“என்னது.. பொணம் கையை ஆட்டிக் கூப்பிட்டுதா?”ன்னு ஆச்சர்யமா பயத்தோட கேட்டேன் நான். கான்ஸ்டபிள் சொன்னாரு. “நானும் அப்படித்தான் நெனச்சு பயந்து நடுங்கிட்டேன். ஒருவேளை உயிரிருக்குமோன்னுகூட தோணிச்சு. அப்புறம் பயந்து பயந்து பக்கத்துல போய்ப் பார்த்தா, இறந்தவன் போட்டிருந்த முழுக்கை சட்டை கிழிஞ்சு காத்துல ஆடிகிட்டிருந்தது. எனக்குத்தான் அவனே கூப்பிடறமாதிரி மனப்ரமையா இருந்திருக்கு’ன்னார். நான் கேட்டேன் ‘ஏதோ ஒரு நாளைக்குத்தானே அப்படியாகும். மத்தநாள் எல்லாம் ஜாலிதானே?’ அவரு சொன்னார்... ‘அந்த ஏதோ ஒரு நாள் இன்னைக்குத்தானா-ன்னு தெனமும் பயந்துகிட்டேதான் பயணிக்கறோம்’
இப்போ சொல்லுங்க எல்லா வேலையிலயும் ஒவ்வொரு விதமான கஷ்டம் இருக்கத்தானே செய்யுது?”
இந்த இடத்தில் நிறுத்தினார் அவர்.
அவர்?
(கருணாகரனுடன் பரிசல்காரன்)
கருணாகரன். கும்க்கி என்கிற பெயரில் பின்னூட்டங்கள் போடுகிறார். கிருஷ்ணகிரியில், கூட்டுறவு வங்கியில் செகரட்டெரியாக இருக்கிறார்.
ஓரிரு வாரங்கள் முன்பிருந்தே என்னைச் சந்திக்க வேண்டும் என அலைபேசிக் கொண்டே இருந்தார். (அப்புறம் எப்பதான் வெச்சார்?) சனிக்கிழமை வருவதாகவும், ஞாயிறு மாலை திரும்புவேன் என்றும் கூறினார்.
சனிக்கிழமை ஈரோடு போய் வால்பையனைச் சந்தித்துவிட்டு, வாலோடு திருப்பூர் வந்தார்! மதியமே வந்துவிட்டார். வழக்கம்போல ஆபத்பாந்தவன், அனாதரட்சகன், நண்பர்களுக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய என் உற்ற தோழன், ஆருயிர் நண்பன் (எல்லாம் ஒண்ணுதாண்டா) வெயிலானை அழைத்து ‘ஹி..ஹி.. இந்த மாதிரி இந்த மாதிரி.. இந்த மாதிரி..இந்த மாதிரி..’ என்று சொல்ல, “ஒனக்கு இதே பொழப்பாப் போச்சுய்யா.. ஒனக்காகப் பண்ணல. ஒன்ன நம்பி வர்றவங்களுக்காகவும், திருப்பூரோட சுற்றுலா மேம்பாட்டுக்காகவும் போய் ரிசீவ் பண்றேன்” என்று திட்டிவிட்டு இந்தியா ஹவுஸ் லாட்ஜூக்குப் போய் அவர்களோடு ஐக்கியமானார்.
சற்று நேரத்த்தில் சாமிநாதன் ஒரு பரிசுப்பொருளோடு போய் அவர்களைச் சந்தித்திருக்கிறார். நானும் சரியாகச் சொன்ன நேரத்தில் (இரவு 9 மணி!) அவர்களைச் சந்தித்தேன். தொழிலதிபர் சாமிநாதன் சனிக்கிழமை என்பதால் அவரது நிறுவனத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கச் சென்றுவிட்டார்.
நண்பர் (அஜ்மன் புகழ்) நந்தகோபால் வந்தார். அவர் கருணாகரனுடன் சேர்ந்து ஆன்மிக விஷயங்கள் பேசினார். கருணாகரனின் கைலாஷ் யாத்திரை அனுபவங்கள் வெகு சுவாரஸ்யம்!
12 மணிக்குப் பிறகுதான் என்னோடு பேச ஆரம்பித்தார் கருணாகரன். அரசு சம்பந்தமான அனைத்து விவரங்களும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். அரசு இயந்திரங்கள் குறித்து அவர் பேசியது தனித்தனிப் பதிவாகப் போடலாம்! இப்போது எழுதாதீர்கள்... இன்னும் விவரம் தருகிறேன் என்றிருக்கிறார். அவரே ஒரு வலைப்பூ ஆரம்பித்து எழுதினால் அது ஒரு சிறப்பான துறை சார்ந்த வலைப்பூவாக மிளிரும் என்பதில் ஐயமே இல்லை.
கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் அவரோடு அளவளாவிவிட்டு, கிளம்பும்போது பார்த்தேன். ஒரு பெரிய BAG கொண்டுவந்திருந்தார்.
“என்னங்க.. ரெண்டு நாளைக்கு இவ்ளோ பெரிய பேக்?”
“ஒரு நிமிஷம் இருங்க” என்றவர் பேகைத் திறந்தார்.
புத்தகங்கள்... புத்தகங்கள்... புத்தகங்கள்....
கிட்டத்தட்ட 40க்கும் அதிகமான புத்தகங்கள்!
“ஒவ்வொண்ணாத்தாங்க படிக்க முடியும். ஒண்ணைப் படிச்சுட்டு தர்றேன். அப்புறமா அடுத்தத குடுங்க” என்றேன்.
“மெதுவாப் படிங்க. எல்லாமே உங்களுக்குத்தான்”
எனக்கு பேச்சே வரவில்லை.
இரவு இரண்டு மணிக்கு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றேன்.
அடுத்தநாள் அவர் வால்பையனோடும், இன்னொரு நண்பர் பிலாலோடும் நான் பணிபுரியும் இடத்துக்கே வந்து சென்றார்.
அவர் கிளம்பும் நேரம் ஃபோன் வந்தது. முன்பெல்லாம் பதிவெழுதிக் கொண்டிருந்த.. இப்போது பின்னூட்டங்கள் போட்டுக் கொண்டிருக்கும் பாலராஜன்கீதா தம்பதி சமேதராக திருப்பூர் வந்திருந்தார்கள். புதுகை அப்துல்லா மூலமாக என்னை சென்னையில் கிளம்பும்போதே தொடர்பு கொண்டிருந்தார்கள். அவர்கள் வருவதாகச் சொல்லி அலைபேசினார்கள். சரியாக கும்க்கி, வால்பையனோடு நான் நின்றிருந்த இடத்தில் பாலராஜன் சார் வந்திறங்கினார். (இவரோடு ஆன சந்திப்பு நாளைக்குச் சொல்றேன்...!!)
நான் அறிமுகப்படுத்தினேன்.
“இவர்தாங்க வால்பையன்”
“நிஜமாவா? உங்க பதிவுகள்ல நீங்க மத்தவங்களை கலாய்க்கற மாதிரி கலாய்க்கலியே?”
“இல்லல்ல. இவரு வால்பையன்ங்கறது உண்மை. ஆனா இவரு ‘அவரா’ன்னு தெரியல”
வால்பையன் அடக்கமுடியாமல் சிரிக்க... விடை பெற்றார்கள்.
கும்க்கி (எ) கருணாகரனை பத்திரமாக அழைத்துவந்து என்னைச் சந்திக்கச் செய்த வால்பையனுக்கும், வால்பையனை பத்திரமாக அழைத்துவந்த கருணாகரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
அரசு வேலைகள் குறித்து கருணாகரன் சொன்ன ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
“பப்ளிக்குக்கு அரசு வேலைகள் சம்பந்தமா யாரைப் பார்க்கணும்ன்னு தெரியாததுதான் பெரிய தப்பு. அதுனால ஒரு நாள்ல முடிக்க வேண்டிய வேலைக்கு மக்கள் மாதக்கணக்கா அலையறாங்க. அரசு எவ்வளவோ செலவு பண்ணுது. ஒவ்வொரு அரசு அலுவலகங்கள்லயும் அந்தத் துறைல என்ன வேலை நடக்குது.. எதெதுக்கு யாரைப் பார்க்கணும், குறைந்தது எத்தனை நாள் ஆகும் என்பது மாதிரியான விளக்கக் கையேடு இருந்தா எவ்வளவோ ப்ரச்சினைகள் தீரும். பத்து பேர்ல ஒருத்தனாவது “இது உங்க வேலை. ரெண்டு நாள்ல முடிக்க வேண்டிய வேலையை பத்து நாளா இழுக்கறீங்க”ன்னு தைரியமா போய்க் கேட்பாங்க. ஆனா நாம கேக்கறது தப்போ-ங்கற பயத்துலயே யாரும் ஒண்ணும் கேக்கறதில்ல. இந்த மாதிரி கையேடு வர்றதால அவங்க வேலை அதிகமாகும்ங்கறதும் வராம இருக்கறது ஒரு காரணமா இருக்கலாம். யாராவது பப்ளிக் இண்ட்ரெஸ்ட்டுக்காகவாவது இதப் பண்ணலாம்” என்றார்.
கும்க்கி, ப்ளீஸ் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு நீங்களே அரசுத் துறைகள் பத்தின விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துங்க. இது வேண்டுகோள் இல்லை.
கட்டளை!
21 comments:
பரிசலாரே.. ஸாரி.. சின்னச்சாமி..(பெயர்காரணம் வேண்டுவோர் இந்த வார ஜூனியர்விகடன் 10ம் பக்கம் பாருங்க..)
சின்னசாமி.. வழக்கம் போல் கலக்கலான நடை..
கடைசியில் இட்ட கட்டளை அற்புதம்.. மக்களுக்கு பயனளிக்கும்..
நர்சிம்
சட்டைக்கைக்கும் மனித கைக்கும் வித்தியாசம் தெரியாதவங்க போலிஸானா அப்படித்தான்..
கும்க்கி பெயர் காரணம் சொன்னாரா?
நல்ல பேட்டி.. சாமிநாதனின் அந்த பரிசு வால்பையனுக்கு என்பதை சொல்லாமல் விட்ட பரிசலை கண்டிக்கிறேன்.. :)))
எல்லோருக்கும் தனது உரிமைகளை தெரிந்து கொண்டால் கண்டிப்பாக கேட்க தைரியம் வரும்..
//“இல்லல்ல. இவரு வால்பையன்ங்கறது உண்மை. ஆனா இவரு ‘அவரா’ன்னு தெரியல”//
யாருங்க அந்த அவரு?
வெண்பூ said...
நல்ல பேட்டி.. சாமிநாதனின் அந்த பரிசு வால்பையனுக்கு என்பதை சொல்லாமல் விட்ட பரிசலை கண்டிக்கிறேன்.. :)))
//
சாமிநாதனின் அந்த பரிசு வால்பையனுக்கு என்பதை சொல்லாமல் விட்ட பரிசலின் நுண்ணரசியலை இரசித்தேன் :)
பரிசல்காரனின் சந்திப்புகள் அப்பிடின்னு ஓர் தனி ப்லோக் போடுங்க!
Very Nice!
ம்ம்ம்... வரவங்க கூடவெல்லாம் 3 மணி நேரம் பேசறீங்க... நம்ம கூட பேச நேரம் கிடைக்கல.... இருக்கட்டும் இருக்கட்டும்.... அடுத முறை ஞாயித்துக்கெழமை பாத்து வரேன். :))
@ கார்க்கி : கும்க்கிங்கறது மத்த மதம் புடிச்ச யானைகள அடக்கற யானைக்குப் பேருன்னு அவர் சொன்னதா நினைவு... சரிதானே பரிசல்... சாரி க்ருஷ்ணா... சாரி சாரி சின்னச்சாமி... (ஒரு ஆளுக்கு எவ்ளோ பேருய்யா?)
//Mahesh said...
@ கார்க்கி : கும்க்கிங்கறது மத்த மதம் புடிச்ச யானைகள அடக்கற யானைக்குப் பேருன்னு அவர் சொன்னதா நினைவு...
//
அப்படியா சொல்றீங்க? அவரால யானையை ஒண்ணும் அடக்க முடியலயாமே.. கேள்விபட்டேன்.. :)))
சின்னசாமிக்கு வாழ்த்துக்கள்
ஹலோ பரிசல் என்னையும் தான் வால்பையனும் கும்கியும் திருப்பூருக்கு வரச்சொல்லி கூப்பிட்டார்கள் என்னால் தான் வரமுடியவில்லை....
congratulations. my best wishes for more success
பரிசல்... சூப்பர் சூப்பர்... கலக்குங்க....
// வெண்பூ said...
நல்ல பேட்டி.. சாமிநாதனின் அந்த பரிசு வால்பையனுக்கு என்பதை சொல்லாமல் விட்ட பரிசலை கண்டிக்கிறேன்.. :))) //
நடக்கும் ஜானியின் கருப்பு லேபிள்...பாஸ்...
இப்போ திருப்தியா...?
ஆஹா.. எல்லாருக்கும் நன்றி போடறதா.. ஒரு :-) மட்டும் போடவா.., என்ன பண்ணினாலும் திட்டறாங்களே...
சரி..
தேங்க்ஸுப்பா!
அலுவலக பணிப்பளு அதிகம் தோழர்....மன்னிக்கவும்..பின்னர் தொடர்புக்கு வருகிறேன்.
“ஒவ்வொண்ணாத்தாங்க படிக்க முடியும். ஒண்ணைப் படிச்சுட்டு தர்றேன். அப்புறமா அடுத்தத குடுங்க” என்றேன்.
“மெதுவாப் படிங்க. எல்லாமே உங்களுக்குத்தான்”//
கும்கியிடம் அப்படியே பெருங்குடிக்கு வரும் வழியை சொல்லிவிட்டீர்கள்தானே.. பேட்டி கச்சிதம்.!
அந்த படம் எடுத்தது யாருங்க ரொம்ப அருமையா இருக்கு
சந்திப்புக்கு ப்ளீச்சிங் பவுடரும் வந்திருந்தாராமா
அத பத்தி சொல்லவேயில்லை
//கும்க்கி, ப்ளீஸ் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு நீங்களே அரசுத் துறைகள் பத்தின விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துங்க. இது வேண்டுகோள் இல்லை.
கட்டளை!//
என் சார்பா அன்பு வேண்டுகோள்
Post a Comment