‘எதை எழுதறதுன்னாலும் நீட்டி முழக்கித்தான் எழுதுவியா? சுருக்கமா, சூப்பரா ச்சின்னப்பையன் மாதிரி எழுதத் தெரியாதா ஒனக்கு?’ - இது என்னைப் பார்த்து என் நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி. அவருகிட்ட பதிவுலகம் பத்தி சொல்லி, நான் படிக்கற பதிவுகள் சிலதைச் சொல்லி, இதையெல்லாம் படிங்கன்னு சொல்லியிருந்தேன். இப்ப எனக்கே அவரு ஆப்பு வைக்கறாரு. சரி... உண்மையைச் சொன்னா ஒத்துக்கத்தானே வேணும்!
*****************************
ம்யூசிக் சேனல்கள்ல ஃபோன்ல நேயர்கள் கூப்பிடறதும், காம்பியரர்ஸ் அதுக்கு கெக்கே பிக்கேன்னு சிரிச்சுகிட்டே வழக்கமான பேச்சுகளை பேசறதையும் பார்க்கறப்போ பல சமயம் கடுப்பாகுது. யாராவது நேயர்கள் வித்தியாசமா பேசமாட்டாங்களான்னு எதிர்பார்ப்பு வருது.
கீழ்க்கண்ட மாதிரியான உரையாடல்கள் வராதான்னு ஏக்கமா இருக்கு...
********************
தொகுப்பாளினி: “யாருக்கு வாழ்த்துச் சொல்லணும்?”
நேயர்: “என் பேரு ஆறுமுகம். ஆறுமுகம்ங்கற பேர் இருக்கற எல்லாருக்கும் வாழ்த்துச் சொல்லணும்!”
*********************
தொகுப்பாளினி: “உங்க டி.வி. வால்யூமைக் கொஞ்சம் கம்மி பண்ணுங்களேன்”
நேயர்: “சரிங்க..” என்றுவிட்டு வீட்டில் சொல்கிறார். மனைவியின் குரல் கேட்கிறது.. “நீங்க அவகூட கடலை போடறதுக்கு நான் எதுக்கு சவுண்டைக் கம்மி பண்ணனும்?”
நேயர் ஃபோனைத் துண்டிக்கும் ஒலி கேட்க, தொகுப்பாளினி வழிகிறார்.
**********************
தொகுப்பாளினி: “உங்களுக்கு என்ன பாட்டு வேணும்”
நேயர்: “எந்தப் பாட்டும் வேண்டாம். ஒரு பாட்டு ஒளிபரப்பாகற அஞ்சு நிமிஷத்துக்கு உங்க சேனல்ல ஒண்ணுமே ஒளிபரப்பாம ப்ளாங்கா காமிங்களேன். ப்ளீஸ்..”
************************
நேயர்: “ஹலோ...”
தொகுப்பாளினி: “ஹலோ”
நேயர்: “ஹலோ”
தொ: “ஹலோ.. சொல்லுங்க. கேக்குது. சன் ம்யூசிக் ஹலோ உங்களுடன்”
நேயர்: “என்னது.. சன் ம்யூசிக்கா?”
தொ: “ஆமாங்க. நான் ப்ரியா பேசறேன்’
நேயர்: “ஸாரிங்க. தப்பா டயல் பண்ணீட்டேன்” என்றுவிட்டு டொக்கென்று தொடர்பைத் துண்டித்துவிடுகிறார்.
***********************
இது பத்தி பேசும்போது நம்ம தல சுஜாதா எழுதினதுதான் ஞாபகத்துக்கு வருது..
தொகுப்பாளினி: “ஹலோ.. நான் ப்ரியா பேசறேன்”
நேயர்: “ஹலோ... ப்ரியாவா? ஐயோ நம்பவே முடியலைங்க. நான் உங்களை நாலஞ்சு வருஷமா ட்ரை பண்றேன். இப்போதான் லைன் கிடைச்சது...”
33 comments:
சூப்பர்ம்மா..
நன்றி ரவி சார்..
பாட்டுன்னதும் வந்தீங்க போல. ஏமாற்றமா உணர்ந்தீங்கன்னா, ஸாரிங்க..
தொகுப்பாளினி: “உங்க டி.வி. வால்யூமைக் கொஞ்சம் கம்மி பண்ணுங்களேன்”
நேயர்: “சரிங்க..” என்றுவிட்டு வீட்டில் சொல்கிறார். மனைவியின் குரல் கேட்கிறது.. “நீங்க அவகூட கடலை போடறதுக்கு நான் எதுக்கு சவுண்டைக் கம்மி பண்ணனும்?”
அந்த நேயர் நீங்கதானே!:-)))))))))))
//இது பத்தி பேசும்போது நம்ம தல சுஜாதா எழுதினதுதான் ஞாபகத்துக்கு வருது..
தொகுப்பாளினி: “ஹலோ.. நான் ப்ரியா பேசறேன்”
நேயர்: “ஹலோ... ப்ரியாவா? ஐயோ நம்பவே முடியலைங்க. நான் உங்களை நாலஞ்சு வருஷமா ட்ரை பண்றேன். இப்போதான் லைன் கிடைச்சது...”//
பரிசக்கார அண்ணே, நீங்களே ஏன் ட்ரை பண்ணகூடாது?
:))))))))Nice..!! :))
//யாராவது நேயர்கள் வித்தியாசமா பேசமாட்டாங்களான்னு எதிர்பார்ப்பு வருது.//
இந்த குசும்பு தானே வேண்டாங்கறது
நீங்க எப்படி பேசுவிங்களாம்
//நான் உங்களை நாலஞ்சு வருஷமா ட்ரை பண்றேன்.//
இது நீங்க சொன்னதாமே
கலக்கல் :))
உங்களுடய இந்த பதிவு எனது ரீடரில் இன்னும் அப்டேட் ஆகவில்லையே
என்ன காரணம்?
\\
சரிங்க..” என்றுவிட்டு வீட்டில் சொல்கிறார். மனைவியின் குரல் கேட்கிறது.. “நீங்க அவகூட கடலை போடறதுக்கு நான் எதுக்கு சவுண்டைக் கம்மி பண்ணனும்?”
\\
சொந்த கதையா தோழர்
Very Very Nice!
:):)
பரிசல் உங்களின் கருத்துகள் எதிர்பார்கிறேன்.
http://cablesankar.blogspot.com/2008/10/blog-post_29.html
இந்த பதிவுக்கு..
நேயர்: “ஹலோ...”
தொகுப்பாளினி: “ஹலோ”
நேயர்: “ஹலோ”
தொ: “ஹலோ.. சொல்லுங்க. கேக்குது. சன் ம்யூசிக் ஹலோ உங்களுடன்”
நேயர்: “என்னது.. சன் ம்யூசிக்கா?”
தொ: “ஆமாங்க. நான் ப்ரியா பேசறேன்’
நேயர்: “ஸாரிங்க. தப்பா டயல் பண்ணீட்டேன்” என்றுவிட்டு டொக்கென்று தொடர்பைத் துண்டித்துவிடுகிறார்.
kalakkal
அவ்வ்வ்.. சந்தடி சாக்குலே என்ன வாரிட்டீங்க.... சரக்கு இருக்கறவன் உங்கள மாதிரி நீளமா எழுதலாங்க.... நான்..... :-(((
அது சரி... தீபாவளிக்கு லீவ் போட்டீங்க.. ஓகே... நேத்திக்கு லீவ் லெட்டர் குடுக்கவேயில்லையே...... திஸ் இஸ் டூ பேட்....
நேயர்: ஹலோ மேடம். எனக்கு அடுத்த மாசம் திருமணம் ஆகப்போது. என் வருங்கால மனைவிக்காக இந்த பாட்டு போடுங்க - "மச்சினிச்சி வர்ற நேரம்.... "
நான் வாழ்க்கையே வெறுத்துப்போகும் தருணமாக நான் கருதுவது, சானல் மாறும் இடைவெளியில் இந்த உரையாடல்களை கேட்டுவிட நேரும் தருணங்களைத்தான்.
இது வித்தியாசம் பிளஸ் அநாகரீகம் அப்படீங்கற கேட்டகிரில சேத்துக்கலாம். சன் மியூசிக்ல ஒரு நாள் சாயந்திரம், மாலினி யுகேந்திரன் தொகுத்து வழங்கினப்போ ஒருத்தர் கடைசி காலரா(அந்தாள காலரா கிருமின்னும் சொல்லலாம்) வந்தார். இவங்கள ஏதோ ஒரு கேள்வி கேட்டார். அவங்களும் ஒரு பதில் சொல்லி சிரிச்சாங்க. உடனே அவரு, 'தோடா, ஐயே சிரிப்பைப் பாரு, மேடம் தயவுசெஞ்சு சிரிக்காதீங்க பயமா இருக்குன்னு' அடுக்கிக்கிட்டே போகும்போது டிவிக்காரங்க தொடர்ப கட் பண்ணிட்டாங்க. பாவம் மாலினி முகம் அப்படியே மாறிப் போச்சு:(:(:(
//நேயர்: ஹலோ மேடம். எனக்கு அடுத்த மாசம் திருமணம் ஆகப்போது. என் வருங்கால மனைவிக்காக இந்த பாட்டு போடுங்க - "மச்சினிச்சி வர்ற நேரம்.... "//
ஆனா என்ன பாட்டு ஒளிபரப்பாகும்னா, 'ஹே சியான் சியான் சினுக்கு, அவன புத்தூருக்கு அனுப்பு'. ஓகே?:):):)
//சரக்கு இருக்கறவன் உங்கள மாதிரி நீளமா எழுதலாங்க//
அப்டியா? கிருஷ்ணா சார் நீங்க ஆடை ஏற்றுமதித் துறையில் வேலப்பாக்கரீங்கன்னு நெனச்சேன், இது வேறயா?:):):)
தொகுப்பாளினி: “ஹலோ.. நான் ப்ரியா பேசறேன்”
பரிசலார் : ”கொய்யால உனக்கு இன்கம்மிங்.. அதனால ப்ரியா பேசற.. எனக்கு இது அவுட்கோயிங்... நான் ரீச்சார்ஜ் பண்ணி பேசறேன்.. வைடி போனை.. ”:(
அந்த ஒரு பாட்ட உலகத்துல இருக்க எல்லாருக்கும் டெடிகேட் பண்ணுவாங்க அதுதான் இன்னும் காமெடி.
இந்தப் பாட்டை யாருக்கு டெடிகேட் பண்ணணும்னு கேக்கறாங்களே தலைவா, அப்படின்ன இன்னா? அத்தை பற்றி ஒரு விளக்கம் கொடுங்க.
டிஸ்கி: உங்க பதிவை தினமும் படிச்சுடுவேன். ஆனால் பின்னூட்டம் போடறதுக்குத் தான் ரொம்ப சோம்பேரித்தனம்.
ஆலோ யாருங்க...
அரோகரா டிவி அம்மணிங்களா... வணக்கம்...
எங்க ஊரு பரிசல் அருமையா ஒரு பதிவு போட்டிருகாருங்க...
அதுக்காக அவருக்கு "பழம் நீயப்பா" பாட்ட டேடிகேடு பண்ணுங்க...
வச்சிருட்டுங்களா...
கலக்குறீங்க பரிசல்.. அடிக்கடி நடக்குற விசயம்..
தொகுப்பாளினி: உங்க டிவி வால்யூமை கம்மி பண்ணுங்க..
நேயர்: நான் வீட்டுலயே இல்லங்க! வெளிய பப்ளிக் போன்ல இருந்து பேசறேன்..
:))))
நல்லா இருக்குங்க. பட்டய கிளப்புங்க.
))))
என்ன ஆச்சு தலை ரெண்டு நாளா பதிவை காணும் ??
இது எப்போலேந்து, கமெண்ட் approval
அட்ரா அட்ரா நாக்கு மூக்கா
ஒரு நாளைக்கு 22மணி நேரம் செல்லுல பேசிக்கிட்டே இந்த காம்பியரிங் காமெடியயும் கவணிச்சிருக்கீங்களே....அடேங்கப்ப்பா.
என்னாச்சு..? :((.
மாடுலேஷன் ?
நீங்களும் உஜாலாவுக்கு மாறிட்டீங்களா.......
என்னாச்சு பரிசல், (பத்திரிகை பணிகளில்) ரொம்ப பிஸியா? தொடர்பதிவுக்கு வேற உங்களை கூப்பிட்டு வெச்சிருக்கேனே.. கொஞ்சம் கடைப்பக்கம் வாங்க.!
Post a Comment