Friday, October 17, 2008

அப்துல்லாவின் போட் ஹவுஸ் அனுபவங்கள்

குமரகம். நான்கு வருடங்கள் முன்பு ஏக்கர் ரூ. 50000-லிருந்து 1 லட்சம் வரை மட்டுமே இருந்த இந்த இடம், ஸ்ரீலங்காவின் சிரிமாவே பண்டாநாயகா வருகிறார். மீடியா குவிகிறது. அடுத்ததாக வாஜ்பாய். அதற்குப்பிறகு குமரகம் ஒரு மிகச் சிறந்த சுற்றுலாத்தளமாகி விட்டது. இப்போது அந்த இடத்தில் நிலத்தின் மதிப்பு ஏக்கருக்கு ஒன்றரைக் கோடி ரூபாய்!

இயற்கையால் சூழப்பட்ட அங்கே சென்று வந்திருக்கிறார் நமது நண்பர் புதுகை அப்துல்லா. அங்கே சென்று வந்ததை கடவுளின் சொந்த தேசம் என்ற பதிவிலும், சில புகைப்படங்களை இந்தப் பதிவிலும் போட்டுவிட்டாலும் முழுமையாக சில விஷயங்களைச் சொல்லவில்லை என்றிருக்கிறார்.

பரிசலின் அண்ணன்தான் போட்! ஆகவே போட் ஹவுஸில் தங்கிய அப்துல்லாவின் அனுபவத்தை பரிசல்காரன் பேட்டி எடுத்தால் என்ன என்று தோன்றியது. இதோ...

நீங்க தங்கினது போட் ஹவுஸ் யாரோடது?

இயக்குனர் ஃபாசில், கே.எஸ்.ரவிகுமார், நடிகர் ஜெயராம் மூணுபேருக்கு சொந்தமானது. அவங்களுக்கு மொத்தம் 20 போட் ஹவுஸ் இந்த மாதிரி இருக்கு. நான் போனது ரெயின்போ க்ரூஸ்.

போட் எப்படி இருந்தது?

அருமைண்ணே. நார்மல் கேட்டகிரி, டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ். எதுவா இருந்தாலும் ஏ.ஸி.தான். ஒரு நாள் வாடகை 4500 ரூபாய்லிருந்து 15000 வரை வேறுபடுது. ஒரு ரூம், ரெண்டு ரூம்ன்னு அஞ்சு ரூம் வரைக்கும் இருக்கற போட் ஹவுஸ் இருக்கு. கான்ஃப்ரென்ஸ், மீட்டிங் நடத்தறதுக்கு கூட போட் இருக்கு.

நார்மல் போட்ல லிவிங் ரூம், பெட்ரூம். டாய்லெட் தனியா. டீலக்ஸ்ன்னா வ்யூவிங் ரூம், பெட்ரூம் டாய்லெட் அட்டாச்ட். சூப்பர் டீலக்ஸ்ன்னா டைனிங் ரூம் எக்ஸ்ட்ராவா தனியா இருக்கு. அதுனால் நாம குடும்பத்தோட ஃப்ரீயா இருக்கலாம்.

நீங்க எத்தனை நாள் போட் ஹவுஸ்ல இருந்தீங்க?

ரெண்டு நாள். ஒரு நாள்ன்னா காலைல 11 மணிக்கு ஏறினோம்னா, அடுத்த நாள் காலைல 10 மணிக்கு கொண்டுவந்துவிடறாங்க. ஒரே நாள்ல வரணும்னா காலைல 10 மணிக்கு கூட்டீட்டு போய் மாலை 6 மணிக்கு வந்து விட்டுடறாங்க.

கிட்டத்தட்ட 400 கிலோ மீட்டர் அளவிலான பேக்வாட்டர் ஏரியால பயணிக்குது. பேக்வாட்டர் சில இடத்துல ஏரியா, சில இடங்கள்ல ஓடையா இருக்கு. வயல்வெளிகள் தண்ணீரோட லெவலுக்கு ரெண்டு அடிக்கு கீழ இருக்கு! இப்ப்டி ஒரு அமைப்பு உலகத்துலயே ஆம்ஸ்டர்டாம்லயும்தான் இருக்கு.

ம்ஜான் நோன்பு முடிஞ்சதும் ‘தண்ணி’ல பயணமா? ம்ம்ம்.. இருக்கட்டும். பயணம் எப்படி இருந்தது?

அருமையா இருந்ததுண்ணே. வெறும் தண்ணிக்குள்ள-ன்னு இல்ல. உள்ள நிறைய குட்டிக் குட்டித் தீவுகள் இருக்குண்ணே. அவங்களுக்கு டவுன்பஸ் மாதிரி சின்ன சின்ன போட் சரிவீஸ் கவர்மெண்டே விடறாங்க. ஆஸ்பெட்டாஸ் ஷீட் வெச்சு கட்டி, அதுக்கடில போட்டை நிறுத்தி வெச்சிருக்காங்க. பஸ் ஸ்டாப் மாதிரியே போட் ஸ்டாப் இருக்கு. கண்டக்டர் இருக்காரு.

ஒரே வித்தியாசம் சில்லறை இல்லாமப் போனா இறக்கிவிடமாட்டாரு இல்லியா?

(சிரிக்கிறார்..) ஆமாண்ணே.


நீங்க போன போட் ஹவுஸ்ல எத்தனைபேர் சர்வீஸூக்கு இருந்தாங்க?

4 பேர்ண்ணே. ரெண்டு ட்ரைவர் (பரிசல்காரன் கூடவே இருந்திருக்காரு!) சர்வீஸுக்கு ஒருத்தர். சமையல்காரர் ஒருத்தர். மதியம் 12.30 மணிக்கு ஒரு இடத்துல நிறுத்தறாங்க. சமையலுக்கு தேவையான மீன், சிக்கன் மற்ற ஐட்டமெல்லாம் வருது. நான் சைவம்ங்கறதால சைவ சாப்பாடுதான். கொஞ்ச நேரம் அங்கிருந்துட்டு 1.45க்கு சாப்பாடு ரெடியாய்டும். போட் ஸ்டார்ட் ஆகி, போய்ட்டே சாப்டறோம். ஆறு மணிக்கு ஒரு குறிப்பிட இடம் இருக்கு. இந்த மாதிரி வர்ற போட் எல்லாம் அங்க நிக்குது. வயல்வெளியெல்லாம் இருக்கற கிராமம் மாதிரியான இடம். எல்லா போட்ல இருந்து வர்றவங்களும் அங்க இறங்கி, காலாற நடந்து சுத்திப் பார்க்கலாம். இரவு அங்கயேதான் தங்கல்.

அடுத்தநாள் காலைல 8 மணிக்கு ஆரம்பிச்சு, 9 மணிக்கு டிஃபன். நல்ல கவனிப்புண்ணே. கண்டிபபா ஒரு தடவை போய்ட்டு வாங்க!

உங்களை மாதிரி பெரிய ஆளுக போகலாம். சாதாரணமானவங்க...

நிச்சயமா போகலாம்ணே. சுற்றுலா-ன்னா மத்த இடங்களுக்குப் போனா இங்க போகணுமே, அங்க போகணுமே-ங்கற டென்ஷனும், ரெண்டு நாள்ல எல்லா இடத்துலயும் சுத்திப் பாக்கணும்ங்கற டென்ஷனும் இருக்கும். இங்க அது இல்லவே இல்ல! அலைச்சலே இல்ல. போட்ல உக்கார்ந்து அவங்களே எல்லா எடத்துக்கும் கூட்டீட்டுப் போயிடறாங்க!

ரெண்டுநாள் டூர் மாதிரின்னா (அதாவது 24 மணிநேரம் போட்ல இருக்கலாம். காலைல 11 மணில இருந்து 10 மணிவரை) போட் வாடகை சேர்த்து 7000லிருந்து 10000 வரை ஆகும். அவ்ளோதான்! நீங்க எங்க இருந்து போறீங்களோ அதைப் பொறுத்து.

அதேமாதிரி எக்ஸ்ட்ரா ரூம் இருக்கற போட் ஹவுஸைத் தேர்ந்தெடுத்துப் போனீங்கன்னா, கூட 500 அல்லது 1000தான் எக்ஸ்ட்ரா வரும். ரெண்டு ஃபேமிலி போகலாம். செலவை ஷேர் பண்ணிக்கலாம்!

இயற்கையை மட்டும்தான் ரசிக்கப் போறீங்க. ஒண்ணும் வாங்கப்போறதில்ல! நிச்சயமா எல்லாரும் போகவேண்டிய இடம்ணே!

***********************

ஒரு பூலோக சொர்க்கத்துக்கு போய்வந்த மனநிறைவோடு பேட்டியை முடிக்கிறார் அப்துல்லா!



இவரோடு நடந்த ஒரு மணிநேரப் பேட்டியில் நான் தெரிந்துகொண்ட முக்கியமான விஷயம்..


செந்திலுக்கு அடுத்தபடி (செந்திலாவது கவுண்டமணியை மட்டும்தான் அப்படி விளிப்பார்.) அவரை விட அதிகமாகவே அண்ணேவை பயன்படுத்து இவர்தான்!

23 comments:

வெண்பூ said...

பேட்டி சூப்பர்.. தேவையான எல்லா விசயத்தையும் அவர்கிட்ட இருந்து கேட்டு வாங்கிட்டீங்க.. சூப்பர்..

Cable சங்கர் said...

ம்ஹூம்ம்.. யாராவது ஓரு ப்ரோடியூசரை ஆட்டய போட்டு டிஸ்கஷன் போட்டுறணும்...

Unknown said...

அருமையான போக வேண்டிய இடம். தென்னங்கள்ளும், மீன் வகை உணவும் எடுத்துக் கொண்டே ஒரு நாள் முழுக்க தனி போட்டில் சென்றோம் 2 வருடங்கள் முன். நல்ல அனுபவம். ஆனால், நாங்க போனது தங்குற மாதிரியான போட் இல்லை.

rapp said...

//ஒரே வித்தியாசம் சில்லறை இல்லாமப் போனா இறக்கிவிடமாட்டாரு இல்லியா?

(சிரிக்கிறார்..) ஆமாண்ணே.

//
ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ......................

rapp said...

இதுல அவர விட உங்கள பாராட்டறேன், ஏன்னா அவர்கிட்ட இப்டி தேவையான கேள்விக்கேட்டு கரெக்டான பதில் வாங்கறது ரொம்பக் கஷ்டம்:):):)

narsim said...

எல்லா விவரங்களையும் அறிந்ததில் மகிழ்ச்சி பரிசலாரே.. அடுத்த மாசம் அங்கனதான்.. போய்ட்டு வந்து சொல்றேன்..(சே சே.. பேட்டியால்லாம் போடவேணாம்ஜி..)
தகவல்களுக்கு நன்றி அப்துல்லா & பரிசலார்..

நர்சிம்

Ramesh said...

Very good Tour Interview!

Parisal to BoatHouse, good one!

☼ வெயிலான் said...

அப்துல்லா அண்ணனை ரெண்டு மூணு பதிவு போட வைக்கலாம்னு பாத்தா, இடையில புகுந்துக்கிட்டு யாரு பேட்டி எடுக்க சொன்னது பரிசல்?

பேட்டியும் நல்லாத் தான் இருக்குது :)

Mahesh said...

அப்ப அப்துல்லா அவரோட வலைப்பூவுல... "எழுத்தாளரான பதிவருடன் ஒரு நேர்காணல்" அல்லது "பரிசலின் ஜூ.வி. அனுபவங்கள்"னு ஒரு பதிவப் போட்டுடலாம்...

பரிசல்காரன் said...

நன்றி வெண்பூ!

கேபிள் சங்கர்.. குடுத்து வெச்சவரு நீங்க.. டிஸ்கஷனுக்கு நமக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான்னு நம்மளையும் கூட்டீட்டு போக மாட்டீங்களா என்ன?

@ தஞ்சாவூரான்

வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.

@rapp

அப்படியெல்லாம் இல்லம்மா. அவரைப் பேச விட்டுட்டேன் முழுசா. அப்புறமா அதை இண்டர்வ்யூ ஃபார்மெட் ஆக்கீட்டேன்!

@ நர்சிம்

//ரெண்டு ஃபேமிலி போகலாம். செலவை ஷேர் பண்ணிக்கலாம்!//

ஹி..ஹி..!

பரிசல்காரன் said...

@ ramesh

நன்றி தோழர்!

@ வெயிலான்

அப்படி இல்ல நண்பா. அவரு ரொம்ப பிஸியாம். எப்ப எழுதுவேன்னும், எழுதுவேனானேன்னும் தெரியல-ன்னார். இந்தத் தகவல்கள் நண்பர்கள் எல்லார்க்கும் போய்ச் சேரணும்ணே’ன்னு ஆதங்கப்பட்டார். வலிய வந்து ஒரு நாளைக்கான மேட்டரைத் தர்றாரு. சும்மா விடுவோமா நாம...!

@ மகேஷ்

ரொம்பத்தான் குறும்பு சார் உங்களுக்கு!

விஜய் ஆனந்த் said...

:-))))...

பரிசலார் தலைமையில் படகு வீட்டுக்கு போகலாமா???

பரிசல்காரன் said...

@ விஜய் ஆனந்த்

அட.... வெறும் ஸ்மைலி மட்டும் போடாம ரெண்டு வார்த்தை எழுதிருக்காரே..!

சின்னப் பையன் said...

பேட்டி சூப்பர்.

வால்பையன் said...

//இவரோடு நடந்த ஒரு மணிநேரப் பேட்டியில் நான் தெரிந்துகொண்ட முக்கியமான விஷயம்..//

மாசம் எவ்வளவு போன் பில் வருது

வால்பையன் said...

இந்த பதிவுக்கு 16-வது பின்னூட்டம் போட்டவரை பரிசல் அவர் செலவில் அங்கே அழைத்து செல்வார்

வால்பையன் said...

அட அது நான் தானா

வெங்கட்ராமன் said...

போட்டோ ஏதும் எடுக்கலையா. . .

அங்க கொசுக்கடி ஜாஸ்த்தி ன்னு சொன்னாங்களே. . .
உண்மையா. . .

Thamira said...

ஏற்கனவே காஞ்சு போய் கிடக்குறவங்களுக்கு நல்லா சொல்றாய்ங்கய்யா.. டீட்டெய்லு.!

முரளிகண்ணன் said...

\\ஏற்கனவே காஞ்சு போய் கிடக்குறவங்களுக்கு நல்லா சொல்றாய்ங்கய்யா.. டீட்டெய்லு.!\

double repeattee

வீணாபோனவன் said...

ரொம்ப நென்னா இருக்கு பரிசலாரெ... ரெண்டு நாள் பரிசல் போட்டு ரொம்ப கஷ்டப்பட்டிருப்பிங்க போல???

-வீணாபோனவன்.

Veera said...

//ஆஸ்பெட்டாஸ் ஷீட் வெச்சு கட்டி, அதுக்கடில போட்டை நிறுத்தி வெச்சிருக்காங்க. பஸ் ஸ்டாப் மாதிரியே போட் ஸ்டாப் இருக்கு. கண்டக்டர் இருக்காரு.//

கேரளாவில், இந்த மாதிரியான தண்ணீர் வழிப் போக்குவரத்துகள் கிட்டத்தட்ட எல்லா பெரிய ஏரிகளிலும் உண்டு. கொல்லம் அஸ்தமுடி ஏரியில், நான் ஒருமுறை அரசு படகில் பயணித்ததுண்டு. நல்ல வேளையாக, படகு நின்று விட்டால், இறங்கி தள்ள எல்லாம் சொல்லவில்லை. :D

புதுகை.அப்துல்லா said...

17 October, 2008 7:52 PM
வெங்கட்ராமன் said...
போட்டோ ஏதும் எடுக்கலையா. . .

அங்க கொசுக்கடி ஜாஸ்த்தி ன்னு சொன்னாங்களே. . .
உண்மையா. . .

17 October, 2008 7:59 PM
//

venkatraman anna,

photos ellam en blog il irukku. appuram kosu athigam irukku but since thery r giving us A/C room with killing bat we could manage :)