Friday, October 10, 2008

ரொம்ப தொந்தரவு பண்றேனோ...



வர வர செல்ஃபோனால வர்ற தொந்தரவுகளைத் தாங்கவே முடியறதில்ல. எனக்கு ஃபோன் வர்றதைச் சொல்லவே இல்ல.

நான் ஃபோன் பண்ணி அறுக்கறேன்னு ஒரு எழுத்தாளர் நேத்து சொன்னார். அவருகிட்ட ஃபோன் பண்ணி பேசிகிட்டிருக்கறப்ப கேட்டாரு.

“இதுதான் ஒரு எழுத்தாளரை அழைக்கும் முறையா”

“யாருன்னாலும் இப்படித்தாங்க அழைக்க முடியும். இவரு எழுத்தாளர்ன்னு செல்ஃபோன்ல பச்சை பட்டனுக்கு பதிலா வித்தியாசமா செவப்பு பட்டனை அமுக்கினா கால் கட்டாகிடுமே”ன்னு அப்பாவியா நான் சொன்னதுக்கு கெட்ட கெட்ட வார்த்தையிலேயே திட்டீட்டு ஃபோனை வெச்சுட்டாரு அந்த ரைட்டர்! இருடி.. வெச்சுக்கறேன்.

வேற ஒரு தொல்லை.. இந்த ரிங்டோன்!

ஆஃபீஸ்ல ஒரு தோழி. ஒருதடவை அவங்க செல்ஃபோனை டேபிள்ல தேடிகிட்டிருக்கறப்ப ‘இரு.. நான் கூப்ட்டுப் பார்க்கறேன்’ன்னு கூப்பிட்டப்போ ‘சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்.. ஒன்ன நெஞ்சில் வெச்சுக்கிட்டேன்’ பாட்டு! அவங்க நார்மல் ரிங்டோன் வேற.

“என்ன.. ரிங் டோனை மாத்தீட்டியா”ன்னு கேட்டா, “இது உங்களுக்குன்னு வெச்ச ரிங்டோன்”ன்னாங்க.

“இது ரிங்குடோனில்ல. சங்குடோனு! நீ பாட்டுக்கு வீட்டுக்கு வர்றப்ப என் ஆளு காதில விழுந்தா சங்குதான். மொதல்ல மாத்து”ன்னு ஓரியாடி மாத்தினேன்.

அப்புறம் முகுந்தா முகுந்தா கிருஷ்ணா வெச்சுகிட்டாங்க. முன்னைக்கு இது பரவால்லன்னு விட்டுட்டேன்!

என் ஃப்ரெண்டோட மாமா இறந்துட்டாரு. ஃப்ரெண்ட்ஸ்கிட்டயெல்லாம் கூப்பிட்டு சொன்னான். அவன் குடுத்த நம்பருக்கெல்லாம் கூப்பிட்டப்போ... ஒவ்வொருத்தன் Dialer Tone வெச்சிருந்தானே...


‘நம்ம காட்டுல மழ பெய்யுது...’

நான்: ‘சரவணனோட மாமா தவறிட்டாருங்க..”


‘என்ன சொல்லப் போகிறாய்’

நான்: ‘சரவணனோட மாமா தவறிட்டாருங்க..”

‘வேறென்ன வேறென்ன வேண்டும்.. ஒருமுறை சொன்னால் போதும்’

நான்: ‘சரவணனோட மாமா தவறிட்டாருங்க..”


இன்னும் என்னென்னமோ வெச்சிருந்தாங்க. ஞாபகத்துக்கு வரல.

அதுவும் சிலபேரு அவங்க ரிங்டோனை ஊரே கேட்கணும்னு, ஃபோன் வந்தாலும் உடனே எடுக்காம, கைல வெச்சுப் பார்த்துட்டே இருப்பாங்க. என்னமோ அவங்கதான் அந்த ட்யூனை கம்ப்போஸ் பண்ணினா மாதிரி ஒருவித மிதப்போட, சுத்தியும் எல்லாரும் பார்க்கறதைப் பார்த்துட்டே.. ரொம்ப சாவகாசமா ஆன் பண்ணிப் பேசுவாங்க.

சமீபமா லேடீஸ் வாய்ஸ்ல சில DIALER TONE வந்திருக்கு. கூப்பிட்ட உடனே ‘நான் உங்களை காய்கறி வாங்கீட்டு வரச் சொன்னேனே... அப்படியே ஹார்லிக்ஸ் அரைக் கிலோ வாங்கீட்டு வந்துடுங்க...’ன்னு ஆரம்பிச்சு ஒரு லிஸ்ட்டே போடுது அந்தக் குரல். என் ஆஃபீஸ்ல ஒரு ட்ரைவர் அந்த டோன் வெச்சிருக்காரு. எல்லா மனைவிமார்கள் குரல்லயும், ஒரு வித மிரட்டல் தொனி இருக்குமே, அந்த மாதிரியே இருக்கும் அந்தக் குரல். ஒரு விஷயம் என்னான்னா, ரெண்டு நாளா நான் ஆஃபீஸ் விட்டு வர்றப்ப ஒரு தடவை அவருக்கு ஃபோன் பண்ணி அந்த டோனைக் கேட்டுட்டுதான் வர்றேன். மனைவி ஏதாவது சொல்லிவிட்டிருந்து மறந்திருந்தாக் கூட அந்தக் குரல் திட்டுற திட்டுற ஞாபகத்துக்கு வந்துடுது!

சில மாதங்களுக்கு முன்னாடி ஒரு கேரளா நம்பர் எல்லார்கிட்டயும் சுத்திகிட்டிருந்தது. ‘இந்த நம்பருக்கு கூப்ட்டா பேய் பேசுது’ன்னு. ‘ஏண்டா ஞானசூன்யங்களா, அந்தப் பக்கம் பேசறது பேய்தான்னு எப்படிடா தெரியும்?’ன்னா குரல்லயே தெரியுதுங்கறாங்க.

அதே மாதிரி ‘ஹிட்லர் கடைசியா பேசினது’ன்னு ஒரு நம்பர் சுத்திகிட்டிருந்தது. அதே நம்பர் இன்னொருத்தன் குடுத்து ‘ஆப்ரஹாம் லிங்கன் பேசினது’ன்னான். இன்னும் நம்ம எம்.ஜி.ஆர், சிவாஜியை வெச்சு இந்த விளையாட்டை ஆரம்பிக்கல இவங்க!

ஒரு நாள்பூரா செல்ஃபோனை ஆஃப் செய்துவிட்டு இருக்கமுடியுமா உங்களால்.. யோசியுங்க.. செல்ஃபோனுக்கு நாம எவ்ளோ அடிமை ஆகியிருக்கோம்ன்னு புரியும்!

42 comments:

ILA (a) இளா said...

//அப்பப்ப வந்துட்டு போங்க!//
செல்போனுல வந்தாமட்டும் தப்போ?

விஜய் ஆனந்த் said...

நான் அடிமை இல்லை!!!

விஜய் ஆனந்த் said...

// அதுவும் சிலபேரு அவங்க ரிங்டோனை ஊரே கேட்கணும்னு, ஃபோன் வந்தாலும் உடனே எடுக்காம, கைல வெச்சுப் பார்த்துட்டே இருப்பாங்க. //

நீங்க இந்த சிலபேரு லிஸ்ட்ல இருக்கீங்களா???

:-))))..

கார்க்கிபவா said...

என்னதான் அடிமைனு சொன்னாலும் நாம் இன்னைக்கு வாழற‌ சொகுசு வாழ்க்கைக்கு அதுவும் ஒரு காரணம்.. அது இல்லாமல் தொல்லை குறையுமென்றால் என்றால் அது இல்லாமால் சந்தோஷமும் இல்லை.. உபயோகப்படுத்தும் முறையை பொறுத்து..

Cable சங்கர் said...

என்னுடய டயலர் டோன் :செய் எதாவது செய் பாடல்.. இந்த பாட்டினால் நிறைய கேர்ள் பிரண்டுகள் கிடைத்திருக்கிறார்கள்..அதன் ரகசியத்தை நான் உங்களுக்கு போன் பண்ணா சொல்றேன்.

கோவி.கண்ணன் said...

//ஒரு நாள்பூரா செல்ஃபோனை ஆஃப் செய்துவிட்டு இருக்கமுடியுமா உங்களால்.. யோசியுங்க.. செல்ஃபோனுக்கு நாம எவ்ளோ அடிமை ஆகியிருக்கோம்ன்னு புரியும்!//

எனக்கு அந்த அளவுக்கு தொந்தரவு வருவது இல்லை.

Thamiz Priyan said...

செல்லை மறந்து வைத்து விட்டுப் போனால் தான் உண்டு... அப்படிப் போனாலும் ஒருவித பதபதப்பில் தான் இருக்கும்..:))

narsim said...

//ஒரு நாள்பூரா செல்ஃபோனை ஆஃப் செய்துவிட்டு இருக்கமுடியுமா உங்களால்.. யோசியுங்க.. செல்ஃபோனுக்கு நாம எவ்ளோ அடிமை ஆகியிருக்கோம்ன்னு புரியும்!
//

நம்ம இருந்தாலும் கூப்பிடுறவங்க நிலைமைய யோசிச்சுப்பாருங்க..

ஆனாலும் யோசிக்க வைக்கும் பதிவு..

நர்சிம்

கயல்விழி said...

என் செல்போனில் வேலை சம்மந்தமான கால்கள் வருவதால், வேண்டுமென்றே எங்கேயாவது தொலைத்துவிடலாமா? என்று சிந்திப்பதுண்டு.

நல்ல பதிவு பரிசல் :)

பாபு said...

// அதுவும் சிலபேரு அவங்க ரிங்டோனை ஊரே கேட்கணும்னு, ஃபோன் வந்தாலும் உடனே எடுக்காம, கைல வெச்சுப் பார்த்துட்டே இருப்பாங்க.//

நிறைய ஜென்மங்கள் இருக்கு இந்த மாதிரி

அதுவும் மீட்டிங் ல வந்து உட்கார்ந்த பிறகும் இதே போல் செய்யும்போது செம எரிச்சல் வரும்

Ŝ₤Ω..™ said...

அப்படித்தான் ஒரு முறை, பணி நிமித்தமா ஒரு கணிப்பொறி துறையில் வேலைப் பார்க்கும் ஒருவருக்கு கைப்பேசியில் அழைத்தேன்..
"கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடி போலாம..
இல்ல ஓடி போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா?"
என்று பாடல் வருது.. நல்ல வேளை, நான் அழைத்தது ஒரு ஆடவரை..


"ஒரு நாள் செல்ஃபோன் சிக்னல் ஜாம் ஆனால்???"

இந்த கற்பனையில் ஒரு திரைக்கதையே எழுதி இருக்கோம்ல.. விரைவில் ஒரு பதிவாக வெளியிடுகிறேன்..

Thamira said...

'லைட்'டான பதிவு. கலக்கல். இது மாதிரி பதிவுகளைத்தான் நான் ரசித்துப்படிக்கிறேன். நம்ப ரசனை அப்படி.!

Thamira said...

சமீபத்தில் நான் கேட்ட ரிங் டோன் :

(சினிமாக்களில் வடிவேலுவுடன் குள்ளமாக, மாறுகண் குறைபாடுள்ள ஒரு நடிகர் வருவாரே அவரது குரல்)

(முதலில் மிக சாப்ட்டாக) சார் உங்களுக்கு போன்..
(சில விநாடிகளுக்கு பின் சத்தமாக) சார் போன்..
(பின்னர்) டேய் போன்டா..
(பின்னர்) கசுமாலம் உனக்கு போன் வந்துருக்குதுடா..
(பின்னர்) டேய் நாதாரி உனக்குலாம் போய் ஒருத்தன் போன் பண்றாம்பாரு..
(பின்னர்) அவ்வ்.. லூசுப்பயலே.. போனை எடுத்துத்தொலைடா.. அவ்வ்..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஹாஹாஹா.. ரசித்துப் படித்தேன் :)

வெண்பூ said...

செல்ஃபோன் தொந்தரவுகளை அழகா சொல்லியிருக்கீங்க பரிசல்...

//
ஒரு நாள்பூரா செல்ஃபோனை ஆஃப் செய்துவிட்டு இருக்கமுடியுமா உங்களால்.. யோசியுங்க.. செல்ஃபோனுக்கு நாம எவ்ளோ அடிமை ஆகியிருக்கோம்ன்னு புரியும்!
//


என்னால் கண்டிப்பாக முடியும்.. :))) ஏனென்றால் சராசரியாக நான் செல்போனில் பேசும் நேரம் ஒரு நாளைக்கு 10 முதல் 15 நிமிடம்தான். சாராசரியாக 1 முதல் 2 கால்கள் மட்டுமே. அதனால் நான் செல்ஃபோனுக்கு கண்டிப்பாக அடிமை இல்லை, நண்பன்னு வேணா சொல்லலாம் :)

ஜியா said...

:))

அதே ரத்தம்...

அதே மரண அறிவிப்பு... பாட்டு மட்டும்..... அப்படி போடு போடு போடு...

Ramesh said...

ரசித்துப் படித்தேன்!

செல்போன் இல்லாத வாழ்க்கை...நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது.

கூடுதுறை said...

சில பேர்... மனைவி குரலை பதிவு செய்து வைத்துக்கொண்டு.... போன் வருது எடுங்க...எடுத்து தொலைங்க... என்றேல்லாம் மிரட்டல் பாணியில் ரிங் டோன் வைத்துள்ளார்கள்...

என் போனில் என் மகள் டாடி போன் வருது என்று அழகாக கூப்பிடும்படி வைத்துள்ளேன்

Anonymous said...

ரெம்பக் கொடுமைங்க கிருஷ்ணா இவங்களோட.

நேத்து மருதமலையில நல்ல தரிசனம் தீபாராதனை பாத்து மனமுருக வேண்டிக்கிட்டிருந்தேன், அப்ப ஒரு ரிங் டோன் வந்துது பாருங்க நொந்துட்டேன்.

‘அட்ராட்ரா நாக்க முக்க'

கோயில்ல சாமி கும்பிடக்கூட முடியாத அளவுக்கு பிஸியா இருக்கவங்க ஏன் சாமி கும்பிட வரனும்?

கூடுதுறை said...

இதைப்படியுங்கள்...

விருப்பமிருந்தால் இணையுங்கள்

http://paakeypa.blogspot.com/

ரிஷி (கடைசி பக்கம்) said...

//அதுவும் சிலபேரு அவங்க ரிங்டோனை ஊரே கேட்கணும்னு, ஃபோன் வந்தாலும் உடனே எடுக்காம, கைல வெச்சுப் பார்த்துட்டே இருப்பாங்க. என்னமோ அவங்கதான் அந்த ட்யூனை கம்ப்போஸ் பண்ணினா மாதிரி ஒருவித மிதப்போட, சுத்தியும் எல்லாரும் பார்க்கறதைப் பார்த்துட்டே.. ரொம்ப சாவகாசமா ஆன் பண்ணிப் பேசுவாங்க.//

Me too observed this

:-))

VIKNESHWARAN ADAKKALAM said...

எனக்கு ஒவ்வொரு முறை போன் வரும் போதும் எரிச்சலாக தான் இருக்கிறது... ஏதாவது முக்கியமான வேலையில் இருக்கும் போது தான் போன் வரும்...

முக்கியமான நம்பரை யாருக்கும் கொடுப்பதில்லை.. பொதுவான நம்பர் உள்ள போனை ஓய்விருந்தால் மட்டும் எடுப்பேன் இல்லையென்றால் மிஸ்ட்டு கால்களை பார்த்து என் ஓய்வான நேரத்தில் போன் போட்டு பேசிடுவேன்...

Sundar சுந்தர் said...

நல்லா சொன்னிங்க!
btw, நான் ஒன்னு போட்ருக்கேன் !

Mahesh said...

நானும் வெண்பூ, விக்னேஷ்வரன் வகையை சேர்ந்தவன்.... ஒரு நாளைக்கு அதிகமாக 4 அல்லது 5 அழைப்புகள் மட்டுமே.

புதுகை.அப்துல்லா said...

இருங்க போன் அடிக்குது பேசிட்டு வர்றேன் :))))

Unknown said...

நான் மறுபடி எழுத வந்துட்டேன் பரிசல்

Unknown said...

நல்ல பதிவு.

// அதுவும் சிலபேரு அவங்க ரிங்டோனை ஊரே கேட்கணும்னு, ஃபோன் வந்தாலும் உடனே எடுக்காம, கைல வெச்சுப் பார்த்துட்டே இருப்பாங்க. //

என்னோட அனுபவத்தில இவங்க கட்டயம் 40 வயசுக்கு மேல இருப்பாங்க.

அவங்க பாக்கெட்டில் அடிக்கும் செல்போனை கூட அவங்களுக்கு உணரதெரியாத லூசு பசங்க. பக்கதில் இருக்கிறவன் சொல்ல ஒரு இளி இளிச்சுக்கிட்டே பேசுவாங்க.

நான் செல்போனுக்கெல்லம் அடிமை இல்லை. இப்ப கூட இடது காதுல பேசிக்கிட்டேதான் டைப் பண்றேன். அதுக்காக நான் என்ன அடிமையா?

- டுமுக்கு பாண்டி

SK said...

பரிசல்

நல்ல பதிவு. நான் தொலைபேசிக்கு அடிமை இல்லை ஆனா இன்டர்நெட்'கு தான்

அதையும் கம்மி பண்ணும்னு பாக்குறேன் முடியறது இல்லை. அதுவும் வேலை வேற அதுலையே அமைஞ்சுடதுனாலே ஒன்னும் பண்ண முடியலை.

உங்க அலுவலகத்துலே கூட வேலை பாக்கற பொண்ணு ரிங் டோன் மேட்டர் படிச்சு விழுந்து விழுந்து சிரிச்சேன்.

ees said...

தாமிரா said...
//சினிமாக்களில் வடிவேலுவுடன் குள்ளமாக, மாறுகண் குறைபாடுள்ள ஒரு நடிகர் வருவாரே அவரது குரல்)//

இப்படி ஒருத்தரை அடையாள படுத்த வேண்டாமே தாமிரா சார் !!

//செல்ஃபோனுக்கு நாம எவ்ளோ அடிமை ஆகியிருக்கோம்ன்னு புரியும்!//

நீங்க எல்லா போட்டோ லயும் ஹெட் போன் கழுத்துல தொங்க விட்டிருக்கும் போதே சந்தேக பட்டேன் !!

வால்பையன் said...

சர்வீஸ் துறையில் இருப்பதால் எனக்கு அழைப்புகள் அதிகம் வரும்.
நீங்கள் சொல்வது போல் மற்றவர் மனநிலைக்கு ஏற்றவாறு நம்மால் காலர் ட்யூன் வைத்து கொள்ள முடியாததால் நான் அலைபேசி வாங்கி இன்று வரை எந்த காலத் ட்யூனும் வைத்து கொள்ளவில்லை.

கஸ்டமர் லாபத்தில் இருக்கும் பொது எந்த பாட்டு இருந்தாலும் அவர் கவலைப் பட போவதில்லை. அதுவே நட்டத்தில் இருக்கும் போது குத்து பாட்டு பாடினாள் அவர்கள் நேரில் வந்து குத்துவார்கள். இத்தனைக்கும் காலர் ட்யூன் அதை வைத்திருப்பவர் கேட்க்கப்போவதில்லை பிறகு எதற்காக என்று தெரியவில்லை.

ரிங் டோன் தான் நாம் கேட்கிறோம். என்னுடைய ரிங் டோனும் காமெடியாக தான் இருக்கும். ஆனாலும் அது பழையது என்று சொல்கிறார்கள். எனக்கு பிடித்திருக்கிறது.
தங்கமணியை வெறுபேற்ற வேண்டுமென்றே போட்டு காட்டுவேன்.

ஒரு நாள் போனில்லாமல் இருக்கமுடியும் என்று நினைக்கிறேன்
இதுவரை பரிசோதித்து பார்க்கவில்லை

Sanjai Gandhi said...

ஒரு முகமோ இரு முகமோ
முழு முகமும் கலவரமோ
பயமறியாது இவன் தேசமோ

இவன் விழிகள் குறி தானோ
கண்ணசைவில் கவர்வானோ
வலியறியாது இவன் தேகமோ..

...கேட்ட மாதிரி இருக்கா? :)))

Sanjai Gandhi said...

// கோவி.கண்ணன் said...

//ஒரு நாள்பூரா செல்ஃபோனை ஆஃப் செய்துவிட்டு இருக்கமுடியுமா உங்களால்.. யோசியுங்க.. செல்ஃபோனுக்கு நாம எவ்ளோ அடிமை ஆகியிருக்கோம்ன்னு புரியும்!//

எனக்கு அந்த அளவுக்கு தொந்தரவு வருவது இல்லை.//

இத பாருங்கப்பு கோவியார் கமெடிய.. ISD போட்டு அறுக்க நாங்க என்ன கூமுட்டைங்களா? நீங்க சிங்கைல இல்லாம சிங்கார சென்னைல இருந்து இப்படி சொல்லிட முடியுமானு யோசிச்சி பாருங்க.. :)

சின்னப் பையன் said...

நோய்டாலே இருக்கும் எங்க மேனேஜருக்கு இப்போ நிறைய தமிழ் பாட்டுகள் தெரியும். அடிக்கடி சென்னையில் மக்களின் தொலைபேசிக்கு கூப்பிட்டு பேசுவார். நம் மக்கள்தான் சினிமா பாட்டுக்களை ட்யூனா போட்டு வெச்சிருக்காங்களே?????

anujanya said...

சுவாரஸ்யமான பதிவு கே கே. உங்கள் ஸ்டைல் பதிவு முழுதும்.

//“இது ரிங்குடோனில்ல. சங்குடோனு! நீ பாட்டுக்கு வீட்டுக்கு வர்றப்ப என் ஆளு காதில விழுந்தா சங்குதான். மொதல்ல மாத்து”ன்னு ஓரியாடி மாத்தினேன்.

அப்புறம் முகுந்தா முகுந்தா கிருஷ்ணா வெச்சுகிட்டாங்க. முன்னைக்கு இது பரவால்லன்னு விட்டுட்டேன்!//

vintatage stuff. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

Kumky said...

இந்த வெண்பூஊஊஊஊ நம்பர் இருந்தா கொஞ்சம் கொடுங்க...யென்னா தெகிரியம்...இன்னும் நம்மள பத்தி தெர்ல போல கீது.

Kumky said...

செல்ல யெடுத்தா..ஒன்னு செல்லு சூடேறி கொதிக்கணும்...இல்ல கேக்கறவங்க காதுல பொகை வரனும்.
"செல்லில்லார்க்கு இல்லை இவ் வுலகம் ...
செல்லெனப் பட்டதே இவ்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று."
என்று பழைய பாணப்பத்திர ஒணாண்டி சொல்லியிருக்கிறார்....பாத்துக்குங்க.

Kumky said...

//“இது ரிங்குடோனில்ல. சங்குடோனு! நீ பாட்டுக்கு வீட்டுக்கு வர்றப்ப என் ஆளு காதில விழுந்தா சங்குதான். மொதல்ல மாத்து”ன்னு ஓரியாடி மாத்தினேன்.
பாட்ட மத்தும்தாம் மாத்திக்க சொன்னீங்களா.....அப்போ மனசு?

Bleachingpowder said...

இந்த பதிவிற்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டம். கேட்கனும்னு தோனுது அதனால கேட்குறேன். லதானந்த் திரும்பவும் பதிவு எழுதனும் எல்லாரும் சேர்ந்து அழைப்பு விடுத்தோம், அவரும் திரும்ப வந்து நாலஞ்சு பதிவ போட்டாரு, ஆனா இப்ப மூத்த பதிவர் யாரும் அவர கண்டுகிட்டது மாதிரி தெரியல. அவருடைய பதிவில் யாரும் போய் பின்னூட்டமும் போட்ட மாதிரி தெரியல.Let us not embarrass him.

இதுல எதாவது உள்குத்து இருக்கா பரிசல்?

முரளிகண்ணன் said...

உங்களை தொடர் விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன் , நன்றி

ஆட்காட்டி said...

இதுவாவது பரவாயில்லை. சிலர் தப்புத் தப்பா ரோன் போட்டிருப்பாங்கள் சிலர் கோலிங் ரோனே போட்டிருப்பாங்கள். எனது நண்பர் ஒருவர் விபத்தில் இறந்து விட்டார். மற்றைய நண்பருக்கு அவரது வீட்டில் இருந்து அழைப்பு வருகிறது. அதுக்கு குத்துப் பாட்டு போட்டால் அழைப்பவருக்கு எப்படி இருக்கும்?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

என்னோட போன் ல no caller tune. only ring tone..
ஜானி ஜானி யெஸ் பாப்பா மகன் பாடியது..

கிருத்திகா ஸ்ரீதர் said...

கிட்டத்தட்ட கடைசி பத்து பதிவுகள் படிச்சிட்டேன்... எல்லாப்பதிவும் ரொம்ப நல்லாருக்கு....:)
நன்றி சுந்தருக்கு சொல்லிக்கறேன்.. உங்களுக்கு வாழ்த்துக்கள்.