Friday, September 19, 2008
பொய் சொல்லப் போறோம் - வெற்றி பெறும்!
டைட்டிலில் இருந்து ஆரம்பமாகிறது அதகளம். தென்னை மரத்தில் பலா, புஷ்ஷூடன் கை குலுக்கும் பின் லேடன், பூச்செடிகளுக்கு நீரூற்றும் பீரங்கி வண்டி (நல்ல கற்பனை!), நிலாவில் விவசாயி என்று டைட்டில் போடும் போதே போஸ்ட் கார்ட் படங்களில் சிரிக்க வைக்க ஆரம்பிக்கிறார்கள். அதில் டாப் க்ளாஸ் இன்னொரு விமானத்தை ‘டோ’ பண்ணியபடி பறக்கும் விமானம்!
டைட்டில் அதகளம் என்றால் ஆரம்பக் காட்சி அமர்க்களம். சாவு வீட்டில் சைட்டடிக்கும் இளைஞர்கள், எழவு விசாரிக்க வந்த அப்பாவின் நண்பரிடம் ‘சார், நேத்து மேட்ச் பார்த்தீங்களா’ என விசாரிக்கும் இறந்தவரின் இரண்டாவது மகன். மகளோ, “அம்மா இந்த ட்ரஸ் நல்லாயிருக்கா. இன்னைக்கு சண்டே. அப்பா வேற செத்திருக்காரு. நிறைய பேரு வருவாங்கள்ல வீட்டுக்கு..” என்று அம்மாவைக் கேட்கிறாள். அம்மாவோ, “சீக்கிரம் காரியம் முடிஞ்சா பரவால்ல. பதினோரு மணிக்கு சீரியல் போட்டுடுவான்” என்று கவலைப் படுகிறாள். மூத்த மகனோ கார் சாவியைத் தேடி, ‘இந்த அப்பா எப்பவும் இப்படித்தான். கார் சாவியை பாக்கெட்ல வெச்சிருப்பாரு’ என்று புலம்பியபடி வெள்ளைத் துணி போர்த்தியபடி கிடக்கும் அப்பாவின் பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான்.
நல்ல குடும்பம்டா சாமீ... என்று நாம் சிரித்தபடி படம் பார்க்கத் தொடங்கலாம்!
ப்ளாட் வாங்குவதே கனவாகக் கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பத் தந்தை, (நெடுமுடி வேணு) அவரது இரண்டு மகன்கள், (கார்த்திக் & ஓம்) அவரை ஏமாற்றும் பேபி சார், (நாசர்), அதை ஆசிப் அலி (பாஸ்கி)யுடன் சேர்ந்து கார்த்திக் எப்படி பழிவாங்கி முறியடிக்கிறார் என்பதே கதை.
கதையை விடுங்கள். அதை நகைச்சுவை தேன் கலந்து தந்தவிதம் சூப்பர். இடைவேளை வரை சிரிக்க வைத்தவர்கள், இடைவேளைக்குப் பிறகு விழுந்து, விழுந்து சிரிக்க வைக்கிறார்கள்.
தம்பி ஓமின் நடிப்பு பிரமாதம். அவர்தான் கிட்டத்தட்ட ஹீரோ. தங்கள் இடத்தில் நாசர் கட்டிய காம்பவுண்டைத் தகர்க்க ரௌடி கும்பலை அவர் அழைத்து வருவது காமெடி தர்பார். ‘நாங்கள்லாம் யாரு? சும்மாவா.. டெர்ரர்ல?’ என்றபடி வரும் அந்த ரௌடி கும்பல் தலைவன் தனது சாகசங்கள் அடங்கிய போர்ட்ஃபோலியோவைக் காட்டுவது சிரிப்பென்றால், காம்பவுண்டை இடிக்கும்போது, ஒரு ஃபோட்டொகிராஃபர் சுற்றி சுற்றி வந்து படம் பிடிப்பது சிரிப்போ சிரிப்பு!
ஹீரோயின் ஏதோ ஒரு விளம்பரத்தில் வருபவர் என்பது தெரிகிறது. ஹீரோவும், ஹீரோயினும் உட்கார்ந்து காபி சாப்பிடும் காட்சிகள் விளம்பரம் பார்ப்பது போலத்தான் இருக்கிறது. நெடுமுடி வேணு மனைவி கேரக்டரில் நடிப்பவரின் டயலாக் டெலிவரி, அசல் சீரியல் டைப்! பல சீன்கள் தொடர்நாடக எஃபெக்டில் இருப்பது மைனஸ் பாய்ன்ட்.
அதுவும் ஹீரோ தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டிய கடன் பாக்கிக்கு நடித்துக் கொடுத்திருப்பார் போல.. அஞ்சு பைசாவுக்கு கூட அவர் முகத்தில் குஷியே இல்லை. வேண்டா வெறுப்பாக இருப்பது போல ஒரு உம்மணாமூஞ்சி கதாபாத்திரம். ஹீரோயினைப் பார்த்தால் நமக்கு வரும் லவ்வில் கொஞ்சமாவது ஹீரோவுக்கு வர வேண்டுமே.. ம்ஹூம்! ஹீரோவின் பாத்திரப் படைப்பில் சறுக்கிவிட்டார் டைரக்டர்!
இடைவேளைக்குப் பிறகு படம் நால்வரின் ரணகளத்திலேயே நேரம் போவதே தெரியாமல் ஆக்கிவிடுகிறது! நாசர், அவரது பி.ஏ.வாக வரும் ஜான்விஜய் (தகவல் நன்றி: லக்கி), மௌலி, அவரது பி.ஏ.வாக வரும் பாலாஜி (ஜெயா டி.வி. காம்பியரர்)
நாசர்: எத்தனை நாளாச்சு இப்படி இவரைப் பார்த்து. அதுவும் குடித்துவிட்டு சேடடை பண்ணும் காட்சியில் ஒன் மேன் ஷோ நடத்தியிருக்கிறார். சிரித்து, சிரித்து வயிறு வலித்துத் தொலைக்கிறது!
ஜான்விஜய்: அசால்ட்டான நடிப்பு. ஒரு ஃப்ராடின் பி.ஏ.வுக்குரிய அத்தனை பாடி லேங்குவேஜையும் அனாயாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதுவும் ஸ்டேஷனில் நெடுமுடிவேணுவிடம் “பேபி சாருக்கு ஒன்ன ரொம்பப் புடிச்சுப் போச்சுய்யா” என்று சிரித்தபடி பேசும் காட்சி டாப். டயலாக் டெலிவரிக்கு ஸ்பெஷல் ஷொட்டு!
மௌலி: கேட்கவே வேண்டாம். நடிப்பில் பழம் தின்று கொட்டை போட்ட ஆசாமி. நடிக்க வராதது போல நடிக்கும் சீன்களில் சபாஷ் பெறுகிறார். ‘நான் என் மகளுக்காக இதைச் செய்யறேன்’ என்று சொல்லிவிட்டு, ஹீரோ தலையாட்டி முடிக்கும் முன், ‘அவ உனக்காகச் செய்யறா’ என்று சொல்வது உட்பட பல இடங்களில் தந்தைப் பாசத்தை அழகாக காட்டியிருக்கிறார். காசு வாங்கிவிட்டு, வீட்டுக்கு வந்தவுடன் ‘மொதல்ல தண்ணி குடுங்கப்பா’ என்று கேட்கிறாரே.. எத்தனை பேர் கவனித்தார்களோ!
பாலாஜி: புதுமுகமா? ஆனாலும் சபாஷ் சாரே! ஃபிஷ்ரிஸ் டிபார்ட்மெண்ட் ஆசாமிகளை விரட்டும் இடத்தில் விலா நோக வைக்கிறார்!
நெடுமுடிவேணு நடிப்பும் சொல்லியே ஆகவேண்டிய ஒன்று. சோகம் ததும்பியே இருக்கும் (30 லட்சத்தை முழுசா கோட்டைவிட்டா வேற எப்படி இருக்கும்?) இவரது சீன்களில் எல்லாம் மலையாள ஆர்ட் பட வாசனை! பீட்சாவுக்கு சட்னி, சாம்பார் கேட்கும் இவர், மௌலி பணம் வேண்டாம் என்று திரும்பி வரும்போது சந்தோஷமாக அவரைக் கவனிக்கும் பாங்கில் நெடுமுடியின் கேரக்டரைப் பதியவைத்து விடுகிறார் இயக்குனர்!
பாஸ்கிக்கு சொல்லிக்கொள்ளும் படியாக ஒரு படம்.
க்ளைமேக்ஸ்?
அப்படின்னு ஒண்ணு இல்லைங்க!
நான் புதனன்று இந்தப் படம் பார்க்கும் போது என்னுடன் சேர்த்து முதல் க்ளாஸில் 20 பேரும், கீழே 68 பேரும் ஆக மொத்தம் 88 பேர்தான் தியேட்டரில்! கஷ்டமாக இருந்தது. (மெனக்கெட்டு எண்ணினோம்ல?)
குசேலன், குருவி என்று ஸ்டார்களைப் போட்டு, நம்மை சோதிப்பதற்குப் பதிலாக இந்த மாதிரி நகைச்சுவையுடன் கூடிய படங்கள் அவசியமாய் தேவைப்படுகிறது.
ஆனால் வசனங்கள், காட்சிகள் எல்லாமே காமெடி சீரியல் பார்க்கும் எஃபெக்டைத் தருவதால், தமிழக மக்களுக்கு இந்தப் ப்டம் பிடிக்குமா, இங்கே இந்தப் படம் எதிர்பார்த்த (யாரு? என்னை மாதிரி ஆளுக எதிர்பார்த்த) வெற்றியைப் பெறுமா என்று எங்களைக் கேட்டால்.......
பொய் சொல்லப் போறோம்....வெற்றிபெறும்!
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
me the first
meee the 2nd..
படம் ஏ செண்டர் தியேட்டர்களிலாவது தப்பிவிடும். பி & சி-யில் அரோகரா தான்!
ஆனாலும் லோ பட்ஜெட் படமென்பதால் நஷ்டம் எதுவும் இருக்காது :-)
விமர்சனம் கலக்கல்ஸ். நானும் இந்த மாதிரி காமெடி படத்தத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். சண்டே போயிரவேண்டியதுதான்.
மெளலி நட்சத்திர ஹோட்டலில் நுழைந்தவுடன் பணிப்பெண் குட்மார்னிங் சொன்னவுடன் "குட் மார்னிங்,குட்மார்னிங்" என்று பின்னாலயே போவாரே.. அதுவும் கலலக்கல் டைமிங்..
படத்தை மீண்டும் பாத்த எஃபெக்ட்ட விமர்சனம் தருது.. நன்றி பரிசலாரே!
நர்சிம்
அட இந்த வாரம் எம்.பி.ஏ தேர்வு இருக்கு.. அடுத்த வாரம்தான் பார்க்க முடியும்.. ஹைதராபாத்தில் ரிலீஸாகவில்லை..கலக்கல் விமர்சனம்.
நன்றி rapp & கும்கி
@ லக்கிலுக்
சரியாகச் சொன்னீர்கள்!
@ தாமிரா
நம்பிப் போலாம்!
@ நர்சிம்
//மெளலி நட்சத்திர ஹோட்டலில் நுழைந்தவுடன் பணிப்பெண் குட்மார்னிங் சொன்னவுடன் "குட் மார்னிங்,குட்மார்னிங்" என்று பின்னாலயே போவாரே.//
மறந்துட்டேன். கரெக்ட்! அந்த சீனுக்கு கைதட்டி வலி எடுத்துடுச்சு!
நன்றீ கார்க்கி!
(இது தமிழ்மணத்துல வர்ல. கேட்டா புது இடுகை எதுவும் இல்ல-ங்குது. ஏன்னு புரியல, யாராவது சேர்த்து விட்டீர்களா? இல்லைன்னா நான் என்ன பண்ணனும். சொல்லுங்கப்பா... ப்ளீஸ்)
வேறொரு ஐடியா பண்ணி தமிழ்மணத்துல சேர்த்துட்டோம்ல!
தலைப்பு சன் டிவி பாணியா..?
\\ஆனால் வசனங்கள், காட்சிகள் எல்லாமே காமெடி சீரியல் பார்க்கும் எஃபெக்டைத் தருவதால், தமிழக மக்களுக்கு இந்தப் ப்டம் பிடிக்குமா//
டிவியில் வரும்காமெடி சீரியல்கள் வெற்றியா தோல்வியா? அழுவாச்சிகள் மட்டும் தான் வெற்றியா..
தங்கச்சீ........
எப்ப வந்தீங்க?
தலைப்புல ஒரு சேதி மறைமுகமா சொல்லியிருக்கேன்! தட்ஸ் ஆல்!
//டிவியில் வரும்காமெடி சீரியல்கள் வெற்றியா தோல்வியா? அழுவாச்சிகள் மட்டும் தான் வெற்றியா.//
அவை சின்னத்திரையப் பொறுத்தவரை வெற்றிபெறுமென்றாலும், பெரிய திரையில் நெடுநீள வசனங்களை நம்மவர்கள் அவ்வளவாக ரசிப்பதில்லை. தொடர்ந்து துணுக்குத் தோரணமாக அமைந்து சிரி சிரி என்று சிரிக்கவைத்தாலொழிய.
கண்டிப்பா பாருங்க முத்துலெட்சுமி. உங்களுக்குப் பிடிக்கும்!
படம் சிறுநகரங்களில் ஓடுமானு தெரியல சென்னைல மட்டும் ஓடும் ..
படத்த ரொம்ப ரசிச்சு பாத்துருப்பீங்க போலருக்கே
அந்த ஹீரோயின பத்தி ஒன்னுமே சொல்லலீயே
நல்ல விமர்சனம்.. நீங்க சொல்வதைப்பார்த்தால் எனக்குப் பிடிக்குமென நம்புகிறேன்.. எதுக்கும், ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துடறேன்.. :)
@ அதிஷா
//அந்த ஹீரோயின பத்தி ஒன்னுமே சொல்லலீயே//
--ஹீரோயின் ஏதோ ஒரு விளம்பரத்தில் வருபவர் என்பது தெரிகிறது.--
--ஹீரோயினைப் பார்த்தால் நமக்கு வரும் லவ்வில் கொஞ்சமாவது... --
//Bee'morgan said...
நல்ல விமர்சனம்.. நீங்க சொல்வதைப்பார்த்தால் எனக்குப் பிடிக்குமென நம்புகிறேன்.. எதுக்கும், ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துடறேன்.. :)//
எதிர்பார்ப்பில்லாம ஜாலியா போய்ட்டு வாங்க!
ஊருக்கு வந்து பார்த்துட வேண்டியது தான்
//குசேலன், குருவி என்று ஸ்டார்களைப் போட்டு, நம்மை சோதிப்பதற்குப் பதிலாக இந்த மாதிரி நகைச்சுவையுடன் கூடிய படங்கள் அவசியமாய் தேவைப்படுகிறது//
கே கே இந்த படத்தை உயர்த்த மற்ற படங்களை மட்டம் தட்டனுமா? இதனுடைய சிறப்பை மட்டும் கூறலாமே!
சரோஜா பார்த்து விட்டீர்களா? இந்த வாரம் செல்லலாம் என்று இருக்கிறேன் இல்லை என்றால் ஊருக்கு வந்து
கிருஷ்ணா,
பிரியதர்ஷன் படம் எப்பவுமே சிச்சுவேசன் காமெட் டைப்.
விஜய் அத நல்லாத் தமிழ்ல எடுத்து இருக்கருன்னு சொன்னாங்க.
உங்க விமர்சனம் அத உறுதிப் படுத்துது.
@ கிரி
ஒவர் சென்சிடிவ்ங்க நீங்க!
@ வேலன்
//பிரியதர்ஷன் படம் எப்பவுமே சிச்சுவேசன் காமெட் டைப்.
விஜய் அத நல்லாத் தமிழ்ல எடுத்து இருக்கருன்னு சொன்னாங்க//
உண்மை!
விமர்சனம் நல்லா இருக்கு. சிரிப்பா இருக்குன்னு வேற சொல்லிடீங்க. பாக்கலாம். நிறைய படம் செந்துட்டே போகுதே பாக்க.
நுண்மையான நகைச்சுவை உணர்வு உடையவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும், நாடக அம்சங்களை கொண்டுள்ள போதிலும். உங்கள் விமரிசனம் அருமை.
-josh
பார்த்துற வேன்டியதுதான்
நன்றி எஸ்.கே.
@ Share Hunter said...
நுண்மையான நகைச்சுவை உணர்வு உடையவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும்//
சரியாகச் சொன்னீர்க்ள்!
@ முரளி கண்ணன்
சினிமா அகராதி நீங்க! இன்னும் பார்க்கலியா?
மன்னிக்கணும் நான் படம் பாக்குறதில்லை!
ஆனாலும் படத்தோட பேர வச்சுகிட்டு வேற ஏதாவது கும்மி குத்துவிங்கன்னு பார்த்தா நீங்களும் திரை விமர்சனம்.
ஒரு படம் கூட விடாமல் பார்த்து விமர்சனம் எழுத நம்ம தலை லக்கி லுக் இருக்குறார்.
நீங்க செலக்டிவா திரை விமர்சனம் எழுதுங்க
(இதும் அப்படி தான்னு சொல்லிராதிங்க)
என்னாது எனக்கு முன்னால 24 பேர் கமெண்டிட்டாங்களா?
ம்ம்ம்ம்.... நீங்கள் சொல்வதை பார்த்தால் ஒரிஜினலை கொஞ்சம் கூட கெடுக்காமல் அப்படியே கொடுத்துள்ளனர். நல்ல படம், நல்ல விமர்சனம்.
****
ஆனா அந்த படத்தை விட சூப்பர் நீங்க சைடில போட்டிருக்குற நம்ம அண்ணா படம்தான்.... :)))))
மீ த 25
இம்மாதிரி காமடிக்கென வரும் படங்கள் தமிழில் குறைவு. தொடர்ந்து இம்மாதிரியான படங்கள் வந்தா எவ்ளோ நல்லாருக்கும். அனுபவிச்சு உழுதிருக்கீங்க.
உங்க விமர்சனத்தை படித்ததும் தேடிப்பிடித்து trailer பார்த்தேன்.வேறு ஏதுவோ வருகிறது. தியேட்டருக்கு இன்னும் வரவில்லை. வந்ததும் பார்க்கலாம்.
தல
படத்துல பாடல்கள் இயல்பா அமைஞ்சது ஒரு பிளஸ் .....
அப்புறம் நெடுமுடி வேணு ரவுடிகளோடு காரில் போகும்போது அவரு வேலைய பத்தி சொன்னதும் " வாத்தியாராம் " னு ஒரு ரவுடி பக்கத்தில் இருப்பவனிடம் சொல்வானே , அத கவனச்சிங்களா ??
ஃஃநல்ல குடும்பம்டா சாமீ... என்று நாம் சிரித்தபடி படம் பார்க்கத் தொடங்கலாம்!ஃஃ
ஆஹா அமர்க்களமா இருக்கே. குடும்பம் விளங்கின மாதிரித்தான்
ஃஃஹீரோயினைப் பார்த்தால் நமக்கு வரும் லவ்வில் கொஞ்சமாவது ஹீரோவுக்கு வர வேண்டுமே.ஃஃ
அட!!!!!!
என்னத்த சொல்ல ! எனக்கு முன்னாடியே எல்லாத்தையும் சொல்லிபுட்டிங்கேலே!
வயசானவுங்க சொல்றதுக்கு கொஞ்சம் "இடம்" ரிசர்வ் பண்ணுங்க !
இன்னும் படம் பார்க்கலே.
பார்போம்.
நீங்க சொல்ற மாதிரி எதாச்சும் . . .
படம் பாக்கலாம்னுட்டு தியேட்டருக்கு ஓடினா அதவிட வேகமா படம் ஓடிருச்சி.கரண்ட்டுக்கு(?)கூட கட்டுப்படியாகலைங்க சார் அப்படின்னுட்டாய்ங்க....ஏய்யா (படமும்., கரண்ட்டும்)இருந்தாதான்ய்யா கட்டுபடியாகும்னு சொல்லீட்டு வந்துட்டங்ணா.வேற வழியில்லீங்ணா..தி /டி வி டி தான்..(white flower பாணிதான் எப்பவும் best)
Post a Comment