(வேலன், வெயிலான், பரிசல்காரன்,. வெங்கட்ரமணன்)
வழியில் தென்பட்ட இந்த வாய்க்கால் கரையோரம் கொஞ்ச நேரம் காலாற நடந்தோம். ஒரு இடத்தில் அண்ணாச்சி துண்டு போட்டு, அங்கே இருந்த ஒருவரிடம், “இந்த இடத்தைப் பத்திரமா பாத்துக்கங்க. வரும்போது குளிக்கணும்” என்றார். வெயிலான் இந்த வருடத்துக்கு ஏற்கனவே குளித்ததால் மறுத்துவிட்டார். அங்கிருந்து புறப்பட்டோம்.
வழியில் தென்பட்ட இந்த வாய்க்கால் கரையோரம் கொஞ்ச நேரம் காலாற நடந்தோம். ஒரு இடத்தில் அண்ணாச்சி துண்டு போட்டு, அங்கே இருந்த ஒருவரிடம், “இந்த இடத்தைப் பத்திரமா பாத்துக்கங்க. வரும்போது குளிக்கணும்” என்றார். வெயிலான் இந்த வருடத்துக்கு ஏற்கனவே குளித்ததால் மறுத்துவிட்டார். அங்கிருந்து புறப்பட்டோம்.
(சின்ன ரஜினி - கிரி)
வழியில் கிரிக்கு அலைபேச, அவர் சிக்னலுக்கு அருகே இருந்த சிக்னலில் (ஆமாங்க) காத்திருந்தார். அவரோடு அவர் மனைவி வீட்டிற்கு சென்றோம்.
(வெங்கட்ரமணன், கிரி, வெயிலான், வேலன்)
(எவ்வளவு நேரந்தான் ஃபோன் பேசறா மாதிரியே நடிக்கறது.. சீக்கிரம் எடுப்பா...)
(எவ்வளவு நேரந்தான் ஃபோன் பேசறா மாதிரியே நடிக்கறது.. சீக்கிரம் எடுப்பா...)
(வெயிலான், தூண், கிரி, வெங்கட்ரமணன், பரிசல்காரன், வேலன்)
நம்புங்கப்பா.. நான் பரிசல்காரன்தான். துடுப்பெல்லாம் இருக்கு பாருங்க. (காந்திஜெயந்தி-ங்கறதால 'தண்ணி' இல்லை!)
1) கிரியின் புகுந்த வீட்டில் என்ன சாப்பிட்டோம்?
2) அதற்குப்பிறகு கிரி வீட்டிற்குப் புறப்பட்டது..
3) கிரியின் தந்தை, தாயின் விருந்தோம்பல்.. (அதுவும் அவங்கப்பா ஒவ்வொருத்தருக்கா பரிமாறினது.... ச்சான்ஸே இல்லை!)
4) நாங்கள் (அட்லீஸ்ட் நான்) சமீபத்தில் கண்டதிலேயே மனதைக் கொள்ளை கொண்ட கிரியின் வீடு
சினிமா ஷூட்டிங்குக்கு பேர் போன முருகன் கோயில்
5) கிளம்பும்போது போன மேலே உள்ள கோயில்...
இதுபற்றியெல்லாம் அண்ணாச்சி எழுதுவார். (கதையெல்லாம்தான் தொடர்பதிவு போடணுமா.. சந்திப்பை தொடர்பதிவா போடக்கூடாதா?)
இரு முக்கியமான விஷயங்கள்:-
வெங்கட்ரமணன் ஆரம்பத்தில் எனக்கு மெயில் அனுப்பி ஜப்பானில் இருப்பதாகவும், அக்.2 கோவை வரும்போது சந்திப்பதாகவும் சொன்னார். நானும் கிண்டலா ஜப்பான்ல இளவரசிக எல்லாம் கயில வெச்சிருக்கற விசிறி வாங்கீட்டு வாங்க-ன்னுட்டேன். மனுஷன் நெஜமாவே ரெண்டு விசிறி வாங்கீட்டு வந்துட்டார்! என் வீட்டு இளவ்ரசிக ரெண்டுபேரும் லீவுக்கு போய்ட்டதால, அவங்க வந்த பின்னாடி விசிறியைக் குடுத்து ஃபோட்டோ எடுத்துப் போடறேன். வெங்கட்ரமணனோட அன்புக்கு நன்றி!
வெங்கட்ரமணன் கோவைக்காரர். சென்னையில் பணி. நாலு மாத ப்ராஜக்ட் சம்பந்தமாதான் ஜப்பான் போயிருந்தாராம். சென்னையில் வேளச்சேரியில் இருந்த அவர், இப்போது குடி போயிருப்பது மடிப்பாக்கம் சதாசிவா நகர். லக்கிலுக், பார்த்துக்கோங்க!
25 comments:
வந்துட்டம்ல
Antha kovilukku eppadi poganum?
:-))))...
இவன் அடங்கவே மாட்டானா???
:))))
//அண்ணாச்சி எழுதுவார்.//
எந்த அண்ணாச்சி எப்ப எழுதுவார்??
கிரி வந்ததும் தகவல் சொல்றன்னு சொன்னீங்களே.. ஓ மறதியா?
பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாத வழக்கம் மன வருத்தமளிக்கின்றது.....கவனிக்கவும்.
//அங்கே இருந்த ஒருவரிடம், “இந்த இடத்தைப் பத்திரமா பாத்துக்கங்க. வரும்போது குளிக்கணும்” என்றார். வெயிலான் இந்த வருடத்துக்கு ஏற்கனவே குளித்ததால் மறுத்துவிட்டார். அங்கிருந்து புறப்பட்டோம்.//
கலக்கல்..
நர்சிம்
யோவ் பரிசல்,
அடங்கவே மாட்டியா?
இரு! லதானந்த் அங்கிளை (ப.க) எழுத சொல்றேன்.
//நான் பரிசல்காரன்தான். துடுப்பெல்லாம் இருக்கு பாருங்க. (காந்திஜெயந்தி-ங்கறதால 'தண்ணி' இல்லை!)//
நச் கமெண்ட் பரிசல். இந்த டைமிங்குக்காக தான் நான் உங்களுக்கு ஜால்ரா அடிக்க வேண்டியிருக்கிறது :-)
//இப்போது குடி போயிருப்பது மடிப்பாக்கம் சதாசிவா நகர். லக்கிலுக், பார்த்துக்கோங்க!//
மடிப்பாக்கம் வலைப்பதிவர் பாக்கம் ஆகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஒரு வலைப்பதிவு தம்பதிகளும் மடிப்பாக்கத்தில் குடியிருக்கிறார்கள். லக்கிலுக், குப்பன்_யாஹூ, ஏகப்பட்ட அனானிகளை தொடர்ந்து வெங்கட்ரமணனுமா? :-)
அடுத்து மடிப்பாக்கம் வலைப்பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்துட வேண்டியதுதான்!
நாலாவது ஃபோட்டோல இருக்கிற தூணார்தான் 'பளிச்'னு தெரியுறார்...
சின்ன ரஜினிக்கு வாழ்த்துக்கள்...
என்னை விட்டுட்டு போனதற்கு கண்டனங்கள்
அதனால இதுக்கு மேல நோ பின்னூட்டம்
பரிசல்காரனின் சந்திப்புகள் ன்னு தனியா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருங்களேன்..
நீங்க அடிக்கடி அந்த சட்டைய போடுற மாதிரி தெரியுது???
வெயில் யானை பிரித்து படித்துவிடவேண்டம் :))))))
பிரித்து படிக்காவிட்டாலும் அப்படித்தான் இருக்கிறார்,
இந்த ஆண்டிற்கு குளித்துவிட்டார் :))))))))))
அடிமை சிக்கிட்டாருன்னு இந்த வாங்கு வாங்குறிங்க :)))))))))))))
சிங்கை சிங்கம் கிரியையும் அவரது மகனையும் சந்தித்தமைக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்.
ஆனாலும் இந்த பதிவோட தலைப்புல எங்க சிங்கம் கிரியோட பெயரகுறிப்பிடாமல் விட்டதற்காக கடுமையான கண்டணங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
சிங்கை சிங்கங்கள் பேரவை
//ரமேஷ் said...
Antha kovilukku eppadi poganum?
//
என்னக் கேள்விங்க இது, போட்டோல அத்தன படி இருக்குல்ல? அதுல ஏறித்தான் அந்தக் கோயிலுக்கு போவோனும்.,
//வால்பையன் said...
என்னை விட்டுட்டு போனதற்கு கண்டனங்கள் //
நானும் கடுமையாக கண்டிக்கிறேன்.
50,000 வாழ்த்துக்கள்!
Appuram 100,000/- appo unga oorile oru periya paarty?
ஒரே வாரத்துல எத்தனை பதிவர் சந்திப்பு??? "நீங்கள் சந்திக்கும் நபர்களில் 30%க்கும் மேல் பதிவர்கள் என்றால் நீங்கள் டிராக் மாறுகிறீர்கள் என்று அர்த்தம். சுதாரித்துக் கொள்ள வேண்டும்" அப்படின்னு ஃபோட்டோக்காரரு ஒண்ணும் சொல்லலியா? :))))
// ஒரே வாரத்துல எத்தனை பதிவர் சந்திப்பு??? "நீங்கள் சந்திக்கும் நபர்களில் 30%க்கும் மேல் பதிவர்கள் என்றால் நீங்கள் டிராக் மாறுகிறீர்கள் என்று அர்த்தம். சுதாரித்துக் கொள்ள வேண்டும்" அப்படின்னு ஃபோட்டோக்காரரு ஒண்ணும் சொல்லலியா? :)))) //
:)))))))))))))
நல்ல வேளை..வாலை விட்டுட்டு போயிருக்கீங்க...வர வர போக்கே சரியில்ல......அனானிகளின் புகழிடமாய்ட்டாரு.
அரை லட்சம் ஹிட்ஸ்க்கு ஒரு லட்சம் வாழ்த்துகள் பரிசல்.!
Post a Comment