Saturday, November 29, 2008

வீக் எண்ட் புதிர்கள் – 29.11.08

சென்ற வார வீக் எண்ட் புதிர்களுக்கு எக்கச்சக்க வரவேற்பு. மொத்தம் ஏழு பேர் (ஆமா.. ஏஏஏஏஏழு பேர்!) வாரா வாரம் இதைத் தொடருங்கள்ன்னு கேட்டிருந்தாங்க. அவங்களுக்காக இதோ இந்த வாரமும்..

மொதல்ல ஈஸியா ஆரம்பிக்கலாம்..

1) சில குறிப்புகள்ல சில பதிவர்களைச் சொல்லிவிட முடியும்.. ‘சகா’-ன்னா கார்க்கி, குறுந்தொகைன்னா நர்சிம், அண்ணே-ன்னா அப்துல்லா.. இப்படி... அது மாதிரி சில குறிப்புகள் சொல்றேன். யாரிந்தப் பதிவர்கள்ன்னு சொல்லுங்க.

அ) ‘அடடே.. வாட் எ கோ இன்சிடென்ஸ்’
ஆ) மீ த.. (அடுத்த வார்த்தையைச் சொல்லவே வேண்டாம்)
இ) என்னுடைய கார் அந்த இடத்தை அடைந்தபோது...


2) இரண்டு இரட்டைப் படை எண்கள். அவற்றைக் கூட்டினால் வரும் விடையை விட, மூன்று மடங்கு அவற்றைப் பெருக்கினால் வரும். அவை எவை?

3) GTTTT – இது என்ன?

4) ஒரு சட்டபூர்வமான கேள்வி: ஒருவன் தனது விதவை மனைவியின் தங்கையை மணப்பதற்கு சட்டத்தில் இடமுண்டா?

5) இந்த வார யோசிக்க வைக்கற கேள்வி. மாடி அறையில் மூன்று குண்டு பல்புகளைக் கொண்ட விளக்குகள் உள்ளன. அதற்கான மூன்று சுவிட்ச்கள் கீழ் அறையில். கீழிருந்து பார்த்தால் மேலே விளக்கெரிவது தெரியாது. நீங்கள் ஒரே ஒரு தடவை மேலே சென்று வரலாம். எந்தெந்த சுவிட்ச் எந்தெந்த பல்புக்கானது என்று சரியாகச் சொல்ல வேண்டும். எப்படிச் சொல்வீர்கள்?

6) இதுவும் யோசிக்க வைக்கும்.

மூன்று வீடுகள் கொண்ட காம்பவுண்டிற்கு ஆப்பிள்காரி ஒருத்தி செல்கிறாள். தன்னிடமுள்ள ஆப்பிள்களில் பாதி + அரை ஆப்பிளை முதல் வீட்டிற்குக் கொடுக்கிறாள். மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை இரண்டாம் வீட்டிற்குக் கொடுக்கிறாள். மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை மூன்றாம் வீட்டிற்குக் கொடுக்கிறாள். இப்போது அவள் கூடை காலி! அப்படியானால் அவள் கொண்டுவந்த ஆப்பிள்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ஒரு குறிப்பும், நிபந்தனையும்:

ஆப்பிளை நறுக்கக்கூடாது.

பாதி என்றால் பத்தில் பாதி ஐந்து. நாலில் பாதி இரண்டு.. இப்படி.

அரை என்பது ஒன்றை அறுத்தால் வரும் பாதி = அரை!

மறுபடி சொல்கிறேன்.. ஆப்பிளை நறுக்கக்கூடாது!

7) 1975 இந்தியாவுக்கும், கிழக்கு ஆப்ரிக்காவுக்குமான ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டியில் அதற்கு முன் நிகழ்ந்திராத ஒரு சாதனை நிகழ்ந்தது. அது..

அ) பத்து விக்கெட் வித்தியாசத்தில் ஒரு நாள் போட்டியில் ஒரு அணி வென்றது.

ஆ) உலகக் கோப்பையில் முதல் ஹாட்-ரிக் எடுக்கப்பட்டது.

இ) உலகக் கோப்பையில் முதல் செஞ்சுரி எடுக்கப்பட்டது.

ஈ) மழையின் காரணமாக ஒருநாள் ஆட்டமானது அடுத்தநாளும் தொடர்ந்தது.

8) இவர் பதிவர். இவரது பெயரின் கடைசி இரண்டெழுத்து வழக்கா... காசா? நல்லவர்.... சோ..இவருக்கு நிறைய நண்பர்கள்!

9) இவரும் பதிவர். அழகானவர். பெயரின் 2 மற்றும் மூன்றாவது எழுத்துக்களைச் சேர்த்தழைத்தால் மரியாதைக் குறைவாக எண்ணக்கூடும். அத்வானிக்கு இவரை ரொம்பப் பிடிக்குமோ?

10) ஒரு லேட்டரல் திங்கிங் கேள்வி. அதாவது ஒரு இண்டர்வ்யூவுல இந்தக் கேள்வியைக் கேட்டு நீங்க என்ன பதில் சொன்னா, உங்களுடைய அறிவு மெச்சப்படுமோ, அப்படி பதிலைச் சொல்லணும்.

ஒரு மழைநாளின் இரவு. நீங்கள் காரில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். ஒரு பஸ் ஸ்டாப்பில் மூன்றுபேரைக் காண்கிறீர்கள்.

a) வயதான மூதாட்டி
b) ஒருமுறை உங்கள் உயிரையே காப்பாற்றிய நண்பர்
c) நீங்கள் வெகுநாள் ப்ராக்கெட் போட்டுக் கொண்டிருக்கும், ஓரளவு உங்களுக்கு சிக்னல் கிடைத்துவிட்ட உங்கள் கேர்ள்ப்ரெண்ட்.

உங்கள் காரில் ஒருவரை மட்டுமே ஏற்றிக்கொள்ள முடியும்.

என்ன செய்வீர்கள்?


ரெடி.. ஸ்டார்ட்.. மீஜிக்...

29 comments:

Cable சங்கர் said...

பதில்கள்

1) அ: அதிஷா ஆ) ராப் இ) டோண்ட்டூ சார்.

4) கண்டிப்பாய் இடமுண்டு.. ஆவிக்கெல்லாம் இந்த சுதந்திரம் கூட இல்லைன்னா எப்படி..?

10) C

மத்தது எல்லாம் ரொம்ப ஈஸியா இருக்கிறதுனால சின்ன பசங்களூக்கு விட்டுட்டேன்.

முரளிகண்ணன் said...

விதவை என்றாலே நாம் செத்துவிடுகிறோமே

முதலில் ஒரு சுவிட்ச் ஆன் செய்து, சிறுது நேரம் கழித்து ஆப். பின்னர் இன்னொரு சுவிட்ச் ஆன் செய்து மேலெ செல்ல வேண்டும். ஆன் செய்த சுவிட்சின் பல்ப் தெரியும். மற்ற இரு பல்புகலை தொட்டு பார்த்தால் எது சூடாக இருக்கோ அது முதல் சுவிட்சுக்கானது.

லக்கிலூக், அதிஷா, ராப், டோண்டு

சந்தனமுல்லை said...

3) ஜி, 4 டீ.

4) முதலில் 1 சுவிட்சை 10 நிமிடங்களுக்கு போடுவிட்டு ஆஃப் செய்துவிடுக. இன்னொரு சுவிட்சை போட்டுவிட்டு மாடிக்கு செல்க. சூடான பல்பு முதல் சுவிட்ச். எரியும் பல்பு இரண்டாவது. மூன்றாவதுதான் தெரிந்துவிடுமே..BTW, இது ஸ்கூல்லயே நாங்க கேட்டு முடிச்சுட்டோம். :-))

10. நண்பரிடம் காரை கொடுத்து மூதாட்டியை கொண்டு ட்ராப் செய்ய சொல்லிவிட்டு, பிரண்டுடன் மழையில் நடந்து செல்ல வேண்டும். இதுவும் campus -க்கு தயாராகும்போது.... ரொம்ப பேமஸ்!!


மீதிக்கு சங்கர் சொல்லிவிட்டார். கிரிக்கெட் எனக்கு சுத்தமா நோ நாலெட்ஜ். ஒருவேளை கூகுளிட்டால் தெரியும்..lol

முரளிகண்ணன் said...

உயிரை காப்பாற்ரியவரிடம் காரை கொடுத்து பாட்டியை அழைத்து போகச் சொல்லிவிட்டு, கேர்ள் பிரன்டுடன் சேர்ந்து பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்னு டூயட் பாடுவேன்

முரளிகண்ணன் said...

குவிஸ்னா மாடரேட் பண்ணுப்பா பரிசல்.

முரளிகண்ணன் said...

8 thuklak mahesh

முரளிகண்ணன் said...

பொடா ந்னு யாருப்பா?

சந்தனமுல்லை said...

3)சாரி நான் ரொம்ப யோசிச்சி “ஒருஜினாலுட்டி”யோட சொல்லியிருக்கேன்!! lol

முரளிகண்ணன் said...

அவளிடம் 7 அரை ஆப்பிள்கள்,முதல் வீட்டிறேக்கு 3+1, அ ஆவத் 1+1, 3ஆவத் 1

முரளிகண்ணன் said...

7 a

narsim said...

மத்த கேள்விகளை அப்புறம் பாக்கலாம்..

10. நண்பனிடம் வண்டியை குடுத்து பாட்டியை இறக்கிவிடச்சொல்லி..வரும் வரை ஃபிகருடன் பேசிக்கொண்டிருப்பேன்..( அனுபவம்லாம் இல்லப்பா..)

பாபு said...

answer for the sixth question
பத்தரை ஆப்பிள்
முதல் வீட்டுக்கு ஐந்தரை
இரண்டாவது வீட்டுக்கு மூன்று
மூன்றாவது வீட்டுக்கு இரண்டு

அத்திரி said...

.ஆ. ராப்
1.இ. டோண்டு

போதும் எஸ்கேப்.......................

பரிசல்காரன் said...

ஆப்பிள் குறித்த கேள்வியில் பின்னம் இல்லை. எல்லாமே முழு ஆப்பிள்கள்தான் கொண்டுவந்தது என்பதைத் தெரிவிக்கிறேன்!!!

வண்ணான் said...

1.
அ.லக்கி
ஆ..:மைஃபிரெண்ட்:.
இ.டோண்டு

3.ஒருஜி நாலுடீ :)

4.சட்டத்தில் இடமுண்டு அவன் உயிரோடிந்தால் !!!

7.ஈ

வண்ணான் said...

ஒரு குறிப்பும், நிபந்தனையும்:

ஆப்பிளை நறுக்கக்கூடாது.
//

நறுக்கதான் கூடாது வெட்டலாமா..?

:)

வண்ணான் said...

புதிர் போட்டா பின்னுட்டத்தை புடிச்சி வைச்சிகிட்டு தப்பு சரினு அடிச்சி ஆடனும் டயம் இல்லைனா இருக்கும் போது போட்டு ஆடனும் ஒகே..:)

பரிசல்காரன் said...

ஓரிரண்டு கேள்விகளுக்கு இன்னும் பதிலையே காணோமே.. குறிப்பா அந்த 2வது கேள்வி..

மக்கள்ஸ்..

அடுத்த வாரம் கண்டிப்பா மாடரேஷன் போடறேன்...!

Thamira said...

முரளிகண்ணன் said...
உயிரை காப்பாற்ரியவரிடம் காரை கொடுத்து பாட்டியை அழைத்து போகச் சொல்லிவிட்டு, கேர்ள் பிரன்டுடன் சேர்ந்து பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்னு டூயட் பாடுவேன்//

ஹிஹி.. நானும்..

Thamira said...

அடுத்த வாரம் கண்டிப்பா மாடரேஷன் போடறேன்...!// அப்பிடின்னா என்னுது?

Thamira said...

நீங்க‌ளே ப‌தில் சொல்லிடுங்க‌ளேன்.. பெட்ட‌ர். சில‌ கேள்விக‌ளுக்கு ப‌தில் தெரிஞ்சுக்க‌ ஆவ‌லாயிருக்குது.!

சந்தனமுல்லை said...

2) 4,8

ராஜி said...

2)6,6..(rendum vera vera numbernnu sollaliye:-)

ராஜி said...

2)12,4.(.rendum vera vera number nna)

Mahesh said...

8 ... அட அது நாந்தே...

2 வதுக்கு (அல்லது இது மாதிரி கேள்விகளுக்கு ) ஒரு ஃபார்முலா போட்டுட்ட ஈசியா சால்வ் பண்ணிரலாம்
x+y = 3(x+y)

சிம்பா said...

சகா இரண்டாவது கேள்விக்கு விடை இல்லைன்னு பீல் பன்னிருன்தீங்க.. அதுக்கான விடை 6.

6*6 = 36
6+6 = 12

சிம்பா said...

ஒருவன் தனது விதவை மனைவியின் தங்கையை மணப்பதற்கு சட்டத்தில் இடமுண்டா?

கண்டிப்பா இருக்கு...

ஒருவன் செத்த பின்னாடி, அவன் மனைவியோட தங்கையை யாராவது ஆள விட்டு போட்டுத்தள்ள சொல்லி நரகத்துல கண்ணாலம் கட்டிக்கலாம்.

விஜய் ஆனந்த் said...

1) அ) அதிஷா
ஆ) ஆப்பீசர் மேடம்
இ) டோண்டு

2) 4, 12

3) Originality

4) :-)))...

5) :-)))...

6) 7 ஆப்பிள்கள்

7) அ

8) துக்ளக் மகேஷ்

9) ???

10) :-)))...

வெண்பூ said...

அட யாராவது எல்லா பதிலையும் சொல்லுங்களேன்.. எத்தனை தடவை வந்து வந்து பாக்குறது.. :)))

7வது கேள்விக்கான பதில்..

//
அ) பத்து விக்கெட் வித்தியாசத்தில் ஒரு நாள் போட்டியில் ஒரு அணி வென்றது
//


Scoreboard