![](http://2.bp.blogspot.com/_3BA7KTgeENE/SOcUnHXYc7I/AAAAAAAAAXs/Iw_tYYaR1sw/s400/art_modern_art.-merello._transparent_portrait.jpg)
நான் நண்பர்களைப் புண்படுத்த விரும்பதவன். லேசான மனங்கொண்டவன், உணர்ச்சிவசமே உருவானவன் என்பதெல்லாம் தாண்டி எனக்குள்ளும் ஒருத்தன் இருக்கிறான். அவன் அகங்காரன்... திமிர் பிடித்தவன். கர்வி.
பாராட்டுக் கிடைக்கும்போதெல்லாம் ‘ஐய... என்னங்க.. எனக்கு இந்தப் பாராட்டெல்லாம் அதிகம்க’ என்று குழையும்போது, எனக்குள்ளிருக்கும் அவன் ‘டேய்... இதெல்லாம் எனக்கு ஜூஜூபி. இன்னும் நான் எங்கேயோ போகணும். தலையெழுத்து இப்போதான் இங்க வந்திருக்கேன்’ என்று நினைத்துத் தொலைப்பான். நான் அடங்கு அடங்கு என்று மிரட்டினாலும் அடங்கமாட்டான்.
‘எனக்கு உதவி தேவை. உன் ராஜாவை இங்கே வரச் சொல். அவன் இந்த ஊருக்குதான் மகாராஜா. நான் இந்த நாட்டின் தேசியகவி’ என்று இறுமாப்போடு பேசிய, ‘பல வேடிக்கை மனிதரைப் போலே வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்று கேட்ட பாரதிதான் இவன் ஆதர்சம். உணவுக்கு வழியில்லை, இரண்டு பெண் குழந்தைகள் என துன்பப்பட்டபோதும் அவன் புத்தகத்துக்கு செய்த செலவில் கொஞ்சமும் சொத்து சேர்க்கச் செய்யவில்லை. நானும்.
‘நிலவைக் குறிவைத்துக் குதி. தவறினாலும் நட்சத்திரம் உன் வீடாகட்டும்’ என்ற மனப்பான்மையே இவனுக்கு அதிகம். இன்னும் இவன் எம்பிக் கொண்டேயிருக்கிறான். குதித்தபாடில்லை.
இவன் எழுதியதில் சிறந்ததும், சிறப்பாய் இல்லாததும் எனப் பலவற்றை நீங்கள் படித்திருக்கக் கூடும். ஆரம்பித்து, எழுதவே முடியாத ஒரு சில இவனிடம் உண்டு. அதை எழுதத் தகுதியில்லையெனினும் எழுதிக்காட்டுவேன் என்ற இவன் இறுமாப்பு ஜெயிக்கும் என்றும், ஜெயிக்கலாமா என்றும் ஒரு பட்டிமன்றம் இவனுக்குள்ளே நடந்துகொண்டே இருக்கும்.
சாரு, பைத்தியக்காரன், ஜமாலன், அய்யனார் போன்றவர்களை மரியாதையோடு பார்த்துக் கொண்டிருக்கிறான். யெஸ்.பாலபாரதி, லக்கிலுக் போன்றவர்களின் நட்பு கிடைத்ததில் அந்தக் கர்வி இன்னும் ஒருபடி மேலே போய்விட்டான். அவன் அடங்கப் போவதில்லை. அவனுக்கு மிகப் பிடித்த ஒரு பிரபலமான டாக்டர். ருத்ரன் வலைப்பக்கம் ஆரம்பித்ததைக் குடித்துக் கொண்டாடும் அளவுக்கு சந்தோஷப் பட்டுக் கொண்டிருக்கிறான். அவர் தமிழில் எழுதாததற்கு இன்னும் ரெண்டு ரவுண்டு விடலாமா என்ற சோகத்தில் இருக்கிறான்.
கணிணியறிவு கொஞ்சமும் அற்றவன். ஆனால் காட்டிக் கொள்ளாமலே அதில் கரை கடந்து கொண்டிருப்பவன். தெரியாத சிலவற்றை தெரியாதென்று சொல்லி, கேவலப்பட்டுக் கொண்டதால் தெரிந்தது போல நடிப்பது சிறந்ததோ என்ற தப்பர்த்தம் எடுத்துக் கொண்டவன்.
படிப்பதில் ஆர்வம் அதிகம். ஆனால் படிப்பதை எழுத்தில் கொண்டுவரச் சிரமப்படுகிறான். இவன் நினைத்திருக்கும் இடம் இதற்கு மேல். கிடைத்ததைக் கொண்டாடிக் கொண்டிராமல், இன்னும் வேண்டுமென்ற குழந்தையாய் அடங்காது திரிபவன்.
யூமா. வாசுகியின் கவிதையை ரசிப்பவன். ராஜேஷ்குமாரின் க்ரைமை சிலாகிப்பவன். அன்பே சிவத்தில் அழுதவன். சிவாஜியில் மொட்டை ரஜினி வந்தபோது தியேட்டரில் கைதட்டி அமர்க்களம் செய்தவன்.
எது குறித்தும் தீர்க்கமான சிந்தனையற்றவன். ஆனால் எது குறித்தும் தீர்க்கமான சிந்தனையற்றவனாய் இருப்பதைத் தெரிந்திருப்பதால் பெருமை கொள்கிறான். பெண்களை மதிப்பவன். அதே அளவு பெண்களை ரசிப்பவன்.
50000 ஹிட்ஸ் வந்ததற்கு பாராட்டியபோதுதான் இவன் 50000 ஹிட்ஸ் வந்ததைக் கவனித்தான். ‘சந்தோஷம்க... பாராட்டினதுக்கு’ என்று வெளியில் சொன்னாலும், “இப்போதான் 50000ஆ? ச்சீ!” என்ற உள்ளிருக்கும் கர்வியின் கிண்டலுக்கு தலைகுனிந்தவன்.
இவன் கெட்ட கேட்டுக்கு இன்று 150ஐத் தொட்டுவிட்டான். ஆனால் ஒரு சாதாரணப் பதிவரின் ஒரு பதிவின் தரம் கூட இவன் 150 பதிவுகளில் இருக்கிறதா என்ற விமர்சனங்களை காலால் உதைக்கிறான் அந்த கர்வி!
இன்றைக்கு இங்கே இருந்தாலும், மாலை ஆறு மணிக்கு இங்கே இருக்கவேண்டுமென்று நினைக்கிறான். முடியாது. அதற்காக வருந்திக் கொண்டிருக்கிறான். நர்சிம், பாலா, முரளி கண்ணன், புரூனோ போன்ற மதிப்புமிக்க பலரை முதலில் சந்திக்கும் வாய்ப்பை இழந்து நின்றாலும், இந்தக் கணத்தில் வாழ்பவனாதலால் அதைக் குறித்துச் சிந்தியாமல் இங்கிருந்தே வாழ்த்திக் கொண்டிருக்கிறான்.
குறை சொல்லியும், பாராட்டியும், கைகுலுக்கியும், புன்னகைத்தும், பொறாமைப்பட்டும், திட்டியும் இன்னும் பலவகையிலும் இவனை மேம்படுத்தும் உங்களுக்கு என்ன செய்து நன்றி சொல்லவென்று இவனுக்குத் தெரியவில்லை. இன்னும் எழுதிக் கொல்வதிலிருந்து இவன் மனம் விலகவில்லை.
பல அரசியல்களைப் பார்த்து பயந்து நடுங்கி, ஒடுங்கிப் போயிருக்கிறான். நாளை உங்களில் யாரோடும் இவனுக்கு நட்புமுறிவு வந்துவிடுமோவென அஞ்சிக் கொண்டிருக்கிறான். அப்படி ஏதேனும் நிகழின், இவனால் அதைத் தாங்கமுடியுமாவெனத் தெரியாதிவனுக்கு. அப்போதும் இவன் இப்படி கர்வத்தோடும் ,திமிரோடும் அலையக்கூடும். ஆனால் நீங்கள் இப்போது போலவே அவனோடு இருங்கள். அப்போதும் அவனைத் தலையில் தட்டி அடக்குங்கள். அது போதும் இவனுக்கு.
இன்னும் பல உயரங்களை இவன் தொடக்கூடும். அப்போதும் இவன் உங்களோடுதான் இருப்பான்.
ஏனென்றால் இவன் திமிரானவன். ‘பார்.. இந்த எழுத்து எனக்குப் பெற்றுத் தந்த நண்பர்களைப் பார்’ எனும் திமிர் அது.
அது அடங்காது. அடங்கவும் கூடாது.
53 comments:
me the first, congrats
beautiful write-up!
Miga nalla vasippu anupavam tholar
(from famour bar in chennai )
best regards
lucklookonline.com
athishaonline.com
நல்ல பதிவு..
நல்ல பதிவர்..
நல்ல சொல்லாடல்..
நர்சிம்
நன்றி அனுஜன்யா. பல இடங்களில் நீங்கள் என்னை ஊக்கப்படுத்தியதும், நான் இந்த தூரம் தொடக் காரணம்.
@ சுந்தர்.
அந்தப் பெயர்களில் நீங்களும் அடக்கம். குறிப்பிடமறந்ததற்கு மன்னிக்கவும்!
@ அதிஷா & லக்கி
சனி நீராடலா? நன்றி தோழர்!
@ நர்சிம்
நன்றி!
அப்பாடா,
பரிசல் பெரிய ஸ்டார் பதிவர். அவருக்கு 150 வது பதிவு. திருவிழாவாக கூட்டம் கூடும். நாமளும் பலூன் விக்கலாம். நிற்க.
கே.கே., உண்மையிலேயே மகிழ்வுரவேண்டிய தருணம். நீ மட்டுமல்ல. உன் வாசகர்கள் ஆகிய நாங்கள் அனைவரும், மகிழ்ச்சியுடன் கொண்டாடவேண்டிய தருணம். பதிவின் தரத்தைப் பற்றி எங்கள் அனைவருக்கும் தெரியும். வாசிப்பின்பம் என்பது பெரிய எழுத்தாளர்களுக்கே எப்போதும் கையில் சிக்காத வித்தை. உனக்கு அது இலகுவில் வருகிறது. ஒன்றுமே இல்லாமல் தினமும் ஏதாவது எழுதிவந்தால், இத்தனை வாசகர்களை நிதமும் சுண்டியிழுத்து கட்டிப்போட முடியாது.
உன் 'திமிர்' எனக்கு ஆச்சரியத்துடன் மிகுந்த மகிழ்வையும் கொடுக்கிறது. நீயும், லக்கியும் இருக்கவேண்டிய இடமே வேறு. இப்போதிலிருந்து, இருநூறாவது பதிவுக்குள் (அதாவது இன்னும் ஐம்பது நாட்களுக்குள்) உன்னுடைய 3-4 கதைகள் பெரிய பத்திரிகைகளில் வருவதை இலட்சியமாகக் கொண்டு செயல் படு. உன்னால் முடியும். அந்தப் பெரிய உலகின் கட்டாயங்கள், பரிமாணங்கள் உனக்கும் புலப்படும். இருக்கும் காலம் சொற்பமே என்றவாறு எண்ணி, இன்னும் பெரிய இலக்குகளை நீ வேகமாக அடையவேண்டும் என்பது எங்கள் அனைவரின் அவா.
Anyway, a fantastic achievement and may you march on ever so splendidly.
மீண்டும் வாழ்த்துக்களுடன்
அனுஜன்யா
மென் மேலும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்,
உங்களுடைய "தந்தை எனக்கெழுதிய கடிதம்" பதிவுதான் நான் முதலில் படித்தது
அன்று முதல் உங்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
மீண்டும் என் வாழ்த்துக்கள்
மிகவும் அருமையாக இருக்கு.
:)
வாழ்த்துக்கள்!!
பலரின் பலப்பல கேள்விகளுக்கு விடையாய் இந்த பதிவு!
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் க்ருஷ்ணா!
- உன் வளர்ச்சியை மிக அருகிருந்து பார்த்து பெருமைப்படும் நண்பன்.
வாழ்த்துக்கள்!!!
அது திமிரா?தைரிய லட்சுமியா?
:-)))...
150ற்கு வாழ்த்துக்கள்!!!!!!!!!!
அதை அழகாக விவரித்த விதமும் சொல்லிய விதமும் அருமை!!!!
டைட்டிலும் நல்லாருக்கு!!!
பரிசல்காரன் நன்றாக எழுதுகிறீர்கள்! வெரி இண்டரெஸ்டிங். தமிழில் ஒருபுதிய டைமன்சன் எனக்கு...
150 வாழ்த்துக்கள்!
50000 வாழ்த்துக்கள்!
ஒரு மில்லியன் ஹிட்ஸ் வர வாழ்த்துக்கள்..
கீப் இட் அப்!
அப்புறம் என்னக்கு தெரியாமல், நான் உங்கள் ஸ்டைல் பொல்லொவ் பண்ணலாம்... கண்டுக்காதீங்க!
:) 150 க்கு வாழ்த்துக்கள்..
//இப்போதிலிருந்து, இருநூறாவது பதிவுக்குள் (அதாவது இன்னும் ஐம்பது நாட்களுக்குள்) உன்னுடைய 3-4 கதைகள் பெரிய பத்திரிகைகளில் வருவதை இலட்சியமாகக் கொண்டு செயல் படு.//
ஏற்கனவே புள்ளி வைத்துவிட்டேன். கோலம் உருவாகிக் கொண்டிருக்கிறது. விரைவிலேயே ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் அனுஜன்யா.
வாழ்த்துக்கள் பரிசல்.
:))
Kathir.
வாழ்த்துக்கள்... பரிசல்
உங்கள் எழுத்து திறமை அபாரம்.50000 ஹிட் என்ன அடுத்த வருடம் இந்த தேதியில் 5லட்சத்தை தாண்டியிருப்பீர்கள்...
கண்டிப்பாக தொடர்ந்து எழுதுங்கள்
நல்ல எழுத்து நடை !
வாழ்த்துக்கள்...!
congrats parisal.. (sorry for english)
அருமையான பதிவு சகோதரா. வாசிக்க ஆரம்பித்து, முடிக்கும் வரை..வேறெதிலும் மனது போகவில்லை....உங்கள் எழுத்திற்கு அத்தனை சக்தி....அன்பான பாராட்டுக்கள்..இன்னும் மேலும் மேலும் உயர வாழ்த்துகள்.
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் பரிசல்காரரே, 150-க்கும் 50000-க்கும்!
வாழ்த்துக்கள் க்ருஷ்ணா.... 1 1/2 சென்சுரி பதிவுகளுக்கு 500 சென்சுரி ஹிட் !!! அப்பாடி..... சிங்கை திரும்பியதும் படித்த முதல் பதிவு... .மனதுக்கு நிறைவாக இருக்கிறது....
50000 ஹிட்ஸ் வந்ததற்கு பாராட்டியபோதுதான் இவன் 50000 ஹிட்ஸ் வந்ததைக் கவனித்தான். ‘சந்தோஷம்க... பாராட்டினதுக்கு’ என்று வெளியில் சொன்னாலும், “இப்போதான் 50000ஆ? ச்சீ!” என்ற உள்ளிருக்கும் கர்வியின் கிண்டலுக்கு தலைகுனிந்தவன்.
இவன் கெட்ட கேட்டுக்கு இன்று 150ஐத் தொட்டுவிட்டான். ஆனால் ஒரு சாதாரணப் பதிவரின் ஒரு பதிவின் தரம் கூட இவன் 150 பதிவுகளில் இருக்கிறதா என்ற விமர்சனங்களை காலால் உதைக்கிறான் அந்த கர்வி!
நல்ல பதிவு; வைரமுத்துவின் கவிஞனின் கர்வம் எனும் கவிதை தொகுப்பை போல.இன்னும் சொல்லபோனல் அதைவிட அதிமாக;
மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
இதுவும் இன்னமும் வர உடனிருக்கும்
எல்லார்க்கும் நன்றி.
கலக்கல் பரிசல். 2 நாளைக்கு முன்னால 50000 ஹிட்ஸ், இன்னிக்கு 150வது பதிவா.. வாழ்த்துக்கள்..
//இன்னும் பல உயரங்களை இவன் தொடக்கூடும்.//
சந்தேகமே இல்லை.. கண்டிப்பாக..
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உங்களுக்கு மட்டும் உரித்தானதல்ல பரிசல்.. உங்கள் எழுத்தார்வம் மற்றும் திறமைக்கு தடை போடாமல் உங்களை எழுத விட்டு வேடிக்கை பார்த்து நின்றுகொண்டிருக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும்தான். அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். சரியா???
உங்களை பற்றி ரொம்பவும் தெரிஞ்ச மாதிரி ஒரு உணர்வு. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
பரிசல்...
எளிமையான நடையில் எழுதுகிறீர்கள். அதுதான் அழகாக இருக்கிறது. நிலாவைப் பத்தி நூறு வரிக் கவிதை எழுதினாலும் கிடைக்காத குளுமை, நிறைவு
நிலா எனும் ஒரு வார்த்தையைச் சொன்னாலே கிடைக்கும். அதுபோல் உங்கள் பதிவுகள்.
(கொஞ்சம் மொக்கையைக்(என்னதான் ரசிக்கும்படி இருந்தாலும்) குறைச்சுட்டு,இன்னும் ஆழமான பதிவுகள் எழுத வேண்டுகிறேன்.(இதுக்கும் ஒரு மொக்கையைப் போட்டுராதீங்க...
வாழ்த்துக்கள்....
அட...பார்ரா வேலைய...!
அதி அற்புதம்...!!!
எங்கியோ போய்ட்டீங்க...அநேகமா சாருவின் அடுத்த "படித்ததில் பிடித்தது" உங்கள் வலைப்பூவாக இருக்குமென யூகிக்கிறேன்..
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
போக வேண்டிய தூரம் இன்னும் நிறையவே இருக்கு....கிளம்புங்க கிளம்புங்க...
வாழ்த்துகள்
-யட்சன்
thank you and best wishes. keep writing.
Congrats :)
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
beautiful write-up!
//
Repeatey :)
போகும் வழியில் இதுவும் ஒரு மைல் கல்(150).
வாழ்த்துக்கள்!
தொடர்ந்து கலக்குங்க!!!
சொல்லின் செல்வர் பரிசலாருக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.. இந்த திமிரனவன் எல்லோருகுள்ளும் இருக்கிறான். நீங்க பதிவு போட்டு சொல்லிட்டிங்க.. நாங்க சொல்லலை.. அம்புட்டு தான்.. :))
//பார்.. இந்த எழுத்து எனக்குப் பெற்றுத் தந்த நண்பர்களைப் பார்’ எனும் திமிர் அது.//
அண்ணே.. எந்த Bar அண்ணே அது.. சொன்னா நானும் அந்த பாருக்கு அப்பப்போ போய் நல்ல நண்பர்களை பெறுவேனே.. :))))
//சொல்லின் செல்வர் பரிசலாருக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.. இந்த திமிரனவன் எல்லோருகுள்ளும் இருக்கிறான். நீங்க பதிவு போட்டு சொல்லிட்டிங்க.. நாங்க சொல்லலை.. அம்புட்டு தான்.. :))//
ripeatuuuuuu....
well said podiyan...
ஆஹா.. எல்லோரும் விதவிதமா எழுதி பாராட்டுறாங்களே.. மங்களூர் கூட ரிப்பீட்டு போடாம சொந்தமா 'மைல் கல்' அது இதுனு போட்டு கிளப்புறாரே.. நா மண்டை உடைச்சுக்கிட்டாலும் ஒண்ணும் புதுசா தோண மாட்டேங்குதே.. இந்தப்பதிவின் சொல்வளத்தைப்பாராட்டுவதா? 150க்கு பாராட்டவா? அல்லது அல்லாடும் உங்கள் மனத்தை அழகாக வெளிப்படுத்திய பாங்கை பாராட்டவா?..
நம்ப சேக்காளிக்கு என்ன தனியா பாராட்டு வேண்டிகிடக்குதுனு என் மனதும் (ஒப்பிடும்)திமிர் பண்ணுகிறது.
மனமார்ந்த வாழ்த்துகள் பரிசல்.!
(நம்ப சப்ஜெக்டில் எதிர்பதிவு போட லட்டு மாதிரி பதிவு கிடைத்திருக்கிறது என்று தோணுகிறது. அடிக்கடி செய்தால் அதற்கும் மரியாதை இருக்காது என்பதால் ஆர்வத்தைக் கட்டிப்போடுகிறேன்.)
உடற்பயிற்சி பதிவுக்கு இன்னும் பின்னூட்டம் போடவில்லை. (பாருங்களேன் நம்ப நிலைமையை? கேட்டு வாங்கறதாயிருக்குது..)
50000 ஆயிரம் ஹிட்ஸ், 150 வது பதிவு இரண்டிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். படைப்பாளிக்கு ஒரு சிறு அளவுக்காவது கர்வம் வேண்டும், அது அவனது படைப்பின் தரத்தில் மட்டுமே தெரியவேண்டும். கர்வம் பேச்சில் இருக்க கூடாது என நினைப்பவன் நான். உங்களோடு பழகிய வரையில் என்னால் உங்களை கர்வி என நினைக்க முடியவில்லை. பாரதி தான் எனக்கும் ஆதர்சம்.
கடவுளிடம் தன் வேண்டுதல்கள் அனைத்தையும் கூறிவிட்டு, இவை தருவதில் உனக்கெதும் குறையுள்ளதோ என கடவுளையே கேள்வி கேட்கும் கர்வி நம் பாரதி. அந்த கர்வம் தான் அவன் அடையாளம்.
விரைவில் பிரபல பத்திரிக்கைகளில் உங்கள் படைப்புகள் பிரசுரமாக எனது வாழ்த்துக்கள்.
//விரைவில் பிரபல பத்திரிக்கைகளில் உங்கள் படைப்புகள் பிரசுரமாக எனது வாழ்த்துக்கள்.//
விரைவில்!
நன்றி நண்பா!!!
வாழ்த்துக்கள் கிருஷ்ணா.
உன் வளர்ச்சியை அருகில் இருந்து பார்க்க எனக்குப் பிரமிப்பாக இருக்கிறது. இன்னும் அதிக் உயரங்களைத் தொடவேண்டும் நீ.
150க்கு வாழ்த்துக்கள்.. உங்களின் பல பதிவுகளை வாசித்தவன். அவ்வளவாக பின்னூட்டம் இடவில்லையெனினும் உங்கள் பதிவை ரசிப்பவன்... :)) இன்னொரு முறை வாழ்த்துக்கள் :))
@பரிசல்
உனக்குள்ள தூங்கிகிட்டிருக்க அதே மிருகம்தான் எனக்குள்ளயும் தூங்கிக்கிட்டிருக்கு!!
:)))))))))))))))
//
மங்களூர் சிவா said...
@பரிசல்
உனக்குள்ள தூங்கிகிட்டிருக்க அதே மிருகம்தான் எனக்குள்ளயும் தூங்கிக்கிட்டிருக்கு!!
:)))))))))))))))
//
ரிப்பீட்டு
ரிப்பீட்டு போடலைனா தூக்கம் வரமாட்டிக்கிதுப்பா அதனாலதான்!!
:))
50
ஞாபகப்படுத்தின தாமிராவுக்கு டாங்கிஸ்!
:))))
அருமையான எழுத்து
150-க்கு வாழ்த்துக்கள்
யாரும் நட்பை இழக்க ஆசைப்பட மாட்டார்கள்
congratulations
Post a Comment