சினிமாத் தொடர் பதிவுகளைப் பார்த்து வெறுத்துப் போய்த்தான் தூயா இந்தப்பதிவை எழுதி இருப்பார் என நினைக்கிறேன். பாலா அண்ணா சொன்னார் என்று சைடு பாரில் நமது உணர்வைக் காண்பித்ததோடு மட்டுமல்லாது, தூயாவின் கட்டளைக் கிணங்க, இந்தத் தொடரில் பங்கேற்பதும் மிக முக்கியம் என்று தோன்றியதால் இன்றைக்கே இந்தப் பதிவை இடுகிறேன்.
1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?
அவ்வளவாகத் தெரியாது என்றா உண்மையைச் சொல்வதில் உள்ள சங்கடத்தை உணர்கிறேன்.
பள்ளியில் படிக்கும்போது, இலங்கையில் கலவரம், போர் நடக்கும் சமயத்தில் அருகிலுள்ள கல்லூரி மாணவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களை வெளியேறச் சொல்லி ஸ்ட்ரைக் செய்தார்கள். அபோதுதான் ஈழம் பற்றி சிந்திக்க வைத்தது.
கன்னத்தில் முத்தமிட்டால் படமும் என்னுள் ஈழம் பற்றி தாக்கத்தை ஏற்படுத்தியது எனப்தை மறுப்பதற்கியலாது.
2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?
தமிழ் ஈழம் ஒரு சுதந்திர நாடாக, போர்களற்ற தேசமாக மலர்ந்து எம் குழந்தைகள் கண்ணீருக்கும், ரத்தத்திற்கும் பதில் புன்னகையைச் சிந்தும் நாளை எல்லோரும்போலவே நானும் மிக எதிர்பார்க்கிறேன்.
3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?
காசி ஆனந்தனின் கவிதைகள் மிகப் பிடிக்கும். அவர் உடுமலைப்பேட்டையில், அவரது ‘நறுக்குகள்’ நூலை வெளியிட வந்தபோது சந்தித்திருக்கிறேன்.
பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், வை.கோ. என யார் ஈழம் பற்றி எழுதியிருந்தாலும் படிப்பதுண்டு.
ஈழத்து செய்திகளை ஈழத்தில் இருந்தவர்கள் எழுத்தில் படித்தால்தான் அதன் வலியும், உணர்வும் புரிபடும் என்பதை உங்கள் (தூயா) நானும் என் ஈழமும் படிக்கும்போது உணர்ந்தேன்.
4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?
என்னால் என் வலைப்பூவில் ஒரு WIDGETஐ மட்டுமே இணைக்க முடிகிறது. ஆனால் அரசியல்வாதிகளால், அரசால் இப்போது செய்வதை விட இன்னும் நிறைய செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. செய்ய வேண்டும் என்னும் ஆதங்கமும் உண்டு.
5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?
உங்கள் கண்ணீர் நின்றுபோகும் வரை போராடுங்கள் என்று ஊக்கப்படுத்தலாம். எந்தச் சூழலிலும் நம்பிக்கையைத் தளரவிடாதீர்கள் என்று ஆதரவாய்ப் பேசலாம். வேறு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
வையமெல்லாம் பகைவர்
நமைமோதும் வேளை - உன்
கையிரண்டும் களத்தில்
ஏந்தாதா வாளை?
-காசி.ஆனந்தன்
இந்தத் தொடரை எழுத முன்று பேரை அழைக்கச் சொல்லியிருக்கிறார்.
நான் அழைப்பது..
1) LOSHAN
2) செயபால்
16 comments:
:(
//ஆனால் அரசியல்வாதிகளால், அரசால் இப்போது செய்வதை விட இன்னும் நிறைய செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. செய்ய வேண்டும் என்னும் ஆதங்கமும் உண்டு.//
மறுமொழிகிறேன் !!!
தன்னலம் கருதும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை இதை போல பிரச்சனைகள் தொடரும் என்றே கருதுகிறேன்.
பாதிக்கப்படும் ஒன்றும் அறியா அப்பாவிகளின் நிலை என்று மாறுமோ!
அன்புள்ள பரிசல் அண்ணா.. உங்கள் அழைப்பு எனக்கு பெருமையை அளித்திருக்கிறது. நன்றி.
ஆனால் நான் இன்னும் இலங்கையில் இருக்கிற தமிழன்.ஈழ உணர்வு நிறையவே இருக்கிற ஒருவன். எனது பதிவுகள் அடிக்கடி இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றியே பேசுவதால் இந்தத் தொடரில் நான் இணைவது பொருத்தமாக இருக்காது என நினைக்கிறேன். நீங்கள் எனக்காக இன்னொருவரை அழைக்கவும்.
பி.கு - உங்கள் சுருக்கமான பதிவு உண்மையான உங்கள் பார்வையை,பரிவை சொல்லுகிறது,நன்றிகள்
நன்றி கார்க்கி
நன்றி பாஸ்கர்!
நன்றி கிரி...!
@ லோஷன்
இலங்கையில் நீங்கள் இருப்பதால், உங்கள் உணர்வை அறியவே இந்தத் தொடருக்கு அழைத்தேன். நீங்கள் எழுதவேண்டுமென்பதே என் விருப்பம்!
அண்ணே.. அதில் கேட்கப்பட்ட எல்லா விஷயங்களையும் நான் என் பதிவுகளில் அடிக்கடி சொல்லி வருகிறேன்.. ஈழம் பற்றி நன்றாக அனுபவப் பட்டிருக்கிறேன்.எனவே இது பற்றி ஒரு சுருக்க வரைவு பின்னர் வரைகிறேன்.. நன்றி,,
நானும் பதிவிடுகிறேன்!
Anyway Nice!
Shall I reply those questions?
:(:(:(
நல்லா ஷார்ப்பா சொல்லிருக்கீங்க
பதிவுக்கு நன்றி.
விட்ஜட் இணைத்தது ஒரு நல்ல தொடக்கம்தான். ஆனால் அதை விட மேலும் நம்மால் செய்ய முடியும் என்றே தோன்றுகிறது. 5 கோடி (அல்லது 7 கோடியா?) தமிழர்களிடம் இந்த மாநில மற்றும் மத்திய அரசுகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இருக்கு. ஈழத்துக்கு சாதகமான நிலையை எடுக்கும் ஆட்சிகளையே தேர்ந்தெடுப்போம்ன்னு இந்த 5 / 7 கோடி தமிழர்களும் முடிவு செஞ்சாங்கன்னா அது ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தை நினைச்சிப் பாருங்க. இந்த 5 / 7 கோடி மக்களின் மனதை மாற்றுவது எப்படிங்கறதுதான் யோசிக்க வேண்டியது. பிரச்சனை பொது வெளியில் (தமிழ் வார இதழ்கள் போன்ற வெகுசன ஊடகங்கள் உட்பட) தொடர்ந்து பேசப்பட வேண்டியது முக்கியம். நம் மீனவர்கள் பிரச்சனையும்தான். தமிழில் பேசுவதோடு ஆங்கிலத்திலும் பேச வேண்டும். மற்றவர்களுக்கு நாம இருக்கறது தெரியணும். நம்ம உணர்வுகள் தெரியணும், அதை அவர்கள் மதிக்கும் அளவுக்கு அதை வெளிப்படுத்த வேணும்.
ஈழத்தின் மனித உரிமைப் பிரச்சனையை விட (அதுக்கு துணை போகும் இந்திய அதிகார மையத்தை விட) நம்ம மாநில பாராளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா அச்சுறுத்தல் ஒரு பெரிய பிரச்சனையா தேசிய மீடியாவில் காட்டப்படுது ழ பேசப்படுது (by the likes of Rajdeep Sardesai of CNN-IBN). இதையெல்லாம் நாம உணரணும். மற்றவர்களையும் உணர வைக்கணும்.
ரமேஷ் (மற்றும் அவரைப் போன்ற ஏனைய பதிவர்களுக்கும்), யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காதீங்க. எழுதுங்க, யாரு காதுலயாவது விழும், அவங்க மனம் மாறக்கூடும்.
ரொம்ப அழகா பத்ரி எழுதி இருக்கார் இப்ப ரீசெண்டா. அதையும் படிச்சி பாருங்க பரிசல்.
நான் புதுசா ப்ளாக் எழுத ஆரபிச்சு இருக்கேன். படிச்சி பாருங்க டைம் இருந்தா.
thodar.blogspot.com
//தமிழ் ஈழம் ஒரு சுதந்திர நாடாக, போர்களற்ற தேசமாக மலர்ந்து எம் குழந்தைகள் கண்ணீருக்கும், ரத்தத்திற்கும் பதில் புன்னகையைச் சிந்தும் நாளை எல்லோரும்போலவே நானும் மிக எதிர்பார்க்கிறேன்.
//
நாளை..
நர்சிம்
@ voice of wings
மிக்க நன்றி தோழரே...
//ரமேஷ் (மற்றும் அவரைப் போன்ற ஏனைய பதிவர்களுக்கும்), யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காதீங்க. எழுதுங்க, யாரு காதுலயாவது விழும், அவங்க மனம் மாறக்கூடும்.//
மிக உறுதியாய் வழிமொழிகிறேன்...
பதிவிற்கு மிக்க நன்றி...
அழையா விருந்தாளியாக எனது கருத்துக்களை சொல்லியிருக்கின்றேன்
இங்கே http://sakthipages.blogspot.com/2008/10/blog-post_23.html
Just for curiosity came to your page as i had been hearing a lot about your page through various sources. out of curiosity posting this comment. ( not sure if you guys accept comments in english - may be you are one of those tamil arvalargal)
I will answer to this question ( chuma oru time passukunu vechunga)
1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?
oru izha tamilaroda 8 masam sernthu iruntha anubavam avaruku thani uthi koduthu avara pesa vitu keta anubavam, "Nantha" padam parka vechu parkum pothay avaruku mogam irandu azhugai vantha anubavam, action padam parkarapa thidirunu avar odambu thuki potu azhurtha partha anupavam, Indian peace force avar vayila AK 47 vayla vechu unuku adika vecha anubavatha avar solla keta anubavam, avar eppadi nata vitu tapi vanthu thanoda manaiviyavum, maganiyum kuti poga kazhtapadratha avar kankala parthu keta anubavam,
oru izhathu islamiya nanbaroda thangai matum usuroda irukanu daily phone pani kekurapa pakathula ninukitu iruntha anubavam. athay nanbar eppadi srilankalernthu india vanthu india passport vangi india citizena agi india va vitu veli natula india citizena vazhara anubavathai nerla parthu therinchukita anubavam.. avan indian citizenavum avar thangai srilankan citizenagavum pirinchu vazhara vedaniaya pakathula irunthu therinthu konda anubavam..
neriya iruku anna intha blog worldla palla peru izha situation vechu blog potu entha anubavaum ellama thanoda karutha pathivu panratha nenachukitu panra alambal than manasuku romba khastama iruku
Post a Comment