Thursday, November 6, 2008

விருந்தோம்பல்!


புதுகைத்தென்றல் விருந்தினர் பற்றி ஒரு பதிவெழுதி என்னை தொடர அழைத்திருந்தார்கள். பேசிக்கலி ஐ ஆம் எ சோம்பேறி என்பதால் இத்தனை நாட்கள் ஆகிவிட்டது தொடர!

விருந்துக்குப் போவதென்றால் எனக்கு உள்ள ஒரு அடிப்படை விதி, என்னை ஒரு தேவலோகப் ப்ரஜையாய் விழுந்து விழுந்து கவனிக்காமல் இருந்தால் சரி. அதே போல என் வீட்டிற்கு நீங்கள் வருகிறீர்களா.. நான் உங்களுக்காக என் சுயத்தை விட்டு, ஏதேனும் சம்பிரதாயத்திற்காக செய்ய வேண்டுமென எதிர்பார்க்காதீர்கள்.

உதாரணத்திற்கு எனக்கு அலர்ஜி தரும் விஷயம் உண்பது. “நல்லா சாப்பிடுங்க” என்று அளவிற்கு மீறி தட்டில் போட்டுக்கொண்டே இருந்தால் கடுப்பாக இருக்கும் எனக்கு. எனக்கு நானே பரிமாறிக் கொண்டுதான் சாப்பிடுவேன் என்ற நிபந்தனையோடுதான் சாப்பிடவே உட்காருவேன்!

என் இந்த சில நடவடிக்கைகளெல்லாம் உமாவுக்குப் பிடிக்காது. யாராவது வீட்டுக்கு வந்தா அவங்ககிட்ட பேசறத விட்டுட்டு, இன்னைக்கும் புக்கை கைல வெச்சுட்டு உட்காந்துக்கறீங்க” என்ற வசவை யார் வரும்போதும் வாங்கிக் கட்டிக் கொண்டுதான் இருக்கிறேன். எனை நானாய் என் வீட்டில் இருக்க விடும் விருந்தினர் என்றால் நானும் அவர்களோடு ஒன்றாகி விடுகிறேன்!

இனி புதுகைத்தென்றலின் கேள்விகளும்.... என் பதில்களும்..


1. விருந்தினர் வருகையை எப்படி சமாளிப்பீர்கள்?


வருவதைச் சமாளிப்பதென்றால் வீட்டைப் பூட்டிக் கொண்டு போகலாம். வந்தபின் சமாளிப்பதென்றால்..

எதற்குச் சமாளிக்கவேண்டும் என்ற கேள்வி வருகிறது. என் வீட்டிற்கு வருபவர்கள் எனக்குப் பிடித்தவர்களாகவோ, உமாவிற்குப் பிடித்தவர்களாகவோதான் இருக்கக் கூடும். அவர்களை ஏற்றுக் கொண்டு, அவர்களோடு அளவளாவுவோம்!

ஆனால், இந்த இடத்தில் (இல்லீன்னா கொஞ்சம் தள்ளி..) ஒன்றைச் சொல்ல வேண்டும். சென்றமுறை கும்க்கி வந்த அதே நாளில், பாலராஜன்கீதா குடும்பத்தோடு வந்திருந்தார். எப்படி சமாளிக்க என்று குழம்பிவிட்டேன்! கடைசியில், பாலராஜன்கீதா வெளிநாட்டிலிருந்து எப்போதோ வருபவர் என்று, மதியத்திற்குமேல் அவரோடு கழித்தேன். கும்க்கியிடம் சொன்னபோது “ஒக்கே தோழர். பாருங்க.” என்று பெருந்தன்மையாய் விடைபெற்றது மறக்கமுடியாதது! இதுபோல உள்ளதைச் சொல்லி, சங்கடத்தைத் தவிர்க்கலாம். காலையில் வால்பையனோடு வந்த கும்க்கியுடன் கழித்து, மாலையில் பாலராஜன் கீதாவோடு வேல்பையனை (அலகுமலை முருகன்!) பார்க்கச் சென்றோம்!

2. விருந்தினராக செல்லும்போது நாம் பின்பற்ற வேண்டிய
நற்குணங்கள் எவை?


அவர்கள் வீட்டுச் சூழலுக்கு நம்மை மாற்றிக் கொள்வதைத் தவிர வேறொன்றும் தேவையில்லை. அவர்களையும் நம் கோணத்தில் பாத்தாலே போதும். முக்கியமாக வீட்டு ஆண்களை விட்டுவிட்டு, மனைவி/தாயார் போன்ற பெண்குலங்களின் உணர்வைப் புரிந்து நடக்கவேண்டும். உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் சாப்பிட்டபிறகு தட்டில் கைகழுவும் பழக்கம் இருக்கலாம். ஆனால் விருந்தினர் வீட்டிற்குச் சென்றால் அவர்களே சொன்னாலும், ‘பரவாயில்லைங்க’ என்று தட்டைக் கொண்டுபோய் சிங்க்கில் போட்டுவிட்டு, கைகழுவி வந்தால் உத்தமம். தட்டில் கைகழுவுவதும், அந்தத்தட்டை வீட்டுப் பெண்கள் கொண்டு செல்வதும் எனக்குப் பிடிக்காத ஒன்று!


3. நம்மை கேட்காமல் ஃபிரிஜிலிர்ந்து எடுத்து தின்னும்
விருந்தினரை என்ன செய்யலாம்?

ஒன்றும் செய்யவேண்டாம். அவர்கள் விருந்துக்கு வரும்போது ஊசிப்போன வடை அல்லது ஊசி உள்ளே போன வடை போன்ற ஐட்டங்களை வைத்துவிடுங்கள். (ரொம்ப அவஸ்தைப்பட்டிருப்பீங்க போல!)

சீரியஸா சொல்லணும்ன்னா, ஃப்ரிட்ஜை லாக் பண்ணி வெச்சுடறது பெட்டர். ‘எனக்கு யாராவது ஃப்ரிட்ஜ்ஜை அடிக்கடி தொறந்து எடுக்கறது பிடிக்காதுங்க’ என்றோ.. இருக்கவே இருக்க்கிறோமே இ.வா.கணவர்கள்.. எங்களைச் சுட்டி, ‘அவரு பாட்டுக்கு ஃப்ரெண்ட்ஸ்னு கூட்டீட்டு வருவாரு. கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாத ஆளுக. அவனுக பாட்டுக்கு வந்து எடுப்பாங்க. அதுக்காக லாக் பண்ணி வெச்சிருந்து பழகிப்போச்சு’ என்றோ சொல்லி ‘நீங்க அப்படியெல்லாம் இல்லியே’ என்றும் சொல்லிவிடலாம். குழந்தைகள் என்றால் அவர்கள் பெற்றோர் முன்னிலையிலேயே ‘இது தப்பு’ என்று அறிவுறைக்கலாம். அதையும் மீறி செய்பவர்களிடம் முகம் காட்டி உணர்த்தலாம். (பெண்கள் அதில் கில்லாடிகள்!)


4. விருந்தினராக தங்க வருபவரிடம் நீங்கள் என்ன
எதிர் பார்ப்பீர்கள்?

கேஷாக இருந்தால் நலம். செக் என்றாலும் ஓக்கே. வெளியூர் செக் என்றால் ரூ.20/- கூட.


5. விருந்தினர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று
எதிர் பார்ப்பீர்கள்?

சிலர் இருக்கும்போது அவர்கள் வீட்டில் இருப்பது போல ஃப்ரீயாக இருக்கட்டும் என்றும், சிலர் அடுத்தவன் வீட்டில் இருப்பது மாதிரியா இருக்காங்க’ என்று அங்கலாய்ப்பாக நினைப்பதுபோலவும் நடந்துகொள்வார்கள்.

என்னைப் பொறுத்தவரை என் அலைவரிசையை ஒத்த நண்பர்களோ, உறவுகளோதான் வீட்டிற்கு விருந்தினராய் வருகிறார்கள் என்பதால் நோ ப்ராப்ளம்!

ஒரு முக்கியக் குறிப்பு: விருந்தினர்களது உபத்திரவங்களை மனைவிகளிடமோ, தாயிடமோ கேட்டால்தான் உண்மையான பலவிஷயங்கள் தெரியவரும். ஆண்கள் அவர்கள் நினைத்த, அவ்ர்களுக்குப் பிடித்த விருந்தினர்களை வீட்டிற்கு கொண்டு வந்து, மற்றவர்களைக் கொடுமைப்படுத்துவதில் சமர்த்தர்கள் என்பது என் கருத்து!

78 comments:

கார்க்கிபவா said...

அண்ணே நான் திருப்பூர் வந்தா வெளியே மட்டும் சந்திப்போம்ண்ணா

தமிழன்-கறுப்பி... said...

பதிவுகள் எல்லாம் படித்திருந்தாலும் பல நாட்களுக்கு பிறகு பின்னூட்டம் பரிசல்...

தமிழன்-கறுப்பி... said...

உங்களைப்பாக்க வாறதுன்னா ரொம்ப யோசிக்கணும் போல இருக்கே...:)

தமிழன்-கறுப்பி... said...

விருந்தோம்பல் தமிழனின் பாரம்பரியம்னு சொல்றாய்ங்களே...

தமிழன்-கறுப்பி... said...

\\
ஆண்கள் அவர்கள் நினைத்த, அவ்ர்களுக்குப் பிடித்த விருந்தினர்களை வீட்டிற்கு கொண்டு வந்து, மற்றவர்களைக் கொடுமைப்படுத்துவதில் சமர்த்தர்கள் என்பது என் கருத்து!
\\

இதுக்கு ஓரு ரிப்பீட்டு...!

பாபு said...

//ஆண்கள் அவர்கள் நினைத்த, அவ்ர்களுக்குப் பிடித்த விருந்தினர்களை வீட்டிற்கு கொண்டு வந்து, மற்றவர்களைக் கொடுமைப்படுத்துவதில் சமர்த்தர்கள் என்பது என் கருத்து//

பொதுவாக எல்லாராலும் சொல்லப்படும் தவறான கருத்து.பிரச்னை என்னென்னா மனைவி மூலமாக வரும் விருந்தினர்களை குஷிபடுதுவதில் ஆண்கள் முன்னால் நிற்பார்கள்,அதுமூலமாக மனைவிக்கு சந்தோசம் கிடைக்கும் என்று,
ஆனால் கணவன் மூலமாக வரும் விருந்தினர்களை அதே கண்ணோட்டத்தோடு மனைவி பார்க்க மாட்டார்.நீங்களே சொன்ன மாதிரி தங்கள் முகத்தில் கண்டிப்பாக லேசான வெறுப்பையாவது காட்டி விடுவார்கள்

Anonymous said...

இந்த நல்லா சாப்பிடுங்கன்னு "வாயைத்திறந்தா காக்கா கொத்திட்டு போற அளவுக்கு சாப்பட வைச்சிடுவாங்க" , எனக்கோ சாப்பாடை வீணாக்குனா பிடிக்காது. கஷ்டப்பட்டிருக்கேன். ஒருத்தங்க வீட்டுக்கு 3 மணிக்கு போனேன். இப்பத்தான் சாப்டுட்டு வந்தேன்னாலும் கேக்காம பரிமாறி, என்னால சாப்பிட முடியாம வீண்.

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

ஒத்த அலைவரிசை இல்லீன்னா பேச டாபிக் பிடிக்கறதே பெரும்பாடு போங்க

விஜய் ஆனந்த் said...

உங்க வீட்டுக்கு விருந்தாளியா வரலாமா..கூடாதா???

உங்கள எங்க வீட்டுக்கு வரச்சொல்லி கூப்பிடலாமா...கூடாதா???

ஒண்ணுமே புரியலயே சர்வேசா!!!

முரளிகண்ணன் said...

பரிசல் உண்மையா எழுதியிருக்கீங்க. ஆனா கடைசி பத்தியில் மட்டும் வேறுபடுகிறேன். பின்னூட்டத்தில் அதை மறுத்தவர்களை ஆதரிக்கிறேன்

குறிப்பாக பாபு அவர்களின் பின்னூட்டம்.

narsim said...

ஏன் தலிவா.. தொடர்பதிவை எதிர்த்து நீங்க போட்ட பதிவுக்கு அப்புறமும் நம்ம்பி கூப்பிட்டிருக்காங்க??ம்ம்..

அந்த 4வது பதில் கலக்கல் பரிசலாரே..

நர்சிம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நானும் இன்னும் இந்த டேக்கை எழுதலை.. எழுதபயம்மா இருக்கு.. வர்ர ஒன்னு ரெண்டு விருந்தாளியும் வடக்க தலைவைக்கலன்னா என்ன செய்யன்னு தான்பயம்..

சில வீட்டில் ஆண்கள் மனைவி யோட சொந்தங்கள் வந்தா ..வாங்கன்னு கேட்டுட்டு தொந்திரவு கொடுக்காம இருக்கறதா நினைச்சு பேசாமலே கூட இருந்துடுவாங்க.. ஆனா மனைவி அபப்டி செய்ய முடியாதே பாபு..

முகம் காட்டினாலும் கரண்டிய காட்டினாலும்.. சமைச்சு அவங்களுக்கு தேவையானவற்றை செய்துன்னு அவங்களோட எல்லா தேவைகளையும் செய்யவேண்டிய கடமையை செய்யறவங்க அவங்க தானே. பேசாமல்லாம் இருக்கவும் முடியாது.. மனைவி சொந்தக்காரங்க வந்தா மனைவியை குற்றம் கண்டுபிடிக்கமாட்டாங்க பாபு. முகம் காட்ட வேண்டிய அவசியமும் இல்லை.

:( எப்படி எல்லாம் பெண்களைப்பற்றிய கருத்துக்கள் இருக்குன்னு தெரிஞ்சுக்க உதவுது இப்படி பட்ட பின்னூட்டங்கள்.

pudugaithendral said...

பதில்களை ரசித்தேன்.

தொடர்ந்ததில் மகிழ்ச்சி. ஜோதியை கை மாத்தாம விட்டுடீங்களே?!!

வெண்பூ said...

முடிவா என்னா சொல்றீங்க பரிசல்? உங்க வீட்டுக்கு வரலாமா, கூடாதா? வந்தா ஃப்ரிட்ஜ்ல இருக்குறத நானே எடுத்து சாப்பிடலாமா? இல்லை நீங்க கொண்டு வந்து தர வரைக்கும் வெய்ட் பண்ணனுமா? :)))

Mahesh said...

"பேசிகலி ஐ ஏம் அ சோம்பேறி"ன்னு சொல்லி "ஈர வெங்காயத்தை" இடித்ததை (உரித்ததை)வன்மையாக கண்டிக்கிறேன்....

அப்துல்ல மட்டும்தான் நுண்ணரசியல் பண்ணலாமா? நாங்களும் பண்ணுவம்ல? :)))))

பாபு said...

@முத்துலட்சுமி
நீங்களே ஒத்துக்கிறீங்க "முகம் காட்டினாலும் கடமையை செய்வோம்" என்று
"முகம் திரிந்து நோக்க குழையும் விருந்து" ,அப்படின்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இது பத்தி உங்களுக்கு என்னால புரியவைக்கமுடியலன்னு தான் சொல்லனும்..குற்றம் கண்டுபிடிப்பதில் மகானா இருப்பீங்க போல பாபு.. முகம் ஏன் காட்டப்படுதுங்கறதுக்கு காரணம் சொன்னேனே அதை நீங்க கண்டுக்கலையே.. சரி விடுங்க.. காலகாலமா பெண்கள் மேல வைக்கப்படுகிற குற்ற சாட்டு தான்..இது.. ஒன்றும் சொல்வதிற்கில்லை..

pudugaithendral said...

முகம் திரிந்து நோக்க குழையும் விருந்து" //

விருந்து குழையறதை பத்தி கவலைப்படறீங்க ஆனா பொண்டாட்டியைப்பத்தி கவலைப்பட மாட்டீங்க போல பாபு.

pudugaithendral said...

பாபு

இந்தப் பதிவை தொடரா போட வைச்சதன் நோக்கம் ஒரு பதிவிலேயே அடங்கிடுச்சு. நன்றி பரிசல்.

வீட்டுக்கு விருந்தாளி வந்தா ஆண்மகனின் பர்ஸ்தான் இழைக்கும். அதைத்தவிர அவருக்கு வேற கஷ்டம் ஏதும் இல்லை.

வந்தவர்களுக்கு வயறார சாப்பிட்டு, நீங்க சொல்ற “முகம் குழையாம” பாத்துக்கறாது எல்லாம் பெண்கள்தான்.
இதனால் அவங்களுக்கு எவ்வளவு கஷ்டம், அதிக வேலைன்னு எல்லாம் யாரும் யோசிக்கறதே இல்லை.

Thamira said...

TEST REPLY

THAMIRA

pudugaithendral said...

தங்கள் முகத்தில் கண்டிப்பாக லேசான வெறுப்பையாவது காட்டி விடுவார்கள்//

சந்தோஷப்படுங்க. வெறுப்பை முகத்தில் மட்டும் காட்டுறாங்களேன்னு சந்தோஷப்படுங்க.

ஏய்யா, இப்படி ஒரு விருந்தாளிக்கூட நான் கஷ்டபட்டுகிட்டு இருக்கேன், நீ அங்க சொகமா உட்கார்ந்து கதை பேசிகிட்டு இருக்கன்னு உங்க மேல வெறுப்பை காட்டாம இருக்காங்களேன்னும் சந்தோஷப்படுங்க.

பாபு said...

உடனே அதை உங்கள் மீது வைக்கும் குற்றசாட்டாக எடுத்துக்கொண்டு என்னையும் குற்றம் கண்டுபிடிப்பதில் மஹான் என்று சொல்கிறீர்கள்.இது சரியா?
எதற்கும் எதிர் கருத்து இருக்க கூடாதா?
இந்த மாதிரி வாதங்களுக்கு முடிவில்லை என்பது எனக்கும் தெரியும்,இது காலம் காலமாக நடந்து வரும் பிரச்னை,இதை நானோ நீங்களோ சரி செய்ய போவதில்லை
உங்கள் மனதை புண்படுத்தும் நோக்கம் எதுவும் எனக்கில்லை ,மன்னிக்கவும்

பாபு said...

உங்களுக்காவது உடனே சப்போர்ட் க்கு ஆள் வந்து விட்டது ,எனக்கில்லை

பாபு said...

//வெறுப்பை முகத்தில் மட்டும் காட்டுறாங்களேன்னு சந்தோஷப்படுங்க.

ஏய்யா, இப்படி ஒரு விருந்தாளிக்கூட நான் கஷ்டபட்டுகிட்டு இருக்கேன், நீ அங்க சொகமா உட்கார்ந்து கதை பேசிகிட்டு இருக்கன்னு உங்க மேல வெறுப்பை காட்டாம இருக்காங்களேன்னும் சந்தோஷப்படுங்க.//

நானும் அதையேதான் சொல்லி இருக்கிறேன்,நீங்களும் நிரூபணம் செய்கிறீர்கள்

வெண்பூ said...

//
பாபு said...
உங்களுக்காவது உடனே சப்போர்ட் க்கு ஆள் வந்து விட்டது ,எனக்கில்லை
//

நாங்கள் மெளனமாக பார்த்துக்கொண்டிருக்கிறோம் பாபு.. ஒரு சில விஷயங்களை பொதுவில் பேசாமல் இருப்பதே சாலச்சிறந்தது.. :(

Thamira said...

தென்றல் : விருந்து குழையறதை பத்தி கவலைப்படறீங்க// அப்பிடின்னா சோறு குழைஞ்சு போறதுதானே.. அது அடிக்கடி எங்க ஊட்ல நடக்குறதுதானுங்க..

jokes apart.. அருமையான கண்ணியமான பின்னூட்ட விவாதங்கள். இதைப்போன்ற விவாதங்களே எல்லா பதிவுகளிலும் நடக்க வேண்டும் என விரும்புகிறேன். கமர்ஷியலான அதே சமயம் தரமான பதிவு பரிசல்.

Thamira said...

அய்யய்யோ.. பிளாகரில் லாகின் பண்ண‌முடியவில்லை.. ஆபீஸ்ல வெச்சுட்டானுங்கடா ஆப்பு..! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....... அதே சமயம் அவர்கள் இரக்ககுணத்தையும் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. பிளாகை பார்க்கமுடிகிறது. பின்னூட்டம் போடமுடிகிறது. இதுக்கும் எப்போ வரப்போகுதோ ஆபத்து?

எல்லாம் நல்லதுக்குதான். எழுதுவதை விட படிப்பது கூடும். வேலையும் பார்க்கலாம். வீட்ல கனெக்ஷன் வாங்கி மாலை நேரங்களில் டிவிக்கு பதிலாக இன்னும் தீவிரமாக பிளாகில் உட்காரலாம்.

BSNL அப்ளை பண்ணுனா எத்தனை நாள்ல கனெக்ஷன் குடுப்பாங்களாம்.?

pudugaithendral said...

எதிர் கருத்து இருக்க கூடாதா?//

இருக்கலாம் தப்பில்லை. விருந்தோம்பல் நம் பண்பு. வரும் விருந்தினர் நடந்து கொள்ளும் முறைகளைப் பற்றிய் விருந்தோம்பும் நம் எதிர் பார்ப்புதான் இந்தப் பதிவு.

வெண்பூ said...

//
தாமிரா said...
BSNL அப்ளை பண்ணுனா எத்தனை நாள்ல கனெக்ஷன் குடுப்பாங்களாம்.?
//

2 weeks atleast :(

pudugaithendral said...

பொதுவான விருந்தினர் வருகை பத்தி
பேசும்போது கணவன் வீட்டு விருந்தினர், மனைவி வீட்டு விருந்தினர் என்று ஆரம்பித்து வைத்து் விட்டீர்கள்.

இதில் இப்ஸ் அண்ட் பட்ஸ் நிறைய் இருப்பதால் டாபிக்கை மாற்றி பொதுவாக விருந்தினர் பற்றி மட்டும் பேசலாமே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாபு நன்றாக கவனியுங்கள்.. பரிசல் ஒரு ஆண் அவர் அவருடைய ஜெண்டரை ப்பற்றீ ஒரு கருத்தை சொன்னார்.அதுவும் என் கருத்து என்று நிதானமாக.. ஆனால் நீங்கள் தான் அது தவறான கருத்து என்று மறுத்தீர்கள்.

உங்கள் கருத்தையும் கவனியுங்கள்.. திட்டவட்டமாக சொல்லாமல் சிலர் இபப்டியும் இருக்கிறார்கள் என்று சொல்லி இருந்தால் அதில் வருத்தத்திற்கு இடமே இல்லை.. எல்லா மனைவிகளுமே என்று தான் குறிப்பிடும்படி இருந்தது.. மேலும் எதோ கணவன் மூலம் வரும் விருந்து என்றதுமே காரண காரியமின்றி வெறுப்பார்கள் என்பது போல தோண்றும்படி இருந்தது.

மனைவி உறவினர்கள் மாப்பிள்ளை என்று மரியாதையுடன் இருப்பார்கள்.. பணிவுடன் இருப்பார்கள் மாப்பிள்ளைக்கென்ன ஜம்பமாக கவனித்து பேர் வாங்கிக்கொள்ளலாமே.. :)

புண்பட என்ன இருக்கிறது பாபு.. உங்கள் கருத்துக்கு சின்ன எதிர்கருத்து வைத்தேன் அவ்வளவு தான்.

pudugaithendral said...

//
தாமிரா said...
BSNL அப்ளை பண்ணுனா எத்தனை நாள்ல கனெக்ஷன் குடுப்பாங்களாம்.?
//

2 weeks atleast :(//

இங்க 2 மாசமாகியும் ஒருத்தருக்கு கனெக்‌ஷன் வர்ல.

நாங்க வந்தன்னைக்கே ஏர்டெல் வாங்கிட்டோம்ல

pudugaithendral said...

ஒரு சில விஷயங்களை பொதுவில் பேசாமல் இருப்பதே சாலச்சிறந்தது.. //

கருத்து பரிமாற்றம் அவசியம் வெண்பூ.

அப்போதுதான் நாம் நிறைய அறிந்து கொள்ள முடியும்.

பாபு said...

தாமிரா ,ஆச்சர்யமா இருக்கு ,எனக்கும் இன்னைலருந்து இதே பிரச்னை
//எங்க இடத்துலேயும் பிளாகரில் லாகின் பண்ண‌முடியவில்லை.. ஆபீஸ்ல வெச்சுட்டானுங்கடா ..... அதே சமயம் அவர்கள் இரக்ககுணத்தையும் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. பிளாகை பார்க்கமுடிகிறது. பின்னூட்டம் போடமுடிகிறது. இதுக்கும் எப்போ வரப்போகுதோ ஆபத்து//

பாபு said...

வெண்பூ, நீங்க சொல்றதுதான் சரி,

பாபு said...

//மனைவி உறவினர்கள் மாப்பிள்ளை என்று மரியாதையுடன் இருப்பார்கள்.. பணிவுடன் இருப்பார்கள் மாப்பிள்ளைக்கென்ன ஜம்பமாக கவனித்து பேர் வாங்கிக்கொள்ளலாமே.. :)//

அதெல்லாம் அந்த காலம் மேடம்

rapp said...

அய்யா சாமி, சத்தியமா நான் ஊருக்கு வரும்போது உங்க வீட்டுக்கு வரமாட்டேன்:):):)நிம்மதியா இருங்க. இப்டி பதிவெல்லாம் போட்டு மிரட்டாதீங்க:):):)

rapp said...

//இனி புதுகைத்தென்றலின் கேள்விகளும்.... என் பதில்களும்//
ஏற்கனவே ரெண்டு பத்தி திட்டிட்டு இன்னுமா, ஏன் இந்த கொலைவெறி

rapp said...

//தட்டில் கைகழுவுவதும், அந்தத்தட்டை வீட்டுப் பெண்கள் கொண்டு செல்வதும் எனக்குப் பிடிக்காத ஒன்று!
//

ரொம்ப கரெக்ட்:):):)

rapp said...

எத்தனைப் பேர இப்டி வீட்டுக்கு கூப்டு தெளியவெச்சு தெளியவெச்சு அடிச்சிருக்கீங்க:):):)

rapp said...

இதில் முத்து மற்றும் புதுகைத் தென்றல் கருத்துக்களை முழுமையாக ஆமோதிக்கிறேன். சரி இப்டி வெச்சுப்போம், மனைவி வீட்ல இருந்து வரவங்க நெஜமாவே அமக்களம் பண்ராங்கன்னே வெச்சுக்கலாம். கணவன் மனைவிக்கிட்டயாவது இவங்களைப் பத்தி திட்டவோ குறைப்பட்டுக்கவோ 'ஆன் த ஸ்பாட்' சொல்ல முடியும். இதை மனைவி செய்ய முடியுமா? செஞ்சாலும் கொஞ்சமாவது டாலரேட் செய்ய முடிகிறதா பெரும்பான்மையான ஆண்களால்?
////மனைவி உறவினர்கள் மாப்பிள்ளை என்று மரியாதையுடன் இருப்பார்கள்.. பணிவுடன் இருப்பார்கள் மாப்பிள்ளைக்கென்ன ஜம்பமாக கவனித்து பேர் வாங்கிக்கொள்ளலாமே.. :)//
அதெல்லாம் அந்த காலம் மேடம்//
இதை அந்தக் காலம்னு ஏன் சொல்றீங்க. எனக்குக் கல்யாணமாகி ரெண்டு வருஷம்தான் ஆகுது. என் வீட்லயும் அப்டித்தான். இந்த வருஷம் கல்யாணமான என் பிரெண்ட்ஸ் வீட்லயும் அப்டித்தான். எஸ்.வி.சேகர் டிராமா வசனமெல்லாம் நாடகத்துலதான், நிஜத்தில் கிடையாது.

பரிசல்காரன் said...

பின்னூட்ட விவாதங்கள் சந்தோஷமளிக்கின்றன. பாபு, நீங்கள் சங்கடப்படவேண்டாம். நல்ல ஸ்ப்ரிட்டில் விவாதியுங்கள்.

சிலர் (கார்க்கி, ராப்..) உங்க வீட்டுக்கு வரவேண்டாமா என்று கேட்பது என்னவோ போலிருக்கிறது. :-(

நான் சொல்லிவிட்டேன், என் வேவ்லெங்க்தில் உள்ள நண்பர்கள்தான் என் விருந்தினர்கள் என்று. அப்படியும் ஏன் இப்படி கேள்வி வருகிறது? நீங்கள் எல்லாருமே என் நண்பர்கள்/விருந்தினர்கள் தான்! ப்ளீஸ்..

ஒண்ணு மட்டும் நிச்சயம்.. ஒரு ப்ளாக்கிங் எலக்‌ஷன் நடத்தினா தாய்க்குலத்தோட ஓட்டு நமக்குத்தான்போல...! கிகிகி...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கொஞ்சம் நல்லமாதிரி எழுதி இருந்தீங்க போல அதனால் உங்களை ஒன்னும் கேக்கலை பரிசல்.

ஆனா இதே மாதிரி பெண்கள் இப்படித்தான் அப்படித்தான்னு பொதுப்படையா முடிவெடுத்து நினைக்கிற எழுதற எல்லாரையும் எல்லா இடத்துலயும் நாங்க ஏன்னு கேக்கறது இல்லை.. கண்டும் காணாமப்போயிடறது தான்.. அண்ட் பாபுவும் நிதானமா பதில் சொன்னாரு.. கோப்மா எகிறுவதோ இல்லாட்டி கிண்டல் செய்வதோன்னு பதில் வந்திருந்தா .. திரும்ப பதில் சொல்லிக்கிட்டிருக்க வேண்டாம்ன்னு போயிடலாம்.. :)

இதுல தலையிடாம இருக்கறதே பெருந்தன்மைன்னு சிலர் நினைக்கிறதும் ஏறக்குறைய அதற்கு சப்போர்ட் செய்யறதா தான் அர்த்தம் பாபு அதனால் உங்களுக்கு ம் சரி சமமா இரண்டு ஓட்டு விழுந்திருக்கு போல முரளிகண்ணண் அண்ட் வெண்பூ :)

வால்பையன் said...

//வால்பையனோடு வந்த கும்க்கியுடன் கழித்து, மாலையில் பாலராஜன் கீதாவோடு வேல்பையனை//

நானே எவ்வளவோ பெட்டர் என்று தோன்றியிருக்குமே!

வால்பையன் said...

//விருந்தினராக செல்லும்போது நாம் பின்பற்ற வேண்டிய
நற்குணங்கள் எவை?//

தண்ணி அடிக்காமல் சென்றாலே போதும் நல்ல மரியாதை கிடைக்கும்

வால்பையன் said...

//நம்மை கேட்காமல் ஃபிரிஜிலிர்ந்து எடுத்து தின்னும்
விருந்தினரை என்ன செய்யலாம்?//

பாராட்டலாம்

பாபு said...

//அண்ட் பாபுவும் நிதானமா பதில் சொன்னாரு//
நன்றி

வால்பையன் said...

//(பெண்கள் அதில் கில்லாடிகள்!)//

ஆனாலும் அதை புரிந்துகொள்ளாத மண்ணாங்கட்டிகள் ஆண்கள்

வால்பையன் said...

//விருந்தினராக தங்க வருபவரிடம் நீங்கள் என்ன
எதிர் பார்ப்பீர்கள்?//

என்னிடம் இருக்கும் காசுக்கு மட்டும் செலவு வையுங்கள்

வால்பையன் said...

//விருந்தினர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று
எதிர் பார்ப்பீர்கள்?//

நான் உங்களை கவனித்தது போலவே நீங்களும் என்னை கவனித்தால் போதும் என்று தான்.

rapp said...

நா அம்பது தட்டலாம்னு வந்தா, அதுக்குள்ள யாரோ முந்திட்டாங்களே

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இந்த மாதிரி செண்டிமெண்டா போட்டுத் தாக்குற வேலைய என்கிட்டே வெச்சுக்காதீங்க, அப்புறம் சென்ஷி அண்ணன் கிட்ட சாவித்திரி, சரோஜா தேவி வாய்சில் படிக்கச் சொல்லி டார்ச்சர் பண்றா மாதிரி டார்ச்சர் பண்ணிடுவேன், ஆமாம்:):):) இப்போ என்ன, எனக்கு ஸ்பெஷல் பிரைடு மட்டன் பிரியாணி வாங்கிக்கொடுப்பேன்னு சொல்லுங்க, கண்டிப்பா என் ரங்கமணியோட வந்திடறேன்.

rapp said...

ஹையா இந்த தரம் ஊருக்கு வந்தா முத்து, அப்துல்லா அண்ணன், சம்மந்தி வெண்பூ, நீங்க இப்படின்னு நெறயப் பேர் விருந்து வெக்கிறேன்னு சொல்லிருக்கீங்க:):):) எனக்குக் கொண்டாட்டமா இருக்கு:):):)

pudugaithendral said...

முத்து, அப்துல்லா அண்ணன், சம்மந்தி வெண்பூ, நீங்க இப்படின்னு நெறயப் பேர் விருந்து //

தங்கச்சி (?!) ராப் நம்மளை பாக்கலியா?

Sanjai Gandhi said...

என்னா ஒரு கொலை வெறிடா சாமி.. :(

Sanjai Gandhi said...

இதுல இருந்து ஒன்னு( ரெண்டுன்னும் வச்சிக்கலாம்) மட்டும் நல்லா தெரியுது..

உங்கள் விருந்துக்கு கூப்டறது நல்லது..
உங்க வீட்டுக்கு விருந்துக்கு வர்ரது தற்கொலை :))

ஆனாலும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க.. உங்க நேர்மைக்காகவே உங்க வீட்டுக்கு அடிக்கடி விருந்துக்கு வரனும். :))

Sanjai Gandhi said...

//கார்க்கி said...
அண்ணே நான் திருப்பூர் வந்தா வெளியே மட்டும் சந்திப்போம்ண்//
அடச்ச.. என்னாதிது சின்னப் புள்ளத் தனமா? அடிகக்டி வீட்டுக்கு போய் ஃப்ரிட்ஜ்ல தேவையானத கேக்காமலே எடுத்து இவரை செமத்தியா கடுப்பேத்தனும் பாஸ்.. :))

விலெகா said...

பரிசலாரு உண்மையாலுமே பாதிக்கப்பட்டு இருக்காரூ:---))))))))

Sanjai Gandhi said...

அண்ணே.. ஒரே ஒரு சீரியஸ் கமெண்ட்..

இதை படிச்ச யாராவது உங்க வீட்டுக்கு வந்தா.. அவர்கள் இயல்பா நடந்துகிட்டாலும் கூட இதை படிச்சிட்டு தான் இப்டி நடந்துக்கிறாரோன்னு தோனும்.. பாத்துக்கோங்க.. :(

நானெல்லாம் புது எடத்துக்கு போனா அநியாயத்துக்கு கூச்சப் படுவேனுங்க.. அவ்ளோ அடக்கமா இருப்பேன்.. சந்தேகம் இருந்தா அபியப்பாவை கேளுங்க.. :))

விலெகா said...

அண்ணே நான் திருப்பூர் வந்தா வெளியே மட்டும் சந்திப்போம்ண்ணா

Sanjai Gandhi said...

//நம்மை கேட்காமல் ஃபிரிஜிலிர்ந்து எடுத்து தின்னும்
விருந்தினரை என்ன செய்யலாம்?//

நம்ம இம்சை அண்ணாச்சி புதுகை அக்கா வீட்டுக்கு வந்த சுவடு நல்லாவே தெரியுது :)))

விலெகா said...

//கார்க்கி said...
அண்ணே நான் திருப்பூர் வந்தா வெளியே மட்டும் சந்திப்போம்ண்//
அடச்ச.. என்னாதிது சின்னப் புள்ளத் தனமா? அடிகக்டி வீட்டுக்கு போய் ஃப்ரிட்ஜ்ல தேவையானத கேக்காமலே எடுத்து இவரை செமத்தியா கடுப்பேத்தனும் பாஸ்.. :))

நீங்க வர்ர அன்னிக்கு ஃப்ரிட்ஜ்ஜ‌ வேற இடத்தில வச்ச்ருவாருங்கோ:--)))

Sanjai Gandhi said...

//பேசிக்கலி ஐ ஆம் எ சோம்பேறி என்பதால் இத்தனை நாட்கள் ஆகிவிட்டது தொடர!//

ஆமா ஆமா.. எல்லாம் பகிரங்க கடிதம் எழுதியதன் விளைவு :) லதானந்தாய நமஹ :))

rapp said...

தென்றல் சந்தேகமே வேண்டாம் நான் தங்கச்சிதான், தம்பியில்லை:):):) விருந்து கொடுப்பேன்னு சொல்லிட்டீங்கல்ல, நான் ஊருக்கு வரும்போது நீங்க வெளியூர் போயிருந்தாலும், அங்க வந்து உங்கள மெரட்டியாவது உங்க கலக்கல் மெனுவை டேஸ்ட் பண்ணாம விடமாட்டேன்:):):)

Sanjai Gandhi said...

//எனக்கு நானே பரிமாறிக் கொண்டுதான் சாப்பிடுவேன் என்ற நிபந்தனையோடுதான் சாப்பிடவே உட்காருவேன்! //

ஹலோ.. இஸ்டாப் மேன்..

எங்க இஷ்டத்துக்கு தான் நாங்க சோறு போடுவோம்.. உங்க இஷ்டத்துக்கு எல்லாம் போட முடியாது..

இவரு ஊட்ல ஃப்ரிட்ஜ தொறந்து எதுனா எடுத்தா இவர் ரூம் போட்டு யோசிச்சி ப்ளான் பண்ணி அசிங்கப் படுத்துவாராம். ஆனா இவரு மட்டும் எங்கூட்ல வந்து இவரா போட்டுத் தின்னுவாராம்.. தோடா.. :)))

Sanjai Gandhi said...

//விருந்தினர் வருகையை எப்படி சமாளிப்பீர்கள்?//

இதென்ன எலித் தொல்லையா? ச்மாளிக்க முடியாத் அளவு கஷ்ட படறதுக்கு? :)

விலெகா said...

புதுகைத் தென்றல் said...
பொதுவான விருந்தினர் வருகை பத்தி
பேசும்போது கணவன் வீட்டு விருந்தினர், மனைவி வீட்டு விருந்தினர் என்று ஆரம்பித்து வைத்து் விட்டீர்கள்.

இதில் இப்ஸ் அண்ட் பட்ஸ் நிறைய் இருப்பதால் டாபிக்கை மாற்றி பொதுவாக விருந்தினர் பற்றி மட்டும் பேசலாமே
எப்படி பொதுவாக பேசுவதாம்,எங்களுக்குதானே தெரியும் வித்யாசம்:-))

Sanjai Gandhi said...

//விருந்தினராக செல்லும்போது நாம் பின்பற்ற வேண்டிய
நற்குணங்கள் எவை?//

குறிப்பாக அந்த வீட்டில் இருக்கும் நல்ல செருப்புகளை எலலாம் அபேஸ் பண்ணிட்டு வரக் கூடாது. :)

Sanjai Gandhi said...

//விருந்தினராக செல்லும்போது நாம் பின்பற்ற வேண்டிய
நற்குணங்கள் எவை?//

அந்த வீட்டு குட்டி பசங்க கிட்ட இருந்து சாக்குலேட்டு பிஸ்கோத்து எல்லாம் புடுங்கி தின்னக் கூடாது. :))

விலெகா said...

இதப்படுச்சிட்டு இவரு வீட்டுக்காரம்மா ஆளுங்க வராம போகப்போறாங்க,அண்ணனுக்கு விழுகப்போகுது வேட்டு:))

rapp said...

ஹா ஹா ஹா, சஞ்சய் அண்ணாத்தே கமெண்ட்செல்லாம் கலக்கலோ கலக்கல்:):):)

கார்க்கிபவா said...

//சிலர் (கார்க்கி, ராப்..) உங்க வீட்டுக்கு வரவேண்டாமா என்று கேட்பது என்னவோ போலிருக்கிறது. :‍( //

வரவர உங்கள பத்தி கமெண்ட் அடிக்க பயமா இருக்கு சகா.. இத எல்லாம் சீரியஸா எடுத்துக்கறீங்க.. இதுக்காவது உங்க வீட்டுக்கு வந்து ஃப்ரிட்ஜ்ல இருந்து தண்ணி எடுத்து குடிக்கனும் :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))) (ஸ்மைலி பாருங்க சகா)

rapp said...

//வரவர உங்கள பத்தி கமெண்ட் அடிக்க பயமா இருக்கு சகா.. இத எல்லாம் சீரியஸா எடுத்துக்கறீங்க.. இதுக்காவது உங்க வீட்டுக்கு வந்து ஃப்ரிட்ஜ்ல இருந்து தண்ணி எடுத்து குடிக்கனும் :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))) (ஸ்மைலி பாருங்க சகா)
//

:):):)

rapp said...

me the 75TH:):):)

முரளிகண்ணன் said...

இதில் பின்னூட்டமிட்ட நமது நண்பர்கள் சிலர் கணவனின் உறவினர்கள், விருந்தோம்பும் பெண்ணை சரியாக மதிப்பதில்லை/ இகழ்கிறார்கள் என்ற ரீதியில் கருத்து சொல்லி இருக்கிறார்கள். பல இடங்களில் மனனவி வழி உறவினர்கள் கணவனை இகழ்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது படித்தார், இங்கு வேலை செய்கிறார், இவ்வளவு சம்பளம், இதெல்லாம் வாங்கியுள்ளார் என மற்றவர்களுடன் ஒப்பிட்டு வேதனைப் படுத்துவதும் நடந்து கொண்டிருக்கிறது.

விருந்தினராக செல்பவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிட்டு கருத்து கூறாமல் இருப்பது மிக அவசியம்

வால்பையன் said...

என்ன ராப்!
யாரோ ஐம்பது போட்டு போயிட்டாங்கன்னு சொல்றிங்க என்னைய உங்களுக்கு தெரியாதா?

Kumky said...

:))
மன்னிக்கவும் பரிசல்....
கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்.
மக்கள்ஸ் போட்டு ரொப்பி தள்ளிருக்காங்க...
இதுல சம்பந்திங்க வேற கூத்து கட்டியிருக்காங்க..
எதுவும் சொல்ல தோனலை..
கருத்து மழையே பேஞ்சிருக்கு..
குருவிக்காரங்க கூட சுத்துற சின்ன பூனை..நா என்னத்த மியாவ்ரது.