Friday, September 12, 2008

விஜய் டி.வி-யில் வலைபதிவர்கள் நிகழ்ச்சிகள்!

விஜய் டி.வி-யின் நிகழ்ச்சிகள் இப்பொழுது உணர்ச்சிகளை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வது போல ஆகிவிட்டது. யார் அடுத்த பிரபுதேவா, ஜோடி நெ. 1, சூப்பர் சிங்கர், கனா காணும் காலங்கள், தமிழ் பேச்சு என் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஏதாவது ஒரு அழுகாச்சியைக் காண்பிக்காமல் இருப்பதில்லை. அவர்கள் அழுவதெல்லாம் உனக்கு விளையாட்டா என்று கேட்காதீர்கள். அதெல்லாம் ஓக்கே, அதை அளவுக்கு அதிகமாய்க் காண்பித்து டிராமா பண்ணவேண்டிய அவசியம் என்ன வந்தது என்றுதான் கோபமாய் இருக்கிறது.

அடுத்தது என்ன ப்ரோக்ராம் செய்ய என்று விஜய் டி.வி.க்கு சில யோசனைகள் சொல்லலாமா என்று யோசித்தபோது, இப்போதைக்கு நடத்துகிற ப்ரோக்ராமையே வலைப்பதிவர்களுக்காக நடத்தினால் என்ன என்ற யோசனை வந்தது... இனி நிகழ்ச்சிகள்...



சூப்பர் பதிவர்:-


போட்ட பத்து நிமிடங்களில் சூடான இடுகைக்குப் போகவேண்டும்.

போட்ட உடனேயே தமிலிஷ்.காமில் முகப்பில் வரவேண்டும்.

கொஞ்ச நேரத்திலேயே பத்து, பதினைந்து பின்னூட்டம் வரவேண்டும்!

(இப்போதைக்கு இந்தவிஷயத்தில் யார் சூப்பர் என்று லக்கிருந்தால் தெரிந்துகொள்வீர்கள்!)


உங்களில் யார் அடுத்த குசும்பன்:-



எல்லாப் பதிவுகளிலும் போய் ஒன்றுக்கு மேற்பட்ட பின்னூட்டம் போட வேண்டும்.

அதில் சிலவற்றைப் பார்த்து வயிறு வலிக்கச் சிரிப்பு வரவேண்டும்.

சமீபத்திய சில புகைப்படங்களைக் கார்டூனாக்க வேண்டும்.

நீங்கள் பின்னூட்டம் போட்டிருக்கிறீர்களா என்று பார்த்து, பதிவை விட்டுவிட்டு உங்கள் பின்னூட்டத்தைப் படிக்கவே வாசகர்கள் வரவேண்டும்.


ஜோடி.நெ.1



இப்போதைக்கு இந்தப் போட்டியில் இரண்டுபேர் டைட்டிலையே வென்றிருக்கிறார்கள்.

1. யெஸ்.பாலபாரதி-மலர்வனம் லட்சுமி
2. மங்களூர் சிவா – பூங்கொடி

விதிகள் வேறொன்றுமில்லை... இரு ஜோடிகளுமே பதிவர்களாக இருக்க வேண்டும்!




விளம்பர இடைவேளைக்குப் பின் அறிவிப்புகள் தொடரும்...


டொட்டடாய்ங்......



























இன்று ஓணம் கொண்டாடும் சேச்சி, சேட்டன்மாருக்கு ஓணம் வாழ்த்துக்கள்!


அறிவிப்புகள் தொடர்கிறது...


நீயா-நானா:-


யாராடோவது பதிவுக்குப் போய் அவர் பதிவுக்கு எதிர் கருத்துக்களைப் போட்டு, அவரை வம்புக்கிழுத்து விவாதப் போர் நடத்தவேண்டும்.

இப்போதைக்கு டைட்டில் ஹோல்டர்: வால்பையன்


வலைப்பூ காணும் காலங்கள்



புதிதாக களத்துக்கு வரும் பதிவர்களுக்காக..

எல்லா பதிவர்களுக்கும் போய் பதிவைப் படித்து, பின்னூட்டம் போட்டு தான் ஆரம்பிக்கவிருக்கும் வலைப்பூவின் நிலைப்பாட்டை (மொக்கைப் பதிவா, சீரியஸா, அரசியலா) தெளிவுபடுத்திக் கொண்டு அவ்வகைப் பதிவர்களை அதிகம் வாசித்து......

இது ஸ்கூல் மாதிரி என்பதால் கொஞ்சம் சீரியஸான போட்டி!



பதிவர் சந்திப்பு எங்கள் மூச்சு



இது பதிவர் சந்திப்புக்கான போட்டி. எப்போதாவது ஒரு நாள் என்று மாதத்துக்கு ஒரு முறை அறிவிக்கப்பட்ட சந்திப்பும், அதுபோக வாரத்துக்கு ஒருமுறை அறிவிக்கப்படாத சந்திப்பும், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மீன் வாங்கப் போகும்போது சந்திப்பும், அதுபோக 24 மணிநேரத்துக்கு ஒருமுறை காபி சாப்பிட வெளியில் செல்லும் போது சந்திப்பும் நடத்த வேண்டும். இதற்கு கோச்சிங் நடத்த கோவி.கண்ணன் & கோ-வை அணுகலாம்.



முக்கியமான பின்குறிப்பு:- மேலே வலதுமூலையில் க்ளிக்கி இட்லிவடையாரின் பதிவில் குறிப்பிட்டுள்ள இளம் வீராங்கனைக்கு ஏதாவது உதவுங்கள். (Thanks: SK)

34 comments:

Mahesh said...

டாபிகல எழுதறதுல உங்க திறமை கூடிக்கிட்டே போகுது.... ஆமா பதிவுலகை "கலக்கப் போவது யாரு?"

Mahesh said...

அட...மீ த பஷ்டா??? ஆஆஆஆஆ...

கார்க்கிபவா said...

அட நல்ல ஐடியா.. நீங்க விட்டத நான் எழுதறேன்

விஜய் ஆனந்த் said...

:-)))...

முரளிகண்ணன் said...

பரிசலாரே,
சில சமயம்தான் நிகழ்ச்சியும், விளம்பரமும் ரசிக்கும் படி அமையும். அதில் இதுவும் ஒன்று

வெண்பூ said...

இதிலிருந்து என்னா தெரியுதுன்னா நீங்க இத்தனை ப்ரொக்ராமையும் பாக்குறீங்க.:)))

நல்ல நையாண்டி.. (அதிலும் ஷகிலா சேச்சி படத்தை போட்டது சூப்பர்)..

narsim said...

//விஜய் டி.வி-யின் நிகழ்ச்சிகள் இப்பொழுது உணர்ச்சிகளை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வது போல ஆகிவிட்டது//

மிக மோசமாகப் போய்கொண்டிருக்கிறது.. ஏதாவது விபரீதம் நடந்தால் என்ன செய்வார்கள்..

என்னோடு பணிபுரிந்த மேற்கு மண்டல மேலாளர் சில ஆண்டுகளுக்கு முன்பு மாத இறுதி டார்கெட் கால், அமெரிக்க தொலைபேசி அழைப்பு முடிந்த சில நொடிகளில் அழுத்தம் தாங்காமல் விமான நிலையத்திலேயே மரணித்துவிட்டார்..


நர்சிம்

கிரி said...

//அதை அளவுக்கு அதிகமாய்க் காண்பித்து டிராமா பண்ணவேண்டிய அவசியம் என்ன வந்தது என்றுதான் கோபமாய் இருக்கிறது//

அளவுக்கு அதிகமா! இதற்க்கு இவனுக பண்ணுறதுக்கு அளவே இல்லைன்னு தான் சொல்லுவேன்..

//விளம்பர இடைவேளைக்குப் பின் அறிவிப்புகள் தொடரும்...
டொட்டடாய்ங்//

படமெல்லாம் சூப்பர் :-)

//யாராடோவது பதிவுக்குப் போய் அவர் பதிவுக்கு எதிர் கருத்துக்களைப் போட்டு, அவரை வம்புக்கிழுத்து விவாதப் போர் நடத்தவேண்டும்.//

உங்களை ரொம்ப தான் கடுப்படித்தாட்டாகன் போல ;-)

//இதற்கு கோச்சிங் நடத்த கோவி.கண்ணன் & கோ-வை அணுகலாம்//

ஹி ஹி ஹி

கோவி கண்ணன், கே கே ரொம்ப தான் வயித்தெரிச்சல்ல இருக்காரு நோட் திஸ் பாயிண்ட் :-))))))

சென்ஷி said...

:)

நீங்களும் மீரா ஜாஸ்மின் படம் போட்டாச்சா :)

சென்ஷி said...

//narsim said...
//விஜய் டி.வி-யின் நிகழ்ச்சிகள் இப்பொழுது உணர்ச்சிகளை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வது போல ஆகிவிட்டது//

மிக மோசமாகப் போய்கொண்டிருக்கிறது.. ஏதாவது விபரீதம் நடந்தால் என்ன செய்வார்கள்..

என்னோடு பணிபுரிந்த மேற்கு மண்டல மேலாளர் சில ஆண்டுகளுக்கு முன்பு மாத இறுதி டார்கெட் கால், அமெரிக்க தொலைபேசி அழைப்பு முடிந்த சில நொடிகளில் அழுத்தம் தாங்காமல் விமான நிலையத்திலேயே மரணித்துவிட்டார்..
//

:((

அச்சச்சோ...!

பரிசல்காரன் said...

//அதிலும் ஷகிலா சேச்சி படத்தை போட்டது சூப்பர்//

இல்லீன்னா ஒருத்தர் கோவிச்சுப்பாரே..

பரிசல்காரன் said...

//என்னோடு பணிபுரிந்த மேற்கு மண்டல மேலாளர் சில ஆண்டுகளுக்கு முன்பு மாத இறுதி டார்கெட் கால், அமெரிக்க தொலைபேசி அழைப்பு முடிந்த சில நொடிகளில் அழுத்தம் தாங்காமல் விமான நிலையத்திலேயே மரணித்துவிட்டார்..//

:-((

Tech Shankar said...

Do not watch Television More.

Ahaa.. Kelambitaanyaa...

கார்க்கிபவா said...

//நீங்களும் மீரா ஜாஸ்மின் படம் போட்டாச்சா :)//

குசும்பன் வந்தா எனக்கு கமெண்ட் எழுத "ப‌டம்" வேணும்னு எடுத்துப்பாரு.. அது இல்லாம படிச்சா பரிசல் பேரு டேமேஜ் ஆயிடாது?

Saminathan said...

ஏன்..ஏன்...ஏன் இப்படி..?
என்ன ஆச்சு..?

பரிசல்காரன் said...

//ஈர வெங்காயம் said...

ஏன்..ஏன்...ஏன் இப்படி..?
என்ன ஆச்சு..?//

ஏன் மாப்பூ?

SK said...

நல்ல பதிவு பரிசல்.

மீண்டும் நன்றி மோகானபிரியா பற்றிய செய்தியை இங்கு சேர்த்தமைக்கு.

Rajes said...

Mokka star... pathiyulakil yaru nalla mokka poduranga....

பரிசல்காரன் said...

// Rajes said...

Mokka star... pathiyulakil yaru nalla mokka poduranga....//

தன்னடக்கத்துனாலதான் இந்தப் போட்டி வைக்கல!

ees said...

//ஏதாவது ஒரு அழுகாச்சியைக் காண்பிக்காமல் இருப்பதில்லை.//

ஆக, தமிழ் சேனல்களையும் அழுகையும் பிரிக்கவே முடியாது போல் இருக்கிறது

கார்க்கிபவா said...

//தன்னடக்கத்துனாலதான் இந்தப் போட்டி வைக்கல/

அடங்கொக்கமக்கா... வாய்ப்புகளே இல்ல சகா.. கலக்கல் கமெண்ட்

வால்பையன் said...

எனக்கு விளம்பர இடைவெளி பிடிச்சிருக்கு
அடிக்கடி இது மாதிரி இடைவெளி விடவும்

இளைய கவி said...

//எனக்கு விளம்பர இடைவெளி பிடிச்சிருக்கு
அடிக்கடி இது மாதிரி இடைவெளி விடவும்

// "இடை"வெளி இன்னும் நல்ல வெளிச்சமாய் இருந்திருக்கலாம் என்பது எனது தாழ்வான கருத்து

பரிசல்காரன் said...

//"இடை"வெளி இன்னும் நல்ல வெளிச்சமாய் இருந்திருக்கலாம் என்பது எனது தாழ்வான கருத்து//

மிக மிக ரசித்தேன் இளையகவி!!!

A Blog for Edutainment said...

ஏன்..ஏன்...ஏன் இப்படி..?
என்ன ஆச்சு..?//

ஏன் மாப்பூ?

Ahaa...

ees said...

குருவே , அடுத்த பதிவுகளை போட்டாச்சு!! ஒரு விசிட் அடிக்கவும் !!

Thamira said...

ஹி..ஹி.. விளம்பரம் ஜூப்பரு.!

Thamira said...

அய்யய்யோ இந்த வாரம் நானா.? சொல்லவேயில்ல.. ஆமா என்னோட இந்த மொக்கப்படத்த எங்க புடிச்சீங்க.? கேட்டிருந்தா இன்னும் பெட்டரா(?) குடுத்திருப்பேனே..

Anonymous said...

//தாமிரா said...

அய்யய்யோ இந்த வாரம் நானா.? சொல்லவேயில்ல.. ஆமா என்னோட இந்த மொக்கப்படத்த எங்க புடிச்சீங்க.? கேட்டிருந்தா இன்னும் பெட்டரா(?) குடுத்திருப்பேனே..//

ஹலோ ஒரு அறிமுகத்துக்காகத்தான் உங்க போட்டோ. இப்ப என்ன பொண்ணா பாக்குறாங்க.
ரெம்பத்தான் ஷோ விடுறீங்க.

பரிசல்காரன் said...

//
ஹலோ ஒரு அறிமுகத்துக்காகத்தான் உங்க போட்டோ. இப்ப என்ன பொண்ணா பாக்குறாங்க.
ரெம்பத்தான் ஷோ விடுறீங்க.//

நல்லாச் சொன்னீங்கண்ணா!!!

பரிசல்காரன் said...

// ees said...

குருவே , அடுத்த பதிவுகளை போட்டாச்சு!! ஒரு விசிட் அடிக்கவும் !!//

பார்த்து commentம் போட்டுட்டேன்!

சென்ஷி said...

//வடகரை வேலன் said...
//தாமிரா said...

அய்யய்யோ இந்த வாரம் நானா.? சொல்லவேயில்ல.. ஆமா என்னோட இந்த மொக்கப்படத்த எங்க புடிச்சீங்க.? கேட்டிருந்தா இன்னும் பெட்டரா(?) குடுத்திருப்பேனே..//

ஹலோ ஒரு அறிமுகத்துக்காகத்தான் உங்க போட்டோ. இப்ப என்ன பொண்ணா பாக்குறாங்க.
ரெம்பத்தான் ஷோ விடுறீங்க
//

ஹா..ஹா.. ரிப்பீட்டே வுட்டுக்கறேன்ப்பா :))

பொய்யன் said...

NEENGA ELLAM YAARU

பொய்யன் said...

விளக்கத்துக்கு நன்றி பரிசல். எல்லாம் ஒரு குடும்பமாக இருக்கிறீர்கள். மகிழ்ச்சி. அதுசரி அந்த கேபிள் சங்கர் மேட்டர் என்னாச்சு. ஏதாச்சும் விளக்கம் சொன்னாரா?