Thursday, October 9, 2008
கோவி.கண்ணனைக் கண்டிக்கிறேன் !
நான் போன பதிவுல (போன-ன்னவுடனே ரெண்டு மூணு நாள் முன்னாடின்னு நெனைச்சுடாதீங்க. காலைல போட்ட பதிவுல) ஆஃபீஸ்ல மீட்டிங் ஹாலுக்கு போறதுக்கு முந்தி வானத்துல மேகத்தை ரசிச்சு, என் செல்ஃபோன்லயே படம் எடுத்தேன்-ன்னு எழுதியிருந்தேன். இதோ அந்த வரிகள் மீண்டும்.... (பேசாம இன்னைக்கும் ஆயுத பூஜையா இருந்து, இவன் எழுதாமலே இருந்திருக்கலாம்ன்னு தோணுதா... )
நேத்து எங்க கம்பெனில ஒரு மீட்டிங். நான் சம்பந்தப்பட்டதில்ல. ஆனாலும் மீட்டிங்ல ஒருத்தர் என்னைப் பற்றிய குறை ஒன்றைச் சொல்லிவிட்ட்டார். (போட்டுக்கொடுத்துட்டார்ன்னு கொச்சைப்படுத்த விரும்பவில்லை. ஏன்னா, அவர் சொன்னது உண்மை. ஒரு வேலையை நான் கேர்லெஸா விட்டிருந்தேன்!!) அதுக்கு டோஸ் விட எம்.டி. என்னைக் கூப்ட்டாரு. போறப்பதான் மேல வானத்துல பார்த்தேன். சூரியன் மேகத்துக்கு நடுவுல! சூப்பரா கதிர்கள் பூமியில் விழுந்துகிட்டிருந்தது. உடனே என் ஃபோனை எடுத்து கேமராவை ஓப்பன் பண்ணி க்ளிக்கீட்டேன்! (இன்னும் இருக்கு அந்தப் படம்!)
நெஜமா மீட்டிங்ல திட்டு வாங்கிட்டிருக்கும்போது கூட ஒரு மாதிரி ‘என்ன அருமையான இயற்கை காட்சியை விட்டுட்டு இப்படி கூடி ஒக்கார்ந்து கும்மியடிச்சிட்டிருக்கீங்களே”ன்னுதான் எனக்கு தோணிச்சு!
முடிஞ்சு அவசர அவசரமா வெளில வந்தேன். (எல்லாரும் நான் அவங்க சொன்னதை செய்யத்தான் அவ்ளோ துடிப்போட போறேன்னு நெனைச்சுட்டாங்க.) ஆனா வெளில அந்த மேகம் கலைஞ்சிருந்தது! :-(
இந்த வரிகளைப் படிச்சுட்டு அந்தப் பதிவுல போட்ட படம்தான், நான் எடுத்த படம்ன்னு நெனைச்சுட்டாங்க பலபேர். என் மெய்ல்பாக்ஸைத் திறந்தா நூறு மெயிலுக்கு மேல, அந்தப் படம் இதா? இல்ல வேறயா-ன்னு ஒரே ரசிகர்கள் தொந்தரவு! (நெனைப்புதான்..)
அந்தப் பதிவில இருந்த படம் சுட்டபடம்.
இதோ இந்தப் பதிவுல இருக்கறபடம்தான் நான் எடுத்த படம்!
என்ன, நல்லாயிருக்கா?
பி.கு: தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லாம எழுதியும், கோவி.கண்ணனை வம்புக்கு இழுத்தும் ரொம்ப நாளாச்சு.. அதான் இப்படி. சிங்கை சின்னத்திரை சிவாஜி கோவி.ஜி கோவிக்கமாட்டாருன்னு நம்பறேன்!
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
இந்தியன் கிரிக்கெட் டீம் மாதிரி இருக்கு, ப்லாகர் அலம்பல்.
ஒவ்வொருததுரம் அவரை இவரை கண்டிப்பது.
ஜோக் தான். நல்லா தான் இருக்கு.
- எழுத்தாளர் ரமேஷ்
யோவ் இந்த படத்த காலைலயே போட்டுறுக்க வேண்டியதுதான
கூறு கெட்ட குப்பா
என்னை மட்டும் கேள்வி கேட்ட அதிஷா பரிசலையும் கண்டிக்க வேணும்னு கேட்டுக் கொள்கிறேன்..
சுட்டதும் நல்லாயிருக்கு, எடுத்ததும் நல்லாயிருக்கு.
யோவ் இந்த படத்த காலைலயே போட்டுறுக்க வேண்டியதுதான
கூறு கெட்ட குப்பா
//
காலையிலேயே போட்டா அப்புறம் எப்படி ஓரே நாள்ல ரெண்டு பதிவப் போடமுடியும். யாரு கூறு கெட்ட குப்பன் இப்போ? நீரா இல்லை அவரா?
:)))))
இது ஒருவரை ஒருவர் கண்டிக்கும் வாரம் போலிருக்கிறது :)
//கோவி.கண்ணனைக் கண்டிக்கிறேன் !//
இதற்காக நான் கண்டிக்கிறேன்
//அந்தப் பதிவில இருந்த படம் சுட்டபடம்.//
இதுவும் சுட்டப்படம் தான்
அது இணையத்தில்
இது கேமராவில்
//என்ன, நல்லாயிருக்கா?//
என்ன கேள்வி இது சின்னபுள்ள தனமா
//சிங்கை சின்னத்திரை சிவாஜி கோவி.ஜி //
அப்போ அங்க அவரு பேசினதெல்லாம் நடிப்பா
//- எழுத்தாளர் ரமேஷ்//
இப்படி மொட்டையா சொன்னா எப்படி
எங்கே, எப்போ, என்ன எழுதினீங்கன்னு கொஞ்சம் விலாவாரியா சொல்லுங்க
நல்லா இருங்கய்யா நல்லா இருங்க...
நர்சிம்
யோவ்.. இதையே எத்தினை வாட்டிதான் படிக்கிறது? நல்லவேளை படமாச்சும் பிரமாதமாயிருக்கச்சொல்லோ சும்மா போறேன்.
//தாமிரா said...
யோவ்.. இதையே எத்தினை வாட்டிதான் படிக்கிறது? நல்லவேளை படமாச்சும் பிரமாதமாயிருக்கச்சொல்லோ சும்மா போறேன். //
ஆமா.
// வடகரை வேலன் said...
//தாமிரா said...
யோவ்.. இதையே எத்தினை வாட்டிதான் படிக்கிறது? நல்லவேளை படமாச்சும் பிரமாதமாயிருக்கச்சொல்லோ சும்மா போறேன். //
ஆமா... //
ஆமாமா...
// கோவி.கண்ணனை வம்புக்கு இழுத்தும் ரொம்ப நாளாச்சு.. அதான் இப்படி. சிங்கை சின்னத்திரை சிவாஜி கோவி.ஜி கோவிக்கமாட்டாருன்னு நம்பறேன்! //
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
செல்போனில் இவ்வளவு அருமையான படமா? நீங்க ஒரு நல்ல எழுத்தாளர்னு மட்டும்தான் நெனச்சேன். நல்ல புகைபிடிப்பவர்.. சாரி.. புகைப்படம் பிடிப்பவர்னு நிருபிச்சிட்டீங்க :))))
கோவிகண்ணனின் பெயரை உபயோகித்து..தனக்கு விளம்பரம் தேடும் பரிசலை கண்டிக்கிறேன்
இருக்கு, ஆனா இல்ல, இந்த மாதிரி எதா சொல்லி கிளப்பிவிற்றவேன்டியது, அப்புறமா ரசிகனுக தொல்ல தாங்க முடியலனு, :-)))) படம் நல்லா இருக்கு பரிசல்.
பதிவுக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்லாம பதிவு ஒன்னு போடனும்னு நேத்து தான் உங்க சீனியர் சொல்லிட்டு இருந்தார். எப்படின்னு கேட்டா "பரிசலை கண்டிக்கிறேன்" தலைப்பு வைக்கலாமான்னு கேட்டார். அதுக்குள்ள ஜுனியர் பதிவ போட்டாச்சா.
வாழ்க...
ஒருத்தர ஒருத்தர் கண்டிக்கிற எல்லோரயும் நான் கண்டிக்கிறேன்.. ஹி ஹி
பரிசல்... உங்க வலைபூவுல இந்த வாரப் பதிவரா அறிமுகம் பண்ணின பிறகு நிறைய ஹிட்... உங்க பக்கத்துல இருந்து வரவங்க எண்ணிக்கை கணிசமா இருக்கு. ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.
// T.V.Radhakrishnan said...
கோவிகண்ணனின் பெயரை உபயோகித்து..தனக்கு விளம்பரம் தேடும் பரிசலை கண்டிக்கிறேன்//
என்ன சார்.. சீரியஸா கோவிச்சுட்டீங்களா? கண்ணன் சார்... வந்து காப்பாத்துங்க...
//அதிஷா said...
கூறு கெட்ட குப்பா//
உனக்கு என்ன மப்பா?
:-)
பரிசல்,
என் பெயரைப் தலைப்பில் போட்டு யாராவது எழுதினால் எனக்கு டென்சன் ஆகும்.
"இந்த பதிவு சூடான இடுகையில் இடம் பிடிச்சு என் பெயரைக் காப்பாற்றனுமே" ன்னு டென்சனாக இருப்பேன்.
இந்த பதிவு சூடாகிவிட்டது..........ஹப்ப்பா.....டென்சன் குறைஞ்சிட்டு !
:)))))))))))))))))))
//என் பெயரைப் தலைப்பில் போட்டு யாராவது எழுதினால் எனக்கு டென்சன் ஆகும்.
"இந்த பதிவு சூடான இடுகையில் இடம் பிடிச்சு என் பெயரைக் காப்பாற்றனுமே" ன்னு டென்சனாக இருப்பேன்.//
same blood!
//9 October, 2008 9:32 PM
கோவி.கண்ணன் said...
பரிசல்,
என் பெயரைப் தலைப்பில் போட்டு யாராவது எழுதினால் எனக்கு டென்சன் ஆகும்.
"இந்த பதிவு சூடான இடுகையில் இடம் பிடிச்சு என் பெயரைக் காப்பாற்றனுமே" ன்னு டென்சனாக இருப்பேன்.
இந்த பதிவு சூடாகிவிட்டது..........ஹப்ப்பா.....டென்சன் குறைஞ்சிட்டு !
:)))))))))))))))))))
//
அப்படி போடுங்க!
நானும் கண்டிக்கிறேன்.
(இருங்க பதிவ படிச்சுட்டு வந்துடுறேன்)
படிக்காமல் பின்னூட்டமிடுவோர் சங்கம்
நிறுவனர் : கோவி.க
செயல் தலைவர் : பொடியன் என்று சொல்லிக்கொள்(ல்)ளு(லு)ம் சஞ்சய்.
படித்த பிறகு இடும் பின்னூட்டம்
சிங்கையின் மூத்த சிங்கம் ( கிழ சிங்கம் அல்ல) கோவி பாகவதரை தேவையில்லாமல் கண்டிக்கிறேன்னு எழுதுன பரிசல்காரரை கண்டிக்கிறேன்.
கொடுமை! :)
Post a Comment