பதினாறு வருஷத்திற்கு முந்தைய நிகழ்வு இது.
அந்தப் பெண் மணிப்பூரிலிருந்து வந்து திண்டுக்கல் காந்தி கிராமில் படித்துக் கொண்டிருந்தார். மேற்படிப்பு விஷயமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். அங்கே, மதுரை அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த ஒரு இளைஞரைச் சந்தித்து, காதல் வயப்படுகிறார்.
அவர் பெயர் பீனா. அந்த இளைஞர் கெல்வின்.
பீனா, தனது வீட்டில் காதலைத் தெரிவித்தபோது, எதிர்பார்த்தது போலவே எதிர்ப்பு. பிறகு பீனாவின் உறுதியைக் கண்டு, ‘இரண்டு வருடங்கள் கெல்வினுடன் எந்தத் தொடர்போ, பேச்சு வார்த்தையோ கூடாது என்று தடை விதிக்கிறார்கள். கட்டுப்படுகிறார்கள் இருவரும்.
ஒருவருடத்தில் வீட்டாரின் சாயம் வெளுக்கிறது. தன்னை மனம் மாற்றி வேறு ஒருவருக்கு திருமணம் செய்விக்கும் முயற்சியில் வீட்டார் இறங்கிவிட்டதை அறிகிறார் பீனா. கொடுத்த வாக்குப்படி, காதலனுடன் பேசாமல், அவரது பெற்றோருக்கு தொலைபேசி விபரத்தைக் கூறுகிறார் பீனா. உடனே, கெல்வினின் தாயார் கெல்வினை மணிப்பூருக்கு அனுப்பி பீனாவை அழைத்துவரச் சொல்லி திருமணம் செய்துவைக்கிறார்.
ஃப்ளாஷ்பேக் ஓவர்!
ஆயிற்று. மணவாழ்க்கை வெற்றிகரமாய் நடந்துகொண்டிருக்கிறது. சந்தோஷமான மணவாழ்க்கைக்கு அடையாளமாய் ஒரு மகன். பெற்றோருடன் பேச்சுவார்த்தையோ, போக்குவரத்தோ இல்லவே இல்லை என்ற ஒரு குறையைத் தவிர வேறு குறையொன்றுமில்லை. அதுதான் பெற்றோர்களைப் போலவே பார்த்துக் கொள்ளும் மாமனார், மாமியார் வாய்த்திருக்கிறார்களே!
அதிலும் வந்தது சோதனை. பணி நிமித்தமாய் தென்னாப்பிரிக்காவில் இருந்த மாமனாரும், மாமியாரும் வந்த விமானம் நடுவானில் நொறுங்க, நொறுங்கிப் போனார் பீனா. அது நடந்தது 2007 மே. அந்த சமயத்தில் இவர் கருவுற்றிருந்தார். டிசம்பரில் இரண்டாவதாக ஒரு மகன்!
இந்த சமயத்தில், கொஞ்சம் கொஞ்சமாக தனது தம்பிகளின் தொடர்பு மூலமாக பெற்றோருடனான பந்தமும் துளிர்விட்டது. சந்தோஷமானார். 15 வருடங்களுக்குப் பிறகு மணிப்பூர் செல்ல முடிவெடுத்து, செல்கிறார்.
அங்கே உறவினர்கள், பெற்றோருடன் மகிழ்ச்சியாய் இருந்து, உணவருந்திக் கொண்டிருக்கும் வேளையில் தமிழ்க் கலாச்சாரம் குறித்த கிண்டல் பேச்சு வருகிறது உறவினர்களிடமிருந்து. ‘அந்த ஊருக்குப் போய் என்னத்தக் கிழிச்ச’ என்ற வசவுகள் வேறு.
அப்போதுதான் திருக்குறள் பற்றி தான் படித்ததை பகிர்ந்துகொள்கிறார் பீனா. அவர்களுக்கோ ஆச்சரியம்! திருக்குறள் இப்பேர்ப்பட்ட ஒரு புத்தகமா. அதில் சொல்லப்படாததே இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துகிறார்.
திரும்ப ஊருக்கு வரும்போது பீனாவின் மனம் அலைபாய்கிறது. ஒரே இந்தியாவில் இருந்தாலும், ஒரு மாநிலத்தின் பெருமைகள் மற்ற மாநிலத்துக்குத் தெரிவதில்லை. தெரிந்து கொண்டு, அதைப் போற்றி நடந்தால் மாநிலப் பிரச்சினைகளோ, பிரிவினைகளோ வருமா...?
அப்போதுதான் அவர் தீர்க்கமாக ஒரு முடிவெடுக்கிறார்.
அந்த முயற்சியில் வெற்றிபெற வேண்டி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து அவரிடமும் தனது திட்டத்திற்கு ஆதரவு பெற்றுவரும் அளவுக்கு பீனா எடுத்த அந்த முடிவு என்ன?
மதியம் இரண்டு மணிவரைக் காத்திருங்கள்...
18 comments:
:)
Me the First
இப்படியெல்லாமா பொறுமையை சோதிப்பது....ஆனால் அவர் தேர்ந்தெடுத்த ஆள்தான் சரியில்லை என்பது என் கருத்து.
:))
ஒண்ணுமே புரியலயே பரிசல்.. அடுத்த பார்ட் படிச்சால் புரியும்னு நெனக்கிறேன். காத்திருக்கிறேன்.. :(
பதிவுகளுக்கெல்லாம் இடைவேளை விடலாமா...?? இந்த சினிமாக்காரங்கதான் இப்படி பண்றாங்க...நாமளுமா...?
ரொம்ப ஆர்வமா இருக்கே...
//இப்படியெல்லாமா பொறுமையை சோதிப்பது....ஆனால் அவர் தேர்ந்தெடுத்த ஆள்தான் சரியில்லை//
:-)))
பயங்கர சஸ்பென்ஸா போகுதே
Put some lights on what Rajini does beyond Superstar image!....
We all are ready to blame others but never seeing ourselves!
Pl. also let's know why that Girl wants Rajini's help?
இதெல்லாம் நல்லதுக்கா..?
கொடும சரவணா..!
என்னங்க, பீனா சந்தித்த நபர் போலவே நீங்களும் பொறுமையை சோதிக்கிறீங்களே..
இரண்டு நாளா ஆளக்காணமேனு பார்த்தா.. சஸ்பென்ஸோட வந்துட்டீங்க..
வழக்கமான கலக்கல்.. 2:30 பதிவை எதிர்பார்த்து..
நர்சிம்
எங்கடா 'தல'யக் காணோமே ரெண்டு, மூணு நாளானு பாத்தேன். வந்தவுடனே வேலைய ஆரம்பிச்சாச்சா?
நடக்கட்டும்.......நடக்கட்டும்.......
நானும் வெண்பூ சொன்னதை வழிமொழிகிறேன். சீக்கிரம் சீக்கிரம்:):):)
:)
ஒவ்வொருவருமே தங்கள் கலாச்சர பெருமைகளை மற்றவர்கள் உணர செய்தல் வேண்டும். ஆனால் இதற்கு வலைப்பூக்களே சிறந்த வழியாக அமையும். தற்போது எந்த நடிகருமே மக்களுக்கு நல்வழிகாட்ட படம் எடுக்க விரும்பவில்லை.
Post a Comment