முன்னரே சொல்லிவிடுகிறேன். இது செக்ஸைப் பற்றிய பதிவு அல்ல!
உங்களுக்கு ஞாபகமறதி வந்ததுண்டா? என்னது ஞாபகமில்லையா.. அதுசரி!
எனக்கு ஞாபகமறதி கொஞ்சம் அதிகம். எனக்கு ஞாபகமறதி இருக்கிறது என்பது உட்பட பல விஷயங்களை நான் மறந்துவிடுகிறேன்.
இதுநாள் வரை வீட்டைப் பூட்டிவிட்டு மறுபடி நான் திறக்காத நாட்கள் மிகக் குறைவு! ஹெல்மெட், செல்ஃபோன், நோட், பர்ஸ் என்று எதையாவது எடுக்க மறந்து மறுபடி திறந்து எடுப்பேன். அப்படி திறக்காமல் இருந்தால், என்ன மறந்தேன் என்றே மறந்ததால்தான் இருக்குமே தவிர, எதையும் மறக்காததால் இருக்காது.
அதேபோல என்னை நானே மிகக் கேவலமானவனாக உணர்வது, என் பழைய ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸையோ, அல்லது முன்பு என்னோடு பணிபுரிந்தவர்களையோ பார்த்து, அவர்கள் அறிமுகப் படுத்திக் கொண்டபிறகும்கூட அடையாளம் காண முடியாமல் தவிக்கும்போதுதான். ஆனால் ஒரு நல்ல விஷயம், எந்த சினிமாத்தனமான சமாளிப்பும் இல்லாமல் ‘ஸாரிங்க. ஞாபகம் வெச்சுக்கற விஷயத்துல நான் ரொம்ப மோசம்க. தப்பா நெனைச்சுக்காதீங்க. நீங்க யாருன்னா சொன்னா தேவலை’ என்று ஸ்ட்ரெய்ட்டாகக் கேட்டுவிடுவது என் வழக்கம். அதையும், இதையும் சொல்லி அசடு வழிவதை விட, இது பெட்டர் என்பதை பலமுறை உணர்ந்திருக்கிறேன்!
ஆனால் சினிமாப் பாடல் எதையாவது கேட்டு ‘அட.. இதை எங்கோ கேட்டிருக்கிறேனே..’ என்று மனது எண்ண ஆரம்பித்துவிட்டால் மனதைப் போட்டு கிளறி எடுத்து அந்தப் பாடலை கொண்டுவந்து விட்டுதான் மறுவேலை! ஏனென்று யோசித்தால் பாடல்கள்மீது எனக்கிருக்கும் ஆர்வமோ என்று தோன்றுகிறது!
நம் மூளையின் செல்கள் தேவையானவற்றை மட்டுமே ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும். தேவையற்றவை சமீபத்தில் நடந்தெதென்றாலும் ஞாபகத்தில் இருக்காது. உதாரணத்துக்கு ஐந்துவருடங்களுக்கு முன்பு உங்கள் காதலியுடன் எந்தப் படத்துக்குப் போனீர்கள் என்ற ஞாபகம் இருக்கும். ஆனால் ‘போன வாரம் சனிக்கிழமை காலை என்ன சாப்பிட்டாய்?’ என்றால் ஞாபகம் இருக்காது.
சுஜாதா ஒருமுறை ஏதோ ஒரு கல்லூரியில் ஞாபகமறதியைப் பற்றி பேசப் போனார். மேலே சொன்ன உதாரணத்தை வைத்துக் கொண்டு, ஞாபகமறதியைப் பற்றி விளக்கலாம் என்று நினைத்த சுஜாதா, பேச்சின் போது நடுவே மேடையில் இருந்து முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு மாணவியைப் பார்த்து “போன வாரம் திங்கட்கிழமை காலைல என்ன சாப்பிட்ட?” என்று கேட்டார்.
“தயிர்சாதம்”
சுதாரித்த சுஜாதா, “சரி... அதுக்கும் போனவாரம் செவ்வாய்க் கிழமை?”
“தயிர்சாதம்தான். எங்க வீட்ல 15 வருஷமா காலைல தயிர்சாதம்தான்” என்றாளாம். மேற்கொண்டு பேச்சை எப்படிக் கொண்டுசெல்வது என்று திணறினாராம் அவர்!
ஞாபகமறதியைப் போக்க ஒரு நல்ல ப்ராக்டீஸ் சொல்றேன். அதாவது காலைல எழுந்ததுமே இன்னைக்கு ஐந்து விஷயங்களை நம்ம ஞாபகத்துக்கு கொண்டு வரணும்ன்னு ப்ளான் பண்ணுங்க. (எதைப் பண்ணிணாலும் ப்ளான் பண்ணிப் பண்ணணும்!) உதாரணத்துக்கு,
1. காலைல 9.30 மணிக்கு பெங்களூர் மாமாவை நினைக்கணும்.
2. 11 மணிக்கு ஆஃபீஸ்ல டெஸ்பாட்ச்ல இருக்கற மாலினியைப் பார்த்து சிரிச்சுட்டு வரணும்.
3. 1 மணிக்கு சாப்பிடப் போறப்ப மகேஷைப் பார்த்து சாப்பிட்டாச்சா’ன்னு கேக்கணும்.
4. நாலுமணிக்கு டீ சாப்பிடப் போறப்ப டீ மாஸ்டர்கிட்ட ‘சௌக்கியமா’ன்னு ஒரு சிரிப்பு சிரிக்கணும்.
5. ஆறரை மணிக்கு எதிர்வீட்டு ஃபிகருக்கு ஃபோன் பண்ணி ‘ஐயையோ... தப்பா உங்களுக்கு கூப்பிட்டுட்டேன். சாரி’ன்னு சொல்லணும்.
முதல்ல கொஞ்ச நாளைக்கு இந்த மாதிரி ஐந்து விஷயங்களை காலைல டைரில எழுதிட்டு, நைட் போய் எதை எதை மறந்தீங்கன்னு பாருங்க. இப்படியே கொஞ்ச நாள் செஞ்ச பின்னாடி, டைரில எழுதாமயே ஞாபகத்துல வெச்சுகிட்டே இதைப் பின்பற்றலாம். ஒரு முக்கியமான விஷயம் டெய்லி ஒரே மேட்டர்களை எழுதிடாதீங்க. தினமும் எதிர்வீட்டு ஃபிகர்கிட்ட ராங்நம்பர் சொன்னா என்ன ஆகும்ன்னு தெரியும்ல?
‘இதை டைரில எழுதணும், இந்தமாதிரி ப்ராக்டீஸ் பண்ணணும்-ங்கறதெல்லாம் மறந்துடுச்சுன்னா?’-ன்னு சிலர் நெனைக்கக்கூடும். அவங்க மறக்காம வீட்ல சொல்லி, மறக்காம டாக்டரைப் பார்க்கறது ரொம்ப முக்கியம்!
ஏறக்குறைய நான் டாக்டரைப் பாக்கற ஸ்டேஜுலதான் இருக்கேன். ஹீட்டர் ரிப்பேர் ஆகி ஒரு வாரமாச்சு, எலக்ட்ரீஷியன்கிட்ட சொல்ல மறந்துடறேன், ஒருத்தன் பணம் தரணும், அது சம்பந்தமான ரசீது வேறொரு நண்பர்கிட்ட இருக்கு. மூணுமாசமா போய் வாங்கணும்ன்னு நெனைக்கறேன். நேரம் இல்லை. நேரம் இருக்கறப்ப இந்த விஷயம் மறந்துடுது. ஒரே ஒரு நல்ல விஷயம், நண்பர்கள் கிட்ட எதுனா சங்கடம் வந்ததுன்னா அதையும் மறந்துடறதுதான்!
முதல்ல இருந்ததை விட ஞாபக மறதி அதிகமானதுக்கு செல்ஃபோன் ரிமைண்டர்களும் ஒரு காரணம். எதையுமே மூளைக்குக் கொண்டு போய் ஸ்டோர் பண்ணாம், செல்ஃபோன் ரிமைண்டர்ல வெச்சிகிட்டு வேலையை முடிச்சுடறோம். நான் இந்த விஷயத்துல ரொம்ப மோசம். ரிமைண்டர் இல்லாம எதுவுமே ஞாபகத்துல இருக்கறதில்லை. கதைக்கோ, பதிவுக்கோ ஒரு நல்ல கரு கிடைச்சா எப்பவுமே பாக்கெட்ல ஒரு நோட்டை வெச்சுகிட்டு எழுதிக்கறது வழக்கமாப் போச்சு எனக்கு!
இப்படித்தான் ஒரு தடவை என்னாச்சுன்னா....
(ஐயா.. சாமீ.. கீழ இருக்கற தமிழிஷ் டூல்பார்ல எனக்கு ஓட்டுப் போடுங்க!)
47 comments:
ம்ம்ம்... உங்க பதிவை பார்த்ததும் உடனே அதை பத்தி பதில் எழுதலாம்னு நினைச்சேன்.. ஆனா மறந்திட்டேன். ஞாபகம் வந்ததும் எழுதிர்றேன்..
அட.. நான் தான் பர்ஸ்டா...
முதல் இரண்டு பின்னூட்டம் போட்ட கேபிள் சங்கருக்கு கடுமையான கண்டனம்.
நான் இன்றைய பதிவுக்கு மீ த பர்ஸ்ட் போட வேண்டும் என்று 24 மணிநேரமாக நினைத்துக் கொண்டிருந்தேன், ஜஸ்ட் மிஸ்டு
****
அடுத்து ஜெகதீசன் போடப் போகும் பின்னூட்டத்தை முழுமையாக வழி மொழிகிறேன்
கோவி.கண்ணனை வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்!!!
Attendance given. I will not forget!
//"ஞாபகமறதி - இது செக்ஸைப் பற்றிய பதிவு அல்ல!"
//
இது எதுக்கு? தலைப்ப வச்சிட்டு ஒரு வேளை மறந்துட்டிங்களோ?
அம்பி கலக்குறேள் !!!
நட்புக்களை பேரு முகம் மறப்பது, நானும் நானும்..அதே மாதிரி பாடல்களை மட்டும் கண்டுபிடிப்பது நானும் நானும்.. :)
அதாவது நமக்கு பிடிச்ச விசயங்களை ஞாபகம் வச்சிப்போம்ன்னா அப்ப அதிக இண்டரஸ்ட் இல்லாத் விசயமோ நட்பு.. அய்யோ பாவம் அவங்க :)
இந்த பதிவு தொடருதா ?
பதிவுல என்ன படிச்சன்னு மறந்துருச்சு. மீண்டும் படிச்சுட்டு பின்னூட்டம் போடலாம்னா, பதிவப் படிச்சதும் பின்னூட்டம் போட மறந்துருச்சுன்னா?
தய்வு செய்து போன் பண்ணி ஞாபகப் ப்டுத்துங்க.
எனக்குப் பேப்பர்ல எழுதி வக்கிற பழக்கம் இருக்கு. பேப்பரத்தான் எங்கியாவது மறந்து வச்சுட்டுத் தேடுவேன்.
நன்றி சங்கர் ஜி!
@ கோவி.கண்ணன் & ஜெகதீசன்
சிங்கப்பூர்காரங்க எல்லாம் ஒரு மார்க்கமாத்தான் திரியறீங்க!
நாளைக்கு சின்ன ரஜினியைப் பார்க்கப் போறேன். அவருகிட்ட ஒரு வெடிகுண்டு பார்சல் குடுத்தாதான் சரிவரும்!
தேங்க்ஸ் ram!
@ கார்க்கி
அது வேற மேட்டர்!
@ ரவி
சந்தோசம்ங்க!
@ முத்துலெட்சுமி
//இந்த பதிவு தொடருதா ?//
என்ன தங்கச்சி, இவ்ளோ அப்பாவியா இருக்கீங்க?
@ வேலன்
//தய்வு செய்து போன் பண்ணி ஞாபகப் ப்டுத்துங்க.//
இப்பதான் ஞாபகம் வருது, போனை மறந்துட்டு வந்துட்டேன்!
நான் எதோ பின்னூட்டம் போட வந்தேன். மறந்துட்டேன். அப்பாலிக்கா ஞாபகம் வந்ததும் வரேன்.
உங்களுக்கு ஞாபக மறதின்னு சொன்னா ஆச்சரியாமாத்தான் இருக்கு. நீங்க, எப்போ நடந்த விஷங்களை எல்லாம் பதிவுல எழுத்திட்டு வர்றீங்களே? ஆனா, இதிலையும் இம்ப்ருவ்மேன்ட் வேணும்ன்னு எதிர்பார்க்கிறீங்க. குட். :-)
அண்ணாச்சி நான் சொன்னத மறந்துடாதீங்கோ...
சூப்பர்.. சூப்பர்...
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு ஞாபகசக்தி கூடாதுங்க. பொறாமையா இருக்கு.
பதிவு நல்லா இருக்கு, ஆனா ஓட்டு போட மறந்துட்டேன்!!!
பரிசல்,
ஈ.வெ.சா, சிம்பாவோட உணவகத்துல என்னை காத்திருக்க சொன்னது மறந்திருச்சா?
நெம்ப நேரமா காத்திட்டிருக்கோம்ப்பு!
நினைவுத்திறனை வளர்க்க ஒரு எளிய பயிற்சி இருக்கிறது.
அது நீங்கள் ஒவ்வொரு நாளிலும் என்னென்ன செய்தீர்கள் என்பதை அந்த நாளின் முடிவில் ஒரு மீள் நினைவுக்கு-ரீவைண்டிங்-செய்யப் பழகுதல்.
குறித்து வைத்துக் கொண்டு செய்யும் காரியங்களை விட இதில் ஆபத்து குறைவு,எதிர்த்த வீட்டு ஃபிகர் எதாலாவது பின்னும் சாத்தியங்கள் குறைவு !!!!
தொடக்கத்தில் சிறிது சிரமமாக இருக்கலாம்;ஆனால் பழகினால் எளிமையாகி விடும்.
செல்ஃபோன் நினைவூட்டல்களும் நீங்கள் சொன்னபடி ஒரு காரணம்.
கால்குலேட்டர்களின் பயன்பாடு அதிகரித்ததால் மூளையின் எண்திறன் பயன்பாடு குறைந்திருக்கிறது என்பது ஒரு புள்ளிவிவரம்;எங்கே சட்டென்று சொல்ல முயற்சி செய்யுங்கள்,16*15 எவ்வளவு???
அப்பா தப்பிச்சோம்டா சாமி...... (நைட்டு ஒம்பது மனிக்கு மேல ஆல் இந்தியா மேட்டர்.,வேர்ல்டு மேட்டர் அல்லாம் பேச ஆரம்பிச்சா., மப்பில இருந்தாலும் மாடியிலிருந்து எகிறி குதிச்சி எல்லா பயலுவலும் ஓடிடறானுவ.....உனர்ச்சி வசப்பட்டு உங்களுக்கு போன் போட்டுடறேனா....அப்புறம் பேசினதெல்லாம் மறந்துடுது....மறுநா காலையில என்ன பேசினோம்னு குழப்பமாய்டுது...நல்ல வேளை உங்களுக்கு கியாபக மறதி..உஸ்..அப்பாடா பிரச்னை தீர்ந்தது) ஒரு வேளை எதாச்சும் விளையாட்டுக்கு..இப்படி பதிவ போட்டு நோட்டம் பாக்கறிங்களா?
இந்த மாசம் பூரா கோடாரியோட காட்டுக்கு போனவந்தான்..இப்பதான் திரும்பினேன்..(எத்தனை நாளைக்குதான் ஆணி பிடுங்குவது பற்றியே சொல்லிக்கொண்டிருப்பது) o k start the music.
ஞாபக மறதியில் அண்டர்வேர் மட்டும் அணிந்து ஆஃபீஸ் போகாமல் இருந்தால் சரி...
//ஞாபக மறதியில் அண்டர்வேர் மட்டும் அணிந்து ஆஃபீஸ் போகாமல் இருந்தால் சரி...//
ஜட்டியை மறந்து பேண்ட் மட்டும் அணிந்து ஆஃபிஸ் போன அனுபவம் எனக்குண்டு :-(
//முன்னரே சொல்லிவிடுகிறேன். இது செக்ஸைப் பற்றிய பதிவு அல்ல!//
தலைப்பில் கவரும் யுக்தி
//உங்களுக்கு ஞாபகமறதி வந்ததுண்டா? //
என்னையெல்லாம், ஞாபகம் வந்ததுண்டா என்றே கேட்கலாம்
//காலைல 9.30 மணிக்கு பெங்களூர் மாமாவை நினைக்கணும்.//
பெங்களூர்ல எந்த மாமாவும் இல்லைனா
//11 மணிக்கு ஆஃபீஸ்ல டெஸ்பாட்ச்ல இருக்கற மாலினியைப் பார்த்து சிரிச்சுட்டு வரணும்.//
மாலினி மட்டுமல்ல, இருக்குற எல்லா பிகருகளையும் பார்த்து சிரிச்சுட்டு தான் வேலையே பார்க்க ஆரம்பிக்கிறது
//1 மணிக்கு சாப்பிடப் போறப்ப மகேஷைப் பார்த்து சாப்பிட்டாச்சா’ன்னு கேக்கணும்.//
ஏன் அந்த மாலினியையே திரும்பவும் கேக்கக்கூடாது
//நாலுமணிக்கு டீ சாப்பிடப் போறப்ப டீ மாஸ்டர்கிட்ட ‘சௌக்கியமா’ன்னு ஒரு சிரிப்பு சிரிக்கணும்.//
பழைய பாக்கி கேட்டாருனா
//ஆறரை மணிக்கு எதிர்வீட்டு ஃபிகருக்கு ஃபோன் பண்ணி ‘ஐயையோ... தப்பா உங்களுக்கு கூப்பிட்டுட்டேன். சாரி’ன்னு சொல்லணும்.//
ஒரு நாளைக்கு நான்கு முறையாவது செய்யணும், அப்போ தான் அந்த பிகருக்கு நம்மை மறக்காது
//தினமும் எதிர்வீட்டு ஃபிகர்கிட்ட ராங்நம்பர் சொன்னா என்ன ஆகும்ன்னு தெரியும்ல?//
ஆமாமா, அந்த பிகர் நமக்கு செட்டாகும் அபாயம் உள்ளது
//முதல்ல கொஞ்ச நாளைக்கு இந்த மாதிரி ஐந்து விஷயங்களை காலைல டைரில எழுதிட்டு, நைட் போய் எதை எதை மறந்தீங்கன்னு பாருங்க.//
அய்யய்யோ, டைரியை எங்கே வச்சேன்னு மறந்துட்டேனே
Harry Loyrayne's Complete guide to memory mastery - romba nalla book. Landmark il didaikkirathu.
THE BEST BOOK for memory improvement
:-)))...
பரிசல் சத்தியமா இன்னிக்கு, திருப்பூர் பதிவர்கள் சந்திப்ப மறந்துட்டேன். ஞாபகப்படுத்தி வெயிலான் சொன்ன இடத்துக்கு போனா, எந்த உணவகம் என்று மறந்துட்டேன். சரி நேத்து அவர் கூப்ட நம்பர்க்கு போடலாம் நா அந்த நம்பர பதிவு பண்ண மறந்துட்டேன்.
சரி அவங்களாவது என்ன கூபிடுவாங்கனு காத்திருந்தா அவங்களும் மறந்துட்டாங்க போல. இதுக்கு காரணகர்த்தாவாகிய உங்கள என்ன பண்ணலான்னு பதிவு பக்கம் வந்தா...
பதிவ படுசிட்டேன்... இதுக்கு மேல என்ன சொல்ல.... யோசிச்சு மறுபடி வருகிறேன்...
பிஸி.. முடிஞ்சு திரும்பி வந்துட்டோம்ல..
இந்த விஷயத்தில அனேகமா உங்களுக்கு அண்ணேனாக (அல்லது பெரிப்பாவாக)த்தான் இருப்பேன்னு நினைக்கிறேன். அப்பிடீனு ஒண்ணு இருக்கப்போயிதானே நானெல்லாம் குடும்பம்னு ஒண்ணை நடத்திக்கினுருக்கேன்.. என்ன சொல்றீங்க.?
சரி, சரி.. இந்த பிரச்சினைல எங்கிட்ட வாங்கின 5000 கைமாத்தை மறந்துடாதீங்க..
//சிம்பா said...
பரிசல் சத்தியமா இன்னிக்கு, திருப்பூர் பதிவர்கள் சந்திப்ப மறந்துட்டேன். ஞாபகப்படுத்தி வெயிலான் சொன்ன இடத்துக்கு போனா, எந்த உணவகம் என்று மறந்துட்டேன். சரி நேத்து அவர் கூப்ட நம்பர்க்கு போடலாம் நா அந்த நம்பர பதிவு பண்ண மறந்துட்டேன்.
சரி அவங்களாவது என்ன கூபிடுவாங்கனு காத்திருந்தா அவங்களும் மறந்துட்டாங்க போல. இதுக்கு காரணகர்த்தாவாகிய உங்கள என்ன பண்ணலான்னு பதிவு பக்கம் வந்தா...
பதிவ படுசிட்டேன்... இதுக்கு மேல என்ன சொல்ல.... யோசிச்சு மறுபடி வருகிறேன்..//
ஏன்யா.. தொடர்ந்து மூணு மணிநேரம் நாட் ரீச்சபிளா இருந்தா என்ன பண்ணித் தொலைக்கறது? இதுல வியாக்யானம் வேற...
//லக்கிலுக் said...
ஜட்டியை மறந்து பேண்ட் மட்டும் அணிந்து ஆஃபிஸ் போன அனுபவம் எனக்குண்டு :-( //
யோவ்..அது ஞாபக மறதி இல்ல...
வேணும்னே பண்ற குசும்பு...
பரிசல் உங்க பதிவுகளுக்கு பின்னூட்ம் போடக்கூட முடியறதில்லை எப்படிப்பா எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள்...
எனக்கும் இருக்கிறது ஞாபக மறதி...
பதிவு ரசனையோடு...
\\
‘ஸாரிங்க. ஞாபகம் வெச்சுக்கற விஷயத்துல நான் ரொம்ப மோசம்க. தப்பா நெனைச்சுக்காதீங்க. நீங்க யாருன்னா சொன்னா தேவலை’ என்று ஸ்ட்ரெய்ட்டாகக் கேட்டுவிடுவது என் வழக்கம்.
\\
இதுதான் நல்லது...
நல்லா இருக்கு :-))
அது ஏன் ஞாபகமறதி? மறதின்னாலே ஞாபகம் இல்லைன்னுதானே அர்த்தம்?
இதுக்கு குசும்பன் எழுதப்போற எதிர்-பதிவுக்கு மறக்க்காம பின்னூட்டம் போடனம்னு இங்க ஞாபகம் வச்சிக்கிறேன். :-))
ப்படித்தான் ஒரு தடவை என்னாச்சுன்னா
என்னாச்சு???
ஞாபக மறதி!!!! இதால எத்தனை பேரிடம் முக்கியமாக வீட்டில் + ஆபிஸில்.
இத்தனை மணிக்கு இந்த வேலை செய்யனுமினு இருந்தால் ஏதோ மறந்து போயிரும். இதுக்கு என்ன செய்யனும்?
//11 மணிக்கு ஆஃபீஸ்ல டெஸ்பாட்ச்ல இருக்கற மாலினியைப் பார்த்து சிரிச்சுட்டு வரணும்//
ஏனுங்ணா, மாலினி சேர நாடுங்களா.
4. நாலுமணிக்கு டீ சாப்பிடப் போறப்ப டீ மாஸ்டர்கிட்ட ‘சௌக்கியமா’ன்னு ஒரு சிரிப்பு சிரிக்கணும்.
எந்தக்கடையிலிங்க .,,
5. ஆறரை மணிக்கு எதிர்வீட்டு ஃபிகருக்கு ஃபோன் பண்ணி ‘ஐயையோ... தப்பா உங்களுக்கு கூப்பிட்டுட்டேன். சாரி’ன்னு சொல்லணும்.
அப்ப வாலிபாளையத்துலே தெருவை சொன்னீங்கன்னா, பிகர் யாருன்னு தெரிஞ்சிரும்.
நீங்க சொன்னது போல செல்போன், அதுக்கு முன்னாடி வந்த டிஜிட்டல் டைரி இதெல்லாம் மனுச மூளைய உபயோகிக்கிற வேலையவே குறைச்சுடுச்சு. நான் கல்லூரிப் படிக்கிற காலத்துல குறைஞ்சது ஒரு 100 தொலைபேசி எண்கள நினைவுல வைச்சிருப்பேன். அதே போல ஒருத்தவங்க பிறந்த நாள கேட்ட சரியா ஞாபகம் வைச்சு வாழ்த்துவேன். பிறந்த நாள்கள் இன்னும் நினைவுல இருக்கு ஆனா தொலைபேசி எண்கள்ல, சில சமயம் என்னோட செல் எண்ணே தெரியாம அதையும் செல்லுல பார்த்து சொல்லிகிட்டு இருக்கேன். தேவையில்லாத விசயங்களக் கூட மறக்க முடியாம திண்டாடிகிட்டு இருக்கதுக்கு என்ன செய்யிறது? ஞாபக சக்தியை வளர்க பதிவு போட்டிங்க, அதே மாதிரி தேவையில்லாத நினைவுகளை அகற்ற வழி சொல்லி ஒரு பதிவு போடுங்க.
அப்பறம் 2 மாசத்துக்கு முன்னாடி வாங்குன அந்த ஒரு லட்ச ரூபாயை என் இந்திய வங்கிக்கணக்குல மறக்காம டெபாஸிட் செஞ்சுருங்க. (இதுக்கு வேணும்ணா ரிமைண்டர் போட்டு வைச்சுக்கங்க).
Post a Comment