்டு வர்றேன்.

ஜோசப் பால்ராஜ் said...

தூக்கத்தை குறித்து பெரும் ஆராய்ச்சி செய்யுமளவுக்கு அண்ணணை தூங்க விடாமல் செய்த அத்தனை பேரும் வாழ்க.

உங்க பதிவுல வால்பையன் போட்ருந்த பின்னூட்டத்துல வால்பையன் குடுத்துருந்த இணைப்பை புடிச்சு போயி அவரோட முதல் பதிவ பார்த்தேன். உண்மையிலேயே அவருக்கு உடம்ப கொடுக்காம சாமி புடுங்கித்தான் வைச்சுகனும்.

pudugaithendral said...

ttp://pudugaithendral.blogspot.com/2008/02/blog-post_10.html

பதிவு போட்டு புலம்பியாச்சு.

குசும்பன் said...

//கொசுக்கள் எங்கிருந்துதான் வருகிறதோ தெரியவில்லை. மொய்த்துத் தள்ளிவிடுகின்றன.//

வாட் ஈஸ் த மீனிங் ஆப் கொசு!

யூ know இன் துபாய்...:)))))

குசும்பன் said...

//. கொஞ்ச நாட்களாக மின்வெட்டால் //

வாட் ஈஸ் த மீனிங் ஆப் மின்வெட்டு...

ஐ know ஒன்லி அருவா வெட்டு.. ஐ திங் யு ஆர் டெல்லிங் அபவுட் பவர் பெயிலியர்.... so sad:((((.

குசும்பன் said...

புதிதாக கல்யாணம் ஆனவன் எத்தனை மணி நேரம் தூங்கவேண்டும் குட்டி விஜயகாந்து!!!

சிவாவுக்காக கேட்கிறேன்:))))

குசும்பன் said...

//எம்.டி.பக்கத்தில் நான் உட்கார்ந்து கொண்டிருப்பதால் //

கம்பெணி டைரக்டர் என்றாலே இப்படி சில கஷ்டம் இருக்கதான் செய்யும் போல!!!

குசும்பன் said...

//செல்ஃபோனில் யாருடைய அழைப்பும் இருக்காது. //

மக்களே நோட் செஞ்சுக்குங்க இன்று முதல் ரெடி ஸ்டாட் மியுஜிக்:))

குசும்பன் said...

//சிங்கம் 14 மணிநேரம் தூங்குமாம்.//

என்னை இனி பெரிய சிங்கம் என்று கூப்பிடும் அளவுக்கு செயல்பட போகிறேன்!!!

குசும்பன் said...

//இன்னொண்ணும் சொல்லீடறேன், //

எவ்வளோவோ கேட்டுவிட்டோம் இந்த ஒன்னையும் கேட்க மாட்டோமா?

சொல்லுங்க:(((

பரிசல்காரன் said...

//ரெண்டு பியர் அடிச்சிட்டு படுத்தா நல்லா துக்கம் வருங்க... நீங்க என்னடானா தூக்கத்தை பாதிக்கும்னு குண்ட போடுறிங்களே?//

:-)))

கண்டினியூ பண்ணுங்க!!!

பரிசல்காரன் said...

//புதிதாக கல்யாணம் ஆனவன் எத்தனை மணி நேரம் தூங்கவேண்டும் குட்டி விஜயகாந்து!!!//

அது அவன் கைல இல்லியே குசும்பா.........

வெண்பூ said...

//பரிசல்காரன் said...
//புதிதாக கல்யாணம் ஆனவன் எத்தனை மணி நேரம் தூங்கவேண்டும் குட்டி விஜயகாந்து!!!//

அது அவன் கைல இல்லியே குசும்பா.........
//

வேற எதுல இருக்குன்றீங்க???? :)

குசும்பன் said...

பரிசல்காரன் said...
அது அவன் கைல இல்லியே குசும்பா.........//

வேற என்னதான் அவன் கையில் இருக்கு பரிசல்... சின்னபிள்ளைக்கு பிரியும் படி ஜொள்ளுங்கோ!!!

குசும்பன் said...

வெண்பூ உங்களுக்கும் அதே டவுட்டா? கேளுங்க நல்லா கேளுங்க!!!

(அடுத்த முறை இன்னொரு குழந்தை பிறந்தநாளுக்கு சிம்லா போக வாழ்த்துக்கள் வெண்பூ!!!)

குசும்பன் said...

கும்மி அடிக்க ஆரும் இருக்கீங்களா?

குசும்பன் said...

வால்பையா நீங்க கொடுத்த லிங்கை படிச்சு என் தலை முடியை புடுங்கியாச்சு:((( நல்லா இருங்கய்யா நல்லா இருங்க!!!

வெண்பூ said...

என்னாது ரெண்டாவது குழந்தையா? யோவ்... இங்க ஒண்ணை வெச்சிகிட்டே அல்லாட முடியல... ம்ம்ம்ம்.. நீயும் மாட்டாமயா போயிடுவே????

வெண்பூ said...

//குசும்பன் said...
வெண்பூ உங்களுக்கும் அதே டவுட்டா? கேளுங்க நல்லா கேளுங்க!!!

(அடுத்த முறை இன்னொரு குழந்தை பிறந்தநாளுக்கு சிம்லா போக வாழ்த்துக்கள் வெண்பூ!!!)
//

"இன்னொரு குழந்தையோட" பிறந்தநாளா? குழந்தையோட "இன்னொரு பிறந்தநாளா"? சரியா சொல்லுங்கப்பு.. குழம்பிட்டேன்ல..

புதுகை.அப்துல்லா said...

ஜெகதீசன் said...
எதிர்பதிவுக்கான தலைப்புகள்:
சாப்பாடு உங்களுக்கு பிடிக்குமா?
பீர் உங்களுக்கு பிடிக்குமா?

//

அண்ணே உங்க ஆசைய நிறைவேத்திட்டேன். நம்ப கடைல வந்து பாருங்க

Thamira said...

அதிக பட்சம் 20 பின்னூட்டங்களுக்கு பிறகு வந்தால் நாம் எழுத நினைத்ததை கண்டிப்பாக யாராவது எழுதிவிடுகிறார்கள்.! அப்புறம் பின்னூட்ட அல்லாடவேண்டியிருக்கிறது. எத்த‌னை ஒத்த‌ சிந்த‌னை உள்ள‌வ‌ர்க‌ள் உள்ளார்க‌ள் என்று ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கிற‌து.

இன்று நான் எழுத நினைத்தவை :

விஜய் :கொர்ர்ர்ர்ர்ர்ர்....//
ஜெக‌தீச‌ன் :எதிர்பதிவுக்கான தலைப்புகள்:
சாப்பாடு உங்களுக்கு பிடிக்குமா?
பீர் உங்களுக்கு பிடிக்குமா?
..... உங்களுக்கு பிடிக்குமா?//
முர‌ளி :எத்தனை எதிர் பதிவு வரப்போகுதோ?//

ர‌சித்த‌வை :

ப‌ரிச‌ல் :ஏற்கனவே இங்க டவுசர் கிழிஞ்சிட்டிருக்கு. இதுல எடுத்து வேற குடுக்கறீங்களோ?//
கார்க்கி :நானெல்லாம் தூங்கிட்டனா கொசுவாது பசுவாது...//
குசும்பு :மக்களே நோட் செஞ்சுக்குங்க இன்று முதல் ரெடி ஸ்டாட் மியுஜிக்:))//
வெண்பூ :அது அவன் கைல இல்லியே குசும்பா.........
//வேற எதுல இருக்குன்றீங்க???? :)//
என்னாது ரெண்டாவது குழந்தையா? யோவ்... இங்க ஒண்ணை வெச்சிகிட்டே அல்லாட முடியல...//

வெறுப்பேத்திய‌து :

குசும்பு :வாட் ஈஸ் த மீனிங் ஆப் மின்வெட்டு...//

Thamira said...

//இந்த பழக்கத்துல ஏதாவது ? }u f vgr ø ' !1/ uv) ;( j இந்தப் பழக்கங்கள்னால நரம்புத் தளர்ச்சி வரைக்கும் வருமாம். பார்த்து இருங்கப்பா.//

இப்படி உங்கள் பதிவுகளில் (மட்டுமே) ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் Code ஆக தெரிகின்றன. சரிபார்க்கவும் அல்லது எனக்கு மட்டும்தானா? என விளக்கவும்.

Thamira said...

தூக்கம் கிடக்கட்டும், சாப்பிட்ட பிறகு உடனே படுக்கக்கூடாதா?. என்ன பண்ணுறது என சொல்லிவிட்டால் கொஞ்சம் பெட்டர்? (இரட்டை அர்த்தம் பண்ணிக்கொள்ளாதீர்கள் தோழர்களே..)

சாப்பிட்டபிறகு உடனே
படுக்கக்கூடாது, சரி..
உறங்கக்கூடாது, சரி..
ந‌டக்கக்கூடாது, சரி..
ஓடக்கூடாது, சரி..
பாத்ரூம் போகக்கூடாது, சரி..
குளிக்கக்கூடாது, சரி..

அப்ப என்னதான் பண்றது? (மேற்கண்டவை வெவ்வேறு சமயங்களில் கிடைத்த அறிவுரைகள், என்ன பண்றதுனு தெரியாம ஆடாம அசையாம பேக்கு மாதிரி உட்கார்ந்துகொண்டிருக்கிறேன்)

குசும்பன் said...

தாமிரா said...
வெறுப்பேத்திய‌து :

குசும்பு :வாட் ஈஸ் த மீனிங் ஆப் மின்வெட்டு...//

தெரியாததை கேட்டா வெறுப்பு ஏத்தினது என்று சொல்றாங்கப்பா!!! வெள்ளேந்தியா தெரியாததை பற்றி கேட்டது தப்பா?:((((

குசும்பன் said...

தாமிரா said...
(இரட்டை அர்த்தம் பண்ணிக்கொள்ளாதீர்கள் தோழர்களே..)//

ச்சே உங்களை போய் அப்படி நினைப்போமா டோலர்:))...


அப்ப என்னதான் பண்றது? (மேற்கண்டவை வெவ்வேறு சமயங்களில் கிடைத்த அறிவுரைகள், என்ன பண்றதுனு தெரியாம ஆடாம அசையாம பேக்கு மாதிரி உட்கார்ந்துகொண்டிருக்கிறேன்)//

வெல்டன் இதைதான் யோகத்தில் தன்னையறிதல் என்று சொல்லுவாங்க, உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைச்சு இருக்கு தாமிரா!!! கீப் இட் அப்!

Unknown said...

கொசுவும் விழித்திருந்துதான் பணிபுரிகிறது. அதன் கடியைக் கூட தாங்கமுடிகிறது.

Unknown said...

எனக்கு ஒரு வாரம் நம் பதிவை பாக்க நேரம் கிடைக்கவில்லை. இன்று வந்து பார்த்தேன். எதற்காக என்றால் செப்டம்பர் 5 ல் ஸ்பெஷல் பதிவு இருக்கும் என்று. ஆனால் இல்லை. தந்தையை நினைவு கூர்ந்தீர்கள். மனைவியை நேசித்தீர்கள். ஆனால் ஒருவரை மறந்து விட்டீரே.

Kumky said...

தூக்கமில்லா கணவான்களே..இரண்டு பியர் அடித்தால் அவ்வப்போது உச்சா போக வேண்டியிருக்கும்.ஒரே ஒரு 90 போதும்..பிறகு ஜம் கரோ.....

Kumky said...

தாமிர கருத்துக்கள் 3.19 ஐ வழி மொழிகிறேன்.

பரிசல்காரன் said...

இதில் சில கருத்துக்களுக்கு விளக்கமாக பதில் சொல்ல ஆசை. அப்புறம் 50வது கமெண்டை நானே போட்டுக் கொண்டதாய்ப் பழிச்சொல் வரும். சோ, எஸ்கேப்.

ம்ம்ம்ம்...

@தாமிரா

அந்த கம்ப்ளெய்ண்ட் வேற யாரும் சொல்லலியே? நீங்க IEயா? FFஆ?

@ ராமகிருஷ்ணன் kb (இது என் சொந்தத் தம்பி!!!)

ம்ம்ம்.. ஸாரி.

ஆசிரியர்களுக்காக பள்ளிக்கூடம் என்றொரு பதிவு கொஞ்சம் ட்ராஃப்ட் செய்து வைத்திருக்கிறேன். கொஞ்சம் சீரியஸான பதிவு.

ஏற்கனவே கொஞ்சம் சீரியஸ் பதிவுகள் இந்த வாரம் போட்டாச்சா, இப்ப வேணாம்ன்னு விட்டுட்டேன்!

புதுகை.அப்துல்லா said...

haiya 50

சின்னப் பையன் said...

மீ த 51ஸ்ட்!!!

சின்னப் பையன் said...

கண்டிப்பா எனக்கு தூக்கம் பிடிக்கும்....

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரசித்துப் படித்தேன். சுவாரசியமான நடைங்க உங்களுக்கு. எந்த விஷயத்தைப் பத்தி வேணாலும் உங்களால சுவாரசியாமாச் சொல்ல முடியுது. இது பெரிய விஷயம்தானே!

இரவினின் ஆட்டம்;பகலினில் தூக்கம். இதுதாங்க எனக்குப் பிடிச்ச பாட்டு :)

பரிசல்காரன் said...

@ ஜ்யோவ்ராம் சுந்தர்

வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி சீனியர்!!!