Thursday, October 9, 2008

குவியல் - 09.10.2008



அப்துல்லாவால் உதவப்பட்ட சதுரங்க வீராங்கனை மோகனப்ரியா, நாக்பூரில் நடந்த, ஏழு காமன்வெல்த் நாடுகள் கலந்து கொண்ட சதுரங்கப் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார்! “அப்துல்லா, எல்லாம் நீங்க டைமர் கொடுத்த டைமோ?” என்று பகடியதற்கு அவர் சிரித்தார். “அண்ணே.. சும்மா இருங்க… இது மொத பதக்கமா என்ன? திறமை இருக்குண்ணே.. இதெல்லாம் ஜூஜூபி அந்தப் பொண்ணுக்கு” என்றார்.

வாழ்த்துக்கள் மோகனப்ரியா!

*************************************

நமீதா நடித்த பிரம்மாண்டம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. நேற்று போகலாம் என்று நினைத்தேன். போஸ்டரைப் பார்த்ததற்கே மனைவி இரண்டு மணிநேரமாக ‘உம்’மென்றிருந்தார். யாராவது சீக்கிரம் விமர்சனம் எழுதுங்கப்பா. நல்ல ஸ்டில்லோட.

இப்போதான் நமீதா அவங்களுக்கு ஏத்த பேருள்ள ஒரு படத்துல நடிச்சிருக்காங்க! பிரம்மாண்டம்!

***************************************

நேத்து ஆயுத பூஜைன்னு கம்ப்யூட்டர், மௌஸ் எல்லாத்தையும் வெச்சு சாமிகும்பிட்டோம். நான் சின்னவனா இருந்தப்ப ஸ்கூல் புக் எல்லாம் எடுத்து வெச்சுட்டு, படிக்கவே கூடாதும்பாங்க. ரெண்டு நாள் செம ஜாலியா இருக்கும். நேத்து அதே மாதிரி ‘இன்னைக்கு சிஸ்டத்துல உட்காரக்கூடாது’ன்னாங்க. (நீங்க சிஸ்டத்துலயா உட்காருவீங்க? நான் சேர்லதான் உட்காருவேன்’ன்னு மொக்கையா பின்னூட்டினா, அடி விழும்!) சரின்னு சிஸ்டம் பக்கமே வர்ல. அதுவும் ஒரு மாதிரி நல்லாத்தான் இருந்துச்சு. அப்படியும், பூஜை முடிஞ்சு தமிழ்மணம் திறந்து நல்லபடியா ஒண்ணு ரெண்டு பேருக்கு கமெண்டீட்டு, க்ளோஸ் பண்ணீட்டேன்!

**************************************

இன்னைக்கு ஆஸ்திரேலியாகூட டெஸ்ட் க்ரிக்கெட் ஆரம்பிக்குது. ஏனோ முன்னைப் போல சுவாரஸ்யமே இல்ல. ஒரு வேளை மேட்ச் ஜெயிச்சா மறுபடி சுவாரஸ்யம் வரலாம். ஜெயிப்பாங்களா.. பார்க்கலாம்!

**************************************

முந்தாநாள் என்னோட பின்னூட்டத்துல வேலண்ணா ஒரு பின்னூட்டம் போட்டதுக்கு, பதிலா ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டிருந்தேன். பதிவு எவ்வளவு மொககையோ, அதுக்கு நேர் மாறா நல்லா இருந்துச்சுப்பா’ ன்னு அதிஷா பாராட்டியிருந்தார். அது இதுதான்...



அண்ணா, நேத்து எங்க கம்பெனில ஒரு மீட்டிங். நான் சம்பந்தப்பட்டதில்ல. ஆனாலும் மீட்டிங்ல ஒருத்தர் என்னைப் பற்றிய குறை ஒன்றைச் சொல்லிவிட்ட்டார். (போட்டுக்கொடுத்டார்ன்னு கொச்சைப்படுத்த விரும்பவில்லை. ஏன்னா, அவர் சொன்னது உண்மை. ஒரு வேலையை நான் கேர்லெஸா விட்டிருந்தேன்!!) அதுக்கு டோஸ் விட எம்.டி. என்னைக் கூப்ட்டாரு. போறப்பதான் மேல வானத்துல பார்த்தேன். சூரியன் மேகத்துக்கு நடுவுல! சூப்பரா கதிர்கள் பூமியில் விழுந்துகிட்டிருந்தது. உடனே என் ஃபோனை எடுத்து கேமராவை ஓப்பன் பண்ணி க்ளிக்கீட்டேன்! (இன்னும் இருக்கு அந்தப் படம்!)

நெஜமா மீட்டிங்ல திட்டு வாங்கிட்டிருக்கும்போது கூட ஒரு மாதிரி ‘என்ன அருமையான இயற்கை காட்சியை விட்டுட்டு இப்படி கூடி ஒக்கார்ந்து கும்மியடிச்சிட்டிருக்கீங்களே”ன்னுதான் எனக்கு தோணிச்சு!

முடிஞ்சு அவசர அவசரமா வெளில வந்தேன். (எல்லாரும் நான் அவங்க சொன்னதை செய்யத்தான் அவ்ளோ துடிப்போட போறேன்னு நெனைச்சுட்டாங்க.) ஆனா வெளில அந்த மேகம் கலைஞ்சிருந்தது! :-(


ஏதாவது மூட் அவுட்ன்னா நான் அண்ணாந்து வானத்தைப் பார்த்து ரசிச்சுகிட்டிருப்பேன். மறுபடி உற்சாகம் ரீ சார்ஜ் ஆகிடும்! எனக்கென்னவோ மேகம் மேல கொஞ்சம் காதல் அதிகம். வானத்தில் மேகங்கள் கலைவதை வேடிக்கை பார்த்திருக்கிறீர்களா? ஒரே தமாஷாக, வியப்பாக இருக்கும். சிலசமயம் ஒரு காதலனை விட்டு காதலி தயக்கமாய்ப் பிரிவது போல ஒரு பெரிய சைஸ் மேகத்திலிருந்து சின்ன மேகம் கலைந்து போகும். சிலசமயம் நண்பனோடு சண்டை போட்டு பிரிவது போல சின்ன மேகமொன்று சடாரென்று வேகமெடுத்து தனியாய்ப் பயணிக்கும். பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று நண்பன் முன்னால் நின்று ‘இரு.. இப்ப நீ என்ன சொல்ல வர்ற’
என்று கேட்பது போல, ஒரு மேகம் பிரிந்து வந்து கொஞ்சம் இடைவெளி விட்டு நின்று விடும். இப்படி நிறைய...

கொஞ்சம் ரசித்துத்தான் பாருங்களேன்.

*****************************

இந்தக் கவிதையை ரசியுங்கள்.


உனக்கு
எழுதுகிறபோதே
இரண்டொரு சொல்லை
தப்பிதமாய்
எழுதிவிடுகிறேன்.


பிழைகள்
பற்றியாவது
பேசுவாயில்லையா



-யுகபாரதி
(பஞ்சாரம்)

***************************

34 comments:

பாபு said...

வேகமாக நகரும் மேகம் நான் ரசிப்பவைகளில் ஒன்று
ஒரு காலத்தில் அதில் தெரியும் உருவங்களை கண்டுபிடிக்க போட்டி போடுவோம்

அந்த போட்டோ போடவில்லையா?

Ramesh said...

Nice picture!

சுரேகா.. said...

அவியல்...குவியலாகி..

கலக்கிட்டீங்க!
அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள்!
மோகனப்பிரியாவுக்கும்!

வானம் நல்லா இருக்கு!
திட்டுவாங்கறது சகஜம்தானே ! :)

கவிதை சூப்பரப்பு!

Kumky said...

ஒரு தொலை நோக்கு பார்வையோடதான் இருக்கீங்கன்னு நல்லா தெர்து பாஸ்.

புதுகை.அப்துல்லா said...

ஒரு காலத்தில் அதில் தெரியும் உருவங்களை கண்டுபிடிக்க போட்டி போடுவோம்
//

பாபு இப்போ கூட பாருங்க அதுல ஆஸ்திரேலியா வரைபடம் இருக்கு :)

Anonymous said...

@ ரமேஷ்

இது அந்தப் படம் இல்லை. அந்தப் படம் மொபைல்ல எடுத்தது. நாளைக்கு அப்லோட் பண்றேன்!

Mahesh said...

அவியல் தலைப்பே நல்லா இருந்துச்சு. அவியல்ங்கற வார்த்தைய படிக்கும்போதே ஒரு சுவை. குவியல்னா அது வேணும்னாலும் குவியலா இருக்கலாம்கறது என்னோட எண்ணம்.

அப்பறம், நானும் மேகங்களோட ரசிகன். அத நெறய பேரு கிண்டல் பண்ணியிருக்காங்க. இது மாதிரி பல விஷயங்கள வெளிய சொல்றதில்ல. சில ரசனைகள் எனக்கே எனக்கு மட்டும் தெரிந்தவை. இந்த ஃபோட்டோ ரொம்ப நல்லா இருக்கு.

Mahesh said...

குவியல்னா 'எது' வேணும்னாலும் - அப்பிடின்னு படிக்கவும்.

கூடுதுறை said...

எப்ப இருந்து அவியல் குவியல் ஆச்சு?

செந் தழல் ரவி பொரியல் போட்டதில் இருந்தா?

ஜெகதீசன் said...

வாழ்த்துக்கள் மோகனப்ரியா!

Anonymous said...

கவிதை நல்லா இருக்கு பரிசல்.

ஆனா அவியல்ங்கிற பேர்ல எழுதுங்க. சுவையா இருக்கும். குவியலா எது வேனா இருக்கலாம்.

கோவி.கண்ணன் said...

கரண்டு போனாலும் மிரண்டு போகாமல் ஜெனரேட்டர் வச்சு பதிவு போடும் பரிசலார் வாழ்க !

பரிசல்காரன் said...

கோவி.கண்ணன் said...

கரண்டு போனாலும் மிரண்டு போகாமல் ஜெனரேட்டர் வச்சு பதிவு போடும் பரிசலார் வாழ்க //

கவுஜ ஜூப்பரு!!

RATHNESH said...

//ஏதாவது மூட் அவுட்ன்னா நான் அண்ணாந்து வானத்தைப் பார்த்து ரசிச்சுகிட்டிருப்பேன். மறுபடி உற்சாகம் ரீ சார்ஜ் ஆகிடும்//

நிஜம். அனுபவித்தவர்களுக்குப் புரியும்.

நல்ல தொகுப்பு.

narsim said...

குவியல் நல்ல உயரம்.. அதன் உச்சியில் இந்த வாரம் புதுகை அப்துல்லா..

அனுபவங்களை பகிர்தல் ஒரு கலை.. அதுல நீங்க தல..(கவுஜ இல்லப்பா..)

நர்சிம்

மங்களூர் சிவா said...

நாங்கல்லாம் லாப்டாப் வெச்சிகினு தரைல உக்காருறோம் நீங்க சிஸ்டம்லயா உக்காரறீங்க!?!?

ஹிஹி

இதுக்கு அடி விழாதில்ல?????

கார்க்கிபவா said...

தயவு செய்து அவியல்னே எழுதுங்க சகா.. வருத்தமா இருக்கு..

Thamira said...

கவிதையையும் ரசித்தேன்.!

ஜோசப் பால்ராஜ் said...

மோகனப்பிரியாவின் சாதனைக்கு காரணமான நல்ல உள்ளங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். என்னமோ நாமலே தங்கம் வாங்குனமாதிரி இருக்குண்ணே.

வால்பையன் said...

மோகனப்பிரியாவுக்கு வாழ்த்துக்கள்
அதற்கு உதவிய அப்துல்லாவுக்கு நன்றிகள்

வால்பையன் said...

//இப்போதான் நமீதா அவங்களுக்கு ஏத்த பேருள்ள ஒரு படத்துல நடிச்சிருக்காங்க! பிரம்மாண்டம்!//

மேட்டர் சப்பையா போச்சு
ஒரு நமீதா படம் இருந்தால் தான் இதற்கு மெருகே

வால்பையன் said...

//சிஸ்டம் பக்கமே வர்ல. அதுவும் ஒரு மாதிரி நல்லாத்தான் இருந்துச்சு. //

அத நாங்க சொல்லணும்

வால்பையன் said...

//இன்னைக்கு ஆஸ்திரேலியாகூட டெஸ்ட் க்ரிக்கெட் ஆரம்பிக்குது.//

அப்படியா

வால்பையன் said...

//பதிவு எவ்வளவு மொககையோ, அதுக்கு நேர் மாறா நல்லா இருந்துச்சுப்பா’//

அதாவது பயங்கர மொக்கையாவா

வால்பையன் said...

//மூட் அவுட்ன்னா நான் அண்ணாந்து வானத்தைப் பார்த்து ரசிச்சுகிட்டிருப்பேன். //

வீட்டுக்குள்ள இருக்கும் போது

வால்பையன் said...

//மறுபடி உற்சாகம் ரீ சார்ஜ் ஆகிடும்!//

பின்னாடி ஏதாவது ப்ளக்கு

வால்பையன் said...

//வானத்தில் மேகங்கள் கலைவதை வேடிக்கை பார்த்திருக்கிறீர்களா?//

ரசித்திருக்கிறீர்களா என்று தான் இருக்க வேண்டும்

வால்பையன் said...

சில நேரங்களில் அதில் உருவங்களையும் பார்க்கலாம்

வால்பையன் said...

நாம் என்ன நினைக்கிறோமோ அப்படியே தோன்றுவது போல் இருக்கும்

வால்பையன் said...

இத தான் பாரதி அன்றே காட்சி பிழை என்று சொன்னானோ

வால்பையன் said...

கவிதை பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்லை
ஒருவேளை நீங்கள் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கலாம்

வால்பையன் said...

//அனுபவங்களை பகிர்தல் ஒரு கலை.. அதுல நீங்க தல.//

மறுக்கா கூவுவுவுவுவு

Ramesh said...

Who is this ASHU?

வெண்பூ said...

அருமையான குவியல் பரிசல். ஏன் அவியல் அப்படின்ற பேரே கரெக்டா பொருத்தமாத்தானே இருக்கு?

மோஹனப்பிரியாவுக்கும் அப்துல்லாவுக்கும் இங்க ஒருக்கா வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்.. பாத்துகோங்க.. நானும் அப்துல்லாவுக்கு ப்ரெண்டுதான் (அப்படின்னு பெருமையா கத்திக்கிறேன்)

***

நமிதா படம் போடாத பரிசலை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்.

***

கிரிக்கெட், சேம் பிளட். இன்னிக்கு காலையில சேனல் மாத்தும்போது நேரடி ஒளிபரப்பு பாத்துதான் தெரிஞ்சிகிட்டேன். கிரிக்கெட் மேல பப்ளிக்கு இன்ட்ரெஸ்ட் போச்சா? இல்ல நமக்கு வயசாயிடுச்சா??