Friday, November 14, 2008

சாகலாம்னு தோணுது...

அப்போது என்னிடம் லைசென்ஸ் இல்லை. இதே திருப்பூரில் தேவ்ஜி காலனி-யில் ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வந்தேன். இருந்த ஒரு டி.வி.எஸ்-ஸை எனக்குக் கொடுத்துவிட்டு எங்கள் மேனேஜருக்கு எம் – 80 வாங்கினார்கள். அவருக்கு அதை ஓட்ட சிரமமாய் இருக்கவே மறுபடி அவர் டி.வி.எஸ்-ஸையே எடுத்துக் கொண்டார். அந்த எம்-80யில் சென்று கொண்டிருந்தபோது சங்கீதா தியேட்டர் அருகே நின்று கொண்டிருந்த ட்ராஃபிக் போலீஸார் பிடித்து விட்டார்கள்.

“லைசென்ஸ் இருக்கா?”

எங்கேயிருந்துதான் அப்படி ஒரு ஐடியா ‘சட்’டென வந்தது என்று தெரியவில்லை. (மூளையிலிருந்துதான்!)

“இருக்குங்க. கம்பெனில வாங்கி வெச்சிருக்காங்க”

“ஸ்டேஷனுக்கு வந்து காமிச்சு வண்டியை எடுத்துட்டுப் போ. பேரைச் சொல்லு..” என்று அந்தப் பாழாப்போன பேப்பரை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

“ராமசாமி”

“வயசு?”

“32”

12 வருடங்களுக்கு முன் நடந்தது இது. அப்போது எனக்கு வயசு வெறும் 23தான். அந்த கான்ஸ்டபிள் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “இவ்ளோ சின்னப் பையனா இருக்க? 32ங்கற?” என்று கேட்டார்.

“பார்த்தா தெரியாதுங்க” என்று சொல்லி சமாளித்துவிட்டு அவர்கள் வண்டியை லாரியில் ஏற்றியபிறகு கம்பெனிக்குப் போனேன். மேலாளரிடம் விஷயத்தைச் சொல்ல நடுங்கிப் போனார் அவர். பின்ன? அவர் பேருதானே ராமசாமி? பத்து, பதினைஞ்சு வண்டில எது யாருதுன்னா பார்க்கப் போறாங்க என்று அவர் பெயரைக் கொடுத்துவிட்டேன். ஆனால் அவரோ பயந்துபோய் வர மறுத்துக் கொண்டிருந்தார். எங்கள் முதலாளி வந்து ‘பையன் புத்திசாலித்தனமா ஒரு வேலை பண்ணீட்டு வந்திருக்கான். போங்க.. போய் பேசி வண்டியை எடுத்துட்டு வந்துருங்க’ என்று சொன்னபிறகே வந்தார்.

ஸ்டேஷனில் போய் என்னைப் பிடித்த கான்ஸ்டபிள் வெளியே ஒரு மரத்தடியில் யாரிடமோ பேரம்பேசியபடி இருக்க, நேராக உள்ளே சார்ஜெண்டிடம் போய் அந்த மெமோவையும், வண்டியின் RC புத்தகம், லைசென்ஸ் எல்லாத்தையும் காட்ட, ‘வண்டில எப்பவுமே ஒரு காப்பி வெச்சுக்கணும்ங்க’ என்று சொல்லிவிட்டு ‘யோவ்.. இவங்க வண்டியை குடுத்துடு’ என்று சொல்ல வண்டியை எடுத்துக் கொண்டு, ஸ்டார்ட் செய்து நகர்த்த எங்களை நோக்கி வந்தார் என்னைப் பிடித்த அந்தக் கான்ஸ்டபிள்.

“ஏம்ப்பா... ஒம்பாட்டுக்குப் போற?” என்று பின்னால் உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்து கேட்க.. (என்னா ஞாபக சக்திப்பா!) நான் முகத்தை ரொம்ப சோகமாக வைத்துக் கொண்டு “உள்ள கவனிச்சுட்டு வந்துட்டேன் சார். லைசென்ஸை கொண்டு போகவேண்டியதுதானே எனக்கு அடி விழுகாத குறையா திட்டுசார் உங்களால” என்று சொல்லி விட்டு மேனேஜரை முதுகில் நோண்ட அவர் வண்டியை விரட்ட ‘எஸ்கேப்!’

********************************

கேபிள் சங்கர் எழுதச் சொல்லிதான் நேற்று முன்தினம் இதை எழுத ஆரம்பித்தேன். இது தவிர வேறு ஒன்றிரண்டு சுவாரஸ்யமான சம்பவங்களும் உண்டு. ஆனால் நேற்றைக்கு சட்டக் கல்லூரி சம்பவத்தைப் பார்த்தபிறகு மனசு எதிலும் லயிக்க மறுக்கிறது. நேற்று காலை நர்சிம் சொன்ன பிறகுதான் எனக்குத் தெரியும். எங்கள் வீட்டுத் தொலைக்காட்சி பெரும்பாலும் ஆஃப் செய்யப்பட்டுத்தான் இருக்கும். அதனால் நேற்று முன்தினம் பார்க்கவில்லை. நேற்றைக்கு பதிவர் கிரியின் பதிவில் இருந்த யூ ட்யூப் வீடியோவில்தான் முழுமையாகப் பார்த்தேன்.

ஆறுமுகம் என்ற மாணவனை காட்டுமிராண்டிக் கும்பல் தாக்குகிறது. பதைபதைத்து ஓடி வருகிறான் சக மாணவன் பாரதிகண்ணன். அவனையும் தாக்குகிறது. கால்களிலும், உடம்பிலும் ஹாக்கி மட்டையால் சரமாரியாக முப்பதுக்கும் மேற்பட்ட அடிகள். அதுவும் பிங்க் பனியன் போட்ட ஒரு மிருகம்தான் இருவரையும் அதிகமாக அடித்தவன். இவனை நடுத்தெருவில் கட்டி வைத்து காலுக்குக் கீழே கல்லால் அடித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இதயமே இல்லாத கொடுங்கோல் மனசுக்கார பேய். இவனைப் பெற்ற பாவத்துக்கு இவன் பெற்றோர் எழுதிவைத்துவிட்டுச் சாகலாம்.

கேட்டருகே கிடந்த பாரதிகண்ணனின் கால்கள் இவன் அடித்த அடியில் துடிப்பதும், மறுபடி மறுபடி அவன் அடிப்பதும் தாங்கமுடியவில்லை. பாரதி கண்ணனுக்கோ, ஆறுமுகத்துக்கோ அண்ணன், தம்பியாக பிறந்த எவரும் இந்தச் செயலைப் பார்த்து நக்சலைட்டாக மாறி அந்தக் கும்பலை ஒழிக்க முற்பட்டால்கூட ஆச்சர்யமில்லை.

இந்தச் சாதிப் பிடியிலிருந்து தமிழகம் மீண்டு வராதவரை நமக்கு விடிவே இல்லை. இந்த லட்சணத்தில் பெரிய புடுங்கிகள் போல ஒவ்வொரு சாதிக்கும் தலைவராக இருக்கும் அரசியல்வாதிகள் பேட்டி மயிரு வேறு கொடுக்கிறார்கள். இவனுகள் வளர்த்துவிட்டதுதானே இது. நாசமாப்போக.

பார் கவுன்சில் விழாவுக்காக கோவையில் கிரண்பேடி வருகிறார். பார் கவுன்சிலில் இரு பிரிவாம். இன்னொரு பிரிவினர் கிரண்பேடியை கெரோ செய்து உள்ளே விடாமல், வேறு வழியின்றி கிரண்பேடி காரில் ஏறி சென்றுவிட வேறொரு ஹோட்டல் ஹாலில் விழா நடக்கிறது.

இவர்கள் மாணவர்கள் அல்ல. சீனியர் வக்கீல்கள். இவங்களே இப்படி புத்திகெட்டு அடிச்சுகிட்டா, அப்புறம் அந்தச் சட்டம் படிக்கற மாணவர்கள் அதைவிட கேவலமா காட்டுமிராண்டிகளாத்தான் இருப்பாங்க.

என்ன எழுதினாலும் மனசு ஆறமறுக்கிறது. கல்லூரி முதல்வர் எவ வீட்டுக்குப் போய் உக்கார்ந்துட்டிருந்தான்னு தெரியல. எல்லாம் முடிஞ்சு வந்து என்னத்தப் புடுங்கப் போறான்னும் தெரியல. போலீஸ் அவரு அனுமதி குடுக்கணும்ன்னு நின்னுகிட்டிருந்ததாம். போங்கடா.....

ஒரு வகையில பெண்ணின் கற்பும் ,ஆணின் வீரமும் ஒரே மாதிரி பார்க்கப் படுது. ஒரு ஆணை ஆறேழு பேர் அடிக்கறது, பெண்ணை பப்ளிக்ல ரேப் பண்றதுக்குச் சமம். அப்பவும் இந்த மாதிரி பார்த்துட்டு இருந்தா ஒத்துக்குவாங்களா? இல்ல.. அவ மேலயும் தப்பு இருக்கு, கவர்ச்சியா ட்ரெஸ் போட்டிருந்தா.. டீஸ் பண்ணிப் பேசினா.. அதுனாலதான் கற்பழிச்சாங்கன்னு சொல்லுவாங்களா?

போலீஸையும், வேடிக்கை பார்த்துட்டிருந்த மாணவர்களையும் விடுங்க. இந்த ரெண்டு பேரையும் அடிச்ச கும்பல்ல இருந்தவங்க உடம்பிலயும், என் உடம்பிலயும் ஓடறது ஒரே நிறத்தாலான ரத்தம்ங்கறத நினைக்கும்போது..

சாகலாமான்னு தோணுது.

25 comments:

கார்க்கிபவா said...

:((((((((

Cable சங்கர் said...

//ஒரு வகையில பெண்ணின் கற்பும் ,ஆணின் வீரமும் ஒரே மாதிரி பார்க்கப் படுது. ஒரு ஆணை ஆறேழு பேர் அடிக்கறது, பெண்ணை பப்ளிக்ல ரேப் பண்றதுக்குச் சமம். அப்பவும் இந்த மாதிரி பார்த்துட்டு இருந்தா ஒத்துக்குவாங்களா? இல்ல.. அவ மேலயும் தப்பு இருக்கு, கவர்ச்சியா ட்ரெஸ் போட்டிருந்தா.. டீஸ் பண்ணிப் பேசினா.. அதுனாலதான் கற்பழிச்சாங்கன்னு சொல்லுவாங்களா?//

நெத்தியடி..பரிசல்.. தொடர் பதிவை தொடர்ந்ததுக்கு நன்றி..

Kumky said...

உங்களுக்கு கோபத்தில் சரியாக திட்ட வரவில்லை என்று தெரிகிறது....
சஞ்ஜெய் பதிவை பார்த்து மனசை ஆத்திக்கொண்டேன்...

Anonymous said...

:(

Kumky said...

யாரை சொல்லி என்ன பயன்?
இவிங்க போனா அவிங்க அவிங்க போனா இவிங்க....வண்முறை கலாச்சாரம் நாளுக்கு நாள் பொங்கிட்டே போகப்போகுது.
சாமான்ய மக்கள் இந்த கொடுமைய எல்லாம் பார்த்துட்டு பொலம்பிகிட்டு திரிய வேண்டியதுதான்........
எவனுக்கும் உறைக்கப் போவதில்லை.

இதை திசை திருப்ப ரெண்டொரு நாளில் வேற ஒரு பிரச்னைய கிளப்ப போறாங்க.....மக்களும் மறந்துட்டு அடுத்த கச்சேரிக்கு தாவிட வேண்டியதுதான்........

சட்டமாவது...ஒழுங்காவது...அதெல்லாம் சாதாரண ஜெனங்களுக்குத்தான்..

இவங்கெல்லாம் பாவப்பட்ட மக்களுக்காக நீதியை நிலை நாட்டப்போறவங்க......பெறிய புடுங்கிங்க. யாரும் கேள்வி கேட்டுறப்படாது.

இதுவும் நடக்கும்...இதுக்கு மேலயும் நடக்கும்.

Kumky said...

ஓ ஒன்னு சொல்ல மறந்து போனது..

வாழ்க சன நாயகம்.

தமிழன்-கறுப்பி... said...

மதம் பிடிச்ச யானை கள் சில கையில கிடைச்ச பாகனை போட்டு மிதிக்கற மாதிரிதான் இருந்தது அந்த காட்சி...
எப்படி வருகிறது இப்படியான
வன்முறைக்குரிய மனம்...

தமிழன்-கறுப்பி... said...

:(

Sanjai Gandhi said...

//கும்க்கி said...

உங்களுக்கு கோபத்தில் சரியாக திட்ட வரவில்லை என்று தெரிகிறது....
சஞ்ஜெய் பதிவை பார்த்து மனசை ஆத்திக்கொண்டேன்...//

ஹே நானும் ரவுடி தான்.. ரவுடி தான்.. :))

( நான் அந்த்ப் பதிவில் போட்டிருந்த சில வார்தைகளை நீக்கிட்டு தான் பப்ளீஷ் பண்னேன் )

Anonymous said...

ரெண்டாவது விஷயம் கொடுமைங்க. போலீஸ்காரங்க பாத்துட்டு ஒண்ணுமே பண்ணலைங்கரது இன்னும் அசிங்கம். முதல் விஷயம் தனிப்பதிவா போட்டிருக்கலாம்..

வால்பையன் said...

//அப்போது என்னிடம் லைசென்ஸ் இல்லை. //

எதுக்குன்னு தெளிவா சொல்லனும்

வால்பையன் said...

//ஸ்டேஷனுக்கு வந்து காமிச்சு வண்டியை எடுத்துட்டுப் போ. //

அத்துடன் உங்களிடம் கையெழுத்தும் வாங்குவார்கள், தெரியாதா!

வால்பையன் said...

//இந்தச் சாதிப் பிடியிலிருந்து தமிழகம் மீண்டு வராதவரை நமக்கு விடிவே இல்லை. //

முற்றிலும் உண்மை.
அதுவும் கழகத்தின் ஆட்சியில் இது தொடருவது(முதலில் உத்தாபுரம்) அவர்களுக்கே கேவலமாக தெரியவில்லையா என்று தெரியவில்லை

வால்பையன் said...

நியாயமான கேள்விகள் தான்!

Bleachingpowder said...
This comment has been removed by the author.
Bleachingpowder said...

தல இத ரெண்டு பதிவா போட்டிருக்கலாமே. காமெடி, ட்ரெஜடி காம்பினேஷன் என்னமோ மாதிரி இருக்கு.

உங்களுக்கு இவ்வளோ கோவம் வரும்னு தெரியாம போச்சே

ரமேஷ் வைத்யா said...

தலை,
இந்த சம்பவத்திலுள்ள ஒரே வித்தியாசம்: இது காட்சி ரீதியாகக் காணக்கிடைத்தது என்பதுதான். நான் அந்தக் கல்லூரி வகுப்பறையிலும் உட்கார்ந்திருக்கிறேன். அந்த ஹாஸ்டலிலும் தங்கியிருக்கிறேன். அந்த ரவுடித் தொழிற்சாலையில் இது சகஜமான ஒன்று என்பதுதான் கேவலமான விஷயம் (எனக்கும் மொழி தடுமாறுகிறது).

VIKNESHWARAN ADAKKALAM said...

:(

win said...

:-((((


சனநாயகம் வாழ்க ....

விலெகா said...

win said...
:-((((


சனநாயகம் வாழ்க ....

:-))))))
தழைத்தோங்கி சனநாயகம் வாழ்க ....

விலெகா said...

win said...
:-((((


சனநாயகம் வாழ்க ....

:-))))))
தழைத்தோங்கி சனநாயகம் வாழ்க ....

விஜய்கோபால்சாமி said...
This comment has been removed by the author.
விஜய்கோபால்சாமி said...

ஐயா, அடி வாங்கினவன் ஒன்னும் ஒலக மகா யோக்கியன் கிடையாது. அவனும் கத்திய கைல புடிச்சிக்கிட்டு எவன் மாட்டுவான் குத்துறதுக்குன்னு தேடுனவன் தான். என்ன ஒன்னு அவனுவ எதிர் கோஷ்டில ஆளு அதிகமாயிருச்சு.

நான் அந்த சாதி, இந்த சாதி, ஆய் ஊய்னு சொல்ற மாதிரி நாங்க ஸ்டூடண்ட்ஸ்ன்னு சொல்லிக்கிறதும் ஒரு கேவலமான குழு மனப்பாண்மையா ஆயிடுச்சு.

சரி எதிர் கோஷ்டிய ஆசை தீர அடிச்சானுங்கள்ல, இந்த போலீசு அதுக்கப்புறமாவது அடிச்ச கோஷ்டிய அடிச்சுத் தொவைக்க வேணாம். எடுத்த ஒடனே அடிச்சா தானய்யா போலீஸ் அராஜகம்?

இந்த லட்சனத்துல இந்த **றானுங்க தான் நாளைக்கு பெஞ்ச்சு கோர்ட்லேந்து சுப்ரீம் கோர்ட்டு வரைக்கும் வக்கீலாவும், ஜட்ஜாவும் ஒக்காந்து நீதி பரிபாலனம் பண்ணப் போறானுங்களாம். கேக்கறவங்க ***வாயாலதான் சிரிக்கனும்.

கணினி தேசம் said...

மனதை கனமாகிய மிகக்கொடுமையான சம்பவம்.
தமிழகத்தில் நடந்ததால் மேலும் வருத்தப்படவைத்துள்ளது. சாதியும் அரசியலும் கல்லூரிக்குள் என்று புகுந்ததோ அன்றே நாசமாகிவிட்டது.

இவர்களெல்லாம் சட்டம் படித்துதான் நீதியை நிலைநாட்ட போகிறார்களா? கொஞ்சம்கூட அறிவு இல்லாமல் அடித்து துன்புருத்திய இந்த இதயமற்ற மிருகங்களை நாடுகடத்தி யாருமற்ற தீவில் விட்டுவிட வேண்டும். மனிதர்களோடு வாழ தகுதியற்றவர்கள். உன்ன உணவின்றி சாகட்டும்.

Guna said...

இரண்டு முக்கிய காரணங்கள்

1 ) ஒவ்வெரு சினிமாவிலும் வன்முறை கொண்டாடப்படுகிறது. நண்பர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் ஹீரோவாக காண்பிக்க. மாணவர்கள் என்றாலே ரவுடிகளாக ஆக்கிவிட்டார்கள். சந்தோஷ் சுப்ரமணியம் ஒரு நல்ல படம்தான் ஆனால் நாடு ரோஅட்டில் தண்ணியடித்து விட்டு தெருவில் செல்பவருடன் தகறார் செய்கிறார்கள். மாணவனை கண்டிக்க வேண்டிய ப்ரொபெஸ்ஸொர் கூட்டிக் கொடுத்து கொண்டிருக்கிறார். இது ஒரு மோசமான முன்னுதாரணம் இல்லையா. நாம் நம் தெருவில் இதை செய்ய முடியுமா?. எங்கே பார்த்ததை படமெடுத்தார் அந்த டைரக்டர். அவனவன் வக்கிரத்திற்கு வடிகால் தேடுகிறான். நாமும் காசை கொட்டி அவனை பெரிய ஆள் ஆக்கிவிட்டு பேட்டியெடுத்து கொண்டிருக்கிறோம். கலை 10 மணி ஷோவிற்கு கூட்டம் எல்லாம் 15 வயதிலிருந்து 25 வயதிற்குள். ப்ரொபெஸ்ஸொர் அட்டெண்டன்ஸ் கேட்டால் அவருக்கும் அடி விழும் அல்லவா. எந்த சினிமாவிலாவது ப்ரொபெஸ்ஸொர் மரியாதைக்குரியவராக கண்பிக்கிரார்களா? சமுதாயம் மோசமாக புழுத்து கொண்டிருக்கிறது. சினிமாவின் வீச்சு மிகவும் அதிகம். இந்த படம் அடுத்த சுதந்திர தினந்தன்று பொறுப்பற்று நம் நடு வீட்டில் திரை இடப்படும். நாமும் சிப்சை முழுங்கிக்கொண்டு பெப்சி குடித்துக்கொண்டே நம் குழந்தைகள் இதை பார்ப்பதற்கு அனுமதிப்போம். கெட்ட சினிமாவை புறக்கணிக்க நமக்கு பொறுப்பிருக்கிறது அல்லவா . நச்டமனால் படம் எடுப்பானா. இந்த சம்பவத்திற்கு சினிமா பார்த்து சினிமாவை வளர்க்கும் எல்லோரும் ஒரு காரணம்

2) அரசியல்வாதிகள் - இதைப்பற்றி அதிகம் விவாதிக்க தேவைஇல்லை . இது உள்ளங்கை நெல்லிக்கனி

இந்த சம்பவம் பாதிக்கப்பட்ட உடலின் ஒரு புண்தான். வெடித்து கிளம்புகிறது. நிறைய இன்னும் இருக்கிறது. வரும் . கோபத்தை கொஞ்சம் மிச்சம் வையுங்கள்.