மன்னவ னானாலும் – மாடோட்டும்
சின்னவ னானாலும்
மண்ணில் பிறந்தாரே – முடிவில்
மண்ணுக் கிரைதானே
இந்தப்பாடல் ரத்தக்கண்ணீர் படத்தில் வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய இப்பாடல் திரு. சுப்புவின் பெயர் குறிப்பிடப் படாமல் வருகிறது.
வாலி கேட்கிறார்... “அண்ணா.. ரத்தக் கண்ணீர் படத்துல உங்க பாட்டு வரிகள் வருது. ஆனா பாடலாசிரியர்கள் பெயரிலே உங்க பெயரில்லை. பெருமை வேறு யாருக்கோ போகிறதே?”
கொத்தமங்கலம் சுப்பு சொன்னார்:
“டேய்.. நாம எழுதின ஒரு பாட்ட, இன்னொருவன் தன் பாட்டுன்னு சொல்லிக்கறான்னா நீ சந்தோஷப்படணும். ஏன்னா, அடுத்தவன் தன்னுதுன்னு சொல்லிக் கொள்ள ஆசைப்படற மாதிரி – அற்புதமான பாட்டை எழுதியிருக்கேன்னு அர்த்தம். நீ மோசமான பாட்டா எழுதியிருந்தா, மத்தவன் அதத் தன்னுடையதுன்னு சொல்லிக்க மாட்டானே!”
*******************
வாலி கலந்து கொண்ட ஒரு விழாவில் திரு.அவ்வை நடராஜன் பேசினார்:
‘காற்று வாங்கப் போனேன் – ஒரு
கவிதை வாங்கி வந்தேன் –அதைக்
கேட்டு வாங்கிப் போனாள் – அந்தக்
கன்னி என்ன வானாள்?’ - என்றார் கவியரசர் கண்ணதாசன். இப்படி எழுத இன்றைக்கு யாரேனும் இருக்கிறார்களா?
பலத்த கைதட்டல்.
திருமதி. மனோரமா ஒரு பத்திரிகையில் எழுதினார்.
“‘கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?’ – என்று கண்ணதாசன் எழுதிய மாதிரி கருத்தோட எழுதற கவிஞர்கள் இப்போ குறைஞ்சுட்டே வர்றாங்க”
இந்தப் பாடல்கள் கண்ணதாசன் எழுதியவையல்ல. கவிஞர் வாலி எழுதியது!
******************************
வாலி எழுதியதை கண்ணதாசன் எழுதியதாகச் சொல்லப்படும் போது வாலி சந்தோஷப்படலாம். வாலியை விட அனுபவம், திறமை எல்லாம் கண்ணதாசனுக்குண்டு. ஆனால் நீங்களோ, நானோ வலைப்பதிவில் எழுதியது வேறொரு முகம் தெரியாதவரின் பேரில் வரும்போது நமக்கு கோபம் வருவது இயற்கை. ஆனால் கோபப்படாமல் அமைதியாக, பெறுமையாகவும் சிலர் இருக்கிறார்கள். வலைப்பதிவாளர்கள் சிலருக்கு அவர்கள் படைப்பு வருவதே தெரிவதில்லை. தெரிந்து கொள்ள வேண்டுமா? எல்லாரும் வாராவாரம் குமுதம் வாங்குங்கள்.
****************************
இந்த வார குமுதத்தில் 40ம் பக்கம் கடைசி பெஞ்ச் கிறுக்கல்கள் என்ற தலைப்பில் நம்ம பாஸ் நர்சிம்மின் படைப்பு வந்திருக்கிறது!
இந்தப் படைப்பை அச்சில் ஏற்றுமுன் நர்சிம்மை அழைத்து ‘சிறு திருத்தங்கள் செய்திருக்கிறோம்.. படித்துக் காட்டவா’ என்று கேட்டிருக்கிறார்கள்.
நர்சிம் சொல்கிறார்: “வேண்டாங்க. கடைசில ஒரு நாலு வார்த்தை இருக்குமே. அதை மட்டும் படிங்க”
“நாலு வார்த்தைல எதுவும் எழுதலியே”
“இருக்கும் பாருங்க. ந-ர்-சி-ம்..”
“ஓஹோ! இருக்கு.. இருக்கு.. உங்க பேர் இருக்கு கவலைப் படாதீங்க..”
அவர் கவலை அவருக்கு. ஏற்கனவே நர்சிம் எழுதிய ஒரு படைப்பு - ப்ரூப் ரீடர் சரியாகப் பார்க்கவில்லையோ என்னமோ – நாலு எழுத்துக்குப் பேருக்குப் பதிலாக ஸ்பெல்லிங் மிஸ்டேக்காக ஏழெழுத்துப் பேரில் வந்துவிட்டது. எப்படியோ இந்த முறை சரியாக வந்துவிட்டது!
வாழ்த்துக்கள் பாஸ்!
அழுகிற பிள்ளைக்குத்தான் பால். இன்னும் பல பிள்ளைகள் அழாமலே, தாங்கள் கிள்ளப்பட்டது தெரியாமலே இருக்கிறார்கள்.
**************************
அந்த ஏழெழுத்துப் பேரில் வரும் படைப்புகள் எல்லாமே எழுதியவர் பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்காகவே வருகிறதோ என்ற எண்ணம் எனக்கும், என் சில நண்பர்களுக்கும் உண்டு. எத்தனை நாள் இப்படிக் காலம் தள்ளப் போகிறார் அவர் என்று தெரியவில்லை. இதை நிறுத்திக் கொண்டால் அவருக்கு நலம். அவர் எழுத்தாளராக இல்லாமல், இப்படி எடுத்தாளராக இருத்தல் அவருக்கும் ,அவர் கற்பனா சக்திக்கும் நல்லதல்ல.
ஊதுற சங்கை ஊதியாச்சு. கேட்கறவங்க கேட்டா சந்தோஷம்!
************
டிஸ்கி: ஸாரி நர்சிம். சில விஷயங்களை நீங்க பெருந்தன்மையா சொல்ல வேண்டாம்ன்னாலும், என்னால சொல்லாம இருக்க முடியல!
42 comments:
நண்பர் நர்சிம் வாழ்த்துக்கள்!
Thanks Parisalkaaran! Scan and post pls.
நரசிம் -இன் பதிவு முதலில் ஒருவர் பெயரில் போடபட்டிருந்தது அல்லவா, அவர் பெயரில் போடப்பட்ட இன்னொரு விஷயமும் குமுதத்தில் பார்த்தேன்.அதை முன்பே நம்ம பதிவர் யாரோ எழுதிய ஞாபகம்,ஆனால் யார் என்று தெரியாததால் சொல்ல முடியவில்லை.இரு வாரங்களுக்கு முன் நடந்தது
காலைலே சூப்பர் மேட்டர்.. சனிக்கிழமை ட்ரீட் வாங்க வேண்டியதுதான்.
பரிசல் ,சிந்தனை சின்னசாமிய நீங்க ஏன் உங்க ப்ளாக்ல போடுறது இல்ல?
வாழ்த்துக்கள் நர்சிம்!
வாழ்த்துக்கள் நர்சிம்
Congrats Narsim.
இப்படியெல்லாம் நடக்கின்றதா!!!
நர்சிம் = வாழ்த்துகள் :)
வாழ்த்துக்கள் நர்சிம். இன்னும் கலக்க வாழ்த்துக்கள்
தோழர் நர்சிம்முக்கு வாழ்த்துக்கள்!
அவர் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் 'அஞ்சரைக்குள்ளே அஜால் குஜால்' திரைப்படமும் வெள்ளிவிழா காண அதிஷாவின் சார்பில் வாழ்த்துக்கள்!
நண்பர் நர்சிம் வாழ்த்துக்கள்!
நண்பர் பரிசல்காரன வாழ்த்துக்கள்!
ஏழெட்டு பிள்ளை பெற்றவர்களே உரிமை விட்டுத்தர மறுப்பார்கள்... இதில் ஒன்றே ஒன்றைப் பெற்று அதையும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் முன்பே வேரொருவர் உரிமை கொண்டாடுவது...........
பேசுவதற்கு வேண்டுமானால் எளிமையாய் இருக்கலாம்.........
அனுபவித்தால்தான் தெரியும். அதன் வலி..........
ரொம்ப நாளைக்கு முன்னால இதே மாதிரி என்னோட ஒரு பதிவுல கொஞ்சம் கட் செய்யப்பட்டு நான் எடுத்த படங்களோட குமுதத்தில் வந்தது.. சரி எதோ என் பேரைப்போட்டாங்களேன்னு நினைச்சிக்கிட்டேன்.. ஆனா என்னோட சேர்ந்து இன்னொரு இரண்டு பேர் பதிவு வந்திருந்தது.. அவங்க பேரு மாத்தி இருந்தது.. அவங்க்ளும் போன் செய்தப்ப சரியா பதில் கிடைக்கலன்னு சொன்னதா ஞாபகம்.. அதுவும் அரசியல்பதிவில் பாதிய எடிட் செய்து போட்டா சொல்ல வந்த கருத்தே மாறிபோயிடுச்சுன்னு அந்த பதிவர் வருத்தப்பட்டார்.. சந்திப்புன்னு நினைக்கிறேன் அவர் பெயர்.
ஜூனியர் விகடன் : பரிசல்
ஆனந்த விகடன்: லக்கி
குமுதம்: நர்சிம்
சூப்பர்! வாழ்த்துக்கள்!
குசும்பன் said...
ஜூனியர் விகடன் : பரிசல், குசும்பன்
ஆனந்த விகடன்: லக்கி, அதிஷா
குமுதம்: நர்சிம்
ஸ்மால் கரெக்ஷன்
வாழ்த்துக்கள் நர்சிம்
பதிவர்கள், ஊடகத்திற்க்கு முன்னேறுவது ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்குகிறது.
வா-ல்-பை-ய-ன்-மொத்தம் 6 தான் இருக்கு
நானில்லை அந்த ஏழெழுத்து
அந்த ஏழெழுத்து காரர் உங்களை விட வயதில் மூத்தவரா?
வாழ்த்துக்கள் நர்சிம்...
சூப்பர் நியூஸ் கே.கே.
வாழ்த்துக்கள் நர்சிம்.
ஆமாம், இப்படி பிரசுரம் ஆவதை பதிவுகளில் போடுகிறீர்களா? எல்லோரையும் கேட்கிறேன் - லக்கி, கே.கே., அதிஷா, நர்சிம் மற்றும் குசும்பன்
கார்க்கி: விகடனில் ஜ்யோவ்ராமையும் சேர்க்க வேண்டும்.
அனுஜன்யா
//கொத்தமங்கலம் சுப்பு சொன்னார்:
“டேய்.. நாம எழுதின ஒரு பாட்ட, இன்னொருவன் தன் பாட்டுன்னு சொல்லிக்கறான்னா நீ சந்தோஷப்படணும். ஏன்னா, அடுத்தவன் தன்னுதுன்னு சொல்லிக் கொள்ள ஆசைப்படற மாதிரி – அற்புதமான பாட்டை எழுதியிருக்கேன்னு அர்த்தம். நீ மோசமான பாட்டா எழுதியிருந்தா, மத்தவன் அதத் தன்னுடையதுன்னு சொல்லிக்க மாட்டானே!”//
கொத்தமங்கலம் சுப்புவா? எனக்கு இது கண்ணதாசன் சொன்னார் என்றே படித்ததாக நினைவு.
வாழ்த்துக்கள் நர்சிம்..
முடிஞ்சா வழக்கு போடுங்கையா.. யாரோ பெத்த பிள்ளைக்கு அப்பன் என்கிறவங்கள் சூடு சுரணை இல்லாத ஜென்மங்கள்..
பதிவர்கள் பலர் சஞ்சிகைகளில் வலம் வருவது மகிழ்ச்சியையும்,பெருமையையும் தருகிறது.
ஆனால் உங்கள் பதிவுகள் பத்திரிக்கை சஞ்சிகைகளில் வரும்போது அது பற்றிப் பதிவிடுங்கள்..
நாங்களும் அறிந்திடுவோம்..
நன்றி பரிசலாரே!!
நர்சிம்
ஏனுங்... ஒரு மேட்டர் பத்திரிகையில் வந்ததை இவ்வளவு சுவாரசியமா எழுத முடியுமாங்..?
நரசிம் சாருக்கு வாழ்த்துக்கள்:):):)
me the 25th
அது யாரு ஏழெழுத்து எழுத்தாளர்?
//கொத்தமங்கலம் சுப்புவா? எனக்கு இது கண்ணதாசன் சொன்னார் என்றே படித்ததாக நினைவு.//
கொத்தமங்கலம் சுப்பு என்று வாலி தனது சுயசரிதையான நானும் இந்த நூற்றாண்டும்' புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். பக்கம் 324.
// rapp said...
அது யாரு ஏழெழுத்து எழுத்தாளர்?/
இனிஷியலோட சேர்த்து ஏழெழுத்து. எழுத்தாளரெல்லாம் இல்லை. எடுத்தாளர். பெரியாரைப் பின்பற்றும் தாடிக்கார இயக்குனர் பெயர் கொண்டவர். அவ்ளோதான்பா!
//கிழஞ்செழியன் said...
ஏனுங்... ஒரு மேட்டர் பத்திரிகையில் வந்ததை இவ்வளவு சுவாரசியமா எழுத முடியுமாங்..?//
கிண்டல் பண்றீங்களான்னு தெரியலயே தல..
//பாபு said...
நரசிம் -இன் பதிவு முதலில் ஒருவர் பெயரில் போடபட்டிருந்தது அல்லவா, அவர் பெயரில் போடப்பட்ட இன்னொரு விஷயமும் குமுதத்தில் பார்த்தேன்.அதை முன்பே நம்ம பதிவர் யாரோ எழுதிய ஞாபகம்,ஆனால் யார் என்று தெரியாததால் சொல்ல முடியவில்லை.இரு வாரங்களுக்கு முன் நடந்தது//
வாராவாரம் ஏதாவது ஒன்றை வலைப்பூவிலிருந்து திருடிப் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தவாரம் நர்சிம்மின் படைப்புக்கு அடுத்த பக்கத்தில் வந்துள்ள டி ஷர்ட் வாசகங்கள் ஏதோ ஒருவருடைய (அதிஷா அல்ல) பதிவில் படித்ததுதான்.
ஆமாம், நீங்க நைசா புரபைல்ல வயசை மாத்திட்டீங்களா? :):):)
சென்ற வருடம் ஆ.வி க்கு ஒரு கவிதை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பியிருந்தேன் அதே கவிதை ஓரிரு வார்த்தைகள் மாற்றி வேறொருவர் பெயரில் பிரசுரமாகியிருந்தது, நம்மை போன்றே இன்னொருத்தரும் யோசித்திருக்கிறாரே என நினைத்து அப்படியே விட்டுவிட்டேன்,ஆனால் இப்போ உங்க பதிவை படித்தபிறகு எனக்கு சின்னதா ஒரு சந்தேகம் வருது.அது என்னுடைய கவிதையாய் இருக்கும் பட்சத்தில் சந்தோஷமே.
வாழ்த்துக்கள் நர்சிம் !! வருடப்பட்ட கோப்பு கிடைக்குமா?
ஓஓஓ.... "கலர்ஃபுல் பெல்"ஆ? என்ன பரிசல்... கரெக்டா?
கிழஞ்செழியன் said...
ஏனுங்... ஒரு மேட்டர் பத்திரிகையில் வந்ததை இவ்வளவு சுவாரசியமா எழுத முடியுமாங்..?
ரீப்பீட்டு..
(கிழஞ்செழியன் சந்தோஷப்படுவார்)
//இனிஷியலோட சேர்த்து ஏழெழுத்து. எழுத்தாளரெல்லாம் இல்லை. எடுத்தாளர். பெரியாரைப் பின்பற்றும் தாடிக்கார இயக்குனர் பெயர் கொண்டவர். அவ்ளோதான்பா!//
நானும் என்பங்குக்கு ஒரு க்ளூ.
மணி கண்டம் விட்டுக் கண்டம் தாவ முடியுமா என்று யோசிக்கிறான்.
இருக்காதுன்னு தெரியும்,...இருந்தாலும் கேட்டு வைப்போம் !!! என் பெயரும் உங்கள் பட்டியலில் இருக்கிறதா..?
பரிசல் அது ஆன்லைன் குமுதம்ல வந்து இருக்கா ??
தேடி பாத்தேன் கிடைக்கலை :)
நரசிமுக்கு வாழ்த்துக்கள்
சஸ்பன்ஸ் வெக்காதீங்கடான்னா எவன் கேக்குறான்.? அப்பிடியே நம்ப தலைக்கும் வாழ்த்து சொல்லிக்கிறேன்..
//rapp said...
ஆமாம், நீங்க நைசா புரபைல்ல வயசை மாத்திட்டீங்களா? :):):)//
என்னங்க இது அபாண்டமான குற்றச்சாட்டா இருக்கு!
@ வேலண்ணா
தப்புண்ணா. மணிகண்டன்னு அர்த்தம் வருது. இந்தாளு மகேஷ் சொல்றமாதிரி கலர்ஃபுல்.
நர்சிம் வாழ்த்துக்கள்!
//எத்தனை நாள் இப்படிக் காலம் தள்ளப் போகிறார் அவர் என்று தெரியவில்லை. இதை நிறுத்திக் கொண்டால் அவருக்கு நலம். அவர் எழுத்தாளராக இல்லாமல், இப்படி எடுத்தாளராக இருத்தல் அவருக்கும் ,அவர் கற்பனா சக்திக்கும் நல்லதல்ல.
ஊதுற சங்கை ஊதியாச்சு. கேட்கறவங்க கேட்டா சந்தோஷம்!//
நெத்தியடி :)
பத்திரிகை வாங்கிபடிக்க இயலாத எங்களை போன்றவர்களுக்காக ப்ளோக்கில் அதனை வெளியிட்டால் என்ன...?
ஆலோசிக்கவும் பரிசல்.
நர்சிம் மாமாவுக்கு வாழ்த்துக்கள்!:)
Post a Comment